Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவி்ன் பாடவிதானங்களில் பாலியல் கல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவி்ன் பாடவிதானங்களில் பாலியல் கல்வி
December 25, 2012, 10:41 am|views: 748
 
சிறிலங்காவின் கல்வி நடவடிக்கைகளில் பாலியலும் இடம்பிடிக்கவுள்ளது.
 
பாலியில் நோய்களிலிருந்து இளைஞர் சமூதாயத்தை பாதுகாக்கும் நோக்கில் பாலியல் தொடர்பான விசேட கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
 
பாலியல் தொடர்பான தகவல்களை உரிய முறையில் பெற்றுக் கொள்வது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உலகின் சகல அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இவ்வாறு பாலியல் கல்வி தொடர்பான ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறிலங்காவில் பாலியல், ஜனன முறைமை தொடர்பான கல்வி மற்றும் கொள்கை வகுப்பு நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் காலங்களில் பாடசாலை பாட விதானத்தில் பாலியல் கல்வி தொடர்பிலான அம்சங்களை உள்ளடக்குவதற்கு இந்த ஆவணம் வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, விபச்சார தொழிலை சட்டமூலமாக்குமாறும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்திற்கும் , அரசியல் வாதிகளுக்கும் இது ஒரு கட்டாய பாடமாக்கப் பட வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப முக் :(  கிய ...மானது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிறிலங்காவி்ன் பாடவிதானங்களில் பாலியல் கல்வி

பிக்குகளுக்கு இன்னும் வசதி....... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் கல்வி – விரிவான அலசல்..!!
 

 

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது சமூகம் ஆண் பெண்ணுடன் பேசுவதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாகக் கருதியது. ஆண் பெண்களுக்கென்று தனிப் பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரிவினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கி‎ன்றன. கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்றுமையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இரு பாலர்களுக்கிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விஞ்ஞான வளர்ச்சியின் பக்க விளைவாக, இன்றைய இளைஞர்களிடையே, பல புத்தகங்களும் ஊடகங்களும் திரைப் படங்களும் பாலுறவு பற்றிய மோகத்தைப் பரப்பி வருகின்றன. இதனால், இளம் வயதிலேயே பாலுறவு பற்றி முழுமையான அறிவு இல்லாமல் நமது இளைய சமுதாயம் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பாலியல் நோய்கள், HIV/AIDS போன்ற உயிரைக் குடிக்கும் வியாதிகள் பரவத் துவங்கிவிட்டன.

 

இளைஞர்களுக்குப் பாலுறவு பற்றி போதிய அறிவு புகட்டி அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல் வதன் மூலமே பாலியல் நோய்களற்ற, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலியல் கல்வியின் அவசியத்தைப் பலரும் உணர்ந்தாலும் இதற்கு எதிர்ப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இது தவிர இந்த அறிவை இளைஞர்களுக்கு எவ்வாறு கொடுப்பது, எந்த வயதில் துவங்க வேண்டும், பாடத் திட்டங்கள் எப்படி இருக்கவேண்டும், இப்படிப் பல கேள்விகள். இது பற்றிய ஒரு சிந்தனைதான் இக்கட்டுரை. இது எந்த வகை யிலும் முழுமையானதல்ல.

 

செக்ஸ் பற்றி, அதன் அடையாளம், உறவுகள், அதன் நெருக்கம் பற்றிய அறிவினைப் பெற்று அதனால் ஒரு தெளிவு பெறுவதைத்தான் பாலியல் கல்வி என்று சொல்கிறோம். இந்தக் கல்வி, இளைஞர்கள் தங்களை உணர்ந்து, தங்களது தேவைகளை அறிந்து கொள்ளவும், அந்தத் தெளிவினால் பாதை மாறாது வாழ்க்கையில் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் உதவும் என்று சொல்லலாம்.

 

இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி தருவதன் மூலம் அவர்கள் பாலியல் பலாத்காரங்கள், பால் வேறுபாடுகளால் இழைக்கப்படும் அநீதிகள், தேவையில்லாத கருத்தரிப்புக்கள், தவறான உடலுறவுக ளால் ஏற்படும் நோய்கள், HIV, AIDS ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். இந்தப் பாலியல் கல்வியின் உண்மையான நோக்கம், உடலுறவுகளால் வரும் அவசியமற்ற, விரும்பாத கருத்தரிப்புக்களைத் தவிர்ப்பதும், தவறான விளைவுகளைப் போக்குவதும், பாலுறவால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமல் காப்பதும்தான். ஆண் பெண் உறவை மேம்படுத்தி ஒரு உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் பாலியல் கல்வி பயன்படும். உண்மையான பாலியல் கல்வி என்பது இந்த நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றும் கல்விதான். இந்தக் கல்வி எது நல்லது, அல்லது கெட்டது என்று பகுத்தறிய உதவ வேண்டும். செக்ஸ், பாலுணர்வுகள் முதலியவற்றால் ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் கருக்கலைப்பு, கருத்தடை போன்ற நுண்ணிய விஷயங்களையும் உணர்ந்துகொள்ளப் பயன் பட வேண்டும்.

 

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞான வளர்ச்சிகளால் சில பக்க விளைவுகளும் உண்டு. சில உடல்நலம் குறித்த பத்திரிகைகள் பாலியல் தொடர்புகளால் ஏற்படக் கூடிய தீங்குகளையும் ஆபத்துக்களையும் வலியுறுத்துகின்றன. வேறு சில பத்திரிகைகளோ பாலியல் நடவடிக்கைகள் ஒரு மனிதனை எப்படி முழுமை பெற்றவனாக ஆக்குகின்றன என்று சொல்கின்றன. இப்படிப்பட்ட மாறுபட்ட கருத்துக்களால் இளைஞர்களிடம் குழப்பம் ஏற்படுவது இயற்கை.

 

செக்ஸும், பாலுணர்வும் மிகவும் நுண்ணியமான விஷயமாகக் கருதப் படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டுக்களில் இருப்பவர்களிடையே வேறுபடுகின்றன. பாலுணர்வுகளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு, திருமணத்திற்குமுன் உடலுறவு, கருத்தடை சாதனங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அம¨ந் தாலொழிய ஒழுக்க, மத ரீதியான கலாசாரக் கட்டுப்பாடுகள் பற்றி முழுமை யாக அறிந்து கொள்ள இயலாமல் போகும்.

 

பாலியல் கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு இவைகள் பற்றித் தனிப்பட்ட கருத்துக்கள், நம்பிக்கைகள் இருக்கலாம். இந்தத் தனிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் கற்றுத்தரும் கல்வியில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் இவை இரண்டையும் பிரித்துணர வேண்டும். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், கல்யாணத்திற்கு முன்னால் உடலுறவு கூடாது என்ற கொள்கை உள்ளவராக இருக்கலாம். அவரது இந்த சொந்தக் கருத்து, ஆபத்தில்லாத பாலுறவு பற்றியும், கருத்தடைகள் பற்றியும் சொல்லிக் கொடுப்பதில் தடைக்கல்லாக இருக்கக் கூடாது. பாலுறவு பற்றிய கல்வியில் பொது ஒழுக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை மாணவர்களிடையே ஆசிரியர்கள் திணிப்பது தோல்வியையே தரும்.

 

படிக்கும் இளைஞர்களுக்கு உடலுறவு பற்றிய விளக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவு களையும் எடுத்துச் சொல்லி அவர்களாகவே அது பற்றித் தெளிந்து ஒரு முடிவுக்கு வரச் சேய்வது தான் உண்மையான பாலியல் கல்வி. உடலு றவு ஏற்படுத்தும் உணர்ச்சிகள், மற்றவரது உடல், மன உணர்ச்சிகளுக் கும் எண்ணங்களுக்கும் தர வேண்டிய மதிப்பு – இவைகள் பற்றியும் சொ ல்லித் தருவதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பால் வேறுபாடுகள் பற்றி உணர இந்தக் கல்வி வழி செய்ய வேண்டும்.

 

அடுத்த படியாக, பாலியல் கல்வி, எத்தகைய உறவுகள் எண்ணங்களை பலப்படுத்தக் கூடியது என்று இளைஞர்கள் தாங்களே தீர்மானிக்கும் வகையில் அமைய வேண்டும். அவர்கள் பாலுறவில் அச்சுறுத்தல், தவ றான அணுகுமுறைகள், மற்றவர்களது பலவீனத்தைத் தனக்கு சாதக மாகப் பயன்படுத்துதல் முதலிய முறைகள் இனிமையான உறவுகளை எப்படிப் பாதிக்கும் என்பதை உணரு ம்படியாக அமைய வேண்டும்.

 

இளைஞர்கள் செக்ஸ் பற்றிப் பல்வேறு முறைகளில் தெரிந்து கொள்கி றார்கள். அவற்றில் சில சரியான தகவல்களைக் கொடுக்கும் வேளையில், சில சாதனங்கள் பாலுறவு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புகின்றன. அதனால் செக்ஸ் பற்றிய கல்வியைக் கொடுக்குமுன்னால், மாணவர்களி டையே பாலுறவு பற்றிய தவறான கருத்து இருந்தால் முதலில் அதைப் போக்க வேண்டும். பாலியல் கல்வி படிப்பவர்கள் சிலர், கருத்தடைச் சாதனங்களால் பயனில்லை என்றோ அல்லது HIV/AIDS போன்ற நோய்கள் குணப்படுத்தக் கூடியவைதான் என்றோ தவறான கருத்துக்கள் கொண்டிருக் கலாம். இது போன்ற தவறான கருத்துக்களை முதலில் அவர்களது மனதிலிருந்து நீக்க வேண்டும். இளைஞர்கள் கீழே கொடுக்கப்பட்ட விஷய ங்கள் பற்றி நன்றாக அறிந்திருப்பது அவசியம்:

 

பாலுணர்வு வளர்ச்சி (Sexual development)

 

இனப்பெருக்கம்

 

கருத்தடை

 

உறவுகள்

 

இளைய சமுதாயத்தினர் அவர்கள் வயதிற்கு வரும்போது உடலி லும், மன அளவிலும் ஏற்படும் மாற்றங்கள், கருத்தரித்தல், கருத் தடை, குடும்பக் கட்டுபாடு, உடலுறவு மூலமாகப் பரவும் வியாதிகள், HIV/AIDS பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த வித மான கருத்தடைச் சாதனங்கள் உள்ளன, அவை எப்படி வேலை செய்கின்றன, அவைகள் எப்படி உபயோகப் படுத்தப் படுகி‎ன்றன, எந்தக் கருத்தடைச் சாதனங்கள் சிறந்தவை, அவைகளை எப்படிப் பெற முடியும் என்பது பற்றி அறிந்திருத்தல் நலம். இவை பற்றி ஆலோசனைகளை சமுதாயத்திலும், தேசிய அளவிலும் எப்படிப் பெறலாம் என்பதையும் அவர்கள் தெரிந் திருக்க வேண்டும்.

 

பாலியல் கல்வியைத் துவக்குவதற்கு எது சரியான தருணம்? சொல்லப் போனால் பாலியல் கல்வியை இளமையிலேயே, பருவமடைவதற்கு முன்பே ஆரம்பிக்க வேண்டும், சரியாக எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது படிக்கும் இளைஞனது உடல், மன அறிவு வளர்ச்சியையும் அவர்களது புரிந்துகொள்ளும் தன்மையையும் பொறுத்தது.

 

என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், அதை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அதை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள், எப்போது சொல்லிக் கொடுக்கிறார்கள் எந்தச் சூழ்நிலையில் சொல்லிக் கொடுக்கப் படுகிறது, படிக்கும் இளைஞன் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறான் என்பதைப் பொறுத்தது. நாட்களை வீணாக்காமல் இளமையிலேயே பாலியல் கல்வியைத் துவங்குவது அவசியம். அடிப்படையான விஷயங்களை முதலில் சொல்லிக் கொடுக்கலாம்.

 

உதாரணமாக சிறு வயதில், மனிதர்கள் எப்படி நாளுக்கு நாள் குழந்தைப் பருவத்திலிருந்து காலப் போக்கில் வளர்ச்சி அடைகிறார்கள். எப்படிக் குழந்தைகளாயிருந்து பெரியவர் களாகிறார்கள் போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்துப் பாலியல் கல்வியைத் துவக்கலாம். இது பருவமெய்துவதைப் பற்றி விளக்கமாக சிறு பிராயத்திலேயே தெரிந்துகொள்ள அடிப்படையாய் இருக்கும். நம் உடலில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இது பாலுறவால் தொற்றக்கூடிய நோய்களைப் பற்றிப் பின்னர் விளக்குவதற்கு உதவி செய்யும்.

 

பாலியல் கல்வி இளைஞர்களிடையே தேவையற்ற ஆர்வத்தைத் தூண்டி அவர்களைப் பாலுறவுகளைப் பரிசோதனை செய்து பார்க்கத் தூண்டுகிறது என்று சிலர் வாதிடுவதுண்டு. ஆனால் இவ்வாறு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இளவயதில் சொல்லப்படும் செய்தி அவர்களது மனதில் சுலபமாகத் தங்குகிறது. குழந்தைகளிடம் எதையும் பேசக் கூடாது என்ற மனப்பான்மை யுடன் இல்லாமல் குழந்தைகள் நம்மைக் கேள்வி கேட்கும்போது தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம்.

 

பெற்றோர்களும், ஆர்வலர்களும் இளைஞர்களிடம் செக்ஸ் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் விவாதிக்கலாம். பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடம் இது மாதிரி விஷயங்கள் பற்றிப் பேசுவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இது போன்ற தயக்கங்களைக் கைவிட்டு, அதை ஒரு முக்கியத்தவம் வாய்ந் தததாக, இளைஞர்களது பார்வையை விசாலப்படுத்துவதாக, சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு கல்வி யாக அணுக வேண்டும். இதற்கு இளைஞர்களிடம் ஒரு நல்ல நெருக்கம் வைத்துக்கொண்டு நம்மிடையே அவர்கள் மனதிலுள்ளதைப் பரிமாறிக் கொள்வதற்கான பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய மனப்பான்மை இளைஞர்களிடையே பாலியல் பற்றிய ஒரு ஆரோக்கியமான சிந்தனையைத் தோற்றுவித்துள்ளது. இளைஞர்களின் வயது கூடும்போது அவர்களுக்குப் பாலுறவு பற்றி மேலும் தெரிந்து கொள்ள வாய்ப்புக்கள் சமுதாயத்தின் மூலமாகவும் ஊடகங்களின் மூல மாகவும் அவர்களது பள்ளிகளின் மூலமாகவும் கிடைக்கி‎ன்றன. ஆனாலும் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அறிவினை ஊட்டுவதில் பெற்றோர்களுக்குத்தான் பெரும் பங்கிருக்கிறது.

 

வீடுகளில் பெற்றோர்களிடம் இளைஞர்கள் மனம் விட்டுப்பேசித் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, கவலைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இது ஒரு தொடர் கல்வி. பெற்றோர்களின் பங்கு அதிகமிருந்தாலும் பள்ளிகளுக்கும் மற்றும் பல சமூக நிறுவனங்களுக்கும் இந்தக் கல்வியை இளைஞர்களுக்கு அளிப்பதற்கான பெரும் பொறுப்பு இருக்கிறது.

 

பள்ளிகளில் ஒரு பாடத் திட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி, கல்வி தரப்படுகிறது. வேண்டிய தகவல்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்ளப் பாடத்திட்டங்கள் போதுமான வாய்ப்பளிப்பதில்லை. பாலியல் கல்வி இளை ஞர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால் அவைகள் வேண்டிய தகவல்களை அனைத்து இடங்களிலிருந்தும் பெற வேண்டும். பள்ளியில் நடப்படத்தப்படும் கல்வியில் பெற்றொர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

 

ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊடகங்களின் மூலமும் மற்ற சாதனங்கள் மூலமும் தாங்கள் பெறும் செய்திகளை இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். சில நாடுகளில் பாலியல் கல்வியை வலுப் படுத்துவற்கான முறைகளை இளைஞர்களிடமே கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் தேவைகளை அவர்களே உணர்வதோடு ஒரு ஈடுபாடும் ஏற்படுகிறது. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகிறது.

 

பாலியல் கல்வி பள்ளிகளில் எந்த முறையில் அமைய வேண்டும்?

 

அவை இளைஞர்களுக்கு முக்கியமாகக் கற்றுத்தர வேண்டியவை என்ன?

 

1. அது இளைஞர்கள் தவறான பாதையில் போவதைத் தடுக்க வேண்டும்.

 

2. மக்களிடையே உள்ள வேறுபட்ட பாலுறவு பற்றிய கருத்துக் களுக்கும் மனோபாவங்களுக்கும் எது காரணம்?

 

3. பாலுறவு பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் தெளிவான அறிவு.

 

4 தவறான பாலுறவால் ஏற்படக்கூடிய பதிப்புக்கள், கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சரியான தகவல்கள்.

 

5 சமூகத்தினாலும், உடனிருப்பவர்களாலும் ஏற்படக்கூடிய அழுத்தங்கள்.

 

6. இளைஞர்களின் மனதில் பதியுமாறு பலவிதமான முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் பாலியல் கல்வியின் அவசியத்தை உணரச் செய்தல். இந்தக் கல்வி முறை இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், உடலுறவு கொள்ளும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ள உதவும்.

 

7. பாலியல் பற்றி நன்கு அறிந்த அது சார்ந்த துறையிலிருப்பவர்களுடன் கலந் துரையாடல்.

 

மேலே சொன்ன யாவுமே மிகவும் அவசியமானவை, ஒன்றுக்கொன்று தொடர்புடயவை. முக்கியமாக, பாலியல் கல்வி பாலியல் நல நிலையங்களுடன் நெருங்கிய தொடர்பு டையவாய் இருக்கவேண்டும். இளைய சமுதாயத்திற்குப் பாலியல் கல்வி அவசியம் என்பதை நன்குணர்ந்தாலும் அதை எவ்வாறு அவர்களுக்குப் பயன் தரும் வகையில் அளிக்க முடியும் என்று ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதானதல்ல. பாலியல் கல்வி என்பது ஒரு முனைப்பட்டதல்ல. பலவேறு தனித் தனிப்பட்ட செயல்களை ஒன்று சேர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இது உணர்வுபூர்வமான நுண்ணிய முறையில் அணுக வேண்டிய ஒரு கல்வி. இளைஞர்களின் மனோ பாவம், ஊடகங்கள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு, அவர்களி ன் தனிப்பட்ட எண்ணங்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, கற்றுக் கொள்பவரின் மனப்பக்குவம் போன்ற பல விஷயங்கள் இந்தக் கல்வியில் அடங்கியிருக்கின்றன. சமூக நல நிலையங்களும் இதில் பெரும் பங்காற்ற முடியும். அரசாங்கத்தின் உதவியுடன் ஊடகங்கள் மூலமாகப் பாலியல் கல்வியை நாட்டின் பல பாகங்களிலுமுள்ளவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க முடியும். பாலியல் கல்வியின் வளர்ச்சி மேலே சொன்னவர்களின் பங்களிப் பில்தான் இருக்கிறது.

 

இதைத் தவிர, புதிதாகத் திருமணமான தம்பதிகள், ஒரினச் சேர்ர்க்கையினர் ஆகி யோருக்கென்று தனியாக எவ்வாறு பாலுறவுகள் பற்றிய அறிவை அளிக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். அகதிகள். அனாதையாகத் தெருவில் திரிபவர்கள், சிறையிலிருக்கும் இளைஞர்கள். என்று பல விதமான பிரிவினர்களுக்கும் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.

 

இங்கே கூறப்பட்டவை பாலியல் கல்விக்கு அடிப்படையாக இருந்தாலும் எல்லாப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் கல்வியைத் தயார் செய்ய வேண்டும். கொடுக்கப்படுகின்ற பாலியல் கல்வி எதிர் காலத்தில் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.

 

(ஆதாரம்: AVERT.ORG)

 

https://vidhai2virutcham.wordpress.com/2012/03/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2/

 

சிறிலங்காவி்ன் பாடவிதானங்களில் பாலியல் கல்வி
December 25, 2012, 10:41 am|views: 748
 

பாலியல் தொடர்பான தகவல்களை உரிய முறையில் பெற்றுக் கொள்வது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

 

வீட்டுக்குள் புக தருணம் பார்த்து தெருவில் உலாவும் கள்ளன் தெருவில் நடப்பது தனது அடிப்படை உரிமை என்று விவாதிப்பது வழமை.

கிளிநொச்சியில் கட்டடாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களின் அடிப்படை உரிமைகளை முதலில் இந்த மந்திரி பேசட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் பாராட்டுக்கள் கல்வி அமைச்சுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.