Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிக்கட்டில் பயணம் செய்தால் பள்ளியிலிருந்து 'டிஸ்மிஸ்': தமிழக அரசு அதிரடி"

Featured Replies

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.


இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.


அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

 

பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரசாரம் செய்யப்படும்.


படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இதுபற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

 

மாணவர்கள் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் படித்து பார்த்தனர். பிறகு தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. இந்த விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தினால் 90 சதவீத விபத்துக்களை தடுக்கலாம்" என்று கூறி விசாரணையை ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

http://tamil.oneindia.in/news/2012/12/12/tamilnadu-school-students-who-travel-footboar-166184.html



10378_229108057221336_417599453_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தொகைக்கு... ஏற்ப, பேரூந்தின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும். காலை எட்டு மணிக்கு பாடசாலைக்கும், அலுவலங்களுக்கும் செல்பவர்கள்.... ஒரே நேரத்தில், அவ‌ற்றைப் பயன் படுத்தும் போது... இட நெருக்கடி ஏற்படுவது இயல்பே... பேரூந்தினுள் இருக்க, இடம் இருந்தால்... அவர்கள் ஏன்... படிக்கட்டில் பயணம் செய்கிறார்கள். பேரூந்துகளின் படிகளில், கதவைப் பூட்டினாலும் நல்லது. அதனை அரசு செய்யாமல், மாணவர்களைப் பாடசாலையிலிருந்து நீக்குவது சரியல்ல.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ELARGE_20121211001628.jpeg

ராஜீவ்காந்திசாலையில் நேற்று நடந்த சாலைவிபத்தில் பலியான மாணவர்களின் உறவினர்கள்

மற்றும் நண்பர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய செய்தது

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தொகைக்கு... ஏற்ப, பேரூந்தின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும். காலை எட்டு மணிக்கு பாடசாலைக்கும், அலுவலங்களுக்கும் செல்பவர்கள்.... ஒரே நேரத்தில், அவ‌ற்றைப் பயன் படுத்தும் போது... இட நெருக்கடி ஏற்படுவது இயல்பே... பேரூந்தினுள் இருக்க, இடம் இருந்தால்... அவர்கள் ஏன்... படிக்கட்டில் பயணம் செய்கிறார்கள். பேரூந்துகளின் படிகளில், கதவைப் பூட்டினாலும் நல்லது. அதனை அரசு செய்யாமல், மாணவர்களைப் பாடசாலையிலிருந்து நீக்குவது சரியல்ல.

 

பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மாநகரப் போக்குவரத்து கழகம் அதிக பேருந்துகளை இயக்கினாலும், மாணவ்ர்கள் திருந்தப் போவதில்லை.

 

மீசை அரும்பினால் இங்கே ஒவ்வொருத்தரும் ஹீரோக்கள் தான், மற்ற பயணிகள் முன்னால் - அதிலும் குறிப்பாக, பெண்களின் முன்னால்...!

 

வேண்டுமென்றே குழுவாக பேருந்தில் நெரிசலோடு ஏறவேண்டியது, சாகசம் செய்யவேண்டியது...தவறி இப்படி சாக வேண்டியது...சட்டங்கள் கடுமையாக்கப் படாதவரை இது தொடர் கதைதான்...

 

நெரிசலிருக்குமென தெரிந்தால், மாணவர்கள் பொறுப்புடன் வீட்டைவிட்டு முன்னதாக கல்லூரிக்கு கிளம்ப வேண்டியதுதானே?

  • தொடங்கியவர்

பேருந்துகளும் விபத்துகளும் : தனியார்மயம்தான் தீர்வா?

 

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், என்ற பெயரிலான நடவடிக்கைகள் உலகளவில் பல நாடுகளில் அழிவையும், மக்களுக்கு பெரும் துன்பத்தையும்தான் தந்துள்ளது என்பது வரலாறு. தற்போது “இந்தியா விற்பனைக்கு” என கூவி விற்கும் சூழலில் இது போன்ற தனியார்மய மோக கருத்துக்கள் எழுவது சகஜமே. உணவு, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து ஆகியவை மனிதனின் அத்தியாவசிய தேவைகள். அவற்றை செய்து கொடுப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை விடுத்து தனியார் ஆதிக்கம் உள்ள சிலவற்றை ஒப்பிட்டு, போக்குவரத்து சேவையிலிருந்து அரசாங்கம் முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் தமது தலையில் தாமே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகிவிடும்.

 

அந்த கட்டுரை குதிரைக்கு சேணம் கட்டியது போல் வாசகர்களை ஒரு பக்கத்தை நோக்கிய பார்வைக்கு இட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதற்கான எனது கருத்துக்களை பதிவதற்கு முன்பாக, 1972ல் பேருந்துகள் தேசியமயமாக்கப் பட்டவுடன், சில தனியார் முதலாளிகள் அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் நெடிய தீர்ப்பொன்றை அளித்தது, அதிலுள்ள நீதியரசர்களின் வாக்கியங்கள் சிலவற்றை இங்கே அப்படியே தந்துவிட்டு கட்டுரையை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

 

தனியார் என்றால் லாப நோக்கம் தவிர வேறெதுவும் இருக்காது என்பதை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்த உச்ச நீதிமன்றம் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளது. அப்படி உச்ச நீதிமன்றத்தால் உச்சி முகர்ந்து தூக்கிப்பிடிக்கப்பட்ட தேசியமயத்தால்தான் சில நூறு பேருந்துகளுடன் நான்கு போக்குவரத்துக் கழகங்களாக உருவானது (முந்தைய கட்டுரையாளர் சொல்லும் ஊழலுக்கு மத்தியிலும்) இன்று ஆல விருட்சமாய் வளர்ந்து 8 போக்குவரத்துக் கழகங்கள், 21 மண்டலங்கள், 21000 பேருந்துகள், 360க்கும் மேற்பட்ட பணிமனைகள், 1,50,000 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிற தொழிலாக, தினமும் 2 கோடி பயணிகளைச் சுமந்து செல்கிற தொழிலாக வளர்ந்து நிற்கிறது. கேரளாவில் பேருந்து கட்டண உயர்வை அவ்வப்போது தனியார்கள்தான் போராட்டம் நடத்தி நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அரசுப் பேருந்துகள் பெரும்பான்மையாக இயங்கும் தமிழகத்தில்தான் இன்று அனைத்து மாவட்டத்திலிருந்தும் எந்த ஊருக்கும் செல்ல கடைசி பேருந்து- முதல் பேருந்து என்ற நேர அட்டவணையின்றி 24 மணிநேர சுழற்சியில் இயங்கிவருகிறது.

 

தொடர்ந்து வாசிக்க: http://www.tamilpaper.net/?p=7204

  • தொடங்கியவர்

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

 

 

bus1.jpg?w=510

 

 

 

 

கடந்த திங்கள்கிழமை சென்னை பெருங்குடி அருகே நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் துயரமான சம்பவத்தின் அதிர்ச்சிக் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.

 

 

 

இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

நேற்று (12-12-12) தமிழக அரசின் விளக்கத்திற்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:

 

பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது.

 

தொடர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

இது உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 

சீயோன் பள்ளி வாகனத்திலிருந்த ஓட்டையின் வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்போது, நீதி மன்றம் தானாகவே முன்வந்து பல  முக்கியமான உத்தரவுகளையும்  ஆலோசனைகளையும் தந்தது.

 

ஆனால், பெருங்குடி சம்பவத்தில், அரசும் நீதி மன்றமும் மாணவர்களையே குற்றவாளிகளாகக் காட்டியிருக்கின்றன.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகமான அளவில் அரசு பஸ்களில் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மிகப் பெறும்பாலும் நடுத்தர வர்க்கம் அதற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள். குறி்ப்பாக தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்.

 

ஒவ்வொரு பள்ளியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களின் வீட்டிற்கு அருகே பள்ளிகள் இல்லாததால், 5 கிலோ மீட்டரிலிருந்து 15 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் கூட்டம் கூடுதலாகிறது.

 

படிக்கட்டுகளில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்பதைத் தாண்டி, பஸ்சின் உள்ளே நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, வேர்வை நாற்றத்தில் பயணிப்பதை விட காற்றோட்டமாக படிக்கட்டில் தொங்குவது எவ்வளவோ மேல் என்பதினாலும் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.

 

உண்மையில் பிரச்சினையின் அடிப்படை, பள்ளிக்கூட நேரங்களில் தேவையான அளவிற்கு பேருந்துகள் இல்லாததுதான்.

 

அதிகமான கூட்டம் காரணமாகவே, மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

அதன் காரணமாகவே, மாணவர்களுக்கும் பஸ் கண்டைக்டர், டிரைவர்களுக்குமிடையே ஒர் நல்லுறுவு இல்லாமல் போனது.

இதற்கு நிரந்தர தீர்வு, மாணவர்கள் தங்கள் வீட்டருகே உள்ள பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு முதலில் தரமான அரசுப் பள்ளிக்கூடங்களை கூடுதலாக திறக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற, அரசு பள்ளிகளை, நல்லத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

 

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு, பள்ளிக்கூட நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்குவது முக்கியமானது.

மாணவர்கள் நெரிசலில் சிக்கி செத்தாலும் கூடுதலாக பஸ் இயக்குவதில்லை. அதற்கு நேர் எதிராக நெரிசலைத் தவிர்க்க, ஏ.சி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

 

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கிக் கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு என்று தனியாக பஸ்கள் இயக்குகின்றன.

அதுபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த அந்த பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். இப்போது உள்ளது போலவே மற்ற பஸ்களிலும் பயணிக்கும் இலவச பாஸ் உரிமையும் இத்துடன் இருக்கவேண்டும்.

 

மிக முக்கியமாக பஸ்சில் உள்ள இருக்கை அமைப்பு முறையை மாற்றியமைக்க வேண்டியது அதைவிட கூடுதல் முக்கியத்தும் வாய்ந்தது.

 

ஆம், பஸ்சில் பெண்களின் இருக்கைகள், இரண்டு படிக்கட்டுகளை ஒட்டியே இருக்கின்றன.

 

பஸ்சில் பயணம் செய்யும் இளம் பெண்களை, மாணவிகளை தங்கள்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பல்வேறு சாகசங்களை செய்கின்றனர். இருக்கை அமைப்பு முறை, மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்குவதற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

 

அதனால், பெண்களின் இருக்கைகளை பஸ்சின் வலது புறம் மாற்றுவது இன்றே  செய்ய வேண்டிய மிக முக்கியமானது.

 

அதன் மூலம் மிக அதிக அளவிலான மாணவர்கள் பஸ்சின் உள்ளே சென்று பயணிப்பார்கள். பெண்களுக்கும் கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.

 

பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்க முடியாத ஆண்கள், பஸ்சின் உள்ளே பயணிக்கும்போது, பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் பக்கம் திரும்பி நின்று கொண்டுதான் வருவார்கள். வயதான ஆண்களே அப்படி என்றால், இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்? அதனாலேயும் அவர்கள் படிக்கட்டுகளில் தொங்குகிறார்கள்.

 

ஆகவே, பெண்களின் இருக்கைகளை உடனடியாக பஸ்சின் வலது புறம் மாற்ற வேண்டும். அது படிக்கட்டு பயணங்களை தவிர்க்கும். பரிதாப மரணங்களை தடுக்கும்.

 

போக்குவரத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சண்டைகள் குறைந்து, நல்லுறவை வளர்க்கும்.

 

நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இவைகளை உறுதி செய்யும் என்று நம்புவோமாக.

 

http://mathimaran.wordpress.com/2012/12/13/591/

Edited by akootha

உண்மையில் வருத்தப்படவேண்டிய பெரும்   விடயம் ................எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தால் ...நாம் இந்த அந்நிய வசதியான  நாடுகளில் இருந்து கொண்டு இவற்றை விமர்சிப்பது எவ்வளவுதூரம் சரி என்று என்னால் சிந்திக்கமுடியவில்லை என்றாலும் .மனம் உறுத்துகிறது .உண்மையில் இந்த முக்கியமான போக்குவரத்து தேவை என்பது இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் தேவை.....பொருளாதாராதாரசிக்கல்களால் பெரும்பான்மையானோர் பேருந்து ,தொடரூந்து போன்றவற்றிலேயே தங்கி இருக்க வேண்டிய ஓர் நிலைமை ....................பாதுகாப்பான போக்குவரத்துத்துறை அவசியம் .............ஆனால் சினிமாக்களுக்கும்,வீணான பொழுதுபோக்குகளுக்கும் அள்ளி அள்ளி வீசியெறியும் பணத்தை இப்படியான முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்தினால் பல உயிரழிவுகளை தடுக்கலாம்.

  • தொடங்கியவர்

இவர்கள் என் நினைவில் வந்தனர் .....

 

 

 



5.jpg

இவர்கள் என் நினைவில் வந்தனர் .....

 

 

 

5.jpg

 

உண்மை அகூதா கண்கள் முன் இன்னும் அழியாத நினைவுகளாய் ,பிம்பங்களாய் காட்சியளிக்கிறது ............எதிர்கால தமிழீழத்தின் நினைவுகளாய் ,இந்த உண்மைகள்  இதயத்தை கொள்ளை கொள்கிறது ...........உண்மையில் இந்த கட்டுமான ,உன்னதமான நிர்வாக சேவைக்கு முன்னால் ..................சொல்ல வார்த்தைகள் இல்லை ................இதுதான் தமிழன் ,இதுதான் அவர்கள் பிரதிநிதித்துவம் ,இததான் எதிர்கால தமிழீழம் என்னும் சொர்க்கத்தின் அறிகுறிகள் .

 

நினைவுபடுத்தியமைக்கும், இணைப்புக்கும் நன்றிகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சட்டம் முன்னரே வந்திருந்தால் நானும் விழுந்திருக்க மாட்டன்.. :rolleyes:

பஸ்சில் பயணங்களில்:

"வாடிக்கை மறந்ததும் ஏனோ? என்னை வாட்டிட ஆசை தானோ - பல
கோடி மலர் அழகை மூடி வைத்து மனதைக் கொள்ளையடிப்பதும் ஏனோ?
வாடிக்கை மறந்ததும் ஏனோ.....

.........................................................

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்
அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால் அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? பல உயிர்கள் மகிழவதும் ஏது? -
நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வை தனித்துப் பெற முடியாது."

 

யாரடாப்பா அந்த வேணாப்போனவன் ஒருத்தன் மகளிர் ஆசனங்களை இடம் மாற்றச் சொல்பவன்?

  • கருத்துக்கள உறவுகள்
இந்தச் சட்டம் முன்னரே வந்திருந்தால் நானும் விழுந்திருக்க மாட்டன்.. :rolleyes:

 

 

விழுந்தும் உயிரோடு இருக்கிறீங்கள் தானே! பிகருங்களுக்கு கலர் காட்ட படிக்கட்டில் தொங்க வேண்டியது...கை,காலை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்து கிட‌க்க வேண்டியது முடியல :lol:  :D  :rolleyes:
 

பஸ்சில் பயணங்களில்:

"வாடிக்கை மறந்ததும் ஏனோ? என்னை வாட்டிட ஆசை தானோ - பல

கோடி மலர் அழகை மூடி வைத்து மனதைக் கொள்ளையடிப்பதும் ஏனோ?

வாடிக்கை மறந்ததும் ஏனோ.....

.........................................................

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்

அமுத விருந்தும் மறந்து போனால் அமுத விருந்தும் மறந்து போனால்

உலகம் வாழ்வதும் ஏது? பல உயிர்கள் மகிழவதும் ஏது? - நெஞ்சில்

இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வை தனித்துப் பெற முடியாது."

 

யாரடாப்பா அந்த வேணாப்போனவன் ஒருத்தன் மகளிர் ஆசனங்களை இடம் மாற்றச் சொல்பவன்?

 

:D  :D என்கண்மணி என் காதலி ............என்ற பாட்டும் நினைவுக்கு வருது மல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மாநகரப் போக்குவரத்து கழகம் அதிக பேருந்துகளை இயக்கினாலும், மாணவ்ர்கள் திருந்தப் போவதில்லை.

 

மீசை அரும்பினால் இங்கே ஒவ்வொருத்தரும் ஹீரோக்கள் தான், மற்ற பயணிகள் முன்னால் - அதிலும் குறிப்பாக, பெண்களின் முன்னால்...!

 

வேண்டுமென்றே குழுவாக பேருந்தில் நெரிசலோடு ஏறவேண்டியது, சாகசம் செய்யவேண்டியது...தவறி இப்படி சாக வேண்டியது...சட்டங்கள் கடுமையாக்கப் படாதவரை இது தொடர் கதைதான்...

 

நெரிசலிருக்குமென தெரிந்தால், மாணவர்கள் பொறுப்புடன் வீட்டைவிட்டு முன்னதாக கல்லூரிக்கு கிளம்ப வேண்டியதுதானே?

உண்மையில் வருத்தப்படவேண்டிய பெரும்   விடயம் ................எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தால் ...நாம் இந்த அந்நிய வசதியான  நாடுகளில் இருந்து கொண்டு இவற்றை விமர்சிப்பது எவ்வளவுதூரம் சரி என்று என்னால் சிந்திக்கமுடியவில்லை என்றாலும் .மனம் உறுத்துகிறது .உண்மையில் இந்த முக்கியமான போக்குவரத்து தேவை என்பது இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் தேவை.....பொருளாதாராதாரசிக்கல்களால் பெரும்பான்மையானோர் பேருந்து ,தொடரூந்து போன்றவற்றிலேயே தங்கி இருக்க வேண்டிய ஓர் நிலைமை ....................பாதுகாப்பான போக்குவரத்துத்துறை அவசியம் .............ஆனால் சினிமாக்களுக்கும்,வீணான பொழுதுபோக்குகளுக்கும் அள்ளி அள்ளி வீசியெறியும் பணத்தை இப்படியான முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்தினால் பல உயிரழிவுகளை தடுக்கலாம்.

ராஜவன்னியன், கூறிய கருத்துக்கு... தமிழ்ச்சூரியன் கூறியதைப் போலவே... கருத்து, எழுத வேண்டும் என்று காலையில்... நினைத்திருந்தேன். நேரம் கிடைக்காமையால்... எழுதவில்லை. அத்துடன்... தமிழக இளைஞர்கள் எவ்வள‌வோ... திறமை வாய்ந்தவர்கள். அவர்களை... ரஜனியின் கட் அவுட்டுக்குப் பால் ஊத்துவதையும், குஸ்புவுக்கு கோயில் கட்டுவதையும், ஊத்தை வாழி சினிமா நடிகர்களால் ஆளப்பட்ட, ஆண்டு கொண்டிருக்கும்... தமிழக முதல்வர்கள் சிந்திக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு.... தயவு செய்து, தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுங்கள். அதற்கு, வசதி ஏற்படுத்திக் கொடுங்கள், முன்னாள் சினிமா முதல்வர்களே..., இதைச் செய்யாமல், மாணவர்களில், குற்றம் சாட்டாதீர்கள். அரசன், எவ்வழியோ... குடி மக்களும்... அவ்வழி தான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தும் உயிரோடு இருக்கிறீங்கள் தானே! பிகருங்களுக்கு கலர் காட்ட படிக்கட்டில் தொங்க வேண்டியது...கை,காலை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்து கிட‌க்க வேண்டியது முடியல :lol:  :D  :rolleyes:
 

 

வயசு அப்படி.. :D

உள்ளே போனாலும் பெண்களுடன் இடிபட வேண்டி வந்தாலும் வரும்... பிறகு அக்கா தங்கச்சியோட பிறக்கேலையா எண்டு கேப்பினம்.. :unsure:

 

தேவையா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.