Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன்

Featured Replies

 “It was a battle field not Manhattan Street. So we did not go the next day soon after defeating the LTTE, searching for bodies. We went to some areas after a few days, a week later and to some areas even after a month,” he said.

இன்னொரு குற்றத்தை கோபத்தபயா ஒத்துகொள்கிறார். போர்களங்களில் கண்மூடித்தனமாக  பொதுமக்கள்மீது தாக்கிவிட்டு , புலிகள் அழிந்தபின்னர்ரும் காயப்பட்டவர்களை எடுத்து வந்து மருத்துவ உதவி அளிக்காமல் அதே இடங்களில் கிடந்து இறக்கவிட்டதாக கூறுகிறார்.

 

உண்மையில் ஆமி போகாமல் இருந்த்திருக்காது. போனார்கள். ஆனால் பொது மக்களை மீட்கவில்லை. வேணுமென்றே இறக்கவிட்டார்கள்.

  • Replies 225
  • Views 30.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரனின் படங்கள் கவத்தில் எடுத்தது ஐ.நா.; பொறுப்புக்கூறல் குறித்து இலங்கைக்கு பான் கீ மூன் வலியுறுத்து
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு, இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் உண்ணக்கொடுத்து, பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய ஆதாரங்களாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
 
பிரபாகரனின் இளைய மகனின் புகைப்படங்கள் மட்டுமன்றி, நெஞ்சை அதிரவைக்கும் இன்னும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என சனல்4                                 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லும் மக்ரே தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்கி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது கவனத்தில் கொண்டுள்ளார் என மார்ட்டின் நெஸர்கி தெரிவித்துள்ளார்.
 
ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய முன்னெடுப்புகள், நேர்மை ஆகியவற்றினூடாகப் பொறுப்புக்கூறும் கடமையை இலங்கை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை இடைவிடாமல் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தி வருகின்றார் என்றும் அவரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பிரபாகரனின் இளைய புதல்வர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் இராணுவப் பதுங்குகுழிக்குள் அமர்ந்து பிஸ்கட் சாப்பிடும் சம்பவத்தைக் கொண்ட விடியோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.நா. கவனத்தில் எடுத்துக்கொண்ட விடயத்தை நெஸர்கி தெரிவித்தார்.
 
சர்ச்சைக்குரிய திகிலூட்டும் இந்த விடியோ குறித்து இத்தருணத்தில் ஐ.நா. நேரடியாக எக்கருத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். "பொறுப்புக்கூறும் கடமையை மேற்கொள்வதன் மூலம் தேசிய நல்லிணக்கப்பாட்டையும் இலங்கை தோற்றுவிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் எதிர்பார்க்கின்றார். சமீபத்தில் வெளியிடப்பட்ட விடியோவையும், அது தொடர்பான தகவல்களையும் வெளிப்படையாகவே நாம் அறிவோம். 
 
எனினும், அது தொடர்பாக என்னிடம் திடமான கருத்து எதுவும் கிடையாது'' என்றும் அவர் கூறியுள்ளார். 
 
கேள்வியொன்றுக்கு ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்கையில்,
 
"இலங்கையில் நிலவிய யுத்த காலத்தில் ஐ.நா. விட்ட தவறுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக பான் கீ மூனால் நிறுவப்பட்ட குழு இலங்கையில் நடைபெற்ற யுத்தகால சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
"இது உள்ளகக் கடமைக்கான ஒரு குழு ஐ.நாவுக்குள் எவ்வாறு பரிந்துரைகளை முன்னெடுக்க முடியும் என்பதை ஆய்வதற்கான ஓர் அமைப்பு. அதனால் இலங்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவங்கள் குறித்து கருத்துச் செலுத்த முற்படவில்லை. 
 
இவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் சம்பந்தப்பட்டதே இரண்டாவது அறிக்கை''  என்றும் மார்ட்டின் நெஸர்கி விளக்கியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா மாநாடு நெருங்கி வரும் சூழ்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கான புதிய போர்க்குற்ற ஆதாரங்களாக நெஞ்சை அதிர வைக்கும் புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி இயக்குநரிடமிருந்து பெற்று லண்டனின் "த இன்டிபென்டென்ட்' நாளேடு மற்றும் இந்தியாவின் "த இந்து' நாளேடு என்பன வெளியிட்டிருந்தன.
 
இதையடுத்து, பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் இப்புகைப்படங்கள் தெளிவாகவே காட்டுகின்றன என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு, இலங்கை அரச தரப்பின் மறுப்புகளை நிராகரித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
22 பெப்ரவரி 2013, வெள்ளி 8:10 மு.ப

ஐ.நாவின் இப்போதைய நிலை புலிகளும் போர்க்குற்றத்தில் அரசுக்கு சரிக்கு சரியாக ஈடுபட்டார்கள் என்பது. இந்த நிலைப்பாட்டின் சரியைப்பற்றியையோ அல்லது சொல்லும் மனச்சுத்தியைபற்றியையோ ஆராய்வது வேறு. மேலும் இந்த நிலைப்பாட்டை ஐ.நா தலைமைப்பீடம் போருக்கு(முள்ளிவாய்க்காலுக்கு) முதலேதயாரித்து வைத்திருந்தா என்பது சில ஆதாரங்களுடன் எழும் கேள்வி. (ஏன் அந்த சந்தேகம் என்றதற்கு ஐ.நா உள்ளக விசாரணை ஆதாரங்களை தருகிறது. அதை வேறு எங்காவது இன்னொருநாள் பார்க்கலாம்.)

 

ஆனால் அந்த நிலைப்பாட்டின் படி இலங்கை அரசு ஒரு நடு நிலைமையான விசாரணையை ஆராம்பிக்கும் என்பதே இவர்கள் காட்ட முயலும் படம். அதாவது புலிக்ளை அரசு விசாரிக்க முயலும். அப்போது அரசு தன்னையும் விசாரிக்கும்.(ஆனால் இந்த எதிர்பார்ப்பு அதிகம் முன்னால் போகவில்லை. அங்கே இராணுவ நீதிமன்றம் யாரையும் உண்மையாக விசாரிக்கவில்லை.)

 

ஐ.நா.நடத்திய உள்ளக விசாரணையின் scope பை வேண்டுமென்றேதான்  ஐ.நாவின் உள்ளக திருத்தங்களுக்காக என்று ஐ.நா முடக்கியது. எதாவது  விசாரணைகளால் 146,000 அப்பாவி மக்களுக்கு மேல் இறந்தார்கள் என்பதோ அல்லது புலிகள் மீது வைக்கப்படும் போர்க்குற்றமான கேடய பாவனைக்கதை என்பது விசாரணைகள் மூலம் வெறும் இட்டுக்கட்டு கதை மட்டுமே, அதில் உள்ளடக்கம் ஒன்றும் இல்லலை என்பதோ நிறுவப்பட்டுவிடமாலோ இருக்கத்தான் scope  அவ்வளவு கட்டுப்பாட்டுடன் மட்டுப்படுத்தபட்டிருந்தது.

 

விசாரணை வெளிப்படை தன்மை உடையதாக இருந்திருந்தால், புலிகளின் கேடயக்கதை சோடிப்பு என்பதும்,  அரசு 146,000 மேற்பட்டவர்களை, தடுக்கப்பட்ட ஆயுதம், மருந்து ஆயுதம், உணவு ஆயுதம், ஆறுதல் மறுப்பு ஆயுதம் என்பவற்றை பாவித்து மாதக்கணக்க கொலை செய்தது என்பதும் வெளியே வந்துவிடும் என்ற கவலையால்த்தான் அந்த scope limitation வெகு கவனமாக கையாளப்பட்டது. உள்ள விசாரணைகளில் வரும் உண்மைகள் சுருக்கமாகவும், நேராக கையை சுட்டுவனவாகவும் இருக்கத்தக்கவை. இதன் மூலம் உண்மைகளை வெளிவரவிட்டால் அதன் பின்னர் ஐ.நா உதவியுடன் மகிந்தாவோ அல்லது பதவிக்கு வரத்தக்க பொன்சேக்காவோ, சந்திரிக்காவோ இன்னொரு விசாரணை நாடகத்தை நடத்த முடியாமல் போவிடும்.

 

ஒரு விசாரணையின் போது இன்னொரு விசாரணையின் உண்மைகள் வெளிவரக்கூடாது என்பது எந்த விசாரணைக்கும் நிபந்தனை அல்ல. White Water விசாரணையில்தான் மொனிக்காவின் விவகாரம் வெளிவந்தது. இதனால் விசாரணையின் நோக்கமே திசை திருப்பட்டது. ஆனால் ஐ. நா இதில் வெகு கவனமாக இருந்து  தமிழரை இன்னொரு தடவை விழுத்திவிட்டதுனிந்த உள்ளக விசாரணையின் நோக்கம், ஐ.நா தமிழரை தாக்க பாவிக்கபட்டதால் அதன் தன்மையை இழந்து விட்டதா என்பதை கண்டறிவே. தமிழரை தாக்க ஐ.நா பாவிக்கபட்டது குற்றமா என்பதை கண்டறிய அல்ல. கூட்டு மொத்தத்தில், கேடய சோடிப்பு கதையில் காலம் கடத்தும் ஐ.நா, ஒரு சரியான விசாரணையில், அந்த கேடய கதை நிண்டு பிடிக்குமா என்று தானே அதை சந்தேகிக்கிறது.

 

அரசு Zero Casualty என்று வாதிக்கும்போது  1460,000 மக்கள் இறந்தார்கள் என்ற அந்த குற்றச்சாட்டுக் கணக்கு சரிதான என்பதை அறியத்தன்னும் ஐ.நா ஒரு விசாரணையை ஆரம்பிக்கவிலை என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆச்சரியம்.

Edited by மல்லையூரான்

நாங்கள் ஒன்றாக நிற்கோணும். விடக்கூடாது .
நாங்களும் வருவம். இப்ப கப்பல் ஏற நிற்கிறம்.உயிர் தப்பினால் 
எங்களால முடிஞ்சதை செய்வோம்.

சிங்கள இராணுவ தளபதிகள் மற்றும் இரானுவதினாரல் வதைகள் செய்யபட்டு படுகொலை செய்ய பட்ட இராணுவத்தினரின் தொலை பேசிகளை மீட்ட நபர்கள் அதனை சனல் 4விடம் கையளித்தனர் இலங்கையிலும் அதனை விட்டு வெளியேறிய சிங்கள தமிழ் ஊடக நபர்கள் வழங்கிய ஆவணம்களே தற்போது சனல் 4விடம் சிக்கியது இவர்களில் வன்னியில் இருந்து வந்த ஊடக நபர்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது.

இவற்றில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது பின் வதைகள் செய்யபடுவது அதன் பின் கொலை செய்யபடுவது போன்றன பதிவாகியுள்ளன இந்த தொலைபேசிகளில் பல நிமிடங்கள் அடங்கிய பல அதிர்சிகரமான காட்சி பதிவுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது இந்த தொலைபேசிகள் எடுக்க பட்ட விதம் என்பது மிக சுவராசியமான சம்பவங்களாக உள்ளன என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 

நியானி: திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவ தளபதிகள் மற்றும் இரானுவதினாரல் வதைகள் செய்யபட்டு படுகொலை செய்ய பட்ட இராணுவத்தினரின் தொலை பேசிகளை மீட்ட நபர்கள் அதனை சனல் 4விடம் கையளித்தனர் இலங்கையிலும் அதனை விட்டு வெளியேறிய சிங்கள தமிழ் ஊடக நபர்கள் வழங்கிய ஆவணம்களே தற்போது சனல் 4விடம் சிக்கியது இவர்களில் வன்னியில் இருந்து வந்த ஊடக நபர்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது.

இவற்றில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது பின் வதைகள் செய்யபடுவது அதன் பின் கொலை செய்யபடுவது போன்றன பதிவாகியுள்ளன இந்த தொலைபேசிகளில் பல நிமிடங்கள் அடங்கிய பல அதிர்சிகரமான காட்சி பதிவுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது இந்த தொலைபேசிகள் எடுக்க பட்ட விதம் என்பது மிக சுவராசியமான சம்பவங்களாக உள்ளன என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 

1996ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. பரந்தன் சண்டை நடந்து கொண்டு இருந்த இடததில் ஒரு பெண் போராளி வீரச்சாவு அடைய அந்த பெண் போராளியை ஒரு சிங்கள ஆமி உடுப்பை கழட்டி போட்டு அந்த பிசாசு தனது வேளையை காட்ட ஆரம்பிச்சிட்டானாம்...இது எனக்கு ஒரு இயக்கத்தில் இருந்த அண்ணா சொன்னவர்...அந்த சகோதரனின் உடம்பில் பீஸ் படாத இடமே இல்லை.... 1996ம் ஆண்டு முல்லைதீவு முகாம் மீட்க்கும் சண்டையில் இவரும் பங்கு கொண்டவர்......

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

saga.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரனுக்காய் ஒரு தமிழீழத் தாயின் உணர்வு

 

இன்று உலகம் எங்கும் வாழும் மக்களிடம் பரவலாகப் பேசப்படும் எங்கள் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் அன்பு மகன் பாலச்சந்திரனின் வீர மரணம் தமிழ் மக்களின் மனதை தட்டி எழுப்பிவிட்டது.

விடியலை நோக்கிய பாதையில் இன்னமும் விரைவாக நடவுங்கள் என்ற தூண்டுதலையே ஏற்படுத்தியுள்ளது.

பேரினவாத சிங்கள அடக்குமுறையாளரினால் கைது செய்யப்பட்டு, மண் மூட்டைகளின் நடுவிலும் தன்னிலை தளராது திடமுடனே இருக்கும் காட்சி பார்ப்பவர் நெஞ்சங்களை துடிதுடிக்க வைக்கிறது.

ஒவ்வொரு தமிழ்த் தாயும் தன் மகனாகவே உன்னைக் கருதி அழுகிறாள்.

சிங்கள பாதகன் தனக்கு நிகரான ஒருவருடன் மோதினால் உலகம் ஏற்கும்..

தர்மம் காத்த புத்தரின் அரசு 12 வயது பாலகனை கொன்று தாமரைப்பூவினால் சாது சாது என்று கூறி எண்ணெய் விளக்கேற்றி வணங்கச் சொன்னதோ..? இதுவோ உன் புத்த தர்மம்..? பாதகனே..!

விசிறி கொண்டு வியர்வை துடைக்கும் பிக்குவே இதுவா உன் புத்த தர்மம்..?

பாலச்சந்திரன் இளம் தளிர் பயம் அறியா இளம் கன்று..

உன்னைச் சுட்டவன் அறியான் மானமுள்ள தமிழன் புறமுதுகு காட்டான் என்று..

படும்பாவி உன்னைச் சுடவில்லை குஞ்சே.. ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் சுட்டுவிட்டான்..

பாரத்துவக்கெடுத்து பாராமல் சுட்டானே..!

சீனத் துவக்கெடுத்து சீக்கிரமாய் சுட்டானே..!

நெஞ்சினிலே குண்டையா உனக்கு..

நிலை நாட்டினாய் தமிழனின் வீரத்தை மானத்தை..!

வீர சுவர்க்கம் ஐயா உனக்கு..!

விடுதலையின் சிங்காசனம் ஐயா உனக்கு..!

தமிழினம் உள்ளவரை மறக்காது ஐயா உன் மறைவை..!

ஒரு நாள் வெற்றிச் சங்கு ஊதி

சரித்திரம் விழா எடுக்குமையா உனக்கு..!

வீர சுவர்க்கத்தில் கண் வளர்வாய் ஐயா..!

கண்வளர்வாய்..!

மானத் தமிழ் செல்வமே வாழ்க உன் புகழ்..!

ஒரு தமிழ் தாய் – டென்மார்க்

  • கருத்துக்கள உறவுகள்

பையா, வீர மரணம் என்ற வார்த்தையை, இப்போதைக்கு உபயோகிப்பது அவ்வளவு நல்லதில்லை!

 

ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி, குழந்தைப் போராளி என்ற தடியைத் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு திரியிறான்!

 

நாங்களும், அவன் சொல்லிறது சரி மாதிரிக் கதைக்கக் கூடாது தானே!

 

பாலச்சந்திரன் ஒரு குழந்தை மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

பையா, வீர மரணம் என்ற வார்த்தையை, இப்போதைக்கு உபயோகிப்பது அவ்வளவு நல்லதில்லை!

 

ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி, குழந்தைப் போராளி என்ற தடியைத் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு திரியிறான்!

 

நாங்களும், அவன் சொல்லிறது சரி மாதிரிக் கதைக்கக் கூடாது தானே!

 

பாலச்சந்திரன் ஒரு குழந்தை மட்டுமே!

 

வணக்கம் உறவே நீங்கள் சொல்வது சரி தான்....இது டென்மார்க்கில் இருக்கும் ஒரு ஈழத் தாய் எழுதினது....!! ஒம் ஓம் பாலச்சந்திரன் ஒரு குழந்தை போல...அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.......!!

There are two ways the footage of Balachandran’s killing could have reached media. Someone could have leaked it from government records. Or it might be a soldier in the death squad who thought he wanted a gruesome but historic memento, and then began to grapple with his conscience. We do not know, yet. But something slipped through that security net, and it was not a lie.

 

http://mjakbarblog.blogspot.ca/2013/02/the-other-half-of-murder.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+mjakbarbylines+%28M+J+Akbar%27s+Column:Bylines%29

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் மகனைக் கொல்ல கருணாவிடம் ஆலோசனையா?
சனி, 23 பிப்ரவரி 2013( 19:48 IST )
 
கருணாவிடம் ஆலோசனை பெற்று பிரபாகரன் மகன் பாலசந்திரனைக் கொல்ல உத்தரவிட்டது மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பாலசந்திரனை கமல் குணரத்னா என்ற ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
 
இலங்கைப் போரில் சிங்கள வீரர்கள் எந்த ஒரு சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. பெண்கள், குழந்தைகள் என அப்பாவித் தமிழர்கள் பலரையும் குருவிகளைப் போல சுட்டுக் கொன்றனர்.
 
போரின் இறுதி கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் சமாதானமாக சென்ற விடுதலைப் புலிகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்தனர். பலரை சித்ரவதை செய்தும் கொன்றார்கள்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற 12 வயது சிறுவனையும் பிடித்து வைத்து கொன்றது தான் மிகவும் கொடூரமான செயலாகும்.
 
பாலச்சந்திரன் பிடிபட்ட தகவலை 53-வது படைப்பிரிவின் தளபதிகளில் ஒருவரான கமல் குணரத்னா, பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இவர்தான் போரின் போது, தளபதிகளுக்கு எல்லா கட்டளைகளையும் பிறப்பித்து வந்தார். பாலச்சந்திரன் பிடிபட்டதும் அந்தத் தகவலை விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்த கருணாவிடம் கூறியிருக்கின்றனர்.
 
அவரிடம் ஆலோசனை நடத்திய பின்னர், பாலச்சந்திரனை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாய பணித்துள்ளார். அதன்படி கமல் குணரத்னா, எந்தவித ஈவு இறக்கமின்றி பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றுள்ளார்.
 
பாலச்சந்திரனை விட்டு வைத்தால், சிறுவன் என்ற அடிப்படையில் அவனை நீதிமன்றமே விடுவித்து விடும் என்றும், பிற்காலத்தில் அவன் இன்னுமொரு மாவீரன் பிரபாகரனைப் போல மாறிவிடுவான் என்றும் கருதியே அவனைக் கொல்ல உத்தரவிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
மகிந்த அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டாவிவாதத்தை நிராகரித்தார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
பிப் 24, 2013
     
மகிந்த அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் மிரட்டாவிவாதத்திற்கு நிராகரித்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
 
அனைத்துலக தடயவியல் ஆய்வாளர்கள் தேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்டமுறையில் படுகொலை செய்யப்பட்டள்ளதாக உண்மையை உள்ளபடி தெரிவித்த போதும், சிங்கள கொலைவெறியாளர்களை விட்டுக்கொடுக்காத சுப்பிரமணியசுவாமி.
அவர் வழங்கிய முரண்பட்ட கருத்துக்களை இங்கே கேட்கலாம்.


http://www.sankathi24.com/news/27356/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்
hi715.jpg மகனே தமிழ்நாட்டுக்குள்ள வந்தே விளைவு இத விட மோசமா இருக்கும் ... எச்சரிக்கை சூடு சுரணை உள்ள தமிழர்கள்

இது இந்திய ஊடகங்களின் சினிமா. தாம் சூடாக நியுஸ் போடுவதாக காட்ட சுப்பிரமணியசுவாமி என்ற அனுமாரை கொண்டுவந்து மேடையில் ஆடவைத்து பார்க்கிறார்கள்.  வாததிற்கு வாயில் ஒன்றும் வராமல் வாய் நிறைய புட்டுக்கட்டியை அதக்கிக்கொண்டவர்கள் மாதிரி மேடைக்கு மேடை அந்த சீவன் தடுமாறுகிறது.

 

அவர் ஒரு தடவை சர்வதேச விசாரணைக்கு மறுப்புதெரிவிக்கிறார். மகிந்தாவை சரி என்கிறார். மற்றயகணம் படத்தை Channel -4 விசாரிக்க கூடாது, ஐ.நா.விசாரணைக்கு கொடுக்க வேண்டும் என்கிறார். அதையே கேட்டுத்தான் சனனெல் - 4 அந்த படங்களை வெளிவிடுகிறதடென்பதை புரிந்து கொள்ளாமாலா இந்த அனுமார் தினம் ஒரு ஊடக மேடை ஏறுகிறது.

 

இந்தியாவின் பொன்சேக்கா மீதான கோபத்தை நேராக வெளிக்காட்டுகிறார், அதனால் இப்படியும் தடுமாறுகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்போம்; அது நல்லது என்கிறார். இலங்கையில் ஒன்றும் நடக்க இல்லை என்கிறார். கூடடமைப்பு  கொடூரம் பிடித்த பொன்சேக்காவை ஆதரிக்கிறது என்கிறார். பொன்சேக்கா தானே அழிவு முழுவதையும் செய்தது என்கிறார்.  சரிதான் போ பொன்சேக்கா என்கிற  மகிந்தாவின்- இந்தியஅரசின் எதிரிதானே எல்லாவற்றயும் செய்தார். அப்போ ஏன் இந்திய அரசும், மகிந்தாவும் சேர்ந்து சர்வதேச விசாரணை ஒன்றை தொடக்கிவைத்து பொன்சேக்காவை அதற்கு மறுமொழி சொல்லும்படி அனுப்பிவைக்க முன்வரவில்லை?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புகைப்படம் சொல்லும் செய்தியை நம்பமுடியாது என்கிறார். உண்மையைக் கண்டறியவே சுயாதீன விசாரணை தேவை என்று ஒரு கிடுக்கிப்பிடியைப் போட்டிருக்க வேண்டும்.

உலகப்புகழ் பெற்ற ஹர்வேர்ட்டில் படித்த சில தமிழர்களால் தமிழருக்கு அழிவு. 

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்புகழ் பெற்ற ஹர்வேர்ட்டில் படித்த சில தமிழர்களால் தமிழருக்கு அழிவு. 

 

தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு உறவு இந்த ஊத்தை சாமியை பற்றி படு கேவலமாய் எழுதி இருந்தார் முகப் புத்தகத்தில் அதை இங்கை இணைக்கிறது நல்லது இல்லை.... அவங்கள் தான் சூடு சுரணை உள்ள தமிழர்கள்..எல்லாம் நல்ல மாரி போய்க் கிட்டு இருக்கும் இந்த நேரத்தில் இது ஒரு சனியன் போல வந்து எல்லாத்தையும் கெடுக்குது...இவரின் இந்த கூத்துக்கு முடிவு கட்டனும்...இல்லாட்டி இந்த முத்திர புடையன் தலை விறிச்சு ஆடுவான்......இவரின் வாயை அடக்கனும் தமிழ் நாட்டு மக்களை கொண்டு கூடிய சீக்கிரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தையைக் கொலை செய்வது எப்படி
வளர்மதி

 


ஒரு குழந்தையைக் கொலை செய்வது எப்படி

என்பதற்கான வழிகாட்டு நெறிகளை

யாம் தருகிறோம்

மலங்க மலங்க விழித்து வரும்

அப்பாலகனை அரவணைத்து

பாதுகாப்பானதொரு பங்கரில் அமர்த்துங்கள்

கனிவாக பேசுங்கள்

பாலகனுக்கு பால் பருகத் தாருங்கள்

இனிப்பான பிஸ்கோத்துகளை

உண்ணத் தாருங்கள்

அவனை நிம்மதியாக இருக்க விடுங்கள்

உத்தரவிற்காகக் காத்திருங்கள்

கிடைத்ததும்

அவனது பச்சிளம் மார்பகங்களைத் துளைத்து

உமது துவக்குக் குண்டுகளைப் பாய்ச்சுங்கள்

இவண்

இலங்கை அரசாங்கம்

ஐநா வழிகாட்டு நெறிமுறைகளின்படி

 

http://vinaiyaanathogai.wordpress.com/2013/02/23/1037/

485084_342730059164246_27283006_n.jpg

வியட்நாம் நாட்டிற்குச் சென்ற அமெரிக்கா, அங்கே புரிந்த அட்டூழியங்கள் பல. கொத்தணிக் குண்டுகளையும், வெளைப் பாஸ்பரஸ் குண்டுகளையும் மக்கள் குடியிருப்புக்கு மேல் போட்டார்கள். இன்று ஈழத் தமிழினம் அனுபவித்த கொடுமைகளைப்போல அன்று வியட்நாமியர்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை ஆகும்.

அன்று வியட்நாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அச் சிறுமியின் புகைப்படத்துக்கு நிகரான புகைப்படம் ஒன்று, இபோது தமிழர்கள் கைகளில் உள்ளது ! அது தான் 12 வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படம் ஆகும். அவன் தேசிய தலைவரது புதல்வன், என்று எவரும் பேசவரவில்லை.

 

மாறாக ஒரு சிறுவனை, ஈவு இரக்கம் இன்றி, இவ்வாறு இராணுவத்தினர் கொன்றிருக்கிறார்களே என்பது தான் அனைவரது மனதையும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.

இப் படுபாதகச் செயலை, நாம் உலகறியச் செய்யவேண்டும் ! இலங்கையில் முகத் திரையைக் கிழியச் செய்யவேண்டும்! இதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்? என்ற கேள்வி மானமுள்ள ஒவ்வொரு தமிழன் மனதிலும் உள்ளது. பிஸ்கட்டை சாப்பிடக் கொடுத்துவிட்டு, பின்னர் கொலைசெய்துள்ல இலங்கை இராணுவத்தின் முகத்திரையை எவ்வாறு கிழிப்பது?

இலங்கையில் 2009 இல் நடந்தது போர்க்குற்றம்

இலங்கையில் 1956இல் இருந்து இன்றுவரை நடப்பது இனப்படுகொலை

இலங்கை பிரச்னைக்கு தீர்வு - இரு நாடுகள் ஒரு தீவு

 

306234_485079424905276_119066302_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் மகன் கொலை குறித்து விசாரிப்போம்.. சொல்கிறார் சென்னை சிறுவனைக் கொன்ற டக்ளஸ்
Posted by: Sudha Published: Monday, February 25, 2013, 8:48 [iST]
 
கச்சத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இவரே சென்னையில் சிறுவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகி இலங்கைக்கு ஓடியவர் என்பது குறிபபிடத்தக்கது.
கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் இதுகுறித்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. உண்மையென்றால் அது குறித்து விசாரணை செய்யப்படும்.
ஐ.நா.வின் மனித உரிமை மீறல் குறித்த பொதுவாக்கெடுப்பில் கடந்த முறை இந்தியா ஆதரிக்காது என்று கூறி எதிர்த்துவிட்டது. இந்த முறை எதிர்ப்பதாக கூறி வருகிறது. பொறுத்திருந்து பார்த்தால் இந்தியாவின்
முடிவு தெரியும்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் டக்ளஸ்.

தமிழீழப் பிரச்சனையை மையப்படுத்தி நடனமாடிய கல்லூரி மாணவர் . போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றிய கல்லூரி நிர்வாகம் !

 

தமிழகத்தில் தமிழர் பிரச்சனையை பற்றி பேச உரிமை மறுக்கபடுகிறது .

இது குறித்து மாணவர் தன்மானம் சக்கரவர்த்தி கூறுவதை படியுங்கள் .
--------------------------------------------
தோழர்களே !!! நேற்று நான் கற்பகம் காலேஜ் அப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்கு சென்றிருந்தேன் ... அங்கு சோலோ டான்ஸ் (solo dance)இல் பங்கு பெற்றேன்...

 

எப்போது ஆடினாலும் கருத்தோடு ஆடுவது என் கொள்கை...


ஆங்கு நான் நம் தலைவர் மகன். பாலச்சந்திரனாக ஆடி ஈழம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்துகொண்டிருகும் போது என்னை மேடையை விட்டு கீழே இறங்க சொல்லி professorகள் இரண்டு பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

நான் "நண்பர்களே இது நியாயமா" என்று கத்தியதும் , அங்கு இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் என்னை பேச அனுமதிக்குமாறு கரகோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆனாலும் ஈழம் பற்றி பேச நீ யாரடா என்று என்னை கீழே இழுத்து சென்று அரங்கை விட்டு வெளியேற்றினார்கள்... என்னை போட்டியில் இருந்து வெளியேற்றினார்கள்...


ஆனால் ஆங்கு எனக்கு தமிழ் நண்பர்கள் கொடுத்த அன்புக்கு நன்றி கூறினாலும் என் உயிரை தந்தாலும் ஈடாகாது... ஈழம் பற்றி பேச ஒரு கல்லுரி மாணவனுக்கு உரிமை இல்லையா ?

 

https://www.facebook.com/Thanmanam.chakravarthi
-----------------------------------------------
இப்படிப்பட்ட கல்லூரியை தமிழர்கள் நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் . சமுதாய பிரச்னையை பற்றி கல்லூரியில் பேசுவதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் ? தமிழர்களுக்கு தமிழர் பிரச்சினையை பற்றி அக்கறை இருக்கக் கூடாதா ? அனைவரும் கண்டிப்போம் .


Karpagam College of Engineering,
Myleripalayam Village,
Othakkalmandapam Post,
Coimbatore - 641 032.
Tamilnadu, India.

Program co-ordinator: Stanley Paul 9080905300

Phone : +91- 422- 2619005, 2619007, 2619041-43
Fax : +91- 422- 2619046
Email : karpagam@vsnl.net,

 

 

644685_4475360888461_749801475_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பெயரைக் கேட்டாலே நடுங்கும் பயந்தாங் கொள்ளிகள் பால் மணம் மாறாத பாலகனை சாப்பிடக் கொடுத்து கோழைத்தனமாகக் கொலை செய்து உலகத்துக்கு தாங்கள் யாரென்று நிரூபித்து விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.