Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெறும்வேளை...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jcdinesh வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வலிகள் புரியபப்போவதில்லை நண்பனே எது என்றாலும் எல்லாமே... நம் வலிகள் என்றும் நீங்கள் சொலுவது போல்...வலி ஏற்படுத்தியவர் வரும் வரை....ஆறாமலே இருக்கும் நண்பனே இது உடல் வலி இல்லையே மாறுவதற்கு உள்ளத்தின் வலி...ஆகையால் இதற்க்கு மருந்தும் அவரிடமே இருக்கின்றது இருந்தும் சில வேளைகளில் அது கிடைக்கபெறுவதில்லை....

Slgirl மன்னிக்கணும். இந்த கவிதையில் எழுதிய கருத்து இந்த கவிதையை மட்டும் வாசித்ததால் மட்டும் வந்ததல்ல. நீங்கள் எழுதியிருந்த முன்னையவற்றையும் வாசித்துவிட்டு, நீங்கள் சொன்ன உங்களவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது? திருமணம் என்று சொல்லி இருந்தீர்கள். அப்படி உங்களை காதலித்தவர்/ நீங்கள் காதலித்ததாக நம்பியவர் உங்களை விட்டு பிரிய முடிவெடுத்தபின் அதையே நினைத்து காலமேல்லாம் வருந்தி இருக்ககூட்டதென்பதற்காகவே சொன்னேன். இந்த கவிதையில் உங்களுக்கும் வீட்டார் திருமணம் பேசுவதாக சொல்லி இருந்தீர்கள்.

உண்மையில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்திருந்தால்/ காதலில் உறுதியாக இருந்திருந்தால் எல்லா தடைகளையும் மீறி நீங்கள் திருமணம் வரை சென்றிருக்க முயன்றிருக்க வேண்டும்.

ஆனால்

முன்னைய கவிதை இப்படியும்

காதில் வந்து கேட்டதடா ஒரு செய்தி

உனக்கு கல்யாணம் என்று

உடைந்ததடா என் இதயம்

இருண்டதடா என் வாழ்வும்

என் வாழ்வின் வெளிச்ச விளக்காய்

உனை நினைத்தேன்

இருண்ட வாழ்வை ஏனடா

எனக்களித்தாய் என் இனியவனே

ஏனோ உனக்கிந்த

இரக்கமற்ற இதயமடா

!!!

மறு கவிதை இப்படியும் சொல்கிறது.

Slgirl மன்னிக்கணும். இந்த கவிதையில் எழுதிய கருத்து இந்த கவிதையை மட்டும் வாசித்ததால் மட்டும் வந்ததல்ல. நீங்கள் எழுதியிருந்த முன்னையவற்றையும் வாசித்துவிட்டு, நீங்கள் சொன்ன உங்களவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது? திருமணம் என்று சொல்லி இருந்தீர்கள். அப்படி உங்களை காதலித்தவர்/ நீங்கள் காதலித்ததாக நம்பியவர் உங்களை விட்டு பிரிய முடிவெடுத்தபின் அதையே நினைத்து காலமேல்லாம் வருந்தி இருக்ககூட்டதென்பதற்காகவே சொன்னேன். இந்த கவிதையில் உங்களுக்கும் வீட்டார் திருமணம் பேசுவதாக சொல்லி இருந்தீர்கள்.

உண்மையில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்திருந்தால்/ காதலில் உறுதியாக இருந்திருந்தால் எல்லா தடைகளையும் மீறி நீங்கள் திருமணம் வரை சென்றிருக்க முயன்றிருக்க வேண்டும்.

ஆனால்

உண்மையான கருத்து நண்பனே

:lol:

சந்தர்ப்பவாதிகளிடம் ஒரே இலட்சியம் வாழ்வதில்லை..! அதுவும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறுபடும். காதல் என்பதும் சந்தர்ப்பவாதிகளிடம் சிக்கி அதன் தனித்தன்மையையும் இழந்துவிடுகிறது. அதுதான் பிரிவுகளுக்கும் சோகங்களுக்கும் ஏன் மரணத்துக்கும் கூட காரணமாகிவிடுகிறது. சிந்திக்க வேண்டியது...சந்தர்ப்பவாதிகளை

வணக்கம் சகோதரி,

நானும் தங்கள் சோகம் கூறும் கவிதை எல்லாம் வாசித்தேன்.

கருத்தெழுத நினைத்தேன் ஆனால் தாங்கள் இருக்கும் மன நிலையில் யாரின் அறிவுரையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை... ஏனெனில் கூடுதலாக... காதலிப்பவர்கள் தமக்கென்று ஒரு உலகத்தில் வாழ்வார்கள் மற்றையது அவர்கள் கண்ணுக்கு தெரியாது பிரிவென்று ஒன்று வரும் போது அவர்கள் உலகம் வெறுமையாகும்... அப்போது எல்லாமே இளந்துவிட்டமாதிரி உணர்வார்கள்...தமது காலங்களை அந்த நினைவுகளோடு வாழ்ந்து முடித்துவிட நினைப்பார்கள்.......... இது மட்டுமா வாழ்க்கை...?

ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள்...தங்கள் மீது பாசமாக தாய் தந்தையர் இல்லையா..? சகோதரங்கள் இல்லையா..?

நல்ல நண்பர்கள் இல்லையா..?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11572

அவர்களை எல்லாம் பிடிக்கும் என்று இன்னும் ஒரு கவியில் எழுதி இருக்கின்றீர்கள் :roll:

தங்களது சந்தோசம்தானே அவர்களது வாழ்வில் சந்தோசத்தை கொடுக்கும் :?: இனி உங்களிற்காக வேண்டாம் எனின் அவர்களிற்காக வாழலாம் தானே..?

சரி எல்லாவற்றையும் விடுங்கள் இது உங்கள் வாழ்வின் முடிவல்ல ...நாட்டில் எத்தனை அனாதை சிறுவர்கள் இருக்கின்றார்கள் :?: அவர்கள் எல்லாவற்றையும் இளந்தவர்கள்தானே..?அவர்களிற்கு ஏதுண்டு..?

(ஏன் அவர்களின் வாழ்வுக்காக தங்கள் வாழ்க்கையை அமைக்கக்கூடாது :?:lol: தங்களின் சோகம் முகம் தெரியாத எம்மனதையே வாட்டும் போது தங்களை தெரிந்தவர்கள் ....

என்னைப்போல் ஒரு ஆதங்கத்தில் தான் KULAKADDAN ம் சொல்லியிருக்கின்றார்...

தங்கள் வாழ்க்கையை வீணடிக்காமல் யாருக்காவேனும் பிரயோசனப்படுத்துங்கள் :idea:

தவறாக ஏதும் சொல்லியிருப்பின் மன்னிக்கவும்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10906

இதுவும் தாங்களா???

Slgirl மன்னிக்கணும். இந்த கவிதையில் எழுதிய கருத்து இந்த கவிதையை மட்டும் வாசித்ததால் மட்டும் வந்ததல்ல. நீங்கள் எழுதியிருந்த முன்னையவற்றையும் வாசித்துவிட்டு, நீங்கள் சொன்ன உங்களவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது? திருமணம் என்று சொல்லி இருந்தீர்கள். அப்படி உங்களை காதலித்தவர்/ நீங்கள் காதலித்ததாக நம்பியவர் உங்களை விட்டு பிரிய முடிவெடுத்தபின் அதையே நினைத்து காலமேல்லாம் வருந்தி இருக்ககூட்டதென்பதற்காகவே சொன்னேன். இந்த கவிதையில் உங்களுக்கும் வீட்டார் திருமணம் பேசுவதாக சொல்லி இருந்தீர்கள்.

உண்மையில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்திருந்தால்/ காதலில் உறுதியாக இருந்திருந்தால் எல்லா தடைகளையும் மீறி நீங்கள் திருமணம் வரை சென்றிருக்க முயன்றிருக்க வேண்டும்.

ஆனால்

முன்னைய கவிதை இப்படியும்

  • கருத்துக்கள உறவுகள்

'பூக்களை புரிந்துகொண்ட மாதிரி

இதயங்கள் கூட எரிப்பதற்கல்ல

என்பதையும் புரிந்துகொள் அன்பே

என்டைக்காவது எங்காவது

சந்தித்துக்கொள்வோம் அன்பே

சந்தர்ப்பம் கிடைத்தால்

அந்த சத்திப்பு கூட இன்னுமொரு

பிரிவுக்கு தானே அன்பே...

நீ மகிழ்வாய் இருந்தால் தனியவே

சிரித்துகொள் என் அன்பானவனே

எனெனின் உன்னுடன் பலர்

இருப்பார் அதை பகிர்ந்துகொள்ள

சோகம் வந்தால் மட்டும் சொல்லி

அனுப்பு அதை நான் உன்னுடன்

பகிர்ந்துகொள்வேன் எனெனின்

சோகம் வரும்போது உன்னருகில்

எவரும் வரார் அன்பே உனக்காக

பல கலர் கனவுகள் கண்டேன்

அவை எல்லாம் நிஜமாகுமுன்

விடைபெறும்வேளை அல்லவா

நெருங்கிவிட்டது"

சொல்லடுக்குகளையோ, கற்பனை வளத்தையோ

இங்கு தெரியவில்லை

vன் கண்களுக்கு ஒன்று மட்டுமே தெரிகிறது.

'உயிரின் வலி"

மாசற்ற மனதின் வெளிப்பாடு.

நனறாக இருக்கிறது எனும் சொல் இந்தவலிக்ககு மருந்து போடாது. தொடர்ந்தும் எழுதுங்கள்

இப்படிக்கு வல்வை சகாறா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KULAKADDAN நண்பனே நான் உங்கள் கருத்தினை தப்பென்று சொல்லவில்லை ஆனால் எந்த வலியும் அனுபவிக்கும் போது தான் நண்பனே அதன் நிஜம் புரியும்... நண்பனே என்னவன் என்றுமே எனக்கு தீங்கு நினைக்கவில்லை....என்பதும் உண்மை..ஆனால் நானும் என்னவனும் நிஜமான பாசம் வைத்திருந்த படியினால் தான் அவருக்கு கஸ்ரம் என்றதும் தாங்காமல் இந்த நிலைக்கும் வந்துள்ளேன்...ம்ம்ம் சேரனும் என்றாலும்....அவருக்கு இருக்கிற பிரசினைகளால் முடியாது... நண்பனே ஏன் நான் இவ்வளவும் சொல்லுறேன் என்றால்... நீங்க என் காதலையும்....என்னவனையும் தப்பாக எடைபோடக்கூடாதென்று.... நன்றி நண்பனே உங்கள் ஆறுதலுக்கும் கருத்துக்களுக்கும்....னான் எழுதிய விமர்சனங்கள் ஏதாவது உங்கள் மனதை பாத்தித்திருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பனே மீண்டும் நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் இலக்கியன் KULAKADDAN கருத்துகள் உண்மையானவை தானே.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Kuruvikal ம்ம்ம் காதலனின் கஸ்ரம் என் கஸ்ரம் தானே நண்பனே...ஆகையால் தான் என்ன தான் வலியை நான் அனுபவித்தாலும் என்னவன் என்றுமே கஸ்ரப்படக்கூடாது என்பது தான் என் விருப்பம் ஆகையால் தான் எல்லா வலிகளும் சோகங்களுமே என்னோடே போகட்டும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் கௌரிபாலன்... சொல்லபோனால் இந்த கவிகள் என் மன ரணத்தை ஆற்றுவத்ற்கே நான் இப்பொழுது என்னை சுற்றி உள்ள நல்லா உள்ளங்களுக்காக தான் நண்பனே என் வாழ்க்கைப் பயணத்தை வேறு திசையில் செலுத்திக்கொண்டு இருக்கின்றேன்...இருந்தும் ஒரு மன ஆறுதலுக்காக என்னில் இருக்கும் சோகங்களை,வலிகளை பகிர்ந்துகொள்ள இக் கவிகள் தான் எனக்கு கை கொடுக்கின்றன... நண்பனே நன்றி தங்கள் ஆறுதலுக்கு.......கருத்துக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara எழுதியதுசொல்லடுக்குகளையோ, கற்பனை வளத்தையோ

இங்கு தெரியவில்லை

vன் கண்களுக்கு ஒன்று மட்டுமே தெரிகிறது.

'உயிரின் வலி"

மாசற்ற மனதின் வெளிப்பாடு.

நனறாக இருக்கிறது எனும் சொல் இந்தவலிக்ககு மருந்து போடாது. தொடர்ந்தும் எழுதுங்கள்

ம்ம்ம் நண்பனே என் கவிகள் அனைத்திலும் எந்த கவி நயமும் இருப்பதில்லை தான் ஆனால் அனைத்துமே என் உயிரின் வலிகள் தான் நண்பனே ஆகையால் தான் நான் கவி எழுதும் போது வலியினை பிரலிபலிக்கும் படி எழுதுகின்றேன்... நண்பனே நானே என் கவிகளை திரும்ப வாசிக்கும்போது....மனசுக்கு சின்ன சுமை குறைந்ததாய் எண்ணுவேன்....என் உயிரில் வலிகள் நிறையவே இருக்கு எதிர்காலத்தில் வலிகள் வந்தால் இருப்பத்தற்கு இடம் இல்லாத அளவுக்கு இப்பவே வலிகள் ஆகிவிட்டன.... நன்றி நண்பனே...

ம்ம்ம் நண்பனே என் கவிகள் அனைத்திலும் எந்த கவி நயமும் இருப்பதில்லை தான் ஆனால் அனைத்துமே என் உயிரின் வலிகள் தான் நண்பனே ஆகையால் தான் நான் கவி எழுதும் போது வலியினை பிரலிபலிக்கும் படி எழுதுகின்றேன்... நண்பனே நானே என் கவிகளை திரும்ப வாசிக்கும்போது....மனசுக்கு சின்ன சுமை குறைந்ததாய் எண்ணுவேன்....என் உயிரில் வலிகள் நிறையவே இருக்கு எதிர்காலத்தில் வலிகள் வந்தால் இருப்பத்தற்கு இடம் இல்லாத அளவுக்கு இப்பவே வலிகள் ஆகிவிட்டன.... நன்றி நண்பனே...

அடுக்குத் தொடர்களும் அற்புதமான சொல்லாடல்களும்தான் கவிதை என்பது இல்லை. உங்கள் மனதிலுள்ள உணர்வை வாசிப்பவர் மனதிலும் ஏற்படுத்தினாலே அது சிறந்த கவிதைதான். உங்கள் கவிதை சிறந்த கவிதை என்றே நான் எண்ணுகிறேன். உங்களுக்க ஆறுதல் சொல்லும் அறிவும் பக்குவமும் எனக்கு இல்லை. என்றாலும் காலம் உங்கள் காயங்களை மாற்றிவிடும் என்றே நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sujeenthan ம்ம்ம் நண்பனே இவைகள் என் மன ஆறுதலுக்காக நான் எழுதுகிறேன் இதில எந்த நயமும் இருப்பதாக நான் அறியேன் ,,,உங்கள் கருத்துக்கு நன்றி நண்பனே..

"காலம் காயங்களை ஆற்றும்"

அது!!!!!!!!!!!!!!!!!!.

இதையும் சேர்த்துக் கொள்ளுங்க....

"இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கள உறவின் கவலையைப் போக்க எவ்வளவு உறவுகள்! எவ்வளவு கருத்துக்கள்! எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள்!

முகமறியா உறவுகளின் எழுத்துகள் நிச்சயம் உங்களுக்கு ஒருவித மன ஆறுதலைத் தந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

இது தேறாத கேஸ் மனதிற்குள்ளே போட்டு மாய்ந்து மாய்ந்து

எதுவரைக்கும் இப்பிடியே சோகத்தைச் சுகமானதாச் சுமக்கப்போறீர்?

பேசாம எழும்பி வாரும்...

இல்லையெண்டா ஊர்உலகம் உம்மை மெண்டலாக்கிப்போடும்.

ஏற்கனவே மெண்டலான ஆதிவாசி

இன்று தான் உங்கள் கவி வாசித்தேன். அழகான சோகமான கவிதை.. வாழ்வில் சோகம் இல்லதா மனிதனே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சோதனை வேதனை. இவைகளை தவிர்த்து எப்படி முன்னேறுவது என்று சிந்தியுங்கள் நண்பி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Saniyan "காலம் காயங்களை ஆற்றும்"

நன்றி...ம்ம்ம் காலம் தான் என் காயங்களை நிச்சயமாக ஆற்றனும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Selvamuthu நிஜம் தான் நான் இந்த முகம் அறியாத உறவுகளில் ஆறுதல் என் மனதில் தேனமுது போல் இருக்கின்றது.....காயமே சூழ்ந்த என் இதயம்...உங்கள் ஆறுதலில் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கின்றது ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் ஆதிவாசி சரியாக சொன்னீர்கள் இதனால் மென்டலாகினாலும் ஆகிடுவேன் ஐச்சச்சோ வேணாம் இந்த வம்பு.....ம்ம்ம் மீளப்போகின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் றமா இனி நான் இதெல்லாம் விட்டு வெளியேறனும் என்று தான் இருக்கின்றேன்....இதனால நான் மீண்டும் மீண்டும்...காயப்பட்டிட்டு இருக்கணும்....ம்ம்ம் இனி முன்னேறும் வழி பார்க்கனும் என்று இருக்கின்றேன் முயற்சி செய்கின்றேன்.... நன்றி நண்பி..

  • 1 year later...

அழகிய கவிதை. இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதையாக இருந்தால் இதை எழுதியவர் எவ்வளவு துன்பப்பட்டு இருப்பார் என்பதை நினைக்க வேதனையாக உள்ளது.

விடைபெறும்வேளை

விடைபெறும்வேளை

நெருங்கிவிட்டதா எமக்கு

என் கண்ணீர் உன் கண்களில்

உன் கண்ணீர் என் கண்களில்

இடம் மாறப்போகின்றோம்

இதயங்கள் பரிமாறாமலே

இப்படி இதய தேசத்தில் உன்

நினைவுகள் நிறைய இருந்தாலும்

எல்லாம் சொல்லபோவதில்லை

உனக்கு இக் கவிதை

இதுபோல இக் கவிதை

சுமக்காத பல நிகழ்வுகள்

உன்னுள்ளும்..........

என்னுள்ளும்...........

என்ன தான் நான் எழுத

உனக்கு என்னையே எழுதி

கொடுக்க நினைத்த பின்

எனக்கு உன்னிடம் இருந்து

நினைவு பரிசு எதற்கு

உன் நினவுகளே நீ எனக்கு

தந்திருக்கும் பரிசு தானே

பிரிவதற்கு துடிக்கும் உன்னை

விட எனகென்றும் நிரந்தரம்

பிரியமான உன் பிரியாத

நினைவுகளே அன்பே

சேர்ந்திருந்த பல பொழுதுகளில்

நாம் பல குட்டிசண்டைகள்

போட்டதினால்பேசாமலும்

இருந்திருக்கிறோம் இப்போ

பிரிவுக்கு தேதி குறிக்க

நினைத்து விட்டார்கள் என்

பெற்றோர்கள்....இந் நிலையில்

பிரிவுகள் என்ன பேசிக்கொள்ள

போகின்றனவோ நம் உறவு பற்றி...

அன்பே உன்னை ரசித்து

கவிதை எழுதிய எனக்கு

உன்னை வெறுத்து கவி எழுத

என்னால் முடியவில்லையே

உனக்கு பூக்கள் பறிப்பதற்கு

இல்லை என்று தெரியும்

அவை வாடிவிடும் என்று

நீ அறிந்ததினால்...

இதையும் நீ புரிந்துகொள்

பூக்களை புரிந்துகொண்ட மாதிரி

இதயங்கள் கூட எரிப்பதற்கல்ல

என்பதையும் புரிந்துகொள் அன்பே

என்டைக்காவது எங்காவது

சந்தித்துக்கொள்வோம் அன்பே

சந்தர்ப்பம் கிடைத்தால்

அந்த சத்திப்பு கூட இன்னுமொரு

பிரிவுக்கு தானே அன்பே...

நீ மகிழ்வாய் இருந்தால் தனியவே

சிரித்துகொள் என் அன்பானவனே

எனெனின் உன்னுடன் பலர்

இருப்பார் அதை பகிர்ந்துகொள்ள

சோகம் வந்தால் மட்டும் சொல்லி

அனுப்பு அதை நான் உன்னுடன்

பகிர்ந்துகொள்வேன் எனெனின்

சோகம் வரும்போது உன்னருகில்

எவரும் வரார் அன்பே உனக்காக

பல கலர் கனவுகள் கண்டேன்

அவை எல்லாம் நிஜமாகுமுன்

விடைபெறும்வேளை அல்லவா

நெருங்கிவிட்டது என் அன்பே

ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...

தொலைந்துவிடபோகிறதா

எங்களின் நீ..ண்ண்ண்ண்ண்ட

உறறறறறறறறறறறறறறறறவு

நான் என்ன செய்வேன்...சொல்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் வலிகளோடு எழுதினேன்.... புரிந்தமைக்கு நன்றிகள் கருத்துக்கும் நன்றிகள் கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.