Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்

சகாறா அக்கா, அடுத்தவர்கள் கதையை கேட்டு இயங்க வெளிக்கிட்டால் உங்கள் சுயத்தை ஒரு நாள் இழந்து விடுவீர்கள். எனவே உங்கள் மனதில் பிரதேச வாதம் இல்லாத போது உங்கள் பெயரை மாற்ற வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

வல்வை சகாறா என்ற பெயரில் பிரதேச வாதம் இல்லை. நான் வல்வையில் பிறந்தேன். நீங்கள் அங்கு பிறந்தீர்கள் என்று யாருடனும் சண்டை பிடித்தால் தான் அது பிரதேச வாதம். எழுத்தாற்றல் உள்ளவர், புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

  • Replies 988
  • Views 171.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சகாறா அக்கா மேக்கப் போடாமல் எழுதினால் "தம்பி".. மேக்கப் போட்டுக்கொண்டு எழுதினால் "அண்ணா".

  • கரும்பு
    கரும்பு

    'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது. டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்)

  • பகலவன்
    பகலவன்

    நிர்வாகத்தின் கவனத்திற்கு, நீண்ட நாட்களுக்கு பதிவிடாமல் இருக்கும் பயனாளர்களின் பெயர்களை காலாவதி ஆக்கினால், புது பயனாளர்கள் அந்த பெயரை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். இது பெயரை பதிந்து வி

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாக மற்றவர்களுக்காக வாழத்தொடங்குகின்றீர்கள்.

தப்பு.............. :( :( :(

தவறு விசுகண்ணா

நாம் அறிவு தெரிந்த காலம் முதலாக எங்களுக்காக வாழத்தலைப்பட்டதைவிட மற்றவர்களுக்காகத்தான் அதிகம் வாழ்ந்திருக்கிறோம் புதிதாக எதுவும் ஏற்பட்டுவிடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஈழத்து சகாராக்கள் இருக்கலாம்

ஆனால் வல்வைக்கு ஒன்றுதான்......

அந்த மண்ணுக்கு தலை வணங்காதவன் எவனுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சகாறா என்று வைக்கலாமே?? :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அத்தோடு என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் என்னிடம் பிரதேச வாதம் எச்சமயத்திலும் துளிர்விட்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இளையராசாவின் திரியில் பாகன் என்பவர் என்னை ஒரு பிரதேச வாதியாக கருதி பதிவிட்டிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் அவருடைய அந்தப்பதிவும் முற்றாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது.

அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும். :rolleyes:

சகாறா அக்கா, அடுத்தவர்கள் கதையை கேட்டு இயங்க வெளிக்கிட்டால் உங்கள் சுயத்தை ஒரு நாள் இழந்து விடுவீர்கள். எனவே உங்கள் மனதில் பிரதேச வாதம் இல்லாத போது உங்கள் பெயரை மாற்ற வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

வல்வை சகாறா என்ற பெயரில் பிரதேச வாதம் இல்லை. நான் வல்வையில் பிறந்தேன். நீங்கள் அங்கு பிறந்தீர்கள் என்று யாருடனும் சண்டை பிடித்தால் தான் அது பிரதேச வாதம். எழுத்தாற்றல் உள்ளவர், புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

துளசிக்கும் விசுகு அண்ணாவுக்கு எழுதிய பதில்தான்

அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும்.

பாகன் மற்றும் உங்களுக்கிடையிலான கருத்தாடலைவைத்து எனது பொதுவான கருத்தை எழுதியிருந்தேன். பிரதேசவாதம் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேசம் என்ற பொதுத்தன்மையை சிதைக்கின்றது என்பது உண்மை. அதனடிப்படையில் எனது கருத்து உள்ளது. மற்றபடி ஒருவருடைய பெயர் அவரது தனிப்பட்ட உரிமை மேலும் உங்கள் எழுத்துக்களை அறிந்தவரையில் உங்கள் மீது பிரதேசவாத முத்திரை குத்த முடியாது ஆனால் இந்த பெயரில் இருக்கும் ஊர் உங்கள் எழுத்துக்களுக்கே பிரதேசவாத முத்திரை குத்தி தேசத்தில் இருந்து பிரித்து ஊருக்குள் முடக்கிவிடும் என்ற கவலை இருக்கின்றது.

சுகன் என்னாலும் அதனை உணர முடிந்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன். :rolleyes:

அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்

ஏற்கனவே திண்ணையில் குறிப்பிட்டிருந்தேன் ./........முடியல .........என் உடன்பிறந்த அக்காவும் இப்படித்தான் ..........முடிவு பிழை என்பது மட்டும் திண்ணம் ..........உங்க்பாளைப்ப்றி என்ன என்ன எல்லாம் நினைத்திருந்தேன் ..என் அக்காவை நினைத்தபோது ........அதுதான் என்று முடிவை மாற்றி விட்டேன் .............

கிருபன் அண்ணையும்,சுகன் அண்ணையும் ,உங்களை குழப்பியுள்ளார்கள் ..............இது தான் ஏற்கனவே நான் குறிப்பிட்ட விடயம் ...............எம் குழப்பங்களை நாம் புற்றிந்து கொள்ளும் வரை குழப்புபவர்ளுக்கு வெள்ளிதிசை .....................நன்றி அக்கா[நிர்வாகமும் இதை புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன்........]

  • கருத்துக்கள உறவுகள்

கிளிஞ்சுது போ

அப்போ உங்கள் ஆத்தான கவிஞர் புதுவை.......................???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா?

குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா...

அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா..

எனது ஆத்தான கவிஞர் தனது பெயரின் முன் புதுவை என்று வைத்திருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் காண்கிறீர்கள். அவர் பிரதேசவாதத்தை மேற்கொண்டார் என்று எங்காவது யாராவது குற்றஞ்சாட்டினார்களா?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா?

என்ன சகோதரி நீங்கள்?

அவர் எழுதிய கருத்தை நீங்கள் வழி மொழிவது போல் நடந்து கொள்கின்றீர்கள்....??? :(

எப்படியோ

எப்படி நீங்கள் மாத்தினாலும் நான் வல்வை சகாரா என்று தான் என்றும் எழுதுவேன்.

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா...

அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா..

எனது ஆத்தான கவிஞர் தனது பெயரின் முன் புதுவை என்று வைத்திருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் காண்கிறீர்கள். அவர் பிரதேசவாதத்தை மேற்கொண்டார் என்று எங்காவது யாராவது குற்றஞ்சாட்டினார்களா?

நீங்கள் வல்வை என்று அழைப்பதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை அண்ணா மீதும் இதுபோன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் தன் நிலையில் எவருக்கும் இடம் கொடுக்ககாது இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன். அது சரி இந்த பாகன் என்பவர் யார்? எப்போது இங்கு எழுதத்தொடங்கினார்??

எனக்கு ஒன்றும் புரியல................

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய பாகனின் வரவு இங்கிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று திண்ணையில் பேசினார் இன்னும் என்னால் அவரை யார் என்று மட்டுக்கட்ட முடியவில்லை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103160

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன்

சரி பெயரை மாத்தியாச்சு

இனி அடுத்து என்ன கேட்பாரோ?? :(

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் என்மீதான எந்த அவப்பெயரையும் கிளப்ப முடியாது பொறுத்திருந்து பார்ப்போம்.

எனக்கும் தவிர்க்கவும் தெரியும்

தகர்க்கவும் தெரியும்.

எதிராளியின் எழுத்தின் திறன்பொருத்தே எனது கருத்தும் அமையும் விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

தகர்க்கவும் தெரியும்.

அது தெரிந்ததால் தான் இவ்வளவும் எழுதினேன்.

நன்றி சகோதரி வல்வை சகாரா :icon_idea:

'ஈழத்து' என்பது 'சகாறா' என்பதுடன் ஒட்டவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றை ஒன்று முழுசிப்பார்ப்பதுபோல் எனக்குத்தெரிகின்றது.

டங்குவார் கூறியதுபோல் (அல்லது சற்று மரியாதையுடன்... இசைக்கலைஞன் கூறியதுபோல்) அடைமொழிகளை நீக்கிவிட்டு தனியாக சகாறா என்று மாற்றினால் இளமை பொங்கி வழியும், சும்மா அந்தமாதிரி யாழில் யெளவனத்துடன் வலம் வரலாம். கிழவியிலிருந்து குமரியாகிய பேறும் கிடைக்கும்.

மேலும்,

'ஈழத்து சகாறா' என்று கூறும்போது உயிர்காத்து வாழ்வு தரும் கனடா நாட்டை புறக்கணிப்பதாகவும் பார்க்கலாம். தவிர, ஈழம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சிங்களமொழிச்சொல் என்றும் இங்கு யாழிலேயே எங்கோ வாசித்ததாக ஞாபகம். ஒரு சிங்களத்தியாக உங்களை மாற்றவேண்டும் என்று யாரோ திட்டம் தீட்டியுள்ளார்கள் போல் உள்ளது. இது சிறீ லங்கா புலனாய்வுத்துறையினதும் சிங்கள அரசினதும் சதியாகவும் இருக்கலாம். எனவே, பெயர் மாற்றம் செய்யமுன்னர் எச்சரிக்கை தேவை.

மற்றையது,

பெயர் பிரதேசவாதத்தை போதிக்கின்றது என்றால்.. யாழில் உள்ள ஏனைவர்கள் உதாரணமாக...

புங்கையூரான்

துன்னையூரான்

மல்லையூரான்

நுணாவிலான்

வல்வை லிங்கம்

இவர்கள் எல்லாம் தலையைக்கொண்டுபோய் எங்கே முட்டுவது?

எல்லாவற்றுக்கும் மேலாக 'யாழ்' எனும் சொல்லே பிரதேசவாதத்தை பறை சாற்றுகின்றது. இதற்கு என்ன செய்வது?

Edited by கரும்பு

சுய தணிக்கை செய்துவிட்டேன் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்

புரிந்துணர்வுடன் உறவுகளாகிய நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ..............நானும் மனிதன் என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியதை நீக்கியுள்ளேன் .மணிப்பஈர்கள்,புரிந்துகொள்வீர்கள்.......நன்றி :):icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்பதை ஏன் நாம் யாழ்ப்பாணமாக பார்க்கவேண்டும்..............??? :(

யாழ் என்னும் இசைக்கருவியாகத்தான் நான் பார்க்கின்றேன் :icon_idea:

விசுகு அண்ணா நீங்கள் பாகன் எழுதியதை வாசிக்கவில்லையா?

குறி பார்த்து என்னைத் தாக்குவதற்காகவே பாகன் என்னும் உறுப்பினர் களம் புகுந்துள்ளார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா...

அப்படிப்பட்டவர்கள் என்மீதான கருத்துக்களை எதிராக பரப்ப முற்படுவது உங்களுக்குப் புரியவில்லையா..

உங்கள் திரியில் அவர் கருத்துகளை வாசித்த பின் எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அது தான் இதை நான் நேற்று அவரிடமே கேட்டு விட்டேன். அவருக்கு உங்கள் மேல் அவ்வளவு அன்பு தானே அக்கா.... :D நேற்று ஏதோ க்ளு கொடுத்தார். நான் நினைத்தேன் அவர் யார் என்று கண்டு பிடித்து விட்டீர்கள் என்று. இன்னும் கண்டு பிடிக்கவில்லையா?

எனக்கும் வல்வை சகாறா என்ற பெயரே பிடித்திருக்கிறது. நானும் அப்படியே அழைப்பேன். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ வெட்கம் வெட்கம் நேற்று வந்த ஒருவருக்காக பேரை மாற்றுவது

ஊர் பற்று இருந்தா தான் நாட்டுப்பற்று இருக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ வெட்கம் வெட்கம் நேற்று வந்த ஒருவருக்காக பேரை மாற்றுவது

ஊர் பற்று இருந்தா தான் நாட்டுப்பற்று இருக்க முடியும்

அதுதுதுதுதுதுதுதுதுதுது

சுண்டடடடடடடடடடடடடடல் :icon_idea:

ஒரு எழுத்துப்பிழை இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள்

கோபம் வந்தால் எழுத்து சரியாக வருகிறது சுண்டலுக்கு.

பலமுறை கவனித்தேன்

பச்சை கடன் தாங்கப்பா

அதுதுதுதுதுதுதுதுதுதுது

சுண்டடடடடடடடடடடடடடல் :icon_idea:

ஒரு எழுத்துப்பிழை இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள்

கோபம் வந்தால் எழுத்து சரியாக வருகிறது சுண்டலுக்கு.

பலமுறை கவனித்தேன்

பச்சை கடன் தாங்கப்பா

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா என்பது தமிழ்ப் பெயர் அல்ல.. அதையும் கட்டாயம் மாற்ற வேண்டும்..! :rolleyes: களத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும்.. :icon_idea:

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.