Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தேசங்களில் நடை பெற்ற மாவீரர் நிகழ்வுகள்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]லண்டன் மாநகரிலும் - ஜேர்மனியிலும் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்..[/size]

london_maveerar-1-seithy-20121127-150.jpg

லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா, பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த மாவீரர் செல்வங்களின் கல்லறைகள மீது தமிழ் தேசிய இனத்தின் தேசியக் கொடி போர்த்தப்பட்டது.

அதனை அடுத்து, மணி ஓசை மண்டமெங்கும் வியாபிக்க, முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டது. இம்முதன்மைச் சுடரினை யாழ். கோட்டை முற்றுகைச் சமரில் வீரமரணமெய்திய மாவீரர் கப்டன். ஹீரோ ராஜ் அவர்களின் பெற்றோர் சண்முகசுந்தரம், கமலாதேவி ஆகியோர் ஏற்றி வைத்தனர். இங்கு காணொளி உடாக நெடுமாறன், வைகோ ஆகியோர் மாவீரர் தின எழுச்சி உரை நிகழ்த்தினர்.

london_maveerar-1-seithy-20121127-363.jpg

london_maveerar-2-seithy-20121127-363.jpg

london_maveerar-3-seithy-20121127-363.jpg

london_maveerar-4-seithy-20121127-363.jpg

ger,any-maaveerar_seithy-1-20121127-365.jpg

germany-maaveerar_seithy-2-20121127-365.jpg

germany-maaveerar_seithy-3-20121127-365.jpg

germany-maaveerar_seithy-4-20121127-365.jpg

germany-maaveerar_seithy-5-20121127-827.jpg

germany-maaveerar_seithy-6-20121127-827.jpg

germany-maaveerar_seithy-7-20121127-365.jpg

germany-maaveerar_seithy-8-20121127-365.jpg

germany-maaveerar_seithy-9-20121127-365.jpg

germany-maaveerar_seithy-10-20121127-827.jpg

[size=3]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=5]இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஆபிரிக்காவில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு. [/size]

maveerar_thinam_3-seithy-20121127-150.jpg

ஆபிரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள்,சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மாவீர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி உள்ளனர். இந்தோனேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ தமிழர்கள் உணர்வுபூர்வமாக தீபங்களை ஏற்றி மாவீரர் திருவுருவப் படங்களை தரிசித்து வழிபட்டார்கள்.

maveerar_thinam_seithy-1-20121127-420.jpg

maveerar_thinam_seithy-2-20121127-409.jpg

maveerar_thinam_3-seithy-20121127-409.jpg

maveerar_thinam_seithy-4-20121127-739.jpg

[size=3]http://www.seithy.com/breifNews.php?newsID=70964&category=TamilNews&language=tamil[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழீழத் தாயகத்தினை கண்முன் நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்![/size]

[size=3]

[size=4]france_maverar_001.jpg[/size]

[size=4]தமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.[/size]

[size=4]தமிழர் தாயகத்தில் எவ்வாறு மாவீரர் நாள் முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த மரப்புக்கமைய உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.[/size]

[size=4]மாவீரர்களது பெற்றோர்கள் மற்றும் குடுமபத்தினர் கௌரவதாக அழைத்துவரப்பட்டு அவர்களது பிள்ளைகளின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறையின் முன் மாவீரர்களுக்கு சுடரேற்றப்பட்டிருந்தது.[/size]

[size=4]தமிழீழத் தேசியக் கொடியினை திருமதி உமா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடர் தமிழர் கலைபண்பாட்டுக் கழக பொறுப்பாளர் பரா அவர்களும் பிரதான பொதுச்சுடரினை தமிழரசன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.[/size]

[size=4]

france_maveerar_001.jpg[/size]

[size=4]

france_maveerar_002.jpg[/size]

[size=4]

france_maveerar_003.jpg[/size]

[/size]

[size=4]http://tamil24news.com/news/?p=30391[/size]

லண்டன் ஈகப் பேரொளி முருகதாசன் திடல்

Edited by navam

[size=5]மிக அழகாக கனேடிய இளையோரால் வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மின்வலைத்தள "மாவீரர் துயிலும் இல்லம்" : [/size]

[size=6]http://www.maaveerarillam.com/[/size]

[size=4][size=5]தமிழகம்: இடிந்தகரை [/size][/size]

[size=4]இடிந்தகரையில் நடந்த மாவீரர் தினத்தில் உதயகுமார் அண்ணனின் மாவீரர் தின உரை 27-11-12[/size]

[size=5]தமிழகம்: [/size][size=1] [size=5]ஆவடி , [/size][/size][size=5]சென்னை[/size]

[size=4]சென்னை ஆவடியில் உள்ள மாவீரர் தூணை இன்று கூடி மாவீரர் தின வீர வணக்கம் செய்யும் நிகழ்வில் திரு. நெடுமாறன் அவர்கள் கலந்துக்கொண்டார்.[/size]

198179_3724582286778_542987546_n.jpg

252222_3724525005346_425688205_n.jpg

531102_3724559046197_500762049_n.jpg

[size=5]தமிழகம்: [/size][size=5]திருமங்கலம், [/size][size=5]சென்னை[/size]

[size=4]சென்னை திருமங்கலத்தில் இன்று தமிழர் முன்னேற்ற கழகம் நடத்திய மாவீரர் தின பொது கூட்டம். தமிழர் முன்னேற்ற கழகம் தலைவர் அதியமான் தலமை வகித்தார்.[/size]

23894_3724472844042_2134337068_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2012 பிரான்ஸில் இடம்பெற்ற இரண்டு மாவீரர் நினைவஞ்சலி நிகழ்வுகளில் ஒன்றில்...எனது மொபைலில் கிளிக்கியவை..

417134_10151185901739891_484723709_n.jpg

73796_10151185902149891_2011187690_n.jpg

பெரிய கடவுட்டில் பரிதி அண்ணாவின் படம்...

561491_10151185902729891_35393681_n.jpg

பின்னே சிறிய படங்களில் தமிழீழத்தின் கேணல்களும் லெப்டினன்ட்களும்...

27926_10151185914639891_2068060770_n.jpg

மலரஞ்சலி..

16124_10151185914749891_1479732160_n.jpg

6951_10151185914939891_346497788_n.jpg

Edited by சுபேஸ்

[size=5]தமிழகம்: [/size][size=5]புதுவை [/size]

[size=4]புதுவையில் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறிய மாவிரர் தின நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிருவனர்,இளம்புயல்,பண்ருட்டி,தி.வேல்முருகன் அவர்களும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் திரு,கொளத்தூர் மணி அவர்களும் கலந்து கொண்டு ஈகச்சுடரை ஏற்றி வைத்து ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்[/size]

378832_304730602964192_19503770_n.jpg

45339_304730296297556_377537067_n.jpg

32412_304730922964160_46118250_n.jpg

32335_304730429630876_1799146551_n.jpg

மண்டபத்தின் வெளியே ஒரு புறத்தே சுறுசுறுப்பாக நிகழும் கொத்துரொட்டி வியாபாரம்...

இதனை வியாபாரமாக நோக்காமல் அங்கு நீண்ட நேரமாக நிற்கும் மக்களின் பசியை ஆற்ற நடத்தப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

வியாபாரம் செய்யும் நோக்கம் இருந்திருந்தால் அங்கு விற்கப்படும் பூக்களுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்றிருப்பார்கள். ஆனால் விரும்பிய அளவு பணத்தை தந்து பூக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றே பூக்களை கொடுத்தார்கள். அதனால் 1 யூரோக்கு குறைந்த தொகை கொடுத்து பூக்களை வாங்கிய தமிழர்களும் உள்ளார்கள்.

மக்கள் நிறைந்த பின் எடுத்த படங்கள் இருந்தால் இணையுங்கள். (இணைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். :unsure: )

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடத்திய மாவீரர் தினத்தில் இரு கையெழுத்து வேட்டை நடந்தது. அதில் ஒன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பரிதி அவர்களை கொலை செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கியிருந்தது. இன்னொன்று ஐ.நா விடம் சர்வதேச விசாரணை நடத்த கோரி ஓர் கையெழுத்து வேட்டை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிறைந்த பின் எடுத்த படங்கள் இருந்தால் இணையுங்கள். (இணைப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். :unsure: )

மக்களின் படங்களை நான் எடுக்கவில்லை...மண்டபத்துக்குள் அது சரி இல்லை என்பதால்...

Edited by சுபேஸ்

[size=4][size=5]நியூசிலாந்தில் நடைபெற்றுள்ள மாவீரர்நாள் நிகழ்வு "[/size]

======================

நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் ஓக்லாந்து நகரில் மாலை 6 . 30 மணியளவில் Mt Roskill Intermediate School மண்டபத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

முதலில் பொதுச் சுடரினை மாவீரர் இளந்தீரனின் சகோதரர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின்கொடியினை மாவீரரின் தகப்பனார் திரு மகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை மாவீரர் வியைஜின் தந்தையார் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது அடுத்து ஈகைசுடரினை மாவீரர் தங்கச்சியனின் சகோதரர் ஏற்றிவைத்தார்[/size]

[size=3]

[size=4]நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் தீபங்களை கையில் ஏந்தியவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சந்தனப்பேழைகளின் பாடல் இடம்பெற்று மலர் வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைபினரால் உருவாக்கப்பட்ட தேசியத்தலைவர் அவர்களின் கடந்தகால மாவீரர் உரைகளில் இருந்து தொகுக்கப்பட்ட வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப் பட்டது.அடுத்து மாவீரர்நாள் 2012ம் ஆண்டிற்கான சிறப்பு உரையினை ஸ்ரீதேவா ஸ்ரீதரன் உரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் இன்றைய போராட்டமானது இளையோர்களின் கைகளில்தான் தங்கி உள்ளது என்றும் இதற்கு புலம்பெயர்வாழ்கின்ற அனைத்து மக்களினதும் செயற்பாடுகள் அவசியம் எனவும் கூறி தனது உரையினை முடித்தார் .இதனைத் தொடர்ந்துமாவீரர்களை விபரிக்கும் உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும் பாடல்களும் இடம்பெற்றன...

இறுதியாக நியூசிலாந்து நாட்டின் கொடியினை தமிழ் சங்கத்தின் செயலாளர் திரு .சுந்தர்ராஜன் இறக்கிவைத்தார் அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக் கொடியினை நியூசிலாந்து நாட்டின் தமிழ் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு . அசோக் அவர்களினால் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை பாடி தாரக மந்திரத்தையும் கூறி நிகழ்வை நிறைவு செய்தனர் .

இன்நிகழ்வில் பலநுற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.[/size][/size]

486239_304734599630459_1249125391_n.jpg

73225_304734939630425_1067651707_n.jpg

[size=5]சுவிட்சலாந்து நாட்டில் பிரமான்ட அளவில் இடம் பெற்ற மாவீரர் நாள்"[/size]

305565_304744209629498_1442618274_n.jpg

533937_304744142962838_945474405_n.jpg

28068_304744292962823_499757306_n.jpg

558914_304743846296201_489831011_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தடங்கல்களுக்கு மத்தியில், நெதர்லாந்தில் வெகுசிறப்பாக மாவீரர் தின வைபவங்கள் இடம்பெற்றன. [/size]

netherland-maveerar-seithy-3-20121127-150.jpg

நெதர்லாந்தில் வழமை போல் ALMERA என்னும் இடத்தில் இடம்பெற இருந்த தேசிய நினைவெழுச்சி நாளினை ஒரு சில தேசத்துரோகக்கும்பல் இலங்கை அரசுடன் சேர்ந்து செய்த சதிச்செயலால் கடைசி மணித்துளிகளில் தடைசெய்யப்பட்டபோதும், நெதர்லாந்து தமிழ் உறவுகளின் ஊக்கத்தாலும் அவர்களின் ஒற்றுமையான செயர்பாட்டலும் உடனே வேறு மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டு குறித்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நெதர்லாந்தில் வழமை போல் ALMERA என்னும் இடத்தில் இடம்பெற இருந்த தேசிய நினைவெழுச்சி நாளினை ஒரு சில தேசத்துரோகக் கும்பல் இலங்கை அரசுடன் சேர்ந்து செய்த சதிச்செயலால் கடைசி மணித்துளிகளில் தடைசெய்யப்பட்டபோதும் நெதர்லாந்து தமிழ் உறவுகளின் ஊக்கத்தாலும் அவர்களின் ஒற்றுமையான செயர்பாட்டலும் உடனே வேறு மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டு குறித்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது மண்டபம் நிறைந்த தமிழ் உறவுகளின் எழுச்சி நிகழ்வுகளுடன் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. மண்டபம் நிறைந்த தமிழ் உறவுகளின் எழுச்சி நிகழ்வுகளுடன் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது

netherland-maveerar-seithy-1-20121127-367.jpg

netherland-maveerar-seithy-3-20121127-367.jpg

netherland-maveerar-seithy-2-20121127-367.jpg

netherland-maveerar-seithy-4-20121127-367.jpg

netherland-maveerar-seithy-5-20121127-367.jpg

netherland-maveerar-seithy-6-20121127-367.jpg

[size=5]பிரான்ஸில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்.. [/size]

france_maveerar_seithy-3-150.jpg

தமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழர் தாயகத்தில் எவ்வாறு மாவீரர் நாள் முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த மரப்புக்கமைய உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மாவீரர்களது பெற்றோர்கள் மற்றும் குடுமபத்தினர் கௌரவதாக அழைத்துவரப்பட்டு அவர்களது பிள்ளைகளின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறையின் முன் மாவீரர்களுக்கு சுடரேற்றப்பட்டிருந்தது. தமிழீழத் தேசியக் கொடியினை திருமதி உமா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடர் தமிழர் கலைபண்பாட்டுக் கழக பொறுப்பாளர் பரா அவர்களும் பிரதான பொதுச்சுடரினை தமிழரசன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

france_maveerar_seithy-1-411.jpg

france_maveerar_seithy-2-411.jpg

france_maveerar_seithy-3-411.jpg

http://youtu.be/HBfEZuv2GLg

[size=5]நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில், மதுரையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்.. [/size]

naam-thamilar-maveerar-seithy-1-20121127-150.jpg

மதுரை மாவட்ட நாம்தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற மாவீரர்நாள் கூட்டம் இன்று நவம்பர் 27 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு மதுரை புறவழிச்சாலை "எமர் "(E M A R ) அரங்கத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட கலை பண்பாட்டு பாசறை பொறுப்பாளர் "எழுத்தாளர் சுந்தரவந்தியதேவன் "சுடர் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினார்.விழாவில் நாம்தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் வழக்கறிஞர் ரூபஸ்,மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

naam-thamilar-maveerar-seithy-1-20121127-412.jpg

naam-thamilar-maveerar-seithy-2-20121127-412.jpg

naam-thamilar-maveerar-seithy-3-20121127-412.jpg

naam-thamilar-maveerar-seithy-4-20121127-412.jpg

naam-thamilar-maveerar-seithy-5-20121127-412.jpg

naam-thamilar-maveerar-seithy-6-20121127-412.jpg

[size=5]மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012 - பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு [/size]

<p>

Toronto-271112-seithy-maveerarday-150.jpg

கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது. கனடாத்தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது அவ்வதிகாலையிலேயே பல்லாயிரத்தில் மக்கள் வருகை தங்திருந்தனர்.

முதல் மாவீரர் லெப். சங்கர் வீரச்சாவடைந்த தாயகநேரமான மாலை 6.07க்கு கனடாவிலும் ஈகைச்சுடர் ஏற்றும் வகையிலேயே முதல் நிகழ்வு அதிகாலை வேளையிலேயே ஆரம்பமாகியது.

கனடிய தேசியக் கொடியேற்றம் தமிழீழ தேசியக்கொடியேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஈகைச்சுடறேற்றம் அமைதி வணக்கம் துயிலும் இல்லப்பாடல் கார்த்திகைப்பூ மலர் வணக்கம் என்பவை நடைபெற்றன. மக்கள் சாரை சாரையாக வந்து மலர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து எழுச்சிக்கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இதே போன்று இரண்டாவது அமர்வு மதியம் 12 மணிக்கும்�� மூன்றாவது அமர்வு பிற்பகல் 3.30 மணிக்கும் மாலை இறுதி அமர்வு இரவு 7 மணிக்கும் ஆரம்பமாகின.

தொடர்ச்சியாக 15 மணித்தியாளங்களாக நடைபெற்ற நிகழ்வுகளின் போது மக்கள் தமக்கு வசதியான ஒரு நேரத்தில் தமது மண்ணின் மைந்தர்களுக்கான வணக்கத்தை மண்டபத்தை நிறைத்து தொடர்ச்சியாக செலுத்திய வண்ணமிருந்தனர்.

பல்லாயிரத்தில் இருக்கை வசதிகள் அமைந்த போதும் அலை மோதிய மக்கள் வெள்ளத்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது இருக்கையை ஏனையவர்களுக்கு ஒதுக்கி மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியமை பிற்பகல் முதல் நிறைவு வரை முழுமையாக அவதானிக்கப்பட்டது.

http://youtu.be/ZCb282eYO1I

சிங்கள அரச பயங்கரவாதம் எல்லை கடந்து புலம் பெயர்ந்த தளங்களிலும் அச்சுறுத்தல் விட ஆரம்பித்துள்ள நிலையில் தங்கள் உரிமைகளுக்காவும் தங்கள் தாயக உறவுகளுக்காவும் முழுமையாக போராட்டத்திற்கு கனடியத் தமிழ் உறவுகள் தயார் என்பபை பறைசாற்றுவது போன்றே கனடியத் தமிழர்களின் மாவீரர் நாள் எழுச்சி வெளிப்பட்டது.

மாவீரர்களால் ஈழத்தமிழர்களிடையே ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையை எக்காரணத்திற்கும் சிதைக்க அனுமதியோம் என்பதை ஒரே நிகழ்வில் ஒன்றாக அணிதிரண்டமையூ டாக தமது சக புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் கனடியத் தமிழர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் மூத்தவர் ஒருவர்.

  • Toronto-271112-seithy-maveerarday-(1).jpg

Edited by தமிழரசு

[size=5]மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012[/size]

கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது.

[size=4]Maveerar%204.jpg[/size]

[size=4]கனடாத்தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது அவ்வதிகாலையிலேயே பல்லாயிரத்தில் மக்கள் வருகை தங்திருந்தனர்.[/size]

[size=4]முதல் மாவீரர் லெப். சங்கர் வீரச்சாவடைந்த தாயகநேரமான மாலை 6.07க்கு கனடாவிலும் ஈகைச்சுடர் ஏற்றும் வகையிலேயே முதல் நிகழ்வு அதிகாலை வேளையிலேயே ஆரம்பமாகியது.[/size]

[size=4]Maveerar%202.jpg[/size]

[size=4]கனடிய தேசியக் கொடியேற்றம், தமிழீழ தேசியக்கொடியேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஈகைச்சுடறேற்றம், அமைதி வணக்கம், துயிலும் இல்லப்பாடல், கார்த்திகைப்பூ மலர் வணக்கம் என்பவை நடைபெற்றன. மக்கள் சாரை சாரையாக வந்து மலர் வணக்கம் செய்தனர்.[/size]

[size=4]தொடர்ந்து எழுச்சிக்கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இதே போன்று இரண்டாவது அமர்வு மதியம் 12 மணிக்கும், மூன்றாவது அமர்வு பிற்பகல் 3.30 மணிக்கும் மாலை இறுதி அமர்வு இரவு 7 மணிக்கும் ஆரம்பமாகின.[/size]

[size=4]தொடர்ச்சியாக 15 மணித்தியாளங்களாக நடைபெற்ற நிகழ்வுகளின் போது மக்கள் தமக்கு வசதியான ஒரு நேரத்தில் தமது மண்ணின் மைந்தர்களுக்கான வணக்கத்தை மண்டபத்தை நிறைத்து தொடர்ச்சியாக செலுத்திய வண்ணமிருந்தனர்.[/size]

[size=4]Maveerar%201.jpg[/size]

[size=4]பல்லாயிரத்தில் இருக்கை வசதிகள் அமைந்த பொதும் அலை மோதிய மக்கள் வெள்ளத்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது இருக்கையை ஏனையவர்களுக்கு ஒதுக்கி மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியமை பிற்பகல் முதல் நிறைவு வரை முழுமையாக அவதானிக்கப்பட்டது.[/size]

[size=4]சிங்கள அரச பயங்கரவாதம் எல்லை கடந்து புலம் பெயர்ந்த தளங்களிலும் அச்சுறுத்தல் விட ஆரம்பித்துள்ள நிலையில் தங்கள் உரிமைகளுக்காவும், தங்கள் தாயக உறவுகளுக்காவும் முழுமையாக போராட்டத்திற்கு கனடியத் தமிழ் உறவுகள் தயார் என்பபை பறைசாற்றுவது போன்றே கனடியத் தமிழர்களின் மாவீரர் நாள் எழுச்சி வெளிப்பட்டது.[/size]

[size=4]மாவீரர்களால் ஈழத்தமிழர்களிடையே ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையை எக்காரணத்திற்கும் சிதைக்க அனுமதியோம் என்பதை ஒரே நிகழ்வில் ஒன்றாக அணிதிரண்டமைய+டாக தமது சக புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் கனடியத் தமிழர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் மூத்தவர் ஒருவர்.[/size]

[size=4]Maveerar%206.jpg[/size]

[size=5]சீரற்ற காலநிலையை பொருற்படுத்தாமல் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திய பல்லாயிரம் மக்கள்!

Wednesday, 28.11.2012, 01:57pm (GMT)[/size]

[size=5]u1_IMG_2089-SS.jpg[/size]

[size=5]பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள "முருகதாசன் நினைவுத்திடலில்" நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.[/size]

[size=5]சீரற்ற கால நிலையிலும், வார நடுப்பகுதியில் பாடசாலை நாள், வேலை நாளாக இருந்தும், சிறுவர்கள் வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையானது மாவீரர்கள் மக்கள் மனங்களில் ஒன்றித்துப் போயிருப்பதையே எடுத்துக்காட்டி நின்றது.[/size]

[size=5]காலை 10:30 க்கு மண்டப வாயில் திறக்கப்பட்டு 11:30 க்கு பிரித்தானியத் தேசியக் கொடியும், தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 12:00 மணிக்கு பான்ட் வாத்திய அணிவகுப்புடன் மாவீரர் பெற்ரோர், மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் மண்டபத்துக்குள் அழைத்துவரப்பட்டனர். 12:00 மணிக்கு புலிகளின் குரல் வானொலி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள். தலைமைச் செயலகம் ஊடாக வெளியிட்ட மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை மண்டபத்தில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது.[/size]

[size=5]சரியாக மதியம் 12:35க்கு பிரதான மண்டபத்திற்கும், மேடைக்கும் முன்னால் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த (மாதிரி) மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் குடும்பங்கள் ஒவ்வொருஒவ்வெரு கல்லறைகளுக்கும், நினைவுக் கல்லுக்கும் முன்னால் நிற்க, துயிலும் இல்லத்தின் நடுப்பகுதியில் அமைந்திருந்த பிரதான சுடரினை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியும், மூன்று மாவீரகளின் தாயாருமான திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார். துயிலும் இல்ல பாடல் ஒலிக்க சம காலத்தில் மாவீரர் குடும்பங்களும் தமக்கு உரித்தான மாவீரர்களை மனதில் நிறுத்தி உள்ளம் உருகி, கண்ணீர் சொரிந்து கல்லறைகளிலும், நினைவுக்கற்களிலும் தீபங்களை ஏற்றி மாவீரர்களை வணங்கினர்.[/size]

[size=5]இதே வேளை மண்டப வாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் தூபிக்கும் அவரின் பெற்ரோர் விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர். அதன் பின் அங்கும் மக்கள் மலர்களைத் தூவி வணக்கம் செலுத்திச் சென்றனர்.[/size]

[size=5]அதனைத் தொடர்ந்து மக்கள் வரிசையாக வந்து கல்லறைகளிலும், நினைவுக் கற்களிலும் மலர்களைத் தூவியதோடு, அதன் முன்பக்கமாக இரமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட மாவீரர்களின் படங்களுக்கு மலர்தூவி தமது வணக்கத்தினை செலுத்திச் சென்றனர். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களின் உரைகளும், எழுச்சி நடனம், மாவீரர் கானங்கள் என்பனவும் இடம்பெற்றது.[/size]

[size=5]மண்டபத்துக்குள் பின்புறமாக தமிழ்த் தேசிய, மற்றும் சமூக அமைப்புக்களின் அலுவலகங்களும் அமைக்கப்பட்டு மக்களோடான அவர்களின் பணி இலகுவாக்கப்பட்டிருந்தது. அத்தோடு அங்கு அமைக்கப்பட்டிருந்த தாயக வெளியீட்டுப் பகுதியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு தமக்கான தாயக வெளீயீடுகளை வாங்கிச் சென்றனர்.[/size]

[size=5]வேலைகளும், பாடசாலைகளும் உள்ள நாளாக இருந்தமையால் பல மக்கள் பிற்பகலும் கூட நிகழ்வு நிறைவடைந்த பின்னரும் இறுதிவரை அங்கு வருகைதந்து மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர்களைத் தூவி மாவீரர்களுக்கு தமது வணக்கத்தினை செலுத்தி சென்றதையும் காணமுடிந்தது.[/size]

[size=5]இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் இருந்து வருகை தந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.[/size][size=2]

[size=5]u1_IMG_2034.jpg[/size][/size][size=2]

[size=5]u1_IMG_2250.jpg[/size][/size][size=2]

[size=5]u1_IMG_2255.jpg[/size][/size][size=2]

[size=5]u1_IMG_2056.jpg[/size][/size][size=2]

u1_IMG_2058.jpg[/size][size=2]

u1_IMG_2059.jpg[/size][size=2]

u1_IMG_2066.jpg[/size][size=2]

u1_IMG_2068.jpg[/size][size=2]

u1_IMG_2213.jpg[/size][size=2]

u1_IMG_2210-s.jpg[/size][size=2]

u1_IMG_2211-s.jpg[/size][size=2]

u1_IMG_2217.jpg[/size][size=2]

u1_IMG_2362-s.jpg[/size][size=2]

u1_IMG_2089.jpg[/size][size=2]

u1_IMG_2278.jpg[/size][size=2]

u1_IMG_2317.jpg[/size][size=2]

u1_IMG_2322.jpg[/size][size=2]

u1_IMG_2348-SS.jpg[/size]

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை சிலர் சும்மா சும்மா சுயவிளம்பரத்திற்காவும்.. பதியினம். ஆனால் அவை எதிரிகளுக்கு தகவல்கள் வழங்குபவையாக மாற வாய்ப்புள்ளதால்.. படங்களை இணைக்கும் ஊடகங்களும் தனிநபர்களும் சுய கவனம் எடுத்துச் செயற்படுவது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

Thousands throng Sydney, London Heroes’ Day events

Thousands of Eezham Tamils from across the UK gathered at London on Tuesday to pay obeisance to the Maaveerar (heroes) who laid down their lives in the struggle for a sovereign Tamil Eelam. Likewise, large crowds showed up at the Heroes Day event at Sydney, which was held in open space, and the people stayed on till the conclusion despite a heavy downpour. At the Heroes day event at Excel centre, London, security sources informed that the overall crowd was roughly around 20,000. Speaking to TamilNet, a community activist from Australia said that the strong presence of Tamil public at the Heroes Day events in different parts of the world showed that the diaspora will not be intimidated by any targeting or attacks on grassroots activists. Separately, Australian Greens Senator Lee Rhiannon also spoke in the parliament on the occasion, referring to challenges faced by the Tamils.

“I congratulate the aid workers, Tamil doctors, priests, TamilNet journalists and diaspora Tamils who stayed in the conflict zone and did everything they could to make the world listen. Many died. Today, I will remember them on Maaveerar Naa'l,” Ms. Rhiannon said.

“Australia's continuing 'friendly' relations with Sri Lanka in order to stop Tamils from fleeing their country is a matter of despair. The Australian government and opposition's discriminatory views and actions towards Tamil asylum seekers who do manage to make the dangerous journey here is shameful,” she said.

Referring to the recently released UN internal review report, Ms. Rhiannon asked whether the officials with UN will be held accountable, referring explicitly to the roles of Palitha Kohona, Sri Lanka’s representative to the UN, and Vijay Nambiar, former Chief of Staff under Ban Ki-moon.

Talking about assassination of grassroots activist in France Mr. Parithi and the ongoing repression of Tamils in the island, she affirmed her commitment to an independent investigation in the island.

In Silverwater, Sydney, a special outdoor arena was created in a circular shape, symbolic of unity, focus and revolution, the organizers told TamilNet.

The first event was a short dance drama by Tamil youth titled ‘Survival’. It depicted the pain and suffering of women in Tamil Eelam as well as their will to survive, fight and their hope that still burns for freedom.

Another innovative performance was the execution of a dance based on the Haka dance of the Maori, a traditional war cry dance of New Zealand’s Maori people, which involves vigorous body movements combined with shouts aimed at intimidating opponents. Titled “Tamil Eezha purachchi aattam”, it was performed by a group of around 25 Tamil youth, who shouted war cries based on the Tamil Eelam liberation struggle.

One such cry was “Oh veerane! Un seerudaikalai ennaku thaa, un pathanikalai ennaku thaa, un ayuthankalai ennaku thaa.” (O hero! Give me your clothes, give me your boots, give me your weapons!)

Speaking at the event, in the midst of a heavy rainfall, the guest speaker Mr R. Thirumavalavan, President of Malaysia Tamil Neri Kazhagam, reminded all that were present about the richness of Tamil History, the sacrifice of the Heroes and the right and responsibility that the Eezham Tamils had to reclaim their future.

At the event at Excel, London, homeland oriented songs, poems, dances and theatre hailed the legacy of the nation’s heroes and the spirit of the struggle for freedom.

Speaking at the event, Dr. Andy Higginbottom, principal lecturer in Politics and Human Rights at Kingston University, spoke about the need to build a mass movement to boycott genocidal Sri Lanka. He further cautioned diaspora activists against certain NGOs which might appear well-meaning but actually only serve to legitimize the Sri Lankan unitary state.

Viduthalai Rajendran from the Periyar Viduthalai Kazhagam, calling the LLRC a farcical ploy used by Sri Lanka to deceive the world, cited the examples of the struggles of Eritrea, East Timor and urged the Tamil diaspora to consistently push for a referendum among the Eezham Tamils.

Video messages from Eezham Tamil poet Kasi Anandan and MDMK leader Vaiko were also broadcast at the event.

British politicians Siobhain McDonagh, Labour MP, Robert Halfon, Conservative MP and Lee Scott, Conservative MP and Chair of APPGT also addressed the audience, conveying their solidarity for justice for the Eezham Tamils.

Mr. Rajamanoharan from the TCC-UK informed the audience about the cultural repression by the occupying Sinhala military in the Tamil homeland especially in the time of Maaveerar Naal, referring to recent incidents, and commended the spirit of the Eezham Tamil youth in the homeland in defying this.

Mario Arulthas from the TYO-UK said “The horrors of Mullivaikkal and the genocide that continues today are not a question of human rights. What happened and what continues to happen to Tamils in the North-East, is precisely because they are Tamil. It is a culmination of the Sri Lankan state’s intrinsic intent to decimate the Tamil nation,” adding that the genocide of the Eezham Tamils takes place because it is mandated by an unwaveringly chauvinist Sinhala nation.

Sanju Ganesan from the TYO-UK read from a global TYO declaration that the youth would never compromise on the fundamentals of the Eezham Tamils’ struggle for nation, homeland and self-determination.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35799

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை சிலர் சும்மா சும்மா சுயவிளம்பரத்திற்காவும்.. பதியினம். ஆனால் அவை எதிரிகளுக்கு தகவல்கள் வழங்குபவையாக மாற வாய்ப்புள்ளதால்.. படங்களை இணைக்கும் ஊடகங்களும் தனிநபர்களும் சுய கவனம் எடுத்துச் செயற்படுவது நன்று.

உண்மைதான். அத்துடன் அவசரதேவைக்காக தாயகத்துக்கு செல்பவர்களுக்கு எதாவது பிரச்சனை வந்தாலும் வரலாம்.

படங்களை சிலர் சும்மா சும்மா சுயவிளம்பரத்திற்காவும்.. பதியினம். ஆனால் அவை எதிரிகளுக்கு தகவல்கள் வழங்குபவையாக மாற வாய்ப்புள்ளதால்.. படங்களை இணைக்கும் ஊடகங்களும் தனிநபர்களும் சுய கவனம் எடுத்துச் செயற்படுவது நன்று.

நானும் மாவீரர் தினத்துக்கு போய் விட்டு கூடியவரை கமராவில், வீடியோவில் விழாதபடி தான் நின்றேன். ஆனாலும் தப்பி தவறி எங்காவது முகம் விழுந்திருக்கும். :rolleyes: விழுந்தால் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் சிலவேளை அங்குள்ள என் குடும்பத்தினருக்கு பிரச்சினை வரலாம். ஆனாலும் மாவீரர் தினத்துக்கு போக வேணும் என்று போனனான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

[size=5]தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வளர்ந்த கொளத்தூர் புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு![/size][/size][size=3]

[size=4]v-kouththuur.jpg[/size]

[size=4]video123.gif1984 தொடக்கம் முதல் விடுதலைப்புலிகள் உலவிய கொளத்துார் புலியூர் மண்ணில் திராவிடர் விடுதைலக் கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.[/size]

[size=4]சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க தோழர். தா.செ.பழனிசாமி ( கொளத்தூர் மணி அவர்களின் தம்பி) தலைமையில் டி.கே.தேவராசன் தண்டபானி முன்னிலையில்வீரவணக்கநிகழ்வு துவங்கியது. நிகழ்வில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவர்கள் குழந்தைகள் ஆசிரியர்கள் கழக தோழர்கள் மாற்று கட்சியினர் உட்பட 700க்கு மேற்பட்டோர் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும் வீதிநாடகக் குழுவின் வீதிநாடகமும் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் வந்திருந்த அனைவரின் உணர்வுகளை வெளிகாட்டும் விதமாக வரவேற்ப்பை பெற்று சிறப்புற அமைந்தது.[/size]

[/size]

http://youtu.be/ZsmeXVAgT0k

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கட்டார் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்![/size]

[size=3]

[size=4]v-qutarmaaveerranaal%20%289%29.jpg[/size]

[size=4]photo.gifமத்திய கிழக்கு நாடான கட்டார் பகுதியில் அந்நாடு அனுமதி கொடுக்காத நிலையில் மாவீரர் நாள் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

செனயா-47 என்ற இடத்தில் சிறப்புற அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது ஆறாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள்.

முற்றுமுழுதாக தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அன்னாட்டு கொடி மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு கட்டார் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வும் சிறப்புற கொண்டாடியுள்ளார்கள்.v-qutarmaaveerranaal%20%283%29.JPGv-qutarmaaveerranaal%20%282%29.JPGv-qutarmaaveerranaal%20%284%29.JPGv-qutarmaaveerranaal%20%286%29.JPGv-qutarmaaveerranaal%20%285%29.JPGv-qutarmaaveerranaal%20%288%29.JPGv-qutarmaaveerranaal.JPGv-qutarmaaveerranaal%20%287%29.JPG[/size]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் படங்களை நான் எடுக்கவில்லை...மண்டபத்துக்குள் அது சரி இல்லை என்பதால்...

மிகவும் மனவருத்தத்துக்குரிய நேர்மையற்ற கருத்து

மக்களின் படத்தை சரியில்லை என எடுக்காது

அதே மக்கள் படத்தை உங்கள் தேவைக்கேற்றாப்போல் எடுத்து

அது எம் எல்லோரையும் கேலப்படுத்த கவிதை எழுதவும் பாவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை தம்பி சுபேஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.