Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"13' ஒழிப்பதில் தவறே இல்லை; கோத்தாவின் கருத்துக்கு அரசு பச்சைக் கொடி

"வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார்.

13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.''

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோது கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கான அதிகாரத்தை மக்கள் அவர்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கின்றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அச்சட்டங்கள் தடையாக அமைந்தால் அவற்றைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை.

அதேபோல், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவுமே 13 ஆம் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அச்சட்டம் தடையாக இருந்தால் அதை வைத்திருந்து என்ன பிரயோசனம்?

13 ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும்தான் ஆரம்பத்தில் கூறினர். அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இச்சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே புலிகள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தனர்.

தெற்கு மக்களை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றது. ஆகவே, இச்சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதையே இந்த எதிர்ப்புகள் காட்டுகின்றன.

நாம் பலமிக்க அரசு. மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளும்போது எச்சட்டமும் எம்மைத் தடைசெய்யாது. 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான எமது சேவை தொடரும்.

ஏதேனும் ஒரு சட்டம் மக்களுக்கான சேவைக்குத் தடையாக இருந்தால் அச்சட்டத்தை மக்களே நீக்குவர். உணவு சமைக்கவே நெருப்பைப் பயன்படுத்தவேண்டும். அந்த நெருப்பு ஊரையே அழிக்கும் அளவுக்கு மாறினால் அந்த நெருப்பை அணைத்துத்தான் ஆகவேண்டும். அதேபோலத்தான் மக்களுக்கு எதிரான சட்டங்களும் கையாளப்பட வேண்டும்.

13ஆவது திருத்தச்சட்டத்தைப் பிழையாகப் பயன்படுத்த எவராவது முயற்சி செய்தால் அச்சட்டத்தை இல்லாது செய்ய மக்களே முயற்சிப்பர். இச்சட்டத்தை இல்லாது செய்வதற்கு அல்லது திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்றால் அதையும் நாம் நடத்துவோம்.

மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதற்காக வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாம் 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரவும் தயார்.

23 அக்டோபர் 2012, செவ்வாய் 8:10 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=896921539623770145#

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்ததுக்குள்ளால பூனைக்குட்டி வரும் என்ற சங்கரியும்.. 13 தான் விமோசனம் என்ற சித்தார்த்தனும்.. 13+ கேட்ட சம்பந்தனும்.. 13 க்கூடாக ஈழத்தமிழர்கள் சம உரிமை பெறப் போறாங்க என்ற இந்தியாவும்.. 13.. புலிப் பயங்கரவாதிகளின் அழிப்பின் பின்னர் தமிழர்களுக்கு விமோசனம் தரும் என்ற ஈயன் பொக்ஸ் போன்ற அறிவுசாலிகளும் இப்ப என்ன சொல்லப் போகினம்...

எல்லாம் புலிகள் இருக்கும் வரை தான் என்பதை உணராத முழு முட்டாள்கள்..! புலிகளை கூட்டழிப்புச் செய்தவர்களும் காட்டிக்கொடுத்தவர்களும்.. முடிந்தால் சிங்களவனோட ஜனநாயகம் பேசி தீர்வை வாங்கிப் பார்க்கட்டும்..!

எனி தந்தைச் செல்வா சொன்னது போல தமிழர்களைக் கடவுள் தான் காக்க வேண்டும்..! அதுக்குள் தமிழர்கள் தங்களைத் தாங்களே காட்டிக்கொடுத்து அழிந்து கொள்வார்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

எங்களுக்கென்ன நெடுக்ஸ் பிரச்னை ........தமிழன்ர பிரச்னை தீர்த்தாச்சு ....என்ன இல்லை ......எல்லாமே சிறப்பாக நடக்குது ..........13 ஆம் சட்டம் திருத்தினால் என்ன

ஒழித்தால் என்ன .............சோறு கிடைக்குது ....இதை விட எங்களுக்கு என்ன தேவை ................மிருகங்களும் ,பறவைகளும் ,பூச்சிகளும் வாழ்ந்துகொண்டுதானே

இருக்குது ..... :rolleyes:

எனி தந்தைச் செல்வா சொன்னது போல தமிழர்களைக் கடவுள் தான் காக்க வேண்டும்..! அதுக்குள் தமிழர்கள் தங்களைத் தாங்களே காட்டிக்கொடுத்து அழிந்து கொள்வார்கள். :icon_idea::)

ஆகவே தமிழர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கையுடன் வீட்டுக்கு ஒரு கோவில் கட்டி பக்தியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் :icon_idea:

[size=5]கோத்தாவை ஐ.நா. மனித உரிமை தொடருக்கு டெல்லி அழைக்கின்றது[/size]

[size=6]Gotabaya gets Delhi invite ahead of UNHRC session[/size]

[size=5]The Indian government has invited Sri Lankan Defence Secretary Gotabaya Rajapaksa to New Delhi for talks, ahead of next month’s session of the UN Human Rights Council (UNHRC) in Geneva, according to informed sources. The visit is expected to take place in the next few days because Sri Lanka’s case is to be taken by the UNHRC on November 1, under the Universal Periodic Review (UPR) scheme. India is in the three-nation panel which will oversee the review.[/size]

[size=5]In the last session of the UNHRC in March, a US-sponsored resolution hostile to Sri Lanka was passed. In the coming session too, the council is expected to take a critical stance.[/size]

[size=5]India’s concerns[/size]

[size=5]In the March session, India got the US to dilute its resolution before voting for it. This time, sources say, India may find it difficult to help the island nation in the light of some developments which it finds disturbing.[/size]

[size=5]Foremost among them is Gotabaya Rajapaksa’s reported statement that the 13th Amendment (13A) of the Sri Lankan Constitution, which gives a measure of autonomy to the provinces, should be scrapped because it is fostering “separatism”.[/size]

http://newindianexpress.com/nation/article1310873.ece?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது குறுக்கை நிக்குதோ அதை தூக்கீட்டால் பிரச்சனையே இல்லை......13 எண்ட இலக்கம் தமிழன்களுக்கும் ராசி இல்லை.... :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

'13' ஆம் திருத்தத்தின் தேவை முடிந்து விட்டது!

எனவே அது தூக்கப் படுகின்றது.

அந்த நேரத்தில், சில பேரைத் தாலாட்டித் தூங்க வைக்க அது தேவைப் பட்டது!

இந்தப் '13" என்ற நாயானது, ஒரு நாள் கூடக் குலைத்தது கிடையாது!

கடிப்பதற்கு அதற்குப் பற்களும் கொடுக்கப் படவில்லை! :D

சிங்களவன் எதுவும் தரான் என்பது அனைவருக்கும் தெரிந்தது ,13 ஆம் திருத்த சட்டம் தீர்வின் முதல்படியே .அதைகூட விளங்காததால் தான் இவ்வளவு அழிவுகளும் .சிங்களவனையும் இந்தியனையும் சிண்டு முடிய வந்த அருமையான சந்தர்ப்பத்தை எமது மோட்டுதனத்தால் இழந்தது மாத்திரமல்ல அழிவையும் தேடிக்கொண்டோம்.

புலிகளின் தமிழிழதீர்வும் போரும் தொடர்ந்திருந்தால் முழு தமிழனும் அழிந்திருப்பான் .இப்போ புலம் பெயர்ந்த புலிகள் கதைக்கும் ராஜதந்திரபோர் அப்போ எங்கு போனது.

குறைந்த பட்சம் ஒரு தீர்வு சிங்களம் வைக்க வேண்டிய நேரம் ஓரளவு வந்துவிட்டது என்றுதான் நினைக்கின்றேன் .புலிகள் இருந்திருந்தால் எதுவுமே சாத்தியமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எதுவும் தரான் என்பது அனைவருக்கும் தெரிந்தது ,13 ஆம் திருத்த சட்டம் தீர்வின் முதல்படியே .அதைகூட விளங்காததால் தான் இவ்வளவு அழிவுகளும் .சிங்களவனையும் இந்தியனையும் சிண்டு முடிய வந்த அருமையான சந்தர்ப்பத்தை எமது மோட்டுதனத்தால் இழந்தது மாத்திரமல்ல அழிவையும் தேடிக்கொண்டோம்.

புலிகளின் தமிழிழதீர்வும் போரும் தொடர்ந்திருந்தால் முழு தமிழனும் அழிந்திருப்பான் .இப்போ புலம் பெயர்ந்த புலிகள் கதைக்கும் ராஜதந்திரபோர் அப்போ எங்கு போனது.

குறைந்த பட்சம் ஒரு தீர்வு சிங்களம் வைக்க வேண்டிய நேரம் ஓரளவு வந்துவிட்டது என்றுதான் நினைக்கின்றேன் .புலிகள் இருந்திருந்தால் எதுவுமே சாத்தியமில்லை .

[size=1][size=4]ஆயுதம் தூக்கி போராடி மண் மீட்போம் என்று தொடங்கி ..... [/size][/size]

[size=1][size=4]அப்பாவி இளைஞர்களை ஆயுத போருக்குள் தள்ளுமட்டும் எல்லாம் சாத்தியமாக இருந்தது.[/size][/size]

[size=1][size=4]பின்பு அவர்களின் தன்னலமற்ற வீரம் கண்டு இந்தியனும் சிங்களவனும் நச்சு கொண்டு களுடன் வந்தபோதுதான் எல்லாம் சாத்தியமில்லாமல் போய்விட்டது.[/size][/size]

[size=1][size=4]தொடங்கும் போது ஆட்டம் போடும்போது போர் என்றால் பூ எறிந்து விளையாடுவது என்றோ தொடங்கினீர்கள்?[/size][/size]

[size=1][size=4]மாறி மாறி சுடுபட்டு எல்லா பழியையும் புலியிலே போட்டுவிட்டு ஓடினீர்கள் .............. (உங்களுக்கு டீசல் காவினது வண்டி ஓட்டியது ஆள் கடத்தியது என்று புலியும் அம்பிட்ட எங்களைத்தான் பதம் பார்த்தது)[/size][/size]

[size=1][size=4]எதோ தொலைந்தீர்கள் என்று விட்டு விட்டு இருக்க [/size][/size]

[size=1][size=4]வடக்கனுடன் பிறகு கூடி வந்தீர்கள்.[/size][/size]

[size=1][size=4]சிங்களவனுடன் கூடி வந்தீர்கள்.[/size][/size]

[size=1][size=4]இவளவு நாளும் ஈழம் மீட்கும் என்றோ இருந்தநீர்கள் அல்லும் பகலும் அதே வேலையாய்? [/size][/size]

[size=1][size=4]புலிகள் இலட்சியத்துடனும் ஆயுதங்களுடனும் மண்ணிலே நின்றவர்கள். எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலைமை மட்டுமே அங்கு இருந்தாது. எடுக்கபட்ட முடிவுகளே அவர்கள் மேல் திணிக்கபட்டது.[/size][/size]

[size=1][size=4]ஆதிக்க சக்திகளிடம் அடிபணிய மறுத்த அனைவருக்கும் இதுதான் நடந்தது.....[/size][/size]

[size=1][size=4]புலிகளுக்கு ஒன்றும் புதிதாக நடக்கவில்லை.[/size][/size]

[size=1][size=4]புலிகளுக்கு புதிதாக நடந்தது கூடி பிறந்தவர்களும் சேர்ந்து நின்று குத்தியது ஒன்றுதான்.[/size][/size]

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]

[size=4]யார் ஆட்சி நடக்கிறது என்றே தெரியாத பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு [/size][/size][size=1]

[size=4]நிரந்தரமாக ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியாத இந்தியாவிடம் அணு ஆயுதம் உண்டு [/size][/size][size=1]

[size=4]ஒவ்வரு நாளும் அப்பாவி மக்களை கொல்லும் இஸ்ரேலிடம் அணு ஆயுதம் உண்டு.[/size][/size]

[size=1]

[size=4]ஈரான் அதை வைத்திருக்க முடியாது என்று உலகில் எங்கு சட்டம் உண்டு?[/size][/size][size=1]

[size=4]யார் அந்த சட்டத்தை இயற்றியவர்? அவர்களுக்கு அந்த தகுதியை யார் கொடுத்தார்?[/size][/size]

[size=1]

[size=4]இத்தனைக்கும் ஈரான் கேட்பது அணுவில் இருந்து மின்சாரம் அதுவும் விரும்பின் ஐநா வின் நேரடி கண்காணிப்பில்.[/size][/size][size=1]

[size=4]இதற்கு தான் இப்போது இத்தனை பொருளாதார தடையும்.[/size][/size][size=1]

[size=4]எந்த ஏற்றுமதியும் இல்லாவிட்டால் ஒரு நாட்டில் பஞ்சம் வருவதில் என்ன புதினம் இருக்கு?[/size][/size][size=1]

[size=4]அங்கே அவர்களின் ஆட்ச்சியில் மக்களுக்கு உணவு கூட இல்லையாம்.[/size][/size][size=1]

[size=4]சி என் என் னில் ஒப்பாரி வைக்காத குறையாக அழுகிறார்கள் மக்கள் நலன் விரும்பிகள்.[/size][/size][size=1]

[size=4]இந்த பூதாரம்தான் உலகில் தொன்று தொட்டு நடக்கிறது. புலிவாந்தி மட்டுமே பருகி வாழ்ந்தவர்கள் அப்பாவிகள் பாவம் அவர்கள் விரும்பினால் கூட வேறு வாந்தி இனி எடுக்க முடியாது. உள்ளே அனுப்பியதுதானே வாந்தியிலும் வரும்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எதுவும் தரான் என்பது அனைவருக்கும் தெரிந்தது ,13 ஆம் திருத்த சட்டம் தீர்வின் முதல்படியே .அதைகூட விளங்காததால் தான் இவ்வளவு அழிவுகளும் .சிங்களவனையும் இந்தியனையும் சிண்டு முடிய வந்த அருமையான சந்தர்ப்பத்தை எமது மோட்டுதனத்தால் இழந்தது மாத்திரமல்ல அழிவையும் தேடிக்கொண்டோம்.

புலிகளின் தமிழிழதீர்வும் போரும் தொடர்ந்திருந்தால் முழு தமிழனும் அழிந்திருப்பான் .இப்போ புலம் பெயர்ந்த புலிகள் கதைக்கும் ராஜதந்திரபோர் அப்போ எங்கு போனது.

குறைந்த பட்சம் ஒரு தீர்வு சிங்களம் வைக்க வேண்டிய நேரம் ஓரளவு வந்துவிட்டது என்றுதான் நினைக்கின்றேன் .புலிகள் இருந்திருந்தால் எதுவுமே சாத்தியமில்லை .

அர்ஜுன், அவதாராக ஏதாவது, ஒரு படத்தைப் போட்டு விடுங்கள்!

காதில, கழுத்தில ஒண்டும் இல்லாதது, ஒரு மாதிரிக் கிடக்கு! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.