Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உறவுகளின் பேட்டி 1 வல்வை சகாறா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே ஒரு புதிய முயற்சியாக யாழ் களத்தில் உள்ள பிரபலமானவர்களை பேட்டி எடுத்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம் அந்தவகையில் இந்த முதல் முயற்சியில் எம்மிடம் சிக்கியவர் வல்வை சகாரா அக்கா

மிக விரைவில் அவருடைய பதில்களுடனும் எமது கேள்விகளுடனும் உங்களை சந்திகின்றோம் .

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆரம்பத்திலேயே அகப்பட்டது நானா? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

திண்ணையில் விரித்த வலையில் சிங்கம் சிங்கிளாகச் சிக்கிட்டுது போல. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
 
 
சுண்டல் : இப்பொழுது திண்ணையில் உலக புகழ்பெற்ற கவிஞர் எழுத்தாளர் இலக்கியவாதி குடும்பத்தலைவி என்று பல்வேறு முகம்களை கொண்ட வல்வை சகாரா அவர்களை பேட்டி எடுக்க இருக்கின்றோம்
 
 
 இசைக்கலைஞன் :சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு கவிஞர் நீங்கள்..! ஈழப் பிரச்சினையின் தற்கால நிலை குறித்து எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கிறீர்கள் திருமதி சகாரா அவர்களே.. 
 
 
வல்வை சகாறா : பலரும் ஈழம் என்று பேசுகிறார்கள் உலக வரைபடத்தில் அது எங்கு இருக்கிறது என்று தேடித் தேடிக்களைத்துவிட்டேன் இசை அது எங்கே எந்தப்பிராந்தியத்தில் அமைந்திருக்கிறது?
 
 
சுண்டல் : சரி அக்கா உங்களை பற்றி உங்கள் ஆரம்பகாலம் எப்பிடி கவிதைகள் மேல் உங்களுக்கு ஆர்வம் வந்தது போன்ற விடையங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்
 
 
வல்வை சகாறா :
 
மெல்ல மெல்ல
இதயத்தின் கதவுகள்
இறுக்கமாக மூடிக்கொள்ளும்
இறுதிநிலைக்கு வந்துவிட்டேன்
இல்லத்தின் சிறப்பிற்கு
இடமில்லை என்னிடத்தில்
பிள்ளைகளை நினைத்து
நான் பிணமாக வாழ்கிறேன்
 
இதுதான் என்னுடைய முதல் கவிதை எழுதிய இடம் ஒரு செல்டர் ஆதரவற்ற பெண்களைப்பராமரிக்கும் ஒரு இடம் 
 
 
வல்வை சகாறா : அதன் பின்பு பேச்சுத்துணைக்கு யாரமற்ற சூழலில் "நான்கு பக்கம் சுவர் வளர்ந்து நடுவில் நின்றாதாலே அதில் நான் நலிந்து போனதாலே...வரிந்து வரிந்து வரிகள் வந்து வழிந்து ஓடியதாலே அதை வாய்க்கால் கட்டியதாலே... அதில் வழித்துக் கழித்து எடுத்த மிச்சம் கவிதையானதாலே நான் கவிதையாளி ஆனேன்  
 
 
 வல்வை சகாறா : சுண்டல் இக்கவிதைகளை அதாவது என் அகம் தழுவிய கவிதைகளை எப்போதும் பொது வெளிக்கு கொண்டு வந்ததில்லை இன்று நீங்கள் கேட்டதால் அந்த முதல்கவிதையை மீளப்பார்த்துக் கொள்கிறேன் இதை எங்கும் எழுதி வைக்கவில்லை ஒன்லி போ மை மைண்ட்
 
 
சுண்டல் : நல்லது உங்களுடைய முதல் கவிதைக்கு வரவேற்ப்பு எப்பிடி இருந்தது? தொடர்ந்தும் உங்களை இந்த   விடயத்தில் ஊக்குவித்துக்கொண்டு இருப்பது எது?
 
 
வல்வை சகாறா : ஒரு சமயத்தில் தனிமைப்பட்ட உணர்வு. எவரிடமும் பேசி ஆறுதல் பெற முடியாத சூழல். புரிதல் இல்லாத சமூகவெளி இப்படியான சூழல்தான் அதிகம் எழுதத் தூண்டியது. அன்றைய எழுத்துகள் எவையும் வெளிவராதவை. அந்த வேளையில் கனடாவில் இளையபாரதியின் வானொலியில் கலாதரன் நடாத்திய "வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கிறது" என்னும் ஒரு கவிதை நிகழ்வுதான் அதற்குள் எழுதியசிலவரிகளும் அதை என்வாயால் நான் சொல்லும்போது ஏற்படுத்தும் உணர்வுகளுமாக என்னை வெளி உலகிற்கு இனம் காட்டியது.... அதன் மூலம் கனடா தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனக்கு கவிதைக்கான முதல் அரங்கத்தை அமைத்துத்தந்தது தொடர்ந்து உலகத்தமிழர் மேடைகள் அதே நேரம் கலாதரன் செய்த வெட்டவெளி நிகழ்வை நான் நடாத்தும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது
 
 
 
சுண்டல் : அக்கா நீங்கள் ஒரு வானொலி அறிவிப்பாளினியாக அறிகிறேன்..
நீங்கள் அறிவிப்பாளினியாகியது தற்செயலா அல்லது திட்டமிட்டதா? 
வானொலி அறிவிப்பாளினியாக தங்கள் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?
 
 
வல்வை சகாறா : நான் வானொலியில் இணைந்தது திட்டமிட்டா இல்லையா என்று ஆய்வதற்கு முன்னால் என்னுடைய ஒவ்வொரு படியும் அரசியல் நோக்கில் பேசப்பட்டன கனடாவில்    
 
 
வல்வை சகாறா : இந்த வானொலியில் நான் நிகழ்ச்சி நடாத்துனராக இருந்ததைத்தான் இங்கு பாகன் என்ற பெயரில் உலாவரும் உறுப்பினர் துரோக வானொலியில் வேலை செய்ததாக ஒரு நாள் திண்ணையில் பேசினார். சிறு நரிக்கூட்டத்திற்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை பாகன் அறியவில்லை  
 
 
சுண்டல்: தொடர்ந்து சில கேள்விகளுடன் சுபேஷ் எம்முடன் இணைந்து கொள்ளுவார்
 
 
சுபேஸ் : வணக்கம் அக்கா...இதுவரை கவிதை கட்டுறை என்று இலக்கிய உலகை சுற்றிய எம் கேள்விகள் இப்பொழுது தங்கள் அரசியல் செயல்பாடுகளை நோக்கி நகர்கின்றன..
 
 
சுண்டல்:  நன்றி சுபேஸ்
 
 
வல்வை சகாறா : அரசியலா வேண்டாமப்புகளா
 
 
சுபேஸ் : அக்கா...புலம்பெயர் தேசத்தில் தங்கள் அரசியல் பயணத்தின் ஆரம்பம் மற்றும் அதன்பின்னர் ஏற்பட்ட கசப்பான மற்றும் இனிமையான அனுபவங்கள் தற்பொழுது தங்கள் அரசியல் செயற்பாடுகள் என்பவை பற்றி குறிப்பிடமுடியுமா...
 
 
வல்வை சகாறா : மாட்டிவிடாமல் விடுறேல்லைப்போல ஆமா என்னைப்பற்றி ஏதாவது எழுதக்கிழுதப்போறீங்களா?
 
 
சுபேஸ் : ஓம் அக்கா..தொடருங்கள் அக்கா உங்கள் அனுபவங்களை...
 
 
வல்வை சகாறா :அரசியல் பயணத்தின் ஆரம்பம் என்பது அறிவு தெரிந்த நாளிலிருந்தே இருக்கிறது. தியாகங்கள் வலிகள் என்று நீண்ட தொடர்கதையே எழுதலாம் திருப்புமுனைகள் செம் சுவாரிசியமானது. புலம் பெயர்ந்த பின்னர் என்பது அரசியல் வெளியில் என் எழுத்து ரீதியாகவே அமைந்தது.
 
 
வல்வை சகாறா : 98 இல் ஒரு எதிர்வு கூறலை கவிதையில் எழுதியிருந்தேன் அப்போது எல்லோரும் பரிகசித்தார்கள் ஆனால் 2009 இல் அவை நிசமாகிப்போயின.
 
" நாளையங்கு வீடுகள் இருந்த இடத்தில்
மணல்மேடுகள் தோன்றியிருக்கும்
பச்சைப்புல்வெளியும்
பாலைவனமாயிருக்கும். ..
பார்க்கும் இடங்கள்தோறும்
பிணங்கள் எரிக்கப்பட்டு
சாம்பல்மேடுகள் பல
சங்கதிகள் சொல்லும்....
கழுகுகள் குடியிருக்கும்...
காண்டாவனம் சுட்டெரிக்கும்....
வியைிலேயே விழுதுகள்
வண்டரித்துப்போயிருக்கும்....
காக்கை குருவிகூட
காலனுக்கு இரையாகும்....
வித்துகள் மதியிலே
பித்தம் தலைதூக்கும். ?
தத்தைகளும் அங்கு
தன்மதியற்றிருப்பர்...
யுத்த ராட்சதனின்
கோரப்பிடிக்குள் சிதைந்து
எம் தேசமே
சீரழிந்து போயிருக்கும்...
எந்நிலை வந்தாலும்
எம்தேசம் காக்க
உலகத் தமிழினமே
எம்மவர்க்கு வலிமையைக் கொடுப்பாயோ...?
வஞ்சனையைச் செய்வாயோ?"
 
 
 
 சுபேஸ் : அருமையான கவிதை அக்கா...இந்தக்கவிதையை நானும் படித்திருக்கிறேன்...கவிதை காலத்தின் கண்ணாடி என்பது உங்கள் கவிதையில் நிஜமாகிவிட்டது..தொடருங்கள் அக்கா..
 
 
 
வல்வை சகாறா :இப்படிப்பட்ட எதிர்காலம் நோக்கிய வீச்சுக்களில் எழுதம் என்னுடைய கவிதைகளை இங்கு பலருக்குப்பிடிக்கவில்லை மக்களை உற்சாகப்படுத்தும் கவிதைகளை எழுதுங்கள் என்றார்கள். உடனடியாக விசில் அடிக்கும் வார்த்தைச் செறிவுகளை உள்ளடக்கி என்னால் கவிதைகளை எழுத முடியவில்லை என்னைப் பொருத்தவரை கவிஞர்கள் காலத்தின் கண்கள் அவர்களின் பார்வை என்பது எதிர்காலத்தை தெளிவாகக் கணித்து அதற்காக மற்றவர்களை தயார்படுத்தலுக்கு உள்ளாக்கவேண்டும் அப்படி அல்லாத நிகழ்காலத்தோடு நிற்கும் வெற்றுக் கோசங்களாக எழுதும் மட்டுப்படுத்தலக்கு அவர்கள் ஆளாகக் கூடாது.
 
 
 
சுபேஸ் :கற்பனைக்கவிதைகள் காதலிலும் வர்ணனைகளிலும் சாத்தியப்படும்..ஆனால் வலிகளையும்,வாழ்க்கையின் பாடுகளையும் பதிவு செய்யும் கவிஞனின் பேனா பொய்யுரைக்காது..நீங்கள் காலத்தை அது உள்ளபடியே பதிவு செய்ய விளைகிறீர்கள்..அந்த பெருவிருப்பு உங்கள் வரிகளில் தெறிக்கிறது..
 
 
வல்வை சகாறா :இப்படியான சிந்தனை ஓட்டத்தால் புலம் பெயர்ந்த நாட்டில் ஓரங்கட்டப்பட்டேன் உன்றால் மிகையாகாது. ஆனால் இப்படியான சிந்தனைகளால் தாயகத்தில் என்னை அதிகம் வரவேற்றார்கள். முதன்முதலாக புலம் பெயர்ந்த தேசத்தில் தாயகக்கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் வரலாற்று இடப்பெயர்வோடு ஒட்டியதாக ஒரு கவிதையோடு நான் பணியாற்றிய வானொலியின் அலைகளூடாக தாயகத்திலிருந்து இணைந்தார்  அந்த கவிதை "ஆலமரத்தின்கீழ் அரைஞான் கயிறு தொய்ய காலால் நடந்தென் கடைப்படிக்குப் போவதற்கும் ஏலாதிருக்கும் ஒரு இடம்பெயர்ந்த தமிழ்கவிஞன் வாயாரச் சொலும் வன்னிக்கதை கேட்டு செப்புவையோ" என்ற கவிதை அந்தக்கவிதைக்கு புலத்திலிருக்கும் விடயங்களைப் புட்டுவைத்து நானும் பதில் கவிதை எழுதினேன். அதைக் கேட்டு பலர் கொதிப்படைந்தார்கள் வேறுயாருமல்ல இப்போதும் ஆன்னா ஊன்னா யார் குதிப்பார்களோ அவர்களே... அந்த நிகழ்வை மறு ஒளிபரப்பு செய்யப்படுவதையே தடுத்தார்கள். என்னை நோக்கிய வெறுப்பு என்மீதான என் வாழ்வு மீதான அவதூறுகளாக உருவமைக்கப்பட்டன. அவையெல்லாம் கால இடுக்குகளில் இப்போது மறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அன்று தாயகக் கவிஞருககு நான் எழுதிய பதிலே அங்கிருந்து அவர்களுக்கு உரியவளாக என்னை நிலைநிறுத்திக் கொண்டது
 
 
 
வல்வை சகாறா :இவ்வளவும் போதுமா?
 
 
சுபேஸ் :இல்லை அக்கா..தொடர்கிறது...தற்பொழுது நீங்கள் எழுத்துலகில் இருந்து சற்று தள்ளி நிற்பது போல் தெரிகிறது.. எதற்காக இந்த மெளனம்?? புலம்பெயர் அமைப்புகளின்பால் ஏற்பட்ட விரக்தியா..? அல்லது 2009க்கு பின்ன் எம் இனம் மேய்ப்பன் அற்ற மந்தைகள் ஆக்கப்பட்ட விரக்தியிலா;;அல்லது தனிப்பட்ட காரணிங்களாலா??
 
 
 
வல்வை சகாறா : சுபேசு என்னுடைய தனிப்பட்ட வாழ்வு என்று எப்போதும் சுயத்திற்குள் தொலைந்தவளல்ல அதனால் அந்தக்கேள்விளைத் தவிர்த்து பார்த்தால் வரும் மற்ற இரண்டும் என் மௌனத்திற்கு பொருந்தும்
 
 
 
வல்வை சகாறா : இங்கு ஒருவர் புன்னகைக்கிறாரே இவர் ஒருநாள் கூறியதும் ஞாபகத்தில் வந்து அச்சுறத்துகிறது. மதங்கொண்ட யானைக்கு எறியும் அம்பு அதை கட்டுப்படுத்தும் அப்பாவி பாகன்மேல் பட்: அவன் மாளக்கூடாது என்று    ஞாபகம் இருக்கிறதா இசை?
 
 
 
சுபேஸ் : நல்லது அக்கா..தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் ஏதும் எழுதும் திட்டமிருக்கிறதா?
 
 
வல்வை சகாறா : தாயகத்தில் இன்னும் போராட்டம் முடியவில்லை சுபேசு
 
 
 
சுண்டல்: இறுதியாக ஒரு கேள்வி அக்கா எமது சமுகத்தில் இப்பொழுது பெண் விடுதலை எம்பது எந்தளவில் இருக்கின்றது?
 
 
 
வல்வை சகாறா : சுண்டு பெண்விடுதலை என்பது இன்றைய நாளில் அவர்கள் வாழும் சூழலிருந்தே அறியப்படவேண்டும் மேலை நாட்டில் பெண்விடுதலை என்பதற்கும் கீழைத்தேசங்களில் பெண் விடுதலை என்பதற்கும் நிறை வேறுபாடுகள் உள்ளன.
 
 
 
 வல்வை சகாறா : சுபேசு இத்தோடு எங்கள் கலந்துரையாடலை முடித்து கொள்வோம் நான் வெளியே சென்று வரவேண்டும்
 

 

சுபேஸ், சுண்டல் - நன்றி வணக்கம் அக்கா..இது வரை பொறுமையாக சிறியவர் எங்கள் கேள்விகளுக்கு அழகாகவும் ஆழமாகவும் பதில் அளித்ததிற்கு..மீண்டும் இன்னொரு பேட்டியுடன் யாழ்  உறவுககளை சந்திக்கிறோம்..நன்றி..வணக்கம்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சுடச்சுடக் கொண்டாந்து போட்டுட்டாங்களே :o

 

உலகப் புகழ்பெற்ற ஒருவரை :icon_mrgreen:  பேட்டி எடுக்கும் இலட்சணமா இது? :lol: :lol:

 

முன்னரே கேள்விக் கொத்தைக் கொடுத்து தயார் படுத்த வேண்டாமோ? :mellow:

 

 

 

 

1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு

2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது

 

என்பன திண்ணை தொடர்பான கள விதிகளில் முதல் இரண்டிலும் உள்ளவை. முதலில் திண்ணையில் பேட்டி பற்றி அனுமதி கேட்டு பின் கேள்வி கொத்து அனுப்பப்பட்டு பதில் வழங்கப்படுகின்றது என நினைத்து இருந்தேன். ஆனால் அங்கு உரையாடப்பட்டவை அப்படியே இங்கு இடுவது சரியல்ல. மறைத்துள்ளேன். கேள்விகளை விரும்பினால் மீண்டும் தனி மடலில் அனுப்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
என்பன திண்ணை தொடர்பான கள விதிகளில் முதல் இரண்டிலும் உள்ளவை. முதலில் திண்ணையில் பேட்டி பற்றி அனுமதி கேட்டு பின் கேள்வி கொத்து அனுப்பப்பட்டு பதில் வழங்கப்படுகின்றது என நினைத்து இருந்தேன். ஆனால் அங்கு உரையாடப்பட்டவை அப்படியே இங்கு இடுவது சரியல்ல. மறைத்துள்ளேன். கேள்விகளை விரும்பினால் மீண்டும் தனி மடலில் அனுப்புகின்றேன்.

 

நிழலி மட்டுறுத்தினராக உங்கள் கடமை மகிழ்வாக இருக்கிறது. அதற்காக முதலில் நன்றி

 

இந்த விடயம் தொடர்பாக அனுமதியை அவர்களுக்கு வழங்குகிறேன். தொடர்ந்து வரும் பதிவுகளில் யாழின் களவிதிகளை அவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி எடுக்கமாட்டார்கள். இவர்கள் எழுதுவார்கள் என்று தெரியும் இப்படியே சுடச்சுட கொண்டு வந்து போடுவார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தம்பிங்களா போற போக்கைப்பார்த்தால் எங்கேயோ போகப்போறீங்க :lol:

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தம் சம்மதத்தினை தெரிவித்துள்ளமையால் மீண்டும் பார்க்கக்கூடிய விதத்துக்கு கொண்டு வருகின்றேன்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அடுத்த முறை கவனத்தில் கொள்ளப்படும் எமது நிருபர்களை நேரடியாக பிரமுகர்களின் வீடுகளுக்கு அணுப்பி பேட்டி எடுக்க முயற்சி செய்கின்றோம் வீட்ட வந்தா மிக்சர் கொடுக்கணும் பட்சி சொட்ஜி கொடுக்கணும் எண்டு கவலைப்பட்டா கேள்விகளை email இல் அணுப்பி வைக்கின்றோம் நன்றிகள் :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது..இப்படி மற்றவர்களையும் பேட்டி எடுத்து போட்டால் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் எரிமலை மற்றும் உறவுகளே இன்னும் பலரையும் நாங்கள் பேட்டி எடுத்து போட இருகின்றோம் இன்னும் இரண்டு வாரங்களில் அடுத்த உறுப்பினரின் பேட்டி இடம் பெரும் ஆதரவளித்து மனதார பாராட்டிய உறவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
ஆகா ஆரம்பத்திலேயே அகப்பட்டது நானா? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

பேட்டி என்றவுடன் பெயருமா மறந்து போகும் சகாறா? :D   :D  :D  

 

தலைப்பில் பெயரை சரியாக இடுங்கள் சுண்டல்

 

 நல்ல முயற்ச்சி தொடருங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.