Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் - வெளிவிவகார அமைச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் - வெளிவிவகார அமைச்சு
01 மார்ச் 2013
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என ஏற்கவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சு இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இந்தியா இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். ஜெனீவா அமர்வுகளில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியன் கதையளும் ஒரு மாதிரிகிடக்கு...செய்தாலும் செய்வான்....

 

இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் :icon_mrgreen: நெனப்பு நெனப்புதான் பிழைப்பை கெடுக்குமாம். வாக்கு வங்கி அரசியலை வைத்து அரசியலை நடத்தும் காங்கிரெஸ் தனது சொந்த முடிவையும் தாண்டி, தமிழக கட்சிகளின் நெருக்குதலையும்  தாண்டி வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டுதான் இவ்விடயத்தில் முடிவெடுக்கும் அது தமிழருக்கு சாதகமாகத்தான் இருக்கும். :icon_idea:

சோனியாவுக்கு உலகமா இலங்கையா என்ற கேள்விக்கு பதில் சொல்லத்தக்க அளவில் இலங்கையிடம் இப்போ பசை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெல்லும் குதிரையில் பணம் கட்டுவது தான் வழமை.அமெரிக்கா தான் தற்போதைய இந்தியாவின் நண்பன்.அமெரிக்காவுக்கு எதிராக போகும் சாத்தியமில்லை.



 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ஈமெயில் தொடர்பு ஏற்படுத்தப்படப்போவது நிச்சயமே... :D

இந்தியா எவ்வாறு வாக்களித்தாலும் ... யாரவது பகைப்பார்கள்.

 

அது தமிழர்களாக இருந்தார்கள் ... கருணாநிதி காலத்தில்.

அது சிங்களமாக இருந்தது ... ஜெயலலிதா காலத்தில் (கடந்த வருடம்)

ஈமெயில் தொடர்பு ஏற்படுத்தப்படப்போவது நிச்சயமே... :D

 

இந்த வரியை ஒரே பிடியாக பிடித்துக்கொண்டு நிற்கிறீர்கள். :D

 

 

ஜெனிவாவில் வாக்கெடுப்பு நேரத்தில் மீட்க இந்தியா வரும் என்று சிறிலங்கா நம்பிக்கை

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின்ற நிலையிலும், வாக்கெடுப்பு நேரத்தில் தம்மை புதுடெல்லி மீட்க வரும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு …நம்பிக் கொண்டிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா அந்த ஊடகத்துக்கு கருத்து வெளியிடுகையில்,

“அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்தியா இன்னமும் எமக்கு அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்தவில்லை.

நாம் ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தீர்மானம் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்தியா எமக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம்.

எமக்கு ஊகங்கள் தேவையில்லை.

ஆதரவு திரட்டுவது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்

 

.http://sankathi.com/dailynews/?p=5283

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.