Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலியாண மந்திரம்

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்

கலியாணச் சடங்கு எண்டு சொல்லிப் போட்டு எங்கடை புரோகிதர்மார் பண்ணுற அட்டகாசம் இருக்குதே, சீயெண்டு போயிடும். ரெண்டு பேரையும் இருத்திவைச்சுப் போட்டு ஒருத்தருக்கும் விளங்காத (அவையளுக்கே விளங்குமோ தெரியாது) மந்திரங்களைச் சொல்லுறதென்ன, அதை இங்கை போடுங்கோ இதை அங்;கை போடுங்கோ அப்பிடிப் பாருங்கோ இப்பிடிப் பாருங்கோ, மூண்டு தரம் சுத்துங்கோ ஆறுதரம் இருந்தெழும்புங்கோ .. . . . அப்பப்பா .. . .

கலியாணம் பேசேக்குள்ளையும் அந்தப் பொருத்தம் , இந்தப் பொருத்தம் எண்டு பாக்கிற ஆக்கள் மனப் பொருத்தம் எண்ட ஒண்டையும் பாத்தால் நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன்.

நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஆம்பிளையும் பொம்பிளையும் நான் கீழை சொல்லிற மாதிரி ஒருத்தருக்கொருத்தர் தங்கடை விருப்பங்களைக் கேட்டு ஒத்து வந்தால் வடிவாச் சாமியைக் கும்பிட்டிட்டு உங்கடை வாழ்க்கையைத் தொடங்குங்கோ ஒரு குறையும் வராது. (ஆரெல்லாம் அடிக்க வரப் போகினமோ தெரியாது)

வாசிச்சுப் போட்டு கருத்துக்களை எழுதுங்கோ சரியே?

துணையுன்னைக் கேட்பேன்

இல்லறத்தை நல்லறமாய்

இறுதிவரை இனிதாக்க

இணையாக வந்துள்ள

இணையுன்னைக் கேட்பேன்

மணவாழ்வில் என்னோடு

மனதார வந்திடவே

மகிழ்வோடு இணையும்என்

மனையுன்னைக் கேட்பேன்

வாழ்க்கைப் படகிழுக்கும்

வலுவான துடுப்பாக

வந்தருகில் அமர்ந்துவிட்ட

வடிவுன்னைக் கேட்பேன்

உள்ளொன்று வைக்காத

உயிர்நண்பி யாகி

உணர்வோடு கலந்தேநீ

உறவாட வேண்டும்

இதயத்துச் சுமைபாதி

எடுத்தாக வேண்டும்

பதிலாக உன்பழுவைப்

பகிர்ந்தாக வேண்டும்

பதியென்று எனைச்சொல்லிப்

பயந்தோடாப் பெண்ணாய்

பலகாலம் துணைவந்து

பலம்சேர்க்க வேண்டும்

துன்பத்தில் துவளாமல்

துடிப்போடு வாழ

துளிகூடப் பிரியாத

துணையாய்நீ வேண்டும்

தாயிடத்தில் பசிசொல்லத்

தயங்காத மகன்போல்

சங்கடங்கள் ஏதுமில்லாச்

சகியாய் வேண்டும்

கண்ணீரை உன்கண்ணில்

கனவினிலும் காணாப்

பாக்கியத்தை எந்தனுக்குப்

பரிசாக்க வேண்டும்

கதிநீயே எனச் சொல்லித்

துதிபாடாப் பெண்ணாய்

விதியுள்ள நாள்மட்டும்

சுதிசேர்க்க வேண்டும்

வழிமாறிச் செல்லாமல்

வழிகாட்டியாய் நீ

வந்தெந்தன் வாழ்க்கையினை

வடிவாக்க வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதானப்பா.. ஜயாமார் பண்ணுற அட்டாகாசம் ரொம்ப ஓவர். அதுவும் சில ஜயாமார் ரொம்ப இழுத்துக்கொண்டே போவாங்க.. பார்க்க சகிக்காது. மனம் ஒன்றானால் சரிதானே.. வாழ்த்துக்கள் உங்கள் கவிக்கு.

ஒரு சின்ன கேள்வி ஒன்று... தெரிஞ்சால் யாரும் சொல்லுங்கப்பா. கல்யாணப்பொருத்தம் பார்க்கிறாங்க தானே. 10 பொருத்தம் என்று நினைக்கிறன். அந்த 10 பொருத்தமும் என்ன என்று யாரும் சொல்ல முடியுமோ?? :roll:

மந்திரம் ஓக்கே..ஆனா மணமகளுக்கு பொறுப்பு அதிகம் கொடுத்திட்டீங்க...! எல்லாத்துக்கும் அவங்களே உங்களைக் கவனிச்சிட்டு இருக்கனும் என்டா...அவங்க தேவைகளை நீங்க கவனிக்கிறதா அவங்களைச் சொல்லவிடல்ல..! பாவமில்லா..! :P :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் குருவி,

உங்கள் கருத்துக்கு நன்றி.

நீங்கள் சொல்வது சரி. இது ஒரு ஆண் எழுதுவது போலத்தானே எழுதியிருக்கிறேன். பெண்கள் என்னவெல்லாம் எதிhபார்க்கிறார்கள் என்று களத்தில் இருக்கிற பெண்கவிகளில் ஒருவர் விரைவில. எழுதுவார் என்று எதிர்பார்ப்போம்.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

வணக்கம் விஸ்ணு

உங்கள் கருத்துக்கு நன்றி.

நான் நினைக்கிறேன் பொருத்தங்கள் 10 அல்ல 20 என்று. பார்ப்போம் யாராவது விடை தருவார்கள் தானே.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

வணக்கம் விஸ்ணு கண்டு பிடிச்சிட்டன்

ஜோதிடத்தில் கணிப்பிடப்படும் பத்துப்பொருத்தங்கள் வருமாறு:

தினப்பொருத்தம்

மகேந்திரப் பொருத்தம்

கணப் பொருத்தம்

யோனிப் பொருத்தம்

ஸ்திரிதீர்க்கப் பொருத்தம்

இராசிப் பொருத்தம்

இராசி அதிபதிப் பொருத்தம்

வசியப் பொருத்தம்

ரஜ்ஜுப் பொருத்தம்

வேதைப் பொருத்தம்

இதைவிட உப பொருத்தங்கள் எண்டும் பத்து இருக்குதாம்

அன்புடன்

மணிவாசகன்

உந்த கற்பனைப் பொருத்தமெல்லாம் இருந்தும் மனப்பொருத்தம் இல்லாட்டி வாழ்க்கையே பொருந்தாதே..! மனப்பொருத்தம் வர விட்டுக்கொடுக்க,மற்றவரோட உணர்வுகளை புரிஞ்சுக்க தெரிஞ்சிருக்கனுமே...! :P :wink:

  • தொடங்கியவர்

சரியாச் சொன்னீங்கள் குருவி, ஆனால் எங்கடை சனம் இன்னும் சாதகக் கட்டோடை தானே திரியுது.

அன்புடன்

மணிவாசகன்

இதயத்துச் சுமைபாதி

எடுத்தாக வேண்டும்

பதிலாக உன்பழுவைப்

பகிர்ந்தாக வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

இப்படியே எல்லாரும் இருந்தால் ஏன் பிரச்சினை வரப் போகுது. உங்கள் கவிதை நன்றாக இருக்கு அங்கிள் வாழ்த்துக்கள்.

மணிவாசகன்,

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

வணக்கம் விஸ்ணு கண்டு பிடிச்சிட்டன்

ஜோதிடத்தில் கணிப்பிடப்படும் பத்துப்பொருத்தங்கள் வருமாறு:

தினப்பொருத்தம்

மகேந்திரப் பொருத்தம்

கணப் பொருத்தம்

யோனிப் பொருத்தம்

ஸ்திரிதீர்க்கப் பொருத்தம்

இராசிப் பொருத்தம்

இராசி அதிபதிப் பொருத்தம்

வசியப் பொருத்தம்

ரஜ்ஜுப் பொருத்தம்

வேதைப் பொருத்தம்

இதைவிட உப பொருத்தங்கள் எண்டும் பத்து இருக்குதாம்

அன்புடன்

மணிவாசகன்

நட்சத்திரப்பொருத்தம்

தாலிப்பொருத்தம்

நாடிப்பொருத்தம்

விருட்ச்ஷப்பொருத்தம்

அயுட்பொருத்தம்

கிரகப்பொருத்தம் கூட இருக்குது என்று நினைக்கிறன்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருத்தங்களை கண்டு சொன்னதுக்கு நன்றி மணிவாசகன் & சுபித்திரன். ஆனால் இதில ஒரு சிக்கல் என்ன என்றால்... இந்த பொருத்தங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை இருக்காமே. அதாவது 1ஆவது பொருத்தம்.. 2ஆவது பொருத்தம் என்று. மணிவாசகன் நீங்கள் பொருத்தங்களை குறிப்பிட்ட போது அதற்கான ஒழுங்கு முறையின்படியா எழுதினீர்கள்.

ஏன் என்றால் 7ஆவது பொருத்தம் என்ன என்று தெரியணுமே.. :roll: :? :wink:

059ph.jpg

கவிதை அருமை மணிவாசகன்...வாழ்த்துக்கள்

இதயத்துச் சுமைபாதி

எடுத்தாக வேண்டும்

பதிலாக உன்பழுவைப்

பகிர்ந்தாக வேண்டும்

கவிதை அருமை வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி

அன்புடன்

மணிவாசகன்

கவிதை நன்றாக இருக்கிறது.

கண்ணீரை உன்கண்ணில்

கனவினிலும் காணாப்

பாக்கியத்தை எந்தனுக்குப்

பரிசாக்க வேண்டும்

அப்படியானால் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.

  • 2 weeks later...

அருமையான மந்திரம்

ஆகா சாத்திரியின் வேலைக்கே ஆப்பு நடக்குதா இங்கு?

எதிர்பார்ப்புடன் எழுதிய கவிதை நன்று.. பராட்டுக்கள்.

அருமை..பாராட்டுக்கள்..

இதை வாசிச்சுபோட்டு எங்கட சனம் பொருத்தம் பார்க்க போயிருப்பார்கள்

  • தொடங்கியவர்

வணக்கம் கழுகு, ரமா, மூதேசி, தூயா

கருத்துக்களுக்கு நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

¿ýÚ Á½¢Å¡º¸ý..

ƒÂ÷Á¡§Ã¡¼ ÐýÀõ ¾¡í¸ÓÊ¡Ð...«ó¾ ¦Å쨸ìÌûÇ ±ôÀÊò¾¡ý ¯ó¾ ¯ÎôÒõ «Ðì̧ÁÄ º¡Á¢ìÌò¾¢ÉÐ §À¡Ä ¿¨¸Ôõ §À¡ðÎ즸¡ñÎ þÕ츢ȧ¾¡ ¦¾Ã¢Â¡Ð...«ÐìÌûÇ ¯ó¾ ţʧ¡¸¡Ã÷¼ «ð¼¸¡ºõ §ÅÈ..§À¡È¨½ «Ç×ìÌ ¦Åì¨¸Â¡É ¨Äð§ÅÈ §À¡ÎÅ¢Éõ..

õõõ þ墨 ¸É§À÷ º¡ò¾¢Á¡§Ã¡¼ §Å¨ÄìÌ §ÅðÎ ¨Åì¸È ±ñÎ þ§¾§Å¨Ä¡ò ¦ÅǢ츢ðÊÕ츢Éõ §À¡Ä¸¢¼ìÌ...õõõõ..

¯í¸¼ ¦Àñ§½¡¼ º¡¾¸ò¾¢Ä ÝâÂý «ïº¢ÄÔõ..¦ºùÅ¡ö ²Æ¢ÄÔõ..ºÉ¢ À¡Õí§¸¡ ±ðÊÄÔõ þÕóÐ ´Ã¡Ç ´Ã¡û À¡ì¸¢È¾¡Ä ºõÀó¾õ À¢û¨ÇìÌ þý¦É¡Õ ¦ÃñÎ ÅÕ„òÐìÌ ºÃ¢ÅáÐ....ÌÕ×õ áÌ×õ Àò¾¡õ Å£ðÊÄ þÕ츢Ⱦ¡Ä Å¡È Á¡ôÀû¨Ç «¦Áâ측Ţø þÕóÐ ¾¡ý ÅÕÅ¡÷..«§¾¡¼ §¾¡„¸¡Äò¾¢Ä ¸ðÊÉ¡ø ¸ðÎÈÁ¡ôÀ¢û¨Ç ¦Àñ½¢ð¨¼ ÐõÒì¸ð¨¼ÂÊ ¦ºÕôÀÊ ±øÄ¡õ Å¡í¸§ÅñÊ ÅÕõ ±ñÎ ¿¡ý ¦º¡øÈý..¸ÅÉõ..

«§¾¡¼ ±ýà «ýÀÇ¢ôÒ åÀ¡ ¬Â¢Ãò¨¾ ÁÈ측Á ¸„¢Ââ𨼠§À Àñ½¢ô§À¡ðÎ §À¡í§¸¡....

;-) ;-) ;-)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் வாசித்தேன்.கவிதை அருமை. அத்துடன் எல்லாப் பொருத்தமும் இருந்து மனப்பொருத்தம் இல்லாவிட்டால் எல்லாம் கோவிந்தா தான். :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் UK பெடியன், சஜீவன்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நீங்கள் சொல்வது உண்மைதான். மனப்பொருத்தம் இல்லாதவர்களை இத்தக் கண்டறியாத பொருத்தங்களைப் பார்த்து இணைத்து வைத்தால் எப்படிக் குடும்பம் ஓடும் :lol::lol::lol:

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

059ph.jpg

:lol::lol: நன்றி சுபித்திரன். ஆனால் சில சொல்களுக்கு விளக்கம் தேவையா இருக்கு என்ன.. :wink: :wink: எல்லாம் கேட்டால் அடிக்க வருவாங்க.. நான் போறேன்.

  • தொடங்கியவர்

வேண்டாம் எண்டு சொல்லிற விசயத்தைப் பற்றி அதிகம் தேடத் தேவையில்லை எண்டு நினைக்கிறன் . நீங்கள் என்ன நினைக்கிறியள்.

அன்புடன்

மணிவாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.