Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை வெற்றி கொள்ள உதவியது புலனாய்வு ஒருங்கிணைப்பே – சிறப்பு அதிரடிப்படை கட்டளைஅதிகாரி

Featured Replies

புலிகளை வெற்றி கொள்ள உதவியது புலனாய்வு ஒருங்கிணைப்பே – சிறப்பு அதிரடிப்படை கட்டளைஅதிகாரி [ ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2013, 00:39 GMT ] [ கார்வண்ணன் ]

Nimal_Lewke.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான நிமால் லெகே தெரிவித்துள்ளார். 

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில், எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

“விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட மிகப் பெரிய வெற்றியில் புலனாய்வு முக்கிய பங்கை வகித்திருந்தது. 

இந்த விடயத்தில் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக அக்கறை கொண்டிருந்தார். 

நாட்டின் எல்லா புலனாய்வு அமைப்புகளையும் அவர் தனிப்பட்ட ரீதியாக ஒருங்கிணைத்தது, குறிப்பிடத்தக்களவு ஊக்குவிப்பாக அமைந்தது. 

காவல்துறைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கீழ்மட்டத்தினருடனும் அவர் அவ்வப்போது கலந்துரையாடி ஊக்குவித்தார். 

சாதகமான புலனாய்வு உள்ளீடுகள் தீவிரவாத முறியடிப்பு பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பினார். 

தொழில்நுட்பப் புலனாய்வில், விடுதலைப் புலிகளின் இரகசிய சமிக்ஞைக் குறியீடுகளை நாம் இனம்கண்டு கொண்டது முக்கியமானது. 

சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர், விடுதலைப் புலிகளின் சங்கேத குறியீட்டு முறையை இனங்கண்டனர். 

எமது முன்னேற்றமான தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அவர்களின் தொடர்பாடல் இடைமறிக்கப்பட்டது. 

அதன் மூலம் காத்திரமான தொழில்நுட்பப் புலனாய்வுமுறை கட்டியெழுப்பப்பட்டது. 

தொழில்நுட்பப் புலனாய்வில், ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முறை, ஜிபிஎஸ் எனப்படும் புவி நிலை காட்டி என்பன கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பெரும் உதவியாக இருந்தன. 

இது மிக உயர்ந்த வெற்றியையும், நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும் போது, படையினர் மற்றும் தளபதிகளுக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்தது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130120107630

 இவருக்கு தூதுவர் பதவி தேவைப்படுகிறது.

துரோகி கருணாவின் காட்டிக்கொடுப்பும், இந்தியாவின் இராசாயனக்குண்டுகளும்தான் புலிகள் தோற்றத்திற்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளின் ஆயுத பாதையை, விநியோகத்தை  தடுத்தது, அழித்தது மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இறுதியில் புலிகளிடம் போராட ஆயுதங்கள் இல்லாமைக்கு மிக முக்கிய காரணம் இதுவாகும்.

கருணா பிரிந்தது 2004 லில். கடைசி யுத்தம் தொடங்கியது 2008 கடைசியில்..கடைசி வரைக்கும் கருணா தங்களை காட்டிக் கொடுக்க மாட்டார் என்று புலிகள் நம்பித் தான் புலிகள் தங்கள் நடவடிக்கைகள்,செயற்பாடுகள் ஒன்றையும் மாத்தவில்லையோ :unsure:

  • தொடங்கியவர்

புதிசா மூளை சொல்லிக்கொடுக்க நீங்கள் வெளியிலை வந்திட்டியல் போலை.

உலகம் இன்றுவரை கண்டுபிட்டித்த ராணுவ யுத்திகள் எல்லவற்றையும் ஒரு மொக்கை வரியில் அலசும் உங்கள் இராணுவ அறிவுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கருணா பிரிந்தது 2004 லில். கடைசி யுத்தம் தொடங்கியது 2008 கடைசியில்..கடைசி வரைக்கும் கருணா தங்களை காட்டிக் கொடுக்க மாட்டார் என்று புலிகள் நம்பித் தான் புலிகள் தங்கள் நடவடிக்கைகள்,செயற்பாடுகள் ஒன்றையும் மாத்தவில்லையோ :unsure:

உங்கட அண்ணயில உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ? :D

நம்மவர் எப்பதான் தோல்வியை ஒப்புகொண்டார்கள் ,எப்பவும் வேறு யாரையும் சாட்ட வேண்டியதுதான் .

ஆட்பலமும் இல்லை ஆயுத பலமுமில்லை ஆனால் அடாத்து நிரம்ப இருந்தது ,மொக்கன் ராஜபக்சாவை வெல்ல வைத்தால் சண்டைக்கு வருவான் அடிக்கலாம் என்று சொல்லி  மகிந்த சிந்தனைக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பம் என்று விடுகை விட்டு சும்மா இருந்த மாவிலாறு தண்ணியை பூட்டி கடைசியில் நல்லா வேண்டிகட்டிவிட்டு ,

அமேரிக்கா உதவியது ,இந்தியா நின்றது ,கருணா காட்டிக்கொடுத்தான் ,இரசாயன குண்டு அடித்தார்கள் என்று இன்னமும் திருந்தியபாடில்லை .உதுகள் திருந்தாத கோஸ்டிகள் என்பது உலகறிந்த விடயம் அதுதான் இன்னமும் ஒரு நாடும் இவர்கள் கிட்டவே போகின்றார்கள் இல்லை .

நேரே சொல்லுங்கோவன் சும்மா வாயையும் கொடுத்து பொல்லை கொடுத்து  பேய்அடி வாங்கிவிட்டோம் என்று .

 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான நிமால் லெகே தெரிவித்துள்ளார்.
 
பொதுவாக தோல்விகள் அடைந்தவர்கள் தான் தமது தோல்விக்கு ஆயிரம் காரணங்களை கூறுவார்கள்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில், புலிகளின் உத்திகளைக் கண்டறிந்து அவர்களின் வழியிலேயே வீழ்த்தினோம் என்பார்கள்..! இவ்வளவு காலமும் புலிகள் தாக்குப் பிடிக்கக் காரணம் இராணுவம் ஒன்றைக் கண்டறிந்துவிட்டு மீண்டும் வரும்போது புலிகள் அடுத்த கட்டத்தில் இருப்பார்கள்.

இறுதிப்போரின்போது மட்டும் ஏன் அடுத்த கட்டத்துக்குத் தாவவில்லை..? அடுத்த கட்டத்துக்குப் போகாமல் முடங்கிக் கிடந்தார்களா? அல்லது அடுத்தகட்டம் என்பது வேறு வகையான போராட்டமா?

  • தொடங்கியவர்
நம்மவர் எப்பதான் தோல்வியை ஒப்புகொண்டார்கள் ,  எதில் தோல்வியை மறுத்த வசனம் வருகிறது? மனதுக்கு சந்தோசமாக கற்பனை கேல்வி ஒன்றை கேட்டு பதில் எழுதுகிறீகளா?

எப்பவும் வேறு யாரையும் சாட்ட வேண்டியதுதான் . புலிகள் சமாதானத்திற்கு இறங்கியபின்னர் உங்களின் இன்றைய ஆராச்சி புலிகள் வென்றிருக்கலாம் என்று சொல்கிறது. இதனால் ககிதப் புலியாக மாறியிருக்கிறீர்கள். இன்று எங்கள் ஆராச்சி வென்றிருக்க முடியாது என்று நம்புகிறது. அதனால் புது வழிகளில் போராட்டத்திற்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆட்பலமும் இல்லை ஆயுத பலமுமில்லை ஆனால் அடாத்து நிரம்ப இருந்தது ,மொக்கன் ராஜபக்சாவை வெல்ல வைத்தால் சண்டைக்கு வருவான் அடிக்கலாம் என்று சொல்லி  மகிந்த சிந்தனைக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பம் என்று விடுகை விட்டு சும்மா இருந்த மாவிலாறு தண்ணியை பூட்டி கடைசியில் நல்லா வேண்டிகட்டிவிட்டு , இதை 

புலிகள் பிரேமாதாசாவுடன் சேர்ந்து தமிழரை அழித்த இந்திய ஆமியை வெளியெற்றி கோணங்கி இயகங்களை கட்டுப்படுத்திய காலத்துடன் ஒப்பிட்டு முழுமையான ஆராச்சி எழுதினீர்களாயின் அதில் பொருளைகாணலாம்.

அமேரிக்கா உதவியது ,இந்தியா நின்றது ,கருணா காட்டிக்கொடுத்தான் ,இரசாயன குண்டு அடித்தார்கள் என்று இன்னமும் திருந்தியபாடில்லை .உதுகள் திருந்தாத கோஸ்டிகள் என்பது உலகறிந்த விடயம் அதுதான் இன்னமும் ஒரு நாடும் இவர்கள் கிட்டவே போகின்றார்கள் இல்லை. மகிந்தாவால் நியமிக்கபட்ட சிராணி மகிந்தாவால் நீக்கப்படும் போது செய்திகளில் வெளிவந்த  உலக எதிர்ப்பையும், சீனா பயத்தால் 800 000 மக்களை தான் எப்படி பணயம் வைத்தாக ஐ.நா வேளியிட்ட உள்ளக விசாரணை அறிக்கையையும்  வாசித்திருந்தீர்களாயின் அரசியல் என்பதில் நீங்கள் "அ" என்ற ஆரம்ப பாடத்தை தொடங்க தகுதியுள்ளவர்கள் ஆவீர்கள்.

நேரே சொல்லுங்கோவன் சும்மா வாயையும் கொடுத்து பொல்லை கொடுத்து  பேய்அடி வாங்கிவிட்டோம் என்று . மாவிலியாற்றில் புலிகள் ஆரம்பிக்க இல்லை. சுனாமிக்கு பின் தமிழருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய குடிநீர் திட்டத்தை இலங்கை அரசும், அமெரிக்காவும் தடுத்தால்தான் மாவிலியாற்றை மூடி எதிப்பை தெரிவிக்க முயன்றது.. புரட்சி என்ற பெயரில் தானச் சோத்து பொதிக்கு காவல் இருப்போர், தங்களுக்கு உரிமையான தண்ணீர் மறுக்கப்பட்ட போது கை பொத்தி வாய் பொத்தி இருக்க வில்லை என்று நக்கல் எழுதுவது ஒன்றும் வியப்பில்லை. ஆனால் உரிமை போராட்டத்தை ஆரம்பிதவர்களுக்கு அது போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமை. தொடர்ந்து சரித்திரங்களை வளைப்பது அரசியல் வங்குரோத்தின் நிலை.

மார்கத்திலை தங்களின் வீட்டில் மட்டும்தான் பவர்கட். போலை இல்லாவிட்டால் எழுதுக்களில் கொஞ்சம் வெளிச்சம் இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
உங்கட அண்ணயில உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ? :D

என்ட அண்ணா மேல் எனக்கு நம்பிக்கை இருக்குது :lol: ஆனால் இங்கே புலி ஆதரவாளார்கள் கருணா காட்டிக் கொடுத்து தான் புலி அழிந்தது என சொல்வதன் மூலம் புலியை அவமானப்படுத்தினம்

எல்லாம் ஒரே நீலாமாய் கிடக்கு ,

ஆனால் புது வழிகளில் போராட்டத்திற்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பது செம கொமடி ,வடிவேலு இல்லாத குறையை தீர்த்தது.

  • தொடங்கியவர்

நாம் அல்ல கருணாவால்தான் போர் வென்றது என்று கூறியது. போரில் பிரபாகரன் இறந்தை கண்டு உலகிற்கு சாட்சியம் அளிந்த அந்த சத்திவான் பண்டிதர் தான் அதன்பின்னர் தன்னால்தான் புலிகள் தோற்றர்கள் என்று பேசினார். அந்த செய்திகளை மறுக்காதவர்கள் இப்போது இராணுவ ஆராச்சிகள் செய்து கருணாகாட்டிகொடுத்த இரகசியங்களை உடனே மற்றிகொள்ள வழிகள் இருந்தன ஆனால் புலிகள் மாற்றிகொள்ள கொள்ள மறுத்தார்கள் என்று ஒற்றை வரி கிணடல் ஆராச்சிகள் செய்வதில் ஒன்றும் மனதில் பட்டது வெளியே வருவதில்லை. இவை வலிந்த விளக்கங்கள். வலிந்த ஆராச்சிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
இறுதிப்போரில், புலிகளின் உத்திகளைக் கண்டறிந்து அவர்களின் வழியிலேயே வீழ்த்தினோம் என்பார்கள்..! இவ்வளவு காலமும் புலிகள் தாக்குப் பிடிக்கக் காரணம் இராணுவம் ஒன்றைக் கண்டறிந்துவிட்டு மீண்டும் வரும்போது புலிகள் அடுத்த கட்டத்தில் இருப்பார்கள்.

இறுதிப்போரின்போது மட்டும் ஏன் அடுத்த கட்டத்துக்குத் தாவவில்லை..? அடுத்த கட்டத்துக்குப் போகாமல் முடங்கிக் கிடந்தார்களா? அல்லது அடுத்தகட்டம் என்பது வேறு வகையான போராட்டமா?

ஒரு சிறுபான்மை இனம்

தனது வசதிகளுக்கும் தனது மக்களது தொகைக்கும் ஏற்றவாறே தனது போராட்டத்தை செய்யமுடியும்

வென்றதற்கு வென்றவன் எத்தனை  காரணங்களையும் சொல்லமுடியும். அதை கேள்வி  கேட்காது எல்லோரும் ஏற்பர். காரணம் ககாட்டுவதற்கு அவனிடம் வெற்றி  என்ற சூரியன்   உண்டு.

ஆனால் தோற்றவன் எதைச்சொன்னாலும் எடுபடாது

ஆனால் தமிழ்  மக்களுக்குள் அது சம்பந்தமான கேள்விகள் எழுவதுதான்  எம்மவரின் சந்தர்ப்பவாதமாகும். .

இதற்கு புலிகள் அல்ல எவருமே பதிலளிக்கவோ வாதிடவோ முடியாது.

புலிகள் இல்லாத இந்த நாலு வருடத்திற்குள்ளும் அவர்களுடைய  நிரப்பிடத்தின் கனதியை  தமிழர்கள் உணரவில்லை என்றால் வேறு எந்தவித ஆதாரங்களை கொண்டு வந்து நிறுவமுடியும்.????

ஆனால் சாதாரண  தமிழ் மக்களிடம் இது பற்றிய   தெளிவுண்டு.

நான் எனது உறவுகள் சிலருடன் தாயகத்தில் பேசியபோது அவர்கள் எல்லோரிடமும் புலிகளின் தோல்வி  பற்றிய தெளிவிருந்தது.  இதைத்தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என்ற நிலையிலேயே முள்ளிவாய்கால் முடிவு எடுக்கப்பட்டதாக பெரும் பாலும் சொன்னார்கள்.  ஆனால் அந்த பெரும் வேள்வியை  அல்லது தியாகத்தை நாம் அடுத்தபடிக்கு கொண்டு நகர்வோம் என நம்பினார்கள்.

ஆனால் நாம் நகர்த்தினோமா???????????????????

நகர்ந்திருந்தோமாயின் இன்று சிங்களம் எப்படித்தோற்றேன் என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாது ஓடிக்கொண்டிருக்கும்.

  • தொடங்கியவர்
எல்லாம் ஒரே நீலாமாய் கிடக்கு ,

ஆனால் புது வழிகளில் போராட்டத்திற்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்பது செம கொமடி ,வடிவேலு இல்லாத குறையை தீர்த்தது.

வாசிப்பது ஏதாவது இதுவரையில் விளங்கியிருந்திருந்தால் எதிலும் இப்படி நீலவானம் மட்டும் தோன்றாது.  

அரசியல் மேதை வடிவேலுவை ஆவது தெரிந்து வைத்திப்பது அரசியல் பாண்டித்தியத்தை காட்டுகிறது..

சமபந்தர் போராட்டம், ராஜதந்திர போராட்டமாக மாறியிருக்கிறது எனறு பேசிய போது  அதை  படிக்கமாமல் இருந்துவிட்டு அதே சம்பந்தர் பேசிய பேச்சை எல்லோரும் படிக்க வேண்டும் என்று, அந்த பேச்சில் இருந்த ஆங்கிலம் விளங்காமல் போதனை செய்தது  சோ இல்லாத குறையை தீர்க்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.