Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளின் குழப்பங்களும், சிங்கள பயங்கரவாத அரசின் சதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார்திகைப் பூவிற்கு மூன்று பவுண்ட்ஸ் கொடுப்பது பெரிய விடயமல்ல. அது மண்டபத்திற்குப் போவதற்கான செலவில் பாதிக்கும் குறைவானது.

இலண்டனில் பற்றுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.

  • Replies 101
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]

ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலான அவதானிப்பின் அடிப்படையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பற்றி என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது.

[/size]

[size=1]

[size=4]உங்களுக்கு கருத்து இருக்கவேண்டும், அதற்கு பூரண உரிமையும் உண்டு. [/size][/size][size=1]

[size=4]ஆனால், அது தான் ஒட்டுமொத்த ஜெர்மன் தமிழ் மக்களின் கருத்தா? என அறிவதே எனது தேடலில் நோக்கம். [/size][/size][size=1]

[size=4]முடிந்தால் உதற்கு பதில் தாருங்கள்: [/size][/size]

[size=4]

ஜெர்மனியில் பல நகரங்களில் எமது புலம்பெயர் மக்கள் வாழுகின்றனர்.

#1: எனவே எல்லா நகரங்களிலும் மாவீரர் தினம் நடக்கின்றதா? எத்தனை நகரங்களில் நடக்கின்றது ?

#2: எல்லா நகரங்களிலும் பணம் சேர்கின்றார்களா?

#3: பணம் தருபவர்கள் மாவீரர் தினத்திற்கான செலவுகள் எவ்வளவு என யாரும் கேட்பதுண்டா?

#4: தரமாட்டோம் என்று யாராவது சொன்னார்களா? என்ன நடந்தது?

பி.கு. நான் கனடாவில் உள்ளேன். இங்கே மாவீரர் தினத்திற்கு என வீடுவீடாக பணம் சேர்ப்பது இல்லை.

[/size]

இல்லை அகூதா! என்னுடைய கருத்து ஒட்டு மொத்த ஜேர்மன் தமிழர்களின் கருத்தாக ஒரு போது ஆகாது.

ஒருங்கிணைப்புக் குழு பற்றிய அதிருப்தி பெரும்பாலானவர்களிடம் உண்டு. ஆனால் மாவீரர் நிகழ்வை உணர்வு சார்ந்தே பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். அந்த வகையில் "இதுவரை நடத்திய ஒருங்கிணைப்புக் குழுவே தொடர்ந்தும் நடத்தட்டும்" என்கின்ற சிந்தனை அதிகமான தமிழர்களிடம் இருக்கிறது.

மாவீரர் நிகழ்வை ஒருங்கிணைப்புக் குழுவே தொடர்ந்து நடத்துவது தமிழர்களுக்கு பாதகமானது என்ற கருத்தைக் கொண்ட என்னைப் போன்றவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

உங்களின் கேள்விக்கு பதில் தருவது என்றால்

ஜேர்மனியில் பொதுவாக ஒரு இடத்தில்தான் முன்பு மாவீரா தினம் நடக்கும். ஜேர்மனியின் தெற்குப் பகுதியில் மட்டும் பயணம் செய்வதில் உள்ள சிரமத்தின் காரணமாக சில ஆண்டுகளில் தனியாக ஒன்று நடந்திருக்கிறது.

2009இற்கு பின்பு ஜேர்மனியில் மாவீரர் நிதி என்னும் பெயரில் பல நகரங்களில் நிதி சேகரிப்பு நடக்கிறது. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் அவர்கள் போவது இல்லை.

என்னைப் போன்ற கருத்தைக் கொண்டவர்கள், கடைசிக் கட்ட நிதி கொடுத்து விட்டு சம்பந்தப்பட்டவர்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்கள் தவிர்க்கப்படுவார்கள்.

வர்த்தக நிலையங்களில் மென்மையான வற்புறுத்தல் இருக்கும்.

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]சபேசன்,[/size][/size][size=1]

[size=4]உங்களைப்போன்ற கருத்துள்ளவர்கள் எல்லா நாட்டிலும் உள்ளார்கள். அதாவது பணம், அதை தாயக மக்களுக்கு, போராட்டத்திற்கு என சேர்த்து தமது சொந்த நலன்களுக்கு பயன்படுத்துபவர்கள் எமது விடுதலைக்கு உழைக்கும் அமைப்பில் உள்ளார்கள் என்பதே அது. [/size][/size]

[size=1]

[size=4]அதில் உண்மை நிச்சயம் உள்ளது. ஆனால், அது இன்று உள்ளாதா? இருந்தால் அதை எவ்வாறு நாம் குறைக்க இல்லை இல்லாமல் செய்யலாம்? என்பதுடன் எமது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது தடையாக இருக்க கூடாது.[/size][/size]

[size=1]

[size=4]கனடாவில் நான் பார்த்தளவில் சகல அமைப்புக்களும் இன்று பற்றுச்சீட்டு தருகின்றார்கள். வருடாந்த கணக்கை தருகின்றார்கள். அவற்றை தமிழரல்லாதா கணக்கியல் நிறுவனங்கள் ஆராயவேண்டும் எனவும் கேட்கப்படுகிறார்கள். [/size][/size]

[size=1]

[size=4]எமது வீட்டின் கூரையில் ஓட்டை வராமல் நாம் தான் பார்க்கவேண்டும். வந்தால் அதற்கு வழியை தேடவேண்டும். அவ்வாறே சமூக உணர்விலும் இருந்தால் பல சிக்கல்களும் தீர்ந்து விடும். மாறாக ஓட்டை வீட்டிற்கு கல்லெறிவதில் யாருக்கும் இலாபம் இல்லை. ஏனெனில் இது எங்கள் வீடு. [/size][/size]

கார்திகைப் பூவிற்கு மூன்று பவுண்ட்ஸ் கொடுப்பது பெரிய விடயமல்ல. அது மண்டபத்திற்குப் போவதற்கான செலவில் பாதிக்கும் குறைவானது.

இலண்டனில் பற்றுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.

கிருபன் கார்த்திகை பூவிற்குதான் பற்றுசிட்டு தரவில்லை, ஆனால் நான் நன்கொடையாக கொடுத்த பணத்திற்கு பற்றுசீட்டு தந்தார்கள்.(ஒவ்வொரு பூவிற்கும் பற்றுச்சிட்டு என்பது நடைமுறை சாத்தியமற்றது)

[size=2]

484248_412846582120410_2096542596_n.jpg[/size]

இங்கே இன்னும் பலர்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கார்த்திகை பூவிற்குதான் பற்றுசிட்டு தரவில்லை, ஆனால் நான் நன்கொடையாக கொடுத்த பணத்திற்கு பற்றுசீட்டு தந்தார்கள்.(ஒவ்வொரு பூவிற்கும் பற்றுச்சிட்டு என்பது நடைமுறை சாத்தியமற்றது)

கனடாவில் கார்த்திகைப் பூவிற்கும் பற்றுச்சீட்டுத் தந்தார்கள் என்ற கருத்துக்கான பதில் அது.

இலண்டனில் கார்த்திகைப் பூவிற்கும் சாப்பாட்டிற்கும் பற்றுச் சீட்டு வழமையாகக் கொடுக்கப்படுவதில்லை. 3 பவுண்ட்ஸுக்கு பற்றுச் சீட்டு கொடுக்கவேண்டும் என்பதும் முக்கியமல்ல.

கனடாவில் கார்த்திகைப் பூவிற்கும் பற்றுச்சீட்டுத் தந்தார்கள் என்ற கருத்துக்கான பதில் அது.

இலண்டனில் கார்த்திகைப் பூவிற்கும் சாப்பாட்டிற்கும் பற்றுச் சீட்டு வழமையாகக் கொடுக்கப்படுவதில்லை. 3 பவுண்ட்ஸுக்கு பற்றுச் சீட்டு கொடுக்கவேண்டும் என்பதும் முக்கியமல்ல.

கனடாவில் கார்த்திகைப்பூ இலவசமாக தந்தார்கள் என்று தான் அகூதா அண்ணா கூறியுள்ளார். நன்கொடை வழங்கியோருக்கு தான் பற்றுச்சீட்டு தந்ததாக கூறியுள்ளார். நீங்கள் மாறி விளங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

[size=4]- கனடாவில் கார்த்திகை பூ இலவசமாக வழமைபோன்று கொடுத்தார்கள்.[/size]

[size=4]- நன்கொடை வழங்கியவர்களுக்கு 'கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம்' வழமை போன்று பற்றுச்சீட்டு தந்தனர் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கார்த்திகைப்பூ இலவசமாக தந்தார்கள் என்று தான் அகூதா அண்ணா கூறியுள்ளார். நன்கொடை வழங்கியோருக்கு தான் பற்றுச்சீட்டு தந்ததாக கூறியுள்ளார். நீங்கள் மாறி விளங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்தத் திரிகளுக்குள் வந்தாலே தடுமாற்றம் வரும்தானே.

இலண்டனில் உண்டியலில்தான் அன்பளிப்புக் கோருவார்கள். நன்கொடை தரும்படி ஒருவரும் கேட்காதபடியால் பற்றுச்சீட்டு கொடுத்தார்களா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடவில்லை.

மாவீரர் தினத்திற்குப் போய், கார்த்திகைப் பூவை வைத்து அஞ்சலி செலுத்தி, கொஞ்ச நேரம் நிகழ்வுகளைப் பார்த்து, அடுத்த வருட நாட்காட்டியை வாங்கி, விற்ற உணவையும் வாங்கிச் சாப்பிட்டு, தெரிந்தவர்களுடன் உரையாடிவிட்டு (அரசியல் எல்லாம் இல்லை) வருவதுதான் எனது வழமை. விடுப்புப் பார்க்க மாவீரர் தினத்திற்கு வருபவர்களை எனக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பிரச்சனையில்லை. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தும் மாவீரர் நிகழ்வுகளில் நாடுகடந்த அணியினர், நடு கடந்த சன நாயக அணியினர், உலகத்தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா காங்கிரஸ் உட்பட எல்லோரும் கலந்துகொள்வார்கள். அதே போல மற்றைய அமைப்புக்கள் நடாத்தும் நிகழ்வுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலந்துகொள்ளும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களில் இருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் அமெரிக்காவிலும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களில் இருக்கிறார்கள். சிட்னியில் ஒரே ஒரு மாவீரர் நிகழ்வுதான் நடைபெறும். பொதுமக்களிடம் இருந்து வீடு வீடாக மாவீரர் நிகழ்வுக்கு பணம் வசூளிப்பது கிடையாது

சிட்னியில் பிரச்சனையில்லை. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தும் மாவீரர் நிகழ்வுகளில் நாடுகடந்த அணியினர், நடு கடந்த சன நாயக அணியினர், உலகத்தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா காங்கிரஸ் உட்பட எல்லோரும் கலந்துகொள்வார்கள். அதே போல மற்றைய அமைப்புக்கள் நடாத்தும் நிகழ்வுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலந்துகொள்ளும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களில் இருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் அமெரிக்காவிலும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புக்களில் இருக்கிறார்கள். சிட்னியில் ஒரே ஒரு மாவீரர் நிகழ்வுதான் நடைபெறும். பொதுமக்களிடம் இருந்து வீடு வீடாக மாவீரர் நிகழ்வுக்கு பணம் வசூளிப்பது கிடையாது

நன்றி உங்கள் தகவல்களுக்கு. எத்தனை அமைப்புகள் இருந்தாலும் இவ்வாறான ஒற்றுமை, ஒரு மாவீரர் தினம் ஆகியன தான் ஏனைய நாடுகளிலும் தேவை.

எனக்காக எழுதப்பட்டதால்........

மாவீரர் தின நிகழ்வை யார் நடாத்துகின்றார்கள் என்பதல்ல எனக்கு முக்கியம்.

ஒன்றாக நடாத்தவேண்டும் என்பதே முக்கியம்.

அதைப்பிரித்து பலவாறு நடாத்துவது என்றால்

இந்த புதிய முறையை மக்கள் அங்கீகரிக்கின்றார்களா என்பதற்கே அவர்களின் வருகையை நான் குறிப்பிட்டேன் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்பதன் மூலம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதபோக்கு பொது நோக்கங்களுக்கு நல்லதல்ல.

புதிதாக மாவீரர்நாள் செய்பவர்கள் அத்துடன் நிறுத்தாது

சங்கங்கள்

பாடசாலைகள்

விளையாட்டுக்கழகங்கள்

விளையாட்டுப்போட்டிகள்

இசைப்போட்டிகள் என்பனவற்றையும் கைப்பற்ற பலவழிகளிலும் முயற்சிக்கின்றனர்.

இது மக்களிடையே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுதைய சூழலில் இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே மக்கள் ஒருங்கிழைப்புக்குழுவால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவைத்தந்தவண்ணம் உள்ளனர்.

இதுவே எனது நிலைப்பாடும் ஆகும்.

என்னைப்பொறுத்தவரை

எல்லோரையும்ஆதரிப்பவன்

எலலோரது தொடர்பும் எனக்கு உண்டு

ஆனால் அவர்கள் மக்கள் செல்வாக்கை பெறவேண்டுமாயின் மக்களுக்காக உழைக்கணும்

அவர்களது நம்பிக்கையை பெறணும்.

பிரபாகரனுக்கு பின்னால் சும்மா எல்லாம் மக்கள் போகவில்லை.

அவரதும் போராளிகளதும் அதிஉச்ச தியாகங்களும் செயற்பாடுகளுமே மக்கள் அவர் பின்னால் போக காரணம்.

மாவீரர் தினம் ஒன்றாக நடாத்துவதற்கு பல வழிகளில் முயற்சி செய்யப்பட்டது. இதற்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் எந்த ஒத்துழைப்பும் வழங்காமல் இலங்கை அரசு தமிழர் பேச்சுவார்த்தையில் எப்படி நடந்து கொண்டுள்ளதோ அப்டியே இவர்களும் நடந்துகொண்டார்கள். இம்முறையும் ஒன்றாக நடாத்துவதற்கு முயற்சிசெய்தவர்களிடம் சென்று போராளிகள் காயத்தைக்காட்டி பிச்சை எடுக்காலம் என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

மாவீரர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். போராளிகள் யார் என்பதும் உங்களுக்குத் தெரியும் யுத்தத்துக்குச் செல்லும் போராளிகளில் சிலர் மரணமாகிறார்கள். சிலர் விழுப்புண் அடைவார்கள். தப்பிய போராளிகள் இவர்களைத் தூக்கி வருகிறார்கள். அப்போராளிகளுக்கு மாவீரரில் இல்லாத பற்றும் உரிமையும் இங்கு பணம் சேர்த்தவர்களுக்கு எப்படி வரும்? கொஞ்சம் சித்தித்துப் பாருங்கள். போராளிகள் காயத்தைக்காட்டி பிச்சை எடுக்கலாம் என்ற வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

சிந்தனையில்லாமல் செக்குமாடுகள் மாதிரி வருடக்;கணக்காகவே ஒரு சிலர் சுற்றிவருவதால் பலன் இல்லை. மாற்றம் வேண்டும். புதிய சிந்தனைகள் இணைக்கப்பட வேண்டும்.

இம்முறை டோட்முண்டில் நடந்த மாவீரர்தினத்துக்குப் போன ஒரு சிலரை வெளியில் பிடித்துவிட்டார்களாம்! யார் யார் மாவிரருக்கு அஞ்சலி செய்ய வேண்டுமென்று ஏதாவது விதி உள்ளதா? எனக்குப் புரியளவில்லை?

கந்தப்பு,

இந்தப் பிரச்சனை வெளியில் பொதுமக்களுக்கும் தெரியும்படி ஆரம்பித்த சம்பவத்தில் அவுஸ்திரேலியாவிற்கு பங்கு உண்டு.

உங்கே தூரப் பிரச்சனை காரணமாக சிட்னியிலும் மெல்போர்ணிலும் மாவீரர் நிகழ்வு நடத்துவார்கள்.

2009இல் தலைமைச் செயலகத்தின் பெயரில் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது. (அப்பொழுது யாரும் தலைமைச் செயலகம் என்பது பற்றி கேள்வி எழுப்பவில்லை). பின்பு உட்பிரச்சனைகள் காரணமாக அனைத்துலகச் செயலகம் தனியாக இயங்கத் தொடங்கியது.

2010இல் தலைமைச் செயலகம் தனியாகவும் அனைத்துலகச் செயலகம் தனியாகவும் மாவீரர் நாள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அனைத்துலகச் செயலம் முந்த வேண்டும் என்பதற்காக 26ஆம் திகதியே அறிக்கையை வெளியிட்ட கூத்தும் நடந்தது.

2010இல் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவில்லை. ஆனால் சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்தலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் சிட்னியில் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கையும், மெல்போர்ணில் தலைமைச் செயலகத்தின் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அந்த வகையில் முதலாவதாக வௌ;வேறான முறையில் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் அங்கே நடந்தன.

இன்றைக்கு யாருடைய அறிக்கையை சிட்னியிலும் மெல்போர்ணிலும் வாசித்தார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். என்னுடைய மேற்படித் தகவல்களில் பிழை இருந்தாலும் அறியத் தாருங்கள். திருத்திக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினம் ஒன்றாக நடாத்துவதற்கு பல வழிகளில் முயற்சி செய்யப்பட்டது. இதற்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் எந்த ஒத்துழைப்பும் வழங்காமல் இலங்கை அரசு தமிழர் பேச்சுவார்த்தையில் எப்படி நடந்து கொண்டுள்ளதோ அப்டியே இவர்களும் நடந்துகொண்டார்கள். இம்முறையும் ஒன்றாக நடாத்துவதற்கு முயற்சிசெய்தவர்களிடம் சென்று

போராளிகள் காயத்தைக்காட்டி பிச்சை எடுக்காலம் என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

மாவீரர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். போராளிகள் யார் என்பதும் உங்களுக்குத் தெரியும் யுத்தத்துக்குச் செல்லும் போராளிகளில் சிலர் மரணமாகிறார்கள். சிலர் விழுப்புண் அடைவார்கள். தப்பிய போராளிகள் இவர்களைத் தூக்கி வருகிறார்கள். அப்போராளிகளுக்கு மாவீரரில் இல்லாத பற்றும் உரிமையும் இங்கு பணம் சேர்த்தவர்களுக்கு எப்படி வரும்? கொஞ்சம் சித்தித்துப் பாருங்கள். போராளிகள் காயத்தைக்காட்டி பிச்சை எடுக்கலாம் என்ற வார்த்தையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

சிந்தனையில்லாமல் செக்குமாடுகள் மாதிரி வருடக்கணக்காகவே ஒரு சிலர் சுற்றிவருவதால் பலன் இல்லை. மாற்றம் வேண்டும். புதிய சிந்தனைகள் இணைக்கப்பட வேண்டும்.

போராளிகள் காயத்தைக்காட்டி பிச்சை எடுக்காலம் என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

இந்த வசனத்தை நீங்கள் மட்டுமே இங்கு தூக்கி திரிகின்றீர்கள்.

இது பற்றி ஒரு திரி திறந்து அது ஆதாரமற்றதிரி என பூட்டப்பட்டும் அதையே மீண்டும் மீண்டும் களவிதிகளை மீறி தூக்கி திரியும் உங்களுடைய ஒற்றுமை முயற்சிகள் சந்தேகத்குரியன.

முதலில்

ஏன் ஒன்றாக மாவீரர் நாள் செய்யமுடியவில்லை என்பதை உணருங்கள்.

இருக்கார்

இல்லை

என்பதற்கான பதில் உங்களிடமுண்டா???

இல்லை என்று தனியாக மாவீரர் செய்பவர்கள் கூட மக்கள் முன்னால் தலைவருக்கு மாலை போடமுடியவில்லை என்ற உண்மையை உணருங்கள்.

நன்றி.

கந்தப்பு,

இந்தப் பிரச்சனை வெளியில் பொதுமக்களுக்கும் தெரியும்படி ஆரம்பித்த சம்பவத்தில் அவுஸ்திரேலியாவிற்கு பங்கு உண்டு.

இன்றைக்கு யாருடைய அறிக்கையை சிட்னியிலும் மெல்போர்ணிலும் வாசித்தார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். என்னுடைய மேற்படித் தகவல்களில் பிழை இருந்தாலும் அறியத் தாருங்கள். திருத்திக் கொள்கிறேன்.

உங்களுக்கும் சிலருக்குமான தனிப்பட்ட சிக்கல்களை தீர்த்துக்கொள்ள மாவீரரையும் மாவீரர் தினத்தையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள் என மிகவும் கெஞ்சிக்கேட்கின்றேன்.

நீங்கள் இது பற்றி தொடர்ந்து ஒரு பக்கத்துக்கு மட்டும் சேறு பூசுதலில் ஈடு பட்டால் நானும் மௌனம் கலைத்து எழுத தொடங்கினால் எதிரியே நன்மையடைவான் என்பதை உணர்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

விசுகு!

எனக்கும் யாருக்கும் எந்த ஒரு தனிப்பட்ட சிக்கல்களும் இல்லை. இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நான் கந்தப்புவிடம் தெரிவித்த கருத்தில் சேறடிப்பு எங்கே உள்ளது? அனைத்துமே நடந்த விடயங்கள்தான்.

என்னுடைய சொல்லாடல்களில் சார்புநிலை இருக்கலாம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் யார் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டக்கள் எதையும் நான் கூறவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விசுகு!

மற்றது இது "இருக்கிறார்" என்பவர்களுக்கும் "இல்லை" என்பவர்களுக்குமான பிரச்சனை இல்லை. தலைமைச் செயலகத்தை ஆதரிப்பவர்களுக்குள்ளும் "இருக்கிறார்" என்பவர்கள் போதுமானளவு இருக்கிறார்கள்.

உண்மையில் இரு தரப்பிலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும் என்பது வேறு விடயம்.

  • தொடங்கியவர்

[size=4]

மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size]

வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன :

[size=4]1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள்

2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம்

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை

இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன.

இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் :

01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..

02. இரண்டாம் பகுதி சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் படும் பாடு, இப்போது படும் அவஸ்தை, உரிமைகளைச் சிங்கள இனவாதம் வழங்காது என்ற விரக்தி, ஆகியன வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கப்படுகின்றன.

03. மூன்றாம் பகுதியில் உலக சமுதாயம் ஆற்றிவரும் பணிகளும், அவை வெற்றி பெறாவிட்டால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி, தமிழீழம் கிடைக்க தொடர்ந்தும் போராடுவோம் என்ற கோஷத்துடன் முடிவடைகிறது.

அறிக்கைகளை தயாரித்தவர்களை முதலில் பாராட்ட வேண்டும்…

ஆனால் மூன்று அறிக்கைகளும் போதியவை அல்ல.. இனி அடுத்த ஆண்டு அறிக்கை எழுதும்போது பின்வரும் விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும் :

மாவீரர் நாளில் அறிக்கைகள் வெளியிட்டு கருத்தியலை வழங்கியது பாராட்டுக்குரியது, ஆனால் அதில் ஒரு வளர்ச்சி அவசியம்…

மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்..

http://www.alaikal.com/news/?p=117994

[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112046

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதல்ல பிரச்சினை.

மாவீரரர்தினம் ஏன் ஒற்றுமையாகச் செய்ய முடியவில்லை என்பதுதான் பிரச்சினை.

நான் எழுதியவற்றுக்கு நேரடிச் சாட்சியங்கள் நிறைய உண்டு.

உண்மையை யாரும் மறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதல்ல பிரச்சினை.

மாவீரரர்தினம் ஏன் ஒற்றுமையாகச் செய்ய முடியவில்லை என்பதுதான் பிரச்சினை.

நான் எழுதியவற்றுக்கு நேரடிச் சாட்சியங்கள் நிறைய உண்டு.

உண்மையை யாரும் மறைக்க முடியாது.

இங்கு

ஒற்றுமை கை கூடிவந்தவேளை

அந்த மனுசனுக்கு அஞ்சலி செய்வோம்

மாலை போடுவோம் என்று அடம்பிடித்தனர்.

அதனால்தான் ஒன்றாக போகமுடியவில்லை.

அதனையே நான் இங்கு பதிந்தேன்

அதையும் தாண்டி தாங்கள் தனியாக செய்கின்றோம் என புறப்பட்டும் அவர்களால் மக்கள் முன் தலைவருக்கு அஞ்சலி செய்யமுடியவில்லை.

அப்படியென்றால் ஒன்றாகவே செய்திருக்கவேண்டியது தானே என்றுதான் இந்த முறை அவர்களது மாவீரர் நிகழ்வுக்கு நான் போகவில்லை.

மக்கள்தான் எஐமானர்கள்

அவர்களே இவர்களைதிருத்தமுடியும் என்பதே னது நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை டோட்முண்டில் நடந்த மாவீரர்தினத்துக்குப் போன ஒரு சிலரை வெளியில் பிடித்துவிட்டார்களாம்! யார் யார் மாவிரருக்கு அஞ்சலி செய்ய வேண்டுமென்று ஏதாவது விதி உள்ளதா? எனக்குப் புரியளவில்லை?

இன்னொரு நாட்டில் சில மாவீரர் குடும்பங்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். தேசியச்செயற்பாட்டாளர்கள் எனச்சொல்லப்படுகிற அனைத்துலகசெயலகத்தின் அதிகாரிகள் செய்த இச்செயலை இங்கு உணர்வோடு கருத்தாடும் ஒற்றுமைபற்றி உரக்கக் குரல் கொடுப்போரும் இவர்களிடம் கேள்வி கேட்பார்களா ?

ஒரு போராளி. அவர் ஒருகாலம் ஒரு மாவட்டத்தின் தளபதி. அவர் குடும்பத்தின் சகோதரர்கள் 5பேர் மாவீரர்கள். ஒரு சகோதரன் தாயாரிடம் போயிருந்த போது இந்திய இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தான் ஒருவன் அந்தச் சகோதரன் தாயின் கண்முன்னே குப்பியடித்து வீரச்சாவடைந்தார்.

நான் குறிப்பிடுகிற அன்றொருகாலத்துத்தளபதி இன்று இந்த அனைத்துலகசெயலகத்தால் துரோகியாகவே கௌரவிக்கப்படுகிறார். வளமைபோல மாவீரர்களை வணங்க வாருங்கள் என இந்தக்குடும்பத்திற்கும் கடிதம் வந்தது. இவரது 10வயதும் 5வயதுப் பிள்ளைகளும் தங்களது சித்தப்பா ,பெரியப்பாக்களுக்கும் விளக்கேற்ற தந்தையுடன் மண்டபத்திற்கு போனார்கள். வளமைபோல அந்த மாவீரர்களின் படங்களைத் தேடி பூக்களையும் மெழுகுதிரியையும் கையில் கொண்டு மண்டபத்தை சுற்றினர். ஆனால் அந்த மாவீரர்களின் படங்கள் அங்கு வைக்கப்படவில்லை.

சித்தப்பா ,பெரியப்பாக்களுக்கு விளக்கேற்றப் போன ஏதுமறியாத குழந்தைகளும் இந்த தேசியச்செயற்பாட்டாளர்களின் கண்ணில் துரோகிகளா தெரியவில்லை.

இதேபோல குறித்த நாட்டில் வேறொரு குடும்பத்தின் மாவீரர் படமும் வைக்கப்படவில்லை. இது கவனக்குறைவென்று யாரும் சடையாதீர்கள். குறித்த நாட்டின் செயற்பாட்டாளர்களால் திட்டமிட்டு குறித்த குடும்பங்கள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பி.கு:-

இவ்விடயம் எங்கே எந்த நாட்டில் யாருக்கு நடந்தது என்ற விபரங்களை விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் விபரம் தருகிறேன். உங்களால் இத்தகைய அவமதிப்புக்களுக்கு கேள்வி கேட்க முடியுமென்றால் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். அனைத்துலக செயலகத்தின் பெயரால் இப்போது நடக்கிற யாவும் சரியென்று நம்புகிறவர்கள் இவற்றையெல்லாம் நம்பமாட்டீர்கள். ஆனால் இவையெல்லாம் உண்மையென்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

[size=4]சாந்தி,[/size][size=1]

[size=4]இது குழப்பமான காலம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. [/size][/size]

[size=1]

[size=4]கள உறவு இரகுநாதன், ஒரு மாவீரரின் சகோதரம். ஒவ்வொரு மாவீரர் தினத்திற்கும் சென்றவர், படம் இருக்கவில்லை, செயல்பாட்டாளர்களுக்கு இவரின் தேடல் மூலமே அந்த உண்மை தெரிய வந்தது. அவர்கள் கடிந்து கொண்டனர். [/size][/size]

[size=1]

[size=4]இம்முறை அவருக்கு நேரத்திற்கு போக முடியவில்லை. அதனால் போகவில்லை. [/size][/size]

[size=1]

[size=4]அங்[/size][size=4]கே அவரது சகோதரத்தின் படம் இருந்ததாக சென்ற நண்பர் கூறினாராம். [/size][/size]

[size=1]

[size=4]எம்மில் உள்ள நல்ல செயல்களை அதிகம் கதைத்தால் பல கெட்டவர்களும் திருந்தி விடுவார்கள். [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

சாந்தி,

உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நீங்கள் என்னவும் எழுதுங்கள். ஆனால் மாவீரர் விடயத்தில் மட்டும் பிளவுகளை உருவாக்காதீர்கள். உங்கள் காலில் விழுந்து கதறுகிறேன். அனைத்துலகச் செயலகத்தின் மாவீரர் நாளை குழப்பாதீர்கள். எங்கள் பிரச்சனைக்குள் மாவீரரை இழுக்காதீர்கள். அவர்கள் தெய்வங்கள். ஐயோ!!!..அம்மா!!.. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அக்கா! அப்ப அம்பது எழுதட்டோ அல்லாட்டி நூறு எழுதட்டோ?

  • தொடங்கியவர்

சாந்தி,

உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நீங்கள் என்னவும் எழுதுங்கள். ஆனால் மாவீரர் விடயத்தில் மட்டும் பிளவுகளை உருவாக்காதீர்கள். உங்கள் காலில் விழுந்து கதறுகிறேன். அனைத்துலகச் செயலகத்தின் மாவீரர் நாளை குழப்பாதீர்கள். எங்கள் பிரச்சனைக்குள் மாவீரரை இழுக்காதீர்கள். அவர்கள் தெய்வங்கள். ஐயோ!!!..அம்மா!!.. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அக்கா! அப்ப அம்பது எழுதட்டோ அல்லாட்டி நூறு எழுதட்டோ?

[size=1]

[size=4]சபேசன்,[/size][/size][size=1]

[size=4]இதன் அர்த்தம் என்ன? [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.