Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர் தேசங்களில் நடை பெற்ற மாவீரர் நிகழ்வுகள்....

Featured Replies

மிகவும் மனவருத்தத்துக்குரிய நேர்மையற்ற கருத்து

மக்களின் படத்தை சரியில்லை என எடுக்காது

அதே மக்கள் படத்தை உங்கள் தேவைக்கேற்றாப்போல் எடுத்து

அது எம் எல்லோரையும் கேலப்படுத்த கவிதை எழுதவும் பாவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை தம்பி சுபேஸ்.

உண்மைதான் நான் கூட சுபெசிடம் இதை எதிர் பார்க்கலை
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் படங்களை நான் எடுக்கவில்லை...மண்டபத்துக்குள் அது சரி இல்லை என்பதால்...

உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் சுபேஸ்

[size=4]நந்தன்,[/size]

[size=4]இங்கே இணைக்கப்பட்ட ஒரு படத்தை வைத்து மாவீரர் நிகழ்வையே ஒருவர் இழிவாக கவிதை என்ற பெயரில் கேவலப்படுத்தியது பற்றியும் அதன் நேர்மை பற்றியும் உங்கள் கருத்து என்ன?[/size]

[size=4]நன்றிகள். [/size]

[size=4]தமிழர் நினைவேந்தல் அகவம்; சுவிசினால் 27.11.2012 காலை 9.00 மணியளவில் சுவிஸ் இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கலில் 2012 இன் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நினைவுக்கல்லிற்கான ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல் உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன் நிறைவுபெற்றது.

தாயக விடுதலை வேள்வியிலே தம் இன்னுயிர்களை ஈகஞ்செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளை தமிழர் நினைவேந்தல் அகவமும்;, சைவத் தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து மதிப்பளித்தனர். அந்நிகழ்விற்குரிய மகத்துவத்துடன் 27.11.2012 மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இம் மதிப்பளிப்பு நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த இருநூறிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடர்ந்து சுவிஸ் நாட்டின் பிறைபேர்க் மாநில குழசரஅ மண்டபத்தில் 27.11.2012 பிற்பகல் 12.45 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் மகளிர் அணியின் பொறுப்பாளர் திருமதி ப.நிர்மலா அவர்கள் ஏற்றி வைத்ததினைத் தொடர்ந்து நிகழ்வு வழமையான அனைத்து அம்சங்களுடனும் உணர்வும் எழுச்சியும் ஒருங்குசேர அனுட்டிக்கப்பட்டது. இத்தேசிய மாவீரர் நாள் நிகழ்விற்கு சுவிசின் அனைத்து மாநிலங்களிலுமிருந்தும் திரண்டு வந்த எம்மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை எம் காவற்றெய்வங்களின் திருவுருவப் படத்துக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளின் தேசியப்பற்றை எடுத்துக்காட்டி நிற்கிறது. இந்நிகழ்வில் தாயகம் சார்ந்த வெளியீடுகள் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்தோடு தமிழர் நினைவேந்தல் அகவம்; சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர் ஞாபகார்த்தப்பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான சிறப்புரையை தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இன உணர்வாளரும் பேராசிரியருமான தாயப்பன் அவர்கள் நிகழ்த்தினார். சுவிஸ் வாழ் கலைஞர்களின் கலைநிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்று தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வானது இனிதே நிகழ்ந்து 18.30 மணிக்கு நிறைவெய்தியது.[/size]

[size=4][size=3]image328-150x95.jpg[/size]

[size=3]image329-1024x649.jpg[/size]

[size=3]image330-600x418.jpg[/size]

[size=3]image331-600x887.jpg[/size]

[size=3]image332-600x398.jpg[/size]

[size=3]image334-585x900.jpg[/size]

[size=3]image335-600x399.jpg[/size]

[size=3]image337-600x359.jpg[/size]

[size=3]image338-600x388.jpg[/size]

[size=3]image339-600x374.jpg[/size]

[size=3]image340-600x399.jpg[/size]

[size=3]image341-600x382.jpg[/size]

[size=3]image342-600x371.jpg[/size]

[size=3]image343-600x371.jpg[/size]

[size=3]image345-600x380.jpg[/size]

[size=3]image346-600x264.jpg[/size]

[size=3]image347-600x366.jpg[/size]

[size=3]image348-600x390.jpg[/size]

[size=3]image349-600x370.jpg[/size]

[size=3]image350-600x399.jpg[/size]

WWW.irruppu.com[/size]

மக்களின் படங்களை நான் எடுக்கவில்லை...மண்டபத்துக்குள் அது சரி இல்லை என்பதால்...

படம் உங்களிடம் இருக்கிறதா இல்லையா என்று அறிய தான் அந்த கேள்வியை கேட்டிருந்தேன்.

நான் நினைத்தேன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் நடத்திய மாவீரர் தினத்துக்கு வந்து முகத்தை காட்டி விட்டு மற்ற மாவீரர் தினத்துக்கு போய் விட்டீர்களோ என்று. நீங்கள் நவம் அண்ணா இணைத்த காணொளிக்கு like போட்டிருந்ததை பார்த்ததும் சந்தேகம் வலுவடைந்தது. ஆனாலும் அங்கிருந்தவர்களுக்கு தான் உண்மை தெரியும். பிழையாக இருப்பின் மன்னிக்கவும்.

ஆர்ப்பாட்ட படங்களை உடனுக்குடன் யாழில் இணைத்த நீங்கள் மக்களை பற்றி கவலைப்பட்டு படம் எடுக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மிகவும் மனவருத்தத்துக்குரிய நேர்மையற்ற கருத்து

மக்களின் படத்தை சரியில்லை என எடுக்காது

அதே மக்கள் படத்தை உங்கள் தேவைக்கேற்றாப்போல் எடுத்து

அது எம் எல்லோரையும் கேலப்படுத்த கவிதை எழுதவும் பாவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை தம்பி சுபேஸ்.

பச்சை இல்லை விசுகு அண்ணா, இரவு அல்லது நாளைக்கு வந்து போடுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தத்துக்குரிய நேர்மையற்ற கருத்து

விசுகண்ணா..நீங்கள் தப்பாக புரிந்திருக்கிறீர்கள்...

மக்களின் படத்தை சரியில்லை என எடுக்காது

அதே மக்கள் படத்தை உங்கள் தேவைக்கேற்றாப்போல் எடுத்து

அது எம் எல்லோரையும் கேலப்படுத்த கவிதை எழுதவும் பாவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை தம்பி சுபேஸ்.

குறிப்பிட்ட படம் எடுத்ததற்கு எனக்கு எந்த நோக்கமும் இல்லை...எந்த தேவையும் இருக்கவில்லை..நான் எந்த புலத்து அரசியல் சில்லெடுப்புகளிலும் சிக்குவதும் இல்லை..எனது சுயத்தை நான் இளக்க விரும்புவதும் இல்லை என்பதுதான் இதற்கான காரணம்...குறிப்பிட்ட படம் நான் எடுத்ததிற்கான காரணமும் அதை யாழில் போட்டதிற்கான காரணமும் எனக்கு கொத்துரொட்டிவியாபாரம் மாவீரர்மண்டபத்தின் முன்னால் நிகழ்வதை பார்க்க அருவருப்பாக இருந்ததே..ஆனால் எனது படம் பல்வேறு அதிரவலைகளையும் பலர் தம் சொந்த அரசியல் செயல்பாட்டை கொண்டு செல்ல எடுப்பார்கள் என்பதையும் சற்றும் எதிர்பாக்கவில்லை..அதனால் குறிப்பிட்ட படங்களை நான் நேற்றே நீக்கி இருந்தேன்...எந்தவிதமான அரசியல் சாயங்களும் எனது படப்பிடிப்புக்கு பின்னால் இல்லை என்பதை மீண்டும் தெளிவாக சொல்லிகொள்கிறேன் விசுகண்ணா..

Edited by சுபேஸ்

[size=4]தம்பி சுபேஸ்,[/size]

[size=1]

[size=4]பொது தளங்கள், வேலைகள் என்றால் இப்படித்தான். நாம் நல்லதை செய்யும்பொழுது சிலர் எமக்கு தெரியாமலேயே அதில் தமது சுய இலாபங்களுக்காக குளிர் காய்ந்து, இறுதியில் தம்மையும் சமூகத்தையும் செல்லாக்காசாக்கி விடுகிறார்கள். [/size][/size]

[size=1]

[size=4]இதுக்கெல்லாம் கவலைப்படாதீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதையே யாழ் அன்பு அண்ணா உங்களுக்கும் சொல்லிகொள்கிறேன்...வெளிப்படையாக இருக்கும் உங்கள் இருவருக்கும் முகம் காட்டி வெளிப்படையாகவே கேள்விகளை வைப்பதற்குமான உங்கள் நேர்மைகளுக்காவே நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்...உங்கள் இருவருக்கும் அதிலும் விசுகண்ணாவுக்கு என்னை தெரியும்..எந்த அரசியல் சாயமும் நோக்கமும் எனக்கு இருந்திருக்கவில்லை எம் மாவீரர் நாளில் எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பை தவிர...

இதையே யாழ் அன்பு அண்ணா உங்களுக்கும் சொல்லிகொள்கிறேன்...வெளிப்படையாக இருக்கும் உங்கள் இருவருக்கும் முகம் காட்டி வெளிப்படையாகவே கேள்விகளை வைப்பதற்குமான உங்கள் நேர்மைகளுக்காவே நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்...உங்கள் இருவருக்கும் அதிலும் விசுகண்ணாவுக்கு என்னை தெரியும்..எந்த அரசியல் சாயமும் நோக்கமும் எனக்கு இருந்திருக்கவில்லை எம் மாவீரர் நாளில் எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பை தவிர...

மன்னிக்கவும் சுபேஸ் இங்கு பல குள்ள நரிகள் தருணம் பார்த்து தாக்கும் அதான் கொஞ்சம் டென்சனாகி விட்டேன். நன்றிகள் தங்கள் புரிதலுக்கு
  • கருத்துக்கள உறவுகள்

இதையே யாழ் அன்பு அண்ணா உங்களுக்கும் சொல்லிகொள்கிறேன்...வெளிப்படையாக இருக்கும் உங்கள் இருவருக்கும் முகம் காட்டி வெளிப்படையாகவே கேள்விகளை வைப்பதற்குமான உங்கள் நேர்மைகளுக்காவே நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்...உங்கள் இருவருக்கும் அதிலும் விசுகண்ணாவுக்கு என்னை தெரியும்..எந்த அரசியல் சாயமும் நோக்கமும் எனக்கு இருந்திருக்கவில்லை எம் மாவீரர் நாளில் எனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பை தவிர...

நன்றி தம்பி

தற்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது.

சந்தோசம்

தம்பி என்ற உரிமையில் அதிகம் காரமான சொல்லை பாவித்தேனோ என தற்பொழுது நோகின்றேன்.

ஆனாலும் மற்றவர் கண்டிப்பதைவிட நான் கண்டிப்பதுதான் நன்று.

மீண்டும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் சுபேஸ் இங்கு பல குள்ள நரிகள் தருணம் பார்த்து தாக்கும் அதான் கொஞ்சம் டென்சனாகி விட்டேன். நன்றிகள் தங்கள் புரிதலுக்கு

நன்றி யாழ் அன்பு அண்ணா புரிதலுக்கு..

[size=4]தம்பி சுபேஸ்,[/size]

[size=1][size=4]பொது தளங்கள், வேலைகள் என்றால் இப்படித்தான். நாம் நல்லதை செய்யும்பொழுது சிலர் எமக்கு தெரியாமலேயே அதில் தமது சுய இலாபங்களுக்காக குளிர் காய்ந்து, இறுதியில் தம்மையும் சமூகத்தையும் செல்லாக்காசாக்கி விடுகிறார்கள். [/size][/size]

[size=1][size=4]இதுக்கெல்லாம் கவலைப்படாதீர்கள். [/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

நன்றி அகூதா அண்ணா புரிதலுக்கு..உண்மை...

நன்றி தம்பி

தற்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது.

சந்தோசம்

தம்பி என்ற உரிமையில் அதிகம் காரமான சொல்லை பாவித்தேனோ என தற்பொழுது நோகின்றேன்.

ஆனாலும் மற்றவர் கண்டிப்பதைவிட நான் கண்டிப்பதுதான் நன்று.

மீண்டும் நன்றிகள்

நன்றி விசுகண்ணா புரிதலுக்கு.....உங்களைப்போன்ற வயதுக்கு மூத்தவர்கள் கண்டிப்பதுடன் நில்லாது தண்டித்தாலும் மகிழ்வடைவேன்..எல்லாம் எமது நன்மைக்காகவே இருக்கும்..

என்ன செய்வது சுபேஸ் எங்களுக்கு அடிக்கடி முகம் மாற்ற தெரியவில்லை. தலைவர் அன்று என்ன சொன்னாரோ அதையே தான் நாங்க இன்றும் பின்பற்ற நினைக்கிறோம். எப்படியும் வாழலாம் என்றால் நாங்கள் எப்பவோ எப்பிடியோ வாழ்ந்திருப்போம் முடியல. எமக்காக உயிர் நீத்தவர்களை அடிக்கடி நினைவில் கொள்கிறோம் எமது உயிர் போகும்வரை நாம் புலியாகவே வாழ்வோம் மக்களுக்காக தலைவர் கொள்கையாம் தமிழ் ஈழதிட்க்காக செயல் படுவோம். நன்றி சுபேஸ் நீங்க எங்களை மறவுங்கோ ஆனால் அந்த தங்க தலைவனை நினையுங்கோ தெளிவு தானா வரும் அவரது கால கட்டத்தில் எவ்வளவோ துரோகங்களை அவர் பார்த்து விட்டார் பல வழிகளில் புலி என்று சொல்லி நரியாகி வந்தோர் சிலர் பசு என்று சொல்லி பாம்பாகி வந்தோர் பலர் உள்ளை துரோகம் வெளிய துரோகம் என்று அவரை நின்மைதியாகவே போராட விடலை நம்ம நரிகள் கூட்டம். இப்ப மட்டும் விடுமா பல பசப்பு வார்த்தைகள் பேசி அவரது நாமமும் புலிகள் என்ற வார்த்தையும் மாவீரர் என்ற சொல்லும் ஈழம் என்ற உசிர் நாடியும் அழிப்பது தான் இந்த வீணர்களின் வேதவாக்கு. சாத்தான் வேதம் ஓதும் நாம் சாத்தான்கள் மத்தியில் நிற்கும் போது மௌனமாக நிற்போம் பின்னர் சாத்தான்களை விரட்டுவோம் என்றும் உங்களில் ஒருவனாய் நானும் நிற்போம் நன்றி சுபேஸ் என்னால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்

[size=2]

305499_226499897483896_195504769_n.jpg[/size][size=2]

முடிந்தால் இப்புகைப்படங்களை உங்கள் இணையத்தளத்தில் பகிர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருகரம் கூப்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மத்திய கிழக்கு பிர

தேசத்தில் டோகா கட்டார் என்னும் நாட்டில் மிகவும் உணர்ச்சியுடனும் மாபெரும் எழுச்சியுடனும் ஒற்றுமையுடன் நடைபெற்று முடிந்த தேசிய நினைவெழுச்சி நாள்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-டோகா கட்டார்[/size]

[size=5]லண்டனுக்குள்ளேயும் வெளியேயும் பல்கலைக்கழகங்களில் இளையோர்களால் மாவீரர் நாள் மிக சிறப்பாக அனுஸ்டிப்பு[/size]

[size=4]பிரித்தானிய தமிழ் இளையோர்களால் வழமைபோல இம்முறையும் 'இளையோர் மவீரர்நாளும்' இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைகளை வெளிக்கொண்டுவரும் விதமான விழிப்புணர்ச்சிகளும் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றன. கடந்த இரண்டு வருடங்களா லண்டனுக்குள்ளே இடம்பெற்ற இவ் நிகழ்வுகள் இம்முறை லண்டனுக்கு வெளியேயுள்ள பல பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைத்து இடம்பெற்றன.[/size]

[size=4]லண்டனின் பல பாகங்களில் இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கான இனப்படுகொலைகள் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதேபோல சர்வதேசம் தமது மௌனத்தை கலைக்கவேண்டும் என்ற விழிப்புணர்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட்டது. இதன் இறுதி நாளில் இளையோர்களால் லணடன் மத்திய பகுதியில்அமைந்துள்ள கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் (Kings University) மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களின் பாடல்கள் பேச்சுக்கள் கவிதைகள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சு தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றன. அதேபோல பிரத்தானிய Liberal Democrat MP for Bermondsey and Old Southwark Simon Hughes சிறப்புரை ஆற்றினார்.[/size]

[size=4]இவ் நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி எற்றலுடனும் அதனுடைய கொடி வணக்க பாடலும்இசைக்க தேசிய கொடி பறக்க விடப்பட்டது, அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு,மலர்வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. கைகளிலே விளக்குகளை ஏந்திய படி எழுந்து நின்று எமதுமாவீர செல்வங்களுக்கு மரியாதையை செய்யப்பட்டதோடு மட்டும் நின்று விடாமல் "தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய" மாவீரர் பாடல் இசைக்க மாணவர்களின் கண்ணில் சிந்திய அந்ததுளிகளுடன் அஞ்சலி செய்யப்பட்டது.[/size]

[size=4]அதேபோல லண்டனுக்கு வெளியேயுள்ள பல பல்கலைக்கழகங்களை இணைத்து லெஸ்டர்பல்கலைக்கழகத்தில் (university of leicester) இளையோர்களால் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது, மாணவர்களால் பேச்சு கவிதைகள் மற்றும் யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்ட விவரணப்படமும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. அதன் பிற்பாடு லெஸ்டர் பல்கலைக்கழக மாணவியின் பேச்சு மாணவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாட்டை காட்டியது, அவ் மாணவி தெரிவிக்கையில் "லண்டன், பாரிஸ், ஜேர்மன், கனடா எமது நாடுகள் அல்ல எமது நாடு எங்கோ ஒரு இடத்தில இருக்கிறது அதன் பெயர் தமிழீழம் அதனை நாம் அடைய வேண்டும்" இவ்வாறு தெரிவித்த அந்த மாணவியின் பேச்சு சக மாணவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.[/size]

[size=4]இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு எழுச்சி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவேறியது.[/size]

[size=4][size=5]-- [/size][/size]

[size=5]Media Team

Tamil Youth Organisation - United Kingdom[/size]

[size=5]Web: http://www.tyouk.org[/size]

[size=5]Follow us: http://twitter.com/#!/TYOUK[/size]

[size=5]Face Book: http://www.facebook.com/tyouk.media[/size]

73498_305363389567580_39325080_n.jpg

29365_305362492901003_1260671281_n.jpg

[size=5]மிக அழகாக கனேடிய இளையோரால் வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மின்வலைத்தள "மாவீரர் துயிலும் இல்லம்" : [/size]

[size=6]http://www.maaveerarillam.com/[/size]

[size=5]மிகவும் அற்புதமான தளம்! பின்னணி இசைத் தேர்வு மேலும் சிறப்பை கூட்டுகிறது.

ஆக்கியவர்களுக்கு நன்றிகள்.[/size]

[size=5]மிக அழகாக கனேடிய இளையோரால் வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மின்வலைத்தள "மாவீரர் துயிலும் இல்லம்" : [/size]

[size=6]http://www.maaveerarillam.com/[/size]

[size=5]மிகவும் அற்புதமான தளம்! பின்னணி இசைத் தேர்வு மேலும் சிறப்பை கூட்டுகிறது.

ஆக்கியவர்களுக்கு நன்றிகள்.[/size]

[size=4]இதை வடிவமைத்து செய்து கொண்டிருப்பவர்கள் சில இளையோர் அமைப்பை சேர்ந்தவர்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

Post on : 2012-11-30 15:00:51

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மாவீரர் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27-11-2012 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான அர்ப்பணிப்பை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.

மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய கொடியை, திரு. இராசரத்தினம் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் திரு. கோட்பிறி அவர்களும் ஏற்றிவைக்க ஆரம்பமான நிகழ்வில் அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து எழுபத்தைந்து மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் நின்று, எங்களின் சுதந்திர வாழ்வுக்காக தங்களின் உயிரையே அர்ப்பணித்த அந்த உத்தம சீலர்களுக்கு கண்ணீராலும் பூக்களாலும் வணக்கம் செலுத்தினர்.

மலர்வணக்கநிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலி அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தாயகதுயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர். நிகழ்வில் அடுத்ததாக இடம்பெற்ற அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்ல பாடல் மண்டபத்தை நிறைத்துக்கொண்டது.

தாம் நேசித்த மக்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரச் செல்வங்களின் நினைவில் தங்கள் உணர்வுகளை அர்ப்பணித்தவர்களாக அனைவரும் அப்பாடலோடு இணைந்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளாக முதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிக்கை புலிகளின் குரல் வானொலியின் இணைப்பின் ஊடாக ஒலிபரப்பப்பட, அதனைத் தொடர்ந்து உறுதியுரையும் இடம்பெற்றது.

”தமிழீழ தாய்நாட்டுக்காக – தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் - இப்புனித நன்நாளில் ஈழத்தமிழனாகிய நான் - உலகின் எந்தத்திசையில் வாழ்ந்தாலும்

தமிழீழமே எனது இலட்சியம் என்றும் - சுதந்திரமும் இறைமையுமுள்ள

தமிழீழத்தனியரசான - எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என்றும் - உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

என்ற உறுதி மொழி வாசிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் எழுந்து நின்று அதனை உரத்துக்கூறி பிரமாணம் செய்துகொண்டனர்.

அதனை அடுத்து, மாவீரர் எழுச்சிப் பாடலுக்கான நாட்டியாலய நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. அதை தொடர்ந்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரான திரு வசந்தன் அவர்கள் மாவீரர் நினைவுரையை ஆற்றினார்.

மாவீரர்களின் உயிர்க்கொடையை விட போராட்ட காலத்தில் அவர்கள் காட்டிய ஒழுக்கம், கடுமையான பணி, சகிப்புத்தன்மை என்பனவே அர்ப்பணிப்பின் உச்சம் என்பதை மாவீரர்களின் வரலாற்றோடு பதிவுசெய்தார். மேலும் அவர் தனதுரையில், "இன்று அவுஸ்திரேலியா முழுமையாகவே சுமார் 300 க்கு மேற்பட்ட மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களுக்கு இம்மாவீரர்கள் பெற்றவர்களாக துணைவர்களாக உடன்பிறந்தவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு 40000 இற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயகவிடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். அந்தவகையில் இவர்கள் எப்படி பயங்கரவாதிகளாக இருக்கமுடியும் என்ற கருத்தை ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எடுத்துச்செல்லவேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து, நடனாலாயப்பள்ளி மாணவன் செல்வன் சதீபன் அவர்களின் எழுச்சிப் பாடலுக்கான நடன நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மாலை 8.20 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

இந்நிகழ்வின் இன்னொரு முக்கிய விடயமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையினர் கடந்த ஆண்டைப்போன்று வெளியிட்ட ”காந்தள் 2012” மாவீரர் நினைவுதின சிறப்பிதழ் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி “காந்தள் இதழ்“ வெளியாகியிருந்தது.

http://www.tamilevents.com.au/news/5----------------.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள் camera_icon.jpeg [/size]

Maaveerar-naal_2012_Melb--seithy-150.jpg

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மாவீரர் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27-11-2012 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான அர்ப்பணிப்பை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.

மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய கொடியை, திரு. இராசரத்தினம் அவர்களும் தமிழீழ தேசியக்கொடியை தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் திரு. கோட்பிறி அவர்களும் ஏற்றிவைக்க ஆரம்பமான நிகழ்வில் அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து எழுபத்தைந்து மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் நின்று, எங்களின் சுதந்திர வாழ்வுக்காக தங்களின் உயிரையே அர்ப்பணித்த அந்த உத்தம சீலர்களுக்கு கண்ணீராலும் பூக்களாலும் வணக்கம் செலுத்தினர்.

மலர்வணக்கநிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலி அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தாயகதுயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர். நிகழ்வில் அடுத்ததாக இடம்பெற்ற அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்ல பாடல் மண்டபத்தை நிறைத்துக்கொண்டது.

தாம் நேசித்த மக்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மாவீரச் செல்வங்களின் நினைவில் தங்கள் உணர்வுகளை அர்ப்பணித்தவர்களாக அனைவரும் அப்பாடலோடு இணைந்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளாக முதலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிக்கை புலிகளின் குரல் வானொலியின் இணைப்பின் ஊடாக ஒலிபரப்பப்பட, அதனைத் தொடர்ந்து உறுதியுரையும் இடம்பெற்றது.

"தமிழீழ தாய்நாட்டுக்காக - தமது இன்னுயிரை ஈந்த

மாவீரர்களை நினைவு கூரும் - இப்புனித நன்நாளில்

ஈழத்தமிழனாகிய நான் - உலகின் எந்தத்திசையில் வாழ்ந்தாலும்

தமிழீழமே எனது இலட்சியம் என்றும் - சுதந்திரமும் இறைமையுமுள்ள

தமிழீழத்தனியரசான - எனது வரலாற்று மண்ணின் மீட்சி

க்காக அயராது உழைப்பேன் என்றும் - உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

என்ற உறுதி மொழி வாசிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் எழுந்து நின்று அதனை உரத்துக்கூறி பிரமாணம் செய்துகொண்டனர்.

அதனை அடுத்து, மாவீரர் எழுச்சிப் பாடலுக்கான நாட்டியாலய நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. அதை தொடர்ந்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரான திரு வசந்தன் அவர்கள் மாவீரர் நினைவுரையை ஆற்றினார்.

மாவீரர்களின் உயிர்க்கொடையை விட போராட்ட காலத்தில் அவர்கள் காட்டிய ஒழுக்கம், கடுமையான பணி, சகிப்புத்தன்மை என்பனவே அர்ப்பணிப்பின் உச்சம் என்பதை மாவீரர்களின் வரலாற்றோடு பதிவுசெய்தார். மேலும் அவர் தனதுரையில், "இன்று அவுஸ்திரேலியா முழுமையாகவே சுமார் 300 க்கு மேற்பட்ட மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களுக்கு இம்மாவீரர்கள் பெற்றவர்களாக துணைவர்களாக உடன்பிறந்தவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு 40000 இற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயகவிடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். அந்தவகையில் இவர்கள் எப்படி பயங்கரவாதிகளாக இருக்கமுடியும் என்ற கருத்தை ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எடுத்துச்செல்லவேண்டும்� எனவும் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து, நடனாலாயப்பள்ளி மாணவன் செல்வன் சதீபன் அவர்களின் எழுச்சிப் பாடலுக்கான நடன நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மாலை 8.20 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

இந்நிகழ்வின் இன்னொரு முக்கிய விடயமாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையினர் கடந்த ஆண்டைப்போன்று வெளியிட்ட "காந்தள் 2012" மாவீரர் நினைவுதின சிறப்பிதழ் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி "காந்தள் இதழ்" வெளியாகியிருந்தது.

நன்றி.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

  • Maaveerar-naal_2012_Melb--seithy-(1).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(2).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(3).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(4).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(5).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(6).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(7).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(8).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(9).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(10).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(11).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(12).jpg
  • Maaveerar-naal_2012_Melb--seithy-(13).jpg

தேசிய நினைவெழுச்சிநாள் தொகுப்பு -முருகதாசன் திடல்-2012

<iframe width="420" height="315" src="http://www.youtube.c...ed/hOox6dShlpY" frameborder="0" allowfullscreen></iframe>

Edited by navam

கட்டார் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்"
=====================
மத்திய கிழக்கு நாடான கட்டார் பகுதியில் அந்நாடு அனுமதி கொடுக்காத நிலையில் மாவீரர் நாள் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.


செனயா-47 என்ற இடத்தில் சிறப்புற அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது ஆறாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள்.
 

முற்றுமுழுதாக தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அன்னாட்டு கொடி மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

 

இந்த நிகழ்வு கட்டார் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வும் சிறப்புற கொண்டாடியுள்ளார்கள்.

 

 

 

 

 



486174_307219906048595_13942452_n.jpg



156984_307220086048577_365677047_n.jpg



479964_307220422715210_903887326_n.jpg



69401_307220676048518_1629975468_n.jpg

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012 மேற்பிராந்தியம் இத்தாலி"

======================


இத்தாலி மேற்பிராந்தியத்தில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 02-12-2012 அன்று வியல்லா நகரத்தில் நடைபெற்றது. நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடரை தமிழ் இளையோர் அமைப்பு துணை பொறுப்பாளர் செல்வி நாகேந்திரன் சிந்துஜா அவர்கள் ஏற்றிவைக்க தேசியக்கொடியினை மேற்பிராந்திய பொறுப்பாளர் திரு மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து பிராதன ஈகைச்சுடரினை இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை பொறுப்பாளர் திரு செபஸ்தியாம்பிள்ளை ராஜன் அவர்கள் ஏற்றிவைக்க அனைத்து மாவீரர் குடும்பங்களை சர்ந்தவர்களும் தங்கள் உறவுகளுக்காக அமைக்கப்பட்ட கல்லறைகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அனைத்து மக்களும் சுடர், மலர் வணக்கம் செலுத்தி அனைத்து மக்களாலும் மாவீரர் ஆணை எடுக்கப்பட்டதை தொடர்ந்து. நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாவீரர் குடும்பங்களிற்கும் மதிப்பளிக்கப்பட்டு நினைவுப் பருசுகள் வழங்கப்பட்டது.

 

நிகழ்விற்கு சிறப்பாக கலந்து கொண்ட நகர முதல்வர் திரு வியசேத்தி அவர்கள் உரையாற்றும் போது தமிழ் மக்கள் தங்கள் உரிமையுடன் வாழவேண்டும் அதற்காக தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கூறினார். கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையை நடாத்pயுள்ளது அதை சர்வதேச மட்டத்தில் விசாரிக்க வேண்டும் . தமிழ் மக்களிற்க்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்களை அனைத்துக்கட்சிகளின் ஆரதவுடன் நிறைவேற்றியமைக்காகவும் தமிழீழ தேசியக்கொடியினை தமிழ் மக்களின் தேசியக்கொடியென்று அங்கீகரித்தமைக்காகவும் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து தமிழீழமும் தேசியக்கொடியும் பதிக்கப்பட்ட நினைவுப்பரிசை அனைத்து தமிழ் தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழிச்சி நடனங்கள், மாவீரர் ஞாபகார்த்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுடைய பேச்சுக்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு , சிறப்புரை, மாவீரர் நாள் அறிக்கை ,பாடல்கள், மனித உரிமை பணியாளர் திரு பாபியோ அவர்களுடைய உரை போன்ற நிகழ்வுகளுடள் நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் எனும் பாடலுடன் தேசியக்nகொடி இறக்கப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் உறுதிமொழியுடன் அனைத்து நிகழ்வுகளும் சிறப்புடன் நிறைவேறின.

 

 

 

 

32364_307644436006142_540601702_n.jpg

 

 

 

 

486213_307644646006121_1136613547_n.jpg

 

 

 

 

28777_307644779339441_408732584_n.jpg

 

 

 

 

424782_307645039339415_205670136_n.jpg

 

 

 

 

432371_307645152672737_481692793_n.jpg

 

 

Edited by akootha

தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் சுவீடன் நாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது - 2012"



522723_227177480747727_1422773514_n.jpg



315744_227177597414382_739890967_n.jpg

"முன்சன் நகரத்தில் 8.12.2012 சனிக்கிழமை மாவீரர்நாள் 2012 வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது"



6344_227970290668446_1468556063_n.png



537622_227970017335140_1904936689_n.png



61333_227969817335160_2140303054_n.png



487093_227969550668520_537666912_n.png



முன்சன் நகரத்தில் 8.12.2012 சனிக்கிழமை மாவீரர்நாள் 2012 வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.அன் நகரத்தில் உள்ள தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர்களுக்குத் தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.

 

நிகழ்வானது கொட்டும் பனிமழையில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் மண்டபத்திற்குள் சுடர்வணக்கம் மலர்வணக்கம் என்பன உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

 

இன் நிகழ்வில் இசைவணக்கம்,மற்றும் முன்சன் நகரத்தில் உள்ளஇளையவர்களின் நடனத் தொகுப்புடன் சிறப்புரையும் இடம்பெற்றது.பின் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.



17764_308605639243355_550847887_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.