Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply

ஜெயச்சந்திரன்

 

 

நல்ல கொப்பி கிடைக்கவில்லை. கிடைத்தால் தனி மடலில் அனுப்பி விடவும். நன்றி


நல்லா உயர்த்தி வைத்து நன்றாக பாடியிருக்கிறார் ஜெயசந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை. என்னதான் நல்ல பாடல் எண்டாலும் வயலைப் பாத்துக்கொண்டு இரசிக்க முடியாது பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இளம் வயதில், இந்தப் பாடலே என்னை இலங்கை வானொலியின் தீவிர ரசிகனாக்கியது..

திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் அற்புதமான, தேனான பாடல்..

 

xe39fo.jpg

 

கிராமத்தில் இரவின் மெல்லிய ஒளியில், பழைய பனாசோனிக் RQ-443 காசட் ரெக்கார்டரில் சேமித்து எத்தனை முறை கேட்டிருக்கிறேன்..!

 

இன்றும் தொடர்கிறது.. (through USB stick) :)

 

இப்பாடலை தமிழக வானொலிகள் ஒலிபரப்ப நான் கேட்டதே இல்லை..! Hats off to then Ceylon Tamil Radio.

 

 

"தெய்வபலம்"(1959) படத்தில், பி.பி.சீனிவாஸ் மற்றும் ஜானகி.

 

http://youtu.be/CUdVZThFu90

 

http://youtu.be/g1vT0deVXNQ

 

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்


அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்


இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...


குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்
என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..

விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ
விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ

குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம்

என் குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...

  • கருத்துக்கள உறவுகள்

old is gold.....என்பார்கள்.  அந்த வகையில் என் தாய் முனு முனுக்கும் பாடல். நல்ல மன  அமைதி தரும் பாடல்களில  இதுவம் ஒன்று. நல்ல் தாலாட்டு தரும் .    பகிர்வுக்கு நன்றி வன்னியன்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - ஒரு அருமையான பாடல். எனக்கும் நன்றாக பிடிக்கும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112771&page=53#entry957766

 

தங்கச்சுரங்கம். TMS, PS

 

 


  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை , வன்னியன்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணா, மல்லை

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: தோடி ராகம் பாடவா
பாடியவர்: கே.ஜே , சித்திரா
இசை:  சந்திரபோஸ்
படம்: மாநகர காவல்
 

 

http://youtu.be/Q7EEH9qJ3sI

வருக்கைக்கு நன்றி. மீண்டும் படம் இல்லாத பாடல் ஒன்று

 

வரச்சொல்லடி

 

http://ragasinfilmmusic.blogspot.com/2010/02/vara-solladi-paadhukaappu.html


திரைப்படம்: பிள்ளைக்கனியமுது (1958)
பாடியவர்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
இசை: கே.வி. மஹாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், E V சரோஜா
இயக்கம்: M A திருமுகம்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி நுணா, மல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கனியமுது  அருமையான பாடல், இடையில் வெட்டு விழுந்திட்டுது...!

பிள்ளைக்கனியமுது  அருமையான பாடல், இடையில் வெட்டு விழுந்திட்டுது...!

இன்னமும் இப்படி பாடல்களை வைத்திருந்து தரவேற்றுகிறார்கள்.  :D  பல நல்ல பாடல்களுக்கு சரியான பிரதிகள் கிடைக்கவில்லை.

 

கோவிந்தராஜன் சிதம்பரம் ஜெயராமனின் பாணியை பின்பற்றுகிறார் போலிருக்கு. 

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுடலை மாடன்! :D

 

உங்கள் சிந்துநதிக்கரை ஓரம், பாடலின் காணொளியை இங்கு இணைத்துள்ளேன்!

 

மீள் வரவுக்கு நன்றிகள்!

 

PBS, இனதும். PS  இனதும் மதுரக் குரலில் பிறந்து ஆடை பூட்டிவைத்த அரசியின் மேனியை, ஆழும் தென்னவனுக்குக்கூட அஞ்சாமல் சாகசகமாக தழுவிடும் பொதிகைமலைத் தென்றல்........

 

அலங்காரமான நடையொன்றுடன் வந்து அன்னம் நீரிலாடுவது போல தேவிகாவின் மஞ்சள்நீராட்டு காட்சியுடன் வரும் இந்த பாடல், தொடர்ந்து வரும்  நாகேசின் கோமாளித்தனம் அதை ரசிக்கும் மனங்களில் விட்டிருக்க வேண்டிய கலைநயத்தை உடனேயே அடித்துக்கொண்டு போய்விடுவதால் படத்தில் பலரால் சரியான அளவில் கவனிக்கப்படுவதில்லை.

 

 

 

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நடையும் நல்லாயிருக்கு, பாட்டும் நல்லாயிருக்கு! தேவிகா குளிக்கிற அந்த 'ஷவர்' அதை விட நல்லாயிருக்கு! :icon_idea:

 

நன்றிகள், மல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

PBS, இனதும். PS  இனதும் மதுரக் குரலில் பிறந்து ஆடை பூட்டிவைத்த அரசியின் மேனியை, ஆழும் தென்னவனுக்குக்கூட அஞ்சாமல் சாகசகமாக தழுவிடும் பொதிகைமலைத் தென்றல்........

 

அலங்காரமான நடையொன்றுடன் வந்து அன்னம் நீரிலாடுவது போல தேவிகாவின் மஞ்சள்நீராட்டு காட்சியுடன் வரும் இந்த பாடல், தொடர்ந்து வரும்  நாகேசின் கோமாளித்தனம் அதை ரசிக்கும் மனங்களில் விட்டிருக்க வேண்டிய கலைநயத்தை உடனேயே அடித்துக்கொண்டு போய்விடுவதால் படத்தில் பலரால் சரியான அளவில் கவனிக்கப்படுவதில்லை.

 

 

என்ன படம் என்று போடாது தேவிகாவை மட்டும் இரசித்திருக்கிறீர்கள். படத்தின் பெயரைச் சொன்னால் நாமும் பார்ப்போம் எல்லோ.

 

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கண்ணாலே பேசி பேசி
படம்:அடுத்த வீட்டு பெண்
பாடியவர்: அமரர் P.B..சிறினிவாஸ்
இசை:ஆதி நாராயண ராவ்
 
 
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
 
(கண்ணாலே)
 
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் 
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
 
 
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
 
(கண்ணாலே)
 
 
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
 
 
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
 
(கண்ணாலே)
 

வருகைக்கும், பச்சைக்கும், கருத்துக்கும், பாடலுக்கும் நன்றி.

 

மயிலின் வடிவில அமைத்திருக்கும் அழகான ஸ்பிறிங்கிளர்.

 

சுமே அக்கா:

அந்தப்பாடல் இடம் பெற்ற படம் திருவிளையாடல் .  பாண்டிய- தென்னவனாக வருவது நடிகர் முத்துராமன்.

 

 

 

இது கூலியில், பி.சுசீலா (முன்னரும் எங்கோ பதிந்த ஞாபகம். கண்டிபிடிக்க முடியவில்லை.)

 

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இது கே. எஸ் . கோபாலகிருஷ்னனின்  , குலவிளக்கு என்றபடம் மல்லை . இதில் சரோஜாதேவி கடைசியில் இறந்து போவார் , சரியான சோகப் படம்...! :)

விபரத்துக்கு நன்றி சுவி. எனக்கு படங்களைப்பறி அதிகம் தெரியாது.

 

திருமால் பெருமையில் TMS.

 

ஊர் இலேன்! காணி இல்லை!
உறவு மற்று ஒருவர் இல்லை!
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!

காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே

 

 

படிக்காத மேதை :  Dr. சீர்காழி கோவிந்தராஜன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்கள் இந்த பாடலை கேட்க இயலவில்லை..இன்று இணைய தேடலில் கிட்டியது..

என்ன கருத்தான, படிப்பினை பாடல்..!

 

இதுவும் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்தான்.. யாழ்கள உறவுகளுக்கு இணைக்கிறேன்.

 

நிச்சயம் ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் சுழலவிட வேண்டிய பாடல் இது. :)

 

 

http://youtu.be/KVVgPGTbSYc

 

                                                 
அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ..
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ...
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது ...
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது ..

 

அன்பு என்பதே தெய்வமானது...
அன்பு என்பதே இன்பமானது... 


மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது

ஏழை மீது வைத்த அன்பு கருணையானது                                                  

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருள்ளிலாதது
அருள்ளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது

                                           
பொன் படைத்த மனிதர், கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்..
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம்?

நல்ல அன்னை, தந்தை, பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம்
                                                   
அன்பு என்பதே தெய்வமானது...
அன்பு என்பதே இன்பமானது...

 

படம்:ஆசை அலைகள் (1963).
வரிகள்: கண்ணதாசன்

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.