Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுகு எண்ணெயில் பறந்த விமானம்

Featured Replies

” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று விமான நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம்.

விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன.

அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது. தாவர எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடியும் என்ப்தை அது நிரூபித்தது. உண்மையில் அது சமையல் எண்ணெயே. ஆப்பிரிக்க நாடுகளில் அந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

bio+fuel+plane+falcon+20+100+percent+trailed+by+T+33++Nov+2012+gizmog.jpg [size=4] நூற்றுக்கு நூறு தாவர எண்ணெய் மூலம் பறக்கும் விமானம் முன்னே ( வலது புறம்) செல்ல மற்றொரு விமானம் பின் தொடர்ந்து செல்கிறது[/size]

உலகில் நாடுகளிடையே பல நூறு பயணிகளை ஏற்றிச் செல்கின்ற பயணி விமானங்கள் ஜெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டவை. இந்த விமானங்கள் ஒரு வகையான் உயர் ரக கெரசினைப் பயன்படுத்தி இயங்குகின்றன.இதில் ஜெட்-A, ஜெட் A 1 என இரு வகைகள் உண்டு ( ஆனால் முன்புறம் சுழலிகளைக் கொண்ட விமானங்கள் ஒரு வகை பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன).

காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் புவியின் ச்ராசரி வெப்ப நிலை அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பின்னணியில் காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானத்தைக் குறைப்பதில் தங்களது பங்காக விமான நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் ( இவற்றில் பெட்ரோல், டீசல், கெரசின் முதலானவை அடங்கும்) உபயோகத்தைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நோக்கில் வழக்கமான விமான எரிபொருளுடன் தாவர எண்ணெயை ஓரளவு கலப்புச் செய்து விமானங்களில் பயன்படுத்தும் நடவடிக்கை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

தேங்காய் எண்ணெய், காட்டாமணக்கு எண்ணெய், பயன்படுத்தப்பட்ட கழிவு சமையல் எண்ணெய் போன்றவற்றைத் தக்கபடி பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து தாவர எரிபொருளை (bio-fuel) எடுத்து அந்த எரிபொருள் கெரசினுடன் சேர்த்து விமானங்களில் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்பட்டது.ஒரு வகைப் பாசியிலிருந்து பெறப்பட்ட தாவர எரிபொருளும் இவற்றில் அடங்கும்.

ஏர்பஸ், போயிங் ஆகிய விமானங்களிலும் இவ்விதம் வழக்கமான விமான எரிபொருளுடன் ஓரளவு தாவர எரிபொருட்கள் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணத்துக்கும் இவ்விதம் பயன்படுத்தப்பட்டது உண்டு.

இப்போது முதல் தடவையாக முற்றிலும் தாவர எரிபொருளைப் பயன்படுத்தி விமானம் ஓட்டப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த விமான நிறுவனம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியன்று சுமார் 15 பயணிகள் ஏறிச் செல்லக்கூடிய பயணி விமானத்தில் இந்த தாவர எரிபொருளைப் பயன்படுத்தியது. அந்த விமானம் வானில் பறந்து சென்ற போது அதிலிருந்து வெளிப்படும் சூடான வாயுக்களில் தீங்கான பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்று அறிவதற்காக இன்னொரு விமானம் ‘மோப்பம்” பிடித்தபடி பின்னால் பறந்து சென்றது. அதாவது வாயு சாம்பிள்களை சேகரித்தது.(மேலே படம் காண்க)

கனடா விமானம் பயன்படுத்திய இந்த தாவர எரிபொருள் Brassica Carinata எனப்ப்படும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாகும். இத்தாவரத்துக்கு எதியோப்பிய கடுகு என்ற பெயரும் உண்டு. அதாவது இது கடுகு வகையைச் சேர்ந்தது. ( இந்தியாவில் வட மானிலங்களில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெய் Brassica Nigra வகையைச் சேர்ந்தது) தமிழகத்தில் சமையலுக்கு கடுகு பயன்படுத்தப்பட்டாலும் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை.

எதியோப்பியாவில் விளையும் கடுகு வகையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.எதியோப்பிய மக்கள் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். தவிர, இச்செடிகளை கீரை போல ச்மைத்து உண்கின்றனர்

இக்கட்டுரையில் தொடக்கத்தில் விமானத்தின் எரிபொருள் டாங்கியில் கடுகு எண்ணெய அப்படியே ஊற்றப்படுவது போல வேடிக்கையாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் அது அப்படி அல்ல. எதியோப்பிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது ஆலைகளில் பல வகைகளில் பக்குவப்படுத்தப்பட்டு அதன் பின்னரே விமானத்தில் தாவர எரிபொருளாகத் தயாரிக்கப்படுகிறது.

விமானத்துக்கான தாவர எரிபொருளாக மாற்றப்பட்ட நிலையில் அதற்கும் வழக்கமான விமான எரிபொருளுக்கும் ( விசேஷ கெரசின்) பார்வைக்கு வித்தியாசமே கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது

கனடாவின் தென் பகுதியிலும் அமெரிக்காவின் வட ப்குதியிலும் உள்ள வறண்ட நிலங்கள் எதியோப்பிய வகை சாகுபடிக்கு ஏற்றது என வருணிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு நூறு தாவர எரிபொருளைப் பயன்படுத்தும் கட்டம் விரைவில் ஏற்படலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஆண்டு 2500 ஹெக்டேர் நிலத்தில் எதியோப்பிய க்டுகு பயிரை சாகுபடி செய்ய விவசாயிகளிடம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் விமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்கள் பக்கம் திரும்புவது நல்லதாகத் தோன்றவில்லை என்று சில வட்டாரங்களில் கருதப்படுகிறது..இவற்றை அடுத்து பெரும் பண பலம் கொண்ட பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களும் தங்களது பாரவையைத் திருப்பலாம்.அவ்வித நிலையில் விவசாய நிலங்கள் கபளீகரம் ஆகும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

http://www.ariviyal.in/2012/11/blog-post_14.html

கடுகு சிறிதா இருந்தாலும் அதன் எண்ணை பெரிய விமானத்தையே ஓட வைக்கிறது :D

நல்ல முயற்ச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது. தாவர எண்ணெய் மூலம் விமானத்தை இயக்க முடியும் என்ப்தை அது நிரூபித்தது. உண்மையில் அது சமையல் எண்ணெயே. ஆப்பிரிக்க நாடுகளில் அந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

எதியோப்பியாவில் விளையும் கடுகு வகையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.எதியோப்பிய மக்கள் இந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். தவிர, இச்செடிகளை கீரை போல ச்மைத்து உண்கின்றனர்

இதே போல் இந்தோனேசியாவிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு ஐரோப்பிய வாகன ஓட்டுனர்களுக்காக ஒருவகை எண்ணைத்தாவரங்கள் பயிரிடப்படுகின்றன.இந்த எண்ணையும் அவர்களின் உணவுத்தேவைக்கு அத்தியாவசியமானது. சாதாரண மக்கள்கூட இந்த எண்ணையை வாங்குவதற்க்கு சொந்த நாட்டில் திண்டாடுகின்றார்கள்.இப்படி நிலமைகள் இருக்க........ ஒரு இயற்கையை அழித்து இன்னொரு இயற்கையை பாதுகாக்கின்றார்களாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு சிறிதா இருந்தாலும் அதன் எண்ணை பெரிய விமானத்தையே ஓட வைக்கிறது :D

நல்ல முயற்ச்சி

"கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது" என்று..... எமது முன்னோர்கள் சும்மாவா... சொன்னார்கள். தீர்க்கதரிகள். :)

  • தொடங்கியவர்

[size=4]கடுகை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவார்கள்? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடுகை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவார்கள்? [/size]

Mustard :D

  • தொடங்கியவர்

[size=4]நன்றி புங்கையூரான். [/size]

[size=4]இந்த கடுகு எண்ணெய் கடையில் உள்ளது. அதை வேண்டி எனது மோட்டார்வண்டியில் விட்டுப்பார்க்கலாம் :D[/size]

http://www.gizmag.com/nrc-biofuel-flight/24896/

[size=4]தலையில் மயிர் கொட்டுபவர்களுக்கும் இது உதவலா[/size]ம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி புங்கையூரான். [/size]

[size=4]இந்த கடுகு எண்ணெய் கடையில் உள்ளது. அதை வேண்டி எனது மோட்டார்வண்டியில் விட்டுப்பார்க்கலாம் :D[/size]

http://www.gizmag.co...l-flight/24896/

விட்டிட்டுச் சொல்லுங்கோ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது" என்று..... எமது முன்னோர்கள் சும்மாவா... சொன்னார்கள். தீர்க்கதரிகள். :)

கடுகு எண்ணையிலை பெரிய பிளேன் ஓடினாலும்.......ஒரு துளி விந்துக்கு ஒரு கடுகு வில்லன். :(

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு எண்ணையிலை பெரிய பிளேன் ஓடினாலும்.......ஒரு துளி விந்துக்கு ஒரு கடுகு வில்லன். :(

ஓ..... அப்பிடியெண்டால்... இனி சமையலுக்கு தாளிக்கப் போடுகிற கடுகை நிற்பாட்டி... பெருஞ்சீரகம், சின்னச் சீரகம் தான் பாவிக்க வேணும்.

மஞ்சளும் விந்து விருத்தியை... பாதிக்கும் என்று சொல்கிறார்கள். உண்மையோ.... அண்ணை.

கடுகு எண்ணையிலை பெரிய பிளேன் ஓடினாலும்.......ஒரு துளி விந்துக்கு ஒரு கடுகு வில்லன். :(

இன்றுதான் கேள்விப்படுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு எண்ணையிலை பெரிய பிளேன் ஓடினாலும்.......ஒரு துளி விந்துக்கு ஒரு கடுகு வில்லன். :(

நான் பாவிப்பது கூட, ஆனா வீரியமின்னும் குறையவில்லை :D

[size=2]கடிப்பகை யெனவரு கடுகின் நாளு [/size]

[size=2]மிளகில் வணத்தோடு மூன்றுமொன்றாக்கி[/size]

[size=2]யடுபுன லருந்துமு னயிலவை கறைதொறும்[/size]

[size=2]வளிமுதன் மூலிகை வலியெலா மகலும்[/size]

[size=2]பச்சடி முதற்கறி பண்பினா லயிலினு[/size]

[size=2]நிச்சய மாயுணி கழ்பிணி யறுக்குமே [/size]

[size=2](தேரையர் குணபாடம்)[/size]

[size=2][size=2]இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்[/size]

[size=2]கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்[/size]

[size=2]படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்[/size]

[size=2]கடுகோட்டு மேன்மருந்த காண்.[/size]

[size=2]மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு[/size]

[size=2]முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்[/size]

[size=2]மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்[/size]

[size=2]தானே கடுகிற்குத் தான்[/size]

[size=2](அகத்தியர் குணபாடம்)[/size][/size]

கடுகை சமஸ்க்ருதத்தில் சர்ஷபம் என்று சொல்வார்கள் .

குணம்

வாந்தியுண்டாக்கி

வெப்பமுண்டாக்கி

தடிபுண்டாக்கி,

கொப்புளம் எழுப்பி

செரிப்புண்டாகி ,

சிருநீர்பெருக்கி ,

உடலில் உள்ள நச்சுத் தன்மையை போக்கும்,

ஜீரணசக்தியை ஏற்படுத்தும்.

வாதத்தொடர்பான நோய்களை தணி க்கும்.

குடி போதையை முறிக்க பயன்படும்

தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர்

குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌வற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.

‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி

உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.

கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.

கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.

கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை

உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி

இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.

கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/03/blog-post_1753.html#ixzz2CNrZqgk5

http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/03/blog-post_1753.html

[size=6]பெற்றோல் = நஞ்சு [/size]

[size=6][/size]

[size=6]நஞ்சு = விமானத்திற்கான எரிபொருள் [/size]

[size=6][/size]

[size=6]விமானத்திற்கான எரிபொருள் = கடுகு எண்ணை [/size]

[size=6]கடுகு எண்ணை = பெற்றோல் [/size]

[size=6]ஆகவே ............................................................................................கடுகு எண்ணை = நஞ்சு :D :D [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..... அப்பிடியெண்டால்... இனி சமையலுக்கு தாளிக்கப் போடுகிற கடுகை நிற்பாட்டி... பெருஞ்சீரகம், சின்னச் சீரகம் தான் பாவிக்க வேணும்.

மஞ்சளும் விந்து விருத்தியை... பாதிக்கும் என்று சொல்கிறார்கள். உண்மையோ.... அண்ணை.

நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து சரக்குவகைகளும் ஏதோ ஒருவகையில் மருந்தாக அமைகின்றது.அதையே நாங்கள் காயஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி அளவுக்கதிகமாக பாவிக்கும் போது அது நஞ்சாகவே மாறி விடுகின்றது.மஞ்சள் உண்மையிலேயே பல நோய்களுக்கு நிவாரணி.. ஊரிலையே எமக்கு எங்காவது காயம் ,புண் வந்தால் மஞ்சளை எண்ணையுடன் சூடுகாட்டி மருந்தாக கட்டி விடுவார்கள்.அனைத்தும் பறந்து விடும்.இதே போல் மஞ்சளின் மகிமை அளவிலடங்காது......மஞ்சள் புற்றுநோய்க்கு சிறந்ததென மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றார்கள்.அதற்க்காக மஞ்சளை அளவிற்கதிகமாக பாவித்தால் அந்த விசயத்தையும் கட்டுப்படுத்துமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் கேள்விப்படுகின்றேன்

நானும் ஜேர்மனி வந்து நீண்டகாலங்களின் பின்புதான் அறிந்தேன். ஊரில் எப்போதும் எல்லா கறிகளுக்கும் தாழித்து போடுவதில்லை.விரதகாலங்கள்,விசேடதினங்களில் மட்டுமே கடுகு பாவிக்கப்படுகின்றது.அதனால் கடுகின் விக்கனங்கள்,பின் விளைவுகளை பெரிதாக எடுக்கப்படுவதில்லை. ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் நாங்கள் எந்த கறிவகைகளாயினும் எண்ணைவிட்டு தாழித்து விட்டுத்தான் கறியை சமைக்க ஆரம்பிப்போம். கடுகின் அருமை தெரியாமல் பாவிக்கும் அளவும் அதிகமாக இருக்கின்றது. இங்குதான் பிரச்சனையே........

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பெற்றோல் = நஞ்சு [/size]

[size=6]நஞ்சு = விமானத்திற்கான எரிபொருள் [/size]

[size=6]விமானத்திற்கான எரிபொருள் = கடுகு எண்ணை [/size]

[size=6]கடுகு எண்ணை = பெற்றோல் [/size]

[size=6]ஆகவே ............................................................................................கடுகு எண்ணை = நஞ்சு :D :D [/size]

1 = 5

2 = 25

3 = 325

4 = 4325

5 = ?

5=54325

  • கருத்துக்கள உறவுகள்

5=54325

நன்றிகள், டாக்குத்தர்!

இதைத் தான், நான் எழுத நினைச்சனான்!

கொஞ்சம் சறுக்கீற்றுது! :D

  • கருத்துக்கள உறவுகள்

5=54325

நன்றிகள், டாக்குத்தர்!

இதைத் தான், நான் எழுத நினைச்சனான்!

கொஞ்சம் சறுக்கீற்றுது! :D

இருவரும் யோசிச்சவிதம் சரி, ஆனா சறுக்கிவிட்டது, விடை இதுவல்ல, இன்னும் முயற்ச்சிக்கலாம்

இருவரும் யோசிச்சவிதம் சரி, ஆனா சறுக்கிவிட்டது, விடை இதுவல்ல, இன்னும் முயற்ச்சிக்கலாம்

5 = 1

கிக்கிக்கீ குக்குக்கூ கெக்கெக்கே கொக்கொக்கோ

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

5 = 1

கிக்கிக்கீ குக்குக்கூ கெக்கெக்கே கொக்கொக்கோ

:D :D

சரியான விடை esan :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.