Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தோர் பணி

Featured Replies

ஐயா ஆதிவாசியே இங்கே யாரும் குய்யோ முறையோ என்று குதிக்கவில்லை. எங்களிற்கு விவேகம் இருக்க வேண்டும் உங்களிற்கு அது இருக்கிறதா என்று ஒரு தடவை சரி பார்த்துக்கொள்ளுங்கள். வர்ணங்களால் வித்தை காட்டுவதில் இருந்து புரியவில்லையா யார் குதிக்கிறார்கள் என்று. ஏற்கனவே கனடிய தமிழ் மக்களை எதிர்க்கவேண்டும் என்று நீங்கள் யாழ்களம் புகுந்துள்ளீர்கள் என்று நீங்களே வேறு ஓர் இடத்தில் கூறி இருக்கிறீர்கள். அவ்வாறான ஓர் எண்ணத்துடன் இங்கு வந்திருக்கும் உங்களிற்கு அனைத்தும் தப்பாகவே தெரியும் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கனடிய தமிழ் மக்கள் தாம் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை காலம் உணர்த்தும். அப்போது அது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

விவேகம் இல்லைத்தான்....

திரும்பத் திரும்ப உங்களோடு உரையாடுவதால் கேட்கிறீர்களோ?

எழுத்துகளுக்கு வர்ணம் அடித்துக்கவர்ச்சி காட்டுகிறேன்

என்று ஒரு குற்றச்சாட்டு........

இதில் என்ன இருக்கிறது?.......எழுத்துகளுக்கு வர்ணம் அடிக்கும்

வசதி இருக்கிறது அதனால் எழுத்துக்களை அழகுபடுத்துகிறேன்.

விரும்பினால் நீங்களும் வர்ணம் புூசலாம்.

அடுத்துக்கனேடியத் தமிழ்மக்களை எதிர்க்க வேண்டுமென்று

யாழ்களத்தில் இறங்கி இருப்பதாக கூறியுள்ளீர்கள்!

அதனால் எனக்கு என்ன லாபம்?.........

இதில்கூட உங்கள் தெளிவற்ற புரிந்துணர்தலையே வெளிப்படுத்தி

மற்றவர்களை எதிரியாக்கும் தன்மையை வளர்க்கிறீர்கள்....

தாயகத்திற்காக குரல் கொடுப்பது உங்களுக்கு மாத்திரமானதல்ல.

உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத்திழினத்திற்கு உரியது....

சின்னச் சின்ன எண்ணங்களால் உங்களைப் போன்றவர்கள்

கட்டும் குறுகிய வட்டங்களை உடையுங்கள்...

விளங்கா நிலையிலிருந்து வெளியே வாருங்கள்!

விவேகம் இல்லாத ஆதிவாசி

  • Replies 71
  • Views 9.7k
  • Created
  • Last Reply

விவேகம் இல்லைத்தான்....

திரும்பத் திரும்ப உங்களோடு உரையாடுவதால் கேட்கிறீர்களோ?

எழுத்துகளுக்கு வர்ணம் அடித்துக்கவர்ச்சி காட்டுகிறேன்

என்று ஒரு குற்றச்சாட்டு........

இதில் என்ன இருக்கிறது?.......எழுத்துகளுக்கு வர்ணம் அடிக்கும்

வசதி இருக்கிறது அதனால் எழுத்துக்களை அழகுபடுத்துகிறேன்.

விரும்பினால் நீங்களும் வர்ணம் புூசலாம்.

அடுத்துக்கனேடியத் தமிழ்மக்களை எதிர்க்க வேண்டுமென்று

யாழ்களத்தில் இறங்கி இருப்பதாக கூறியுள்ளீர்கள்!

அதனால் எனக்கு என்ன லாபம்?.........

இதில்கூட உங்கள் தெளிவற்ற புரிந்துணர்தலையே வெளிப்படுத்தி

மற்றவர்களை எதிரியாக்கும் தன்மையை வளர்க்கிறீர்கள்....

தாயகத்திற்காக குரல் கொடுப்பது உங்களுக்கு மாத்திரமானதல்ல.

உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத்திழினத்திற்கு உரியது....

சின்னச் சின்ன எண்ணங்களால் உங்களைப் போன்றவர்கள்

கட்டும் குறுகிய வட்டங்களை உடையுங்கள்...

விளங்கா நிலையிலிருந்து வெளியே வாருங்கள்!

விவேகம் இல்லாத ஆதிவாசி

அடுத்துக்கனேடியத் தமிழ்மக்களை எதிர்க்க வேண்டுமென்று

யாழ்களத்தில் இறங்கி இருப்பதாக கூறியுள்ளீர்கள்!

அதனால் எனக்கு என்ன லாபம்?.........

இதில்கூட உங்கள் தெளிவற்ற புரிந்துணர்தலையே வெளிப்படுத்தி

மற்றவர்களை எதிரியாக்கும் தன்மையை வளர்க்கிறீர்கள்....

தாயகத்திற்காக குரல் கொடுப்பது உங்களுக்கு மாத்திரமானதல்ல.

உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத்திழினத்திற்கு உரியது....

சின்னச் சின்ன எண்ணங்களால் உங்களைப் போன்றவர்கள்

கட்டும் குறுகிய வட்டங்களை உடையுங்கள்...

விளங்கா நிலையிலிருந்து வெளியே வாருங்கள்!

விவேகம் இல்லாத ஆதிவாசி

கனேடியத் தமிழர்களை எதிர்க்கவேண்டும் என்பது நீங்களே கூறிய வாக்குமூலம். அதன்பிறகு உங்களைப்போன்றவர்களுடன் தொடர்ந்து பேசுவதில் எப்பயனும் கிடைக்கப்போவதில்லை. யார் எதிரிகளாக்குகிறார்கள் என்று உங்கள் பதிவுகளையே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தாயகத்திற்கு குரல் கொடுப்பது என்பது எமது உரிமை. அதை நீங்கள் எங்களிற்கு கற்றுத்தரத் தேவையில்லை. எமது பணியினை நாம் எமக்கு திருப்தி தரும் வகையில் செய்துகொண்டிருக்கிறோம். உங்கள் இடத்தில் செய்யவேண்டிய உங்கள் பணியினை நீங்கள் சரி வர செய்தால் அதுவே போதும். குறுகிய வட்டத்திற்குள் உங்களைப்போல் நாம் இல்லை. இவைதான் செய்யவேண்டும் இவை செய்யக்கூடாது என்பது போன்ற குறுகிய சிந்தனை இல்லாது கனடிய தேசம் போல் நாமும் பரந்த சிந்தனையோடு செயற்படுகின்றோம். இனியும் செயற்படுவோம்.

பிரமாத வரவேற்பாம்.......பிரமாத வரவேற்பு?

எங்கேடா..... ஒரு கனடாத்தமிழன் தன்னும் நம்மகிட்ட

சிக்கமாட்டானா என்று பாத்த எனக்கு வந்து வசமா மாட்டினீர்!

சுஜிந்தன் இங்க வாரும்...!

இந்த உலகமெல்லாம் தமிழன் உரிமைக்காக எவ்வளவு

நிகழ்வுகள் நடக்குது....

உந்தக் கனடாவில என்னத்தை வெட்டிப் புடுங்கிறியள்? http://www.yarl.com/forum3/viewtopic.php?p=195443#195443

ஒரு விடயத்தை தந்தால் முழுமையாக தரவேணும்....

Aathivaasi

இணைந்தது: 18 வைகாசி 2006

கருத்துக்கள்: 147

வதிவிடம்: kaadu

எழுதப்பட்டது: ஞாயிறு ஆனி 18, 2006 7:33 pm Post subject:

--------------------------------------------------------------------------------

Sujeenthan எழுதியது:

வணக்கம் ஆதிவாசி. பிந்திய வரவேற்பு. ஆனாலும் பிரமாதமாக இருக்கும்.

எது.............

கம்பு, கத்தி, அரிவாள், கோடாரியோடோ?.....

அல்லது.......

பிஸ்டல், கிரனைட், செல், கிளைமோர் சகிதமோ?.....

பிரமாத வரவேற்பாம்.......பிரமாத வரவேற்பு?

எங்கேடா..... ஒரு கனடாத்தமிழன் தன்னும் நம்மகிட்ட

சிக்கமாட்டானா என்று பாத்த எனக்கு வந்து வசமா மாட்டினீர்!

சுஜிந்தன் இங்க வாரும்...!

இந்த உலகமெல்லாம் தமிழன் உரிமைக்காக எவ்வளவு

நிகழ்வுகள் நடக்குது....

உந்தக் கனடாவில என்னத்தை வெட்டிப் புடுங்கிறியள்?

'ஆ"ன்னா 'ஊ"ன்னா......

ஆகமிஞ்சி........ உரிமைக்குரலுக்கு குரல் கொடுத்தோம் என்று

பறவைகளில் இருந்து பலதும்(உணர்வுள்ள மனிதர்கள் மன்னிக்க)

குரல் குடுப்பினம்...

அதுக்குப்பிறகு என்ன நடவடிக்கையைச் செயல்படுத்தி இருக்கீங்க?

சரி விடுவம்.......

இனிமேல் தன்னும் ஏதேனும்..........

யோசியுங்கோ......யோசியுங்கோ.....யோச

ஆக என்ன நினைக்கிறீங்க ?

யாருமே கனடாவில் வாழும் தமிழரைப்பற்றிக் கேள்வி கேட்கக்கூடாது

அப்படித்தானே.......

எந்த ஒரு கருத்தையும் உள்வாங்கும் தைரியம் இல்லாத

உங்களைப் போன்றோருடன் பேசுவதில் பயனில்லை....

'இரவேறிய நிலவுூடாக

கரையேறிய உறவுகளுக்கு" என்ற கவிதையில் தாயகக்

கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் எழுதியவரிகள்

' காசெமக்கு வேண்டாம் கருகுமெம் வாழ்வதனைப்

பேச ஓரிருவர் புறப்பட்டால் அதுபோதும்."

இவை தாயகத்தின் கண்ணீர் சுமந்த வரிகள்....

இந்த வரிகளின் ஆழம் ஆதிவாசிக்கு நன்றாகவே புரியும்.

என்ன ஆதிவாசி பகட்டுக்கு எழுதி படம் காட்டும் இரகம்

என்று நினைத்து விட்டீர்களா?.....

ஏதோ உரிமைக்குரலில் சாதித்ததாக ஆணவப்படுகிறீர்கள்......

மிகத் தவறு.

இந்த உரிமைக்குரல்போல் இல்லையில்லை அதற்கும் மேலாக

தொடர் வண்டிபோல் சளைக்காமல் செய்ய வேண்டியபணி

உங்கள் முன்னே விரிந்து கிடக்கிறது.

ஆதிவாசிக்கு சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.

ஆனால் தாயகத்தைத் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள்

பணியைச் செய்யத்தூண்டும் அவசியம் தாயகத்தை நேசிக்கும்

ஆதிவாசிக்கு இருக்கிறது.

தாயக நேசிப்போடு ஆதிவாசி

தேவையான விடயம் முழுமையாகத் தரப்பட்டிருந்தது.

கனடியத் தமிழரைப் பற்றி கேள்வி கேட்க கூடாதென்று இங்கு யாராவது கூறியிருந்தால் அதை சுட்டிக்காட்டலாமே. எமக்கு புரிதல் இருக்கிறதா எனக்கேட்கும் ஆதிவாசியே உங்களிற்கு ஏதாவது இருக்கிறதா. இங்கு நீங்கள் கூறிய பதிலிருந்தே நீங்கள் வந்துள்ளகாரணம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதன் பின்னர் அது பற்றி உங்களுடன் பேசவேண்டிய தேவை எமக்கில்லை.

'காசெமக்கு வேண்டாம் கருகுமெம் வாழ்வதனைப்

பேச ஓரிருவர் புறப்பட்டால் அதுபோதும்'

இவ்வரிகளின் அர்த்தம் இங்கு நின்று ஒப்பாரி வைப்பதில்லை. அவ்வரிகளின் அர்த்தம் உங்களிற்கு புரிந்திருந்தால் அதில் கூறப்பட்ட விடயத்தினை எடுத்துச்செல்லுங்கள். அவ்வரிகளின் கருத்தினை நாம் முழுமையாக அறிந்தே வைத்திருக்கிறோம்.

உரிமைக்குரலில் சாதித்ததாக நாம் ஆணவம் கொள்ளவில்லை. ஆயினும் நாம் அடைந்தவற்றையும் நீங்கள் மறுப்பது முழுப் பூசனிக்காயைச் ஒரு கோப்பை சோற்றினுள் மறைப்பதற்கு ஒப்பாக உள்ளது. உங்களிற்கு சொல்ல வேண்டிய தேவையும் எமக்கில்லை என்று உங்களால் எவ்வாறு கூற முடிகிறதோ அவ்வாறே எமக்கு கூறவேண்டிய தேவையும் உங்களிற்கு இல்லை. நாம் நினைக்கிறோமோ இல்லையோ அனால் நீங்கள் தெளிவாக உங்கள் பதிவுகளின் மூலம் காட்டிக்கொள்கிறீர்கள். நீங்கள் பகட்டுக்கு எழுதி படம் காட்டும் இரகம் என்று. நீங்களே ஒப்புக்கொள்ளும் போது நாம் ஏன் அதனைக் கூறவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் செல்வமுத்து, ஆதிவாசி, ரமா, அருவி,

பறவைகள், கந்தப்பு, வர்ணன் எல்லோருக்கும் நட்பான நன்றி

ஒரு சூடான விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சியாக

இருக்கிறது. வரம்பு மீறாத சொல்லாடல்களைப் பார்க்கும் போது

இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

நகைச்சுவை மிகுந்த ஆதிவாசியின் தாயகநேசிப்பு பிரமிப்பைக் கொடுக்கிறது

ரமா,அருவி,பறவைகள் எல்லோரும் சேர்ந்து ஆதிவாசியைத் திணற

வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆதிவாசி கோவிக்கமாட்டார் என்றே

நம்புவோம்.

கவனித்துக் கொண்டிருக்கிறோம் எடுத்தபொருளில் இருந்து விலகாமல்

தொடரட்டும் உங்கள் பணி.

இப்படிக்கு வல்வை சகாறா.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து அகற்றப்பட்டுள்ளது.

இராவணனுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் யுூட்

நான் விவாதம் செய்தவர்களையும் அவர்கள் கருத்துக்களையும்

உள்வாங்கிக் கொண்டு இருந்ததனால்

நான் எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் இவர்கள்

அநாகரிகமாக சொல்லாடியிருக்கிறார்கள்.

எனது கருத்தை அனுப்பிய பின்தான் பார்த்தேன்.

அவர்களின் கருத்தையோ, நிலைப்பாட்டையோ

கருத்தில் எடுக்கவேண்டிய அளவுக்கு என்ன இருக்கிறது?

நெற்கதிரிடையே பதர்கள் முளைப்பதில்லையா?

அவர்களின் சொல்லாடலே அவர்களை தரங்குறைந்தவர்களாக

முகவரிப்படுத்தும் போது நாங்கள் கவலையடைய வேண்டிய அவசியம் இல்லை யுூட்

இப்படிக்கு வல்வை சகாறா.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் இவர்கள்

அநாகரிகமாக சொல்லாடியிருக்கிறார்கள்.

எனது கருத்தை அனுப்பிய பின்தான் பார்த்தேன்.

......

......

அவர்களின் சொல்லாடலே அவர்களை தரங்குறைந்தவர்களாக

முகவரிப்படுத்தும் போது நாங்கள் கவலையடைய வேண்டிய அவசியம் இல்லை யுூட்

இப்படிக்கு வல்வை சகாறா.

நண்பரே

தங்கள் கருத்து முற்றிலும் உண்மையானது.

இவர்களால் இந்த களம் களங்கப்படுவதை பார்க்கும் போது சிறிது கவலையாக இருப்பினும் தாங்கள் சொன்னது போல களைகள் முளைப்பதை முற்றிலும் தடுப்பது கடினம்தான்.

ஆயினும் விழிப்புடன் இருந்து களையகற்றும் இராவணனுக்கு மீண்டும் நன்றி.

ஆதிவாசி முடிக்கேல்லை....

monkey.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பறவைகளே!

தற்பெருமை, சுயபுராணம்...??????

ஆதிவாசிக்குப் பெருமையையும்...புகழையும் நீங்களாகவே

தங்கத்தாம்பாளத்தில் வழங்கும்போது.......????????

மூஞ்சூறு போகக் காணேல்லை விளக்குமாற்றைக் காவுதாம்...

கவனியுங்க தான் போக இயலாத பாதையில் தன்னைவிடப் பெரும்

பொருளை நகர்த்த நினைக்கிறதே....

அதுதான் முயற்சி!

வெற்றியா? தோல்வியா? என்பது மூஞ்சூறுக்குத் தெரியாது.....

இருப்பினும் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையே அதன் முயற்சியின்

மூலாதாரம்.....

மூஞ்சூறின் புதிய சிந்தனையோடு

ஆதிவாசி

ஆதிவாசி அவர்களே! நீங்கள் பழமொழியின் அாத்தத்தை மாற்றி புது மொழியாக்கி விட்டீர்கள், (வாழ்த்துக்கள்) நாங்கள் யாருக்கும் தங்க கம்பளம் விரிக்கவில்லை. விரிக்கபோவதும் இல்லை. இங்கே நீங்கள் கனடிய கலைஞர்களையும், தமிழ் மக்களையும் விவாதத்துக்குள் இழுந்ததால் தான் நாம் ஒரு கனடிய தமிழராய் உங்கள் வினாக்களுக்கும், உங்கள் அன்ாமதேய குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க முன்வந்தோம். நாங்கள் எங்கள் கடமையை சரிவரிவரச் செய்கையில் எங்கிருந்தோ நீங்கள் தரும் விசமத்தனமான விமர்சனங்கள், செயற்ப்பாட்டிலிருக்கும் மக்களை உறங்கு நிலைக்கு கொண்டு சென்று விடுமோ என்ற அச்சம் எங்கள் மத்தியில் எழுந்துளளது. ஏனெனில் செய்தவற்றை செய்யவில்லை என்றால் யாருக்கு தான் கோபம் வராது?

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் (களத்தில் எழுதியதில் பாதி) கனடிய தமிழர்களை வசை பாடுவதிலே வீணடித்துள்ளீர்கள். உண்மை தமிழர்களாக நாம் எமது கடமையை சரிவரச் செய்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் தமிழ் தேசியத்தை மட்டும் பார்க்காமல், அதற்க்கு அப்பால் ஒரு படி மேல் நோக்கி சென்று, கனடாவில் எமது அடையாளத்தை நிலை நிறுத்தியுள்ளோம். இந்த நிலை நிறுத்தலில் இருந்து எமது தேசியத்துக்கான குரலை நாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ரொரன்ரோ மாநகரையே ஸ்தம்பிக்க வைத்த, பொது போக்கு வரத்து சபை வேலை நிறுத்தம் எங்கள் உரிமைக்குரல் நிகழ்வை மட்டும் சிறப்பிக்க வைத்ததிலிருந்து நீங்கள், எம்மை பற்றியும், எமது கனடிய தமிழ் வர்த்தகர்கள் பற்றியும், அறிய வேண்டும் குறிப்பிட்ட 1 மணி நேரத்தில் அனைத்து போக்கு வரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியது ஒரு தனியார் வானொலி என்பது பலரால் நம்ப முடியாது விடையம். ஆதே போல அன்று, தமது சொந்த வாகனங்களை, சேவையிலீடுகபடுத்தியவர்களும

  • 2 weeks later...

தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது

three-monkeys_1.JPG

தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது

three-monkeys_1.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வலிதாய்....

தேடல் உள்ளவிடத்தில் தேவைகள் அதிகம்!

வல்லூறுகளின் வட்டமிடலில் சிறுகச் சிறுக

ஒரு கோர யுத்தத்திற்கான முன்னெடுப்புக்களை

ஆளும் வர்க்கம் தமிழீழப் பரப்புகளில் நகர்த்திக்

கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தற்காப்புப் பணி ஒன்றையே

முன்னெடுத்தவண்ணம் தம் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு முழுமையான தலைமுறை போரின் இடர்களுக்கு முகம் கொடுத்தும்

எங்கள் பிரச்சனையை உலகம் கைகட்டி நின்றே வேடிக்கை பார்க்கிறது.

முடிந்தவரை வல்லரசுகள் தெரிந்தே எங்களின் நியாயமான கோரிக்கைகளை

தெரியாத நோக்கில் செயல்ப்படுகின்றன. இலங்கை அரசினால்

இன்றைய காலத்தில் தொடர முனையும் இராணுவ ஒடுக்குமுறை

எங்களின் அடுத்த தலைமுறையைத் தேடித் தன் கோரப்பற்களைப் பதிக்க முனைகிறது.

தலைமுறை தாண்டும் இந்நிலை எம்மக்களின் மகிழ்ச்சியைக்

குத்தகைக்கு எடுத்து குதூகலிக்கிறது.

இனவாதிகளுடன் பேசிப்பயன் ஏதும் உண்டா?

பேச்சு வார்த்தைக் காலங்கள் உலகின் முன் அமைதிக் காலமாகத்

தெரிந்தாலும் எங்களுக்குள் பாரிய வேதனையைச் சுமத்தி வேடிக்கை பார்க்கிறது.

எத்தனை பக்கங்கள் எழுதினாலும், எத்தனை மேடைகளில் முழங்கினாலும்

எம் இனத்தின் இன்னலை எவருமே கண்டுகொள்ளத் தயாரில்லை.

ஏனெனில் எல்லோர்க்கும் அவரவர் நலம் பெரிது.

இன்றைய நாட்களில் இனவாதத்தாலும், இராணுவ ஒடுக்கு முறைகளாலும்

நலிந்திருக்கும் எம்மக்களை நோக்கி சர்வதேசங்களின் அலட்சியப் போக்கு

மென்மேலும் இன்னல்களை வீசியிருக்கிறது.

இந்நேரம்....

புலம் பெயர் உறவுகள் தாயகத்தின் இன்னலை தம் கவனத்தில்

எடுத்துச் செயலாற்ற வேண்டிய தேவை உச்ச நிலையை அடைந்திருக்கிறது.

புலம்பெயர்ந்த எம்மவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே!

புலன் பெயர்ந்தவர்கள் அல்ல என்ற தாயகத்தின் நம்பிக்கை

எம்மீது புூரணப்படுத்தப்பட்டிருக்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

' இன்னும் வலிதாய் இன்னல் களை"

என்ற வாசகம் கனமாகக் கண்முன்னே தெரிகிறது.

இன்றுவரை எங்கள் இருப்பிற்கு அர்த்தம் புரியாமல் அலைமோதியது போதும்.

இன்னும் வலிதாய் இன்னல் களைய அன்னைமண் அழைக்கிறது.

எழுவோம்.... தொடர்வோம்....

தாயகத்திற்கான புலம்பெயர் பக்கபலத்தை புூரணமாக்குவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

' இன்னும் வலிதாய் இன்னல் களை"

என்ற வாசகம் கனமாகக் கண்முன்னே தெரிகிறது.

இன்றுவரை எங்கள் இருப்பிற்கு அர்த்தம் புரியாமல் அலைமோதியது போதும்.

இன்னும் வலிதாய் இன்னல் களைய அன்னைமண் அழைக்கிறது.

எழுவோம்.... தொடர்வோம்....

தாயகத்திற்கான புலம்பெயர் பக்கபலத்தை புூரணமாக்குவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Three_Monkeys.jpg

???????????????????

இதுகல் யார்? கோனல் கருனாவின் புரட்சியாலர்கலா??

இங்கே கருத்தாடும் அனைவருக்கும் வணக்கம்.

இந்த விடயம் தொடர்பான என்னுடைய கருத்துக்கள் சிலவற்றையும் இங்கே வைக்க விரும்புகிறேன்.

1. தமிழுணர்வு, மண்மீதான பற்று என்பது உண்மையில் உள்ளத்திலிருந்து வர வேண்டும். தாம் ஆங்கிலேய மண்ணின் புதல்வர்கள் என்பது போன்ற மாயையுடன் வாழ்பவாகளிடம் புரட்சிக் கவிதையை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி அவாகளிடமிருந்து அத்தகைய கவிதை வந்தாலும் அது செயற்கைத் தன்மை வாய்ந்ததாகத் தான் இருக்க முடியும்.

2. போராட்டம் என்பது தாயகத்திலே நடைபெறுகின்றது நாம் அதற்குப் பொருளாதார ரீதியிலான பங்களிப்பைச் செய்தால் போதுமானது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் நாங்கள் எடுக்கின்ற சில சின்னச் சின்ன அடிகள் கூட போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் . அது போல சிங்கள் அரசுக்கு மரண அடியாக இருக்கும்.

உதாரணமாக எங்களில் பலர் வசதி கருதி தங்கள் பயணத்திற்காக ளுசுஐ டுயமெயn யுசைடiநௌ விமானங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவர்கள் சுனாமி காலத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மிகவும் சீக்கிரத்தில் மறந்து போய் விட்டோம். ஏன் எங்களால் ஏனைய நாட்டு விமானங்களைப் பயன்படுத்த முடியாது.

அதுபோல எங்கள் பணங்களை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு சிறிலங்கா வங்கிகளில் முதலிட்டிருக்கிறோம்.அது போரியல் ஆயுதங்களை வாங்குவதற்கான முதலீடாகப் பயன்படுகிறது என்பதை ஏன் எங்களால் சிந்திக்க முடியாதிருக்கிறது.

அடுத்ததாக நாம் எங்கள் போராட்டத்தைப் பற்றி எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி எம்முடன் கூட வேலை செய்கின்ற அல்லது படிக்கின்ற இந்த நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோமா? எங்களுக்குள் கூடிக் கதைப்பதிலும் பெருமை பேசுவதிலும் என்ன பயன் இருக்கிறது.வேலைத் தளங்களில் மற்றவாகளுடன் பேசினால் அவர்கள் எங்களைப் பற்றித் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயம் பலரிடம் இருக்கிறது.ஆனால் சம்பவங்களை எடுத்துச் சொன்னால் அவாகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

எங்களில் பலர் பிரிந்து வந்த நாட்டை மண்ணை மொழியை உறவுகளை மறந்து போய் என்ரை குடும்பம் என்ரை வேலை என்ரை சொத்து எண்டு ஒரு சின்ன வட்டத்துக்குள்ளை தான் வாழ்ந்து கொண்டிருக்கினம்.

நாங்கள் நாலைந்து பேர் கூடுகின்ற போது மட்டும் என்று உணர்ச்சிவசப் பட்டுவிட்டு அல்லது நடித்துவிட்டு ஓரு ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் என்றதும் நழுவி விடுகின்றோமே

இப்படிப் பல விடயங்கள் சீர்ப்படுத்தப்பட அல்லது திருத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

அடுத்ததாக நாம் புலம்பெயர்ந்தும் ஊரிலே பேசிய பிரதேசவாதத்தின் தொடர்ச்சியாய் அந்த நாட்டுக் காரர் ஒன்றும் செய்யவில்லை இந்த நாட்டுக்காரர் ஒன்றும் செய்யவில்லை என்று ஒருவரக்கொருவர் குற்றஞ் சாட்டுவது எந்த வகையில் சரியென்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை உணர்வாளர்கள் கனடாவிலும் இருக்கிறார்கள். இங்கிலாந்திலும் இருக்கிறாhகள் பிரான்சிலும் இருக்கிறார்கள். எல்லா இடமும் இருக்கிறார்கள் . அதுபோலக் காட்டிக் கொடுப்பவாகளும் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.

எனவே எமக்குள் வேற்றுமையை வளாப்பதை விடுத்து அனைவரும் ஒன்றுபட்டு எங்கள் விடிவிற்காய் உழைக்க வேண்டும, உழைப்போம்.

இன்னும் பலபேர் வீட்டில் சிங்கக் கொடியை வைத்துக்கொண்டு,அதையே எங்களது தாய்நாட்டுக்கொடி என்று தமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

தர்மம் ஏந்தி வெல்வோம்.

இடுக்கன் களைந்து ஈழமண்ணில்

தமிழர் வாழ்வு சிறக்க

முடங்கி ஒடுங்கும் எழுதுகோல்கள்

முன்றல் ஏறி நிற்க!

அடக்கி அடக்கி அடித்து நொறுக்கி

அவலம் சூழ்ந்த வாழ்வை

எடுத்து உரைக்க இந்த மண்ணில்

தமிழர் எழுச்சி கொள்க!

தடுக்கும் சட்டம் தன்னை உயர்த்தி

தமிழ் நாவை ஒடுக்கவில்லை

வடுக்கள் காட்டி வாதை கூறும்

வழிகள் மறுக்கவில்லை.

துடிக்கும் வலியில் துவளும் கலியில்

தமிழர் கிடக்கை சொல்க! - உயிர்

வடிக்கும் உணர்வை எடுத்துக் கோர்த்து

வையம் எங்கும் பகர்க!

முடக்கும் திசைகள் முழக்கம் கேட்டு

விழிப்புக் கொள்ளும் வரைக்கும்

உயிர்ப்புச் செய்து உலகத்திசையில்

உண்மை எடுத்து உரைக்க!

அடுத்த கலியால் தமிழர் வாழ்வு

அங்கலாயும் முன்னர்

தடுப்புச் சுவர்கள் போட்டுக்காத்து

தர்மம் ஏந்தி வெல்க!

முடக்க முடக்க எழுதுகோல்கள்

எழுந்து நடக்கும் சொல்க!- இன

இடுக்கன் மறைந்தால் மாத்திரமே

இவை இளைப்பாறும் என்க!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரவேண்டிய அவசியம் இருக்கிறது

three-monkeys_1.JPG

நன்றி ஆதிவாசி.

இது வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Manivasahan எழுதியது:

1. தமிழுணர்வு, மண்மீதான பற்று என்பது உண்மையில் உள்ளத்திலிருந்து வர வேண்டும். தாம் ஆங்கிலேய மண்ணின் புதல்வர்கள் என்பது போன்ற மாயையுடன் வாழ்பவாகளிடம் புரட்சிக் கவிதையை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி அவாகளிடமிருந்து அத்தகைய கவிதை வந்தாலும் அது செயற்கைத் தன்மை வாய்ந்ததாகத் தான் இருக்க முடியும்.

2. போராட்டம் என்பது தாயகத்திலே நடைபெறுகின்றது நாம் அதற்குப் பொருளாதார ரீதியிலான பங்களிப்பைச் செய்தால் போதுமானது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் நாங்கள் எடுக்கின்ற சில சின்னச் சின்ன அடிகள் கூட போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் . அது போல சிங்கள் அரசுக்கு மரண அடியாக இருக்கும்.

நன்றி மணிவாசகன்.

மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

இப்படிக்கு

வல்வை சகாறா.

இது விளங்காமல் பல பேர் போராட்டம் பற்றி கதைத்தால் நீங்கள் போய் நாட்டிலே போராட வேண்டியதுதானே என்று அறிவு கெட்ட தனமாக கதைப்பார்கள்.

விவாத்திக்க வேண்டும்,நாலு பேர் கூடும்போது போராட்ட பிரச்சனைகளை எடுத்துக்கூறல், தாயகம் அறிந்த செய்திகளை அனைவருக்கும் கூறுதல். இப்படி பலதை நாங்களாகவே செய்ய வேண்டும்

இதற்கு புலிஉறுப்பினர்கள் தேவை இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேசன்,

உங்களைப்போன்றவர்கள் தங்களுக்குத் தெரிந்த பல விடயங்களை

இங்கு சொல்வதன் மூலமும் ஆக்கபுூர்வமான செயற்பாடுகள்

வெளிவரக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகும்.

இத்தோடு அண்மையில் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள்

கூறிய கருத்தையும் எடுத்துப்பார்த்தால் நிறைய விடயங்களை

நாம் உணரக்கூடியதாக இருக்கிறது

'எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள். வேற்று மொழிகளில் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்வது மிகக்குறைவு. பிரெஞ்ச்இ டொச் மொழியில் எழுதக் கூடிய தமிழர்கள் இன்று வந்துவிட்டார்கள். தமிழில் எழுதியாவது அதை வேற்று மொழிக்குக் கொண்டு செல்லுங்கள்.

ஈழத் தமிழினம் படுகிற துயரமும் கண்ணீரும் வதையும் வலியும் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது உலகுக்குத் தெரிந்திருந்தால் நமக்கு இடைஞ்சல் இல்லையே... ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூடுவது அல்ல புலம்பெயர் தமிழரின் பணி. அதற்கு மேலாக தினசரி அதற்காக இயங்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும். தாயகத்து உறவுகளின் வலியை படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் மூலம் உலகத்துக்குச் சொல்ல வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. வியட்நாமிய மக்களின் கண்ணீரும் துயரமும் அப்படித்தான் வந்தது. அதுபோல ஈழத் தமிழரின் கண்ணீரையும் துயரையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி ஒரு இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்படுகிறதோ அப்படி படைப்பு ரீதியாகவும் ஒரு நடவடிக்கை இயங்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் கலைஞர்களும் படைப்பாளிகளும் அதிகம். ஒரு தாயின் கடமையைப் போல் செய்ய வேண்டும். இதை செவ்வனே செய்வதே புலம்பெயர் படைப்பாளிகள் ஆக வேண்டும்.

நாங்கள் போராடுவோம் என்பது உண்மை. இறுதி ஆள் இருக்கும் வரை போரிடுவோம். எந்தக் கொம்பன் வந்தாலும் நாம் போரிடுவோம். அது வேறு பிரச்சனை. ஆனால் அதை நமது நியாயப்பாடுகளை உலகத்துக்குச் சொல்வது யார்? புலம்பெயர் தமிழர்களுக்குள் இருக்கிற படைப்பாளிகளும் கலைஞர்களும்தான். அவர்கள் அதைச் செய்ய வேண்டும். சும்மா வெறுமனே அடித்தான்- கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. மார்க்ஸிம் கார்க்கியஇ மாயவோஸ்கிஇ பாப்லோ நெரூடா என்றாலும் பாரதி என்றாலும் அவர்கள் போராட்டத்துக்கு பணி செய்தனர்.

ஆகவே எமது புலம்பெயர் உறவுகளே!

அவர்களுக்குள் பூத்துக் கிடக்கும் படைப்பாளிகளே!

இந்தப் பணிகளை அவர்கள் தங்கள் கைகளில் எடுக்கட்டும்!

ஏனெனில் நாம் திரும்பவும் போரிடுவோம். திரும்பவும் அடைபடுவோம். எங்கள் அவலம் உங்களின் கண்களால் தெரியவேண்டும்"

தாயகத்தின் குரலைக் கேட்காதவர்களாக இன்னும் இருப்போமானால் நாங்களெல்லாம்

வீணர்களாக ஆகி தாயகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு உலகின் எந்த

மூலையில் வாழ்ந்தாலும் முகமற்றவர்களாக வாழ நேரிடும்.

இதை எப்போது நம்மவர்கள் உணர்வார்கள் :?: :?: :?:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.