Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்மொழிகள் எம்மை செம்மைபடுத்தும் நெறிகள்

Featured Replies

பொன்மொழிகள் இணைக்கிறேன், நீங்களும் இணையுங்கள்....

நன்றிகள் - http://www.nithus.ch/Ponmoli.htm

பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்

பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்

நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்

அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்

பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு

அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது

கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்

ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்

ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்

எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

செவிடன் இருமுறை சிரிப்பான்

ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்

பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்

பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்

தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்

பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.

அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்

அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,

காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்

செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி

தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை

மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

பழமொழியில் உமி கிடையாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்

மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்

அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின்

அடியிலுள்ள பெண் - இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக்

கொண்டே இருக்கும்

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்\

ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்

பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்

ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்

அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்

வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்

சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்

உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்

விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

________________________

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

*மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்

பிறக்கின்றன. -நபிகள் நாயகம். *

*தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய

பலவீனம். -சிம்மன்ஸ் *

-

*உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து

வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.** *

-

*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து

கொள்வது அவசியம். -அன்னை தெரசா.*

-

*எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல

செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.*

-

*மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய

சுமையாகிவிடும். -பெர்னார்ட்ஷா.*

-

*இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்

உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. -ஸ்ரீசாரதாதேவி. *

-

*மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

-சாணக்கியர். *

-

*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை

மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.*

-

*உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்

உணர்வதில்லை. -வோல்டன். *

-

*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.*

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.

- காந்திஜி

எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.

-ஹிட்ச்சாக்

உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.

-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்

நட்பு பொன்மொழிக

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது.

அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்

புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.

நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.

உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன்.

பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான்.

நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.

நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.

நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.

உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான்.

எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.

புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.

உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய்.

நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பாட்டுப் பாடும்.

தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்

எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்

சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா

செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்

வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்

தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா

அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.

அசுத்தம் செய்யாதீர்கள். நாளை நீங்கள் குடிவர உள்ள இடம்.

-ஒரு இடுகாட்டு வாக்கியம்

நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்துபோன பின், எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.

ஒரு பெண்ணின் வயதை மறந்துவிட்டு, அவள் பிறந்தநாளை மட்டும் நினைவில் வைத்திருப்பவனே புத்திசாலி.

எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்... விடிகாலையில் எழுவதைத் தவிர...

விழிப்புடனிருங்கள். உங்கள் விரலிடுக்கில் கூட வாய்ப்புகள் நழுவிப் போகும்.

உண்மையை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்.

எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.

தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.

களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.

கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

எங்களுக்கு கல்வி வேண்டாம்- எண்ணக்

கட்டுப்பாடு வேண்டாம்

வகுப்பில் கேலிவேண்டாம்

ஆசிரியர்களே பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

நீங்கள் எல்லாம் சுவரில் மற்றொரு செங்கல்தான்

அப்பா கடல் கடந்துசென்றார்

நினைவுகளை மட்டும் விட்டுச்சென்றார்

ஆல்பத்தில் ஒருபோட்டோ

வேறென்ன விட்டுச்சென்றீர் அப்பா

சுவரில் மற்றொரு செங்கல்லைத் தவிர?

எனக்கு ஆயுதம்வேண்டாம்

போதை வேண்டாம்

சுவரெழுத்து தெரிகிறது

வேறு எதும் தேவையில்லை

வேறெதுவுமே தேவையில்லை

எல்லாம் சுவரில் செங்கற்கள்தான்

++++++++++===================++++++++++++++++++++

நன்றிகள் - http://www.panithuli...e-saturday.html

சிறப்பாக வாழ்ந்து காட்டிய தத்துவ மேதைகளும் , அறிஞர்களும் தங்களின் அனுபவத்தில் உணர்ந்து எழுதி நமக்காக விட்டு சென்ற சில சிறந்தப் பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் .

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா

thoughts.jpg

எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர, ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - ‌லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்

thoasasdaughts.jpg

‌நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை. ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல‌வி அடை‌ந்தா‌ல், அதை ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்

thodasdaughts.jpg

ஒருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்

thodughts.jpg

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்

ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்

மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

-‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்

thosawsqwughts.jpg

‌நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்

thoqwerqwequghts.jpg

எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது. ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம் பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.

theweqweqweqwoughts.jpg

‌நீங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல், உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.

Edited by வந்தியதேவன்

  • தொடங்கியவர்

உண்மையான சந்தோசம் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறது. கடந்த கால சம்பவங்களிலும், நிகழ்கால கேள்விக்குறியிலும் உங்களை தொலைக்காதீர்கள். -ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வாழ்க்கை கவிதை வாசிப்போம்...வானம் அளவு யோசிப்போம்.... முயற்ச்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம். -கவிஞர் பா.விஜயன்

உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும். -இயேசுநாதர்

இனிய சொற்கள் இருக்கும்போது கடிய சொற்களை உபயோகப்படுத்துவது, கனி இருக்கும்போது காயை உண்ணுவது போன்றாகும். -திருவள்ளுவர்

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல... உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியக்) கனவு.. ஆம்! ! கனவு காணுங்கள்! -அப்துல் கலாம்

நாளை உலகை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு; உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு. -கவிஞர் கண்ணதாசன்

  • தொடங்கியவர்

சூரியனை மறைக்க முடியுமா?

சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல; நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்ய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும். -தாகூர்.

பயனில்லாத நம்பிக்கை

நமக்கு ஏராளமான சந்தேகம் தோன்றுகிறது. அதற்காக நாம் மனச்சோர்வடைய வேண்டியதில்லை. சுத்தமான கேள்விகள் நம்பிக்கையை வலிவும் வன்மையும் உடையவனாய் வைத்திருக்கும். ஐயப்பாட்டுடன் தொடங்கினாலன்றி ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதென்பது சாத்தியமில்லை. சிந்திக்காமல் மேலெழுந்தவாரியான நம்பிக்கை கொள்பவனின் நம்பிக்கையால் பயனில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருப்பவன் ரத்தமும், தண்ணீரும் சிந்தி அந்நம்பிக்கையைப் பெற்றிருக்கிறான். முள்ளும் புதரும் நிறைந்த காட்டைக் கடந்து நல்ல பாதையை அடைபவனைப் போல் சந்தேகத்திலிருந்து உண்மையை அறிய முயன்றவன். -ஹெலன் கெல்லர்.

பிச்சையெடுக்கும் பணக்காரர்கள்

சிலரிடம் நிறைய இருந்தும், இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. நிறைய இருந்தும் பிச்சையெடுக்கிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் மற்றவர்களுக்கு நான் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன். அவர்களிடம் ஒன்றும் இல்லை. என்னிடம் அனைத்தும் இருக்கிறது. அவர்கள் வாழ்வதில்லை. நான் வாழ்ந்து வருகிறேன். -சர்.எட்வர்ட் டையர்.

நிரந்தரமில்லாத வாழ்க்கை

மனித வாழ்க்கை என்பது குறுகிய காலமே இருக்கக் கூடியது. அக்காலத்தில் தர்மத்தைப் போற்றி வாழ மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். செல்வத்தைச் சேகரிப்பதிலோ இன்பத்தை நாடி அலைவதிலோ பொழுதை வீணாக்கி விடக் கூடாது. இவை எல்லாம் நிரந்தரமானவை அல்ல. நொடிப்பொழுதில் மாறிவிடக் கூடியவை. -ஸ்ரீ ரஹோத்தமச்சார்.

கட்டுப்பாடுகள் எதற்காக?

கட்டுப்பாடுகள் நமது மதத்தில் நமக்கு நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல. -பகவத் கீதை.

மனத்தைச் சுத்தமாக வை

பயனில்லாமல் எதேச்சையாக மனம் செல்வதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஒருவர், "நீ இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டால், உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே "இதை நினைத்தேன், இது என் மனத்தில் உள்ள எண்ணம்" என்று எளிதில் செல்லக்கூடியவாறு மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.- மார்க்கஸ் அவுரேலியஸ்.

அச்சம் உருவாக்கும் எண்ணங்கள்

உலகம் வீரர்களுடையது. சத்தியமான வார்த்தை. வீரனாக இரு. எப்போதும், "அச்சமில்லை!"என்று சொல்லிக் கொள். பிறருக்கும் இதைச் சொல். "அஞ்சாதீர்கள்! அச்சம் மரணம், அச்சம் பாவம், அச்சம் நரகம், அச்சம் அதர்மம், அச்சம் தீயொழுக்கம், உலகத்திலுள்ள தவறான எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்துதான் பிறந்திருக்கின்றன. -விவேகானந்தர்.

தெய்வத்தின் கருவியாக

தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக் கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், நான் பிறரைப் புரிந்து கொள்ள முயல்வேனாக. பிறர் என்னை நேசிக்கட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்ப்பேனாக. -புனித பிரான்ஸிஸ்.

http://thagavalthulikal.blogspot.com.au/2011/01/blog-post_03.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள் வந்தியத்தேவன்.

[size=4]

ஒருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்
[/size]

[size=4]இதை கொஞ்சம் மாற்றியும் பார்க்கலாம் :D[/size]

[size=1]

[size=4]ஒருவர் மீது ஒரு குற்றத்து சுமத்த வேண்டும் என்றால் அவர் புதிதாக ஒன்றையும் செய்யவில்லை எனவும் கூறி குற்றம் சுமத்தலா[/size][size=4]ம். [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள் வந்தியத்தேவன். [/size][/size]

  • தொடங்கியவர்

 சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

 

* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.
 
* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.
 
* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.
 
* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.
 
* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.
 
* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.
 
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
 
  • தொடங்கியவர்

மனிதர்கள் சுரங்கங்கள் - முஹம்மது நபி

 

உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே – ஹென்றி போர்டு

 

நீரிலேயே வாழ்ந்தாலும் மீனின் உடல் நாற்றம் போவதில்லை! – கபீர்தாஸ்

 

தூய்மையை நாடும் போராட்டத்தில் அழியினும் அழிக; ஆயிரம் முறையும் மரணத்திற்கு நல்வரவு கூறுக; தளர்வுறாதே. நல்லமுதம் பெறற்கரிதாயினும் நஞ்சுண்ணக் காரணம் உண்டா? – விவேகானந்தர்

 

மாடும் முரடு; ஓட்டுகிறவனும் வெறியனானால் வண்டிக்குத்தான் வினாசகாலம். - டாஸ்மானியப் பழமொழி

குளிர் மிகுதிதான்; கந்தல் உடைதான்; ஆனாலும் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும் – ட்ரைடன்

எண்ணங்களுக்குத் தக்கபடியே காரியங்களும் தீர்மாணிக்கப்படும். – முஹம்மது நபி (ஸல்)

 

இவ்வுலகும் இதிலுள்ள வஸ்துக்களும் விலையுயர்ந்தவைகளே; ஆனால், இங்குள்ள எல்லா வஸ்துக்களிலும் விலையுயர்ந்தாயிருப்பது குணசாலியான ஒரு பதிவிரதையே. – முஹம்மது நபி (ஸல்)

 

காதல் அற்புதங்களைச் செய்கிறது; ஆனால், பணம்தான் கலியாணத்தைச் செய்கிறது! – டாஸ்மானியப் பழமொழி

 

பதிவிரதைக்கு முழத் துணி கிடைப்பதில்லை; தாசிக்கோ, பெனாரஸ் புடவை! – கபீர் தாஸ்

 

தியாகியின் இரத்தத்தைவிட, எழுத்தாளனின் மை மேலானது. – முஹம்மது நபி (ஸல்)

 

 

மேலோர் நிலைமை கொஞ்சம் அபாயகரமானதுதான். ஏனெனில், நாம் அவர்களுக்கு சமானமாய் இல்லையே என்ற கோபத்தால், அவர்களிடம் என்ன குறை காணலாம் என்று நாம் சதா தேடிக்கொண்டே இருக்கிறோம் – கதே

 

நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்பது தவறு. இழிவான நோக்கங்களைக் கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய் கூறிக்கொண்டு சமய ஒழுக்கத்துடன் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன். - ஹெச்.எ.

தேக்

 

பலத்தில் உன்னை ஒருவன் வெல்லலாம். ஆனால், ஒப்புரவு அறிந்துச் செய்தல், அடக்கம், பொறுமை, சினங்காத்தல் இவற்றில் தோல்வி அடையாதே. – அரேலியர்

 

உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி

 

உன்னுடைய நடத்தையே உனக்குச் சன்மானத்தையும், தண்டனையையும் அஃததற்குக் ஏற்றவண்ணமாகக் கொண்டுவந்து கொடுக்கும் – முஹம்மது நபி (ஸல்)

 

பெண் கடவுளின் ஓர் ஒளிக் கதிர்; கேவலம் மனைவி மட்டுமல்ல; அவள் கர்த்தாவின் ஆத்மா! வெறும் ஜீவ ஜந்து மட்டுமல்ல. – ஜலாலுத்தீன் ரூமி

 

எது நமக்கு உகந்ததோ அதை உடனே கைக்கொள்ள வேண்டும். இல்லையேல் கைக்கு வந்ததுதான் உன் மனதிற்கு உகந்ததென்று எண்ணும்படிச் செய்துவிடுவர். காற்றோட்டமில்லாத இடத்தில் இருந்து நல்ல காற்றே கெடுதல் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. சமய உணர்ச்சி இல்லாத இடத்தில் நாஸ்திகமே சிறந்ததாகிவிடுகிறது. அறிவு இல்லாத இடத்தில் அறியாமையே வேதமாகிவிடுகிறது. – பெர்னார்ட் ஷா

 

அபூர்வ சக்தியுள்ளவர்களை பகிரங்கப்படுத்துவது வறுமை. செல்வம் அவர்களை மூடிவிடுகிறது. – ஹோரஸ்

பசி, குளிர், கஷ்டம் இவற்றால் புலவன் சாகிறான்; அழிவுகளினூடே அறிவிலி தங்கத்தைக் காண்கிறான். – ஸாஅதி

 

பண விஷயமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத் துணிவது எவ்வளவு விபரீதம்! மதாச்சாரியார் காலணா கொடுத்தால், அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம்; ஆனால் அவர் கூறும் மத விஷயத்தை ஆராயாது அப்படியே அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை! – பென்

தன்

 

சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாய் இருத்தல் அவசியம் – ரிக்டர்

 

நாளைய தினத்திற்காக இன்றே கவலைப்பட வேண்டாம். அந்தந்த நாளுக்கு அதனதன் கவலை போதாதா! – ஈசா நபி (அலை)

 

புலவர் ஆபிதீனின் பொன்மொழிகள் :

 

விதி என்பது தோல்வி; அதிர்ஷ்டம் என்பது வெற்றி

மனிதனுக்கு ஆயுள் மட்டும் சொற்பமன்று; அறிவும் அப்படியே. ஆகவேதான் முற்ற அறிந்த யாருமே இல்லை.

 

உலகத்தில் எல்லாவற்றிற்கும் அவசியமானது எது என்றால், அது அளவு ஒன்றுதான்.

 

http://abedheen.wordpress.com/2009/12/15/pulavar-abideen-ponmozhi/

 

  • கருத்துக்கள உறவுகள்

காதல் அற்புதங்களைச் செய்கிறது; ஆனால், பணம்தான் கலியாணத்தைச் செய்கிறது! – டாஸ்மானியப் பழமொழி

வந்தி, நான் நினைச்சன் இது, நம்ம ஊருப் பழமொழி என்று! :o

தொடருங்கள்.......

  • தொடங்கியவர்

பொன்மொழி (1)
—————
உங்களூக்குப் பின்னால் நின்று கூடிப் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக எண்ணிப் பாருங்களேன்! நீங்கள், அவர்களுக்கு 2 அடி முன்னால் இருக்கிறீர்கள், இல்லையா? பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.
*********************-
பொன்மொழி(2)
—————–
“முடியாதது என்று எதுவும் இல்லை.! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!…….!
*********************************************************
பொன்மொழி(3)
—————-
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்!
*********************************************************

பொன்மொழி(4)

ஒரு செயல்வீரனைப் போல சிந்தனை செய். ஒரு சிந்தனாவாதியைப் போல செய்லபடு!
*********************************************************
பொன்மொழி(5)

நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்… தொடர்ந்து முன்னேறுங்கள்!

 

http://moonramkonam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

பல ப‌ழமொழிகள், இதுவரை கேள்விப்படாத நல்ல பழமொழிகளாக உள்ளன வந்தியத்தேவன். இணைப்பிற்கு நன்றி. :rolleyes:

  • தொடங்கியவர்

1. ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை

மூடுகிறான்.

-விக்டர் ஹியூகோ.

 

2. கற்றுக் கொடுக்க முனைபவன் ஒருபோதும் கற்பதை நிறுத்தக் கூடாது.

-யாரோ.

 

3. எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.

-சாக்ரடீஸ்.

 

4. கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ

இனிப்பானது.

-அரிஸ்டாட்டில்.

 

5. இருபது வயதோ எண்பது வயதோ கற்பதை நிறுத்துபவன் வயோதிகன்; கற்றுக்கொண்டே இருப்பவனே இளமையானவன். வாழ்வின் முக்கிய குறிக்கோள் மனதை இளமையாக வைத்

திருப்பதுதான்.

-ஹென்றி ஃபோர்ட்.

 

6. செயற்கரிய செயல்களை எளிதாகச் செய்து முடிப்பவனே நல்ல ஆசிரியன்.

-ரால்ஃப் வால்டோ எமர்சன்.

 

7. தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறவன்தான் அதிகமாகக் கற்றுக்கொள்வான்.

-யாரோ.

 

8. படிக்கும்போது விளையாட்டைப் பற்றி நினைக்காதே! விளையாடும்போது படிப்பைப் பற்றி நினைக்காதே!

-செஸ்டர்ஃபீல்ட்.

 

9. என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்?

-ருட்யார்ட் கிப்ளிங்.

 

10. நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்!

-சார்ல்ஸ் கால்டன்.

 

http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article628048.ece

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நெருக்கடியின் போது நிதானத்தை கடைப்பிடிப்பது மிகப்பெரிய பலம் - யாரோ

  • தொடங்கியவர்

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை

 

குல வழக்கும் இட வழக்கும் கொஞ்சத்தில் தீராது
 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.- பொறாமை அகற்றல்.
வெற்றி வேண்டுமெனில்-2.


உழைக்கத் தெரிந்தவர்கள் மற்றவரை ஒருபோதும் புறந்தள்ளமாட்டார்கள். பொறாமைப்படமாட்டார்கள். பொறாமை அகற்றல்.
வெற்றி வேண்டுமெனில்-2.



வன்முறைக்கு முன் ஒரு அமைதி வேண்டியிருக்கிறது . அந்த அமைதியிலிருந்து தான் ஒரு வன்முறை தோன்றுகிறது.
-கிருஷ்ண அர்ஜுன்.


"சும்மா இரு " என்பது உடம்பையோ,புத்தியையோ சொன்ன விஷயமில்லை.சும்மா இருக்கச் சொன்னது மனசை.வெற்றியிலும் தோல்வியிலும் மனசை விலகி இருக்கச் சொன்ன வார்த்தையிது.
-அப்பா.


வலிமையானவர்களும் மெளனமாக இருப்பதற்கு பழக வேண்டும்.இல்லையெனில், வாழ்க்கை துயரம் சூழ்ந்ததாக ஆகிவிடும்.
-கதை கதையாம் காரணமாம்.


நண்பர்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதபோது அல்லது நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது மிக மோசமான எதிரியாக மாறிவிடுகிறார்கள்.
-வெற்றி வேண்டுமெனில்-2.


தினம் தினம் செய்யும் காரியங்களில் நேர்த்தி வேண்டுமெனில் தியானம் செய்தல் அவசியம். இப்போது சொன்னது மிகப்பெரிய வாக்கியம். அனுபவித்தாலொழிய இதன் கனம் புரியாது.
-வெற்றி வேண்டுமெனில்-2.


மூச்சை சீராக்கினால் மனம் அமைதியாகிறது. மூச்சை சீராக்குவதற்கு ஹடயோகம் உதவி செய்கிறது. அமைதியான மனதை உள்பக்கம் திருப்பினால் எதனால் மனம், புத்தி, உடம்பு இயங்குகிறது என்று உற்றுக் கவனித்தால் வேறு ஒரு விஷயம் புலப்படும்.
-வெற்றி வேண்டுமெனில்-2.


வலிமையான ஞாபக சக்தி, தெளிவான சிந்தனை, அமைதியான போக்கு இவை தியானத்தால் ஏற்படும். தியானம் செய்ய செய்ய பொறாமை அறவே போய்விடும் . மனதில் இருந்து பொறாமை போனால் போதும். அதைவிட உற்சாகமான ஒரு வாழ்க்கை எதுவுமில்லை. இது மிகப்பெரிய வரப்ரசாதம். அமிர்த குடம்.
-வெற்றி வேண்டுமெனில்-2.

 

http://balakumaaran.blogspot.com.au/2009_12_01_archive.html
 

  • 1 month later...
  • தொடங்கியவர்

கீதாசாரம்
 


  • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.



  • எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.



  • எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.



  • உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்



  • எதை நீ கொண்டு வந்தாய் ? அதை நீ இழப்பதற்கு.



  • எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு.



  • எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.



  • எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.



  • எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொவருடையதாகிறது.



  • மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.



  • இந்த மாற்றம் உலக நியதியாகும்


 

 


 

- நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்


 

- தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே மனிதன் முன்பாக வெட்கப்படு அப்பொழுதே உனக்கு விமோசம் ஆரம்பம்


 

- எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு; கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு


 

- மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.


 

- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


 

- கணவன் குடித்தால் பாதி வீடு எரியும். மனைவி குடித்தால் முழு வீடும் எரிந்து கொண்டிருக்கும்.


 

- நாக்கு கொடிய மிருகம். ஒருமுறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!


 

- எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு; கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு!


 

- மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!


 

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.


 

- மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்


 

- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல@ விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!


 

- மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது ஆனால் - முட்டாள்தனமாக செயற்படுவது!


 

- மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்து பார். ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது கடவுள் இருக்கிறான் என்பதே!


 

- வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்தால் கண் தெரிவதில்லை. இருட்டிலேயே வந்தால் கண் நன்றாகத் தெரிகிறது. துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல வகையில் வேலை செய்கிறது.


 

- பணமும், பதவியும் மோசமானவையென்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்.? அவை வரக் கூடாதவனுக்கு வருவதால்: கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதால்!


 

- தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான். ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.


 

- தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே. நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.


 

- எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ, அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு.


 

- காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு. எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.


 

- அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.


 

- பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது. உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான், நன்றி நிரம்பவருகிறது.

 http://www.kurumbasiddyweb.com/index.php?option=com_content&view=article&id=182&Itemid=87

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஒரு பறவை உயிருடனிருக்கும் போது எறும்பை சாப்பிடுகின்றது, பறவை இறந்தபோது எறும்பு தின்கின்றது. நேரமும் சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம்.

 

ஒருவரையும் குறைத்து மதிப்பிடவோ   காயப்படுத்தவோ வேண்டாம், நீ இன்று வலிமையும் அதிகாரமுள்ளவனாக இருக்கலாம், ஆனால் காலம் அதிக வலிமையுடையது.

 

ஒரு மரம் பலாயிரம் தீக்குச்சிகளை உருவாக்குகின்றது, ஒரு தீக்குச்சி காணும் பலாயிரம் மரங்களை எரிக்க.

 

நல்லதையெண்ணு நல்லவனாயிரு நல்லதையே செய்.

 

10.jpg

 

email

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பறவை உயிருடனிருக்கும் போது எறும்பை சாப்பிடுகின்றது, பறவை இறந்தபோது எறும்பு தின்கின்றது. நேரமும் சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம்.

 

ஒருவரையும் குறைத்து மதிப்பிடவோ   காயப்படுத்தவோ வேண்டாம், நீ இன்று வலிமையும் அதிகாரமுள்ளவனாக இருக்கலாம், ஆனால் காலம் அதிக வலிமையுடையது.

 

ஒரு மரம் பலாயிரம் தீக்குச்சிகளை உருவாக்குகின்றது, ஒரு தீக்குச்சி காணும் பலாயிரம் மரங்களை எரிக்க.

------

 

அருமையான பொன்மொழி வந்தியத்தேவன். :)

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 பொன் மொழிகள்
 
  1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
  2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

    3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

    4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

    5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

    6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

    7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

    8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

    9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

    10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

    11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

    12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

    13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

    14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

    15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

    16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

    17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

    18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

    19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

    20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

    21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

    22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

    23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

    24. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

    25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

    26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

    27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    28. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

    29. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

    30. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

http://thachankurichymail.blogspot.in/2012/05/30.html

  • தொடங்கியவர்

பிளேட்டோவின் பொன் மொழிகள்

 

 
"ஒரு நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவவேண்டுமாயின் அந்நாடு மிகப் பெரியதாகவோ மிகச் சிறியதாகவோ இருத்தல் கூடாது.  அந்நாடு ஓர் அளவுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.  அப்போதுதான் அந்நாட்டில் அமைதியும் மனநிறைவும் அரசோச்சுவதைக் காணலாம்."
 
"நல்ல பண்புகளைப் பெறுவதிலும் பிறர்க்குப் புகட்டுவதிலும் ஆர்வம் காட்டுவோர் தொகை பெருக வேண்டும்.  நுகர்வான்ந பிறரைத் துன்புறுத்தும் அளவிற்குத் துன்பப்படுவான்.  ஆதலால் தீய பண்புகளை வளரவிடாமல் நல்ல பண்புகளை வளர விடுதலே நல்லது."
 
"துன்பம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகும் ஒன்றுதான்.  எனவே, துன்பம் உண்டாகும்போது நாம் மன அமைதியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது.  நாம் அப்பொழுதுதான் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.  பொறுமையில்லாமலும் அமைதி இல்லாமலும், உணர்ச்சி வயப்பட்டு நடப்பதால் பெறக்கூடிய பயன் ஒன்றுமே இல்லை.  இந்த மனநிலையே இன்பம் வந்தபோதும் இருக்க வேண்டும்."
 
"பிறர் நமக்கு இழைத்த இன்னல்களுக்காக அவர்களைக் கடுமையாகத் தண்டியாமல் விடுதலும், மனிதர் இயல்பாகச் செய்யும் தவறுகளைப் பொறுப்பதும், நமக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து நன்மைகளை மட்டும் எண்ணுவதும் பெருந்தன்மையாகும்."
 

 

 

  • உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
  • வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
  • உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
  • உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
  • பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
  • நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
  • வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
  • ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
  • சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
  • உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
  • ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
  • புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.
  • புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

http://covairamanathan.blogspot.com.au/2010/12/blog-post_06.html

  • தொடங்கியவர்

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்"

சிரிப்பது போலே முகம் இருக்கும்; சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்; மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்.

பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி.
ஆனால் யோசிப்பதை எல்லாம் பேசிவிடாதே
 

-டெலானி-
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே கூறப்பட்ட பல பொன்மொழிகள் இதுவரை எனக்கு தெரியாமல்  இருந்தது, நன்றாக உள்ளது. இணைப்புக்கு நன்றிகள் வந்தியதேவன். 

 

  • தொடங்கியவர்

மேலே கூறப்பட்ட பல பொன்மொழிகள் இதுவரை எனக்கு தெரியாமல்  இருந்தது, நன்றாக உள்ளது. இணைப்புக்கு நன்றிகள் வந்தியதேவன். 

 

நன்றி சுப்பண்ணா உங்கள் வருகைக்கு

 

 

"வாழ்க்கை என்பது நீ சாகும் வரையில் அல்ல-

மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை."

"கல்யாணம் என்பது இருவரை ஒருவராகக் காண்பது.

அந்த ஒருவர் யார் என்பதைக் காண்பதே வாழ்வு."

ஒரு அறிஞர்

 

http://ladyswings.com/showthread.php?t=167&page=9

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

15976_409153392486091_1669593728_n.jpg

 



வாழ்க்கையில் ஜெயிக்க நண்பன் தேவை.
வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தேவை.
சுவாமி விவேகானந்தர்

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான்.
கடமையை செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி.
முகவரி.காம்
 

 

  • 3 months later...
  • தொடங்கியவர்

மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

* மிக மிக நல்ல நாள் - இன்று

* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

* மிகவும் வேண்டியது - பணிவு

* மிகவும் வேண்டாதது - வெறுப்பு

* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

* மிகக் கொடிய நோய் - பேராசை

* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

* கீழ்த்தரமான விடயம் - பொறாமை

* நம்பக் கூடாதது - வதந்தி

* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

* செய்யக் கூடியது - உதவி

* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

* உயர்வுக்கு வழி - உழைப்பு

* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

* பிரியக் கூடாதது - நட்பு

* மறக்கக் கூடாதது - நன்றி

 

 

என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ---- 

 
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, 
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, 
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, 
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, 
அவசியமானால் ஓய்வெடுத்து கொள். 
ஆனால் ஒருபோது மனம் தளராதே.. 
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- 
 
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட 
ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். 
---திரு. டெஸ்கார்டஸ்-- 
 
இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. 
எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். 
--புத்தர்--- 
 
அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. 
உழைக்கும் நேரம். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல 
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். 
---மாவீரன் நெப்போலியன்--- 
 
தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு. 
வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த 
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன். 
---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்--- 
 
எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே 
எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.. 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம் 
தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு 
கொண்டு வந்துவிடும். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
போலியான நண்பனாக இருப்பதைவிட 
வெளிப்படையான எதிரியாக இரு 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ? 
--ரஸ்கின்--- 
 
எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை 
ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை. 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம். 
---திரு. எட்மன்ட் பார்க்--- 
 
முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல் 
--திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா--- 
 
காதல் என்பது அரசியலைப் போல் ஒரு சூதாட்டம். 
ஏனெனில் இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் 
செய்தால்தான் வெற்றி பெற முடியும். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள், 
நீ வெறுக்கும் மனிதர்களிடம் இருக்ககூடும். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். 
யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. 
முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். 
பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும். 
--சுவாமி விவேகாந்தர்-- 
 
எல்லாரும் தன்னை சீர்திருத்துவதை விட்டு, 
உலகத்தை சீர்திருத்த விரும்புகின்றனர். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? 
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு. 
--- அண்ணல் காந்தி --- 
 
நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது. 
மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது. 
---தத்துவஞானி சாக்ரடீஸ்-- 
 
இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, 
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை. 
--தத்துவஞானி கன்பூசியஸ்--- 
 
அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனை சந்திக்கிறான். 
அதிர்ஷ்டம் இல்லாதவன் ஒரு அழகியை சந்திக்கிறான். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாது என்றாலும், 
ஒருவருக்கு உணவளி அது போதும் 
 
உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. 
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி. 
--அன்னை திரசா-- 
 
ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம். 
--திரு. வோயாஸ்--- 
 
நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும். 
--கவிஞர் ஹோமர்-- 
 
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது. 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை. 
தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு.. 
--கவிஞர் சுகி--- 
 
உழைப்பவனின் காலம் பொன் ஆகுகிறது. 
உழைக்காதவனின் பொன் காலமாகுகிறது. 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
உன்னை ஒரு கூட்டம் எப்படியாவது கீழே விழவைக்க திட்டமிடுகிறதா? 
அப்படியென்றால் சந்தோசப்படு 
நீ அவர்களை விட மேலே இருக்கிறாய். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
ஒருவன் கடவுளை நோக்கி நொண்டியடித்து செல்கிறான். 
சாத்தனை நோக்கி குதித்தொடுகிறான். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு. நிச்சயம் வருவார். 
---பைபிள்--- 
 
வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும். 
---திரு. ஹென்றி டேவிட் தேரோ---- 
 
அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள். 
-- தத்துவஞானி கன்பூசியஸ்--- 
 
உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? 
அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான். 
--திரு. டாக்டஸ்-- 
 
வாக்குறுதி முழுமதியை போன்றது.. உடனே நிறைவேற்றா விட்டால் அது நாளுக்கு நாள் தேய்ந்துவிடும். 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
உன்னால் இது முடியும் என்று சொல்கிறபோது 
அந்த செயலை செய்ய 
என்னைப் போல் ஒரு சோம்பேறியை பார்க்க முடியாது. 
உன்னால் இது முடியாது என்று சொல்கிறபோது 
என்னைப்போல் ஒரு இயந்திரத்தை பார்க்க முடியாது. 
-- நான்--- 
 
அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றை கடைபிடி. 
--பெயர் தெரியா பெரியவர்--- 
 
எல்லாம் கடைசியில் சரியாகிவிடும் 
அப்படி சரியாகவில்லை என்றால் 
அது கடைசியல்ல 
--பெயர் தெரியா பெரியவர்--- 

 

http://bsakthivel.blogspot.com.au/2013/08/18.html

Edited by வந்தியதேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.