Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தமிழகம் முழுவதும் உணர்வை ஏற்படுத்தி உள்ளோம்" தோல்வி இல்லை - தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பு

Featured Replies

தமிழ் ஈழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு , இனப்படுகொலைக்கான தற்சார்பான பன்னாட்டு விசாரணை மன்றம் கோரி சிதம்பரம் அண்ணாமைலைப் பல்கலைக்கழக மாணவ்ர்கள் (11-03-2013 திங்கள் ) இன்று பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் !

 

398804_274016546063820_878168466_n.jpg

  • Replies 59
  • Views 4.8k
  • Created
  • Last Reply

"அதிராம்பட்டினம் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் "

 


=====================537505_274009372731204_85138401_n.jpg

 

அடையார் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறி இல்லாது, கடும் கொசுக்கடிகளுக்கு நடுவே, உண்ணாநோன்பு இருக்கும் 8 மாணவர்களும், 1 மாணவியும், தமிழ் உணர்வாளர்களும் இரவைக் கழித்து வருகின்றனர்.

 

 

உண்ணாவிரதம் இருக்கும் அந்த மாணவி தமிழ்ப் பெண் அல்ல என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் பெண்ணான அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உறுதியாக இருக்கும் அவர், விடுதிக்கு சென்று தங்குமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்து உண்ணாவிரத பந்தலிலேயே இருந்து வருகிறார்.


இவர்களுக்குத் துணை நிற்ப்போம். இவர்கள் மனதில் இருக்கும் உணர்வுத் தீ அணையாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை.

 

தொடர்பு எண்கள் : 9884667798-ரவி ,8807322832-பெருமாள்

 

199103_10200696967164837_1467182826_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

60களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திமுக, திக சார்பு ஊடகங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன. இன்றைக்கு புதிய தலைமுறை மட்டுமே இதைப் பேசுகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் ஒப்புக்கு சப்பாணியாகவே இதைப் பற்றி கதைக்கின்றன. நல்ல வேளையாக தகவற் தொடர்பு வளர்ந்தது. முகநூல் போன்றவைகளின் பாவனைக்கு வந்தன. இல்லையென்றால் இது யாரும் கவனிக்காமல் செய்திருப்பார்கள்.

 

அன்றைய திமுக, திக சார்பு ஊடகங்கள் எவை?

 

அன்று தொலைக்காட்சி இல்லை.. தனியார் வானொலியும் இல்லை.. பத்திரிகைகள்கூட மிகக்குறைவு... இருந்தவற்ரையும் படிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கும்..

 

அன்று மேடைப்பேச்சு, ரயில் மறியல் போராட்டம், இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் என மக்களுக்கு முன் வந்துதான் போராடினார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் சொல்லும் ஊடகம் என்பது கற்பனை என நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை: தீவிரமடையும் தமிழக மாணவர் போராட்டம்


 

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது, தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இப்போராட்டம் மேலும் தீவிரமடையும் நிலை காணப்படுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும், நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி புனித வளனார் கல்லூரியிலும் மாணவர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது.

 

http://tamilleader.com/?p=7556

இங்கே எத்தனை நாள் என்பதை விட மாணவர்களின் உணர்வு வெளிப்பட்டுள்ளது .
 

இந்த செய்தி போதும் நிறைய பேர் உணர்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/544553_10151821535174128_601782736_n.jpg

இதுதான் திமுகவின் இலட்சணம். அன்று வேலை நிறுத்தத்தை எதிர்த்தவர்கள் இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

தமிழீழம் அமைக்க கோரி தமிழகம், புதுவையில் 92 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

 

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர்

 

திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர்
...
 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல், தொடர்பியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன், ராமன், முகமதுகான், சிவா, வள்ளிகண்ணு, பிரசாத், பிரபாகரன், செந்தமிழ்ராஜ், என்ற மதன்ராஜ், நவீன், முத்துக்குமார், மாரியப்பன் ஆகிய 12 பேர்

 

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேர்

 

கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர்

 

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர்

 

புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர்

 

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையின்
14 மாணவர்கள் என மொத்தம் 92 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

 

இவர்களில் பலர் 2-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தற்போது மையம் கொண்டுள்ள போராட்டத்தின் நிலைமை குறித்து தொலைபேசி வாயிலாக போராட்டத்தில் உள்ள மாணவர் ஒருவரிடம் வினவினேன், மிகுந்த ஆவேசத்துடன் பேசிய மாணவன் குறிப்பிட்ட விடயங்கள்.

1) பாடசாலை நிர்வாகம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயற்படுகிறது.
2) கல்லூரி முதல்வர் ஒவ்வொரு மாணவனின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு பிள்ளைகளை கல்லூரியில் இருந்து நீக்கப்போவதாக மிரட்டி உள்ளனர்.
3) எங்களை மட்டுமல்ல எண்களின் சகோதர, சகோதரிகளையும் நீக்க போவதாக தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள்.
4) காங்கிரஸ் ஆதரவு பாடசாலை முதல்வரோடு திமுகவின் தீவிர ஆதரவு ஆசிரியர்களும் மிரட்டல் விடுக்கிறார்கள்.
5) போராட்டத்தை நிறுத்தாவிடில் கல்லூரியில் ஒருகாலமும் படிக்க முடியாது என்று மிரட்டுகிறார்கள். 
6) எது நடந்தாலும் அஞ்சோம், எம் கொள்கையில் இருந்து ஒரு படி கூட இறங்கி வருவதில்லை என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்.
7) இது எந்த அரசியல் சார்பற்ற மாணவர் போராட்டம்.
8)புலம்பெயர் தமிழர்களையும் அந்தந்த நாடுகளில் போராட சொல்லுங்கள்.
9) நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கமைப்பு குழு, பிற புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக புலம்பெயர் மக்களை திரட்டி அந்தந்த நாடுகளில் போராட்டத்தில் குதிக்க சொல்லுங்கள்.
10) மலேசிய தமிழர்களையும் இணைய சொல்லுங்கள்.
11) திமுக , காங்கிரஸ் தமிழர் எதிர்ப்பு அராஜகங்களை எல்லா செய்தி தளங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள்.
12) தமிழக மக்கள் அனைவரையும் எம்மோடு இணைய சொல்லுங்கள்.

என்று மிகவும் ஆவேசமாக சொல்லி முடித்தார்.

தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக திரண்டு வாருங்கள், கல்லூரி நிர்வாகத்துக்கு எம் பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

 
via FB
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தற்போது மையம் கொண்டுள்ள போராட்டத்தின் நிலைமை குறித்து தொலைபேசி வாயிலாக போராட்டத்தில் உள்ள மாணவர் ஒருவரிடம் வினவினேன், மிகுந்த ஆவேசத்துடன் பேசிய மாணவன் குறிப்பிட்ட விடயங்கள்.

1) பாடசாலை நிர்வாகம் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயற்படுகிறது.

2) கல்லூரி முதல்வர் ஒவ்வொரு மாணவனின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு பிள்ளைகளை கல்லூரியில் இருந்து நீக்கப்போவதாக மிரட்டி உள்ளனர்.

3) எங்களை மட்டுமல்ல எண்களின் சகோதர, சகோதரிகளையும் நீக்க போவதாக தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள்.

4) காங்கிரஸ் ஆதரவு பாடசாலை முதல்வரோடு திமுகவின் தீவிர ஆதரவு ஆசிரியர்களும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

5) போராட்டத்தை நிறுத்தாவிடில் கல்லூரியில் ஒருகாலமும் படிக்க முடியாது என்று மிரட்டுகிறார்கள். 

6) எது நடந்தாலும் அஞ்சோம், எம் கொள்கையில் இருந்து ஒரு படி கூட இறங்கி வருவதில்லை என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்.

7) இது எந்த அரசியல் சார்பற்ற மாணவர் போராட்டம்.

8)புலம்பெயர் தமிழர்களையும் அந்தந்த நாடுகளில் போராட சொல்லுங்கள்.

9) நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கமைப்பு குழு, பிற புலம்பெயர் அமைப்புகள் உடனடியாக புலம்பெயர் மக்களை திரட்டி அந்தந்த நாடுகளில் போராட்டத்தில் குதிக்க சொல்லுங்கள்.

10) மலேசிய தமிழர்களையும் இணைய சொல்லுங்கள்.

11) திமுக , காங்கிரஸ் தமிழர் எதிர்ப்பு அராஜகங்களை எல்லா செய்தி தளங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள்.

12) தமிழக மக்கள் அனைவரையும் எம்மோடு இணைய சொல்லுங்கள்.

என்று மிகவும் ஆவேசமாக சொல்லி முடித்தார்.

தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக திரண்டு வாருங்கள், கல்லூரி நிர்வாகத்துக்கு எம் பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

 
via FB
 
 

புலம் பெயர் ஈழ தமிழர்கள் ஆகிய நாங்கள்...இதை உடனை செய்து ஆக்கனும் கூடிய சீக்கிரம்..இல்லாட்டி காலம் எங்களை மன்னிக்காது...

மானவர்கள் இந்த துனிவோடு இந்த போராட்டத்தை கொண்டு நடத்துங்கள் எத்தடையும் உடைப்போம்...இத்தாலி கூட்டத்துக்கு மூஞ்சையில் கை வைக்க உங்களால் தான் முடியும் மாணவர்களே...உங்க கூட இருந்து போராட நாங்கள் உங்களுக்கு பக்கத்தில் இல்லை...புலம் பெயர் உறவுகளாகிய எங்கள் ஆதரவு எப்பவும் உண்டு உங்களுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் கருத்தே எனது கருத்தும்..! மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும் தீமானத்தை வலைமைகொண்டதாக மாற்றும்படி கோரியும் போராட்டங்கள் இங்கே இடம்பெறவேண்டும்..! ஒருமித்த கருத்தே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றி அவர்களது எதிர்காலத்தை அழித்தது போல், லயோலா கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது போல் இவர்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விட்டு, நாம் மட்டும் சொகுசாக வாழுவோம்.   வாழ்க போராட்டம்.  வளர்க புலம்பெயர் அமைப்புகள்.

 

புலம்பெயர் இளையோர் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு வடிவ போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இப்போதும் எடுக்கின்றனர். அதனால் யார் படிப்பும் பாழாகவில்லையே..!! இதனை பல்கலைக்கழக மாணவர் சார்ப்பாக என்னால் உறுதிபடச் சொல்ல முடியும்.

 

மேலாதிக்க சக்திகளுக்கும்.. பேரினவாத சக்திகளுக்கும்.. அடக்குமுறையாளர்களுக்கும் எதிராக மக்கள் போராடுவதை விரும்பாத உங்களைப் போன்ற சிலரே.. போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறீர்களே தவிர.. இன்னென்ன போராட்டம் இன்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எதிர்வுகூறிக் கொண்டு தான் மாணவர்களும் சரி போராட்டக்காரர்களும் சரி போராடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஒன்றும் மிட்டாய் காட்டிக் கூப்பிட கூவிக்கொண்டு வரும் கூட்டமில்ல.. உசுப்பிவிட.

 

அவர்களை உணர்வேற்றுவதும் போராடத் தூண்டுவதும் அடக்குமுறையாளர்களே. ஏசி றூமில் இருந்து அடக்குமுறை அரசியல் செய்யும் அவர்களிடம் போய் சொல்லுங்கள் உங்கள் கருத்தை. அதுதான் சரியான இடமாக இருக்கும்..! :icon_idea:

கொஞ்சம் தாக்கு பிடித்தால் வாறகிழமையில் இருந்து  காலநிலை கொஞ்சம் பறவாயில்லை( கடும் குளிர்  இருக்காது) ஆகவே அதுவரை   புலத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்க படமாட்டாது .

 

 

 

புலத்தில்  பெயருக்கு ஆர்ப்பாட்டம் செய்து  தமிழக மாணவர்களை கொச்சை படுத்தாதீர்கள்.

நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிண்ங்க நேற்று நாம் தமிழர் அமைப்பை சார்ந்த தோழர்கள் ஒரு பேனரை அடித்து தந்தனர்.

 

இன்னும் பல உதவிகள் செய்வதாக கூறினர். இரவில் ம.தி.மு.க அமைப்பை சார்ந்த ஒருவர் எனக்கு போன் செய்து நாங்கள் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை ஒரு இடத்தில் அமர செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என கூறினார்.

 

நாங்கள் அரசியலவாதிகளின் முடிவுகளும், திட்டமிடல்களும் எங்களுக்கு தேவை இல்லை. முடிந்தால் எங்களுக்கு நாங்கள் கோரும் உதவிகளை செய்யுங்கள், அது போதும் என கூறி விட்டேன்.

 

அதோடு அந்த அரசியல்வாதிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

அவர்களிடம் சிக்கிய மாணவர்களை வைத்து அவர்கள் எப்போதும் போல தங்கள் இழிவான அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர். முக நூல் நண்பர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு எதிராக குரலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன். தயவு செய்து இது போன்ற கட்சிகளின் முக்கிய பொருப்பாளர்களுக்கு தொடர்பு கொண்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யுமாறும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

 

தயவு செய்து எங்கள் மாணவர்களின் போராட்டங்கள் ஈழம் அமையும் வரை சதிகளால் சிதைக்கப்படாமல் உதவுங்கள். நன்றி.

 

முகமது கான். மனோன்மணியம், போராட்டக்குழு, சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

 

 

இன்று போராட்டம் நடக்கும் இடங்கள்..

 

542825_10151824938539128_390018005_n.jpg

6109_484285321620670_488900459_n.jpg

59725_438881852864644_1035212411_n.jpg

தனது தொலைக்காட்சியில் "மானாட மயிராட" வும் தனது பேரன்களின் தொலைக்காட்சியில் " மிட்நைற் மசாலாவும்" பார்த்துவிட்டு வாந்தியெடுக்கும் கருணாநிதியின் கவனத்திற்கு இந்த படம் சமர்ப்பணம்..

 

மாணவர்கள் பின்னால் திரண்டு எமக்கு ஆதரவு தாறது என்றால் தாருங்கள் ஐயா.. அல்லது பொத்திக்கொண்டு இருங்கள். புண்ணியமாப்போகும்..

 

(முகநூல்)

 

157072_10200709874687517_574231804_n.jpg

மனசு நிறைய வலியுடன் காலைமுதல் செய்திகள் வந்தவண்ணம் இருந்ததால் இன்றுஎன் பிறந்த நாள் கூட மறந்து போனேன்,ஆனால் முகனூலில் வந்த உறவுகளின் வாழ்த்துக்கள் என்னை அனாதை இல்லை நான் உலகம் முழுவதும் வாழும் 12கோடி தமிழனின் உறவு நான்என உணர்த்திவிட்டது.......

 

மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியுடன்...ஊமை அழகிரி,

 

- முகநூல் தமிழக உறவு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த பட்டினிப் போராட்டத்தில் 6ம் வகுப்பு படிக்கும்முத்துக்குமார்
.வெற்றிவேல் என்னும் பாடசாலை மாணவன் ஒருவன் தனது எண்ணத்தில் உருவான கவிதைகளை அந்த இடத்திலே எழுதி வாசித்தான்.

 

 

" ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்
ஈழ மண் எங்கள் மண்

ஈழ பிரச்சனை

எங்கள் பிரச்சனை
ஈழ மக்கள் எங்கள் மக்கள்
நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை
விதைக்கப்படுகிங்றீர்கள்
நீங்கள் ஒவ்வொருவரும் பிரபாகரனகா போராடினால்
ஈழம் வெல்லும் "

 

485901_275844935880981_1955435187_n.jpg

ஒரு கிராமத்தின் போராட்டம்.

 

செங்கல்பட்டு அருகில் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் காட்சி.

 

418841_508515482519501_872847914_n.jpg

 

 

கலை அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போரட்டத்தைத் தொடர்ந்து,

 

 

ஒரு சில இடங்களில் மருத்துவ,பொறியியல்,பட்டயக் கல்லூரி மாணவர்களும் களமிறங்கிவிட்டார்கள்,


இம்மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் மக்களும்,
தானி ஓட்டுநர்கள்,
சிறிய சரக்குந்து ஓட்டுநர்கள்,
ஆசிரியர்கள்,
வழக்கறிஞர்கள் என ஆதரவு பெருகுகிறது,

 

மாணவர்களோடு மக்களும் போரட்டக் களத்தில் இறங்குகிறார்கள்,

வெல்கத் தமிழர் புரட்சி,



நெல்லை பாளையம்கோட்டை திலீபன் அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கூடி வருகிறார்கள் பல்லவேறு எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் உரையாற்றி வருகிறார்கள்,அதில் தமிழர் இன அழிப்புத்தொடர்பன காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.



தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.

#ஓயாத அலை, அணையாத தீ !

 

392947_594170160595013_1240442085_n.jpg



ஆறாம் நாள் பட்டினிப் போராட்டம் ...
அண்ணாமலை பல்கலை மாணவர்கள் கவலைக்கிடம் !


தனித் தமிழ் ஈழத்துக்கான பொது கருத்து வாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலன் விசாரணை மன்றம் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழக மாணவர்கள் 39 பேர் வகுப்புகளை புறக்கணித்து 11-03-2013 திங்கள் முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மாணவர்களின் போராட்டம் 16 – 03- 2013 சனி இன்றுடன் ஆறாம் நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 39 மாணவர்களில் 24 மாணவர்கள் இதுவரை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ. குபேரன் உட்பட, 13 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை முடிந்த மாணவர்கள் மீண்டும் போராட்டப் பந்தலுக்கு வந்து தங்களைப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபடி உள்ளனர்.இதனால் மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


சிகிச்சை பெற்று போராட்டத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்ட மாணவர்களில் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, வசந்த ராஜ் உள்ளிட்டோர் மீண்டும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மருத்துவமணையிலும் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றனர்.


மருத்துவமணைக்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மக்கள்திரள் அமைப்புகளும், புலம்பெயர் வாழ் தமிழர்களும், உணர்வாளர்களும் தங்கள் ஆதரவை நேரிலும், தொலைபேசி வழியிலும் தெரிவித்து வருகிறனர்.


அரசியல் கட்சிகள் இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில் போராட்டத்தை சீர்குலைக்க சில தேர்தல் அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

 

போராட்டம் தொடர்கிறது..

 

தொடர்புக்கு :
ஆ.குபேரன் +91 9042223563

 

734421_594171303928232_748536766_n.jpg

தமிழக மாணவர்களின் போராட்டம் ஒரு இடத்தில் தேங்கி நிற்க கூடாது. விரைவில் அனைத்து மாணவர்களும் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.

 

 

குறிப்பாக மாணவர்கள் அமைப்புக்களினூடாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் பேசி அவர்களையும் சிறியளவிலேனும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். இது தமிழ் மாணவர்களின் போராட்டமாக சுருங்கக்கூடாது.


தமிழர்களிற்காக வேற்று இன மாணவர்களும் போராடியதாக வரலாற்றை மாற்ற வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் கவனத்தை குவிக்க முடியும் என்பதுடன் பரந்தளவு கவனத்தை குவித்து அனைத்துலக மட்டத்தை நோக்கி போராட்டத்தை எடுத்து செல்ல முடியும்.

 

மாணவர் அமைப்புக்கள் உடனடியாக செயலில் இறங்க வேண்டும்.

 

- முகநூல்



இன்றைய தினம் குறிப்பிடும் படியாக வலிமை பெற்ற களங்கள் :
பாளை போராட்டம் ......
கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி போராட்டம் ....
கோவை மற்றும் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் போராட்டம் ..........
நெய்வேலி முன்னாள் மாணவர்கள் போராட்டம் ........
சென்னை சட்ட கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள் போராட்டம் .........
விருத்தாசலம் போராட்டம் ..........
மதுரை போராட்டம் ...............
ரயில் மறியல் .........
தஞ்சை பெரியகோவில் போராட்டம் ........
ப சிதம்பரத்துக்கு கருப்பு கொடி போராட்டம் ........
பெப்சி ஆதரவு ........
பொறியியல் கல்லூரிகள் போராட்டத்தில் குதிப்பு .....
வழக்கறிஞர்கள் களத்தில் குதிப்பு .....
கோயம்பேடு சந்தை ஊழியர்கள் ஆதரவு ........
பெங்களூரு போராட்டம் முயற்சி .........

சிதம்பரம் உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட வந்த உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளான இன்று மாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

 

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 33 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் அருகே இன்றோடு தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இந்த நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியர் சுப்ரமணியம், வட்டாட்சியர் தனசிங், ஏஎஸ்பி எம். துரை, பல்கலைக்கழக கலை புல முதல்வர் செல்வராஜ், உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேசி, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, உதவி ஆட்சியர் , மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 6-ம் நாளாக இன்று சனிக்கிழமை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://dinamani.com/latest_news/article1504252.ece

தமிழக மக்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படும்

 

இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இந்தியா முடிவு எடுக்கும்போது தமிழக மக்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

 

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் உரிய திருத்தத்தை சேர்க்க இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசில் நீடிப்பதில் அர்த்தமில்லை என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: தமிழர்களுக்கு எதிரான போர்குற்றங்களுக்காகவும், மனித உரிமைகள் மீறலுக்காகவும் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உணர்வுகளோடு தொடர்புடையது. இது அவர்களை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது.

 

இந்த விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலையை முடிவு செய்யும்போது தமிழக மக்களின் உணர்வுகளையும், கருணாநிதியின் கருத்துக்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும். அவர்களது உணர்வுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மதிப்பளிப்பார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

 

http://dinakaran.com/News_Detail.asp?Nid=43889

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.