Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த கொடூரம்...சீக்கியரின் தலை துண்டிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கொடூரம்... சீக்கியரைக் கடத்தி தலையைத் துண்டித்துக் கொன்ற பாக். தீவிரவாதிகள்.

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தால், 2 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டதும், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் வசித்து வந்த ஒரு சீக்கியரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

 

அவரது பெயர் மொஹீந்தர் சிங். 40 வயதான இவர் மருந்து வியாபாரி ஆவார். கைபர் பழங்குடியினப் பகுதியில்உள்ள தப்பாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவரை நவம்பர் 20ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதக் கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து உடலையும், தலையையும் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

 

அவரது உடலும் சிதைக்கப்பட்டுள்ளது. ஒரு சாக்குப் பையில் உடல் கிடந்தது. அதிகாரிகள் அதைக் கைப்பற்றிவிசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்தக் கொலைக்கு தவ்ஹீதுல் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். லஷ்கர் இ இஸ்லாம் என்ற போட்டி தீவிரவாத அமைப்புக்கு உளவு பார்த்ததால் மொஹீந்தர் சிங்கைக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்தக் கொடூரக் கொலையால் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தினர் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் சீக்கியர்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்.

 

இதற்குப் பிறகும்... இந்தியா மௌனம் சாதிப்பது சரியல்ல. உடனடியாக... பாகிஸ்தான் மீது, போரை ஆரம்பித்து, பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும்.

qUOTE "இதற்குப் பிறகும்... இந்தியா மௌனம் சாதிப்பது சரியல்ல. உடனடியாக... பாகிஸ்தான் மீது, போரை ஆரம்பித்து, பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும்"

 

பகிடிக்குதானே சொன்னீங்கள்



அல்லாவுக்கு பகிடியும் தெரியா, உண்மையென்று நினைத்திடப்போறார்

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் கிடையாது சிறி

இந்தியாவுக்கு குனிந்தவனை  குட்டித்தான் பழக்கம்.

அது தான் அவர்களால் முடியும்

பாகிஸ்தான் இதை ஸ்ரீ லங்கா விடம் இருந்தது கற்றிருக்கும்...

நாங்கள் மீனவனை பிடிக்கிற இலங்கை படைகளை இந்தியா தண்டிக்கும் என்று கனவு கண்டா,
இந்தியாவால் தன்னுடைய இராணுவத்திற்கு நடந்த பிறகுமே ஒரு கடுமையான பயமுறுத்தலையே விட முடியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினையோ கோடியில் இப்ப மூன்றுதானே போயிருக்கு? :D

பலருக்கு எந்த வரலாறும் தெரியாது போலிருக்கு .

1971 இந்திய -பாகிஸ்தான் யுத்தம் .பங்களாதேஷ் உருவாக்கம் .பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ,சீனா ,ஈரான் உதவி .இந்தியாவிற்கு ரஷ்ய உதவி.அமெரிக்க அதிபர் நிக்சன் ,கிஸ்சிஞ்சர் மூலம் இந்திரா காந்திக்கு எவ்வளவோ அழுத்தம் கொடுத்தார் யுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று ,யுத்த கப்பலை வேறு அனுப்பினார் நிக்சன் .

எதையும் பொருட்படுத்தாமல் வடக்கு ,கிழக்கு என இருமுனையிலும் போரை நடாத்தி கிழக்கில் பாகிஸ்தானை சரணடைய வைத்து பங்களாதேஷ் உருவானது .

இந்த போரின் பின் இந்தியா ஒரு பெரும் துரோகம் பங்களாதேஷ் போராளிகளுக்கு செய்தது ,தானே பயிற்சியும் ஆயுதம் கொடுத்து  வளர்த்த முக்திவாகினியை அழித்து ,நிராகரித்து முஜிபிர் ரகுமான் கையில் தலைமையை கொடுத்தது .

பலருக்கு எந்த வரலாறும் தெரியாது போலிருக்கு .

1971 இந்திய -பாகிஸ்தான் யுத்தம் .பங்களாதேஷ் உருவாக்கம் .பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ,சீனா ,ஈரான் உதவி .இந்தியாவிற்கு ரஷ்ய உதவி.அமெரிக்க அதிபர் நிக்சன் ,கிஸ்சிஞ்சர் மூலம் இந்திரா காந்திக்கு எவ்வளவோ அழுத்தம் கொடுத்தார் யுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று ,யுத்த கப்பலை வேறு அனுப்பினார் நிக்சன் .

எதையும் பொருட்படுத்தாமல் வடக்கு ,கிழக்கு என இருமுனையிலும் போரை நடாத்தி கிழக்கில் பாகிஸ்தானை சரணடைய வைத்து பங்களாதேஷ் உருவானது .

இந்த போரின் பின் இந்தியா ஒரு பெரும் துரோகம் பங்களாதேஷ் போராளிகளுக்கு செய்தது ,தானே பயிற்சியும் ஆயுதம் கொடுத்து  வளர்த்த முக்திவாகினியை அழித்து ,நிராகரித்து முஜிபிர் ரகுமான் கையில் தலைமையை கொடுத்தது .

 

அது சரி கஸ்மீருக்கு என்ன நடந்தது?

 

கிழக்கு பாகிஸ்தானின் வங்காள புரட்சி வீரர்கள் தான் வென்றார்கள்.

 

1000 மைல்களுக்கு அப்பால் இந்தியாவால் சூழப்பட்டிருந்த கிழக்கு பாகிஸ்த்தானில் வங்காளதேச படைகள் வெற்றியீட்டின. அதுவும் இந்திய நவீன சரித்திரத்தின் ஜான்சி ராணி பதவியில் இருந்தா. அவ இல்லையாயின் பாகிஸ்தான் இந்தியாவுக்குள்ளால் படை நடத்திக் கொண்டுபோய் கிழக்கு பாகிஸ்தானை நொறுக்கியிருக்கும்.

 

பாகிஸ்தானிய போடரில் இருந்த காஸ்மீரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவுக்குள் சென்று வெற்றியீட்டின.

 

இந்திய படைகளுக்கு தோல்வி. இந்திரா காந்திக்கு அரசியல் வெற்றி!

 

Mujibur Rahman was ultimately released on 8 January 1972, due to direct US intervention.[28]

Edited by மல்லையூரான்

செயலதிபர் எழுதிய வங்கம்  தந்த பாடம் வாசிச்சநீங்களோ அர்யுன் அண்ணா வாழ்த்துக்கள் .அப்பிடியே மாலைதீவு தந்த பாடத்தை எழுதினால் நாங்களும் படிப்போம்-  இறந்த சீக்கியர்  இந்தியாவிற்கு உளவு பார்த்தவரா இருக்கலாம். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாகிதானுக்கு உளவு பார்ப்பதும் பாகிதானில் உள்ள இந்துக்களும் பஞ்சாபி மற்றும் சீக்கியர்களும் இந்தியாவிற்கு உளவு பார்ப்பதும் அங்கு சாதாரணம். ஒருக்கா கராட்சிப் பக்கம் போனால் எல்லாம் விளங்கும். உமாமகேசுவரனே கராச்சியில் ஐஎஸ் ஐ காரன் எண்டு நம்பி இந்தியரோக்காரனிட்டை மாட்டினவர் . சிந்து மாநிலத்தில் இந்திய ரோ ஊடுருவல் அதிகம் அங்கு பாகிஸ்தான் படைகள் பெருசா ஒண்டும் பண்ண முடியாது 

இந்தியா ஒரு பாகிஸ்தானிய இராணுவ வீரனை சுட்டுவிட்டத்தாக குற்றசாட்டுகள் எழுந்திருக்கிறது. இந்தியா பக்கம் அவன்தான் முதல் சுண்டான் என்று திரும்பி சாட்டுகிறதாம்.

 

பாகிஸ்தானில் 100 பேரை தற்கொடை போராளிகள் கொன்றார்களாம்.

Edited by மல்லையூரான்

மலை: 1971 இந்தியா 90000 பாகிஸ்தான் POWஐ  விடுதலை செய்தது..
இந்தியா பாகிஸ்தான் போர்களில், பாகிஸ்தானுக்கு starting OK, finishing தான் Bad

இந்தியா லூஸ் பண்ணினது 2 சன்டை தான் ஒன்று China (1961) மற்றது LTTE  :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.