Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 |  வெள்ளிக்கிழமை, 25, ஜனவரி 2013 (23:45 IST)
இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் பழ.நெடுமாறன் அறிவிப்பு
 
இலங்கையில் நடைபெறும்  கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்–இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்–இ
 
ப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் இந்த மாதம் 30–ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் உள்ள இல    ங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று போர்க்குற்றம்–இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில், தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

533704_399032233519872_1323401004_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்க இலங்கை தூதரகம் முற்றுகை: பழ.நெடுமாறன் அறிவிப்பு

Posted by: Mayura Akilan Published: Tuesday, January 29, 2013, 10:46 [iST] 

 

சென்னை: இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்-இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் இந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து முடித்த இலங்கை அரசு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

 

முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி தமிழர்களுக்கு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை கைது செய்தனர்.

 

இதற்கு சிங்கள மாணவர் அமைப்புகளும், பேராசிரியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலரை மட்டும் சித்ரவதைக்குப் பின் விடுதலை செய்துள்ளது. மீதமுள்ள மாணவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

 

இனவெறி மிகுந்த இலங்கை அரசிடம் இருந்து மாணவர்களை உயிருடன் மீட்பது தமிழக அரசின் கடமையாகும். இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி நாளைய தினம் (ஜன.30) சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பழ நெடுமாறன் பங்கேற்பு

போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில், பேசிய தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் , இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் இன உணர்வோடு அனைவரும் பங்கு பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-nedumaran-seize-lankan-consulate-chennai-168779.html
 

நல்லது! பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை இன்னும் ஒரு 15 நாள் பிந்தப் போவது உறுதி!

நல்லது! பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை இன்னும் ஒரு 15 நாள் பிந்தப் போவது உறுத

 

குற்றமில்லாத மாணவர்களை இலங்கை அரசு பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறது. இவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்பதால் தமிழ் நாட்டில் காங்கிரசை எதிர்க்க தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் முன்வைக்க வரும் போராட்டங்களுக்கு இவர்களுக்கு இலங்கை அரசு தண்டனை கொடுக்கிறது.

 

மார்சுக்கு முதல் இப்படியான அரசின் வன்முறைகளை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பதை பயன் படுத்த வேண்டும். மார்சுக்கு முதல் அரசு அட்டூளியத்தனமாக பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்திருந்து கொண்டு முழு தமிழ் இனத்தையும் சின்னச் செலவுமில்லாமல் அடிமைப்படுத்துவதை மேற்குலகம் காண சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும், நாட்டுக்கு வெளியே உள்ளவர்கள், முழுத்தமிழனத்தையும் அடக்க, ஒரு தமிழனை பிடித்து வதைப்பதை கண்டு கொள்ள கூடாது. இது அரசு செலவில்லாமல் போராட்டங்களை அடக்க கண்டு பிடித்திருக்கும் பாதை.

 

மேர்வின் சில்வா மகிந்தாவின் காலடியில் இருந்து சேவுகம் செய்வதை இலங்கை அரசு பிரசுரித்ததின் நோக்கம், மக்களில் நரம்புகளினூடாக பயங்கரத்தை செலுத்தி உறையவைக்கவே என்றுதான் சுதந்திரமாக எழுத்தும் பத்திரிகைகள் கருத்து எழுதியிருந்தார்கள்.  சேவுகம் செய்வதை தவிர எவருக்கும் வேறு எந்த வழியும் இல்லை என்று அரசு ஜெயராஜா போன்ற எச்சில் இலை நக்கி எழுத்தாளர்களை வைத்து எழுதுவிக்கப் பார்க்கிறது.

 

அரசின் பணத்துக்கு வீழ்நீர் வடிக்கும் ஜெயராஜ போன்ற சப்பி எழுத்தாளர்களும், அசர அடிவருடிகளும் மாணவர்களை வசந்தி விடுவிப்பத்தாக பிரசாரம் செய்யப் பார்க்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை காங்கிரசுக்கு கெதிராக பாவித்தால்தான் மார்ச்சில் கங்கிரஸ் வரவிருக்கும் பிரேரணக்கு ஆதரவு அளிக்கும்.

 

சம்பந்தர் தனது கடைசிப் பேட்டியில் இனி அகிம்சை போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். அந்த நேரம் இந்த வசந்தியை விருந்து வைத்து அழைத்து போராளிகளை விடுவிப்பது என்பது முடியாது என்பதால் சம்பந்தர் புதிய போராட்டங்களை பற்றிய விபரங்களை தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கும் அறிவிக்கட்டும். அவர்கள் நடக்க இருக்கும் அகிம்சை போராட்டங்களை அரசு அடக்க முயலும் வழிகளை உலக பத்திரிககைகளில் பிரசுரிக்க வேண்டும்.  கருணாநிதியை தூக்கி எறிய வைத்து போன மார்ச் பிரேரணைக்கு ஆதரவு வேண்டித்தந்த தமிழ் நாட்டு மக்கள் அகிம்சை போராட்டங்கள் அங்கு பலன் அளிப்பதை கண்டவர்கள் என்பதால் அதை பெரிய அளவில் முன்னெடுத்து தமிழ் ஈழத்தமிழரை காக்கும் பொறுப்பை கையில் எடுக்க வேண்டும். இல்லையேல் இந்தியா இலங்கையின் அடக்கு முறைகளுக்கு உதவி செய்துதான் ஆகும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவர்களைப் பற்றி யாருக்கு என்ன அக்கறை தங்கட பிழைப்பு ஒழுங்காய் நடந்தால் சரி :(

எமது தேவையை தமது சேவையாகத்
செய்பவர்களுக்குப் பரிசளித்து உற்சாகமூட்டூவீர்!

 
(வேறு ஒருவரின் பதிவில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த இளைஞர் அமைப்பினர் கைது

 

images48.jpgசென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகைக்கு முயற்சித்தோரை பொலிஸார் இன்று (30) தடுத்து நிறுத்தினர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட யாழ் பல்கலை.மாணவரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து முடித்த இலங்கை அரசு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு. முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி தமிழர்களுக்கு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை கைது செய்தனர். இதற்கு சிங்கள மாணவர் அமைப்புகளும், பேராசிரியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலரை மட்டும் சித்ரவதைக்குப் பின் விடுதலை செய்துள்ளது.

மீதமுள்ள மாணவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இனவெறி மிகுந்த இலங்கை அரசிடம் இருந்து மாணவர்களை உயிருடன் மீட்பது தமிழக அரசின் கடமையாகும். இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

இதனை வலியுறுத்தி நாளைய தினம் (ஜன.30) சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் , இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் இன உணர்வோடு அனைவரும் பங்கு பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

எமது தேவையை தமது சேவையாகத்

செய்பவர்களுக்குப் பரிசளித்து உற்சாகமூட்டூவீர்!

 

(வேறு ஒருவரின் பதிவில் இருந்து

 

 

கொஞ்சம்,கொஞ்சமாய் பிடித்து வைத்த மாணவர்களை விட்டுக் கொண்டு தானே இருக்குது சிங்கள அரசு...இப்ப போய் ஆர்ப்பாட்டம்,மண்ணாங்கட்டி என்னத்திற்கு...திரும்பி அந்த மாணவர்களை பிடித்து உள்ளே போடவா ^_^

கொஞ்சம்,கொஞ்சமாய் பிடித்து வைத்த மாணவர்களை விட்டுக் கொண்டு தானே இருக்குது சிங்கள அரசு...இப்ப போய் ஆர்ப்பாட்டம்,மண்ணாங்கட்டி என்னத்திற்கு...திரும்பி அந்த மாணவர்களை பிடித்து உள்ளே போடவா ^_^

 

ஆம் இந்த இரண்டு தமிழர்கள் மட்டும்தானே சிறையில் உள்ளார்கள்  <_<

 

இல்லை

 

இவர்களை விடுதலை செய்தபின் சிங்களம் ஒருவரையும் கைது செய்யாது என்பதும் திண்ணம்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இந்த இரண்டு தமிழர்கள் மட்டும்தானே சிறையில் உள்ளார்கள்  <_<

 

இல்லை

 

இவர்களை விடுதலை செய்தபின் சிங்களம் ஒருவரையும் கைது செய்யாது என்பதும் திண்ணம்  :rolleyes:

 

இந்த முற்றுமை போராட்டம் இவர்கள் யாருக்காக செய்கிறார்கள் என ஒருக்கால் திருப்பி தலையங்கத்தை பாருங்கோ <_<

இந்த முற்றுமை போராட்டம் இவர்கள் யாருக்காக செய்கிறார்கள் என ஒருக்கால் திருப்பி தலையங்கத்தை பாருங்கோ <_<

 

 நீங்கள் தான் பார்த்து கருத்துக்களை எழுதுவது நல்லம் :D

அமெரிக்க அதிகாரிகள் யாழ்ப்பாணம் செல்ல முதல் அவசரமாக விடுத்து அவர்களின் கனத்தை திருப்ப முயன்றதுதான். அதில் பலன் ஒன்றும் வந்தாக தெரியவில்லை.

 

கவலைகுரிய விடயம் என்ன என்றால், இந்த அதிகாரிகள்  இலங்கைஅரசு இந்த மாதிரி கைதுகளால் இன்று மனித உரிமையை போர்காலத்திலும் பார்க்க கூட மீறுகிறது என்று கூறியும் வழகாடித்தமிழர், அரசு தார் மீக முறையில் மாணவர்களை விடுவிக்கிறதே என்று வாதாடுவது. எக்கொனோமிஸ் தனது கட்டுரையில் தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் எல்லோருடைய போராட்ட கோளைத்தந  மன நிலையையும் சாடித்தான் தனது கட்டுரையை எழுத்தியிருந்தது.

Edited by மல்லையூரான்

உண்மையில் இங்கு தனியே பல்கலைக்கழக மாணவர்களுக்காக அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தவில்லை. பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.

 

சென்னை: இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்-இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் இந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து முடித்த இலங்கை அரசு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு.

 

முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி தமிழர்களுக்கு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை கைது செய்தனர்.

 

 



இந்த முற்றுமை போராட்டம் இவர்கள் யாருக்காக செய்கிறார்கள் என ஒருக்கால் திருப்பி தலையங்கத்தை பாருங்கோ <_<

 

தலையங்கத்தை மட்டும் பார்க்காமல் உள்ளேயும் வாசியுங்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

 நீங்கள் தான் பார்த்து கருத்துக்களை எழுதுவது நல்லம் :D

 

நான் வடிவாய் பார்த்து தான் எழுதினான்...உங்கள மாதிரி உசுப்பேத்திற ஆட்கள் இருக்கும் மட்டும் தமிழனுக்கு விடிவு இல்லை என்பது நிட்சயம் ^_^

உண்மையில் இங்கு தனியே பல்கலைக்கழக மாணவர்களுக்காக அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தவில்லை. பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.

 

 

 

 

தலையங்கத்தை மட்டும் பார்க்காமல் உள்ளேயும் வாசியுங்கள்.

 

 

துளசி முக்கிய அவர்கள் இந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க சொல்லித் தான்...அது இந்த நேரத்தில் தேவையில்லை என்பது தான் கருத்து...இப்படி ஆர்ப்பாட்டம் இந்த நேரத்தில் செய்வது உள் இருக்கும் அந்த மாணவருக்கு பாதகமாய்த் தான் அமையும்

நான் வடிவாய் பார்த்து தான் எழுதினான்...உங்கள மாதிரி உசுப்பேத்திற ஆட்கள் இருக்கும் மட்டும் தமிழனுக்கு விடிவு இல்லை என்பது நிட்சயம் ^_^

 

 ஜனநாயகத்தில் இது சகஜம்  :D

( தானும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட்டார்கள் )

துளசி முக்கிய அவர்கள் இந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க சொல்லித் தான்...அது இந்த நேரத்தில் தேவையில்லை என்பது தான் கருத்து...இப்படி ஆர்ப்பாட்டம் இந்த நேரத்தில் செய்வது உள் இருக்கும் அந்த மாணவருக்கு பாதகமாய்த் தான் அமையும்

 

நீங்கள் சொல்வது போல் இப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதன் முக்கிய நோக்கம் பல்கலை மாணவர்களை விடுவிப்பதற்கு தான்... ஆனால் இந்த நேரத்தில் ஏனையோர் பற்றியும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் போது அது சர்வதேசத்தின் கவனத்தை கூடுதலாக பெறும்.

இதனால் நீங்கள் சொல்வது போல் இந்த இரு மாணவர்கள் பாதிக்கப்படலாம். :rolleyes:  (பாதிக்கப்பட்டால் நிச்சயம் நானும் கவலைப்படுவேன்.) ஆனால் ஏனைய பல கைதிகள் உள்ளே இருப்பது பற்றி கொஞ்சமாவது வெளிவரும்.

 

எனவே இன்றைய நிலையில் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பாதிப்பு செய்யாவிட்டாலும் பாதிப்பு. :(

பங்குனி மாதம் ஐ.நா. மனித உரிமை தொடரும் நடக்கவுள்ளது. இதில் மீண்டும் இந்தியாவின் ஆதரவு சிங்கத்திற்று கிடைக்காமல் இருக்க என்ன செய்யலாம் ?

 

இந்தியாவில் உள்ள கருணாநிதி செய்வாரா? இல்லை ஜெ அம்மா செய்வாரா??

 

நெடுமாறன் ஐயாவும் வைகோவும் சீமானும் திருமுருகன் காந்தி அவர்களும் தான் எமக்காக செய்வார்கள்!

 

எமது தேவையை தமது சேவையாகத்
செய்பவர்களுக்குப் பரிசளித்து உற்சாகமூட்டூவீர் !

Edited by akootha

149299_470795066333712_911019318_n.jpg

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை! 100இற்கும் மேற்பட்டோர் கைது

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி, போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் இன்று முற்றுகை இடப்பட்டது.

கடந்த நவம்பர் மாதத்தில் யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மாவீரர் நாள் அனுசரித்தபோது. இலங்கை இராணுவம் அவர்களை கைது செய்தது. குறிப்பாக மாணவர் தலைவர்களை குறிவைத்து கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற செய்தியும் கசிந்தது. மேலும் அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்ற செய்தியும் அறியமுடியவில்லை. அவர்களை பற்றி இலங்கை அரசு செய்தியும் வெளியிடாமல், அவர்களில் சிலரை விடுவித்த இலங்கை அரசு, ஏனையோரை விடுதலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இது குறித்து கண்டனம் தெரிவித்து உள்ளது.

 

இந்நிலையில், கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று போற்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம் முற்றுகை செய்யப்பட்டது.

இந்த போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், மே 17 இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பல மாணவர் இயக்கங்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 100 பேர்களை பொலிஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

நான் வடிவாய் பார்த்து தான் எழுதினான்...உங்கள மாதிரி உசுப்பேத்திற ஆட்கள் இருக்கும் மட்டும் தமிழனுக்கு விடிவு இல்லை என்பது நிட்சயம் ^_^

உயிரை கொடுத்தாவது போராட்டங்களை கொச்சை படுத்துத்த்தான் வேண்டுமா?

 

இந்த உசுபேத்தல் கதைகளை அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளே தள்ளிவைத்துவிட்டு, மாணவர் சுதந்திரமாக தமது ஜனநாயக உரிமைகளை வெளிக்காட்ட அரசு இடமளிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். 

 

நீதியரசர் சிராணியை சர்வதேச எதிர்ப்பை மதியாமல் பதவி விலக்கி வைத்துவிட்டு, பல மில்லியன் டலர்களை நாமலும், பீரிசும் அவிஸ்திரேலியாவில் செலவளித்து பெற்ற பொதுநலவாய மகாநாட்டை இழக்கும் நிலையில் இருக்கும் அரசை, மாணவர்களை புலம் பெயர் மக்களின் உசுபேத்தல்களுக்கு ஆடியவர்கள் என்பதால் அவர்களை அரசு வழக்கின்றி புனர் வாழ்வில் வைத்திருப்பதில் நியாயம் இருக்கு என்று வாதாடுபவர்கள் விடிவை வாங்க செய்யும் முயற்சிகள் யாவை?

யாழ். பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னை இலங்கை தூதரகம் முற்றுகை

 

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த நவம்பர் 27ம் தேதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினம் அனுஷ்டித்தனர். அவர்களை கைது செய்து சித்திவதை செய்து சிறைபடுத்தியுள்ளது இலங்கை அரசு. அந்த மாணவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி, நேற்றைய தினம் காலையில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது.

 

போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார். சாலையை மறித்து மறியலில் அமர்ந்த போராட்டக்குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்

 

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்ட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநிலச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் கோபிநாத், தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் அருண்சோரி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தந்தை பெரியார் தி.க ஊடகத்துறை பொறுப்பாளர் சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் இராஜ்குமார், வழக்கறிஞர் கயல்விழி, தியாகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/31/tamilnadu-hundreds-arrested-attempt-siege-lankan-consulate-168910.html

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/31/tamilnadu-hundreds-arrested-attempt-siege-lankan-consulate-168910.html

ஒரு 10% உம் இல்லாத முஸ்லீம்களுக்கு பயப்படுற இந்தியாவில் இந்த ஆள் செய்யுற போராட்டத்தால் என்ன பயன்?
இலங்கை
தூதரகத்தில் வேலை செய்பவர்கள் இந்த போராட்டம் செய்பவர்களிடமே காசு
கொடுத்து தங்களுக்கு சாப்பாடு வாங்கிவர சொன்னாலும் செய்வார்கள்

 இலங்கை தூதரகத்தில் வேலை செய்பவர்கள் இந்த போராட்டம் செய்பவர்களிடமே காசு கொடுத்து தங்களுக்கு சாப்பாடு வாங்கிவர சொன்னாலும் செய்வார்கள்

 

ஒருசிலர் தங்களைப் போலவே மற்றவர்களும் போராட்டம் செய்வார்கள் என்று நம்புகிறார்கள்!

 

ஒரு 10% உம் இல்லாத முஸ்லீம்களுக்கு பயப்படுற இந்தியாவில் இந்த ஆள் செய்யுற போராட்டத்தால் என்ன பயன்?

 

அதுவேதான் நெடுமாறனின் கணிப்பும். 10% இந்தியரை திரட்டிவிடால் போதும் இந்திய அரசை மிரட்ட.

ஒருசிலர் தங்களைப் போலவே மற்றவர்களும் போராட்டம் செய்வார்கள் என்று நம்புகிறார்கள்!

 

 

இந்தியனை நம்பினால் என்ன நடக்கும் என்று எல்லாருக்கும் 1980'லே இருந்தே தெரியுமே...  :)

யாரவது ஒரு நல்லது செய்த 10 இந்தியனை list பண்ணுங்கோ.. :) :)

அதுவேதான் நெடுமாறனின் கணிப்பும். 10% இந்தியரை திரட்டிவிடால் போதும் இந்திய அரசை மிரட்ட.

 

1) முஸ்லீம்கள் - இந்தியர் இல்லை

2) 0.1% ஆ முஸ்லீம் இருந்தாலே இந்தியா பயப்படும்...நாங்கள் ஒரு 2000 பேரே 1500000 இந்தியனை கலைச்சனாங்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.