Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோய் காரணிகள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் மெனிங் சந்தையில் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புற்றுநோய் காரணிகள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் மெனிங் சந்தையில் கண்டுபிடிப்பு
 
    By General 
2013-02-02 14:15:46
 
கொழும்பு மெனிங் சந்தையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இவற்றை விற்பனைசெய்து வந்த சுமார் 8 கடைகள் மீது வழக்குத் தொடர கொழும்பு மாநகரசபை முடிவு செய்துள்ளது.
 
மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தொடர்பில் பரிசோதனை நடவடிக்கையொன்றை கொழும்பு புறக்கோட்டை பகுதியில் முன்னெடுத்த போதே  இவை இணங்காணப்பட்டுள்ளன.
 
மஞ்சள் தூளில் 'மெடனில்' எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மஞ்சள் நிறப்பொடி கலக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிளகாய்த்தூளிலும் நிறத்தை பிரகாசமாகக் காட்டக்கூடிய, மனித பாவனைக்கு உதவாத இரசாயனம் கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 
இதன்போது அங்குவிற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் அனைத்தும் மருத்துவ பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள் போது அவதானமாக இருக்கும்படியும் அங்கீகாரம் பெற்ற உற்பத்திகளை வாங்குமாறும் கொழும்பு மாநகரசபையின் மருத்துவ பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய் காரணிகள் அடங்கிய மஞ்சள் மற்றும் மிளகாய்த் தூள் மெனிங் சந்தையில் கண்டுபிடிப்பு

கவனிக்க வேண்டிய ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த நாம்தான் அவதனமாக இருக்கவேண்டும்..ஊரில் இருப்பவர்கள் கடையில் தூள்வாங்குவது குறைவு..யாழ்ப்பாணத்தில் அநேகமாக எல்லோரும் வீட்டில் வறுத்து பொரித்து மூக்கை துளைக்கும் வாசத்துடன் செய்வார்கள்..ஆனால் புலம்பெயர்ந்த நாம் இப்படியான இலங்கையில் இருந்து வரும் கடைத்தூள்களையே அநேகர் வாங்கிப் பயன்படுத்துகிறோம்..எனவே கவனமாக இருப்பது அவசியம்...இயன்றவரை ஊரில் இருந்து பார்சலில் எடுப்பது பாதுகாப்பு செல்வு அதிகமானாலும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இழவப்பா இது????? கான்சருக்கு மஞ்சள்த்தூள் நல்லதெண்டுட்டு கரவுவஞ்சகம் இல்லாமல் பாவிச்சன்......இப்ப அதுக்கும் சோதினையே :(  :(



சிறி லங்கா பொருட்களை புறக்கணிக்க மாட்டோம் என்று அடம்பிடிப்போர் படிக்கவேண்டிய செய்தி.

 

மஞ்சளும்,மிளகாய்தூளும் அங்கையிருந்தே வருது?????? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
பெரிய நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருந்து இறக்கிய மிளகாய்த்தூள் கொள்கலன் ஒன்று ஐக்கிய ராச்சியத்தில், 18 மாதம் முன்னர் இதே டை பிரச்சனையால் தடுக்கப் பட்டது. 
 
இதன் பின்பும், சுமார் மூன்று மாதம் முன்பும் மீண்டும் அதே நிறுவனத்தின் ஒரு கொள்கலன் அதே காரணத்துக்காக, அடி வாங்கி இருக்கிறது.
 
இது உள்வீட்டுத் தகவல். பொதுவாக நுகர்வோரினை எட்டுவதில்லை. விளம்பரங்கள் கொடுப்பதால், அதனை இழக்காமல் இருக்க, லண்டன் தமிழ் மீடியாக்கள் இதனை கண்டு கொள்ளவில்லை.
 
அண்மையில் கூட ஒரு தமிழர், உள்ளியினை, இஞ்சி என இறக்கி வரி ஏய்த்து மாட்டினார். BBC யில் வந்ததால் வெளியில் தெரிந்தது. 

Edited by Nathamuni

பொதுவாக இலனகையில் இருந்து மேற்குலக நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தாரதரத்தை அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் நுகரும் பொருட்களுடன் தரத்துடன் ஒப்பிடமுடியாது.

 

அடுத்த தலைமுறை இவ்வாறான பொருட்களை நுகர்வு செய்யவேண்டும் என்றால் தரம் உயரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கடைகளில் விற்கும், சில பிரபல தயாரிப்பு மிளகாய்த்தூளில், நிறத்துக்காக... மனிதருக்கு தீங்கு விளைவிக்கும், இரசாயனக்கலவைவையை... கலந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டு தடை செய்யப் பட்டிருந்தும். ஏதோ வழியால்... (சுவிஸ், இங்கிலாந்திருந்து) மீண்டும், ஒளித்து வைத்து விற்பதை அவதானித்துள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.