Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகள் நிலை-உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கலைஞர்

Featured Replies

என் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும்

நான்

யாரென்பது தெரியும்.........

நீங்கள் கேட்டவை சரியாக இருக்கலாம்?

யாருக்குத் தெரியும்? :P

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

இரத்தத்தின் வெட்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

இரத்தத்தின் வெட்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா

இந்தப் பாடலுக்கும்

எனக்கும்

தமிழீழ விடுதலை விரும்பிகளுக்கும் நிறையவே

ஒற்றுமையுண்டு.

ஆபாவாணன் (சின்னா = சின்னசாமி)

மற்றும்

அவர்களது நண்பர்களையும் எம்மோடு இணைக்க வைத்த காலம் அது.

ஒருவன் சிங்கப்பூரிலிருந்து

தமிழீழ விடுதலைக்காக போராட வந்த

காலம் மட்டுமல்ல.........

வேண்டாம்.............................

நன்றி........................

  • Replies 107
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா!

ஒரு விடயத்தைச் சொல்லவந்தால் முழுமையாக முடியுங்களேன். நீங்களும் மனதிற்குள் வைத்துப் புூட்டியபடி, எம்மையும் குழப்பமாக்கி.............. சொல்லவிரும்பினால் அது பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்!

அஜீவன் அண்ணா!

ஒரு விடயத்தைச் சொல்லவந்தால் முழுமையாக முடியுங்களேன். நீங்களும் மனதிற்குள் வைத்துப் புூட்டியபடி, எம்மையும் குழப்பமாக்கி.............. சொல்லவிரும்பினால் அது பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்!

:wink:

இதுதானே வேணாம்கிறது..............

இருந்தாலும் தூயவனின் லொல்லு எனக்கு பிடிக்கும்.

நானும் முன்ன இப்படித்தான் :lol:

ஆரம்ப காலத்தில்

தமிழீழத்தின் குரல் என்று ஒரு வானோலியை மக்கள்

கேட்டார்கள்.............

அதனுடன் சிங்களப் பகுதி வானோலி ஒன்றும்

தொலைக் காட்சிப் பகுதியொன்றும்

இருந்தது.

அதில் என் குரல் மட்டுமல்ல உழைப்பும்

வான் அலைகளில்

வலம் வந்தது............. :oops:

என்னுடன் இருந்தவர்களில்

இப்போது பிரான்சிலிருந்து ஒளிபரப்பாகும்

டீடீஎன் தொலைக் காட்சியில் ஒருவரும்

ஐபீசியில் ஒருவரும் இருக்கிறார்கள்.

பலரை தெரியவில்லை.

நான் அதிகம் பேசுவேன். :P

சரியென்று பட்டதற்காக வாதாடுவேன்.

இதனால் பலருக்கு என்னைப் பிடிக்கும்

சிலருக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. :lol:

எனக்கு அப்போது பயம் என்றது என்னவென்று தெரியாது.

இதனாலேயே எனக்கு தெரியாமலே

உள்ளே ஆபத்து நிறைவே காத்து இருந்தது.

(இதனால்தான் அரசியலுக்கு டாட்டா காட்டி விட்டு

படம் செய்கிறேன்.........காட்டவில்லை :P )

என்னை காவு கொள்ள வந்தவர்களே

எனக்கு காவலானார்கள்!

அப்போது ஒரு நாடகம் எழுதி

கே.கே.நகர் அம்மன்கோவில்

சத்துணவு திட்ட அரங்கில் நடத்தினேன்.

அதன் பெயர்

"கோலங்கள்"

ஏகப்பட்ட பிரபலங்கள் வந்திருந்தார்கள்.

ஒரு குடும்பத்தில் அனைவரும்

ஒற்றுமையில்லாமல் இருப்பதால்

வெளியே இருந்து வரும் எதிரிகள்

அனைவரையும் அழிப்பதும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் போராடி வெல்ல முடியும்

............

நாடகம் முடிந்ததும்

என்னை வம்பில் மாட்டி விட

சுத்துமாத்தான ஒரு பேர்வழி

"உமது நாடகம்

ஒரு குடும்பத்தை பற்றியா?

அல்லது இயக்க உள் முரண்பாடு பற்றியா?

அல்லது தமிழீழ விடுதலை இயக்கங்களுக்குள் உள்ள முரண்பாடு பற்றியா?

அதை தெளிவாக்குங்கள்........."என்று அனைவர் முன்னாலும் என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன்......

"விளங்க வேண்டியவர்களுக்கு விளக்கியிருக்கிறது.

சந்தோசம்............. :!:

தொப்பி அளவாயிருந்தால்............

ஏதோ செய்யச் சொல்வார்களே?......." என்று விடை பெற்றேன். :wink:

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள்.

இப்போதும் - அந்த

குணம் மாறவேயில்லை என்பதில்

எனக்கு வருத்தமே.

சொல்லி விட்டே வெளியேறினேன்.

அந்த தைரியம் எப்படி என

வியப்பதுண்டு.

அக்காலத்தில்தான்

எனக்கு அடையாறு திரைப்படக் கல்லூரியில்

சிறப்பு பயிற்சி பெற எம்.ஜீ.ஆர்.அவர்கள் வழி

வகுத்துத் தந்தார்கள்.

அதனால் திரைப்பட மாணவர்களைத் தெரியும்.

கனடாவில் என் நண்பனே

கள நண்பர்கள் சந்திப்பின் போது

யாழ்கள நண்பர்களிடம் சொன்னான்.

இவன் செத்திருப்பான் என்றுதான் நினைத்தேன்.

உயிரோட இருக்கிறதை பார்க்க வியப்பாயிருக்கு என்று? :lol:

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா

விடியலுக் கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னுமேன் பாரம்

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னுமேன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும்

இரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அஜீவன் அண்ணா!

ஒற்றுமையே எமக்குப் பலம். ஆனால் சிலர் குறுக்குவழியில் சம்பாதிக்கவும், ஒரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் இருந்து விடுதலை பெற்று, அதை பிறிதொரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் கையளிப்பது என்ற எண்ணத்தால் தான் இத்தனை பிளவுகள் எமக்குள் வந்தன என நினைக்கின்றேன்.

எல்லாத்தையும் அவன் உபகண்டம் பார்த்துக் கொள்ளும். எம்மை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்ற கணக்கில் தான் முன்பு போராட வெளிக்கிட்ட மாற்று இயக்கங்கள் இருந்தன. அதனால் உமாமகேஸ்வரன் போன்ற கோடிஸ்வரர்களும் உருவாக வழியாகியது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட இயகக்ங்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், தமிழருக்குள்ளேயே அடிபட்டு, நாமே அழிந்திருப்போம். சிங்களவனுக்கு வேலை இருந்திருக்காது. உண்மையில் அப்போது மற்ற இயக்கங்களைத் தடை செய்ய தலைவர் எடுத்த முடிவு சரியானது தான்!

உண்மை தான் அஜீவன் அண்ணா!

ஒற்றுமையே எமக்குப் பலம். ஆனால் சிலர் குறுக்குவழியில் சம்பாதிக்கவும், ஒரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் இருந்து விடுதலை பெற்று, அதை பிறிதொரு ஆக்கிரமிப்பு சக்தியிடம் கையளிப்பது என்ற எண்ணத்தால் தான் இத்தனை பிளவுகள் எமக்குள் வந்தன என நினைக்கின்றேன்.

எல்லாத்தையும் அவன் உபகண்டம் பார்த்துக் கொள்ளும். எம்மை நாமே பார்த்துக் கொள்ளுவோம் என்ற கணக்கில் தான் முன்பு போராட வெளிக்கிட்ட மாற்று இயக்கங்கள் இருந்தன. அதனால் உமாமகேஸ்வரன் போன்ற கோடிஸ்வரர்களும் உருவாக வழியாகியது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட இயகக்ங்கள் தொடர்ந்தும் இருந்திருந்தால், தமிழருக்குள்ளேயே அடிபட்டு, நாமே அழிந்திருப்போம். சிங்களவனுக்கு வேலை இருந்திருக்காது. உண்மையில் அப்போது மற்ற இயக்கங்களைத் தடை செய்ய தலைவர் எடுத்த முடிவு சரியானது தான்!

அச்சம் விட்டது சுதந்தரம் ;

அன்பு விடாதது சுதந்தரம் ;

இச்சைப் படிசெயல் சுதந்தரம் ;

இடர்செய் யாதது சுதந்தரம் ;

பிச்சை கொள்ள விரும்பாது

பிறருக் கீய வருந்தாது

கொச்சை மொழிகளைச் சொல்லாது

கோணல் வழிகளிற் செல்லாது.

மடமை விட்டது சுதந்தரம் ;

மானம் விடாதது சுதந்தரம் ;

கடமை கற்றது சுதந்தரம் ;

கபடம் அற்றது சுதந்தரம் ;

கொடுமை கண்டு பொறுக்காது

கொடியர் தமையும் வெறுக்காது

அடிமை செய்து சுகிக்காது

யாரையும் அடிமை வகிக்காது.

கொல்லக் கூசும் சுதந்தரம்

கொள்கைக் குயிர்தரும் சுதந்தரம்

எல்லை விட்டு நடக்காது

எதிரியை ஒண்டி மடக்காது

வெல்லற் கேனும் பொய்யாது

வேற்றுமைக் காரரை வையாது

பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது

பட்டதன் தோல்வி ஒளிக்காது.

தன்சோ றுண்பது சுதந்தரம்

தன்துணி யணிவது சுதந்தரம்

என்னே வறுமை வந்தாலும்

எத்தனை துன்பம் தந்தாலும்

தன்னேர் செம்மை பிரியாது

தன்குறை சொல்லித் திரியாது

பொன்சேர் போகம் மதிக்காது

பொய்ப்புகழ் பாடித் துதிக்காது.

போராடுவது மட்டுமல்ல - மனதால்

அந்த வெற்றிக்காய் எண்ணுவதும்

வேண்டுவதும்

இப்போதைய காலத்தில் மேன்மையானதே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞனுக்கு உள்ள தகுதியே, மற்றவர்களைப் போட்டுக் மீண்டும்மீண்டும் குழப்புவது தான். அஜீவன் அண்ணா ஒரு சிறந்த கலைஞன் என்று ஒத்துக் கொள்கின்றேன்!

:wink: :P :P :P

அப்ப அஜீவன் அண்ணா,

'புதிய பாதயில' போகாம , 'உளன்றியில' ஏத்துப்படாம

எப்படித் தப்பினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை வைத்து ஏமாறுகின்ற பழக்கமா? அது "புதிய பாதை என்று போட் போட்டாலும், கடைசி வேறை எங்கு போய்த் தானே நிற்குமாம்.

உள் முரண்பாடுகளைத் தீர்த்த வழி தானே புதிய பாதை,

இன்றும் சிலர் இணயத்தில் மக்கள் போராட்டம், ஜன நாயகம் என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு நினவில் வருவது ,உப்படி எண்பதுகளில் சொல்லித் தெரிந்த உந்தத் தோழர்கள் தான்.உந்தா படை வருகுது எல்லாரும் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில நடுங்கோ, நாங்கள் வந்து விரட்டப் போறம் எண்டிச்சினம்.

கடைசியில சனம் சோத்துப் பாசல் குடுத்து ஏமாந்தது தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிஆர்எல்எவ் காரைநகர் தாக்துல் என்று கதை விடுவதையும், புளோட் சண்டைக்குப் போகின்றேன் என்று சாப்பாட்டுப் பாசல் வாங்குவதையும் நக்கலடித்து ஒரு பாட்டு வந்ததாமே!

ஒரு தடவை ஒருவர் பாடும்போது கேட்டேன். ஆனால் வரிகள் மறந்து விட்டது. யாருக்காவது தெரியும் என்றால் தாங்கப்பா! நல்ல நக்கலாக இருக்கும்! :wink: :P

பார்த்தீபனின்

புதிய பாதையா?

அது நல்லா ஓடிச்சு............. :P

ஈபிஆர்எல்எவ் காரைநகர் தாக்துல் என்று கதை விடுவதையும், புளோட் சண்டைக்குப் போகின்றேன் என்று சாப்பாட்டுப் பாசல் வாங்குவதையும் நக்கலடித்து ஒரு பாட்டு வந்ததாமே!

ஒரு தடவை ஒருவர் பாடும்போது கேட்டேன். ஆனால் வரிகள் மறந்து விட்டது. யாருக்காவது தெரியும் என்றால் தாங்கப்பா! நல்ல நக்கலாக இருக்கும்! :wink: :P

"காத்தடிக்குது புயல் அடிக்குது

காரை நகரில EP அடிக்குது.

சோத்து பாசலை PLOT அடிக்குது.

சீனி மூட்டையை tela அடிக்குது."

இப்பிடி வருமே அந்தப்பாட்டா.....???? எனக்கு தெரியவே தெரியாதப்பா....! :wink: :P :P

அப்ப அஜீவன் அண்ணா,

'புதிய பாதயில' போகாம , 'உளன்றியில' ஏத்துப்படாம

எப்படித் தப்பினீர்கள்?

நான் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தும்

அவர்களோடு வாழ்ந்தும்

அவர்களது துன்பங்களை பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன்.

என் மனம் விரும்பாத ஒன்றை

என்னால் தொடர முடியாது.............

அவர்கள் சிதற முன்னமே

நான் வெளியேறினேன்.

ஆபத்துதான்...........அதிலிருக்கும் திரில் :P

இப்போ எல்லாம்

அவற்றை மறந்தே விட்டேன். :P

நாரதர் கலகம் நன்மையில் முடிய :lol: ஒத்துழைத்திருக்கிறேன். :P

நன்றி.........வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பேசாமல் இருப்பவர்கள் அனைவரும் எதிரிகளுமல்ல.

பேசுபவர்கள் அனைவரும் சார்பாளர்களுமல்ல........"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா என்ன இப்படி சிரிக்கிறீங்க. ஒண்டுமே புரியல. சொல்லிட்டு சிரிச்சா நானும் சேந்து சிரிக்கலாமெல்லா :roll:

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... அதே தான்! :):lol:

இந்தப்பாடல் ஒலி வடிவில் எங்கு பெறமுடியும்? இணையத்தில் உண்டா? இவ்வாறன பழையபாடல்கள் வேறு இருந்தாலும் நல்லா இருக்கும்! :wink:

உள் முரண்பாடுகளைத் தீர்த்த வழி தானே புதிய பாதை,

இன்றும் சிலர் இணயத்தில் மக்கள் போராட்டம், ஜன நாயகம் என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு நினவில் வருவது ,உப்படி எண்பதுகளில் சொல்லித் தெரிந்த உந்தத் தோழர்கள் தான்.உந்தா படை வருகுது எல்லாரும் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில நடுங்கோ, நாங்கள் வந்து விரட்டப் போறம் எண்டிச்சினம்.

கடைசியில சனம் சோத்துப் பாசல் குடுத்து ஏமாந்தது தான் மிச்சம்.

±øÄ¡Õõ ¬ÃõÀò¾¢ø §À¡Ã¡¼ ±ýÚ ¦º¡øÄ¢ì¦¸¡ñξ¡ý ¦ÅǢ츢ð¼¨Å. 83 ¬õ ¬ñÎ

þÉôÀΦ¸¡¨ÄìÌôÀ¢ýɧà þÂì¸í¸Ç¢ø «¾¢¸

«ÇÅ¢ø Áì¸û ¾í¸¨Ç þ½òÐ즸¡ñ¼É÷.

²¾¡ÅÐ ´Õ þÂì¸ò¾¢ø þ¨½óÐ

§À¡Ã¡¼§ÅñÎõ ±ýÈ ¯óоĢø þ¨½ó¾¡÷¸§ÇÂýÈ¢

þó¾ þÂì¸ò¾¢ø þ¨½óо¡ý §À¡Ã¡¼§ÅϦÁýÈ

¯Ú¾¢Ô¼ý þÕì¸Å¢ø¨Ä.

þÂì¸í¸¨Ç Àü颃 ¦¾Ç¢×õ «ó¾¿¡ð¸Ç¢ø

þÕó¾¾¢ø¨Ä.

þÂì¸í¸Ç¢ý ¾¨ÄÅ÷¸û, §ÁøÁð¼ ¯ÚôÀ¢É÷¸û

Ţ𼠾ÅÚ¸ÙìÌ. «ÊÁð¼ ¯ÚôÀ¢É÷¸û À¡Åõ

±ýÉ ¦ºöÅ¡÷¸û.

ஓம் அது சரி தான் பலரது வாழ்க்கை இந்த மோசடித் தலைவர்களால் சீரழிக்கப்பட்டது, ஆனால் இந்தத் துயரம் இன்றும் தொடர்வது தான் கவலை அழிக்கும் விடயம்.என்று இவர்கள் சரியான பாதயைத் தேர்ந்து எடுக்கப் போகிறார்கள்?

மோசடியான தலமையை இனங்கண்டு கொள்ளாததில் இவர்களின்

பங்கும் உண்டு அல்லவா?தாங்களாகவே விலகி ,போராட்டத்தின் சரியான தலமையின் கீழ் ஒன்று இணயலாமே?

தொண்டர்கள் இருப்பதால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள்.தொண்டர்கள் இல்லாது விடின் தலமை இல்லை.ஆகவே என்று இந்த தொண்டர்கள் தங்கள் பிழையை உணர்ந்து விலகுகிறார்களோ அன்றே இந்த மோசடித் தலமைகள் தனித்து விடப்படும்.இன்றய டக்கிளசு,வரதர் அணி,கருணா குழு இஎன்டிஎலெf எல்லாம் தொண்டர்கள் இன்றி இயங்க முடியாது.

கேக்கிறதுக்கு நல்லாயிருக்கிற விடயங்கள்

செயல்படுத்தும் போதுதான்...................:?: ஆகின்றன.

கமியூனிசம் பேசுறதை கேட்கும் போது

ஆகா என்று வாய் பிளக்க வைக்கும்.

ஆனால் நடைமுறையில்

சாத்தியக் குறைவுகள் அதிகம்.

நாம்

ஒன்றுபட வேண்டும் என்று சொல்லுகின்ற நண்பர்களே

நமக்குள் பிரிவுகள் அதிகரிக்கக் கூடிய

விடயங்களை தூக்கிப் பிடித்து பேசுகிறோம்.

தலைவர்களாக இருப்போர் கூட

இப்படிப் பேசாதீர்கள் - நாம்

பழைய பிரச்சனைகளை மறந்து

இப்போதாவது ஒன்றுபட வேண்டும் என்று

மனம் திறந்து சொல்வதில்லை.

பிரிவுபட்டு இருப்பது என்னவோ

தற்காலிகமாக வெற்றியாகத் தெரியலாம்.

அது தொடர் வெற்றியாக வாய்ப்பே இல்லை.

சிந்திக்க வேண்டியோர் சிந்திப்பார்களா?

நாமே

நமக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு நின்றால்

நாம் எப்போது ஒன்றுபடுவது?

உலகமே நம்மை எதிர்த்தாலும்

நாம் மனதாலாவது இணைந்து நின்றால் - அதுவே

ஒரு பாரிய சக்தியை உருவாக்கும்.

நேற்றைய மாலை நான் எனது சுவிஸ் நண்பர்களோடு கழித்தேன்.

காரணம் சுவிசின் உதைபந்தாட்ட விழா ஒருங்கிணைப்புக்காக..........

அவர்களது தேசப்பற்று மட்டுமல்ல அவர்களோடு வாழும்

வேற்று இனத்தவர்களையும் மதிக்கும் குணத்தைக் கண்டு

நெகிழ்வாக இருந்தது.

ஒரு சுவிஸ் நண்பன்

முதல் நடந்த குரவேசியா விளையாட்டைப் பற்றிய பேச்சோடு

"யுகோகள்.......அவர்கள் கிரிமினல்கள்" என்றான்.

பக்கத்திலிருந்தவன் சொன்னான்

"நீ றேசிசமாக (இனவாதமாக) பேசுகிறாய்

அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.

இப்படிப் பேசாதே" என்றான்.

முதலில் பேசியவன் மெளனமானான்.

உதைபந்தாட்டத்தை அகன்ற திரையில் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சுவிஸ் வீரர்களுக்காக மட்டுமல்ல.

கொரிய வீரர்களது அபாரத்துக்காகவும்

அவர்கள் கரகோசம் செய்தார்கள்.

:?: :?: :?: :?:

இரவு முழுதும் நானும்

நான் வாழும் தேச வெற்றிக் கழிப்பில்

என் நண்பர்களோடு கலந்தேன்.

pr1556030ge.jpg

இது போல்

நம் மனங்களும் ஒன்றுபடுமானால் எதிர்காலத்தில்

நாமும் ஒன்று பட்டு நிற்போம்.

என்று எனக்குள் தோன்றியது.

அதை இங்கு உள்ள யாழ் கள நண்பர்களான நாமாவது செய்வோமா?

நீ வழிகாட்டியாய் இரு

அடுத்தவன் அதைத் தொடர்வான்.-யாரோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா..அழகான பொண்ணா இருக்கே...

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா..அழகான பொண்ணா இருக்கே...

பொண்ணா? பெண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

நிதிக்கும் நீதிக்கும் வித்தியாசம் தெறியாதவர்கள் இங்கே கதைக்க கூடாது......

  • கருத்துக்கள உறவுகள்

பெண் க தான் சொன்னன் கந்தப்பு...........ke ke :oops: :oops: :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா! நான் கூட நீங்கள் போட்ட படத்தைப் பார்த்த பிறகு நான் கூட சுவிசுக்குத் தான் சப்போட்! :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.