Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழியில் விழுந்து..இதயம் நுழைந்து..மனதை தொட்டவை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகக்குட்டியாக எனக்கு பிடித்த,வாசித்த விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...ரதி அக்காவும் இதுபோல திரி ஆரம்பித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் என்று தனியான ரசனைகள்,கருத்துக்கள் இருக்கும்...எனவே எனக்கு பிடித்தவற்றையும் ஒரு திரியில் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...பயப்படாதீர்கள்..உங்களை டல்லாக்கும் வகையில் மிகப்பெரிய பந்தி பந்தியாக எல்லாம் இருக்காது..குட்டி குட்டியாக கியூட்டாக இருக்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..அனேகமானவை மொழிபெயர்ப்பாகவே இருக்கும்..எனவே பலரும் அறிந்திராதைவையாக சில இருக்கலாம்...

 

 

 

 

  • தாய் தந்தை மகள் என்று ஒரு அழகிய அளவான குட்டிக்குடும்பம்....
     
     
    ஒரு நாள் அந்த அழகிய குட்டித்தேவதையின் தந்தை குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து நிதானம் இன்றி நிலத்தில் விழுந்துவிடுகிறார்...அவளது அம்மா தன் கணவரை இழுத்து சென்று குளிப்பாட்டி சுத்தம் செய்து ஆடைமாற்றி கொண்டு வந்து கட்டிலில் கிடத்திவிடுகிறார்... 
     
    அடுத்த நாள் அந்த தந்தை தான் நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததிற்கு தனது மனைவி தன்மீது கடும் கோபத்தில் இருப்பாள் என்று பயந்தபடி கண்விழிக்கிறான்...கடவுளே எந்த சண்டையும் வரக்கூடாது என்று கடவிளிடம் பயந்த படி வேண்டிக்கொள்கிறான்...
     
    என்ன ஆச்சரியம்...தனது மேசைக்கு பக்கத்தில் "அன்புக் கணவா..! உன் காலை உணவு மேசைமேல் தயாராக இருக்கிறதெடா...எடுத்துக்கொள்ளுங்கள்..மரக்கறிகள் வாங்குவதற்காக நான் வேளைக்கே சந்தைக்கு போக வேண்டி இருக்கிறது...லவ் யூ புருசா..! என்று எழுதப்பட்ட குறிப்பைக் கண்டு ஆச்சரியப்படுகிறான்...
     
    ஆச்சரியம் தாங்க முடியால் தன் செல்லக் குட்டி மகளை அழைத்து நேற்றிரவு என்ன நடந்தது என்று கேட்கிறான்...
     
    அப்பொழுது அந்த செல்லமகள் சொன்னால்...அப்பா உங்களை நேற்று அம்மா குளிக்க வார்த்து கட்டிலுக்கு இழுத்து சென்று ஆடைகளை மாற்றி தூங்க வைத்த போது நீங்கள் பயங்கரமாக குடித்து விட்டு முற்றிலுமாக செயலிழந்து மயக்கத்தில் இருந்தீர்கள்..அப்பொழுதும் நீங்கள் "ஏய் பெண்ணே என்னை தனிய விடு...நான் திருமணமானவன் என்று கத்திக்கொண்டிருந்தீர்கள்.."
     
    (ஆங்கிலத்தில் படித்து ரசித்து மொழி பெயர்த்தேன்..)
(Always be faithful to your partner...!!)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுபேஸ் உங்கள் மனதைத் தொட்டவைகளை.............

சுவைக்க காத்திருக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A Letter from "Mom n Dad"..

 

 

  • என் அன்பு மகனே...!
     
    நான் வயதானகாலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தவறுதலாக எனது உணவுக்கோப்பையை போட்டு உடைத்துவிட்டாலோ அல்லது மேசைமேல் எனது உணவை சிந்திவிட்டாலோ நான் சிறிது சிறிதாக எனது பார்வையை இழந்துகொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டு என்மீது சத்தம்போட்டு திட்டமாட்டாய் என்று நம்புகிறேன்..வயாதானவர்கள் தன்னிரக்கம் மிக்கவர்கள்..அவர்கள் மீது நீ சத்தம்போட்டு கத்தும்போது அவர்கள் இலகுவாக மனமுடைந்து போய்விடுவார்கள் மகனே..
     
    எனது கேட்கும் திறன் குறைவடைந்து போய்க்கொண்டிருக்கும்போது நீ என்ன சொல்கிராய் என்பதை என்னால் சரியாக கேட்டு புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கும்,அப்பொழுது என்னை  நீ "செவிடி" என்று அழைக்கமாட்டாய் என்று நம்புகிறேன்...
    தயவு செய்து நீ என்ன சொன்னாய் என்பதை நினைவு படுத்தி இங்கே எழுதிக்கொள்..
     
    என்னை மன்னித்துவிடு என் மகனே..
    நான் வயதாகிக்கொண்டிருக்கிறேன்...
    எனது மூட்டுக்கள் பலகீனமடையும்போது,என்னால் வேகமாக எழுந்திருக்க முடியாமல் போகும்போது,
    நீ சிறுவனாக இருக்கையில் நான் உனக்கு நடை பழக உதவியதுபோல நான் எழுந்திருக்க பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன்..
    உடைந்து போன றெக்கோர்ட் போல திருப்பி திருப்பி ஏதாவது என்பாட்டில் புலம்பிக்கொண்டிருந்தால் தயவு செய்து என்னை பொறுத்துக்கொள்..நான் சொல்லுபவற்றை நீ எப்பொழுதும் சலிக்காமல் காது கொடுத்து கேட்பாய் என்று நம்புகிறேன்..தயவு செய்து என்னைக்கேலியோ அல்லது நான் சொல்வதைக் கேட்பதில் சலிப்போ எரிச்சலோ அடையாதே..
     
    அன்பு மகனே..நீ சிறுவனாக இருந்தபோது உனக்கு பலூன் வேண்டும் என்று நீ அடம்பிடித்தது உனக்கு நினைவிருக்கிறதா..?உனக்கு வேண்டியதை நீ அடையும் வரை நீ திரும்ப திரும்ப அதையே உன்பாட்டில் சொல்லிக்கொண்டிருந்தாய்..
     
    தயவு செய்து எனது உடலில் இருந்து வரும் மணத்தை மன்னித்துக்கொள்..முதியவர்களைப்போல் எனது உடலின் மணமிருக்கும்..தயவு செய்து என்னை குளி குளி என்று நிர்ப்பந்திக்காதே..எனது உடல் பலகீனமானது..வயதானவர்கள் இலகுவாக நோய்வாய்ப்படுகிறார்கள் அவர்கள் உடல் குளிராக இருந்தால்..இப்படிப்பட்ட மணத்துடன் நான் உன்னை கடந்து செல்லமாட்டேன் என்று நம்புகிறேன்..
     
    நீ சிறுவனாக இருந்த போது உனக்கு குளிப்பாட்ட நான் உன்னை கலைத்து திரிவேன் உனக்கு நினைவிருக்கிறதா..? உனக்கு குளிக்க பிடிக்காது..அதனால் நீ ஓடி ஒளிந்துகொள்ளுவாய்..
     
    நான் எரிச்சலடைந்து அல்லது பொறுமையிழந்து அல்லது கோபமடைந்து இருக்கும்பொதெல்லாம் என்னுடன் பொறுமையாக நீ நடந்து கொள்ளுவாய் என்று நம்புகிறேன்...இவையெல்லாம் நான் முதுமை அடைந்துகொன்டிருப்பதால்தான் மகனே..நீயும் வயதாகும்போது இதைப் புரிந்துகொள்ளுவாய்...உனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது நாங்கள் சில நிமிடங்களாவது மனம்விட்டு பேசிக்கொள்ளலாம் என்று நம்புகிறேன்..நான் எப்பொழுதும் தனிமையிலேயே எனது நேரத்தை செலவிடுகிறேன்...எனக்கு தெரியும் நீ உனது வேலையில் பிஸி என்று..எனது கதைகளில் உனக்கு ஈடுபாடு இல்லாவிட்டாலும் நான் சொல்லுபவற்றை செவி கொடுத்துக் கேட்க தயவு செய்து நேரமொதுக்கு..
     
    உனக்கு நினைவிருக்கிறதா நீ சிறுவனாக இருந்தபோது உனது கரடிப்பொம்மைபற்றிய கதைகளை நான் ஆர்வமாkaக் கேட்பேன்.. 
     
    காலம் நெருங்கும்போது நான் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் படுத்த படுக்கை ஆகிவிடுveeன்..என்னை பொறுமையாக பராமரிப்பாய் என்று நான் நம்புகிறேன்..தவறுதலாக படுக்கையை நான் ஈரமாக்கிவிட்டாலோ அல்லது குப்பையாக்கிவிட்டாலோ என்னை மன்னித்துவிடு..எனது கடைசிக்காலங்களில் என்னை நீ கவனமாகப் பார்த்துக்கொள்ளுவாய் என்Ru நம்புகிறேன்..நீண்டகாலங்களுக்கு நான் உனக்கு பாரமாக இருக்கமாட்டேன்..
    எனது மரணம் என்னை நெருங்கும்போது எனது கைகளை தாங்கிப் பிடித்து மரணத்தை சந்திப்பதற்குரிய தைரியத்தை நீ எனக்கு தருவாய் என்று நம்புகிறேன்..
     
     
    கவலைப்படாதே...
     
    இறுதியில் எம்மைப்படைத்தவனை நான் சந்திக்கும்போது உன்னை ஆசிர்வாதிக்கும்படி அவரது காதுகளில் நான் இரகசியமாக சொல்லுவேன்..Because you loved your Mom 'n Dad.
    Thank you so much for your care.
    We love you. ! ♥
(ஆங்கிலத்தில் படித்து ரசித்து மொழி பெயர்த்தேன்..)

உணர்சிப்பரவசமூட்டும் யதார்த்தம் நிறைந்த பதிவு .............உண்மையில் இந்த தந்தையின் வேண்டுதல்கள் அவர்வாயில் இருந்து வரமுதலே மகனின் உள்ளத்தில் உருவாகவேண்டிய எண்ணங்கள் ..............ஆனால் நடப்பதோ வேறு ,என் பிள்ளை என்பிள்ளை என கொஞ்சி குலாவி, பாசம்காட்டி ,தியாகம் செய்து, அத்தனை வரங்களையும் கொடுத்து ஆளாக்கி வீட்ட எத்தனை எத்தனை அன்பு மகன்கள் இறுதியில் பெற்றோரை வயோதிபமடங்களிலும், தெருக்களிலும் விடும் கொடூரமே ,இந்த நிகல்காலம் ..........................உலகம் அழியக்கூடாது ..........ஆனால் மாற்றம் தேவை .............மாறும் //...................என்ற சொல்லைத்தவிர ...............எல்லாம் மாறும் நன்றி சுபேஸ் பதிவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது சுபேஸ் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பகிர்வு. நன்றி பிள்ளைகளை சிந்திக்க வைக் க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
One of The Most Touchng Story.....
 
 
  • மிக ஆரம்பத்தில் இருந்தே அந்த பையனின் ஜாதி மற்றும் குடும்ப பிண்ணணியை சொல்லி அவனை திருமணம் செய்தால் வாழ்க்கை முழுதும் அவள் கஸ்ரப்படவேண்டும் என்று அந்த பெண்ணின் பெற்றோர் அவளது காதலை எதிர்த்துக்கொண்டிருந்தனர்...
 
அந்தப் பெண்ணிண் குடும்பத்தின் அழுத்தம் காரணமாக அந்தக் காதலர்கள் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டனர்...ஆயினும் அந்தப் பெண் அந்தப் பையனை மிக ஆழமாக நேசித்தாள்..தனது காதலைப் பற்றி அவளைப்போல் அவன் அதிகம் வார்த்தைகளில் வெளிப்படுத்தாத படியால் நீ என்னை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறாய் என்று அந்தப் பையனை அவள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தாள்..ஆயினும் அவன் அதிகம் தன் காதலைப் பற்றி அடிக்கடி வார்த்தைகளில் சொல்லிக் கொள்ளாதபடியால் அந்தப் பெண் அவன் மேல் உள்ளுக்குள் கோபத்தில் இருந்தாள்..
 
அவனைப் பொறுத்தளவில்..அவன் எப்பொழுதும் தன் காதலைப் பற்றி மெளனமாகவே இருந்தான்..
 
சிலவருடங்களின் பின்னர்..
அந்தப் பையன் தனது பட்டப் படிப்பை முடித்து மேற்படிப்பிற்காக வெளி நாடு செல்ல தீர்மானிக்கிறான்..வெளிநாடு புறப்படுவதற்கு முன் அந்தப் பெண்ணிடம் தமது திருமணத்தை பற்றி பேசினான்..
வார்த்தைகளால் உன்னைப்போல் எனக்கு எனது காதலை வெளிப்படுத்த தெரியாது..எனக்கு தெரிந்த தெல்லாம் உன்னை நேசிப்பது மட்டும்தான்..நீ சம்மதித்தால் உனது பெற்றோர் உன்னைக் காப்பாற்றுவதுபோல் உனது வாழ்வின் இனி வரப்போகும் காலம் முழுவது நான் உன்னைவைத்துகாப்பாற்றுவேன்..உனது குடும்பத்தை சமாதனப் படுத்த நான் எனது முழு சக்தியையும் செல்வழித்து அவர்களை என்னை ஏற்றுகொள்ளப் பண்ணுவேன்..
என்னை நீ திருமணம் செய்துகொள்வாயா..?
 
அந்தப்பெண்ணும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டால்..அந்தப்பையனின் உறுதிமொழிகளுடனும் நம்பிக்கை தரும் வார்த்தைகளினாலும் அந்தப் பெண்ணிண் பெற்றொரும் அவர்களின் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டனர்...
 
அவன் வெளிநாடு புறப்படு முன்னர் அவர்களது பெற்றோரால் அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது..
அந்தப் பையன் வெளிநாட்டில் தனது பட்டப் படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கையில் அந்தப் பெண்ணும் ஒரு வேலைக்கு விண்ணப்பித்து அது கிடைத்து அந்த வேலைக்கு போய்க்கொண்டிருந்தாள்.
 
அவர்கள் தங்கள் காதலை போனிலும் emailsலிலும் பரிமாறிக்கொண்டிருந்தனர்..
 
பிரிந்து வாழ்வது கடினமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்..
 
ஒரு நாள் அந்தப்பெண் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தபொது கட்டுப்பாட்டை இழந்த ஒரு காரினால் மோதப்பட்டால்..அவள் விழித்தெழுந்தபோது வைத்தியசாலை கட்டிலில் தான் படுத்திருப்பதையும் அவளின் பெற்றோர் அவள் கட்டிலின் அருகே கண்ணீருடன் நிற்பதையும் கண்டால்..
 
அவள் கடுமையாக காயப்பட்டிருப்பதை காண்கிறாள்..தனது வாயில் இருந்து வெறும் காற்றைதவிர பேச்சு வருகிறதில்லை என்பதை உணர்கிறாள்...ஆம அவள் தனது பேச்சை இழந்திருந்தாள்..
 
அவளது மூளையில் ஏற்பட்ட பலமான அடி அவளது பேச்சுத்திறனை இழப்பதற்கு காரணமாகிவிட்டது என்று வைத்தியர் கூறுகிறார்..தனது பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்கும் அவளால் பதிலுக்கு வெறும் காற்றைத்தவிர அவள் வாயால் எதையும் சொல்ல முடியவில்லை.. அவள் உடைந்து போய்விடுகிறாள்..வைத்தியாசாலையில் இருக்கும் வரைக்கும் அவளால் தனக்குள் மெளனமாக அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியலை..
 
அவளுடன் கூட இருந்ததெதெல்லாம் மெளனமான அழுகையை தவிர வேறுதும் இல்லை..
அவள் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த போது எல்லாமும் முன்னர் இருந்ததுபோலவே சாதரணமாக இருக்கின்றன ஒலிக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் இதயத்தை துளைத்த அவள் போனின் றிங் டோனை தவிர..
 
தனத்கு நடந்ததை அந்தப்பையன் அறிந்துகொள்வதையும் அவனுக்கு சுமையாக இருப்பதையும் அவள் விரும்பவில்லை..அவனுக்காக காத்திருக்க தான் விரும்பவில்லை என்று கூறி அவனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைக்கிறாள்..அந்தக் கடிதத்துடன் அவள் தமது நிச்சயதார்த்த மோதிரத்தையும் அவனுக்கு திருப்பி அனுப்பிவைக்கிறாள்..பதிலுக்கு அந்தப்பையன் மில்லியன் மில்லியன் மெயில்களும் மெசேஜ்களும் போன்கோல்களும் அனுப்பிக்கொண்டிருந்தான்...
 
அழுவதுக்கு அப்பால் அந்தப் பெண்ணுக்கு செய்யக்கூடியதாக இருந்ததெல்லாம் இன்னுமின்னும் தனக்குள் அழுது அழுது கண்ணீரில் கரைவதுதான்..
 
புது இடத்துக்கு மாறினால் தமது மகள் எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக இருப்பாள் என்று நம்பி அவளது பெற்றோர்கள் புதிய இடத்துக்கு மாற முடிவெடுக்கின்றனர்..
 
புதிய சூழலில் அந்தப்பெண்  sign மொழியைக்கற்றுக்கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறாள்..அந்தப்பையனை மறக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தனக்குதானே சொல்லிக்கொள்கிறாள்..
 
ஒரு நாள் அவளது நண்பர்கள் அவளிடம் வந்து அந்தப் பையன் வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டான் என்று சொல்கின்றனர்..அவள் அவளது நண்பர்களிடம் தனக்கு என்ன நடந்தது என்று அவனிடம் சொல்லவேண்டாம் என்று அவர்களிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்கிறாள்..அன்றிலிருந்து அந்தப் பையன் குறித்த எந்த செய்தியும் அவளுக்கு கிடைக்கவில்லை...
 
ஒருவருடம் முடிகிறது..அவளது நண்பர்கள் அவளிடம் அந்தப்பையனின் திருமண அழைப்பிதளை உள்ளே கொண்டிருந்த ஒரு கடித உறையுடன் வருகின்றனர்..அந்தப் பெண் உடைந்து போகிறாள்..
 
அந்த திருமண அழைப்பிதழை அவள் திறந்து பர்த்தபோது மணப்பெண் பெயராக அவளது பெயர் போட்டிருப்பதைகாண்கிறாள்..என்னாச்சு என்று தன் நண்பர்களிடம் கேட்க அவள் நிமிர்ந்த போது அந்தபையன் அவள் எதிரே நிற்பதை காண்கிறாள்..
 
sign மொழியயை கற்றுக்கொள்ள தான் ஒருவருடம் செலவழித்தாகவும்..உனக்கு வழங்கிய உறுதி மொழிகளை நான் மறந்துவிடவில்லை என்றும்..உனது குரலாக இருக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு என்றும் sign மொழியில் அவன் அவளிடம் சொல்கிறான்...அத்துடன் அவள் திருப்பி அனுப்பிய நிச்சயதார்த்த மோதிரத்தை அவல் கைகளில் அணிந்துவிடுகிறான்...
 
இறுதியில் அந்தப் பெண் இவ்வளவு நாட்களுக்கு பிறகு முதன் முறையாக புன்னகைத்தாள்...
 
602661_433613470019934_1318955466_n.jpg
 
 
(ஆங்கிலத்தில் படித்து ரசித்து மொழி பெயர்த்தேன்..)

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி,தமிழினி அக்கா,நிலாமதி அக்கா,ரதி அக்கா,தமிழ் சூரியன் அண்ணா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆங்கிலத்தில் படித்த எனது முதலாவது கதையின் கருவை கொண்ட கதை யாழில் ஏற்கனவே இன்னொருவரால் இணைக்கப்பட்டிரூப்பதை சற்றுமுன் தான் அவதானித்தேன்...அதை இங்கு சென்று பார்க்கலாம்... http://www.yarl.com/forum3/index.php?showtopic=105759

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்த கதையின் ஆங்கில வடிவம்...

 

There was a daughter living
with mom & dad
.
One day girls dad comes home
drunk,
and falls down on the floor…
.
Her mother pulls him
up and cleans
everything.


.
Next day when he gets up, he
expects her to be
really angry with
him… He prays
that they would
not have a fight..
.
to his surprise, he
finds a note near the table that
reads: “Honey, your breakfast is
ready on the table, I had
to leave early to buy groceries. I
love you.”
.
He asks his daughter about what
happened last night,
.
Her daughter said: When mom
pulled you
to bed and tried removing your
boots and shirt..
you were dead drunk and you
said…
“Hey lady! Leave me
alone… I’m married!”
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Merging Oceans: இரண்டு கடல்கள் சந்திக்கும் அதே நேரம் அவை ஒன்றுடன் ஒன்று கலவாமல் அவை சந்திக்கும் இடம் தெளிவாக பார்க்க கூடியதாக இருப்பது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்..
 
கீழுள்ள படம் அலாஸ்கா வளைகுடாவின் மத்தியில் இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் அவற்றால் ஒன்றுடன் ஒன்று கலக்க முடியாமல் இருக்கையில் அவை சந்திக்கும் இடங்களில் நீளத்துக்கு ஒரு கோடுபோல் நுரை எழுந்திருப்பதை காட்டுகிறது...இது தூய்மையான நீராலான உருகும் பனிப்பறைகளினது நீரைக்கொண்டிருக்கும் கடலும் உயர் செறிவான உப்பை கொண்டிருக்கும் கடலும் வேறுபட்ட அடர்த்தியை கொன்டிருப்பதனால் அவற்றினால் ஒன்றாக முடியாமையால் நிகழ்கிறது..
 
484307_389760611109952_857475720_n.jpg
 
(மொழி பெயர்த்தது)

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • வடதுருவத்தில் சூரியனின் மறைவும் சந்திரனின் உதிர்ப்பும்..

556698_388762271209786_600727260_n.jpg

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அற்புதமான Macro Photography!!
 
 
மிக மிக  close-up இல் எடுக்கப்படும் photography, macro photography என அழைக்கப்படுகிறது.... மிகச்சிறிய நீர்த்துளி ஒன்றின்மேல் உங்கள் கமரா லென்சை zoom பண்ணும்போது மிக அற்புதமான ஒளிவிலகல் விளைவு( refractive effect) கிடைக்கிறது...இது அந்த நீர்த்துளியின் பின்னால் உள்ள பொருட்களை பரந்த கோணத்தில் பார்க்க முடியும்...அப்படி எடுக்கப்பட்ட ஒரு படம்தான் கீழுள்ளது...
 
480740_390243664394980_656346822_n.jpg
 
(மொழி பெயர்த்தது)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் மூன்றுமே மனதைத் தொடுகின்றன சுபேஸ்.அருமை உங்கள் பகிர்வு. தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • மேகம்கள் சூழ்ந்திருக்கும் துபாயின் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்...  National Geographic photography போட்டியில் முதல் பரிசு வென்ற படம்...

 

430849_389841787768501_901547442_n.jpg

நன்றிகள் சுமோ அக்கா,புங்கை அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு அலைகள் ஓய்வதில்லைப் படப் பாடலை  நினைவு படுத்தியதால்  சினிமா சம்மந்மான திரி என்று நினைச்சு முன்னர் கவனிக்க இல்லை. இன்று தான் இதற்குள் வந்தேன்.அனைத்து ஆக்கங்களும்  நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சுபேஸ்.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 வயது பையன் ஒருவன் தொடருந்து ஒன்றின் கண்ணாடி யன்னலூடாக வெளி உலகைப்பார்த்து ஆச்சரியத்துடன் சத்தமிடுகிறான்...
 
அப்பா...பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அந்த மரங்களைப்பாருங்கள்..! தந்தை தன் மகனின் தலையை தடவியபடி நேசிப்புடன் புன்னகைக்கிறார்...அருகே உட்காந்திருந்த இளம் தம்பதிகள் அந்த இளைஞனின் செய்கைகளை அனுதாபத்துடன் பார்க்கின்றனர்..திடீரென்று அந்த இளைஞன் மீண்டும் ஆச்சரியத்துடன் சத்தமிடுகிறான்...அப்பா..! அந்த மேகங்களைப் பாருங்கள்..என்ன ஆச்சரியம்..அவை எங்களுடன் சேர்ந்து ஓடி வருகின்றனவே...இதற்குமேலும் அந்த இளம்தம்பதிகளால் பொறுக முடியவில்லை..ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல வைத்தியரிடம் அழைத்துச் செல்லக்கூடாது என்று அந்த இளைஞனின் தந்தையை நோக்கி கேட்கின்றனர்...அந்த வயதான தந்தை மெல்லிதாக புன்னகைத்தபடி சொல்கிறார்...நான் நீங்கள் சொல்லியது போல் அவனை வைத்தியரிடம் அழைத்துச்சென்றேன்..தற்பொழுதுதான் அங்கிருந்து வந்துகொண்டிருக்கிறோம்...எனது மகன் பிறப்பிலேயே பார்வை அற்றவன்..இப்பொழுதுதான் அவனுக்கு இறந்த ஒருவரின் கண்கள் கிடைத்து பார்வை கிடைத்திருக்கிறது என்று....அந்த இளம்தம்பதிகளின் கண்கள் இப்பொழுது கண்ணீரால் பேசிக்கொண்டிருந்தன...
 
இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பல கதைகளை வைத்திருப்பான்...
ஒருவரைப்பற்றி முழுமையாக தெரிய முன்னர் கற்பனையில் அவர்களைப்பற்றி எடைபோடாதீர்கள்..ஏனேனில் உண்மையை அறியும்போது அது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகவோ அல்லது ஆச்சரியமாகவோ இருக்கலாம்.. 
யாரைப்பற்றியும் ஏளனமான வார்த்தைகள் எதையும் உதிர்க்க முன்னர் ஒரு தடவை சிந்தியுங்கள்..
 
(மொழி பெயர்த்தது)
 
 
 
 
 

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி அக்கா..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறு - கி.மு 14 பில். - கி. மு. 1


கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

 

 கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிசு) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

கி. மு. 750


பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோசுடிரேணியிசம் பெர்சியாவில் சொரோசுடரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமசுகிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமசுகிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகவீரர் காலம். செயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிசு) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியசு காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீசு புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீசு மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

 

கி. மு. 350 - 328


உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன்
வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Every girl is going to love a guy who will never love them back and as she sits there crying because he will never want her, she doesn't realize that across town there's a boy thinking of her. A boy who would give anything to see her smile, make her laugh, or kiss her in the rain. A boy who would never make her cry because he doesn't want her. But she will forever be chasing the boy who will never love her, instead of giving her heart to the one who deserves it ... 

Why Every Girl Loves A Wrong Guy ?

Angle, your friends told me that you have cried,
Love has hurt you so you have not slept last night!
I wonder that how someone can break your heart,
You deserve to be taken care and loved!!

Princess, why have you chosen the wrong one?
A person for whom you are just an option!
Why your heart failed to understand my love,
I would have given you all the happiness of this world!!

Dear, For You I may be ugly, I may be bad,
but trust me I love you like Mad!
I know your heart belongs to someone else,
But even he cannot love you the way I can !!

Sweetheart, I am a lover and not a thief,
But still I have decided to steal your heart!
I will make you smile and kiss you in the rain.
And I will thus redefine the meaning of “Love”

Once a good guy asked a question from god,
“Why every girl loves a Wrong Guy?”
God answered what if a wrong person makes her cry,
I always send the right one to remove tears from her eyes.

 

382016_444172598964021_848449011_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுக் கணக்குகளை யாரும் எப்படியும் எழுதலாம் சுபேஸ். ஆனால் அது ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளப் படவேண்டும். யாரோ எதிலோ போட்டார்கள் என்று நீங்களும் தூக்கிப் போடுவது தவறு. ஆதாரமற்ற தரவுகள் தவறான மனப் பதிவை மக்களுக்கு உண்டாக்கி மேற்கொண்டு சிந்திக்க விடாது செய்துவிடும்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சில சம்பவங்களை நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், கண்ணெதிரே பிரமாண்டமாய் நிகழும்போது நம்பத்தான் வேண்டியிருக்கிறது.
நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்த வெற்றியாளரின் மாதச் சம்பளம் நானூறு ரூபாய். இன்று அவரது வருமானம் ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய். இந்தக் கோடிகளைவிட பிரமிப்பு தருவது, அந்தக் கோடிகளை அவர்கள் சம்பாதித்த விதம். ஆமை, முயல் ரேஸில் ஆமையாய் துவங்கி தயாரித்து மிகச் செல்வாக்கான எதிரிகளுடன் மோதி அவர்களை நடுங்க வைத்து வெற்றி கண்டவர்.
கர்சன்பாய் பட்டேல். இப்படி அவரது பெயரைச் சொல்வதைவிட, நிர்மா வாஷிங் பவுடரின் உரிமையாளர் என்று சொன்னால், இந்தியா முழுவதும் பளிச்சென்று தெரிந்துவிடும்.
அஹமதாபாத்தில் ஒரு அரசு நிறுவனத்தில் கெமிஸ்ட்டாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் கர்சன்பாய். நானூறு ரூபாய் சம்பளம். நாள் முழுவதும் ஒரு மங்கலான அறையில் பணி. வாங்கும் சம்பளம் குடும்பம் நடத்தப் போதவில்லை. வேலை பார்த்துக்கொண்டே சுயதொழிலிலும் ஈடுபடலாம் என்று நினைத்தார் கர்சன்பாய். வேதியியல் படித்திருந்ததால் ரசாயனப் பொருட்களைப் பற்றிய விஷயங்கள் தெரியும். அவற்றைக் கொண்டு சோப்பு பவுடரைத் தயாரிக்கத் தெரியும். கடையில் சோப்பு பவுடர் வாங்கினால் செலவுதானே என்று, தானே குறைந்த செலவில் தயாரித்து விடுவார். இந்த ஐடியாவை சற்றே பெரிதாக்கி குடும்பச் செலவுக்கு கூடுதல் பணம் சம்பாதிக்க நினைத்தார். வீட்டிலேயே சோப்பு பவுடரைத் தயாரித்து பக்கத்து வீடுகள், தெரிந்தவர் வீடுகளுக்கு விற்கத் துவங்கினார். தரம் அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்ததால் பலர் கர்சன்பாயின் சோப்பு பவுடரை வாங்கினார்கள். பண வரவு அதிகரித்தது. குடும்பச் செலவுகளுக்குத் தேவையானதைவிட அதிகமாகவே பணம் கிடைத்தது.
பக்கத்து வீடுகள், பக்கத்து தெருக்கள் என்று சோப்பு பவுடரை விற்றுக் கொண்டிருந்த கர்சன்பாய் மெல்ல எல்லைகளை விரிவுபடுத்தினார். அவர் இருந்த பகுதி முழுக்க  தனது சைக்கிளில் சோப்பு பவுடரை எடுத்துக்கொண்டு போய் விற்றார். பிறகு அதற்கு நிர்மா என்று பெயரிட்டு கடைகள் மூலம் விற்கத் துவங்கினார். ஒரு கட்டத்தில் அகமதாபாத் நகரம் முழுவதும் நிர்மா சோப்பு பவுடர் பரவியது. அப்போதுதான் பெரிய சோப்பு கம்பெனிகள் விழித்துக் கொண்டன. தங்களின் விற்பனையில் ஒரு பகுதியை ஒரு கொசு சைஸ் நிறுவனம் பங்கு போட்டுக்கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. கொசுதானே நசுக்கிவிடலாம் என்று நினைத்தன. அதற்கான பலவித முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் கொசுவை விரட்ட இயலவில்லை. இன்று பதினைந்தாயிரம் ஊழியர்களுடன்  அது பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறது.
இந்த வெற்றிக்கு ஒரே ஒரு காரணம்தான். எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமை. எதிர்ப்பு எத்தனை பெரிய இடத்திலிருந்து எத்தனை பெரிய வடிவில் வந்தாலும் கலங்காமல், சுருங்காமல் போராடி வென்றது. வீட்டுக்குத் தேவையான பணம்தான் வந்துவிட்டதே என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே கர்சன் பாய் முடங்கிக் கிடந்திருக்கலாம். பெரிய கம்பெனிகள் மோதலுக்குத் தயாரானபோது, `எதற்கு வம்பு, இதுபோதும்' என்று சுருண்டு ஒதுங்கியிருக்கலாம். அப்படி கர்சன்பாய் செய்திருந்தால், அவரைப் பற்றி இன்று நாம் எழுதி, படித்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கமாட்டோம். கர்சன்பாயின் வெற்றி மந்திரம் எதிர்ப்புகளைக் கண்டு தயங்காததுதான்..

Edited by சுபேஸ்

முதலாவது கதை இறுதியில் சிரிக்க வைத்தது 

                                                                                               நன்றி,
கடிதக்கதை, சிந்திக்க வைத்தது. என் அம்மாவை இன்னும் கொஞ்சம் பொறுமையுடன், இன்னும் கொஞ்சம் கவனத்துடன், இன்னும் கொஞ்சம் குழந்தை போல் இந்த நிமிடத்திலிருந்து பார்த்துக்கொள் என்று என் மனதிற்குச் சொல்ல வைத்தது.
                                                                                                மிக, மிக, மிக, மிக, ............நன்றி 
 
உங்கள் ஒவொரு கதைக்கும்/பதிவுக்கும் சிறு தலைப்பு இட்டால், விமர்சனம்/கருத்து எழுத சுலபம் :) .
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கதை இறுதியில் சிரிக்க வைத்தது 

                                                                                               நன்றி,
கடிதக்கதை, சிந்திக்க வைத்தது. என் அம்மாவை இன்னும் கொஞ்சம் பொறுமையுடன், இன்னும் கொஞ்சம் கவனத்துடன், இன்னும் கொஞ்சம் குழந்தை போல் இந்த நிமிடத்திலிருந்து பார்த்துக்கொள் என்று என் மனதிற்குச் சொல்ல வைத்தது.
                                                                                                மிக, மிக, மிக, மிக, ............நன்றி 
 
உங்கள் ஒவொரு கதைக்கும்/பதிவுக்கும் சிறு தலைப்பு இட்டால், விமர்சனம்/கருத்து எழுத சுலபம் :) .

நன்றி நீதிமதி அக்கா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.