Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சிங்களவர் பங்குபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடை பெறாது.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தி.மு.க., குடும்பத்துக்குச் சொந்தமான ஐதராபாத் ஐ.பி.எல்., அணி, இரண்டு இலங்கை வீரர்களை கொண்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இலங்கை தமிழர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகவைத்து விட்டதாக கூறி, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., வெளியேறியுள்ளது. இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தடை விதிக்க ஐ.பி.எல்., நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவசர அவசரமாக கூடிய ஐ.பி.எல்., நிர்வாக குழு, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இன்று சட்டசபையில் உரையாற்றிய முதல்வர், தி.மு.க., குடும்பத்திற்குச் சொந்தமான ஐ.பி.எல்., அணியில், இலங்கை வீரர்களை அனுமதித்து தி.மு.க., இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். தி.மு.க.,வின் இந்த செயல் சுயநலத்தின் உச்சகட்டம் எனவும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் ஐதராபாத் ஐ.பி.எல்., அணியை தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கினர். சங்ககரா மற்றும் பெரேரா என்ற இரண்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த அணியில் சங்ககரா கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த ஐ.பி.எல்., அணியில் இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த வடுகநாதன் என்ற ரசிகர் கூறுகையில், உண்மையிலேயே தி.மு.க.,வுக்கு இலங்கை தமிழர் விவகாரத்தில் அக்கறை இருக்குமானால், இரண்டு இலங்கை வீரர்களையும் அவர்கள் வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளரான நடிகை குஷ்பு, இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். எனினும் இது தொடர்பாக ஐதராபாத் அணியிலிருந்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக தி.மு.க.,வும் அவர்களை வலியுறுத்தியதாக தெரியவில்லை என்கின்றனர்.

மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=676411

Edited by நியானி

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply

IPL புனே அணியில் விளையாடும் இலங்கை ராணுவத்தை சார்ந்த அஜந்தா மெண்டிஸ் ராணுவ உடையுடன்.


#விளையாட்டும் அரசியலும் வேறு வேறு என்று எந்த சிந்தனையாளராவது (ஜி.ராமகிருஷ்ணரை போல்) யாராவது கூறினால் இந்த புகைபடங்களை காட்டுங்கள். உங்கள் சகோதிரிகளை சிதைத்தவர்களுடன் விளையாடுவீர்களா என்று...

 

58571_500080623385222_658858243_n.jpg

 

(முகநூல்)

"பிளே ஒவ்' சுற்று வேறிடத்தில்?

 

ஐ.பி.எல்."பிளே ஒவ்' சுற்று சென்னையிலிருந்து வேறிடத்துக்கு மாற்றப்படலாமென்று கூறப்படுகிறது. சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு அறிவித்துள்ளது. சென்னை சுப்ப கிங்ஸ் அணியில் குலசேகரா, அகில தனஞ்செயா ஆகிய 2 இலங்கை வீரர்கள் உள்ளனர். சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாட முடியாத இவர்கள் மற்ற நகரங்களில் சென்னை அணி மோதும் போட்டிகளில்  விளையாடுவார்களா என்பது தெரியவில்லை.

 

இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகம் என்ன முடிவெடுத்துள்ளது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. இந்த இரு வீரர்களையும் சென்னை சுப்ப கிங்ஸ் இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் நீக்கலாமென்று கூறப்படுகிறது.

 

இந்த இருவருக்கும் அதற்கான இழப்பீட்டை வழங்கலாமென்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 லீக்  ஆட்டம் மற்றும் இரண்டு பிளே ஒவ் சுற்று ஆக மொத்தம் 10 போட்டிகள் நடைபெறுகின்றன.

 

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்தது. ஆனால், சென்னையில் நடைபெறும் பிளே ஒவ் சுற்று ஆட்டங்கள் பற்றி எதுவும்தெரிவிக்கப்படவில்லை.

 

சென்னையில் நடைபெறும் பிளே ஒவ் சுற்று (மே 21 குவாலிபையர் 1, மே 22: எலிமினேட்டர்) ஆட்டங்கள் வேறிடத்துக்கு மாற்றப்படலாமென்று தெரிகிறது. தற்போதைய அணியில் பஞ்சாப் அணியில் மட்டுமே இலங்கை வீரர்கள் இல்லை.

 

ஒருவேளை சென்னை பஞ்சாப் அணிகள் பிளே ஒவ் சுற்றில் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால் மட்டுமே அந்த ஆட்டம் சென்னையில் நடைபெறும். அப்படி நடக்காத பட்சத்தில் இரண்டு பிளே ஒவ் ஆட்டங்களும் சென்னையிலிருந்து வேறிடத்துக்கு மாற்றப்படுவது  தவிர்க்க இயலாது.

 

பிளே ஒவ் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் தங்கள் அணிகளில் உள்ள இலங்கை வீரர்கள் இல்லாமல் விளையாட ஒப்புக்கொள்ளாது. இதனால் ஐ.பி.எல். அமைப்புக்கு நெருக்கடி ஏற்படும். இந்தக் கட்டாயத்தின் பேரில் பிளே ஒவ் சுற்று சென்னையிலிருந்து வேறிடத்துக்கு மாற்றப்படலாமென்று கூறப்படுகிறது.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3651:q---&catid=59:cricket&Itemid=390

Edited by akootha

72376_10200897379662547_90982018_n.jpg

 

(முகநூல்)

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 'அப்ரிடி யின் இந்த உணர்வும் தைரியமும், ராஜபக்ச அரசுக்கு வக்காலத்து வாங்கும் முரளிதரனிடம் ஒரு சதவீதம் கூட இல்லையே.... உங்கள் உணர்வுக்கு தலை வணங்குகிறோம்..அப்ரிடி....

 

523436_556637397709846_1639917257_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 'அப்ரிடி யின் இந்த உணர்வும் தைரியமும், ராஜபக்ச அரசுக்கு வக்காலத்து வாங்கும் முரளிதரனிடம் ஒரு சதவீதம் கூட இல்லையே.... உங்கள் உணர்வுக்கு தலை வணங்குகிறோம்..அப்ரிடி....

 

523436_556637397709846_1639917257_n.jpg

 

(முகநூல்)

 

அப்ரிடியி போராட்டம் செய்வது இன்னொரு நாட்டிற்கெதிராக தன்ட நாட்டுக்கு எதிராக அல்ல :)

அப்படி போடுங்க ரதி.

துளசியின் முக புத்தகத்தில் நீங்கள் எழுதிய இதே கருத்தை பதிய நினைத்துவிட்டு அவர் ஆசையை ஏன் கெடுப்பான் என்று விட்டுவிட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்க ரதி.

துளசியின் முக புத்தகத்தில் நீங்கள் எழுதிய இதே கருத்தை பதிய நினைத்துவிட்டு அவர் ஆசையை ஏன் கெடுப்பான் என்று விட்டுவிட்டேன் .

 

 

அப்ரிடியி போராட்டம் செய்வது இன்னொரு நாட்டிற்கெதிராக தன்ட நாட்டுக்கு எதிராக அல்ல :)

 

 

இன்னொரு நாடு. ஆனால் தனது இனம் (முஸ்லிம்) வெறொரு நாட்டில் கூட கொல்லப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ள இனப்பற்றுள்ள மனிதன்.

அதேதான் தமிழ் நாட்டு நடிகர்கள் வைத்த உண்ணாவிரதம் போல .

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!

  •     
  •     
  •  

இந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா,  ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம்.

ஒரு சிறுநகரிலேயே இப்படி.  அனைத்திந்திய அளவில் தற்போதைய ஐ.பி.எல் சீசனின் சூதாட்ட மதிப்பு தோராயமாக 6000 கோடி ரூபாõயை எட்டும் என்கிறார்கள். ஆங்காங்கே போலீசு இவர்களை கைது செய்தாலும் சூதாட்டம் மற்றும் மோசடி ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ்தான் வழக்கு போடமுடியும். அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு ஆட்டத்தை தொடருகிறார்கள் சூதாடிகள். சூதாட்டத்தையே சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

இது பணக்கார வீட்டுப் பையன்களது கேளிக்கை உலகம் மட்டுமல்ல. ஐ.பி.எல் போட்டியின் அதிகாரப்பூர்வ கார்டு கேம்-ஐ (சீட்டாட்டத்தை) டாப்ஸ் ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றிருக்கிறது. இதுவரை சிறுவர்களிடம் ஐம்பது இலட்சம் சீட்டுக்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டல்ல, வர்த்தகம்தான் எனுமளவுக்கு உலக அளவிலான கிரிக்கெட் வருமானத்தின் 70 சதவீதத்தை பிசிசிஐ-தான் வைத்திருக்கிறது. தற்போதைய ஐ.பி.எல் ஆட்டத்தில் விளையாடும் ஒன்பது அணிகளும் ஆரம்பத்தில் 5000 கோடி ரூபாõய்க்கு மேல் ஏலமெடுக்கப்பட்டன. தற்போது அவற்றின் மொத்த மதிப்பு 9000 கோடிக்கும் மேல். ஊடக உரிமை, இணைய உரிமை, ஸ்பான்சர் கட்டணம், டிக்கெட் வருமானம், அனைத்தும் இந்த அணிகளின் முதலாளிகளால் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இந்த 5வது ஐ.பி.எல் சீசனின் மதிப்பு 15,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.

கிரிக்கெட்டிற்கு இருக்கும் வரவேற்பு, வர்த்தகம் இரண்டையும் கணக்கில் கொண்டுதான் விஜய மல்லையா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, ஷாருக்கான், பாம்பே டையிங், ஜி.எம்.ஆர், டெக்கான் குரோனிக்கிள், இந்தியா சிமெண்ட்ஸ், ராஜ் குந்த்ரா முதலான பெரும் தரகு முதலாளிகள் ஐ.பி.எல் -இல் இறங்கியிருக்கிறார்கள். வீரர்களை ஏலமெடுப்பதில் துவங்கி, மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க ரூ.500 முதல் ரூ.50,000 வரையிலான நுழைவுக் கட்டணம் வரை ஐ.பி.எல்லின் வர்த்தகம் மர்மம் நிறைந்தது. கற்பனைக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் பிசிசிஐ (இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) என்பது பில்லியனர்கள் கட்டுப்படுத்தும் கிரிக்கெட் என்று அழைக்கிறார் பத்திரிகையாளர் சாய்நாத்.

ஒரு ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதற்கு மட்டும் ஒரு நடுத்தரமான வீரர் 9 கோடி ரூபாயை வருமானமாகப் பெறுகிறார். வீரர்களுக்கு ஒப்பந்த பணம் போக, பரிசுப் பணம், அணி வெற்றி பெறுவதற்கேற்ற பணம், சிறந்த வீரர் பணம் என்று ஏராளமுண்டு.  .

முன்பு பி.பி.சி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, சில நூறு கிரிக்கெட் வீரர்களிடம் நடத்திய சர்வேயில், ஐ.பி.எல்லுக்காக விரைவிலேயே ஓய்வு பெறும் திட்டத்தில் பல வீரர்கள் இருப்பது தெரியவந்தது. இந்த சீசனில் 15 கோடி ரூபாõய் சம்பாதிக்கின்ற சேவாக், காயம் பட்டாலும் சகித்துக் கொண்டு விளையாடுகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் மண்ணைத் தின்ற இந்திய அணியின் வீரர்கள் அதற்காகவெல்லாம் அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே இழந்தது வெறும் மானம், இங்கே பெறப்போவதோ பல கோடிகள்.

இப்போது கிரிக்கெட்டின் பெயர் கிரிக்கெடெயின்மெண்ட். அது இனிமேலும் ஒரு விளையாட்டு அல்ல. முதலாளிகள் தம் வளர்ப்பு குதிரைகளை வைத்து நடத்தும் குதிரைப்பந்தயம். ரசிகர்களுக்குத் தேவையான சிக்சர்களை அடிக்கிறார்கள் வீரர்கள்.  ரசிகர்களின் பணத்தை உறிஞ்சிக் கொண்டு மேலே எழுந்த பந்து விண்ணிலிருந்து பணத்தைச் சொரிகிறது. ‘மங்..கா..த்தா‘ என்று கூவிச் சிரித்தபடி மல்லையாவும், ஷாருக்கானும் பணத்தை அள்ளுகிறார்கள். ராஜ்யசபா உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான ஏலத்தொகையை எந்த முதலாளியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விசாரிக்கிறார் டெண்டுல்கர். குற்றவாளி ரவிச்சந்திரா ஆயுள்தண்டனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

(கார்டூன் – ஆச்சார்யா)

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8687:2012-08-15-16-27-33&catid=364:2012&Itemid=59

அப்படி போடுங்க ரதி.

துளசியின் முக புத்தகத்தில் நீங்கள் எழுதிய இதே கருத்தை பதிய நினைத்துவிட்டு அவர் ஆசையை ஏன் கெடுப்பான் என்று விட்டுவிட்டேன் .

 

நல்லா தளம் போட பழகிட்டீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதேதான் தமிழ் நாட்டு நடிகர்கள் வைத்த உண்ணாவிரதம் போல .

 

 

150438_147837738718969_1617511857_n.jpg

71464_443079855767383_1489539350_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு நாடு. ஆனால் தனது இனம் (முஸ்லிம்) வெறொரு நாட்டில் கூட கொல்லப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ள இனப்பற்றுள்ள மனிதன்.

 

 

நுணா நீங்களும்,நானும் உயிருக்குப் பயத்தில புலம் பெயர்ந்து விட்டு அங்கு குடும்பமாக இருக்கும் ஒரு விளையாட்டு வீரரைப் பார்த்து எங்களுக்காக குரல் கொடு என்பது எந்த விதத்தில் நியாயம்?...மலேசியா தமிழருக்காக குரல் கொடுக்க சொன்னால் முர‌ளி உடனே குரல் கொடுப்பார் அப்படி கொடுப்பதன் மூலம் அவருக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை...இப்ப நீங்களும்,நானும் உயிருக்கு பயமில்லாமல் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்களுக்காக குரல் கொடுப்பதில்லையா அது போல தான்...தீபச்செல்வன் போன்ற சிலர் தைரியமாகக் குரல் கொடுக்கிறார்கள் தான் ஆனால் எல்லோரும் தீபச்செல்வனாகி விட முடியாது...எல்லாவற்றிக்கும் முதல் இங்கு பயமில்லாமல் இருந்து கொண்டு அங்கே இருப்பவரைப் பார்த்து எங்களுக்காக குரல் கொடு எ கேட்கும் அருகதை எங்களுக்கு கொஞ்ச‌ம் கூட‌ கிடையாது...நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா தளம் போட பழகிட்டீங்கள்

 

 

அர்ஜீன் அண்ணாவுக்கு சொல்லும் நீங்கள் உங்கட பக்கத்தால இதைக் கடைப்பிடிக்கிறீங்களா எனப் பாருங்கள் :) ...நீங்கள் ஒரு நேர்மையான கருத்தாளாராக இருப்பீர்கள் என நினைத்தேன் :D
 
நான் முதல் ஒரு திரியில் பச்சை பற்றி எழுதும் போது தங்களுக்கு ஆதரவாக யாராவது கருத்து எழ்தினால் உடனே ஓடி வந்து பச்சை குத்திறாக்கள் இருக்கினம் என எழுதியிருந்தேன்...இத் திரியிலும் அதை பார்க்க கூடியதாக இருந்தது :lol:
  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைப் போலவே அவருக்கும் பயம் என்றால்.. வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! எதுக்கு அநாவசியக் கதை கதைப்பான்..!

 

என்னதான் சடைஞ்சாலும் முரளி செய்தது தப்பு. போர் நிறுத்த காலத்தில் புலிகளின் அலுவலகங்களுக்கும்.. காவல்துறையினருக்கும் முன்னால் நின்று படம் எடுத்து பெருமை பேசிக்கிட்ட முரளிக்கு இந்தப் பயம் எங்க போனது..??!

 

நீங்கள் உலக நடப்பே தெரியாம சும்மா.. விவாதிச்சுக்கிட்டு இருக்கீங்க.! அனுராத சிறீராமின் கணவர் மேல பழிபோட்ட கணக்கு இது முரளி விசுவாசம். உங்களுக்கு முரளிதரன்கள் மீது ஒரு வித பாசம் போல..!  :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைப் போலவே அவருக்கும் பயம் என்றால்.. வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! எதுக்கு அநாவசியக் கதை கதைப்பான்..!

 

என்னதான் சடைஞ்சாலும் முரளி செய்தது தப்பு. போர் நிறுத்த காலத்தில் புலிகளின் அலுவலகங்களுக்கும்.. காவல்துறையினருக்கும் முன்னால் நின்று படம் எடுத்து பெருமை பேசிக்கிட்ட முரளிக்கு இந்தப் பயம் எங்க போனது..??!

 

நீங்கள் உலக நடப்பே தெரியாம சும்மா.. விவாதிச்சுக்கிட்டு இருக்கீங்க.! அனுராத சிறீராமின் கணவர் மேல பழிபோட்ட கணக்கு

இது முரளி விசுவாசம். உங்களுக்கு முரளிதரன்கள் மீது ஒரு வித பாசம் போல..!  :lol::)

 

இது அப்படி  வருகுதா???? :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைப் போலவே அவருக்கும் பயம் என்றால்.. வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! எதுக்கு அநாவசியக் கதை கதைப்பான்..!

 

என்னதான் சடைஞ்சாலும் முரளி செய்தது தப்பு. போர் நிறுத்த காலத்தில் புலிகளின் அலுவலகங்களுக்கும்.. காவல்துறையினருக்கும் முன்னால் நின்று படம் எடுத்து பெருமை பேசிக்கிட்ட முரளிக்கு இந்தப் பயம் எங்க போனது..??!

 

நீங்கள் உலக நடப்பே தெரியாம சும்மா.. விவாதிச்சுக்கிட்டு இருக்கீங்க.! அனுராத சிறீராமின் கணவர் மேல பழிபோட்ட கணக்கு இது முரளி விசுவாசம். உங்களுக்கு முரளிதரன்கள் மீது ஒரு வித பாசம் போல..!  :lol::)

 

உங்களை மாதிரி பதிலுக்கு பதில் எழுத முடியாமல் திரிக்குத் திரி சலாப்புறது,திரியைத் திசை திருப்பும்,பதில் எழுத முடியாமல் பாதியில் விட்டுட்டு போகும் கோழைகளுக்கு :lol:  பதில் எழுதி உன்ட நேரத்தை வீணாக்காதே என யாழில் எழுதும் சிலர் சொன்னவை...அது தானாம் பலர் உங்கட கருத்திற்கு ஒன்றுமே பதில் கருத்து எழுதுவதில்லையாம்   :D  :icon_idea:

இது அப்ப  வருகுதா???? :icon_idea:

 

வயதுக்கு தக்க மாதிரி எழுதி உங்கள் மரியாதையை நீங்களே தக்க வைத்துக் கொண்டால் மிகவும் நன்றாக் இருக்கும் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

    வயதுக்கு தக்க மாதிரி எழுதி உங்கள் மரியாதையை நீங்களே தக்க வைத்துக் கொண்டால் மிகவும் நன்றாக் இருக்கும் அண்ணா

 

எதற்காக வயதைக்குறிப்பிடுகின்றீர்கள் என புரியவில்லை ரதி

 

அதில் ஒரு எழுத்து தப்ப விடப்பட்டிருந்தது

தற்பொழுது திருத்தியுள்ளேன்

இதன் பின்னரும்

வயது இடைஞ்சலாக இருந்தால் சொல்லவும்

 

மற்றும்படி

முரளிக்காக ஏன் யாழில் இவ்வளவு பேருக்கு எதிராக எழுதுகின்றீர்கள் எனப்புரியவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக வயதைக்குறிப்பிடுகின்றீர்கள் என புரியவில்லை ரதி

 

அதில் ஒரு எழுத்து தப்ப விடப்பட்டிருந்தது

தற்பொழுது திருத்தியுள்ளேன்

இதன் பின்னரும்

வயது இடைஞ்சலாக இருந்தால் சொல்லவும்

 

மற்றும்படி

முரளிக்காக ஏன் யாழில் இவ்வளவு பேருக்கு எதிராக எழுதுகின்றீர்கள் எனப்புரியவில்லை.

 

 

நான் முரளிக்காக எழுதவில்லை அண்ணா உண்மையைச் சொல்ல போனால் முரளியை நான் கணக்கெடுப்பதில்லை ஆனால் நியாயம் என்டால் எல்லோருக்கும் ஒரு நியாயம் தான் நாங்கள்,எங்கட குடும்பம் எல்லாம் இங்கே இருந்து கொண்டு அங்கே இருப்பவரைப் பார்த்து எம் மக்களுக்காக குரல் கொடு என சொல்வதில் எந்த நியாயமும் இல்லை...அது முரளிக்கு மாத்திரமில்லை அங்கு இருக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.
 
சமாதான காலத்தில் அமைச்சர்கள்,மாற்றுக் கருத்துக்காரர் எல்லோரும் தான் வன்னிக்கு போயிட்டு வந்தவை...வன்னிக்கு போயிட்டு வந்ததாலே அவரை குரல் கொடுக்க சொல்லி கேட்பது நியாயமில்லை...அவர் எங்களுக்காக குரல் கொடுத்து அவரை மண்டையில் போட்டால் நீங்கள் இங்கே அதையே சாட்டாக வைத்து நியாயம் கேட்பீர்கள்...ஆனால் உயிர் போனது,போனது தான்...உங்களால் அவர்கள் குடும்பத்திற்கு என்ன செய்ய முடியும் மிஞ்சி,மிஞ்சி போனால் ஆறுதலை சொல்லிப் போட்டு மறந்திடுவீங்கள்...இழப்பு என்பது எல்லோருக்கும் ஒன்று தான்.
 
உயிருக்கு பயமில்லாத பலர் இங்கே யாழில் இருக்கினம் அவர்களை ஊருக்கு அனுப்பி அங்கிருந்து எங்களுக்காக குர‌ல் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

முரளி வீட்டாரின் பிஸ்கட் கம்பனி 1983 இல் அடித்து நொருக்கப்பட்டது.. இப்போது முரளி தன்னுடைய சொத்துக்களை வெளிநாட்டில் சேமித்திருப்பார் என நம்ப இடமுண்டு..! :D

  • கருத்துக்கள உறவுகள்

 அங்கே இருப்பவரைப் பார்த்து எம் மக்களுக்காக குரல் கொடு என சொல்வதில் எந்த நியாயமும் இல்லை...அது முரளிக்கு மாத்திரமில்லை அங்கு இருக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.
 
:icon_idea:

 

எமக்காக குரல் கொடு என்று இங்கு எவரும் எழுதியதாக தெரியவில்லை ரதி

 

ஆனால் எமக்காக வெளியில் எழும் குரல்களை நோகடிக்கும் முகமாக  அல்லது மலிவு படுத்தும் விதமாக முரளி  கருத்து வைத்தமையே  இங்கு கேள்வியாக்கப்பட்டுள்ளது.   இவர் போன்ற பிரபலங்களின் பேச்சுக்கள் எம் போன்ற ஆயிரமாய்  பேரது வேண்டுதல்களை ஒரு நொடியில் இல்லாது செய்துவிடும்.  இவர் போன்றோர் மௌனமாக இருப்பதே எமக்கு செய்யும் பெரும் உதவியல்லவா???

விளையாட்டையும் அரசியலையும் சேர்த்து பார்க்க கூடாது என்பவர்களின் கருத்துடன் நான் உடன்படவில்லை. வளர்ந்த பல  நாடுகள் கூட அரசியல் முரன்பாட்டில் வ்பிளையாட்டை புறக்கணித்தார்கள் ஆனால் தமிழக மாணவர்களுக்கு தெரியுமோ தெரியாது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களின்  தொகையை விட தலைநகர் கொழும்பில் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது. :D  இந்த கருத்து   தமிழக மாணவர்களின் போராட்டத்தை  கொச்சைபடுத்த எழுதவில்லை ஆனால் அதை ஊக்கிவிக்கும்  புலம்பெயர் சுக போக போராளிகளின் முரன்பாட்டை சுட்டிக் காட்டவே :icon_idea:

இங்கு பலருக்கு  அரசியல் மட்டுமல்ல மத்திமம் அனைத்தும் மத்திமம் .

மகாபாரதத்தில் கர்ணன் ஏன் கௌரவர்களுடன் நின்றான் என்பதற்கான நிலை தான் முரளியினுடையதும் .முரளி முதலில் வடக்கு அல்லது கிழக்கை  செர்ந்தவரல்ல.

மிக முக்கியமானது முரளி  இலங்கை அணியில் விளையாடியதற்கு முக்கியகாரணம்  அர்ஜுன ரணதுங்க .தனது குடும்பத்தில் ஒருவராக முரளியை வைத்து அனைத்து உதவிகளும் செய்தார் ,அதைவிட ஆசியில் முரளி ஏறிகின்றார் என நடுவர் குற்றச்சாட்டு வைத்த  போது முழு டீமையும் விளையாடாமல் வெளிகொண்டுபோனவர் அர்ஜுனா .

உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வதில் எம்மவரை விட்டால் ஆட்களில்லை ஆனால் முரளி அப்படியல்ல .

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கு  அரசியல் மட்டுமல்ல மத்திமம் அனைத்தும் மத்திமம் .

மகாபாரதத்தில் கர்ணன் ஏன் கௌரவர்களுடன் நின்றான் என்பதற்கான நிலை தான் முரளியினுடையதும் .முரளி முதலில் வடக்கு அல்லது கிழக்கை  செர்ந்தவரல்ல.

மிக முக்கியமானது முரளி  இலங்கை அணியில் விளையாடியதற்கு முக்கியகாரணம்  அர்ஜுன ரணதுங்க .தனது குடும்பத்தில் ஒருவராக முரளியை வைத்து அனைத்து உதவிகளும் செய்தார் ,அதைவிட ஆசியில் முரளி ஏறிகின்றார் என நடுவர் குற்றச்சாட்டு வைத்த  போது முழு டீமையும் விளையாடாமல் வெளிகொண்டுபோனவர் அர்ஜுனா .

உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வதில் எம்மவரை விட்டால் ஆட்களில்லை ஆனால் முரளி அப்படியல்ல .

 

 

 

மற்றவரை நக்கல் அடிப்பதில் வல்லவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.   :huh:
 
மலையக மக்களுக்காகவும் இவர் ஒரு போதும் குரல் கொடுத்ததில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.