Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் சுயவேட்கையா ?? சுயநலமில்லாத உணர்வா?

Featured Replies

என் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம்  பெரியார் காதலை பற்றி சொன்னதை மின்னஞ்சலில் அனுப்பினேன்.

 

"எப்படிப்பட்ட காதலும், ஒரு சுயலட்சியத்தை, தனது இஷ்டத்தை, திருப்தியை கோரித்தான் ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, போக போக்கியத்துக்குப் பயன்படுவதைக் கொண்டோ, அல்லது, மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும்! அப்படிப்பட்ட, காரியங்களுக்கெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாக இருக்கலாம்; அல்லது, அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்."

 

யாரோ சொன்ன "human is a political animal" என்ற இந்த வார்த்தை தான் ஞாபகத்திற்கு வந்தது.

 பையன் ஏகத்துக்கு கோபப்பட்டு எனக்கு அனுப்பிய பதில்

 

ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டதோ தான் காதல் ஏன்றால் , நீ காதல் கொண்ட பெண் உங்கள் பாணியில்  கூறினால் எதோ ஓர் காரியத்திற்காக இருப்பவளை மற்றொருவன் பேசினாலோ , சிரிச்சலோ உனக்கு என்ன? ஏன் வயிறு எதோ செய்கிறது? உன் எதிர்பார்ப்பும் நடக்கும் அல்லவா பொறுமையாக இருக்கலாமே !!!
 
அல்ல அவளுடன் இருந்த இடத்திலோ , அவள் பெயரையோ , அந்த நாட்களில் ஏற்பட்ட எதோ ஒன்று மறுபடியும் நிகழும் போது அவள் ஞாபகம் வந்து சிரிப்பாய் அல்லது அழுவாய். இது எதனால் என்று கூற முடியுமா தோழா !!!!
பேசி பேசி உன் சுவாசத்தில் கலந்து, உன் வீட்டு மங்கைகளையும்  கூட சற்றென்று தடுமாறி அவள் பெயர் சொல்லி அழைக்கும் காதலை நீ அறியலையோ !!!! ஒரு காதல் மயம்கொண்ட திரைப்படத்தில் கூட , ஜோடிகளுக்கு அந்நியோன்யம் இல்லை என்றால் அது சிதறி விடும்.
 
தன்னையே மறந்து ஆண் கர்வத்தையும் பெண் நாணத்தையும் ஆட்கொள்வது தான் காதல் . இதை சிந்திக்க அல்ல உணரவோ நூறு காதல் வேண்டாம்.  ஓர் உயிரை உண்மையாக நேசித்தால் போதும் !!!

 


என்னால் இதை சரியான மாற்றுக் கருத்தாக கொள்ள இயலவில்லை. பெரியார் சொன்ன கருத்துக்கு சரியான மாற்று கருத்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை புள்ளி வழங்கப்படும். Expecting provoking thought..
 
 

ஆக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஆதித்ய இளம்பிறையன் . நான் சொல்வது  மற்றவர்களுக்கு பிடிக்குமோ தெரியவில்லை  . காமத்தின் தொடக்கப்புள்ளி காதல் என்று சொல்லலாம் . இடையில் வருபவை காமத்தை அடைய ஏற்படுத்தும் காட்சி அமைப்புகள் என்றும் சொல்லலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பெரியார் எழுதியதை விடுங்கோ ஆதித்தியன் காதல்பற்றி உங்கள் சுயகருத்தை எழுதவில்லையே?  

பெரியார் தனக்கும் மணி அம்மைக்கும் இருந்த உறவை எல்லோர் மீதும் ஏற்றிப் பேச முடியாது. அவ்வளவு இலகில் தனது அனுபவத்தை பெரியார் பொது விதியாக்க பெரியார் மட்டும்தான் இந்த உலகில்  பிறந்த மனிதன் அல்ல. 

 

கருணை என்பது பலன் எதிர்பார்க்காத மனித உணர்வு. நீங்கள் கொடுக்கும் போதோ அல்லது உதவும் போதோ பலனை கேட்டு கடுமையான கொடுக்கள் வாங்கும் செயல்ப்பாடுகளின் பின் செய்வது கருணை அல்ல. அது வியாபாரம். பசு தன் கன்று மீது ஏதும் வியாபார வசனங்களில் பேசி முடிவெடுத்து அன்பை செலுத்துவதில்லை. அன்பு, பாசம்  மிருகங்களில் காணப்படும் இயற்கை உணர்வு. பலதடவைகளில் பல வகைப் பறவைகள், ஒரு தடவை இணைந்தால் வாழ்நாள் பூரவும் சேர்ந்து வாழ்கின்றன என்பது அறிவியலால் நிரூபிக்க பட்டது. அவை ஒன்றிறந்தால் மற்றதும் இறந்து போவது அவதானிக்கப்பட்டதாக பலமுறை கூறப்பட்டிருக்கிறது. இதற்குள் மனிதனுக்கு மட்டும் தெரிந்த பண்டமாற்றம் வியாபாரம் நடை பெறவில்லை.

 

 

தாயும் தந்தையும் பேசி செய்யும் திருமணத்தை மேலைநாடுகளில் தமக்குத்தான் காதலனும் காதலியும் பேசிசெய்த்துகொள்கிறார்கள். ஆனால் இது ஒன்றும் புதுமையானதல்லாவிட்டாலும்  அது இது பொது விதியுமல்ல.

 

பெரியார் சொல்லியிருக்கும் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ பரிமாறிக்கொண்டு  பல வியாபர காதலில் பலர் ஈடுபடுவது ஒன்றும் புதுமையானதல்ல.

 

ஆனால் அவர் பருவத்தை பற்றி கூறியிருப்பது மிகவும் பிழையானது. பருவம் காதலர்களிடம் பரிமாறிகொள்ளப்படும் பொருள் அல்ல. 5ம் வயதில் பள்ளி செல்வது என்னவோ உண்மைதான். ஆனால் பருவத்தில் காதலிப்பது என்பது விதியல்ல.

 

அனபு காதல், கருணை, பத்தி என்பவை பலனை எதிபாரமல் மனித மனத்தில் மட்டுமல்ல பல உயிரினங்களின் மனங்களில் தோன்றும் ஒரு உணர்வு. பெரியார் மனிதன் மனிதனை எப்போதுமே உறிஞ்சிக்கொள்ளும் ஒட்டுணிதான் என்று விபரிப்பது எற்கமுடியாதது.

 

  • தொடங்கியவர்

கருத்திட்ட கோமகன் ,சுமேரியர் மற்றும் மல்லை உங்களுக்கு நன்றி.

 

நீங்கள் பெரியார் எழுதியதை விடுங்கோ ஆதித்தியன் காதல்பற்றி உங்கள் சுயகருத்தை எழுதவில்லையே?  

 

எனக்கென்று காதலை பற்றி தெளிவான எண்ணம் ஏதும் கிடையாது. பள்ளிபருவத்தில் காதல் எண்ணவே கூடாத குற்றம். கல்லூரிப் பருவத்தில் காதல் ஒரு புனிதம். வேலை தேடும் நாட்களில் காதல் ஒரு காமம் சார்ந்த உணர்வு. இப்பொழுது "கற்பனையை தோற்றுவிக்கும் ஒரு இன்பமான உணர்வு". எப்பொழுதும் அதை பற்றி ஒரு கற்பனையான  உணர்வே என்னை சுற்றி பிண்ணி கொண்டிருக்கிறேன். ஆதலால் தான் அது எந்த வகையான உணர்வு என அறிய விழைகிறேன்.

 

பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும், அறிஞர்களும் காதலை வரையறை செய்ய முயன்று கொண்டே இருக்கிறார்கள். அது எட்டப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

காதலைப் பற்றிய மனோதத்துவ நிபுணர்கள் கருத்து.
காதல் ஒரு இயற்கை சக்தி. அதை கட்டளையிடவோ, கட்டுபடுத்தவோ, வாங்கவோ,விற்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாது. இதற்கு எல்லைகள் கிடையாது .இது ஒரு சுதந்திரமான உணர்வு.

"The 7 Spiritual Laws of Love" என்ற புத்தகத்தில் காதலை உருவாக்கும் சக்திகள் என்ன என்பதை விவரித்து இருந்தார்கள். அது உங்கள் பார்வைக்கு.

1. காதலுக்கென்று ஒரு விதி. அதில் அறிவு, நம்பிக்கை, யூகத்திற்கு இடமில்லை. ஒன்றே ஒன்று தான் இதயம் சொல்படி நடப்பது.
2. நீங்கள் காதலிக்கப்படுவதற்கு கெஞ்சவோ, உணர்வுகளை கட்டுபடுத்தவோ சமரசம் செய்யவோ வேண்டியதில்லை.
3. நீங்கள் எவ்வளவு அன்பு செய்கிறீர்களோ,விட்டுக் கொடுக்கிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் அந்த உணர்வால் சூழப்படுவீர்கள்  
4. மன்னித்தல் / உண்மையாயிருத்தல் 
5. ஒப்புவித்தல் / தன்னை கொடுத்தல்
6. தோழமை / நெருக்கம் / கட்டுகடங்கா ஆர்வம்

 

இன்னும் பார்க்கலாம்.





 

 

  • கருத்துக்கள உறவுகள்

காதல் சுயநலமில்லாத உணர்வாக உதித்து.. ஆண் - பெண் நெருக்கம் கூடக் கூட சுயநல உணர்வாக துரித கதியில் பரினாம வளர்ச்சி காணும் ஒரு உணர்வு..! காதலுக்கு வயதும் இல்ல.. காலமும் இல்லை. அது இயற்கையில் உயிரினங்களில் அமைந்த ஒரு உணர்வு..! இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் காதல் பற்றிய புரிதல் எப்போதுமே சரியாக இருக்காது என்பது எனது திடமாக கருத்து..! :icon_idea::)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காதல் உருவமற்று
நிறமற்று மணமற்று
சுவையற்று மனித,
மங்களில் மலர்ந்து.
பின் காலத்தின் மாற்றத்தினால்
மலர் விட்டு மலர் தாவும் வண்டாகிறது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

"What's Love Got To Do With It"



You must understand
That the touch of your hand
Makes my pulse react
That it's only the thrill
Of boy meeting girl
Opposites attract

It's physical
Only logical
You must try to ignore
That it means more than that

[Chorus:]
Oh what's love got to do, got to do with it
What's love but a second hand emotion
What's love got to do, got to do with it
Who needs a heart
When a heart can be broken

It may seem to you
That I'm acting confused
When you're close to me
If I tend to look dazed
I've read it someplace
I've got cause to be

There's a name for it
There's a phrase that fits
But whatever the reason
You do it for me

[Chorus]

I've been taking on a new direction
But I have to say
I've been thinking about my own protection
It scares me to feel this way

[Chorus]

What's love got to do, got to do with it
What's love but a sweet old fashioned notion
What's love got to do, got to do with it
Who needs a heart when a heart can be broken
 
 
  • தொடங்கியவர்

கருத்திட்ட நெடுக்ஸ், யாயினி,  நுணவிலான் உங்களுக்கு நன்றிகள்

 

காதல் சுயநலமில்லாத உணர்வாக உதித்து.. ஆண் - பெண் நெருக்கம் கூடக் கூட சுயநல உணர்வாக துரித கதியில் பரினாம வளர்ச்சி காணும் ஒரு உணர்வு..! காதலுக்கு வயதும் இல்ல.. காலமும் இல்லை. அது இயற்கையில் உயிரினங்களில் அமைந்த ஒரு உணர்வு..!

 

காதல் சுயநலமில்லாத உணர்வு என்பதை என்னால் அறிய முடிகிறது. ஏனெனில் உணர்வுகளுக்கு எந்த வகையான சுய நோக்கமும் இருக்க முடியாது. அது இயற்கை.  ஆனால் காதலை சுயநலமில்லாத உணர்வு என்ற வரையறைக்குள் முடக்க முடியுமா ?

 

 

பின் காலத்தின் மாற்றத்தினால்
மலர் விட்டு மலர் தாவும் வண்டாகிறது.

 

காதல் ஒருவருடன் தான் வரும் என்ற வரைமுறை ஏதும் உண்டா?

 

 

You must understand
That the touch of your hand
Makes my pulse react
That it's only the thrill
Of boy meeting girl
Opposites attract
 
யாருடைய தீண்டல் உங்களுக்கு அதிகபட்ச அதிர்வைத் தருகிறதோ அந்த உணர்வுதான் காதல் என்று கொள்ளலாமா ??
 
யாயினி,  நுணவிலான் நான் இதுவரை கேட்டறியா அருமையான பெயர்கள். யாயி என்ற வார்த்தையை சங்க இலக்கியத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால்  நுணவிலான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இதற்கு ஏதனும் தமிழ் அர்த்தம் இருக்கிறதா?
  • 2 weeks later...

காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது என்பற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ ஞானி பிரட்ரிச் வில்ஹெல்ம் நிட்சே என்பவர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியுள்ளார்.. அவரது ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை அட்டகாசமாக இருக்கிறது.

 

அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்... -

 

ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். அப்போதுதானே அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள், அந்தப் பைத்தியக்காரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு அழகான காரணமும் ஒளிந்திருக்கும். அதுதான் அந்தக் காதலை மேலும் அழகாக்குகிறது.

- ஒரு முழுமையான மனிதனைக் கண்டுபிடித்துக் காதலிப்பது நிச்சயம் சரியான காதலாக இருக்க முடியாது. ஆனால் சின்னச் சின்னக் குறைகளை உடைய, முழுமை இல்லாத ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் காதலித்து அவனை முழுமையான மனிதனாக மாற்றுவதே உண்மையான காதல்.

- நான் உன்னை நிச்சயம் ஒருபோதும் வெறுத்ததில்லை. ஒரு வேளை உன் மீது நான் கோபத்தைக் கொட்டினாலோ அல்லது வெறுப்புடன் பேசினாலோ நிச்சயம் அது அதிருப்தியின் அடையாளம் அல்ல. மாறாக, உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள்தான்.

- உன்னைச் சந்தித்தது விதி... உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது, என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்....!

- என்னிடம் நீ சொன்ன பொய்க்காக நான் கோபமாக இல்லை. என்னை நீ நம்பவில்லையே என்ற ஆதங்கம்தான் என் உண்மையான கோபத்திற்குக் காரணம்.

- காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி, வழிகாட்டி, வெளிச்சக் கீற்று.

- நான் இன்னும் வாழ்கிறேன், தொடர்ந்தும் வாழ்வேன்.. நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை - அதே காதலுடன். எவ்வளவு அருமையான வார்த்தைகள்...

Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2013/madness-love-167680.html

எனக்கென்று காதலை பற்றி தெளிவான எண்ணம் ஏதும் கிடையாது. பள்ளிபருவத்தில் காதல் எண்ணவே கூடாத குற்றம். கல்லூரிப் பருவத்தில் காதல் ஒரு புனிதம். வேலை தேடும் நாட்களில் காதல் ஒரு காமம் சார்ந்த உணர்வு. இப்பொழுது "கற்பனையை தோற்றுவிக்கும் ஒரு இன்பமான உணர்வு". எப்பொழுதும் அதை பற்றி ஒரு கற்பனையான  உணர்வே என்னை சுற்றி பிண்ணி கொண்டிருக்கிறேன். ஆதலால் தான் அது எந்த வகையான உணர்வு என அறிய விழைகிறேன்.

காதல் பாலியல் உணர்வல்ல. நாகரிக சமுதாயத்தில் வாழ்க்கை நடத்தும் மனிதன் பாலியல் உணர்வுகள் ஏற்படும்போது அதை மறைக்க வேண்டியது நாகரிகமாக காணப்படுகிறது. காதலை பாலியல் உணர்வாக தவறி அடடையாளப்படுத்தும் போது சமுதாயங்களில் காதலை ஒழிக்க(மறைக்க) வேண்டியிருக்கிறது.  அன்புக்கும் காதலுக்கு ஒரு மெல்லிய பிராசாரண தோல் பிரிவுதான் இருக்கிறது. இதனால் இரண்டும் மற்றயதின் வெளியில் ஒழுகிவிடுவதுண்டு. காதல் வெறுமனே துணை தேடும் உணர்வு. காதலில் ஈடுபடும் அடுத்த பக்கத்தின் தேவையை அலசிப்பார்த்துவருவதல்ல(அது பண்ட மாற்று-வியாபாரம்). அன்பு நன்று செய்யும் உணர்வு. அடுத்த பக்கத்தின் தேவையை அலசிப்பார்த்து வருவது அல்ல. காதல் அடுத்த பக்கத்தை தனக்கு இணையாக கருதுவதாலும், அன்பும், பக்தியும் அடுத்த பக்கத்தை தனக்கு இணையில்லாமல் கருதுவதாலும் வரும் உணர்வுகள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.