Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

மாணவமணிகளின்..கவனத்திற்கு...


1. உணர்ச்சி வசப்படகூடியவர்களை முன்னணியில் நிறுத்த வேண்டாம்.
2. அனைத்து கல்லூரி மாணவரையும்
அரவணைத்து செல்லவும்.
3. வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம்.
4. நமது எண்ணத்தை ஏற்று கொள்ளும்படி யாரையும் நிர்பந்திக்க வேண்டா
ம்.

5. பெற்றோரின் வற்புறத்தலால் விலக நேரும் தோழர்களை வருத்த வேண்டாம்.
6 சில காலம் செல்ல வேண்டிய போராட்டம். இறுதி வருட மாணவர்களுக்கு "சுழற்சி" முறையில் பங்கு பெற செய்யுங்கள்.
7. யார் தலைமை என எக்காலமும் போட்டி வர கூடாது.
8. மத, சாதீய உணர்வினால் பிரிக்க எண்ணுவார்கள் கவனம்.
9. உடல் நிலை பேணல் மிக அவசியம்

10. வரலாற்றை பகிருங்கள்
11. "ஐரோம் சர்மிளா" "உதயகுமார் ஐயா" ஆகியோரின் கள வாழ்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
12. வன்முறை எண்ணம்..எள் முனையளவு கூட உள் நுழைய கூடாது.
13. மாணவர்களின்றி உங்களுடன் கலந்திருப்போரை கண்காணிப்பதும் மிக அவசியம். அவர்களின் எண்ணம் நாம் அறிய இயலாது
14. இதனை தங்களுக்குள் குழ பிரித்து கண்காணிப்பு, தகவல் தொடர்பு என பணிகளை சரியாக செயல் படுத்துங்கள்
15. தலைமைதுவம்..விட்டு கொடுத்தலில் தொடங்குகிறது.

வெல்லும் உங்கள் படை..
உங்களின் பின்னால்..இந்த தமிழ் உலகு!

 

- முகநூல் -

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

amaraj college of Engg and Technology (KCET) Virudhunagar. protes
Updated 12 minutes ago
amaraj college of Engg and Technology (KCET) Virudhunagar. protest against sri lanka.
 
562901_595381340473895_1686880100_n.jpg734272_595381367140559_1046730942_n.jpg544503_595381353807227_720822710_n.jpg
 

253669_595381393807223_740426650_n.jpg

625558_595381407140555_77633847_n.jpg316867_595381417140554_1010735233_n.jpg

- முகநூல் -

தமிழீழ விடுதலைக்கான அனைத்து கல்லூரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இப்படி ஒரு எழுச்சி மிகுந்த போராட்டத்தை இப்போது இருக்கின்ற திருச்சி மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

திருச்சி புறநகரான பொன்மலை பகுதியில் புறப்பட்ட பேரணியானது ஒரு ராணுவ ஒழுங்குடன் மிகவும் கட்டுக்கோப்புடன் முன்னேறி சென்றது.

முற்றுகையிடப்பட்ட இடங்கள்:

1) திருச்சி தலைமை தபால் நிலையம்.

2) பாரத ஸ்டேட் வங்கி.

3) திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம்.

௪) சிறீலங்கா விமான நிலைய அலுவலகம்.

5) வருமான வரித்துறை அலுவலகம்.

6) சுங்க இலாகா அலுவலகம்.

7) அகில இந்திய வானொலி நிலையம்.

௮) கடவுச் சீட்டு அலுவலகம்.

ஒரே நாளில் இத்தனை அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டது திருச்சி மாநகரையே வியப்படையவைத்தது.

ஒரு கட்டத்தில் மாணவர்கள் மன்மோகன் சிங்,சோனியா காந்தி,ராஜபக்சே,சிதம்பரம்,ஆகியோரின் படங்களை பாடையில் வைத்து கட்டி அலுவலகங்கள் முன்பு போட்டு எரித்தனர்.மேலும் காங்கிரஸ் கொடி,இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை கிளித்தெடுத்துவிட்டு மீத படத்தை போட்டு எரித்தனர்.

ஒட்டுமொத்தத்தில் மாணவர்களின் எழுச்சியும் புரட்சியும் இன்னும் வேகமாக வீரியமடைகிறது.

 

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் அதி உச்சநிலையை அடைந்தது - மதுரையில் மாணவர்கள், பொலிசாருக்கிடையில் மோதல்!   

[Monday, 2013-03-18 18:02:00]
 
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பொலிஸார் மோதியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து தெரியவருவதாவது: மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், இஸ்ரவேல், முத்துசங்கு, ஹபீப் ரஹ்மான், கணேஷ்பிரபு, மலைச்சாமி, அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 3வது நாளில் மலைச்சாமி, ஹபீப்ரஹ்மான், இஸ்ரவேல் ஆகியோரின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டதால், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு டாக்டர்கள் வற்புறுத்தியும் கேட்காத நிலையில், அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் நல்ல உடல்நலம் தேவை என்று மற்ற மாணவர்கள் சொன்ன பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர்.
  
இருந்த போதிலும் மற்ற 3 மாணவர்களும் 6வது நாள் வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அவர்களது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவர்களைச் சந்தித்த மதுரை வக்கீல் சங்க செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், "உங்கள் போராட்டத்தை மனப்பூர்வமாக நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இதற்கு மேல் நீங்கள் உண்ணாவிரதம் இருப்பது நல்லதல்ல. இப்போது போராட்டத்தைக் கைவிடுங்கள். இலங்கை பிரச்னையில் பின்னடைவு ஏற்பட்டால், நாங்களும் சேர்ந்து உங்களோடு போராடத் தயாராக இருக்கிறோம்" என்று சமரசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதேபோல பிற கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஞாயிறன்று தமிழ் மாணவர் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, தல்லாகுளம், தமுக்கம், காந்தி மியூசியம் வழியாக கலெக்டர் அலுலவகத்தை அடைந்ததும் அங்கே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
 
அப்போது சென்னையில் இருந்தபடி போராட்டத்தை வாழ்த்தி பழ.நெடுமாறன் செல்போனில் பேசினார். அவரது பேச்சு ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது. "இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று நாமெல்லாம் சொன்னபோது, அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இப்போதும் இந்திய அரசு மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது. மாணவர்களாகிய உங்கள் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஈழத்தமிழர் இன்னல்கள் தீர உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும்" என்று பழ.நெடுமாறன் பேசினார். இதற்கிடையே நேற்றிரவு அனைத்து கல்லூரி மாணவர்களும் கூடி, தமிழ் ஈழ மாணவர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பின் சார்பில் இன்று காலையில் மதுரைக் கலலூரியில் இருந்து ரயில் நிலையத்தை நோக்கி பேரணி நடந்தது.
 
திடீரென அந்த மாணவர்கள் கட்டபொம்பன் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால், போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது மதுரைக் கல்லூரி மாணவர்கள் சிலர், சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். உடனே அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்ற மாணவர்களை பாண்டி பஜார் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸார் சமரசப்படுத்தினர். இதற்கிடையே தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் ரயில் மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரயில் நிலையம் முன்பு சட்டையைக் கழற்றிவிட்டு அரைநிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். வரும் 21ஆம் தேதியன்று தமிழ் ஈழ விடுதலை மாணவர் இயக்கம் சார்பில் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஆதி தெரிவித்தார்.
 
madurai_attack-180313-seithy-1.jpg
 
madurai_attack-180313-seithy-3.jpg
 
madurai_attack-180313-seithy-4.jpg
 
madurai_attack-180313-seithy-5.jpg

பி.கு: தீக்குளித்து தற்கொலை செய்தது ‘நாம் தமிழர்’ கட்சியைச்சேர்ந்த மாணவர் என்று ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லிமாக இருக்கலாம் என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார். :unsure: 

 

தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

இடிந்தகரை இல்...
ஈழத் தமிழர் மாணவர் போராட்டத்திற்க்கு ஆதரவாக பெண்கள் பங்கேற்ற முதல் நாள் போராட்டம் !

 

164207_392359397528469_223009682_n.jpg

 

- முகநூல் -

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களே...உங்கள் உணர்வு....மதிக்கத்தக்கது....தயவுசெய்து உயிர்பலி வேண்டாம்...போராடுவோம் ..தொடர்ந்து போர்ரடுவோம்......

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஆரம்பித்த‌ மாண‌வர்களின் போராட்டம்.... எட்டு நாளில், தமிழகம் முழுவதும் பரவி... கர்நாடகம், ஆந்திரா வரை சென்று.... மெதுவாக ஐரோப்பிய நகரங்களையும்... தொற்றியுள்ளதைப் பார்க்க... எமக்கு நல்ல தீர்வு கிடைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக, உள் மனம் கூறுகின்றது. மாணவர்களின் சக்தி, மாபெரும் சக்தி என்று... சும்மாவா சொன்னார்கள்.

ஈழவிடுதலைக்காக புதுக்கோட்டையில் கொளுத்தப்பட்ட சோனியா உருவபொம்மை.. !

 

311771_4608548651420_308875192_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

164207_392359397528469_223009682_n.jpg

 

 

சபாஷ். :)

 

இந்தப்படை  போதுமா???

நன்றி  தாய்மாரே

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக கிடைத்த இன்னொரு படம்.

 

 

479992_443065975761756_1608437396_n.jpg

 

- முகநூல் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூறு மாணவர்களுக்கு மேல் இன்று காலை முதல் காலவரையற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ,எந்த அடிப்படை வசதிகளும் ,மேற்கூரைகளும் இல்லாமல் வீதியில் உறங்கி வருகிறார்கள்

பொது மக்கள் சமூக நல ஆர்வலர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க காவல்துறை தடுக்கிறது
531505_595403003805062_437876070_n.jpg
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- முகநூல் -

 

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் போராட்ட காட்சி

 

479991_595272640484765_871043991_n.jpg



- முகநூல் -

துளசி உங்களுடைய இந்த சேவைக்கும்,,மிகுந்த அர்பணிப்புடன் செயல் படும் செயற் பாட்டிற்க்கும் எமது மணமார்ந்த நண்றியும் வாழ்துகளும்..  

Edited by thanga

சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம்


ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க


முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை,


தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு


இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின்


அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன். உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள்


கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’


என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து


வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி


மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து


பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என


அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது....


பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும்


முழக்கத்துடன் ஏற்கப் பட்டது.


இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில்


அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I


am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன்


என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது.


இனி ’செத்தான் எதிரி’.

 

 

முகநூலில்  ........................  திருமுருகன் காந்தி

 

துளசி உங்களுடைய இந்த சேவைக்கும்,,மிகுந்த அர்பணிப்புடன் செயல் படும் செயற் பாட்டிற்க்கும் எமது மணமார்ந்த நண்றியும் வாழ்துகளும்..  

 

பலர் இதில் பங்களிப்பு செய்கிறார்கள். நாம் முகநூலில் வருவதை இங்கு இணைக்கிறோம். அவ்வளவு தான். எனவே எமக்கு நன்றி சொல்லாதீர்கள். தமிழகத்தில் போராடுபவர்களுக்கு தான் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். :rolleyes:

பி.கு: நேற்று உங்கள் பெயரை பார்த்து பெண் என்று நினைத்து அக்கா என்று அழைத்து விட்டேன். இப்பொழுது தான் male என்று இருப்பதை கவனித்தேன்.  :o  மன்னிக்கவும். :rolleyes:

நேற்றைய மே 17 இயக்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வைகோ அவர்களை இந்த படத்தில் காணலாம்.

 

66631_450276531709291_649409221_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா எங்கும் மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக உணர்வெழுச்சியுடன் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு, மற்றும் அதன் உளவுத்துறை என்பன மூக்கின் மேல் விரலை வைத்து மிரண்டு போய் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர
்.

காவல்துறை மாணவர்களை தாக்குவதாக செய்திகள் வெளிவருகின்றது. எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அடித்து விடாதீர்கள். இது உங்கள் உண்ணா நோன்பை சீர்குலைக்க நடக்கும் ஒரு சூழச்சி… கவனமாக இருங்கள்…

BBC, Channel 4, IBC, IBC Asia இன்னும் பல மீடியாக்கள் இப்பபோது தான் உங்கள் பக்கம் திசை திரும்பி உள்ளது…

இந்திய உளவுதுறை இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்க ஆலோசனை மற்றும் வியூகம் வகுத்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தியும் லண்டனில் கசிந்துள்ளது…

கவனம் மாணவர்களே… தமிழ் நாட்டில் நடக்கும் மாணவ போராட்டங்களை அண்டைய மாநிலங்களுக்கும் பரப்புங்கள், மாணவர்கள் மேல் கை வைத்தால் எந்த மாநில மாணவனும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டான்….

காவல்துறை மாணவர்களை அடித்த செய்தி அறிந்த மலேசிய மாணவர்கள் கொந்தளித்துள்ளனர்…

இந்த மாணவ போராட்டம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது…

பிள்ளையார் சுழி போட்ட லயோலா கல்லுரி மாணவர்களுக்கு நன்றி…… மாணவர் சக்க்தியே மாபெரும் சக்தி.

 

fb

தமிழக மாணவர் போராட்டதிற்கு ஆதரவாக லண்டனிலும் 3 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

 

531547_10200950106897922_1694368377_n.jp

 

- முகநூல் -

சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்

 

208171_448166218594806_1868545610_n.jpg

 

- முகநூல் -

ஆறு நாள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு இன்று கரூரில் ஆரசு கலை கல்லுரி மாணவர்கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்கள் .

1. T .சக்திவேல்
2. D .சதீஷ் குமார்
3. P .ஸ்ரீனிவாசன்
4. T .யோகேஸ்வரன்
5. A .மணிகண்டன்
6. M .பிரபாகரன்
7. R .பாலமுருகன்
8. C . கார்த்திக்

தொடர்பு எண் : 089406-00568.

- தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. ( கரூர் மாவட்டம் ).

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

72723_272899726178109_1233730536_n.jpg



- முகநூல் -

 

இன்று துணைவேந்தர் ஏற்று கொண்டார் நாளை உலகமே..


புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் பட்டினி போராட்டம் 5ம் நாளான இன்று துணை வேந்தரின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது.


இந்தியாவில் முதன் முறையாக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதுவை மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் மாணவர்களின் ஏழு அம்ச கோரிக்கையை துணைவேந்தரே ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்ப சம்மதித்ததுடன், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனவும் பிரகடன படுத்தினார். மேலும் அதன் நகல்களை இந்திய பிரதமருக்கும் , உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கும் அனுப்ப தானே தயாராக உள்ளதாக அறிவித்தார்.


நாளை வகுப்பு புறகணிப்பு போராட்டமும் , புதுவை பிரஞ்சு துதரக முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் .

அனைவரும் திரள்வோம் ! தமிழ் ஈழம் வெல்வோம் !!

(முகநூல்)

இன்று துணைவேந்தர் ஏற்று கொண்டார் நாளை உலகமே..

புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் பட்டினி போராட்டம் 5ம் நாளான இன்று துணை வேந்தரின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் முதன் முறையாக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதுவை மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் மாணவர்களின் ஏழு அம்ச கோரிக்கையை துணைவேந்தரே ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்ப சம்மதித்ததுடன், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனவும் பிரகடன படுத்தினார். மேலும் அதன் நகல்களை இந்திய பிரதமருக்கும் , உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கும் அனுப்ப தானே தயாராக உள்ளதாக அறிவித்தார்.

நாளை வகுப்பு புறகணிப்பு போராட்டமும் , புதுவை பிரஞ்சு துதரக முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் .

அனைவரும் திரள்வோம் ! தமிழ் ஈழம் வெல்வோம் !!

(முகநூல்)

 

மிக நல்ல செய்தி.

இந்திய அரசு, ஐ.நா. வரை தொடரவேண்டும். நீதி கிடைக்கவேண்டும். சுயநிர்ணய உரிமை கிடைக்கவேண்டும்.

சசூரி பொறியியல் மாணவர்களின் போராட்ட துளிகள்

 

  • காலை மணி 7.30 மாணவர்கள் 5 பேர் கல்லூரி வாசலில் கூடினோம்
  • 8.00 மணி எங்களோடு இணைந்தனர் இன்னும் 2 மாணவர்கள்
  • 8.30 மணி 18 மாணவர்கள் ஆனோம்
  • 8.35 மணி முதல் கல்லூரி பேருந்து வழி மறைக்கப்பட்டு மற்ற மாணவர் மாணவர்கள் ஆதரவு கோரப்பட்டது
  • 9.00 மணி 9 கல்லூரி பேருந்துகள் மறிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அனைவரும் இறக்கப்பட்டனர்
  • 9.30மணி கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து (கோவை-சக்தி)தேசிய நெடுஞ்சாலை நோக்கி புறப்பட்டோம்
  • 9.50 மணி தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. அப்போது மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
  • 10.30 மணி போராட்டத்தை முன்னெடுத்தால் என் மீது வழக்கு பதிவு செய்வதாக போலீசாரால் மிரட்டப்படுகிறேன்.
  • 11.00 மணி வரை தொடர்ந்தது சாலை மறியல்.
  • 11.15 அன்னூரை நோக்கி பேரணி புறப்பட்டோம் (சுமார் 10 கீலோமீட்டர் மத்திய மற்றும் காங்கிரஸ் எதிரான முழக்கங்கள் மற்றும் தனிஈழ முழக்கத்துடன். மேலும் முழக்கங்கள் மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு பேசும் மாணவர்களால் அவர்களின் மொழியில் ஒலித்தது.)
  • 1.00 மணி அன்னூரில் மத்திய அரசின் அலுவலகமான தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது, மேலும் ராஜபக்சே உருவப்படம் கொழுத்தப்பட்டது, மாணவர்கள் தபால் அலுவலகம் நுழைய முயன்ற போது போலீசாரால் தடுக்கப்பட்டனர்
  • 1.20 மணி அளவில் B.S.N.L அலுவலகம் முற்றுகையிடப்பட்டு பூட்டு போடப்பட்டது.

எழுச்சியோடு காணப்பட்ட இப்போராட்டத்தில் மாணவர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் 2000 த்திற்கும் மேற்பட்டோர் காணப்பட்டனர்.

போராட்டத்தின் அடுத்தகட்டத்தில் இருக்கிறோம்.

நாளை கோவையில் நடக்கும் அனைத்து கல்லூரி பேரணிக்கு மற்ற கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைப்பதால் முகநூலில் முழுதாய் இயங்க முடியவில்லை. எனவே நாளை புகைப்படங்களை பதிவிடுகிறேன்.

வெல்க மாணவர் போராட்டம்.
விரைவில் பெறுவோம் தனி தமிழ் ஈழம்.

 

72704_389032861194905_1828569573_n.jpg

 

 

 

Shoban Kalish

(முகநூல்)

உலகம் முழுவதும் மாணவர்கள் போர்க்கோலம்..

 



Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.