Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் மீதான தாக்குதலால் யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை; நோர்வேத் தூதுவர் அதிருப்தி

Featured Replies

பல்கலையில் இடம்பெற்ற சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் நேரடியாக எமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம்.


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

வடக்குக்கான பயணத்தை கடந்த 12 ஆம் திகதி மேற் கொண்ட, இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் கிரீட் லொட்சன் யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார்.

இதன்போது யாழ்ப் பாணத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், யாழ். ஆயர் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தார்.

பின்னர் கொழும்பு திரும்பிய நோர்வேத் தூதுவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் நேரடியாக எமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாழ்ப்பாணத்தில் பதற்றநிலையை தோற்றுவித்துள்ளதுள்ளது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=789241700516841837

  • தொடங்கியவர்

Royal Norwegian Embassy
49 Bullers Lane, Colombo 7


Telephone:  +94 11-5 608 700

Fax: +94 11-5 608 799

 

 

E-mail: emb.colombo@mfa.no

 

Subject : re: Jaffna students situation 

 

Hon. Grete Løchen,

The Norwegian ambassador to Sri Lanka.

 

Your Excellency, 

 

Please acknowledge my sincere gratitude for visiting Jaffna and witnessing first hand about the situation of students.

 

As I hear from relatives in Jaffna, I feel the situation remains tense and many fear the ground situation will get worse before it can be normal. I wish that will not be the case.

 

For long term peace and basic freedom of expression, the presence of military must be reduced and devolution of political rights must take place.

 

Respectfully, 

 

 

 

 

 

 



===========================================================================

பலத்த இராணுவ அடக்குமுறைக்குள்ளும் எமது மக்கள், கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பது பாராட்டப்பட வேண்டியம்.

இவர்களால் மட்டும் மாணவர்கள் விடுதலையை செய்துவிட முடியுமா? இல்லை.

 

புலம்பெயர் மக்களும் தாயக நிலவரத்தை தம் தம் நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் கொண்டுவரல் வேண்டும்.

 

============================================================================

அனுப்பியாச்சு, நன்றி அகூதா

கொழும்பில் இருக்கின்ற தூதுவர் அங்கே இருக்கின்ற பாதுகாப்பு, உள்நாட்டு துறைகளில் அதிருப்தியை தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் போய் அங்கே உள்ள மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்தாராம். இனி இதற்கு யாழ் மாவட்ட அரச அதிபர் என்ன நடவடிக்கை எடுப்பாராம்?

  • தொடங்கியவர்

கொழும்பில் இருக்கின்ற தூதுவர் அங்கே இருக்கின்ற பாதுகாப்பு, உள்நாட்டு துறைகளில் அதிருப்தியை தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் போய் அங்கே உள்ள மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்தாராம். இனி இதற்கு யாழ் மாவட்ட அரச அதிபர் என்ன நடவடிக்கை எடுப்பாராம்?

 

பின்னர் கொழும்பு திரும்பிய நோர்வேத் தூதுவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் நேரடியாக எமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம்.
 

- அறிக்கை கொழும்பில் தான் வெளியிடப்பட்டது

- அரச அதிபரிடம் அங்கு சென்ற காரணத்தால் அது தெரிவிக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

Hon. Grete Løchen,

The Norwegian ambassador to Sri Lanka.

 

Your Excellency,

 

I am relieved to learn that you have paid a visit to the troubled North and stated your opinion. I hope the Western governments stand guard to these oppressed people that have no access to justice.

 

Thanking you.

 

Yours Truly,

 

நன்றிகள் அகூதா. நானும் அனுப்பியிருக்கிறேன். முடிந்தவர்கள் வகைவகையாக அனுப்புங்கள்.

கொழும்பில் இருக்கின்ற தூதுவர் அங்கே இருக்கின்ற பாதுகாப்பு, உள்நாட்டு துறைகளில் அதிருப்தியை தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் போய் அங்கே உள்ள மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்தாராம். இனி இதற்கு யாழ் மாவட்ட அரச அதிபர் என்ன நடவடிக்கை எடுப்பாராம்?

 

புரியவில்லை. ஏன் இது? தயவது செய்து தங்கள் கருத்துக்களை விளக்கமாக எழுதவும். இதனால் எங்களின் மனத்தில் எழும் குழப்பங்கள் குறையலாம்.

 

மேலே எழுதியதின்படி இவற்றில் ஏதாவது சரியான அனுமாங்களாக காணப்படுகிறதா?

 

1.நோர்வே தூதுவர் ஏன் யாழ்ப்பாணம் போவான். அவர் குழும்புவில் மட்டும் இருந்திருக்க வேண்டிய தூதுவர் அவர்.

 

2.நோர்வே தூதுவர் ஏன் யாழ்ப்பாணத்து அதிகாரிகளை சந்திப்பான். அவர் கொழும்பு அதிகாரிகளுடன் தான் பேசலாம் என்பது வரை அறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் யாழ்பாணதில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் கவனிக்கப்படாம்ல் போவதும்பதே நேரம் கொழும்பில் செய்யப்படும் குற்றச்சாடுக்கள் உடனுக்குடன் விசாரிக்கப்படுவதையும் நோர்வே தூதுவர் அறிந்த்ததில்லையா?

 

3.யாழ்ப்பாணத்து நிகழ்சிகளில் கொழும்பில் உள்ளோர் ஏன் ஆர்வம் காட்டுவான்.

 

4. கொழும்பு சிங்கள பத்திரிகைகள் யாழ்ப்பாணத்து நிகழ்சிகளை சரியாக பிரசுரிக்கின்றன. இதை அவர் சரியாக கொழுபில் வைத்தே ஏற்கனவே தெரிந்து விட்டார். அந்த அறிவுடனேயே கொழும்புவில் பேசியிருக்கலாம்.

 

5.யாழ்ப்பாணத்தில் நடப்பவற்றுக்கு அரசு வழங்கியிருப்பது பொது அதிகாரம் அல்ல. ஒவ்வொரு அசைவையும் கொழும்பில் இருந்து கட்டுப்படுத்துவதால் அதை கொழும்பில் மட்டும்தான் பேச முடியும். அதாவது யாழ்ப்பாணத்து அதிகாரிகள் பாலியல் வன்முறைகள், கடத்தல், கொலைகள் செய்யும் போது தங்கள் அதிகாரத்தை பயன் படுத்துவதில்லை. பாலியல் வன்முறை, சித்திரவதை என்பவற்றை கொழும்புவில் இருந்து சொல்லும் போதுதான் செய்கிறார்கள். இதனால் கொழும்புவில் மட்டும்தான் பேசவேண்டும்,

 

6.நோர்வே அதிகாரியின் யாழ்ப்பாணத்து விஜயம் மாணவர்களை உசுப்பேதும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.

 

7. யாழ்ப்பாணது மாணவர்களின் பெற்றோர்கள் பொய்களும் கூறியிருக்கலாம் என்பதால் அதை யாப்பாணத்து அதிகாரியிடம் எடுத்து செல்வது அவரை கொடும் கோலனாக காட்டும் முயற்சியாகப்படுகிறது.

 

8.யாழ்பாணத்து அதிகாரியிடம் நேரில் பேசி உண்மைகளை காண முடியாது. அதனால் ஏன் இவர் யாழ்ப்பாணது அதுகாரிகளுடன் பேசினார்.

 

9. இவர் யாழ்ப்பாணத்தில் அந்த அதிகாரிகளுடன் பேசியத்தால் இனி கொழும்பில் வந்து பேசும் உரிமைகளை வீணே விரயம் செய்த்துவிட்டார். ஆனால் நோர்வே கொழும்புவில் பேசி இருந்தால் நிறைய சாதித்து இருக்கலாம்.

 

10.யாழ்ப்பாணத்து அதிபர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பது தெரிந்ததுதானே. அவரிடம் பிறகு ஏன் இவர் இந்த குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். இலங்கையில் மாகாண அதிகாரம் என்பது கட்டுக்கதை மட்டும் அல்லவா?

 

11. நோர்வே அதிகாரி மோப்பம் பிடிக்க யாழ்ப்பாணம் போய் இருக்கிறார். இதை கேட்க எரிச்சலாக இருக்கிறது. அத்னால் எதையாவது எதிராக எழுதவேண்டும் போலிருக்கு.

 

12.யாழ்ப்பாணம் போய் அங்கே விசாரித்து அதை நேரே யாழ்ப்பாணத்து அதிகாரிகளிடம் எடுத்து சென்றால் அந்த குற்றசாட்டுதல்களில் கூட உண்மை இருப்பது போல் வெளி உலகில் காணப்படும். இதனால் மாணவர்கள் "புலம் பெயர் மக்களால் உசுப்பேத்துப்பட்டதால்தான் கூத்தாடினார்கள்" போன்ற மாறுக்கருத்துகளை புலம் பெயர் இடங்களில் வைப்பது கடினம் ஆகலாம்.

 

13. மற்றுக்கருத்தாளர்கள் தமது வற்றாத பொக்கிசத்தில் இருந்து போராட்டைங்களை(திசை திருப்பவும், கொச்சைப்படுத்தவும்) நெறிபடுத்தும் எண்ணங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது எதற்காக நோர்வே மட்டும் மாற்றுக்கருத்துகளிடம் ஒரு சொல் கேளாமல் தான் யாழ்ப்பாணம் சென்று அந்த அதிகாரியிடம் நேராக முறையிட்டு விடயங்களை போட்டுடைத்தவர்.

 

14.இதுவரையும் மாற்றுக்கருத்துக்களின் அதி உயர் பிடி, புலங்களில் போராட்டங்களை முன்னெடுப்போர் தமிழ் ஈழம் போவதில்லை எனபதால் அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று தட்டிக்கழிக்க இருக்கும் சந்தர்ப்பமாகும். நோர்வே தான் யாழ்ப்பாணம் போய், உண்மைகளை கண்டு  புலம் பெயர் இடங்களில் போராட வேண்டியதற்கு ஒரு நியாயம் இருக்கென்றால் அது இனிமேல் மாற்றுக்கருத்துக்களின் பிரச்சாரத்தில் தாக்கம் உண்டு பண்ணாதா?

நன்றிகள் அகூதா. நானும் அனுப்பியிருக்கிறேன். முடிந்தவர்கள் வகைவகையாக அனுப்புங்கள்.

 

நான் எழுத்துப்பிழையை தவிர்க்க அகுதாவினதை அனுப்பிவிடுவேன். ஆனால் இது நல்ல அறிவுரை. பலவகை கருத்துகள் சென்றடையும்.

  • தொடங்கியவர்

நானும் அனுப்பியுள்ளேன்.

நானும் அனுப்பி விட்டேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பில் இருக்கின்ற தூதுவர் அங்கே இருக்கின்ற பாதுகாப்பு, உள்நாட்டு துறைகளில் அதிருப்தியை தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் போய் அங்கே உள்ள மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்தாராம். இனி இதற்கு யாழ் மாவட்ட அரச அதிபர் என்ன நடவடிக்கை எடுப்பாராம்?

 

இது சிரித்து கொண்டு கட்டிபிடிச்சு அரசியல் செய்யவேண்டிய காலம் என்பதை நீங்கள் எழுத  முன்பே அவர் செயல் படுத்த தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

கொழும்பில் இது பற்றி சொன்னால் ஒரு கலவர நிலை தோன்றும்.
அங்கே போய்  சொன்னால். இங்கே கட்டிபிடிச்சு அரசியல் செய்ய இலகுவாய் இருக்கும்.
சொல்ல வேண்டியதை சொல்லியும் ஆச்சு............. அரசியல் செய்ததும் ஆச்சு.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

அனுப்பி விட்டேன் அகூதா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.