Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி

karuna-protest4_CI.jpg

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ  அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே,  இன்று மாலை திருப்பதி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு  சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று  காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. 

திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர்  திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன்  உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில், ராஜபக்சே  வருகையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் தமிழ் கலாச்சாரம், தமிழ் பெயர்கள், தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

மொழியையும், இனத்தையும் அழிக்க சிங்கள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. ராஜபக்சேவுக்கு பாடம் புகட்டவே தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அனைவரும்  ஒற்றுமையுடன் போராடினால் வெற்றிக் கிடைக்கும். முன்னர் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்" என்று கூறினார்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சென்னையில் கருணாநிதி தலைமையில்  டெசோ அமைப்பினர் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கறுப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.

ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான 'டெசோ'வின் சார்பில் கரறுப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கரறுப்பு உடையில் குவிந்தனர்.

டெசோ அமைப்பை சேர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கரறுப்பு உடையில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "சர்வதேச போர்க்குற்றவாளி எனப்படுகிற ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். திருச்சியில் நடைபெற்ற லட்சக்கணக்கான மக்கள் கூடிய மாபெரும் கூட்டத்தில் இன்று சொல்லும் கருத்துகளை விரிவாக விளக்கியிருக்கிறேன். அதிலே முக்கியமான ஒன்று தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம் பண்பாடு, மொழி அனைத்தையும் அழிக்கிற- கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக்ஸ அரசு வெறியாட்டம் போடுகிறது என்பதை விளக்கியிருந்தேன். நாம் கண்போல் காத்த அருமைத் தமிழ் மொழியும் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுகிறது. தமிழ்ப் பெயரிலான கிராமங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக ராஜபக்ஸவின் கொடுங்கோலால் அழிக்கப்பட்டு மாற்றுப் பெயர் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் தமிழகத்தில் திருப்பெரும்புதூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்களில் எப்படி ஸ்ரீ என்ற வடமொழி எழுத்தைப் புகுத்தினார்களோ அவ்வாறு சிங்கள மொழியில் ஊர்ப் பெயர்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க முடியாது என்று கூறுகிற ராஜபக்ஸ அரசைப் பற்றி மத்திய அரசு இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88412/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஒற்றுமையைக் குலைத்ததில் பெரும்பங்கு வகித்தது தாங்கள்தான்.. காசு சேர்க்கிறேன் பேர்வழி என்று உங்கள் அரசியலைக் காட்டினீர்கள்.

முதலில் உங்கள் கட்சிக்குள் எந்த மகனுக்குத் தலைவர் பதவி என்பதில் குடும்ப ஒற்றுமையைக் காண்பிக்கலாமே.. :D

உங்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்குள்ளயே  ஒற்றுமையை காணோம் இதில வேற உபதேசம் 

இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை .....

சொற்பிழை திருத்தி உள்ளேன்
நுணா அண்ணாவுக்கு நன்றி

Edited by அலைஅரசி

தாய்மார் வேறே  எப்பிடி ஒற்றுமை வரும் தமிழர் பண்பாட்டிற்கு இசைவாய் பல மணம்

முடித்த நம் தெலுங்குச் சிங்கம் கருணாநிதி வாழ்க 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jOe_qbQUGzc

Edited by யாழ்அன்பு

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக இதுவரையில் தமிழக அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டதில்லை. ஈழத்து போராட்ட இயக்கங்கள் அமைப்புகளும் ஓரணியில் திரண்டது கிடையாது. வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்தால் சேர சோழ பண்டியன் இதர குறுநில மன்னர்கள் என்று எவனும் ஒன்றுபட்டது கிடையாது. ஒற்றுமை குறித்து பேசுவதற்கு யாருக்குத்தான் யோக்கியதை இருக்கின்றது. தமிழர்களால் இன்றைக்கும் முடியாத ஒரு விசயம் முன்னர் நடந்திருக்க வேண்டும் என்பதே கோமாளித்தனம்.

உலகத்தமிழர்கள் வேண்டுவது, தேடுவது - தலைமை.

அதை இன்று வரை தந்த ஒரே மனிதர் - மேதகு பிரபாகரன் மட்டுமே.

சோரம்போகாதா, இனத்தின் நன்மைகளை மட்டுமே முன்வைத்து நடவடிக்கைகளை எடுக்கும் தலைமையை.

உலகத்தமிழர்கள் வேண்டுவது, தேடுவது - தலைமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100%  எந்த இனமும் ஒற்றுமை ஆக முடியாது. என்றாலும் இயன்ற வரை ஒற்றுமையாக செயற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக இதுவரையில் தமிழக அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டதில்லை. ஈழத்து போராட்ட இயக்கங்கள் அமைப்புகளும் ஓரணியில் திரண்டது கிடையாது. வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்தால் சேர சோழ பண்டியன் இதர குறுநில மன்னர்கள் என்று எவனும் ஒன்றுபட்டது கிடையாது. ஒற்றுமை குறித்து பேசுவதற்கு யாருக்குத்தான் யோக்கியதை இருக்கின்றது. தமிழர்களால் இன்றைக்கும் முடியாத ஒரு விசயம் முன்னர் நடந்திருக்க வேண்டும் என்பதே கோமாளித்தனம்.

உண்மைதான்

இதையும் மீறி வெல்லத்தொடங்கிய

புலிகளையும்  பிரபாகரனையும் அழித்து எம் பரம்பரை மானத்தை காப்பாத்திக்கொண்டோம்.

இனி  எவர் வரினும் தொடரும் எம் வரலாற்றுப்பணி.......

இன்று தமிழினம் ஒற்றுமை படாமல் இருக்க தடையாக இருப்பவர்கள் யார்?

பதவிக்காகவும் பணத்திற்காகவும் எதிரியின் காலில் வாழும் கும்பல்கள் . டக்ளஸ் இதில் முதன்மையானவர் .

ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக இதுவரையில் தமிழக அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டதில்லை. ஈழத்து போராட்ட இயக்கங்கள் அமைப்புகளும் ஓரணியில் திரண்டது கிடையாது. வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்தால் சேர சோழ பண்டியன் இதர குறுநில மன்னர்கள் என்று எவனும் ஒன்றுபட்டது கிடையாது. ஒற்றுமை குறித்து பேசுவதற்கு யாருக்குத்தான் யோக்கியதை இருக்கின்றது. தமிழர்களால் இன்றைக்கும் முடியாத ஒரு விசயம் முன்னர் நடந்திருக்க வேண்டும் என்பதே கோமாளித்தனம்.

உண்மை........... தமிழன் வரலாற்றில் ஒற்றுமை என்பதை நிலைநிறுத்திக்காட்டியவர் எம் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களே ...

ஒற்றுமை என்பது எல்லோரும் ஒன்று சேருவதல்ல கடைசி ஆளுக்கு ஆள் அடிபடாமல் ஒரு வித புரிந்துணர்வில் இயங்குவது.

ஒற்றுமையாக இயங்கியிருந்தாலும் தமிழிழம் கிடைத்திருக்குமோ தெரியாது ஆனால் இவ்வளவு உயிர் இழப்புகள் கடைசி வரையும்  ஏற்பட்டிருக்க மாட்டாது .

தமிழர்களை வரலாற்றில் எந்த கால காலகட்டத்திலும் இல்லாதவாறு பிரித்த பெருமை பிரபாகரனையும் புலிகளையுமேயும் சாரும் .

ஒற்றுமை என்பது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தக்கொண்டிருப்பது என்று பொருள் கிடையாது. பிளவுகள் என்பது ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது என்றும் கிடையாது. ஒரு ஆபத்து நெருங்குகின்றது என்ற நிலையில் அதை பத்துப்பேர் சேர்ந்துதான் தடுக்க முடியும் இல்லையேல் பத்துப்பேரும் சாக நேரிடும் என்னும்போது பத்துப்பேரின் அறிவும் அந்த ஆபத்தை தடுப்பதில் ஒருங்கிணைவதே ஒற்றுமை. இன்ன இடத்தில் ஒருங்கிணைந்த செயல் அவசியம் என்ற அறிவார்ந்த புரிந்துணர்வு. சிங்களப் பேரினவாதத்திற்கு முன்னால் நாம் அறிவுள்ளவர்களாக நின்றதில்லை.

சர்வதேச விதிகளை மீறி போரை சிங்களம் வென்றாதால் அது ஒற்றுமையான இனமாகி விடாது.

சிங்கள பேரினவாதம் தமிழின படுகொலைகளை செய்து, பின்னர் அதை மறுத்து இன்றும் எந்த குற்றமும் தாம் புரியவில்லை என்பது அறிவானதா? இல்லை.

சிங்களவர்கள், குறிப்பாக மகிந்த ஆட்சி என்பது தமிழின அழிப்பு நடந்து நான்கே வருடங்களில் முப்பது வருடமாக தமிழினம் கூறிவந்த உண்மைகளை மெய்பித்து வருகின்றனர்.

விரைவில் சிங்கள ஒற்றுமை என்பதும் அதன் அரசியல் சாணக்கியம் என்பதும் என்னவென்று  தெரியும்.

போரின் வெற்றி மகிந்தன் என்ற தனிநபரின் வெற்றியல்ல. அதன் பின்னால் 90 வீதத்துக்கும் மேல் சிங்களவர்களன் ஆதரவு இருக்கின்றது. சிங்களவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனையிருக்கலாம் ஆனால் போரில் வெற்றி பெறுவது என்ற பொது நோக்கத்தில் அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தார்கள். வென்றார்கள்.

சிங்களத்திடம் இருப்பது அறிவு மட்டுமல்ல திறமையும் தான். அதனால்தான் அவர்கள் இந்தியாவிடம் ராடர்கள் வாங்கினார்கள் இந்தியாவுடன் முரண்பட்ட பாகிஸ்தானி்டம் மல்ரிபரல் வாங்கினார்கள் சீனா ரசியாவிடமும் வாங்கினார்கள் அமரிக்க ஐரோப்பாவிடமும் வாங்கினார்கள் இஸ்ரவேல் ஈரானிடமும் வாங்கினார்கள். விடுதலைப்போரை பயங்கரவாதமாக்கினார்கள் மக்கள் அழிப்பையும் பயங்கரவாத ஒழிப்பு என்றார்கள். போர்க்குற்றத்திற்கு மகிந்தனும் கோத்தாவும் பாதிக்கப்படலாம் ஆனால் சிங்களப் பேரினவாதம் பாதிக்கப்படமாட்டாது. உலகின் மிக மோட்டுக்கூட்டம் தமிழர்களே அதை ஏற்க முடியாத காழ்புணர்வில் மோட்டுச் சிங்களவர் என்பது வளமை. ஆகக் குறைந்தது கோவணத்தை சிங்களவர் உருவிய பிறகாவது இதை உணர்ந்திருக்க வேண்டும் ஆனால் தமிழர்கள் தம்மை எக்காலத்திலும் திருத்தப்போவதில்லை மாறாக அடுத்தவனை குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

 போர் முடிந்துவிட்டது, சரி சிங்களம் ஒற்றுமையாக இருந்தது, வெற்றியும் பெற்றுவிட்டது.

ஆனால் அதுதான் முழுமையான வெற்றியாக அமைந்து விடாது.

இன்னும் பத்து ஆண்டுகள் சென்றபின்னர் தெரியும் எதை சிங்களம் வென்றது என்று.

போர் வெற்றி வேறு; போராட்டத்தின் வெற்றி வேறு என்று கூற வருகிறீர்கள்..! :D

ஈழ தமிழர் வாழ்வாதாரத்திற்காக விரைவில் சர்வதேச மாநாடு: திருச்சி பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு

இலங்கை தமிழர்களின் நிலை பற்றி நமது கவலையை உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். டெசோ அமைப்பின் மூலம் உலக நாடுகளுக்கும் தெரியப் படுத்தி வருகிறோம். அவர்களது நலவாழ்வுக்காக கோரிக்கை வைத்து இருக்கிறோம். 56 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வரும் நம்மை பார்த்து சிலர், நாம் ஈழத் தமிழர்களுக்கு விரோதி போல் பேசுகிறார்கள்.

இலங்கையிலே போர் நடந்த போது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சொல்கிறார்கள், ஏதோ அவர்கள் கடற்கரையில் நின்று கொண்டு கையில் துப்பாக்கியுடன் சண்டையிட்டு தடுத்ததை போல் பேசுகிறார்கள். எனவே ஈழத்தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது 99 கிராமங்களின் தமிழ் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. தமிழினத்தை அழிக்க முதலில் தமிழ் மொழி மீது சிங்களர்கள் கைவைத்து இருக்கிறார்கள். இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம். அந்த கடிதத்திற்கு ‘நாங்கள் கவனிக்கிறோம்‘ என்று பதில் வந்து இருக்கிறது.

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் அந்நாட்டு அதிபர் சொல்வது போல் விடுதலை அல்ல சுயாட்சி கேட்டு தான் கோரிக்கை வைத்து உள்ளனர். அந்த கோரிக்கையை தான் தி.மு.க.வும், டெசோ அமைப்பில் உள்ள கட்சிகளும் டெல்லியில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கொடுத்தன.

ஈழ தமிழர்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரத்திற்காக விரைவில் பெரிய மாநாடு கூட இருக்கிறது. அந்த மாநாட்டில் சர்வ தேசங்களும் கலந்து கொள்ள இருக்கின்றன. அந்த மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்காக தமிழர்களின் குரல் ஒலிக்கும். தி.மு.க.வின் குரல் ஒலிக்கும்.

டெசோ சார்பில், டெசோவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் குரல் ஒலிக்கும். ஈழ தமிழர்களை நாம் தான் பாதுகாக்கவேண்டும். அதற்காக அகிம்சை வழியில் அமைதி வழியில் போராடுவோம். போராடிக் கொண்டே இருப்போம். இந்த கூட்டம் தேர்தல் நிதி பெறும் கூட்டம் மட்டும் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு ‘தேறுதல்‘ தரும் கூட்டமும் ஆகும் என கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

http://www.maalaimalar.com/2013/02/08193947/Eelam-Tamils-livelihood-Intern.html

 போர் முடிந்துவிட்டது, சரி சிங்களம் ஒற்றுமையாக இருந்தது, வெற்றியும் பெற்றுவிட்டது.

ஆனால் அதுதான் முழுமையான வெற்றியாக அமைந்து விடாது.

இன்னும் பத்து ஆண்டுகள் சென்றபின்னர் தெரியும் எதை சிங்களம் வென்றது என்று.

இன்னும் பத்து ஆண்டுகளில் சிங்களம் எப்படி இருக்கும் என்று அவர்கள் சிந்தித்துக்கொள்வார்கள். நாம் எப்படி இருக்கப்போகின்றோம்?

போர் வெற்றி வேறு; போராட்டத்தின் வெற்றி வேறு என்று கூற வருகிறீர்கள்..! :D

 ஆம். ஆயுதப்போராட்டம் போராட்டத்தின் ஒரு படிக்கல்.

ஆம், அதில் நாம் இழந்தவை - பல இலட்சம் உறவுகள்.

ஆம், நாம் இன்றும் இழக்காதது - எமது விடுதலை வேட்கை.

அகூதா நல்ல அரசியல்வாதியாகி ஆகிவிட்டீர்கள் .

காலம் பூரா இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம் ,முப்பது வருடங்கள் இருந்த ஒரு விடுதலை வேட்கையின் பத்து வீதம் கூட இப்போ எவருக்கும் இல்லை .

குழந்தைப்பிள்ளைகள் மாதிரி அவர்கள் அழாப்பிவிட்டார்கள் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

ஆயுதப்போராட்டம் இல்லை அகிம்சை போராட்ட இலக்கு அரசியல் விடுதலை. அந்த அரசியல் விடுதலைக்கு தேவை - சர்வதேச அங்கீகாரம்.

1977 இல் இருந்த சர்வதேச அங்கீகாரத்தை விட 2009இல் இருந்த அங்கீகாரம், அதிகம்.

2009 இல் இருந்த சர்வதேச  அங்கீகாரத்தை விட இன்றுள்ள அங்கீகாரம், அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்...இஙுகு எழுதுபவர்கள்...மனனிலை மாறவேண்டும்...அரசபக்கம் சார்பாகவே எழுதி எம்மில் ஒற்றுமை இல்லை என்பதை காட்டிக்கொடுக்கும் மனனிலை  மாறவேண்டும்.....இப்ப கருணானிதி  உள்ளத் தூய்மையோடு இனிப்போராட முன்வரவேண்டும்..முதலில்..யாழில் ..ஒற்றுமை வேண்டும்...நம்பிக்கை வேண்டும்....இப்ப இதுதான் தமிழனுக்கு வேண்டும்

ஆயுதப்போராட்டம் இல்லை அகிம்சை போராட்ட இலக்கு அரசியல் விடுதலை. அந்த அரசியல் விடுதலைக்கு தேவை - சர்வதேச அங்கீகாரம்.

1977 இல் இருந்த சர்வதேச அங்கீகாரத்தை விட 2009இல் இருந்த அங்கீகாரம், அதிகம்.

2009 இல் இருந்த சர்வதேச  அங்கீகாரத்தை விட இன்றுள்ள அங்கீகாரம், அதிகம்.

1940 களில் பிரித்தானியர் வெளியேற்றக் காலகட்டத்தில் தமிழர்களின் தனியாட்சிக்கான சாத்தியக்கூறுககள் அதிகமிருந்தது.

70 களில் மணலாறு குடியேற்றம் பூர்வீகக் நிலம் துண்டாடப்படுதல்  கிழக்கின் பெரும்பகுதி சிங்களமயப்படுத்தல் என சாத்தியக் கூறுகள் குறிப்பிடும் படியாக சிதைக்கப்பட்டது.

80 களில் தமிழர்களுக்குள்ளாக குழுமோதல்கள் உள்ளகச் சிதைவுகள்

90 களில் தமிழர்களுக்குள்ளாக மதவாரியான பிளவுகள்

2009 இல் தமிழர்களுக்கான உரிமைப்போராட்டம் பயங்கரவாதமாக சர்வதேச ஒப்புதலோடு முடிக்கப்பட்டது.

தற்போது விரிவாக்கப்படும் இனப்பரப்பல் இனக்கலப்பு.

சர்வதேச அங்கீகாரம் என்பதுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமளவுக்கு சிங்களவர்கள் முட்டாள்கள் இல்லை.

உங்கள் சிந்தனைக்கு சற்று முன்னே அல்ல கிலோமீற்றர் முன்னே நிற்கின்றது சிங்களச் சிந்தனை முறை. அதைக் கடந்து போக முடியுமா என்று பாருங்கள்.

நேரம் கிடைத்தல் அண்மைய தென் சூடான் சரித்திரத்தை வாசியுங்கள்.

இந்தமுறையின் இந்திய பயணம் மூலம் ராஜ மோடையா மாபெரும் தவறு செய்திருக்கிறார். சுருட்டிக்கட்டிகொண்டு திரும்பி ஓடுகிறார். அம்பு பட்ட சிங்கம் வீடு திரும்பும் கோலத்தை கண்டு அவரின் பிரசாரிகளுக்கு பீதிகட்டத்தொடங்குகிறது. பல முயற்சிகள் ஆரம்பிக்கப்படுகிறது. காத்திருக்கும் எதிர்க்கட்சிகள் கிழிக்கப்போகின்றன.

சென்ற தடவை பிரேரணைக்கு ஆதரவளித்தற்கு ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டு ஒரு கடிதம் எழுதிய மன்மோகன் சிங்கும் துணிச்சல் ஏறி ராஜாவை டெல்கியில் இருந்து உதைத்து தள்ளியிருக்கிறார்.  பலநாள் திருடன் ஒருநாள் சிறையில் என்று அடித்துவைத்து பொய்யைச் சொல்வதை மூளையான ராஜாவின் ராஜதந்திரமாக அவரை போற்றி வந்தவர்கள் இன்று திரும்பி வந்து தனது தோல்விக்கு ராஜா காரணம் கேட்கும் போது தாம் என்ன சொல்லபோகிறோம் என்று குழப்பாமாக தவித்து தவித்து எழுதுகிறார்கள்.

பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கருடா சவுக்கியமா என்று கேட்டதாம். அது தான் கீழே இறங்கி உணவு தேட நேரம் வரும், அந்த நேரம் பசித்த கழுகு வானத்தில் வட்டமிடலாம் என்தை அறிந்திருக்காத ராஜதந்திர பாண்டித்துவத்தில் நடந்து கோண்டது. அணைத்த கை அடிக்க வருவது போல ஆயுதம் கொடுத்த சர்வ தேசம் கூலிக்கு ராஜவின் ரத்தமும் சதையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  செய்வதறியாத ராஜா புத்தகாயவுக்கும் திருப்பதிக்கும் தவித்து தவித்து ஓடுகிறார். இந்த தோல்வியை மறைக்க அவரின் பிரசாரிகள் அவரையும் விடத்தவிக்கிறார்கள்.

அவர்கள் ராஜாமாதிரி இன்னொரு கோமாளிப் பொய்யரான ராஜ தந்திரி கருணாநிதி பற்றி பீத்துகிறார்கள்.  சாதரண குடும்பத்தில் பிறந்து பில்லியன்கள் டொடலர் சொத்தை அரசியல் திருட்டுக்களால் சேர்த்த கருணாநிதி ஒற்றுமையை பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதலாம். ஆனல் இந்த இரு கேடிகளும் மகிந்த சிந்தாந்தம் பேசுவது மனிக்கவே முடியாதது.

மகிந்த பதவிக்கு வந்த போது அவருக்கு கட்சிக்குள் ஆதரவு இருக்கவில்லை. அதாவது ஒற்றுமை இருக்கவில்லை. அவர் சிங்களப் பலத்தை பாவித்து புலிகளை அழிக்கவில்லை. மேலும் சம்பந்தர் ராஜபக்ஷவால் புலிகளை அழிக்க முடியவில்லை என்று தனது அப்பிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். மகிந்தா இன்று புலத்தில் சமாதனம் பேசி, மோடையாகளை உயர்த்திப் பேசிசுபவர்கள் மாதிரியே நடந்து கொண்ட துரோகி கதிர்காமரை வைத்துத்தான் தோற்கடித்தார். கதிர்காமர் துரோகி புலிகளுக்கு சமாந்தரமாக தமிழரின் விடுதலைக்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. அந்துரோகியுடன் எந்த தமிழரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதில்லை. புலிகள் தோற்ற போது, துரோகி கருணா மட்டும்தான் புலிகளுக்கு தமிழர் பக்கம் இருந்து தாக்கம் கொடுத்த நபர். புலிகள் யாருடனாவது  ஒற்றுமை தேடியிருக்க 2007,2008,2009 ல் எந்த சகோதர இயக்கமும் தாயகத்தில், தமிழரின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கவில்லை.   கடந்த தடவை கருணாநிதி இதே பேச்சை பேசியத்தற்கு பழ.நெடுமாறன் மாதக்கணக்காக உருட்டி உருட்டி கருணாநிதிக்கு கொடுத்தவர். ரோசம், நாணம், வெக்கம் இல்லாத கருணாநிதி அதை திரும்பவும் தூக்குகிறார்.

மலை மலையாக அப்பாவித்த தமிழரின் உடல்கள் முள்ளிவாய்க்காலில் சரிந்துகொண்டிருந்த போது கிந்தியத்திற்கு மிண்டு கொடுத்து தியாகி முத்துகுமாரின் மரணச்சடங்கையும் குழப்பிய கருணாநிதி இன்று தமிழருக்குள் ஒற்றுமை பேசுகிறார். தமிழரின் இரத்தத்தை ராஜபக்ஷா ஆறாக பெருக வைத்துக்கொண்டிருந்த போது தன் சொந்த மகளை இலங்கைக்கு அனுப்பி உல்லாசம் கொண்டாடவைத்தவர், இன்று ஈழத் தமிழர் தன்னை போல் எப்படி ராஜபஷாவுடன் ஒற்றுமையாக உறவு கொண்டாட வேண்டும் என்று போதிக்கிறார். 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.