Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலாடும் நினைவுகள்..!

Featured Replies

காதலைவிட தேசம் மீதான காதல் தான் சிறந்தது என வீரமரணம் அடைந்த கோணேஸுக்கு எனது வீர வணக்கம். நினைவுகளை மீட்டியமைக்கு சாத்திரிக்கு நன்றிகள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[

size="2"]நிழலாடும் நினைவுகள்  4 [/size]

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது

இது ஈழத்தில் இந்தியபடையின் இருண்ட காலத்தில் ஒரு போராளியின் உண்மை கதை

கதையின் காலம் 1988ம் ஆண்டு சித்திரை மாதம்

யாழ்குடாவின் சண்டிலிப்பாய் கிராமம் ஒருநாள் மாலை நேரம் திடீரென துப்பாக்கிவெடிச்சத்தங்கள் கேட்கிறது இந்த சத்தங்கள் அந்த கிராமத்திற்கு ஏன் ஈழத்தின் எந்த கிராமத்திற்கும் புதியதல்ல சத்தம் கேட்டசில நிமிடங்கள் மக்கள் பரபரப்பாவார்கள் ஏதாவது ஒருமரணசெய்தி வரும் அது போராளியாகவும் இரக்கலாம் பொதுமக்களாகவும் இருக்கலாம்.சில நிமிடங்களில் மக்கள் வழைமை போல தங்கள்வேலைகளை பார்க்கபோய்விடுவார்கள் இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதால் எல்லோருக்கும் பழகிபோய்விட்டது. அன்றும் அப்படித்தான் சத்தம் கேட்டதும் மக்கள் ஒருவரையொருவர் பார்த்து "யாரோ மாட்டுபட்டிட்டாங்கள் போலை வெடிவிழுந்தது ஆமிக்கா பெடியளுக்கா எண்டு தெரியேல்லையெண்டு " என்று விட்டு தங்கள் வேலைகளில் கவனமானார்கள்.

ஆனால் அந்த கிராமத்தில் இந்தியபடை காலத்தின் இக்கட்டான சூழலிலும் போராளிகளிற்கு ஆதரவளித்து அரவணைத்த சில வீடுகளில் ஒரு வீட்டில் அந்த தாய் மட்டும் சத்தம் கேட்டதுமுதல் நிம்மதியில்லாமல் வீட்டு படைலையை எட்டி பார்ப்பதும் வீட்டிற்குள் போவதுமாக இருந்தார். அவர் மனதில் ஒரு பதை பதைப்பு இண்டைக்கு பெடியள் வாற நாள் வெடிச்சத்தம் வேறை கேட்டது யார் வந்தாங்களோ அவங்களிற்கு ஏதும் நடந்துதோ கடவுளே அவங்களுக்கு ஒண்டும் நடந்திருக்க கூடாது என்று மனதில் நினைத்தபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை ரதி ஒருக்கா றோட்டு வரைக்கும் போய் பார் பிள்ளை என்று மகளை சொன்னவர் பின்னர் வேண்டாம் பிறகு உன்னை தேடி நான் வர ஏலாது நானே போய் பாக்கிறன் என்றவர் வீட்டை விட்டு ஓழுங்கையால் வந்து பிரதான வீதியை எட்டிப்பார்த்தார் வீதியில் சன நடமாட்டம் இருக்கவில்லை ஏதாவது செய்தி கேட்பம் எண்டா வீதியிலையும் யாரையும் காணவில்லையென நினைத்தபடி விட்டை நோக்கி நடந்தார்.

சில நிமிடங்களின் பின்னர் வெள்ளை கைத்துப்பாக்கியை ஒருகையில் இறுக்கி பிடித்தபடி அவனது சேட்டை களற்றி அதில் கைக்குண்டை சுற்றி இடுப்பில் கட்டியபடி தாண்டி தாண்டி மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனது உடல் எங்கும் கீறல் காயங்கள் அதிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனை கண்டதும் அந்த தாயார் பதறியபடி தம்பி என்னடா அப்பவும் சத்தம் கேட்கேக்கை நான் நினைச்சனான் நீங்களா தான் இருக்குமெண்டு உனக்கு வெடிபட்டிட்டுதே என்றபடி அவனை அணைத்து பிடித்தபடி கேட்கவும் வெள்ளைக்கு மூச்சிரைத்ததில் பேச்சு வரவில்லை அப்படியே நிலத்தில் அமர்ந்தபடி கையால் தனக்கு ஒன்றுமில்லை என்று சைகை காட்டியவன் த...தண்ணி என்று தட்டுதடுமாறியபடி கேட்டான். அதற்கிடையில் மகள் ரதி தண்ணீரை கொண்டோடிவந்து கொடுக்கவும் அதை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தவன் மிகுதி தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு கொஞ்சம் அமைதியடைந்தவன் . நடந்ததை சொன்னான் அம்மா நானும் பிறேமும்(பிறேம் மானிப்பாயை சேர்ந்த போராளி இவனிற்று திக்குவாய் எனவே இவனை எல்லோரும் கொன்னை பிறேம் என்றுதான் அழைப்பார்கள்)அளவெட்டிக்கு போய் தும்பனை சந்திச்சிட்டு வந்து கொண்டிருந்னாங்கள் தொட்டிலடியிலை மெயின்றோட்டை கடக்கேக்கை ஆமிகாரன் திடீரெண்டு வந்திட்டாங்கள் எங்களை அவங்கள் மறிக்க நாங்கள் சைக்கிளை போட்டிட்டு ஒரு வீட்டு வேலியாலை பாஞ்சிட்டம். அவங்களும் சுட தொடங்கிட்டாங்கள்.

நல்ல வேளை வெடி பிடிக்கேல்லை பிறேம் வேறை பக்கத்தாலை ஓடிட்டான் அவனுக்கும் ஒண்டும் நடந்திருக்காத எண்டுதான் நினைக்கிறன். என்ரை கஸ்ரகாலம் நான் பாஞ்ச வேலி முள்முருக்கை வேலி அதுதான் மேலெல்லாம் கீறி போட்டிது என்று அந்த வேதனையும் சிரித்தபடி சொன்னான் .அவனின் பெயர் வெள்ளை என்று எல்லோரும் அழைத்ததே அவனது நிறத்தால்தான். நல்ல வெள்ளை உயரமான உறுதியான உடல். காலிலையும் என்னவோ குத்தி போட்டுது என்றபடி காலை திருப்பி பார்த்தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பொறுங்கோ அண்ணை நான் பாக்கிறன் என்றபடி ரதி அவனது காலை பார்தாள் கட்டை ஏதோ குத்தியிருக்கு பொறுங்கோ தண்ணி கொண்டவாறன் காலை கழுவிட்டு பார்ப்பம் என்றபடி தண்ணீரால் காலை சுத்தம் செய்து பார்த்தாள். ஒரு தடியொன்று ஆழமாக குத்தியிருந்தது அதை மெதுவாக எடுத்துவிட்டு அந்த காயத்திற்கு கைவசம் அவர்களிடம் இருந்த கைமருந்தாக கோப்பிதூளை வைத்து கட்டிவிட்டு சரி மேலெல்லாம் கீறியிருக்கு மேலை கழுவிட்டு வாங்கோ நான் தேத்தண்ணி போடுறன் என்றவாறு ரதி அடுப்படி பக்கம் போய்விட ஒரு சேட்டையும் சாரத்தையும் கொடுத்து அந்த தாயார் சொன்னார் தம்பி உன்ரை சாரமும் கிழிஞ்சிருக்கு இந்தா இதை மாத்து இந்த உடுப்பகளை போட இந்த வீட்டிலை இனியார் இருக்கினம் என்று அவள் தனது கணவரின் உடைகளை கொடுத்தார்.

காரணம் அந்த தாயாரின் கணவனையும் ஏற்கனவே இந்திய இராணுவம் வீதியில் வைத்து சுட்டுகொன்றுவிட்டிருந்தது.

ஒரு சோக பதிவை - எங்களுடனும் - பகிர்ந்து கொண்டதுக்கு.........

போராளிகளின் துணிவை -நினைவு கூர்ந்ததற்கு -

நன்றி அல்ல..

பெருமை கொள்கிறோம் - சாத்திரி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் வர்ணன் இந்தியபடை காலத்தில் எம்மண்ணிற்காய் மரணித்து போன பல போரராளிகளின் விபரங்கள் ஏன் அவர்களின் பெயர்கள்்கூட மாவீரர்கள் பட்டியலில்் விடுபட்டு பேபாயிருக்கிறது காரணம் அவர்கள் தனி தனியாகவே தலைமைகளுடன் தொடர்புகள் அற்ற நிலையிலும் இந்திய இராணுவம் ஏன்னும் பெரும் மலையை தகர்க்க சிறு உளிகளாய் நின்று தங்களால் முடிந்தததை செய்து முறிந்து போனதால் அவர்கள் பற்றிய விபரங்களும் பெரிய அளவில் தெரியாமலேயே போய்விட்டது எனவேதான் அந்த காலகட்டத்தில் அப்படியான போராளிகளை பற்றிய எனக்கு தெரிந்த மற்றும் மற்றையவர்களின் உதவிகளுடன் அவற்றை பதிவாக்கும் ஒரு சிறிய முயற்சிதான் இது அதை எனக்கு உதவ சில ஊடகங்களும் உதவிசெய்்ககின்றறனஅவற்றிற்க

அமைதி பேண வந்தவர்கள் பண்ணிய அட்டகாசத்தை அவ்வளவு இலகுவில மறந்து விட முடியுமா?

நன்றி சாத்திரி

நிழலாடும் நினைவுகள் மூலம் போரிளிகளை நினைவுகூர்ந்தமை கண்ணில் நீர் வரழைத்துவிட்டது. பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்போராளிகளின் சோகப்பதிவினைத் தந்த சாத்திரிக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

appg0.png

நிழலாடும் நினைவுகள்

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக

லெப் கேணல் அப்பையா அண்ணை

அப்பையா அண்ணை புலிகள் இயக்கத்தின் தலைவரிலிருந்து புதிதாய் சேர்ந்த போராளிகள் வரை அவரை அழைப்பது அப்படித்தான் இயக்கங்கள் பல ஆரம்பித்த எண்பதுகளில் இயக்க பெடியள் என்றாலே இருபதுவயது கார இளைஞர்கள் மட்டுமே என்கிற எல்லாரது எண்ணங்களையுமே மாற்றியமைத்து புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே 50 வயதான ஒரு மனிதர் இருந்தார் என்றால் அது அப்பையா அண்ணைதான்.

ஈழ பொராட்ட வரலாற்றில் ஆரம்பங்களில் இலங்கையில் எங்கு கண்ணிவெடி தாக்குதல் நடந்தாலும் மக்களிற்கு புலிகள் இயக்கம் தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் புலிகள் இயக்கத்தினரிற்கோ உடனே ஞாபக்திற்கு வருபவர் அப்பையா அண்ணை காரணம் அண்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளிற்கு எதிராக நடாத்த பட்ட அத்தனை கண்ணி வெடித்தாக்குதல்களிலும் அப்பையா அண்ணையின் பங்கு இருந்தது. 1982ம் ஆண்டு யாழ் காரைநகர் வீதியில் பொன்னாலை பாலத்தில் வைத்து புலிகளால் நடாத்தபட்ட கண்ணிவெடித்தாக்குதல் ஒன்று சரியாக வெடிக்காததால் இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த தாக்குதல் பற்றி புலனாய்வு செய்ததில் அதில் அப்பையா அண்ணையின் பங்கு இருந்ததை தெரிந்து கொண்டு அன்றிலிருந்து அவரும் அரசபடைகளால் தேடப்பட அவரும் மற்றைய போராளிகள் போல தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளபட்டார்.

ஆனால் புலிகள் மீண்டும் இன்னொரு கண்ணிவெடித்தாக்குதலிற்கு திட்டமிட்டு அதற்கான கண்ணிவெடி மற்றும் வெடிக்கவைக்கும் பொறிமுறைகளை தயாரிக்கும் பணி அப்பையா அண்ணையிடம் ஒப்படைக்கபட்டது.அப்பையா அண்ணையும் அந்த பணியை செய்துமுடித்து விட்டு மற்றைய போராளிகளிடம் அதை ஒப்படைக்கும் போது சொன்னார் சொன்னார் தம்பியவை இந்த முறை பிழைக்காது என்றார். அவர் சொன்னது போலவே அந்த தடைவை பிழைக்கவில்லை1983 ம்ஆண்டு யூலை மாதம் 23 ந் திகதி இரவு 11 மணியளவில் திருநெல்வேலி தபால்பெட்டி சந்தியடியில் இலங்கை வரலாற்றையே புரட்டிபோட்ட அந்த கண்ணி வெடி வெடித்தது.

அந்த தாக்குதலில் அப்பையா அண்ணையும் பங்களித்திருந்தார். அதன்பின்னர் கண்ணிவெடிகள் செய்வது மட்டுமின்றி வெவ்வேறு என்னென்ன வடிவங்களில் எல்லாம் வெடிபொருட்களை பயன்படுத்தி எதிரிக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து புதிது புதிதாய் ஏதாவது ஆராச்சிகளில் ஈடுபட்டு கொண்டேயிருப்பார் அது மட்டுமல்ல பல போராளிகளிற்கும் வெடிபொருட்கள் பற்றிய அறிவை ஊட்டி பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவார்.அது மட்டுமல்ல போராட்டத்தின் ஆயுதபாவனையில் புதியமுறைகளை புகுத்தவேண்டும் என்கிற ஆர்வமும் அவரிடம் இருக்கும்.

இன்று புலிகளின் இராணுவ அணியில் கிட்டு பீரங்கி படையணி குட்டிசிறி மோட்டார் என்று தனி படை பிரிவுகள் இயங்குகின்ற வேளை இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக அப்பையா அண்ணை இருந்தார் என்றாலும் மிகையாகாது. புலிகள் மோட்டார் செல்களை தயாரிக்க தொடங்கிய காலம் அப்பையா அண்ணை மானிப்பாய் பகுதிகளில் இரு ஆயுததொழிற்சாலைகளை நிறுவி கண்ணிவெடிகள் மோட்டார் ஏவும் குளாய்கள் செல்கள் என்று என்று தாயாரிப்பில் இறங்கினார். அந்த காலகட்டங்களில் குறைந்தளவு தொழில் நுட்பவசதிகளுடன் உள்ளுரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இவைகளையெல்லாம் தயாரிக்கவேண்டிய கட்டாயம்.

எனவே எங்கு பழுதடைந்த ( C.T.B ) இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துவண்டிகள் இருந்தாலும் அவற்றை கட்டியிழுத்து வந்து வெட்டி உடைத்து உருக்கி செல்லாக வடிவமைத்து கொண்டு போய் யாழ் கோட்டைபகுதியில் காவல் கடைமையில் இருக்கும் போராளிகளிடம் கொடுத்து சொல்லுவார் இண்டைக்கு யாரோ சிங்களவனுக்கு காலம் சரியில்லை தம்பி அடியடா என்பார் போராளிகளும் அதை வாங்கி செல்லை குளாயில் போட்டு பின்பக்கம் திரியை கொழுத்தி விடுவார்கள் அதுவும் அவை உள்ஊரிலேயெ குறைந்தளவு தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கபட்டிருந்ததால் சீறியபடி எழுந்து அங்கும் இங்கும் ஆடியபடிபோய் கோட்டை பகுதிக்குள் விழும் வீழ்ந்ததம் சில வினாடிகளில் வெடித்து சத்தம் கேட்கும் போராளிகளும் அப்பையா அண்ணையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து துள்ளி குதிப்பார்கள்.

சில நேரங்களில் அவை வெடிக்காமலும் போகும் ஆனாலும் சோர்ந்து போக மாட்டார் அடுத்தடைவை வெடிக்கும் என்று போராளிகளிற்கு நம்பிக்கையூட்டிவிட்டு போவார்.யாழில் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் முதன் முதலில் நடந்த கைதி பரிமாற்றம் ஒன்றின் போது அன்றைய புலிகளின் யாழ்மாவட்ட தளபதி கிட்ண்ணாவிடம் யாழ் கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கொத்தளாவளை சொன்னார் நிங்கள் அனுப்பிய அலுமினியம் கோட்டைக்குள் நிறைந்து கிடக்கிறது முடிந்தால் இரண்டு வாகனம் அனுப்புங்கள் எற்றி அனுப்பிவிடுகிறேன் அதுமட்டுமல்ல உங்கள் செல்லுங்கு பயந்து இருபத்தி நாலு மணி நேரமும் ஆமிகாரர் பாவங்கள் பங்கருக்குள்ளையே தான் வாழ்க்கை என்று சொல்லி சிரித்தார்.

ஒரு நாள் மானிப்பாய் வீதியில் தன்னுடைய 90 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு போராளியுடன் போய் கொண்டிருந்தார். அங்கு ஒரு வாகனங்கள் திருத்துமிடத்தின் முன்னால் சில இரும்பு கழிவுபொருட்கள் குவித்து வைக்கபட்டிருந்தது அப்பையா அண்ணை பின்னால் இருந்த போராளியிடம் தம்பிடேய் ஒடிப்போய் கராச்காரரிட்டை அந்த இரும்புகள் தேவையா எண்டுகேள் தேவையில்லாட்டி ஒரு பையிலை அள்ளிகொண்டுவா என்றார்.அந்த போராளியோ அண்ணை எதுக்கு அந்த கறள்பிடிச்ச இரும்புகள் பேசாமல் நடவுங்கோ என்றான் .ஆனால் அவரோ விடுவதாய் இல்லை தம்பி அதுகளை வெட்டி பண்டிக்கை ( பண்டி சாச் என்பது ஒரு கண்ணிவெடியின் பெயர்) போட்டு அடிச்சா ஆமிகாரன் உடைனை சாகாட்டிலும் பிறகு ஏற்பாக்கி வருத்தம் வந்து சாவான் என்றார்.

இப்படி தமிழீழத்தின் பகுதிகளில் கிடைத்த சிறிய ஆணிகள் கம்பிகள் இரும்புகள் என்று எல்லாவற்றையுமே எதிரிக்கு எதிராய் எப்படி திருப்பலாம் என்று சிந்தித்து செயல்பட்டவர். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் புலிகளிற்கு விமானப்படை ஒன்றை உருவாக்கும் கனவும் ஒன்று அவரிடம் இருந்தது அதற்கான தயாரிப்பு வேலைகளிலும் அவர் இறங்கி இரு விமானங்களையும் தயாரித்திருந்தார் அவையின் பரீட்சாத்தமான பறப்புகள் வெற்றியை தரவில்லை பின்னர் இந்திய படையின் வருகை அவரின் தொடர் முயற்சிக்கு முட்டுகட்டையாக அமைந்து விட்டது மட்டுமல்ல மானிப்பாயில் அமைந்திருந்த இவரது தொழிற்சாலையும் இந்திய படைகளால் தாக்கியழிக்கபட்டது. ஆனாலும் இவரது தொடர் முயற்சியின் பயனாக கிடைத்த பல கண்டுபிடிப்புகளான கண்ணி வெடிகள் கடல்கண்ணிகள் மோட்டார் செல்கள் என்று புலிகள் இயக்கத்தின் போராட்டகாலத்தில் அவைகளிற்கு பெரிதும் உதவியது.

பின்னர் 1997ம் அண்டு யெயசுக்குறு காலப்பகுதியில் அவரது தள்ளாதவயதில் மல்லாவி பகுதியில் வைத்து கடத்திகொண்டுபோய் கொலைசெய்யபட்டார். இன்று புலிகளின் படையணியினர் ஏவியதும் சீறியெழுந்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கு தவறாமல் துல்லியமாக எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஆட்லெறி செல்களை பார்க்கும் போது அன்று அப்பையாண்ணை செய்து ஏவியதும் ஆகாயத்தில் ஆடியாடி போகும் அந்த அலுமினிய செல்களையும் அதன் பின்னால் இருந்த அவரது உழைப்பையும் அவரையும் ஒரு கணம் நினைவு கூருவோம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைச் சம்பவங்கள் உயிரோட்டமுள்ளவை. அதிலும் போராளிகளின் சரிதைகள் உள்ளத்தையே உருக்குபவை. வீரமும், விவேகமும் நிறைந்த லெப்கேணல் அப்பையா அவர்களின் கதை படித்ததும் சிலநேரம் சிலையாகிவிட்டேன். சரிதம் தந்த சாத்திரிக்கும் நன்றி கூறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பையா அண்ணையின் சாதனைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அப்பையா அண்ணைக்கு வீர வணக்கங்கள்.

கொழும்பில் தமிழர் ஒருவர் தென்னிந்தியத் திரைப்படங்கள் பற்றி எழுதிய தனது ஆக்கங்களினைப் புத்தகமாக வெளிவிட்டிருந்தார். சில தமிழர்கள் சோதிடங்கள், சமயம் எனத் தங்களது ஆக்கங்களினைப் புத்தகமாக வெளியிடுகிறார்கள். மக்களும் காசு குடுத்து வாங்கிப்படிப்பார்கள். அவற்றில் விறுவிறுப்பும் இருக்காது. எதோ வாசிப்பதற்காக வாசிக்கிறார்கள்.

ஆனால் சாத்திரியின் ஆக்கங்களினை வாசிக்கும் போது , ஆக்கங்கள் விறுப்பாகவும் ஆர்வமாகவும் இருக்கும். சாத்திரி அவர்களே, நீங்கள் எழுதும் ஆக்கங்கள் புத்தகமாக வர வேண்டும் என்பது எனது விருப்பம். இதனால் போராட்டத்தில் தெரியாத பல தகவல்களினை உலகத்தின் மூலை முடுக்கில் வாழும் என்னைப்போல வாசகர்கள் அறியக்கூடியதாக இருக்கும். சாத்திரி போன்ற உறுப்பினர்கள் யாழில் வருவதினால் யாழுக்கும் பெருமை. இப்படியான உறுப்பினரின் ஆக்கங்களினை வாசிக்க உதவி செய்யும் யாழ்களத்துக்கு மிக்க நன்றிகள்.

  • 3 weeks later...

சாத்திரி அண்ணா, உங்கள் நிழலாடும் நினைவுகள் நன்றாக இருக்கு. விடுதலை பேரொளி, வேறு ஈழத்து கதை வெளியீடுகளில் பல போராளி அண்ணாமாரோட சோகம் தவழும் வீர கதைகளை வாசித்து இருக்கேன். அப்பிடி வாசித்து வாசித்து எனக்கு அதில் ஒரு தனி ஆர்வம் வந்திடுச்சு. ஆனால் இப்போது அப்படியான புத்தகங்கள் வெளிநாட்டில் கிடைக்க எனக்கு வாய்ப்புக்கள் இல்லை. ஆனல் யாழில்..நீங்கள் போட்ட இந்த கதைகள் எனக்கு வாசிக்க கவலையாக இருந்தாலும்..எமக்காக வாழ்ந்த அந்த வீரர்களோட உணர்வுகள், அவர்களோட வரலாறுகளை வாசிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அந்த வகையில் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்தும் இணையுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழுத்து வைத்து படிக்கவைப்பிக்கும் வசீகரமான வரிகளுக்கு பாராட்டுக்கள்.

கதை எழுதுதலின் தேர்ச்சி, வாசிப்பு பயணத்தை துவக்கத்தில் இருந்து முடிவுவரை கவனத்தை அபகரித்து விடுகிறது.

உங்கள் பேனா களைப்படையாமல் மேலும் களத்துக்கு பணிசெய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.

நன்றி சாத்திரி.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nillaladumninaivuch9.png

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது

இதுவும் ஒரு இந்திய படை காலத்து நினைவுகளே

1988ம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு மாலைப்பொழுது என்னை வீதியில் கண்ட நண்பனொருவன் என்னிடம் சொன்னான் டேய் உன்னை வாகீசன் தேடி வந்தவன் இவ்வளவு நேரமும் மெமோறியல் மைதானத்திலை ( மானிப்பாய் கிறின் மெமோறியல் பாடசாலை)பாத்து கொண்டுநிண்டிட்டு போட்டான் நளைக்கு பின்னேரம் மெமோறியல் மைதானத்தடிக்கு வருவானாம் கட்டாயம் தன்னை சந்திக்க சொன்னான் முக்கிய விடயமாம் என்று சொல்லிவிட்டு போ னான். அட அவனை சந்திக்க முடியவில்லையென்கிற கவலையுடன் மறுநாள் எப்படியாவது அவனை சந்தித்து விடுவது என்று நினைத்தபடி வீட்டை நோக்கி போனேன். வேலுப்பிள்ளை வாகீசன் இதுதான் அவனது சொந்தபெயர்.சண்டிலிப்பாய் கல்வளை என்னுமிடத்தை சேர்ந்தவன்.

எனது இளமைகாலத்து நண்பர்களில் இவனும் முக்கியமானவன் பழைய ஞாபகங்கள் வந்து போகும் போதெல்லாம் இவனது ஞாபகங்களும் கட்டாயம் வரும் . இவனுடன் எனது நட்பு தொடங்கியது ஒரு சுவாரசியமானது பாடசாலை காலங்களில் இளவயதில் நான் அடிதடி நாயகன்புரூஸ்லியின் தீவிர ரசிகன் புரூஸ்லியின் படங்களை பார்த்து விட்டு வீட்டில் வந்து கண்ணாடியின் முன் நின்று சேட்டை கழட்டிவிட்டு புரூஸ்லியை போலவே உடலை வழைத்து நெளித்து அபிநயம் பிடித்து பார்ப்பேன் அல்லது தலைகணியை கட்டிதூக்கி விட்டு கையாலும் காலும் அடிப்பது.

இப்பிடி என்னையும் ஒரு புரூஸ்லியாக கற்பனை பண்ணிதிரிந்த காலங்கள். ஒருநாள் புரூஸ்லியன் படம் ஒன்றை பார்த்துவிட்டு வந்த நான் (enter the tragan)என்று நினைக்கிறேன்.அந்த படத்தில் புரூஸ்லி செய்வதை போலவே வீட்டு முற்றத்தில் கை காலை ஆட்டிபடி நின்று கொண்டிருந்த நான் திடீரென புரூஸ்லி அந்த படத்தில் அந்தரத்தில் எழும்பி எதிரியை அடிக்கிற கட்டத்தை நினைத்தபடி நானும் புரூஸ்லியாக மாறி பாய்ந்து முற்றத்தில் நின்ற கதலி வாழை குட்டிக்கு சுழன்று காலால் ஒரு அடிவிட்டேன்.

வாழைக்குட்டி இரண்டாய் மடிந்து விழ நான் எனது வெற்றிகளிப்பில் துள்ளி மகிழ "அட அறிவு கெட்டவனே" என்றபடி முதுகில் ஓ;ங்கி ஒரு அடிவிழுந்தது அய்யோ அம்மா என அலறியபடி திரும்பி பார்த்தேன் எனது அக்கா என்னைப்பார்த்து அறிவிருக்காடா அந்த வாழைக்குட்டியை பக்கத்து வீட்டு பவளமக்காவிற்கு விக்க அஞ்சு ரூபாய்க்கு விலைபேசி இரண்டு ரூபாய் அற்வான்சும்(முற்பணம்) வாங்கிட்டன் அதை போய் இப்பிடி அனியாயமாய் அடிச்சு முறிச்சு போட்டியே என்று ஏதோ பங்குச்சந்தையில் பல இலட்சங்கள் நட்டமைந்தவர் போல என்னை மீண்டும் தாக்க துரத்திகொண்டு வர நானும் புரூஸ்லி கடவுளை மனதில் நினைத்தபடி ?#8220;டிப்போய் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் பாய்ந்து ஏறி தப்பிக்கொண்டேன்.

கீழே நின்றபடி அக்கா கற்களை பொறுக்கி என்னை நோக்கி எறிந்து கொண்டிருந்தார் இதையெல்லாம் கவனித்த அம்மா வந்து அக்காவை சமாதானம் செய்துவிட்டு என்னை கீழே இறக்கி என்னிடம் சொன்னார் உனக்கு கராட்டி பழக ஆசையெண்டா போய் முறைப்படி அதை பழகு சும்மா வீட்டிலை நிக்கிற வழை மரத்தை முறிக்காதை இப்பிடியெ போனால் இன்று வாழை நாளை முருங்கை மா வேம்பு இலுப்பை மரம் எண்டு எல்லாத்தையும் நீ காலாலை அடிச்சு முறிச்சு போடுவாய்( அம்மா அப்பிடி நினைச்சதற்கு சத்தியமாய் நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டன்) அதனாலை போய் முறைப்படி கராட்டியை பழகு என்று பணம் தந்து அனுப்பி விட்டார் .

80 களில் மானிப்பாய் மொமோறியல் பாடசாலையில் சனி ஞாயிறு நாள்களில் கராட்டி பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம்.சனி ஞாயிறுகளில் அங்கு பயிற்சி பெறும் பல நூறு மாணவர்கள் ஒரேயடியாக எழுப்பும் ஒலியால் அந்த பகுதியே அதிரும்.நானும் அங்கு போய் என்னை பயிற்சியில் இணைக்க பதிவு செய்து கராட்டி பயிற்சியை பழக தொடங்கிய காலங்களில்தான் அங்கு என்னை போலவே ஆரம்ப பயிற்சியில் இருந்த வாகீசனுடன் எனது நட்பும் ஆரம்பமானது. ஆரம்ப நட்பு கால போக்கில் எம்மிருவருக்குமிடையில் நல்லதொரு புரிந்தணர்வு நட்பாக மாறி இருவரும் ஒன்றாய் திரிந்தும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் சாதாரணமாய் போய் வருகின்றஅளவிற்கு பிணைந்து போனது.

நான் அவனை தேடி சண்டிலிப்பாய் போனால் அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்வளை பிள்ளையார் கோயில் தேரடியில் இருந்து அவனுடனும் வேறு நண்பர்களுடனும் மணிக்கணக்காய் பேசுவோம். அவன் என்னிடம் வந்தால் என்வீட்டில் அருகிலிருக்கும் மருதடி பிள்ளையார் தேரடி எங்கள் அரட்டை இடமாக மாறும். பொழுது போக்காய் அரட்டை திரைப்படம் நடிக நடிகையர் எங்கள் பாடசாலை நிகழ்வுகள் என்று இருக்கும் 83 கலவரத்தின் பின்னர் எங்கள் பேச்சுக்களும் நாட்டு பிரச்சனை அரசியல் என்று மாறி போனது. அது மட்டுமல்ல அந்த கால கட்டத்தில் ஆயுத போராட்ட இயக்கங்களும் ஊருக்கொன்றாய் உருவாகிய கால கட்டம் .

அனேகமான இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்கத்துடன் தொடர்புகளொ அல்லது உதவிகளோ செய்தவர்களாகவே இருந்தனர் . வாகீசனும் அப்படித்தான் ஆனால் சரியான போராட்ட இயக்கத்தை இனம்கண்டு புலிகள் இயக்கத்திற்கு அவனது கிராமத்தில் அந்த இயக்கத்தின் தேவைகளிற்கு பல உதவிகளையும் செய்தான் அது மட்டுமல்ல அன்றைய கால கட்டத்தில் லெப்.கேணல் திலீபனுடன் இணைந்து பல அரசியல் வேலை திட்டங்களையும் செய்தான்.

அதனால் அவன் புலிகள் இயக்க சார்பானவன் என்று ஊரில் அடையாள படுத்தபட்டிருந்தாலும் ஊரில் அவன் மற்றைய இயக்க காரர்களுடனும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனாலும் ஒவ்வொருநாளும் மாலை மானிப்பாய்வீதிகளில் எங்கள் இருவரையும் கட்டாயம் காணலாம். 84 களின் பின்னர் பல வேறு காரணங்களால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்ள முடியாத சூழ்நிலை ஆனாலும் எங்கள் நட்பு அப்படியே தான் இருந்தது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து கொள்வோம் முக்கியமாக எங்கள் கோவில் திருவிழா காலங்களில் நாங்கள் எங்கு எந்த பகுதியில் ஏன் எந்த நாட்டில் இருந்தாலும் கட்டாயம் திருவிழா காலத்தில் கட்டாயம் சந்தித்து கொள்வோம்.

அந்த வருடமும் அதே சித்திரை மாதம் எங்கள் ஊர் கோயில் திருவிழா நடக்க வெண்டிய மாதம் அனால் இந்தியபடை ஆக்கிரமிப்பால் அது நடக்கவில்லை அனாலும் வாகிசன் என்னை சந்திக்க வந்திருந்தான் அன்று சந்திக்கமுடியவில்லை எனவே எப்படியும் மறுநாள் அவனை எப்படியாவது சந்திப்பது என்று முடிவுடன் மறுநாள் மாலை மானிப்பாய் மெமோறியல் பாடசாலை இருக்கும் இடத்திற்கு சென்றென் அங்கு பாடசாலை மைதானத்தின் ஒரு மூலையில் இருந்த பெரியபுளியமரத்தடியில் சைக்கிளில் எனக்காக காவல் நின்றான்.

அவனை கண்டதும் போய் அவனிடம் எப்பிடியடா இருக்கிறாய் கண்டு கன காலம் ஆகிது இப்ப எங்கை பாத்தாலும் இந்தியனாமி திரியிறாங்கள் இந்த வருசம் திருவிழாவும் நடக்கேல்லை அதாலை மற்ற சினெதங்களையும் இந்த வருசம் சந்திக்க முடியெல்லை இப்ப இவ்வளவு பிரச்சனைக்கை என்னை எதுக்கு தேடிவந்தனீ என்று விசாரித்தேன். வா இதிலை கன நேரம் இருக்காமல் எங்கையாவது ஒரு ஒதுக்கு புறமா போய் நிண்டு கதைப்பம் என்றபடி வாகீசன் தொடர்ந்தான். உன்னட்டை ஒரு முக்கிய விசயம் சொல்ல வேணும் அதுதான் வந்தனான் உனக்கு தெரியும் தானே என்ரை அக்கா அண்ணா மார் எல்லாரும் வெளிநாட்டிலை தானே.

இப்ப நானும் அம்மா அப்பாவும் தான் அண்ணணன் மார் அம்மா அப்பாக்கு முதலும் ஸ்பொன்சர் அனுப்பியிருந்தவை அம்மா அப்பா என்னை தனிய இஞ்சை விட்டிட்டு போக ஏலாது எண்டு போகேல்லை ஆனால் இப்ப பிரச்சனையும் கூடிட்டுது அம்மா அப்பாக்கு ஒண்டு நடந்தா அது என்னாலை தான் எண்டு மற்ற சகோதரங்கள் எல்லாம் என்னிலை தான் குற்றம் சொல்லவினம் அதோடை இப்ப என்னையும் கனடாக்கு கூப்பிட ஒழங்கு பண்ணியிருக்கினம் அதாலை இப்ப நானும் அம்மா அப்பாவோடை கொழும்புக்கு போறதா முடிவெடுத்திருக்கிறன் இப்ப கொஞ்ச நாளா போக்கு வரத்தும் தொடங்கி கொழும்புக்கு பஸ்சும் ?#8220;டுது.

அது எப்ப நிக்குமோ தெரியாது அதுதான் உன்னட்டை சொல்லிட்டு போறதுக்கு தான் தேடி திரிஞ்சனான் எண்டான். நல்லது சந்தோசமா போட்டு வா போனதும் எங்களை மறந்திடாதை கடிதம்போடு ஆனால் கவனம் இப்ப எல்லா இந்தியனாமி சென்றியிலையும் (சோதனை நிலையம்) பழைய புளொட்காரர் நிண்டு தெரிஞ்ச ஆக்களை பிடிக்கிறாங்களாம் எதுக்கும் கவனம் என்றேன். சிரித்தபடியே சொன்னான் என்னை ஏன் பிடிக்கிறாங்கள் நான் ஆரோடை பிரச்சனை பட்டனான் என்னை பிடிக்க. ஒண்டும் நடக்காது சரி வா ஏதாவது குடிக்கலாம் என்று என்னை அழைத்தான் .

இப்ப எங்கை போய் என்னத்தை குடிக்கிறது எல்லா சந்தியிலையும் வந்து குந்திட்டாங்கள் போசாமல் இதிலை நிண்டு கதைச்சிட்டு போவம் எண்டவும் அவன் விடுவதாய் இல்லை வற்புத்தவே சரி வா சங்கு வேலி பக்கமா போவம் அங்கை ஒழுங்கைக்குள் ஒரு கடை இருக்கு அங்கை ஏதாவது குடிப்பம் என்று இருவரும் சைக்கிளை மிதித்தபடி அநத கடைக்கு போய் கதைத்து கொண்டே சில முறுக்குகளை வாங்கி சாப்பிட்டு சோடாவும் குடித்தோம் அதற்கு அவனே காசை குடுத்து விட்டு அவன் புறப்பட தயாரானான் சரியடா நான் போட்டு வாறன் என்றவன் ஏதோ யோசித்தவனாய் என்னிடம் டேய் உன்ரை சேட்டை கழட்டு என்றான் எனக்கு புரியாமல் எதுக்கடா சேட்டை கழட்ட சொல்லுறாய் என்றவும் அவன் தன்னுடைய சேட்டை கழற்றி என்னிடம் தந்து விட்டு டேய் உன்ரை சேட்டை தா உன்னுடைய ஞாபகமாய் என்னட்டை அது இருக்கட்டும் எப்பவாவது ஒரு நாள் நாங்கள் சந்திக்கேக்கை நீ என்ரை சேட்டை என்ரை ஞாபகமாய் பத்திரமாய் வைச்சிருக்கிறியா பாப்பம் ஆனால் உன்ரை சேட் என்னட்டை பத்திரமாய் இருக்கும் என்றவன் என்னுடைய சேட்டை வாங்கி போட்டு கொண்டு சரியடா எங்கையாவது எப்பவாவது சந்திப்பம் என்று கையை காட்டியபடி சென்று விட்டான்.

இரண்டு நாட்களின் பின்னர் எனக்கு வாகீசனை முருகண்டியில் வைத்து வாகீசனை பிடித்துவிட்டாகளாம் என்கிற செய்தி கிடைத்தது உடனே அவனது வீட்டிற்கு சென்றேன் அவனை கைது செய்ததும் தாயும் தந்தையும் இந்திய இராணுவத்திடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி போராடிபார்த்து விட்டு திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டனர்.அவனது தந்தையிடம் விபரம் கேட்டேன். தம்பி நாங்கள் முருகண்டிலை இறங்கி பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க போட்டம் இவன் பக்கத்திலை இருக்கிற தேதண்ணி கடைக்கை பேனவன் யாரோ இவனை தெரிஞ்ச பழைய புளொட்காரனாம் ஆமியோடை நிண்டவன் அவன் தான் இவனை கண்டிட்டு பிடிச்சு கொண்டு போனவங்கள்

நானும் அவனிட்டை கெஞ்சி பாத்தன் வேணுமெண்டா கேக்கிற காசுகூட தரலாம் எண்டும் கேட்டு பாத்தன் கடைசியா ஒரு தொகை காசும் எங்கடை ஊர் ஆமி பொறுப்பானவனின்ரை கடிதமும் வாங்கிவர சொன்னாங்கள் விடறம் எண்டிருக்கிறாங்கள் அதுதான் காசு புரட்டியாச்சு தொட்டிலடி ஆமிகாம்பிலை போய் கடிதமும் கேட்டனான் தந்திட்டான் அவனும் மகனை விட சொல்லி வயலஸ்சிலை செய்தி அனுப்பிறனெண்டான் நாளைக்கு அதுகளை கொண்டு ஊராக்களும் எல்லாரும் போறதா இருக்கிறம் எண்றார் கவலையாக.

எனக்குள் ஒரு நம்பிக்கை எப்படியும் விட்டு விடுவார்கள் அவனை ஊரிலேயெ அனைவருக்கும் பிடிக்கும் எவருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவன் அதனால் ஊர்மக்களே திரண்டு போய் அவனை விட சொல்லி கேட்கும் போது கட்டாயம் விட்டுவிடவார்கள் என்கிற நம்பிக்கையில் மறுநாள் அவர்கள் போய் வாகீசனுடன் மீண்டும் வரும்வரை நான் அந்த ஊரிலேயே தெரிந்த ஒரவர் வீட்டில் தங்கியிருந்தேன். மறுநாள் காலை இரண்டு பேரூந்து வண்டிகளில் ஊர் மக்கள் எல்லோரும் புறப்பட்டு போயிருந்தனர்.

மாலையாகியிருந்தது அவர்களின் வரவை எதிர் பார்த்தபடி அவனும் நானும் இருந்து கதைக்கும் அந்த கோயில் தேரடியில் காத்திருந்தேன். இருள தொடங்கியிருந்தது போன பேரூந்து வண்டிகள் வந்து கொண்டிருந்தன பின்னால் இன்னொரு காரும் வந்து அவர்கள் வீட்டின் முன்னால் நின்றது நான் எழுந்து அவர்களை நோக்கி போய் கொண்டிருக்கும் போதே அவர்களின் அழுகுரல்கள் எனக்கு கேட்க தொடங்கியது. வேகமாய் ?#8220;டிப்போய் பார்த்தேன் கடைசியாய் வந்த காரில் இருந்து வாகீசனை பிணமாய் இறக்கினார்கள் அவனது தலையை சுற்றி ஒரு துணியால் கட்டியிருந்தனர்.

நான் அவர்களிடம் ஏன் என்ன நடந்தது என்று கேட்டபடி துணியை விலக்கி பார்க்க முயன்றபோது ஒருவர் சொன்னார் தம்பி துணியை எடுக்காதையும் என்று சொல்லி நடந்ததை விபரித்தார்.நாங்கள் போய் காசும் கடிதமும் கொண்டந்திருக்கிறம் ஆளை விடுங்கொ எண்டு கேக்கவும் ஆள் நேற்றிரவு தப்பியோடிட்டார் எண்டாங்கள் நாங்கள் நம்பிக்கையில்லாமல் ஆமிகாரரிட்டை கெஞ்சி கொண்டிருக்கேக்கை தான் அங்கை கடை வைச்சிருக்கிற ஒரு பெடியன் சொன்னான் அண்ணை நேற்றிரவு ஒராளை கண் கட்டினபடி பின் பக்கமா காட்டு பகம் கொண்டு போனவங்கள் காட்டுக்கை போய் தேடி பாருங்கோ எண்டான் நாங்களும் காட்டுக்கை தேடேக்கை ஒரு இடத்திலை கிடங்கு கிண்டின அடையாளம் கிடந்திது தோண்டி பாத்தம் அந்த பாவியள் அவனை சித்திரவதை செய்து அவனின்ரை இரண்டு கண்ணையும் தோண்டி எடுத்திட்டு உயிர் இருக்க கூடியதாவே தாட்டிருக்கிறாங்கள் .

நாங்கள் எடுக்கேக்கை உடம்பு சூடாதான் இருந்தது அனால் உயிர் இருக்கேல்லை வாற வழியிலை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய் ஏதாவது செய்து கொண்டு வரலாம் எண்டு நினைச்சனாங்கள் ஆனால் நேரம் போட்டுது ஊரடங்கு சட்டம் தொடங்கிட்டுது அதாலை நேரை வீட்டை கொண்டத்திட்டம். வைச்சிருக்காமல் நாளைக்கே காரியங்களை பாக்க வேணும் என்று கலங்கியபடி சொன்னார்.வாகீசனது உறவினர்களின் ?#8220;லத்துடன் அவனும் அன்றைய இரவுடன் நிதந்தரமாய் உறங்கிபோனான். கால போக்கில் அவன் எனக்கு தந்த சேட்டும் எங்கோ தொலைந்து போக இன்னமும் தொலைந்து போகாத அவனது நினைவுகளுடன் அவனிற்கு அஞ்சலி செலுத்தி என் நினைவுகளை தொடருவேன் நன்றி சாத்திரி

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பாரததேசத்தினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் ஒரு கொலை. இப்படி எத்தனை எத்தனை சகோதர சகோதரிகள் ராஜீவின் படைகளினால் அனியாயமாகக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

எனக்குத் தெரிந்தவரின் நண்பர் ஒருவர் பரியோவான் கல்லூரியில் கல்விகற்றவர். 'ஈரோஸ்' இயக்கத்துடன் தொடர்பு உடையவர். ஆனால் அவர் போராளி அல்ல. கோபால் என்று எல்லோரும் அவரைக் கூப்பிடுவார்கள். இந்திய இராணுவத்தினாலும் அவர்களுடன் திரிபவர்களாலும் கடத்தப்பட்ட கோபால் மறுனாள் சித்திரவதை செய்யப்பட்டு இறந்திருந்தார். அவருடைய முகத்தில் IRON BOXனால் சுடப்பட்டு கண் இமைகள் பிடுங்கப்பட்டு கோராமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆர் வந்து எங்களை காப்பாத்த போறாங்களோ?? எண்டவர் ஏனடா தம்பியவை வேறை ஏதும் நாடுகள் எங்களுக்கு உதவி செய்யாதோ ?? என்று உலக அரசியலையே அலசும் கந்தையா அப்பாவியாக எங்களிடம் கேட்டார்.

 

 

கந்தையா அண்ணை மட்டுமல்ல  தமிழரின் பல வீடுகளில் இந்திய தலைவர்களின் படம் தான் மாட்டி இருப்பார்கள்.(இப்போ இல்லை என நினைக்கிறேன்) ஆனால் இன்று வரைக்கும் எமக்கு பின்னால் இருந்து குத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
 
நிழலாடும் நினைவுகளை தொடருங்கள் சாத்திரியார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  நிழலாடும் நினைவுகளை  மீட்டி கண் கலங்க வைத்து விட்டீர்கள்  நுணாவிலான்.  மேஜர்  டொச்சனை பற்றிய பதிவொன்று எழுதிய குறையில் இருக்கிறது  விரைவில் முடித்து விட்டு போடுகிறேன். நன்றி இறுதியாக  நண்பன்  வாகீசன் பற்றி எழுதிய பதிவில்  நாங்கள்  இருவரும் அன்றைய காலங்களில்  இருந்து கதைத்த சீரணி  அம்மன் கோயில் தேர் முட்டியின் படிகள் அண்மையில்  முக  நூலில்  பார்த்போது  அவனது நினைவுகளும் வந்து போனது.

403795_359561037416306_452605876_n.jpg

 

மற்றும் கல்வளை பிள்ளையார் கோயிலடி

 

217679_428611230511286_635275971_n.jpg

 

படங்கள் நன்றி சண்டிலிப்பாய் முக நூல்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நிழலாடும் நினைவுகள் என்னையும்  ஆட்டுவித்துவிட்டது.

சோகங்கள் இழையோடினாலும் உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலாடும் நினைவுகள் என்னையும்  ஆட்டுவித்துவிட்டது.

சோகங்கள் இழையோடினாலும் உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.

 

நன்றிகள்  யாழ்வாலி  அன்றைகாலத்தில் பாமினியில் எழுதி மாத்தியதால்  பல எழுத்துப் பிழைகள்  உள்ளது .  ஆனால்  இதையெல்லாம் அவர்களோடு  வாழ்ந்து பழகிய  நான்  எனது   நினைவுகளையும்  அவர்களது தியாகங்களையும்  எழுதாமல் பலதூரம்   விலகி போகும் அளவிற்கு இன்று  இணைய போராளிகளால் விரட்டப் பட்டுக்கொண்டிருக்கின்றேன் என்பதே உண்மை.  அவர்களும்  உண்மையான வரலாற்றை  எழுதப் போவதில்லை  அவர்களிற்கு அது  தெரியாதது.  எழுதுபவர்களையும் விடப் போவதில்லை   என்பதே உண்மை. :lol:

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.