Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை விரைவில் இந்தியா எடுத்துக்கொள்ளும்; சம்பந்தன் நம்பிக்கை தெரிவிப்பு

Featured Replies

இனப் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை விரைவில் இந்தியா எடுத்துக்கொள்ளும்; சம்பந்தன் நம்பிக்கை தெரிவிப்பு

sam.jpeg

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் புதுடில்லிக்கு பயணம் செய்திருந்தது.

இந்நிலையில், தமது புதுடில்லிப் பயணம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

அத்துடன், இதற்காக என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்வேன் எனவும் மன்மோகன் சிங் கூறினார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கிய வாக்குறுதியுடன் நாம் இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜைச் சந்தித்தோம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதி தொடர்பில் கருத்து வெளியிட்ட சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு நாடு என்ற வகையில் இதுவே இந்தியாவின் நிலையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

"இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழக அரசு மட்டும் கரிசனை கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இலங்கைத் தமிழ் மக்களின் பக்கம் உள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே அனைத்து மாநிலங்களும் உள்ளன'' என்றும் சுஷ்மா சுவராஜ் எம்மிடம் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை சாதகமானதாக இருக்கின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பொறுப்பை அவர்கள் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றே நான் கருதுகிறேன்.

எமது கோரிக்கைகளும் நிலைப்பாடுகளும் நியாயமானவை என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடக்கூடாது என உணர்கின்றார்கள். இலங்கை அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக எம்முடன் பேசிய ஒரேயொருவர் பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமே. எம்முடனான பேச்சின் தொடக்கத்தில், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும், இலங்கை அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தன்னுடன் பேசியதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

ஆனால், அது தொடர்பிலான தகவலை அவர் எமக்குத் தெரிவித்தாரே ஒழிய, எம்மை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியத் தரப்பில் எவரும் எமக்குப் பரிந்துரைக்கவில்லை.

இந்தியாவுக்கு நாம் முன்னர் மேற்கொண்டிருந்த பயண்ங்களைவிட இம்முறை மேற்கொண்ட பயணம் மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடிய பயணமாக அமைந்திருந்தது என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=664401534022691985

அவசரமான பாதையால் சம்பந்தர் செல்வது அவசியமான பதையாகப் படவில்லை. இந்தியா எதையாவது செய்த பின்னர் சொன்னாலும் பரவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும்... இந்தியா, என்ன செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தான் தமிழனின் சாபக்கேடு!

துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்,

தொண்டைக் குழிக்குள் நிற்கும் முள்ளு!

இதை எடுத்தெறிந்தால், தான் தமிழன் வாழ முடியும்! :o .

  • தொடங்கியவர்

தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில்; கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன்

sritharan.jpeg

தமிழர்களின் இன்றைய பயணம் மிகவும் முக்கியமான கட்டத்தில் நிற்கின்றது. சர்வதேச மயப்பட்ட எமது இனத்தின் பிரச்சினை பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது.

எமது மண்ணில் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.

கைதடி கலைநகர் துர்க்கா சனசமூக நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத்திலும் இனிவரும் காலங்களில் மிக முக்கியமான முனைப்புகள் வெளிப்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இவை எம்மோடு பிணைந்தவையாகவே இருப்பதால் எமது கொள்கை, இலட்சியம், சமூக ஒற்றுமை என்பனவும் எமது தீர்வு நோக்கிய பாதைக்கு முக்கியமாகத் தென்படுகின்றன. நாம் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல் இருப்பது இனிவரும் நாள்களுக்கு பலமான ஒன்று. என்றார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதேச மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கணினி ஒன்றை சனசமூக நிலையத்துக்கு கையளித்தார்.

சனசமூக நிலையத் தலைவர் மு.தங்கராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராசா, கூட்டமைப்பின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபைச் செயலர் செல்வி தி.தர்சினி, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செ.ஜெகதீசன், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ச.தங்கராசா, சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் தர்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இந்தியா தமிழ் இன அழிப்பு நடந்து முடியும் வரை காத்து கொண்டு இருக்கிறது, நடந்து முடிந்த பிறகு 'எங்கே இனபிரச்சனை' என்று கேட்கும் . வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கபட்ட பின்பு இங்கு இனபிரச்சனை என்று ஒன்று இல்லையே என்று சொறி லங்கா சொல்லும். [/size]

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடயத்தில் தமிழகத்திலும் இனிவரும் காலங்களில் மிக முக்கியமான முனைப்புகள் வெளிப்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இவை எம்மோடு பிணைந்தவையாகவே இருப்பதால் எமது கொள்கை, இலட்சியம், சமூக ஒற்றுமை என்பனவும் எமது தீர்வு நோக்கிய பாதைக்கு முக்கியமாகத் தென்படுகின்றன. நாம் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல் இருப்பது இனிவரும் நாள்களுக்கு பலமான ஒன்று. என்றார்.

தமிழகம் கொந்தளிக்கறது சரி... உங்க கஸ்டத்தை பார்த்து தீக்குளித்து சாவான்.. இல்லையென்றால் 35/40 எம்பி சீட்டு வாங்கி தருவான்.. அதை வைத்து 500 மெல இருக்கின்ற டெல்லி பாரளுமன்றத்தில் வெட்டவோ புடுங்கவோ முடியாது இதான் நிஜம். மத்திய பதவிகளுக்கு 50000 எழுகிறார்கள் என்றால் 5 பேர் தான் தெறுகிறார்கள்.. அவனும் இனத்திற்கு விசுவசமாக இருப்பது கிடையாது.. அலோ எனக்கு ரைப்படிப்பதற்கு கைவலிக்குது..

டிஸ்கி:

எதாவது செஞ்சி இந்த தெற்காசிய ரவுடிய விட்டு வெளிநாட்டை போக்கஸ் பண்னி வெளியால வர வழிய பாருங்கப்பூ... :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கவனிக்கும் என்றால் சர்வதேசப் பிரச்சினையாக கொண்டுசென்றதை மறுபடியும் பிராந்தியப் பிரச்சினையாகக் கொண்டுவரப் பார்க்கிறார்கள் என அர்த்தம்.. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்தியா எதையாவது எடுக்கட்டும் ...........[/size][size=1]

[size=4]நீங்கள் எங்கள் உயிரை எடுக்காது இருங்கள்.[/size][/size][size=1]

[size=4]பேசியே கொண்டுடுவான்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழக அரசு மட்டும் கரிசனை கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இலங்கைத் தமிழ் மக்களின் பக்கம் உள்ளது.

இந்தியாவின் மற்றைய மானிலங்களில் பலவற்றில் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவில் பிரச்சனையில்லை என்பது தான் கருத்தாக இருக்கிறது. ஈழத்தில் என்ன நடந்தது. என்ன நடக்கிறது என்பதினை அங்குள்ள மக்களுக்கு செய்திகள் கொண்டு சேர்க்கப்படவில்லை. சிறிலங்கா என்றால் சிங்கள துடுப்பாட்ட அணியும், விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் தான் அவர்களுக்கு பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.