Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் படகுப் பேரணி நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் படகுப் பேரணி நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும் நேரே சந்திக்க வைத்து பேச்சு நடத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கச்சதீவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதையும் இழுவைப் படகுகளைக் கொண்டு சட்டவிரோத தொழில் முறைகளைக் கையாள்வதையும் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாக்குநீரிணையில் மீன்பிடிப்பதில் இருநாட்டு மீனவர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு இருநாட்டு மீனவர் சங்கத் தலைவர்களும் கூடி பேச்சுவார்த்தைகள் நடத்துகின்ற அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கையின் வடகடலில் பிரவேசித்து சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்துவதை உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சந்திப்பு குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதனால், இந்த கச்சதீவு உற்சவத்தின் போது இரு நாட்டு மீனவர்களை சந்திக்கச் செய்வதற்கான முயற்சிகளை தான் செய்ததாகவும், ஆனால் தமிழ் நாட்டில் இருந்து உரிய மீனவ தலைவர்கள் எவரும் உற்சவத்துக்கு வராத காரணத்தினால் அத்தகைய சந்திப்பை அங்கு நடத்த முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இரு நாட்டு மீனவர்களின் சந்திப்புக்கு உரிய நடவடிக்கைகளை இரு நாட்டு அரசாங்கங்களும் எடுக்காத பட்சத்தில் தான் கடலில் படகுகளின் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். யாழ் ஆயரின் தலைமையில் திருப்பலிப் பூஜை இதேவேளை, ஞாயிறன்று காலை நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருப்பலிப் பூஜை யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களின் தமையில் நடைபெற்றது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினனர் மு.சந்திரகுமார், யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்க, மாவட்ட கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உடவத்த, யாழ் மாவட்ட நீதிபதி அமலவளன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளும் ஆயிரக்கணக்கில் இருநாட்டு மக்களும் இந்தத் திருப்பலிப் பூஜையில் கலந்து கொண்டனர். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரின் சமூகப் பணிகள் குறித்த செய்தி இணைப்பிற்கு நுணாவிலானுக்கு நன்றிகள்.

 

மீனவர்கள் பிரச்சனையில் சுமூகமான தீர்வுக்கு முற்படுவது நல்ல விசயம். ஆயுதவழியில் இல்லாமல் ஜனநாயக வளியில் படகுப்பேரணி ஆரோக்கியமானது.

 

 

குத்தி சென்னை போகத்தாயார் இல்லை. மீனவர் சங்கத்தலைவர்கள் இலங்கை வரத் தயார் இல்லை.

 

அவர்கள் குத்தி மாதிரி அடாத்தாய் கதிரையில் ஏறி அமர்ந்தவர்களாக இருக்க முடியாது. சங்கக் கூட்டங்களில் தெரிவு செய்யப்ட்டவர்களாக இருப்பார்கள். குத்தி தன் கோளையாகள் இண்டு மூன்று பேரைக்கொண்டே அவர்கள்தான் வடக்கு மீனவர் சங்கத்தலைவர்கள் என்று கூற தயாராக நின்றிருந்திருக்கும். (இதுக்கை அந்தோனிய்ரிட்டை நேத்திக்கடனுக்கு போனவை.. குத்தியின் வள்ளத்திலாவது போக கிடைக்காத்தா என்று ஏங்கியிருக்கினம்- குத்தி "ஒரு மாதம் இதிலை நில்லுங்கோ, படகுப் பேரணி போகேக்கிலை கூட்டிக்கொண்டு போறம்" என்று சொன்னவராம்) <_<

 

தமிழக மீனவர்கள் "நேரத்தை பழுதாக்கமல் கடலுக்குள் இறங்கினால் இரண்டு மூன்று  கூடை மீனாவது தேறும்" என்று தங்கள்பாட்டில் போயிருப்பர்கள். :unsure:

Edited by மல்லையூரான்

இரு நாட்டு மீனவர்களும் கச்சதீவில் அமைதிப்போராட்டம்


மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரு நாட்டு மீனவர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளதுடன் இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3188

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் இலங்கையில் கடல் வளம் அழிகிறது' தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை இந்திய மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் இலங்கை கடல்பகுதியில் கடல் வளம் முற்றிலுமாக அழிந்து கொண்டே வருகிறது என்று இலங்கை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கச்சத்தீவில் தமிழக செய்தியாளர்களிடம் கூறியதாவது: இழுவலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிப்பதால் கடல் வளம் முற்றிலுமாக அழிந்து கொண்டேயிருக்கிறது. இது குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தும் இந்திய மீனவர்கள் வராமல் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பலமுறை குரல் கொடுத்து வருவதால் இப்பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இலங்கை கடல் வளம் மேலும் அழிந்து விடாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் தமிழகத்தில் இலங்கை மீனவர்கள் சுமார் 5,000 பேருடன் சிறை நிரப்பும் போராட்டத்தை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளேன் என்றார் டக்ளஸ் தேவானந்தா. தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் வலைகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் இந்தியக் கடலில் மீனவளம் இல்லாமல் போய்விட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்டக் கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் தலைவர் எமிலியான் பிள்ளை தெரிவித்தார். மீனவர் பிரச்னை: இரு நாடுகளும் பேச வேண்டுகோள் கச்சத்தீவு திருவிழாவிற்கு வந்திருந்த ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜனிடம் கேட்டபோது, திருவிழாவிற்கு வந்த இடத்தில் இருநாட்டு மீனவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசும்போது, அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திருவிழாவின் புனிதம் கெடும் என்பதாலும், அமைச்சர் பேசுவதைவிட இரு நாட்டு அரசுகளும்தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவ்வாறு அழைத்தால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். http://dinamani.com/tamilnadu/article1477260.ece

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 'இந்திய மீனவர்கள்' என 'இலங்கை(?) மீனவர்கள்' குறிப்பிடுகிறார்களே, அவர்கள் யார்?

ஆந்திரா, பீகார், ஒரிஸ்ஸா மற்றும் மேற்கு வங்கத்தை சார்ந்த கூட்டுக்குழுவாக இருப்பார்களோ? smiley4267.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.