Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலைப்போராட்ட பாடலைப் போட்டு நடனமாடினர் !

Featured Replies

நேற்று முந்தினம் யாழ் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சினிமா பாடல்களும் இடம்பெற்றது. இருந்தபோதும் மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு மெதுவாக ஆடியிருந்தார்கள். பின்னர் “இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் “என்ற சாந்தன் பாடிய பாடலையும் “எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை “ என்ற செல்லப்பா பாடிய பாடலையும் ஒலிக்க செய்த போது மாணவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து தமது உள்ளத்தில், உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

உண்மையிலே யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்தபோதும், பல்கலைக்கழக மாணவர்கள் தமது உணர்வுகளை மறக்கவில்லை என்பதனை ஒருமுறை எடுத்து காட்டியுள்ளனர். ஒவ்வொரு மாணவ மாணவியின் உள்ளத்திலும் எம் தலைவர் வேண்டும் என்பதை தமது அடிமனதில் உட்கொண்டிருப்பதை வெளிக்காட்டியுள்ளனர். இராணுவ கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளனர். இதே உணர்வுகள் ஈழத்தில் உள்ள எல்லா உள்ளங்களிலும் உண்டு ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனுள்ளும் சில துரோகிகள் இந்த நிகழ்வில் விடுதலைப்புலிகளின் பாடல் இடம்பெறுகிறது என்று இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அலுவலகத்திற்கு அழைப்பு எடுத்து நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் இராணூவத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தலை வணங்குகின்றேன்

இந்த சமூகத்திற்கு............

நேற்று முந்தினம் யாழ் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சினிமா பாடல்களும் இடம்பெற்றது. இருந்தபோதும் மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு மெதுவாக ஆடியிருந்தார்கள். பின்னர் “இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள் “என்ற சாந்தன் பாடிய பாடலையும் “எம் தலைவர் சாகவில்லை என்றும் புலி ஓயவில்லை விம்மி அழ நேரமில்லை வீரப்படை தோற்பதில்லை “ என்ற செல்லப்பா பாடிய பாடலையும் ஒலிக்க செய்த போது மாணவர்கள் அனைவரும் துள்ளி எழுந்து தமது உள்ளத்தில், உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

[size=5]உண்மையிலே யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்தபோதும், பல்கலைக்கழக மாணவர்கள் தமது உணர்வுகளை மறக்கவில்லை என்பதனை ஒருமுறை எடுத்து காட்டியுள்ளனர். ஒவ்வொரு மாணவ மாணவியின் உள்ளத்திலும் எம் தலைவர் வேண்டும் என்பதை தமது அடிமனதில் உட்கொண்டிருப்பதை வெளிக்காட்டியுள்ளனர்.[/size] இராணுவ கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளனர். இதே உணர்வுகள் ஈழத்தில் உள்ள எல்லா உள்ளங்களிலும் உண்டு ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். [size=5]இதனுள்ளும் சில துரோகிகள் இந்த நிகழ்வில் விடுதலைப்புலிகளின் பாடல் இடம்பெறுகிறது என்று இலங்கை புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அலுவலகத்திற்கு அழைப்பு எடுத்து நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் இராணூவத்தினர்.[/size]

[size=5]இணைப்பிற்கு நன்றி வண்டர் .................உண்மையில் இந்த உணர்வு புலம் பெயர் வாழ தமிழரையும் விட அங்குள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அதிகமாக உண்டு ......................ஒரு நாள் வெளிவரும் /..................இந்த சமூகத்திற்கு தலை வணங்குகிறேன் ........[/size]

[size=5]அதே வேளை ஒரு சில துரோகிகளும் உண்டு ..........இனத்தின் .சாபக்கேடு .............கள்.[/size]

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகள் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும்.. இணைப்புக்கு நன்றிகள் வண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னப்பயம் இருக்கிறது. பாடலுக்கு நடனமாடியதினை இணையங்களில் வெளியிடுவதினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வராதா?

[size=5]எப்படி உணர்வுள்ள மனிதர்களால் இவற்றையெல்லாம் மறக்க முடியும்?

உணர்வற்ற ஒருசில ஜடங்கள் தான் தமது கட்டுரைகளில் ஈழத்தமிழர் தமிழீழத்தை மறந்துவிட்டார்கள் என்ற நப்பாசையில் ஈழத்தமிழர் என்ன நினைகிரார்களோ அதுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும், புலம் பெயர் தமிழர் ஈழக் கோரிக்கையை கைவிட வேண்டும் என்ற தொனியில் எழுதி மகிழ்கிறார்கள். [/size]

ஒரு சின்னப்பயம் இருக்கிறது. பாடலுக்கு நடனமாடியதினை இணையங்களில் வெளியிடுவதினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வராதா?

உங்கள் பயம் நியாயமானது! உங்கள் அக்கறை மக்கள் மீது உங்கள் பற்றை காட்டுகிறது.

ஆனால் பயந்து பயந்து வாழ்ந்தால் எதையும் சாதிக்க முடியாது!

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இணைப்புக்கு நன்றிகள் வண்டு.[/size]

இணைப்பிற்கு நன்றிகள் வண்டு அண்ணா.

ஒரு சின்னப்பயம் இருக்கிறது. பாடலுக்கு நடனமாடியதினை இணையங்களில் வெளியிடுவதினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வராதா?

ஆம், நானும் இதையே சிந்திக்கிறேன்.

உங்கள் பயம் நியாயமானது! உங்கள் அக்கறை மக்கள் மீது உங்கள் பற்றை காட்டுகிறது.

ஆனால் பயந்து பயந்து வாழ்ந்தால் எதையும் சாதிக்க முடியாது!

நீங்கள் தாயகத்திலா புலம்பெயர் தேசத்திலா உள்ளீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்த என்னால் இவ்வாறு நினைக்க முடியவில்லை. ஏனென்றால் பாதிக்கப்படப்போவது அவர்கள் என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]புலிகளின் அடாவடிதனத்திட்கு ஒரு அளவின்றி போச்சு. இந்த அப்பாவி மாணவர்கள் இனம் காணப்படும்போது பலத்த சோதனைகளை..... ஏன் உயிர் இழப்பை கூட அவர்கள் சந்திக்க நேரும் என்று தெரிந்தும். புலம்பெயர்ந்து வாழும் அவர்களது உறவினர்களின் தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டுதான். இந்த மாணவர்களை ஆட விட்டுள்ளார்கள். அவர்கள் அச்சத்தில் ஆட மறுத்தால் அவர்களது உறவினர்களின் தலையில் வெடி விழும் என்பதால். இந்த அப்பாவி மாணவர்கள் தமது உயிரை பணயம் வைத்துள்ளார்கள்.[/size]

[size=1]

[size=4]இந்த மாணவர்களின் எழுச்சி கூட சோந்தி என்ற தமிழ் விடுதலை மீது அக்கறையுடைய ஒரு பெண்ணால் உருவாக்கபட்டது. அவரது அயராத உளைப்ப்பினாலேயே இது சாத்திய பட்டது. அவரை ஆயுத முனையில் வன்னிக்கு கொண்டு சென்று உலகிலேயே இல்லாத சித்திரவதைகள் எல்லாம் செய்து. இந்த பாடலை இதில் போட வேண்டும் என அச்சுறுத்தி பின்பு விடுதலை செய்துள்ளார்கள்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.