Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பணிப் படை பேரணி

Featured Replies

நாளை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் மாபெரும் தமிழர் பணிப் படை பேரணி
தமிழர் சமுதாயம், தமிழர் சக்தி ,மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் ? என

 

10 மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த பேரணிக்கு சிறப்பு வருகை தந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ் சீமான் முதல் முதலாக மலேசிய மண்ணுக்கு வருகை தருவது மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழ் மக்களின் உள்ளத்தில் பெரும் மகிழ்வு ஏற்பட்டுள்ளது நாளை நடைபெறும் இந்த எழுச்சி தமிழரின் புரட்சி தமிழீழ எழுச்சி !

 

31441_483931691686716_432417067_n.jpg

 

 

  • தொடங்கியவர்

மலேசியாவில் சீமான் அவர்களின் பத்திரிகையாளர் / அரசியல்வாதிகள் சந்திப்பு

 

  • தொடங்கியவர்

இன்று மலை 6மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம் பூரில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் தமிழர் புரட்சி ஒன்று கூடலுக்கு பெருந் திரளான மக்களும் முக்கியமான அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதால் கோலாலம் பூர் தலைநகரம் பாதுகாப்பு காரணமாக சில பாதைகள் மூடப்படலாம் என காவல்துறை அறிவித்துள்ளது !

 

484896_484288161651069_1716065558_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் உணர்சிகளின் வெளிப்படுத்தல் இன்றி, மிகவும் அழகாகக் வடிவமைக்கப் பட்ட ஒரு உரையாகச் சீமானின் உரை அமைந்திருந்தது!

 

இவர் இதேபோலத் தென்னாபிரிக்கா, பிஜித்தீவுகள், மொரிசியஸ் போன்ற தமிழர் வாழும் இடங்களெல்லாம் செல்வது, உலகத் தமிழர்களின் நம்பிக்கையையும், எமக்கான ஒரு எதிர்காலத் தலைமையையும் வடிவமைக்க உதவுமென்பது எனது பணிவான நம்பிக்கையாகும்!

 

நன்றிகள், அகூதா!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

நம்பிக்கை  ஒன்று தெரிகிறது

 

நன்றி  மலேசிய  உறவுகளே....

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் சீமான் அவர்களின் பத்திரிகையாளர் / அரசியல்வாதிகள் சந்திப்பு

 

 

இணைப்புக்கு நன்றி அகூதா அண்ணா... சீமான் அண்ணாவின் பேச்சு எப்பவும் சிந்திக்க வைக்கும் ....

  • தொடங்கியவர்

வெறும் உணர்சிகளின் வெளிப்படுத்தல் இன்றி, மிகவும் அழகாகக் வடிவமைக்கப் பட்ட ஒரு உரையாகச் சீமானின் உரை அமைந்திருந்தது!

 

இவர் இதேபோலத் தென்னாபிரிக்கா, பிஜித்தீவுகள், மொரிசியஸ் போன்ற தமிழர் வாழும் இடங்களெல்லாம் செல்வது, உலகத் தமிழர்களின் நம்பிக்கையையும், எமக்கான ஒரு எதிர்காலத் தலைமையையும் வடிவமைக்க உதவுமென்பது எனது பணிவான நம்பிக்கையாகும்!

 

நன்றிகள், அகூதா!

மலேசிய அரசு இவரை நாட்டுக்குள் விட்டுள்ளது - இது முதல் முறை. உளவு அமைப்பு, இந்திய ரோ என்பன இவர் என்ன கதைக்கின்றார் / செய்கின்றார் என அவதானிப்பார்கள்.

சீமான் அவர்களின் முதிர்ச்சி தெரிகின்றது.

இணைப்புக்கு நன்றி அகூதா அண்ணா... சீமான் அண்ணாவின் பேச்சு எப்பவும் சிந்திக்க வைக்கும் ....

 

உண்மைதான். சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும்.

  • தொடங்கியவர்

நேற்றைய தினம் மலேசியா தலை நகர் கோலாலம் பூரில் தமிழர் தணிப் படை மாபெரும் ஒன்று கூடல் நடைபெற்றது.

 

65504_484909631588922_1959457693_n.jpg 

 

 

இதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது அவையாவன

 

 

1.உலகத் தமிழருக்கு ஒரே தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவே .பிரபாகரன் இவரின் தலைமையில் அணிதிரண்டு உலகத் தமிழர் அனைவரும் ஓரணியில் நின்று சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க 2இலட்சத்துக்கு மேற்பட்ட எமது மக்கள் மீதும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மண்ணுக்காக போராடி மடிந்த எங்கள் மாவீரச் செல்வங்கள் மீது உறுதி சுதந்திர தமிழீழம் கிடைக்கும் வரை உலகத்தமிழர் அனைவரும் தமிழ்த் தேசியத்தை கட்டி எழுப்ப அலையாக அணிதிரள்வோம் என உறுதி கொள்வோம்.

 

 

2...........மலேசியாவில் வாழ்20 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை மலேசியா அரசாங்கத்தினால் இந்தியர்கள் என்று கொச்சைப்படுத்தி வருகிறார்கள் இதனை மாற்றி அமைக்க வேண்டும் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்தியே தமிழர் மீதான தமிழின அழிப்பை நடத்தி வருகின்றனர் உலகத் தமிழர் ஆகிய நாங்கள் இந்திய அரசை தமிழினத் துரோகி ,எம் தமிழின அழிப்புக்கு துணை நின்ற மத்திய அரசு உலகத் தமிழரிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எமது தமிழீழ மண்ணில் நடந்த தமிழினப் படுகொலைக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் இந்திய மத்திய அரசும் தமிழினத் துரோகி கருணாநிதியும்


3.....உலகத் தமிழருக்கு எங்கே துயரம் ஏற்பட்டாலும் உலகத் தமிழினம் ஒன்று கூடி குரல் கொடுக்க முன்வரவேண்டும் தாய்த் தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கிழ அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்கவும் மலேசியாவில் வாழும் எமது உறவுகளின் துயரங்களில் கலந்து கொள்ளவும் தாய் தமிழகத்தில் தமிழினத்துக்காக ஒரு தலைவனை தெரிவு செய்வதற்கு மலேசியாவில் உள்ள தமிழ் மக்கள் நாம் தமிழர் செந்தமிழ் சீமானின் கரத்தை பலப்படுத்துவோம் என உறுதி எடுத்துக் கொண்டார்கள்

 

 4... தமிழீழத்தில் கொடிய சிங்களவனிடம் அல்லலுறும் எமது மக்களை காப்பற்றுவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் உலகத் தமிழர் அனைவரும் அணிதிரள வேண்டும் என எமது மதிப்புக்குரிய பினாங் மாநில முதலமைச்சர் ராமசாமி ஐயாவும் .நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ்ச் செல்வன் சீமானும் உலகத் தமிழர் அனைவருக்கும் கூட்டாக உரிமைக் குரல் விடுத்தார்கள்

 

 

5......முக்கியமான சில விடையங்கள் கைச்சாத்திடப்பட்டது மலேசியா பாரளமன்ற உறுப்பினர் மனோகரனும் நாம்தமிழர் கட்சி செந்தமிழ்ச் செல்வன் சீமானும் மகஜர் ஒன்றில் கைச்சாத்திடப்பட்டது மலேசியாவில் வாழும் எமது மக்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே ஒரு தலைவன் பினாங் மாநில முதலமைச்சர் மதிப்புக்குரிய ஐயா ராமசாமி அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டனர் நாம்தமிழர் கட்சி செந்தமிழ்ச் செல்வன் சீமான் கைச்சாத்திட்ட விடையம் மலேசியாவில் உள்ள மக்களுக்கு என்ன துயரம் ஏற்பட்டாலும் நான் குரல் கொடுப்பேன் என்று உறுதி எடுத்தார்.

 


இன் நிகழ்வுக்கு வருகை தந்த நாம்தமிழர் கட்சி செந்தமிழ்ச் செல்வன் சீமானுக்கு ஜம்பொன்னால் செய்யப்பட்ட பீனிஸ் பறவை வழங்கி கெளரவிக்கப்பட்டது இன் நிகழ்வில் பெருந் திரளான மக்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான, அதே சமயத்தில் தீர்க்கதரிசனத்துடன் கூடிய தீர்மானங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணையும் பொழுது

இனவெறிச் சிங்களம் சிதைந்து போகும்

  • தொடங்கியவர்

நாளைய தினம் மலேசியா தலை நகர் கோலாலம் பூரில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகத்தை மூட வேண்டும் என மாபெரும் முற்றுகைப் போராட்டத்துக்கு தமிழர் உதவும் கரங்களால் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது தமிழர் உதவும் கரம் தலைவர் முரளி விடும் அவசரமானதும் அவசியமானதும் வேண்டுகோள் எமது இனத்தை திட்டமிட்டு படுகொலை செய்த இன வெறி சிங்களவனின் தூதரகம்நமது நாட்டில் நாம் ஒற்றுமையாய் வாழும் தேசத்தில் இலங்கை போர் குற்றவாளியின் தூதரகம் வேண்டாம் எமது நாட்டில் அரசியல் கட்சி வேறு பாடுகளை புறந்தள்ளி தமிழன் என்ற உணர்வோடு அனைவரும் ஒன்று சேர்ந்து நாளை நடைபெற இருக்கும் இலங்கை தூதரகத்து முற்றுகைப் போராட்டத்துக்கு அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

541645_485272598219292_373240657_n.jpg

 

சிங்களப் பயங்கரவாத அரசினால் மேற்கொண்ட தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனின் திட்டமிட்ட இனப் படுகொலையை ஒருபோதும் உலகத் தமிழர் ஆகிய நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை தமிழினப் படுகொலை செய்த மகிந்த ராஜ பக்ச இம் மண்ணுக்கு வருவதை தடுத்து நிறுத்தினோம் அதே போல் அனைவரையும் அணி திரண்டு வருமாறு அன்போடு வேண்டுகிறோம் ஈழத்தில் இருந்து இங்கே வருகை தந்திருக்கும் எமது சகோதரர்களையும் நாளை பி; பகல் 12 மணிக்கு பாரிய முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளவும்

 

தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி எண் 0146108476

 

  • தொடங்கியவர்

385838_428755253866510_229401014_n.jpg



485047_428755303866505_528600361_n.jpg



11304_428755380533164_46403753_n.jpg

கருணாநிதி கழடண்ட பின்னர் உலகத்தமிழர் இணைந்துகொண்டுவருகிறார்கள். இதை இனி தடுக்க முடியாது. 

  • தொடங்கியவர்

மலேசிய அரசு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து சிங்களத்தை அகற்ற முயலவேண்டும்!

 

  • The parliamentary caucus also wants Malaysia to boycott this year’s CHOGM.
  • MPs seek Sri Lanka’s expulsion from Commonwealth

 



he parliamentary caucus on the Sri Lanka conflict has resolved to pressure the Commonwealth to boot out the South Asian country from the organisation and to tell the Malaysian government to boycott this year’s Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo.


Malaysia’s attendance at the meeting would be equivalent to endorsing the human rights violations committed by the Sri Lankan authorities, Teluk Intan MP M Manogaran told reporters after chairing a roundtable discussion at Parliament House yesterday.
 

Manogaran is the secretary of the caucus, which co-organised this morning’s meeting with the Malaysia Tamil Forum.
 

“We also want the Commonwealth to expel Sri Lanka,” he said.
 

K Arumugam of the Malaysian Tamil Forum said Sri Lanka should not be an example for a multiracial nation to follow.
 

“What if a Malaysian leader in the future uses the military solution to remove the minority Indians and Chinese here?” he said.
 

Sri Lanka and Malaysia are among the 54 former British colonies that make up the Commonwealth. CHOGM is among its regular activities.
 

The 23rd CHOGM will be held from Nov 15 to Nov 17.

 

http://www.freemalaysiatoday.com/category/nation/2013/02/20/mps-seek-sri-lanka%E2%80%99s-expulsion-from-commonwealth/

  • தொடங்கியவர்

563541_488471997899352_789858772_n.jpg



மலேசியா தலை நகர் கோலாலம் பூரில் அமைந்துள்ள பிறிப்பில் உள்ள லிப்ரின் இந்தியாதமிழினப் படுகொலை செய்த போர் குற்றவாளி மகிந்த ராஜ பக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி தூக்குத் தண்டனை தர வேண்டும் தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகன் பலச் சந்திரனை கொடூரமாக சுட்டுக் கொன்ற கொடிய சிங்களவனுடன் நம் சேர்ந்து வாழ முடியாது தமிழீழத்துக்கான வாக்கை உலகத் தமிழர் இடையில் நடைபெற வேண்டும் எனவும் போர் குற்றவாளி மகிந்தராஜ பக்சவின் உருவப் பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதியில் கொடுன் கோலன் ராஜபக்சவின் உருவப் பொம்மையை தூக்கிலிட்டு பின்பு அமைதிப் பேரணிக்கு வந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் ராஜபக்சவின் உருவப் பொம்மைக்கு செருப்பால் அடித்து மரியாதை செலுத்திய பின் தீக்கிரையாக்கப்பட்டது.

 

முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது:

  • மலேசியா அரசாங்கம் தமிழீழத்துக்காக ஆதவராக இருக்க வேண்டும்
  • நாளை நடைபெறும் ஜ நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை மலேசிய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும்
  • இலங்கை நடைபெறவிருக்கும் மகாநாட்டில் மலேசிய அரசாங்கம் கலந்து கொள்ளக் கூடாது

 

மலேசிய தமிழ் மக்களின் ஆதங்கமும் உலக மக்களின் ஆதங்கமும் இதுவாகும் இப் பேரணிக்கு பெருந்திரளான மக்களும் அரசியல் தலைவர்களும் அரச சார்பற்ற இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர் இப் பேரணிக்காக மலேசிய காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்த போதும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அதை ஏற்க மறுத்தனர் காரணம் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வரும்போது எந்த பேரணியை நடத்துவதாக இருந்தாலும் மலேசிய காவல் துறையினர் தமிழ் மக்கள் மீதான கட்டு மிராண்டித் தனமான தாக்குதலை நடத்துவது ஆகும்.

 

அண்மையில் ஸ்ரீலங்கா துதரகத்துக்கு முன்பாக அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்த செயல்ப்பட்டாலரை கைது செய்ததும் தாக்கியதும் ஆகும் இத்தகைய செயலால் தமிழ் மக்கள் எங்கேயும் பேரணி நடத்துவதாக இருந்தால் மலேசிய காவல்துறையின் பாதுகாப்புகள் வேண்டாம் என்ற சூழ் நிலை உருவாக்கி வருகிறது மலேசியாவில் உள்ள 20இலச்சம் தமிழ் மக்களை மனிதக் கேடையமாக பயன்படுத்தி வருகின்றனர் அதுக்கு சில அரசியல் தலைவர்கள் அரசுக்கு கைக் கூலியாக இருப்பதால் மனித நேயம் குழி தோண்டிப் புதைக்கப் படுகிறது எமது சுதந்திரத் தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து போராடுவோம்

 

நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் கிளங் செயற்பாட்டாளர் ஆறுமுகம் தலைமையில் இப் பேரணி நடை பெற்றது இறுதி தீர்மானமாக சுதந்திரத் தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து போராடுவோம்!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.