Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதற்கும் அஞ்சாத விடுதலைப் புலிகளை நிலைகுலைய வைத்தது அரசாங்கத்தின் படுகொலைகள்: பி.பி.சியின் முன்னாள் செய்தியாளர்

Featured Replies

இலங்கை அரசாங்கத்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், எதற்கும் அஞ்சாத விடுதலைப் புலிகளையே நிலைகுலைய வைத்துள்ளது என பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய “still- Counting the Dead” என்ற ஆங்கில நூல், “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலை கவிஞர் சேரன் வெளியிட, மூத்த பத்திரிகையாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார்.

இந்நூல் வெளியிட்டு விழாவில் நூலாசிரியரான பிரான்சிஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்:

இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன. ஆனால், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு, காணாமல் போனவர்கள் கதி என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே இல்லை.

போர் இறப்பு குறித்து, ஐ.நா. சபை வெளியிட்ட முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறியுள்ளது. ஆனால், கடந்த வாரம் வெளியான ஐ.நா. சபையின் அறிக்கையில், ஒரு லட்சம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், 2006 முதல் 2010ம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இலங்கையில் காணாமல் போனதாக தகவல் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

இந்த உயிர் இழப்புகளும், மனித பாதிப்புகளும், 35 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், 130 நாட்களில் நடந்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத, கொடூரமான இரசாயன ஆயுதங்களை போரில் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசு, எந்த புள்ளி விவரங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. புதிய இலங்கையை கட்டமைப்போம் எனக் கூறும் இலங்கை அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக் கூட ஏற்க மறுப்பதால், புதிய இலங்கையை கட்டமைப்போம் என்ற வாக்குறுதியை, உலக சமூகம் நம்ப மறுக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட பலரை சந்தித்தேன். ஆனால், சிலரது விவரங்களையும், நேர்காணலை மட்டுமே நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள் விடுதலைப் விடுதலைப் புலிகள். குறிப்பாக, கடல் புலிகள் எதற்கும் நிலைகுலையக் கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்களே போரில் நடந்த கொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்.

போரின் விளைவுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய, இலங்கை அரசு முன்வந்தால் தான், அமைதியான சமூகத்தை அந்நாட்டில் கட்டமைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

still_counting_dead_001.jpg

still_counting_dead_002.jpg

http://naamthamilar.ca/?p=10090

Edited by nunavilan

இலங்கையில் நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய “still- Counting the Dead” என்ற ஆங்கில நூல், “ஈழம்- சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், நூலை கவிஞர் சேரன் வெளியிட, மூத்த பத்திரிகையாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார்.

காலத்திற்கு ஏற்ற தேவையும் சேவையும், நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் இறைவன். ஆனால் நீங்கள் இணைத்த இணைப்பின் மூலத்தினைக் குறிப்பிடவில்லை.

காலச்சுவடுப் பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா?
காலச்சுவடு அண்மையில் வெளியிட்ட பிரான்சிஸ் கரிசனின் நூல் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் குறைத்தும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் சித்தரிக்கும்; நூல்; என இந்நூலைப் படித்த முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்த போராளி ஒருவர் தெரிவித்தார்.

அவரின் கருத்துப்படி பிரான்சிஸ் கரிசன் சிறீலங்கா அரசின்; பரப்புரை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் புதிய கூலி.
மேலும்: விடுதலைப் புலிகளினால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்துப் பேசும் இந்நூல் சிறீலங்கா அரசினால் பாடசாலைகள் மீது போடப்பட்ட குண்டுகள் அவற்றினால் பல்லாயிரம்பேர் மாண்டதுகுறித்து மூச்சு விடவில்லை. எனவும் மேற்சொன்ன முன்னாள் போராளி தெரிவித்தார்.
 — with Kasi Visvanathan,

via fb

  • கருத்துக்கள உறவுகள்

காலச்சுவடுப் பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா?

காலச்சுவடு அண்மையில் வெளியிட்ட பிரான்சிஸ் கரிசனின் நூல் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் குறைத்தும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் சித்தரிக்கும்; நூல்; என இந்நூலைப் படித்த முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்த போராளி ஒருவர் தெரிவித்தார்.

அவரின் கருத்துப்படி பிரான்சிஸ் கரிசன் சிறீலங்கா அரசின்; பரப்புரை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் புதிய கூலி.

மேலும்: விடுதலைப் புலிகளினால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்துப் பேசும் இந்நூல் சிறீலங்கா அரசினால் பாடசாலைகள் மீது போடப்பட்ட குண்டுகள் அவற்றினால் பல்லாயிரம்பேர் மாண்டதுகுறித்து மூச்சு விடவில்லை. எனவும் மேற்சொன்ன முன்னாள் போராளி தெரிவித்தார். — with Kasi Visvanathan,

via fb

மிகவும் உண்மையான கூற்று..

இந்திய அரசுக்கு இதனால் இரட்டை இலாபம். ஒன்று இலங்கைக்கு எதிரான கருத்துருவாக்கத்தைப் பலப்படுத்தி இலங்கையைப் பணிய வைத்தல். (தனக்கு மட்டும்)

இரண்டாவது புலிகள் மீது மறைமுகமான எதிர்ப்பிரச்சாரங்களை முடுக்கி விடுதல்.

காலச்சுவடுப் பார்ப்பான் குடுமி சும்மா ஆடுமா?

காலச்சுவடு அண்மையில் வெளியிட்ட பிரான்சிஸ் கரிசனின் நூல் சிறீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் குறைத்தும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகக் சித்தரிக்கும்; நூல்; என இந்நூலைப் படித்த முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்த போராளி ஒருவர் தெரிவித்தார்.

அவரின் கருத்துப்படி பிரான்சிஸ் கரிசன் சிறீலங்கா அரசின்; பரப்புரை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் புதிய கூலி.

மேலும்: விடுதலைப் புலிகளினால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்துப் பேசும் இந்நூல் சிறீலங்கா அரசினால் பாடசாலைகள் மீது போடப்பட்ட குண்டுகள் அவற்றினால் பல்லாயிரம்பேர் மாண்டதுகுறித்து மூச்சு விடவில்லை. எனவும் மேற்சொன்ன முன்னாள் போராளி தெரிவித்தார். — with Kasi Visvanathan,

via fb

பிரான்சிஸ்கரிசன் புத்தகம் வெளிவிட்ட போது புலிகளைத் தாக்கும் முயற்சிகளில்த்தான் இறங்கியிருந்தா. ஆரம்ப கூட்டங்களில் பங்கு பற்றிய சொலெயும் புலிகளை பற்றி வெளுத்தும் விளாசினார். இதை உருத்திரா கூட மறுக்க வேண்டியிருந்தது. புத்தகம் அதிகம் விலையாகவிலை போலும்.

1.ஆங்கிலப்பதிவை  சிங்களவருக்கு விற்கமுடியாது. அவர்களில் யாரும் தங்களை தவிர போரைபற்றி எழுதினால் வாங்கி வாசிக்கும் மனநிலையில் இல்லை. அதை தமிழரும் மற்றைய ஆராச்சியாளர்களும் தான் வாங்க வேண்டும்.

2. பிரான்சிஸ் கரிசனின் கருத்துக்கெதிராக ஐ.நா உள்ளக அறிக்கை வெளி வந்தது. அது வெளிப்படையாக இவவின் கருத்தான "புலிகளும் சரிக்கு சரியாக செய்த்தார்கள்" கருத்தை மறுத்துவிட்டது. அது வெளிப்படையாக புலிகளால் துவக்குகளால் சுடப்பட்ட சில கொலைகளை பாரிய அளவில் நடந்த அரசின் செல்லடிகளை விட மிகைப்படுத்தி ஐ.நா அறிக்கை வெளியிட்டதாக ஒத்துக்கொள்கிறது.

3. அரிச்சுன் கனடாவில் நடந்த பிரசுரிப்புக்கு போய்விட்டு வந்து யாழில் எழுத்தியதின் சாரம் "அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் புலிகள் தான் செய்தார்கள் என்றதை ஒத்துக்கொள்கிறார்கள்" என்பதாகும்.

இதனால் எதிர்பார்த்த விலைப்பாடு கிடைக்காத  புத்தகத்தை விற்க கரை மாறிவிட்டா. 

தன் புத்தகத்தை விற்றால் போதும் என்ற சாதரண சுயநலத்தில்த்தான் கரை மாறினாவோ அல்லது சொல்லெயும் மாதிரி சேர்ந்திருந்து களுத்தறுக்கத்தான் வலிய உள்ளடுகிறாவோ தெரியாது.

மேலும் அங்கே கூளுக்கும் பாடிக் கஞ்சிக்கும் பாடும் புலவர் சேரனும் சேர்ந்திருக்கிறார்.

கனடாவில் இந்த புத்தகத்தை வெளியிட்டது கனேடிய தமிழ் கொங்கிரஸ் .புத்தகம் நான் வாசித்துவிட்டேன் .

இலங்கை அரசையும் புலிகளையும் காட்டமாக விமர்சனம் செய்கின்றது ,அவர் புலிகளுடன் மிக நெருங்கிய உறவை வேறு கொண்டிருந்திருக்கின்றார் குறிப்பாக புலித்தேவனுடன்.

இன்றைய நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை சாட்சிப்படுத்த இந்த புத்தகம் ஒரு நல்ல ஆவணம் .

புலிகள் பிழையே விடாதவர்கள் என்பவர்களுக்கு ,மக்களை மனித கேடயமாக அவர்கள் வைக்கவில்லை ,அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் போக வெளிக்கிட்டவர்களை சுட்டார்கள் என்பதை நம்ப மறுப்பவர்களுக்கு வாசிக்க பிடிக்காமல் தான் இருக்கும்  அதற்காக மக்களிடம் இருந்து உண்மைகளை கேட்டவர்கள்  அதை எழுதாமல்  விடமாட்டார்கள் .

கனடாவில் இந்த புத்தகத்தை வெளியிட்டது கனேடிய தமிழ் கொங்கிரஸ் .புத்தகம் நான் வாசித்துவிட்டேன் .

இலங்கை அரசையும் புலிகளையும் காட்டமாக விமர்சனம் செய்கின்றது ,அவர் புலிகளுடன் மிக நெருங்கிய உறவை வேறு கொண்டிருந்திருக்கின்றார் குறிப்பாக புலித்தேவனுடன். அந்த உறவு மூலம் இவர் புலிகளுடனான எத்தகைய  செயல் பாடுகளில் இறங்கினார்?. புலிதேவனுடன் உறவு வைத்திருந்தவர் அவரின் அசியல் கொள்ளகளை ஏற்றிருந்ததாக அந்த புத்தகத்தில் சொல்லியிருக்க? ஊடகவியாலார் உறவு வைத்துகொள்பவர்களா அல்லது செய்த்து சேகரிக்க தொடர்பு வைத்துக்கொள்பவர்களா?

இன்றைய நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை சாட்சிப்படுத்த இந்த புத்தகம் ஒரு நல்ல ஆவணம் .

புலிகள் பிழையே விடாதவர்கள் என்பவர்களுக்கு ,மக்களை மனித கேடயமாக அவர்கள் வைக்கவில்லை ,அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் போக வெளிக்கிட்டவர்களை சுட்டார்கள் என்பதை நம்ப மறுப்பவர்களுக்கு வாசிக்க பிடிக்காமல் தான் இருக்கும்  அதற்காக மக்களிடம் இருந்து உண்மைகளை கேட்டவர்கள்  அதை எழுதாமல்  விடமாட்டார்கள் .  இப்படி வலிந்து எழுதி தாங்கள் கனவுகளில் காணும் வசங்களை மற்றவர்களின் வாய்க்குள் போடாமல் தான் யாழில் எழுத்தியதிலிருந்து "U turn" அட்டிப்பது அவமானமில்லாதது.

இன்னொருதடவை ஐ.நா. உள்ளக விசாரணை அறிக்கையை வாசித்து அதன் பொருளை விளங்கிக்கொள்ளவும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூல் வருவது மிகவும் வரவேற்கத்தக்க செயல். ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறையுள்ள தமிழர்கள் படிக்கவேண்டிய ஆவணம்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருப்பதால் உடனே பக்கச் சார்பாக மொழிபெயர்த்திருப்பார்கள் என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. ஆங்கிலத்தில் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதியதையும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதையும் வாசிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்பதை மொழிபெயர்த்தவர்கள் உணரமாட்டார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.