Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

மக்கிரச்சி உலக புகழ் பெற்ற கெட்ட பையன். இவரின் குறும்பால் எல்லோராலும் விரும்ப்பட்ட சிடான் அவமானம்மாக வெளியேறினார் என்பதை சகித்து கொள்ள முடியவில்லை. இத்தாலி இவ் உலக கோப்பையை போக்கிரித்தன்மாக தான் வென்றார்களா?

மக்கிரச்சி உலக புகழ் பெற்ற கெட்ட பையன். இவரின் குறும்பால் எல்லோராலும் விரும்ப்பட்ட சிடான் அவமானம்மாக வெளியேறினார் என்பதை சகித்து கொள்ள முடியவில்லை. இத்தாலி இவ் உலக கோப்பையை போக்கிரித்தன்மாக தான் வென்றார்களா?

சிடான்

இத்தாலியின் ஜுவென்ரஸ், ஸ்பானியாவின் ரியால் மாட்றிட் ஆகிய கழகங்களுக்காக 306 போட்டிகளில்

6 வருடங்கள் விளையாடியவர்.

சிடானுக்கு இத்தாலி மொழி தெரிந்ததால்

வந்த விபரீதம்..............

ita6.jpg

தாக்குவதை கமரா கழுகு கண்களினாலும்

லைன்ஸ்மெனாக இருந்தவராலும் கவனிக்கப் பட்டு விட்டது.

3372527424.jpg

இனி என்ன செய்ய?

101684902.jpg

வெற்றி பெற்ற இத்தாலிக்கு வாழ்த்துகள்.........

இன்று மாலை 6.00 மணிக்கு ரோம் நகரில்

வீரர்கள் வந்திறங்குகிறார்கள்...............

zidane_02_800.jpg

உலககிண்ணப்போட்டி 2006 ஜேர்மனி - யின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்துவிருது GOLDEN BALL பிரான்சின் அணித்தலைவர் சிடானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதினை உலகம் முழுவதிலுமிருந்து ஊடகவிலாளர்கள் வாக்களித்து தேர்வு செய்கின்றனர். அவ்வகையில் 2012 வாக்குகளை வென்ற அவர் இவ்விருதுக்குத் தேர்வானார். அடுத்து இத்தாலியின் அணித்தலைவர் கன்னவாரோ 1977 வாக்குகளும் மும்முறை ஆட்டநாயகன் விருது பெற்றவரான இத்தாலியின் பிர்லோ 715 வாக்குகளும் பெற்றனர்.

மிகச்சிறப்பாக தன் அணியினரை வழிநடாத்திய, சிறப்புற விளையாடிய சிடான் இவ்விருதினை நிச்சயம் வெல்வார் என எதிர்பார்ப்புகள் மேலோங்கியிருந்த வேளையில் அந்நிலைமை கேள்விக்குறியானது. இறுதி ஆட்டத்தில் இத்தாலிவீரரை தலையால் மோதி விழுத்தியதற்காக சிகப்பு அட்டைபெற்று வெளியேற்றப்பட்டமை பெரும் விமர்சனங்களுக்குள்ளாகியது.

ஆனால் இப்போது வெளியான வாக்களிப்பு விவரம் சிடானுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

கடைசிநேர நடத்தைவழு ஒன்றைவிட போட்டியில் அவரது முன்னைய சிறப்பு அம்சங்களைச் சீர்தூக்கிப்பார்த்து ஊடகவியலாளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு வித்தியாசம் (35)குறைந்தமைக்கு அவரது நடத்தை நிச்சயமான காரணமாகிறது. மிகபெரு வித்தியாசத்தில் வெல்வார் எனகிற எதிர்பார்ப்பு முன்பு நிலவியது.

பிரான்சின் தென்புல கடலோர நகர் மார்சயிலில் 23.06.1972 ல் பிறந்தவர் சிடான். பெற்றார் அல்ஜீரியாவிலிருந்து வந்து குடியேறிய இசுலாமிய மதத்தவர். 1994 முதல் பிரான்சின் தேசிய அணியில் பங்கு கொண்டு விளையாடியவர். 1998பிரான்சு உலககிண்ணப் போட்டியில் தன் நாடு உலககிண்னத்தை கைப்பற்றுவதற்கு இவரது விளையாட்டுத்திறன் பிரதான காரணியாகியது. அன்றிலிருந்து அவர் பெரும் கதாநாயகனாக மதிப்பளிக்கப்பட்டு வந்தார். பிரான்சு நாட்டுக்காக 107 போட்டிகளில் விளயாடி 37 கோல்களை அடித்துள்ளார். இத்தாலியின் ஜுவென்ரஸ், ஸ்பானியாவின் ரியால் மாட்றிட் ஆகிய கழகங்களுக்காக 306 போட்டிகளிலும் அதற்கு முன்பதாக பிரான்சின் இரு கழகங்களுக்காக 200 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

நன்றி:

http://ulagakinnam.blogspot.com/2006/07/bl...6815175508.html

wc6.jpg

உலக கிண்ணத்தை இத்தாலி பெற்றது தொடர்பான பார்வை...........

மரியாதைஇல்லாமலும்... இனத்துவேசமாகவும்.... பயங்கரவாதியெனவும்.... கூறினால் யாருக்குத்தான் கோபம் வராது.... :lol: :idea: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்திற்கு வந்த நாள் தொடக்கம் பல உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறைபோல் தரமற்ற போட்டிகளை ஒருபோதும் பார்க்கவில்லை.

முக்கியமாக தான் கொண்டுசெல்லும் பந்தை எதிர் தரப்பினர் பறித்துவிட்டால் இவர் உடனே நிலத்தில் விழுந்துவிடுவார். இதிலே போத்துக்கல் வீரர்கள்(?) தான் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் வீரர்களில் பலரும் இப்படித்தான். திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்பதைவிட நடுவர்களையும், மற்றயவர்களையும் ஏமாற்றி வெற்றிபெற முயற்சித்தவர்களே ஏராளம். உடலாலும், உளவியலாலும் எதிர்தரப்பினரை பாதிப்பிற்குள் ஏற்படுத்தியும்தான் பல நாடுகள் போட்டிகளில் இம்முறை வெற்றிபெற்றிருக்கிறன. சிடானுக்கும் இதே நிலமைதான். இனத்துவேசத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று பலர் முயற்சித்தபோதிலும் இரகசியமாக இதன் தாக்கம் ஆங்காங்கே பலமாகவும் இருந்திருக்கின்றது. சில நடுவர்களும் நகைப்புக்கிடமான முறையில் போட்டிகளை நடாத்தினார்கள்.

கடந்த ஒருமாத காலமாக எங்கு சென்றாலும் தவறாது அனேகமான போட்டிகளைப் பார்த்திருந்தாலும் இறுதியில் முன்னையவற்றைவிட இம்முறை இவை தரத்தில் குறைந்தவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருப்பதோடு ஏமாற்றமாகவும்தான் இருக்கின்றது.

இனத்துவேசம் கூடாது (Say no to racism) என்பது தான் உலக கோப்பை போட்டிகளின் போது முக்கிய கோசமாக முன்வைக்கப்பட்டு போட்டிக்கு முன்பு உறுதி மொழிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியோ இத்தாலி வீரர் இனத்துவேசமாக பேசினார் என்ற சர்ச்சையுடன் முடிவுக்கு வந்திருக்கின்றது. :lol:

சிடான் செய்தது நிச்சயமாக தவறு தான் அதற்கு அவர் சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டிருக்கின்றா

15_2.jpg

நன்றி: "மணி"

ஜிடானே இத்தாலிய விளையாட்டாளரான மேட்டராஸியை தன் தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்,

உண்மையில் மேட்டராஸி அவரை தகாத வார்த்தையால் திட்டினார்.

இப்போது தான் திட்டவில்லை என்கிறார்.

இதுகுறித்து வாயசைப்பை வைத்து கண்டுபிடிக்கும் நிறுவனம் ஒன்று மேட்டராஸி ஜிடானேயின் சகோதரியைப் பற்றி தகாத வார்த்தையை இத்தாலி மொழியில் திட்டியதாகவும்,

இத்தாலி மொழி தெரிந்த ஜிடானே அதனால் கோபமுற்று முட்டியதாகவும் கண்டுபிடித்து இருக்கிறது.

-மூர்த்தி

செல்வமுத்து கூறுவது போல்

இத்தாலியர்கள் எதிர்தரப்புக்கு

மனோ நிலையான பாதிப்பை ஏற்படுத்தி

அவர்களை திசை திருப்பும் நோக்கத்துடனே

நடந்ததாக இங்கு வாழும்

என் சில இத்தாலிய நண்பர்களே கூறுகிறார்கள்.

இது வரவேற்கக் கூடியதல்ல எனவும் மனம் வருந்துகின்றனர்.

வேலைத்தளங்களில் கூட ஐரோப்பியர் மொப்பிங் எனும் இப்படியான தந்திரத்தை பாவிப்பதைக் காணலாம்.

இனவாதத்தை உருவாக்கி விட்டு

அதை Say no to racism என எழுதி

மாற்ற முடியாது.

ஒருவனை மிருகமாக்குவது இலகு.

மீண்டும்

அவனை மனிதனாக்குவது வெகு கடினம்.......

ஓய்வு பெறும் பிரபல வீரர்கள்

[11 - July - 2006] [Font Size - A - A - A]

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் கப்டன் பிகோ அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நடந்த உலக கிண்ணப் போட்டியில் போர்த்துக்கல் அணி 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் பிகோ மாற்று ஆட்டக்காரராக இறங்கி ஆடினார்.

இந்தப் போட்டி முடிந்ததும் பிகோ சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். போர்த்துக்கல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு முடிவை அவர் வௌயிட்டார்.

33 வயதான பிகோ 127 போட்டிகளில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டில் உலகின் தலை சிறந்த வீரர் விருது பெற்ற பிகோ 2004 ஐரோப்பிய சாம்பியன் போட்டியோடு ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். பின்னர் தனது முடிவை கைவிட்டு உலக கிண்ண போட்டிக்காக அணிக்கு திரும்பினார்.

ஒலிவர் கான்

இதேபோல் போர்த்துக்கல் அணியின் மற்றொரு வீரரான பாலேட்டாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான இவர் 87 போட்டிகளில் ஆடி 47 கோல்கள் அடித்துள்ளார்.

ஜேர்மனியின் மூத்த கோல் கீப்பரான ஒலிவர் கானும் போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இது தான் தனது கடைசிப் போட்டி என்று அறிவித்த படி வெளியேறினார்.

இந்த உலக கிண்ணப் போட்டியில் 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மட்டும் ஒலிவர்கான் ஆடினார். மற்ற ஆட்டங்களில் அவர் ஆடவில்லை.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறுவதாக பிரான்ஸ் கப்டன் ஜிடேன் ஏற்கனவே அறிவிந்திருந்ததும் தெரிந்ததே.

http://www.thinakkural.com/news/2006/7/11/...ws_page6152.htm

இவர்களுடன் சின்னப்புவும் ஒய்வு பெறுகிறார் :P :P

ஜிடானே இத்தாலிய விளையாட்டாளரான மேட்டராஸியை தன் தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்,

உண்மையில் மேட்டராஸி அவரை தகாத வார்த்தையால் திட்டினார்.

இப்போது தான் திட்டவில்லை என்கிறார்.

இதுகுறித்து வாயசைப்பை வைத்து கண்டுபிடிக்கும் நிறுவனம் ஒன்று மேட்டராஸி ஜிடானேயின் சகோதரியைப் பற்றி தகாத வார்த்தையை இத்தாலி மொழியில் திட்டியதாகவும்,

இத்தாலி மொழி தெரிந்த ஜிடானே அதனால் கோபமுற்று முட்டியதாகவும் கண்டுபிடித்து இருக்கிறது

.

RIO DE JANEIRO - Brazilian liplezers think to know what Marco Materazzi Sunday in Berlin against Zinedine Zidane has said in the WORLD CHAMPIONSHIPS-final. After extensive study of the images came these specialists till the conclusion that the Italian defenders the sister of Zidane for prostitute had constituted.,.

ஓய்வு பெறும் பிரபல வீரர்கள்

[11 - July - 2006] [Font Size - A - A - A]

சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் கப்டன் பிகோ அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நடந்த உலக கிண்ணப் போட்டியில் போர்த்துக்கல் அணி 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியிடம் தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் பிகோ மாற்று ஆட்டக்காரராக இறங்கி ஆடினார்.

இந்தப் போட்டி முடிந்ததும் பிகோ சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். போர்த்துக்கல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது ஓய்வு முடிவை அவர் வௌயிட்டார்.

33 வயதான பிகோ 127 போட்டிகளில் விளையாடி 32 கோல்கள் அடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டில் உலகின் தலை சிறந்த வீரர் விருது பெற்ற பிகோ 2004 ஐரோப்பிய சாம்பியன் போட்டியோடு ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். பின்னர் தனது முடிவை கைவிட்டு உலக கிண்ண போட்டிக்காக அணிக்கு திரும்பினார்.

ஒலிவர் கான்

இதேபோல் போர்த்துக்கல் அணியின் மற்றொரு வீரரான பாலேட்டாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதான இவர் 87 போட்டிகளில் ஆடி 47 கோல்கள் அடித்துள்ளார்.

ஜேர்மனியின் மூத்த கோல் கீப்பரான ஒலிவர் கானும் போர்த்துக்கலுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இது தான் தனது கடைசிப் போட்டி என்று அறிவித்த படி வெளியேறினார்.

இந்த உலக கிண்ணப் போட்டியில் 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மட்டும் ஒலிவர்கான் ஆடினார். மற்ற ஆட்டங்களில் அவர் ஆடவில்லை.

இந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறுவதாக பிரான்ஸ் கப்டன் ஜிடேன் ஏற்கனவே அறிவிந்திருந்ததும் தெரிந்ததே.

http://www.thinakkural.com/news/2006/7/11/...ws_page6152.htm

இவர்களுடன் சின்னப்புவும் ஒய்வு பெறுகிறார்

ஓய் வினித்து நம்ம ஆள் சிடானே போறார் பிறகு நான் எதுக்கு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

பாத்தீரே குறுக்கால போன சிங்கலீ (சுவிசில இத்தாலிக்காறறை அப்படித்தான் சொல்லுறது )

ம் சும்மா இருந்த சிடானை தூண்டி விட்டு அடிவாங்கி

ஓய் சிடானை பிரான்சு அதிபர் நேரடியாக சந்தித்து வாழ்த்துச்சொல்லி இருக்கிறார்

:wink: :wink: :wink:

இங்கிலாந்திற்கு வந்த நாள் தொடக்கம் பல உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இம்முறைபோல் தரமற்ற போட்டிகளை ஒருபோதும் பார்க்கவில்லை.

முக்கியமாக தான் கொண்டுசெல்லும் பந்தை எதிர் தரப்பினர் பறித்துவிட்டால் இவர் உடனே நிலத்தில் விழுந்துவிடுவார். இதிலே போத்துக்கல் வீரர்கள்(?) தான் நன்றாக நடிக்கக்கூடியவர்கள். இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் வீரர்களில் பலரும் இப்படித்தான். திறமையாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்பதைவிட நடுவர்களையும், மற்றயவர்களையும் ஏமாற்றி வெற்றிபெற முயற்சித்தவர்களே ஏராளம். உடலாலும், உளவியலாலும் எதிர்தரப்பினரை பாதிப்பிற்குள் ஏற்படுத்தியும்தான் பல நாடுகள் போட்டிகளில் இம்முறை வெற்றிபெற்றிருக்கிறன. சிடானுக்கும் இதே நிலமைதான். இனத்துவேசத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று பலர் முயற்சித்தபோதிலும் இரகசியமாக இதன் தாக்கம் ஆங்காங்கே பலமாகவும் இருந்திருக்கின்றது. சில நடுவர்களும் நகைப்புக்கிடமான முறையில் போட்டிகளை நடாத்தினார்கள்.

கடந்த ஒருமாத காலமாக எங்கு சென்றாலும் தவறாது அனேகமான போட்டிகளைப் பார்த்திருந்தாலும் இறுதியில் முன்னையவற்றைவிட இம்முறை இவை தரத்தில் குறைந்தவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருப்பதோடு ஏமாற்றமாகவும்தான் இருக்கின்றது.

:P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
showletter3wz.gif

ஸிடேனை ஆத்திரமூட்டியதாக ஒப்புக்கொண்டார் மேட்டராசி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் ஸினடின் ஸிடேனை அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான் என்று இத்தாலி வீரர் மேட்டராசி ஒப்புக்கொண்டுள்ளார்.

இறுதி ஆட்டத்தின் போது மேட்டராசியின் மார்பின் மீது ஸிடேன் தலையால் முட்டிய சம்பவம் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த செயலுக்காக ஸிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஸிடேனை ஆத்திரப்படுத்தும் வகையில் தீவிரவாதி என்று திட்டியதாகவும் அவரது தாய் குறித்து இழிவாக பேசியதாகவும் செய்தி வெளியானது. இதை மேட்டராசி மறுத்துள்ளார்.

இது குறித்து இத்தாலி பத்திரிகைக்கு அவர் தெரிவித்ததாவது:

ஸிடேனை நான் அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான். தீவிரவாதி என்றோ அவரது தாயை இழிவுபடுத்தும் வகையிலோ எதுவும் கூறவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரே தீவிரவாதி எனது 10 மாத செல்ல மகள்தான். ஸிடேனின் தாய் பற்றியும் எதுவும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை தாய் என்பவர் தெய்வத்தை போன்றவராவார்.

நான் அவரது சட்டையை சிறிது நேரம் பிடித்திருந்தேன். படுகோபமாக திரும்பிய அவர், உனக்கு உண்மையிலேயே இந்த சட்டை வேண்டுமென்றால் பிறகு தருகிறேன் என்றார். நானும் பதிலுக்கு அவமானப்படுத்தும் வகையில் வார்த்தைகளைக் கூறினேன் என்றார்.

ஸிடேன் மேட்டராசி மோதல் சம்பவத்தின் போது பதிவாகியுள்ள காட்சியில் இருவரின் வாயசைப்பை வைத்து என்ன பேசினார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் செய்தி நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒருவரின் வாயசைப்பை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்கும் பிரபல "லிப் ரீடர்' ஜெவ் சிகா என்பவரை இதற்காக பி.பி.சி. செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதன்மூலம் அவர் அப்படியே உச்சரிக்க, இத்தாலி மொழி பெயர்ப்பாளர் அதன் அர்த்தம் என்னவென்பதை தெரிவித்துள்ளார்.

"நீ ஒரு தீவிரவாதி மகன்' என்று மேட்டராசி திட்டியதாக இந்த முயற்சியில் தெரியவந்து. மற்றொரு குழுவினர் நடத்திய ஆய்வில் "நீ ஒரு பொய்யன். உனக்கும் உனது குடும்பத்துக்கு அசிங்கமான இரவுதான்' என்பது உட்பட தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸிடேன் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார் என்று அவரது இணைப்பாளர் அலயன் கூறியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பாக மார்கோ மேட்டராசியின் தந்தை கிஸிபி மேட்டராசி பி.பி.சி. க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: என்னுடைய மகன் அப்பாவி. இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவனே அவன்தான். இறுதி ஆட்டம் முடிந்ததும் எனது மகனுடன் பேசினேன். சில நிமிடங்கள் மட்டுமே பேசினான். அவனை சீண்டியதாக கூறினான். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஏதோ பகைமை இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. கால்பந்து விளையாட்டிற்குள் நுழைந்த அவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சோதனைகள்தான். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவன் காயங்களுடன் திரும்பி வருவதே இதற்கு சாட்சி. சர்ச்சைகளில் சிக்க நான் விரும்பவில்லை. அதேசமயம் யாரையும் பலிகடா ஆக்குவதை விரும்பாமல் இதை கூறுகிறேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) ஒழுங்கு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சர்வதேச போட்டிகளில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஒருவர் வெளியேற்றப்படும் போது அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கமாக விசாரணை நடத்தப்படும். தவறு செய்த வீரரை கண்டறிந்து தண்டனை வழங்கப்படும். இதேபோன்று ஸிடேனின் நடத்தை குறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. இவர் மேட்டராசி நெஞ்சில் முட்டிய போது நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணி பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் மேட்டராசி மீது விசாரணை நடத்தப்படுமா என்பது பற்றி கருத்து தெரிவிக்க பிஃபா மறுத்துவிட்டது.

Lankasri Sports : jega

இத்தாலி வீரரை தாக்கியதற்கு ஷிடேன் மன்னிப்பு கேட்டார் அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது பிரான்சு கேப்டன் ஷிடேன், இத்தாலின் மெட்ராசியை தலையால் முட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்து வெளி யேற்றினார்.

இதனால் பெனால்டி ஷூட்டின் போது ஷிடேன் இல்லாதது பிரான்சு அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இதுவே பிரான்சு தோல்வி அடைய ஒரு காரணமாகவும் அமைந்து விட்டது.

இந்த சம்பவத்தால் தலைசிறந்த வீரர் என்ற பேசப்பட்ட ஷிடேன் மிகவும் அவனமாத்திற்கு ஆளாகி உள்ளார். எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே எதிர் அணி வீரரை தாக்குவது கிடையாது. ஷீடேன் கோபப்படும் அளவுக்கு மெட்டராசி ஏதோ கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.

மெட்டராசி, ஷிடேனை மோசமான தீவிரவாதி என்று திட்டியதால் தான் ஷிடேன் கோபம் அடைந்து இந்த தகாத செயலில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன. எனினும் இது தொடர்பாக ஷிடேன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள டி.வி. நிறுவனம் ஒன்று ஷிடேனின் தங்கையை மெட்டராசி தரக்குறைவாக பேசினார். ஆதாவது அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.

இதன் காரணமாகவே ஷிடேன் கோபத்தின் உச்சிக்கே சென்று மெட்டராசியை தாக்கி உள்ளார். என செய்திகள் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சுறுசுறுப்பை அடைந்துள்ளது. ஷிடேன் ஏன்ப அவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியாத நிலையில் தனது அணியின் சக வீரர்களிடம் ஷிடேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோபத்தில் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்து விட்டேன். அணியின் வெற்றி வாய்ப்பை கெடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என சக வீரர்களிடமும் அவர் உடை மாற்றும் அறையில் கூறியுள்ளார்.

Lankasri Sports : Viduppu.com

  • கருத்துக்கள உறவுகள்

ஜிடேனின் சகோதரியை மாட்டராஸி விபசாரியெனத் திட்டினார் வாயசைவு நிபுணர்களின் உதவியுடன் கண்டுபிடிப்பு

உலகக் கிண்ண கால்பந்து இறுதி ஆட்டத்தின்போது சகோதரியை விபசாரி என்று திட்டியதால்தான் இத்தாலி வீரர் மாட்டராஸியை, ஜிடேன் தலையால் முட்டி வீழ்த்தினார் என்று பிரேஸில் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களில் ஒருவர் பிரான்ஸ் அணி கப்டன் ஜிடேன். 34 வயதான ஜிடேன் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். இத்தாலி அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் 110 ஆவது நிமிடத்தில் (கூடுதல் நேரம்) முரட்டுத்தனத்தில் ஈடுபட்டார்.

அதாவது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மலை ஆடுகள் ஒன்றோடொன்று மோதினால் எவ்வளவு வேகமாக மோதுமோ, அதேபோல் இத்தாலி வீரர் மாட்டராஸியின் நெஞ்சில் அசுரவேகத்தில் ஜிடேன் தனது தலையால் முட்டினார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத மாட்டராஸி அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

ரசிகர்கள் மத்தியில் கதாநாயகனாக விளங்கிய ஜிடேனின் இந்த திடீர் தாக்குதலால் பிரான்ஸ் அணி வீரர்களே திக்கித்திணறிப்போயினர். என்ன நடந்தது என்றே அவர்களால் ஊகிக்க முடியவில்லை. வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். பொதுவாக பரம சாதுவாக காணப்படும் ஜிடேன், ஏன் இப்படி திடீரென்று எரிமலையாக வெடித்தார் என்பது புரியாத புதிராக இருந்தது. தனது கடைசி ஆட்டத்தில் ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில் பிரேஸில் நாட்டை சேர்ந்த குளோபோ என்ற டெலிவிஷன் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இத்தாலி வீரர் மாட்டராஸி, ஜிடேனின் சகோதரியை கேவலமான வார்த்தைகளால் திட்டி புண்படுத்தியுள்ளார். அதாவது ஜிடேனின் சகோதரி ஒரு விபசாரி என்று மாட்டராஸி கூறியுள்ளார்.

மாட்டராஸியின் வாய் அசைவை (லிப்-ரீடிங்) வைத்து அவர் என்ன கூறினார் என்பதை அந்த டெலிவிஷன், நிபுணர்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. விபசாரி என்று ஒரு முறை அல்ல இருமுறை மாட்டராஸி கூறியுள்ளார்.

இதனால்தான் ஜிடேன் சிங்கமாய்ச் சிலிர்த்தெழுந்துள்ளார் என்று அந்த டெலிவிஷன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது மாட்டராஸி ஜிடேனின் சகோதரியை விபசாரி என்று திட்டவில்லை. மாறாக அவரது தாயாரை விபசாரி எனத் திட்டினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாட்டராஸி, ஜிடேனை மோசமான தீவிரவாதி என்று திட்டியதால்தான் அவர் தாக்கினார் என்றும் மற்றொரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அணி வீரர் வில்லியம் காலஸ் இந்த பிரச்சினை குறித்து கூறுகையில்,

`இறுதி ஆட்டத்தில் ஜிடேனை தவறு செய்ய வைக்க இத்தாலி அணியினர் பல வழிகளை கையாண்டனர். முதல் கோலை அடிக்கும் முன்பு கூட மாட்டராஸி, ஜிடேனின் சட்டையை பிடித்து இழுத்தார். இத்தாலி வீரர்கள் பலமுறை அவரை திட்டினர்' என்றார். குற்றச்சாட்டை மறுக்காத மாட்டராஸி

ஜிடேன் - மாட்டராஸி பிரச்சினை இப்படி புகைந்து கொண்டு இருக்க, இந்த விவகாரத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. இது குறித்து நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்று அது கூறியுள்ளது. இந்நிலையில் தாக்கப்பட்ட மாட்டராஸி, சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் நான் `ஜிடேனை மோசமான வார்த்தைகளால் திட்டவில்லை' என்று இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஜிடேனை, மாட்டராஸி மோசமாக திட்டியது உண்மை என்று ஜிடேனின் உதவியாளர் அலைன் மிக்லியசியோ கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

`மாட்டராஸி, ஜிடேனை கேவலப்படுத்தியது உண்மை. மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் தான் ஜிடேன் அப்படி நடந்து கொண்டார். ஆனால், என்ன வார்த்தையால் திட்டினார் என்பதை என்னிடம் கூற அவர் மறுத்துவிட்டார்.

மேலும், இது குறித்து ஜிடேன் பேச விரும்பவில்லை. ஆனாலும், ஒரு சில நாட்களில் அவர் இதுகுறித்து பேசுவார். பொதுவாக ஜிடேன் எதையும் கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால், அதை மட்டும் அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை' என்றார்.

இது குறித்து மாட்டராஸியின் தந்தை கிளிசெப்பே மாட்டராஸி கூறுகையில், `கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது மகன் பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளான். இதில் அவனுக்கு அதிக அளவில் காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரி பிரச்சினைகளால் எனது மகன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான்' என்றார்.

-தினக்குரல்

442006071212092815klins.JPG

ஜேர்மனியின் பயிற்சியாளர் Jurgen Klinsmann பதவி விலகுகின்றார். அவரது உதவியாளராக இருந்த Joachim Loew பொறுப்பை ஏற்கின்றார்.

மெட்டராசி, ஷிடேனை மோசமாக திட்டியதால் தான் ஷிடேன் கோபம் அடைந்து இந்த செயலில் ஈடுபட்டார் ...........

அந்த நிகழ்வு ஒளிபதிவாக..........

http://video.google.com/videoplay?docid=43...126824948183847

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.