Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஜயா சொல்லுறதையும் கொஞ்சம் கேலுங்கோ...காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது கிடக்கட்டும். ஒன்று ஞாபகம் வருகிறது. விஜயலக்ஸ்மி விவகாரம் வந்து பொழுது ஒரு ஈழத்துப் பெண்ணைத்தான் சீமான் திருமணம் செய்வார் என்று சொன்னார்களே! அது என்ன ஆனது?

அது சொன்னவர்களைத்தான் கேக்க வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/QPEXD4nw1b4

 

இக்காணொளியில்.. 34 மற்றும் 47 வது நிமிடத்தில்... இருந்து... பாருங்கள் கேளுங்கள்..

 

சீமான் அண்மையில் மலேசியாவில் கூட திமுக விற்கு சமனாக அதிமுக வையும் நேரடியாகச் சாடி இருந்தார்.

 

சீமான் நாம் தமிழர் என்ற அடிப்படையில்.. தனது தமிழ் தேசிய அரசியல் இலக்கு நோக்கி உறுதியாகவே நகர்ந்து செல்கிறார்.

 

இதனை விரும்பாத சக்திகள் கருணாநிதி கூட்டத்துக்குள்.. ஜெயலலிதா கூட்டத்துக்குள் மட்டுமல்ல.. ஈழத்தமிழர் மத்தியிலும் உளர்.

 

சட்ட விரோத ரீதியில்.. 3 கலியாணம் கட்டின கருணாநிதியை அவருடைய சீரழிந்த கேடுகெட்ட தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால்.. தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள்.. சசிகலாவிற்கு மாலை போட்டு கோயிலில் கலியாணம் செய்த ஜெயலலிதாவின் கீழ்த்தரமான தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால்.. அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வர்கள்.. சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் கிண்டிக் கிளறுவதன் நோக்கம்.. அவரின் தலைமைத்துவ ஆற்றலின் கொள்கையின் பின்னால் மக்கள் திரள்வதை தடுப்பதே அது இங்கும் யாழிலும் பிரதிபலிக்கிறது..!



ஆனால் சீமான் இவற்றிற்கு எல்லாம் கடந்த மக்கள் தலைவராகி விட்டார். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற இணைப்பினை தந்ததற்கு நன்றி பையன்

  • கருத்துக்கள உறவுகள்

2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தேர்தல் நடைபெற தயாராகிக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்தத் தேர்தல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஜெயலலிதா மிகக் கடுமையாக புலிகளை எதிர்த்துக் கொண்டிருந்த நேரம் அது. பல ஈழத் தமிழர்கள் கலைஞர் வர வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஜெயலலிதா வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று எழுதியருந்தேன். கருணாநிதி ஆதரவாக இருந்தாலும், மத்திய அரசை மீறி எதையும் செய்ய மாட்டார் என்றும், துணிச்சல் மிக்க ஜெயலலிதாவை எமக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளினால் அவருடைய ஆதரவு அதிரடியாக இருக்கும் என்றும் எழுதியிருந்தேன்.

நன்றாக நினைவிருக்கிறது. வேறொரு தளத்தில் எழுத்தாளர் யுவகிருஸ்ணா நான் ஓ.பன்னீர்செல்வத்தை விட அதிகமாக ஜெயலலிதாவிற்கு செம்பு தூக்குவதாக எழுதியிருந்தார். இன்றைக்கு நான் கருணாநிதிக்கு செம்பு தூக்குவதாக சிலருக்கு தெரியலாம். இதற்கான நியாமான காரணம் உங்களுக்கு புரிகின்ற பொழுது நான் மீண்டும் ஜெயலலிதாவிற்கு செம்பு தூக்கிக் கொண்டிருக்கலாம்.

அப்ப இப்பிடி மாறி மாறி செம்ப தூக்கிட்டு இருந்தா எப்ப நீங்க ஓரமா ஒதுங்கிறது? :D

தமிழன் என்பதுதான் சீமானுடைய அடையாளம் என்றால் முதலில் அவர் ஒவ்வொரு ஆண்டும் தேவர் சமாதிக்கு ஓடிப் போவதை நிறுத்தட்டும். தன்னை தேவர் என்று வெளிப்படுத்திக் கொண்டு அரசியல் செய்ய அவர் ஆரம்பித்த பொழுதுதான் அவர் மீதான மரியாதை குறையத் தொடங்கியது.

தேவர் சமாதிக்கு போய் விட்டு திராவிட சித்தாந்தை பேச முடியாது அல்லவா? ஆகவே திராவிடம் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும் உளறத் தொடங்கினார். மிகுதி மரியாதையும் போனது.

தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதலமைச்சராக வரவேண்டும் என்றால், எல்லோரும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்கு போட வேண்டும். அதில்தான் நிறைய தமிழர்கள் இருந்தார்கள். கடைசியாக தமிழ்நாட்டை ஆண்ட பச்சைத் தமிழன் காமராஜரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவர் சமாதிக்கு ஜெயலலிதாவில் இருந்து கருணாநிதி வரை எல்லோரும் தான் ஓடிப்போகின்றார்கள் தேவருக்கு இருக்கும் மரியாதை மகிமை அப்பிடி நைனா

தமிழ் நாட்டில அரசியல ஜெயிக்கணும் என்றால் இப்பிடியான அரசியலும் செய்யணும் சாரே.....

பிறகு வைக்கோ மாதிரி நடந்து திரிய வேண்டியது தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர் தமிழனாக தமிழ் நாட்டை ஆளவில்லை.. காங்கிரஸில் இருந்து கொண்டு இந்தியனா ஆண்டார். இப்போ நம்ம சம்பந்தர்.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. தமிழனின்னு சொல்லிக்கிட்டு திரியல்லையா அது போலத்தான். :lol:

 

சீமான்.. உடனடியாக சில நடைமுறைகளை மாற்ற முடியாது. மக்களின் உணர்வுகளோடு போய் கலந்து தான் அவர் மாற்றங்களை படிப்படியாக கொண்டு வரனும்.

 

சில ஆண்டுகளுக்கு பெரியார்.. திராவிடம் என்று முழங்கிய இதே சீமானை.. அன்று வரவேற்றவர்கள்.. இன்று தமிழன்.. பிரபாகரன் என்று மட்டும் சொல்லுகின்ற போது ஏன் வெறுக்கினம். நாம் தமிழர் என்றதை சீமான் திராவிடம் பேசித்தான் தமிழர்களை அணுகி அந்த திராவிட எண்ணம்.. தவறென்று காட்டினார். காங்கிரஸில் இருந்த சீமான் இன்று.. அது தவறென்று சொல்ல முடிகிறது.. என்றால் அதனோடு அவர் மக்களுக்காக பெற்ற அனுபவம் தான்..!

 

சீமான்.. வெறும் உணர்வு உந்தலில் பேசல்ல.. அவர் அந்தந்த பாதைகளைக் கடந்து வந்து சேர்ந்த இடமே.. நாம் தமிழர்.. என்ற நிலை..! தமிழ் தேசிய உணர்வேந்தல்..! இது சாதாரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

கருணாநிதி தேவர் சமாதிக்கு செல்வது இல்லை. இது தவறான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தன்னோட அடிப்பொடிகள அனுப்பிறவர்....

கருணா கோயிலுக்கு போறதில்ல ஆனால் பொண்டாட்டி மாற அனுப்பி பூஜா செஞ்சிட்டு வா என்று அனுப்பிறவர் :D

நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர், சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர். வெங்கடேச பெருமாளை தரிசிக்க, திருமலைக்கு வந்திருந்த கருணாநிதியின் மகள் செல்வி, பேரன் கலாநிதிமாறனின் மனைவி காவேரி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் (செவ்வாயன்று) அதிகாலை வி.ஐ.பி., தரிசன நேரத்தில், கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் பங்குகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பின்னர், செல்வி, காவேரி மற்றும் அவர்களுடன் வந்திருந்த சிலரும், காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று பரிகார பூஜையில் பங்கு பற்றினர்

Thanks to tamilnadu everyday

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி போறதில்லை. ஏன் ராஜபக்சவையும் அவர் சந்திக்கல்ல. பிரபாகரனையும் அவர் சந்திக்கேல்ல.

 

ஆனால்.. அவரின் மகள் ராஜபக்சவை சந்திச்சிருக்கிறார். ஸ்ராலின் தேவர் சமாதிக்கு போய் அஞ்சலி செய்கிறார். இவர்கள் என்ன திருடர் முன்னேற்றக் கழகத்திலா இருக்கினம்.. இல்ல திமுகவில இருக்கினமா..???!

 

திமுக தலைவரோ.. பிள்ளைகளோ.. பிரபாகரன் என்ற பெருவீரனை சந்திக்கவில்லை.. இதுவரை..! இதன் பின்னணி..???!


தேவர் சமாதியில் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா அஞ்சலி
 
10-31-2010-7-thevar-puja-passes-off-peac

 

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 103-வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருஉருவ சிலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 7.45 மணியளவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, தமிழரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார். வழி நெடுக அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 9.45 மணிக்கு அவர், பசும்பொன் கிராமம் வந்தார். அங்குள்ள தேவர் நினைவிடத்தில் காலை 9.50 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் தேவர் நினைவிடத்திற்கு வந்து முறையாக மரியாதை செலுத்தி வருகிறோம். புதிதாக நாங்கள் இங்கு வரவில்லை. ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து ஆண்டுதோறும் பசும்பொன் கிராமத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறோம். காயிதேமில்லத் விழா உள்ளிட்ட அனைத்து விழாவிற்கும் நாங்கள் செல்கிறோம். ஆனால், தேர்தலை மனதில் வைத்தும், ஓட்டுக்காகவும் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வருகிறார்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது குறித்து ஏற்கனவே மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. முதல்-அமைச்சர் தலைவர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தில் 6-வது முறையாக மீண்டும் கருணாநிதி ஆட்சி அமைவது உறுதி. இதற்கான கூட்டணி பலமாக உள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.20மணிக்கு வந்தார். அங்கு வரவேற்பு முடிந்ததும், ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு பசும்பொன்னை அடைந்தார். அவருடன் சசிகலாவும் வந்தார். முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன், அன்வர்ராஜா உள்ளிட்டோர் ஜெயலலிதாவை வரவேற்றனர். பின்பு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கு அரசியல் பேசக்கூடாது. அதை நான் விரும்பவும் இல்லை. பசும்பொன்னில், தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த முதல் அரசியல் கட்சி தலைவர் நான்தான். இதன்பின் தான் மற்ற தலைவர்கள் வந்தனர். தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்கக்கவசம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அ.தி.மு.க. சார்பில் விரைவில் தங்கக்கவசம் வழங்கப்படும். இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்தன. இவ்வாறு ஜெயலலிதா கூறினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த ஜெயலலிதா தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.

 

http://www.koodal.com/news/tamilnadu.asp?id=57625&title=thevar-puja-passes-off-peacefully-tamilnadu-news-headlines-in-tamil
 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, திருநள்ளார் சனி பகவானை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் காரைக்கால் வந்தார். மதியம் 12.10 மணிக்கு கோவிலுக்கு வந்த ராஜாத்தி, முதலில் சொர்ணகணபதி, சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, இறுதியாக சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்தார்.ராஜாத்தி சார்பில், சனி பகவானுக்கு தயிலாபிஷேகம் நடத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. பின், எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாத்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாமிதரிசனம் முடிந்து, மதியம் 1.10 மணிக்கு, ராஜாத்தி காரில் புறப்பட்டு சென்றார்.

http://tamilnadu-election2011.blogspot.com.au/2011/03/blog-post_2819.html?m=1

:D :d

  • கருத்துக்கள உறவுகள்

திமுக தலைவரோ.. பிள்ளைகளோ.. பிரபாகரன் என்ற பெருவீரனை சந்திக்கவில்லை.. இதுவரை..! இதன் பின்னணி..???!

அதற்க்கெல்லாம் கொடுப்பனவு இருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கருணாநிதி படையணியின் சிறப்புத்தளபதி சபேசண்ணா தப்பி ஓட்டம் :D

ஸ்டாலினுக்கு திராவிடக் கொள்கைகள் பற்றி பெரிய அறிவு எல்லாம் இருப்பதாக தெரியவில்லை. கருணாநிதி ஒழுங்காக வளர்க்கவில்லை. ஸ்டாலினை விட அழகிரியிடம் இவைகள் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவாலயத்தில் உள்ள நூலகத்தில் அண்ணா, பெரியாரின் புத்தகங்களை விட கலைஞரின் புத்தகங்கள்தான் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் பிரச்சனைப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. (இவற்றை அதற்கேற்ற நேரங்களில் பின்பு கட்டுரையாக எழுதுகிறேன். இப்போ நாம் டெசோ கட்சி)

நான் அழகிரி அடுத்த தலைவராக வருவதையே விரும்பினேன். ஆனால் அது நடக்காது போல் இருக்கிறது. ஆனால் தற்பொழுது ஸ்டாலினும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார். இப்பொழுதுதான் சுபவீரபாண்டியன் போன்றவர்களிடம் ஈழப் பிரச்சனை பற்றி படித்துக் கொண்டிருக்கிறார்.

காலப் போக்கில் சரியாகி விடலாம். பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சமாளிப்பு

நாளைக்கு ஸ்டான்லினும் முதல்வர் ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை போன்ற கதை வசனங்கள் வரும்...

தி மு கா விற்கு இப்பொழுது காங்கிரசை விட்டு வெளியே வரவேண்டும் அதற்க்கு அது எடுத்திருக்கும் ஆயுதமே டெசோ....

அது சரி சபேசன் அண்ணா தமிழ் ஈழத்தை பற்றி ஆய்வு கட்டுரை எழுதி முடிஞ்சு இப்ப தமிழகம் பக்கம் போயாச்சா?

ஹ்ம்ம் எழுதின கை சும்மா இருக்குதில்ல :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

karunanithiiiiiiii.jpg

 

எங்கேப் போகிறோம், மாணவர்களே?

 

கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி. நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை.


[1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் ஓர் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள் ஓரிரு மாதங்களில் வெளியேப் போய்விடுவார்கள் என்பதால் அவர்களைத் தவிர்க்கலாம். பெண்கள், சிறுபான்மையினர், தலித் போன்ற அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி, பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைவர், செயலாளர் எனும் அடுக்கதிகார முறை (hierarchy) வேண்டாம். பொது நிர்வாகம், மேடை நிர்வாகம், நிதி நிர்வாகம், தகவல் தொடர்பு, வெளியுறவு, சுகாதார வசதி என ஒவ்வொரு ஒருங்கிணைப்பாளருக்கும் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அனைவருமாகக் கூடி ஒருமித்த முடிவுகளை (consensual decision-making) எடுங்கள்.

 

[2] இந்த ஒருங்கிணைப்புக் குழு அவ்வப்போது கூடி இடம், பொருள், ஏவல் அறிந்து போராட்ட முடிவுகளை எடுக்கட்டும், தொடரட்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், அரசியல், சமூகப் பிரமுகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆதரவு தரட்டும்; பேசவிடலாம், கருத்துக்களைக் கேட்கலாம். ஆனால் அவர்களை முடிவெடுக்க விடவேண்டாம். போராட்டம் நடக்கிற இடம் உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். பாதுகாப்பு உணர்வு, ஏற்பாடுகள் மிக முக்கியம். சமூக விரோதிகள் விஷமங்கள் செய்யாமலிருக்க, புழுப் பூச்சிகள் அண்டாமலிருக்க, காவல்துறையினரோடு மோதல் வராமலிருக்க முன்னேற்பாடுகள் அவசியம்.


[3] உடனடியாக உங்கள் மாவட்டத்திலுள்ள ஊர்களில் நடக்கும் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டங்களை ஓர் ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி அல்லது முகநூல் வழியாகவோ, அல்லது நேரில் சந்தித்தோ தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம். அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இன்னொரு ஒருங்கிணைப்பாளர் பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

 

[4] மாணவர்கள் பலம் மிக்கவர்கள். ஆனால் நம்மைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு வேண்டாம். நாமெல்லாம் சே குவாராக்களும் அல்ல, இங்கே நடப்பது கியூபா புரட்சியுமல்ல. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரிடும்போது, முன்னதாகவே கூடிப்பேசி முடிவெடுத்துவிட்டு, கருத்துப் பரிமாற்றக் கலையில் தேர்ச்சி பெற்ற வெளியுறவு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பேசலாம். அரசு அதிகாரிகளிடம், காவல் துறை அதிகாரிகளிடம் மரியாதையாக ஆனால் உறுதியாகப் பேசுவதும், நமது இலக்கு இவையெனக் குறிப்பிட்டுச் சொல்வதும், அதற்காக நமக்கு உதவக் கேட்டுக்கொள்வதும் நல்ல அணுகுமுறையாக இருக்கும். அதிகாரிகள் நம்மைப் பார்த்து பயப்படும்படியான, வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம்.


[5] அதுபோல ஊடகங்களை பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது. அவர்கள் கேட்கும் கேள்விகள் நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும், எரிச்சல் தந்தாலும், அவர்களை இணைத்துக் கொண்டு நடப்பதுதான் நல்லது. ஊடகங்களோடு ஒருவரே பேசுவது சிறப்பு; வீண் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

 

[6] நமது கோரிக்கைகள் என்னென்ன, நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்க் கடலின் அந்தப்பக்கம் இருக்கும் நம் சொந்தங்கள் தங்கள் தாயகமாம் தமிழீழம் அமைத்துக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தப்படும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்குப் பதிலாக இந்தியா மாற்றியமைக்கப்பட்டத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பல் மீது சுதந்திரமான (ஆசிய நாடுகள் தவிர்த்த) சர்வதேச நீதி விசாரணை வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பெரும்பாலும் அனைத்து மாணவர் குழுக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்க்கடலின் இந்தப் பக்கம் உள்ள தமிழர் நிலையைப் பொறுத்தவரை, தமிழக மீனவர் பாதுகாப்பு பிரச்சினை அனைத்து மாணவர்களாலும் ஏற்கப்படுகிறது.


[7] மத்திய, மாநில அரசுகள் போராட்டங்களையும் விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் விரும்புவதில்லை. கையாலாகாத மக்கள் விரோத மன்மோகன் சிங் அரசு மேற்காணும் எந்த கோரிக்கையையும் ஏற்காது. முடிந்தால் ராஜபக்சே குடும்பத்துக்கு இன்னும் அதிகமாக உதவிகள் செய்யும், தமிழர்களை முறியடிக்கும். தேசிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. முதலைக் கண்ணீர் வடிக்கும். மார்க்சிஸ்ட் தோழர்கள் ஒன்றுபட்ட இலங்கை என்று பிதற்றிக் கொண்டிருப்பர். இவர்கள் யாரையும் நம்ப முடியாது, நம்பக்கூடாது.

 

தி.மு.க.—அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வேண்டும், தில்லியிலே அதிகாரம் வேண்டும், அமைச்சர் பதவி வேண்டும், ஏராளமானப் பணம் வேண்டும்.

 

தி.மு.க.வைப் பொறுத்தவரை நாமெல்லாம் முட்டாள்கள், நம்மை இன்னும் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று பகற்கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் முற்றிலுமாக முறியடிக்கப்படவேண்டும்.


மதிற்மேல் பூனையாய் உட்கார்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அரசு சும்மா இருப்பதாக நினைக்கக் கூடாது. பாராளுமன்றத் தேர்தல், அனைத்து தரப்பினரின் வாக்கு, 40 தொகுதிகளில் வெற்றி,– எனும் கணக்குத்தான் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதே தவிர அங்கே ஈழத்தமிழர் பாசமோ, இங்குள்ள தமிழர்மீது அன்போ எதுவும் கிடையாது. பெரிய அடக்குமுறை நேரடியாக வராது; ஆனால் காலுக்குக் கீழே கட்டையை உருவும் வேலை கச்சிதமாக நடக்கும். மாணவர்களுக்கு. சற்றே கால அவகாசம் கிடைக்கலாம். அதை எப்படி அறிவுக்கூர்மையுடன் பயன்படுத்துவது என்று சிந்திப்பது நல்லது.

 

[8] போராட்டம் நடக்கட்டும். தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம் வேண்டும். நமது கையில் இருக்கும் ஒரே மிகப் பெரிய ஆயுதம் பாராளுமன்றத் தேர்தல்தான். அதை எப்படி பயன்படுத்துவது என்று சிந்திப்பது மிக முக்கியமானது. இதற்காக எதிர்வரும் ஏப்ரல் 7-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, காலை 9 மணிக்கு இடிந்தகரையில் ஒரு மாபெரும் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறோம். இது ஒரு புதுக்கட்சி தொடங்கும் முயற்சியோ அல்லது கூட்டணி அமைக்கும் திட்டமோ அல்லது யாரை ஏமாற்றி நாம் எம்.பி. ஆகலாம் எனும் கபட நாடகமோ அல்ல.


நம்மைப் போல தமிழின விடிவு பற்றி, தமிழரின் வருங்காலம் பற்றி சிந்திக்கும் நண்பர்களோடு வாருங்கள். தமிழகமெங்கும் உள்ள ‘மக்கள் அரசியல்’ நடத்தும் சிறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், சேவை நிறுவனங்கள், மக்கள் மன்றங்கள், நண்பர் குழுக்கள் என யாராக இருந்தாலும் வரலாம். 144 தடை உத்தரவு நம்மைக் கட்டுப்படுத்துவது இல்லை. வரும்போது ஒரு மின்னஞ்சல் (koodankulam@yahoo.com) அல்லது ஒரு குறுஞ்செய்தி (9865683735) அனுப்புங்கள்;

நாங்கள் வழி சொல்கிறோம். எளிய உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம். பயணச் செலவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வாருங்கள். வருவதற்கு முன்னால் உங்கள் கருத்துக்களை அறியத்தந்தால் (koodankulam@yahoo.com) நமது நேரத்தை கச்சிதமாக உபயோகிக்கலாம். சேர்ந்து உட்கார்ந்து சிந்திப்போம், பேசுவோம், செயல் திட்டம் வகுப்போம். இடிந்தகரை விடிந்தகரை ஆகும்! வீழ்ந்து கிடக்கும் தமிழினம் வீரியத்தோடு எழுந்து நிற்கும்!

 

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

இடிந்தகரை
மார்ச் 14, 2013

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு சாதிச்சாயம் பூச முயல்கிறார் கழகத்தின் கண்மணி.. :D

தீரன் சின்னமலை, வேலுநாச்சியார் என்று பலரின் சிலைகளுக்கும்தான் மாலை அணிவிக்கிறார் சீமான்.. அது அவர்கள் சார்ந்த சாதிக்காக அல்ல.. அவர்களின் தியாகங்களைப் போற்றுவதற்காக.. தனது திராவிட அரசியலை அவர் ஏற்கவில்லை என்கிற காரணத்தால் சீமானை எதிர்க்கிறார் சபேசன்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் ஆதரவு நல்கினார். ஆனால் அது போன மாசம். இல்லை போன வருசம். இல்லை போன வருசத்திற்கு போன வருசம். அதற்கு பிறகு ஜெயலலிதா கூப்பிட்டு இரண்டு அடி போட்டவுடன் அடங்கி விட்டார். இப்பொழுதும் அணுமின் நிலையத்திற்கு எதிராக உறுதியான குரலை கொடுக்கின்ற அரசியல் தலைவர் என்றால் அது வைகோ மட்டும்தான்.

அணுமின் நிலையம் வராத காரணத்தினால்தான் மின்வெட்டு நடைபெறுகிறது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இத்தோடு மற்றைய ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அடங்கி விட்டார்கள்.

இது மிகவும் பிழையான கருத்து . சீமான் உதயகுமாரை பற்றியும் அணு உல்லைக்கு எதிர்ப்பாகவும் பல இடங்களில் பேசியதை you tube கேட்டிகிறேன். thedi paarkavum.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.