Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் வீடு கட்ட ஜெயா நிதி ஒதுக்கீடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இலங்கை அகதிகள் வீடு கட்ட ஜெயா நிதி ஒதுக்கீடு.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 14, 2012 AT 12:20

தமிழகத்தல் வாழும் இலங்கை அகதிகள் வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 21 இலங்கை அகதிகள் முகாமில் வாழ்பவர்கள், தாங்கள் வீடு கட்ட, வீடு ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=38387

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு பாராட்டுக்கள் அம்மையாருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்கும் அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கும் ஈழத்தமிழர்கள் நன்றி கூறும் தருணங்களில் இதுவும் ஒன்று. முதல் அமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்களும் மனம் நிறைந்த நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வாழும் இலங்கை புகலிடத் தமிழர்களுக்காக வீடு கட்டுவதற்கும், உட்கட்டுமான வசதிகளுக்கும் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இந்திய தொகையில் 25 கோடிருபா நிதி ஒதுக்கியுள்ளார். தமிழகத்திலுள்ள முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்துதல், வீடுகளை பழுதுப்பார்த்தல், சாலைகள் சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், நியாய விலைக் கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை

ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்துக் கொடுப்பதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, முகாம்களில் வசிக்கும் இலங்கை புகலிடத் தமிழர்களின் நலனுக்காக, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள 21 முகாம்களில் ஒரு வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,500 நீடித்து நிலைக்கக்கூடிய புதிய வீடுகளை கட்டுவதற்கும், அதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85406/language/ta-IN/article.aspx

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

நன்றி தாயே

[size=5]இவர்களுக்கு ஈழ மண்ணில், அவரவர் சொந்த இடங்களில் நிரந்தர வீடமைக்க உதவினால் - அதுவே உண்மையான உதவியாக இருக்கும்.[/size]

[size=5]இவர்களுக்கு ஈழ மண்ணில், அவரவர் சொந்த இடங்களில் நிரந்தர வீடமைக்க உதவினால் - அதுவே உண்மையான உதவியாக இருக்கும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயுள்ளம் கொண்ட ஜெயலலிதா, இந்தச் செயல் மூலம்... மேலும் உயர்ந்து நிற்கிறார்.

[size=5]இந்தப்பக்கத்தால் கொடுத்து, அந்தப்பக்கத்தால் வாங்கியெடுப்பார்கள். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.