Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படித்ததில் பிடித்த குட்டி கதைகள்

Featured Replies

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம் 
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..

 

 

VIA FB 

Edited by அபராஜிதன்

  • Replies 82
  • Views 308.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

- படித்ததில் பிடித்த
து

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் குட்டிக் கதைகள் வாசிக்கப் பிடிக்கும்...வித்தியாசமான கதைகளாய் பார்த்து தொடர்ந்தும் இணையுங்கோ அபராஜிதன்

  • தொடங்கியவர்

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன். என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள். சொல்றதை கேட்க மாட்டேங்குது. படின்னா படிக்க மாட்டேங்குது. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய..

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா. என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், 

‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற. ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ 
முடியும்...

 

via fb 



எனக்கும் குட்டிக் கதைகள் வாசிக்கப் பிடிக்கும்...வித்தியாசமான கதைகளாய் பார்த்து தொடர்ந்தும் இணையுங்கோ அபராஜிதன்

நன்றி அக்கா..:)

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களின் பின்னர், அபராஜிதனைக் களத்தில் கண்டது, மகிழ்ச்சி!

 

முதலாவது கதை, கொஞ்சம் மனதை உலுக்கித் தான் போட்டுது!

 

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளன கதைகள். :rolleyes:

  • தொடங்கியவர்

கெளதமபுத்தர்

ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த

கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால்

துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார்

புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை

பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால்

அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள்

பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று

விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால்

நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது

காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்..

"இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள்

பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான்

"நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"

என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க

நான் என்ன உன் அடிமையா.. ?"

 

fb 

நீண்ட காலங்களின் பின்னர், அபராஜிதனைக் களத்தில் கண்டது, மகிழ்ச்சி!

 

முதலாவது கதை, கொஞ்சம் மனதை உலுக்கித் தான் போட்டுது!

 

தொடருங்கள்!

நன்றி annaa..:)

நன்றாக உள்ளன கதைகள். :rolleyes:

நன்றி அக்கா :)

  • தொடங்கியவர்

# படித்ததில் பிடித்தது #

உள்ளத்தை மட்டும் பாருங்கள்.


ஒரு முறை நான் அமெரிக்கா செல்லும்பொது ஜன்னல் சீட் அருகில்
அமர்ந்திருந்தேன் அப்போது ஒரு பெரிய உருவம் என் அருகில் வந்து
அமர்ந்தது.என்னுடைய சீட்டின் முக்கால்வாசி இடத்தை அடைத்து கொண்டு
உட்கார்ந்திருந்தார்.நான் வேறு வழி இல்லாமல் ஜன்னல் ஓரம் ஒண்டிக்கொண்டேன்.


அந்த பெண்மனி என்னை பார்த்து ஹாய் என்றார், நானும் வேண்டாவெறுப்பாக ஹாய்
என்றேன்.இந்த அம்மாவோட எப்படி தான் உட்கார்ந்து போவதோ என்று எண்ணியபடி
ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய
கை என் முகத்துக்கு நேராக நீட்டியது என் பெயர் லாரா என்றாள் நான்
அமேரிக்கா நீங்களும் அமேரிக்காவா என்றாள்.இல்லை மலேசியா என்றேன்
சலிப்போடு.ஓ சாரி நீங்க அமெரிக்கான்னு நினைச்சேன் ,இன்னும் 6 மணி நேரம்
ஒன்றாக பிரயானம் பண்ணப்போகிறோம் கை கொடுங்க ஜாலியா பேசிட்டே போகலாம்
என்றாள்.நானும் வேறி வழி இல்லாமல் கையை நீட்டினேன்.

அந்த அம்மா
அவர்களை பத்தி பேச ஆரம்பித்தார்கள் தான் ஒரு டீச்சர் என்றும் தன்
மாணவர்களுக்கு நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு போவதாகவும் தன் குடும்பத்தார்
தனக்காக ஏர்போர்டில் காத்து கொண்டு இருப்பார்கள் என்றும் சொல்லிகொண்டே
வந்தாள் .நான் எல்லாவற்றிற்கும் ஒரு வரியில் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.


அவர் பேசும்போது நன்கு படித்தவர் என்பதும் சைக்காலஜி நன்கு தெரிந்தவர்
என்பதும் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்படுத்தியது.பணிப்பெண் எங்களுக்கு
உணவு கொண்டு வந்தார்.இருவரும் எடுத்து கொண்டோம்.பணிப்பெண்னிடம் உங்கள் இந்த
சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்க்ள் என்றார்.பணிப்பெண்
சிரித்துக்கொண்டே போனார்.யானை மாதிரி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்து
இருக்கேன் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்கிறேன் நீங்கள் ப்ரீயா
சாப்பிடுங்கள் என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த பெண் மேல் எரிச்சலடைந்த
நான் இப்போது அவர் பேசபேச சிரித்து ரசித்து கேட்டு கொண்டு வருகிறேன்.


அந்த அம்மா பேசுவதை எல்லாரும் ரசித்து கேட்டு கொண்டு வந்தனர்.ஆரம்பத்தில்
அவர் உருவத்தை பார்த்து கேலி செய்தவர்கள் இப்போது அவருடன் ஆவலாக
பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் வந்தார்கள்.அந்த விமானத்திலேயே அவர் தான்
Centre of attraction .

நீங்கள் உங்கள் உடம்பை குறைக்க எதாவது
முயற்சி எடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லையே நான் ஏன் என் உடம்பை
குறைக்கனும்.குண்டாக இருந்தால் இதய நோய் வரும் அதுனாலத்தான் சொன்னேன்
என்றேன்.கண்டிப்பாக கிடையாது ,முழு நேரமும் எடையை பற்றி கவலைப்பட்டுக்
கொண்டு இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் இதய நோய் வரும்.


விளம்பரங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்’ உங்கள் உடல் குண்டாக
இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மையா எங்களிடம் வாருங்கள் ‘என்று
விளம்பரப்படுத்துவார்கள்.நான்
பிறக்கும்போதே குண்டாக பிறந்தேன் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன் நன்றாக
நடக்கிறேன்.எனக்கு எந்த கவலையும் கிடையாது.எனக்கு எவ்வளவோ வேலைகள்
இருக்கும்போது உடல் இடையை குறைக்க நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.


மற்றவர்கள் தான் என்னை பார்க்கும்போது குண்டு என்றும் சோம்பேறியாக
இருப்பாள் என்றும் நினைக்கிறார்கள்.நான் உடல் அளவில் தான் பெரியவள் ஆனால்
மனதளவில் நான் குழந்தை.உங்களைவிட எனக்கு மனதளவில் தைரியம் ஜாஸ்தி.



உங்கள் பின்னாடி ஆண்கள் துரத்தி இருக்கிறார்களா என்று விளையாட்டாக
கேட்டேன்.ஆமாம் துரத்தி இருக்கிறார்கள் என்றார்.நிறைய ஆண்கள் உருவத்தை
பார்ப்பதில்லை மனதை மட்டுமே பார்ப்பவர்கள்.எனக்கு திருமணம் ஆகிவிட்டது
இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர் என்றார்.நான் டீச்சராக இல்லாமல்
இருந்தால் பெரிய ஆலோசகராக மாறி இருப்பேன்.நிறைய ஆண்கள் என்னிடம் வந்து
ஆலோசனை கேட்பார்கள்.

கடவுள் எனக்கு பெரிய மகிழ்ச்சியை
கொடுத்திருக்கிறார் அதை என் பெரிய உருவத்தில் வைத்து மகிழ்ச்சி அடைந்து
வருகிறேன்.என் எடையை குறைத்து என் சந்தோஷத்தை நான் இழக்க
விரும்பவில்லை.நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குண்டாகி விடுகிறார்கள்
அதற்காக அவர்கள் கணவர்கள் அவர்களை வெறுப்பதில்லை.

லாரா பேச்சை
கேட்டு விமானத்தில் இருந்த அனைவரும் கை தட்டினர்.விமானம் தரை இறங்கியதும்
லாராவை அழைத்து செல்ல பெரிய உருவம் கொண்ட அவர் உறவினர்கள்
வந்திருந்தனர்.பயணம் செய்த அனைவரும் லாராவுக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி
வைத்தனர்.லாரா போகும்போது என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

நான் பார்த்த பெண்களிலே இவளை போன்று ஒரு அழகியை பர்த்தது இல்லை என்று என் மனம் சொல்லியது.

நண்பர்களே மனிதர்களின் உடலை பார்க்காதீர்கள் உள்ளத்தை மட்டும் பாருங்கள். உடல் பருமன் ஒரு குறை அல்ல. 

 

via fb 

  • தொடங்கியவர்

நம்மால் முடியும்...!


ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50
கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த
பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு...

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர், "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? "

" 50 கோடி ரூபாய் "

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வ ந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.


பின்னர் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு
இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு
அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம்
கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த
வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை
இவர் கைகளில்
திணித்து விட்டு சென்று விட்டார்.

பின் அந்த
நிறுவனத்தின் தலைவர் வேகமாக தன் அலுவலகத்திலுள்ள தனது அறைக்குள் சென்று
அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது
உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர
ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் வந்து
அமர்ந்திருந்தனர்.

கூட்டத்தில் வந்து அவர் பேச ஆரம்பித்தார்.
"நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால்
இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன்.
இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று
ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள்
அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.


பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன.
மிகச் சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு
மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.


மிக சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. அதிகப் பட்சமாக
550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள்
விடிகாலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்
கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமெண் ட்
பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது.
சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை
கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே
தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும்
வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? "

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? "

" இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?"


" இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு
தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து
கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் "

மௌனம் ....

ஒரு
நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச்சு வரவில்லை. நம்மால் முடியும் என்று
நினைத்தால் நிச்சயமாக முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது. அது
தான் நிதர்சனம் என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து
கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று
முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற
முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.

டிஸ்கி : வாழ்க்கைப் போல் கொஞ்சம் நீளமானது. நிதானித்து படித்து வையுங்கள். யார் கண்டது.பின்னர் ஒருநாளில் உதவலாம் !

உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்...


இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை
செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே
முதலில் நெகட்டிவ்வைத் தான் நினைக்கும். அவ்வாறு நினைப்பதால், யாராலும்
வாழ்வில் நிச்சயம் முன்னேற முடியாது.

எப்போதும் மனதில்
பாசிட்டிவ்வாக யோசித்தால், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யலாம்.
உதாரணமாக, நமது மனம் நெகட்டிவ்வாக நினைக்கும் போது, ஏதாவது ஒரு தோல்வி
நடந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் மறக்காமல் இருக்கும். இதனால் எந்த செயலை
செய்யும் போதும் எங்கு தோல்வி கிடைக்குமோ என்று பயந்து ஈஸியானவற்றைக் கூட
இழக்க நேரிடுகிறது. ஆகவே வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேற என்னவெல்லாம்
செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

வாழ்வில்
முன்னேறும் போது நிறைய பேர் என்னென்னவோ சொல்வார்கள். இதில் அதிகம் நம்மைப்
பற்றி சொல்பவர்கள் யார் என்று பார்த்தால், குடும்பம், நண்பர்கள்,
உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஆசிரியர்கள் தான். இவர்கள்
சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கட்டும். ஏன் நாம் எதை விருப்பப்பட்டு
செய்தாலும் மூக்கை அறுப்பது போல் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இந்த
நேரத்தில் மனதை தளர விடாமல், தன் எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு
வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம்.

எப்போதும்
மற்றவர்கள் கூறுவதை கேட்காமல், உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். உங்கள்
உள்ளம் என்ன சொல்கிறதோ, அதை செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு
நடப்பதால், வெற்றியை அடைய முடியாது. ஆகவே உங்கள் மனம் சொல்லும்
வார்த்தைகளைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு
ஏதேனும் ஒரு புதிய விஷயங்களை செய்யும் போது, மற்றவர்கள் முடியாது என்று
நினைப்பதை கூட, நீங்கள் முழு கவனத்தோடு, செய்து முடிப்பீர்கள்.


எந்த நேரத்திலும் நீங்களே முடிவெடுங்கள். இதுவரை சிறுவயதில் உங்களுக்கு
உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் முடிவெடுப்பார்கள். இப்போது நீங்கள்
வளர்ந்து விட்டீர்கள். இந்த நேரம் தான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை
எடுக்க வேண்டிய தருணம். எப்போதும் எதையும் செய்ய முடியவில்லை என்று
மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்காமல், பொறுப்பு ணர்வோடு இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நினைத்தால் மட்டும் போதாது, சுயமாக
முடிவு எடுக்க தெரிந்திருக்க வேண்டும்.

இது தான் மிகவும்
முக்கியமான ஒன்று. மேலே சொன்னது போல், வாழ்க்கையில் முன்னேறும் போது
தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். அதற்காக அந்த தோல்விகளையே மனதில்
வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இருக்க கூடாது. "தோல்வி தான் வெற்றியின்
முதல் படி". தோல்விகளை சந்திக்க சந்திக்க தான் மனம் தெம்பாக, அனைத்தையும்
எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில்
அடைய முடியும்.

* இன்றைய காலத்தில் நிறைய மக்கள் சோம்பேறித்
தனத்துடன், கவனகுறைவோடு, எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இருக்கின்றனர்.
ஏனெனில் அவர்களுக்கு எந்த ஒரு நினைப்பும் இல்லை. இதனால் அவர்கள் எந்த ஒரு
பெரிய பாராட்டையும் பெறப் போவதில்லை. ஆனால் தோல்வியடைந்து விட்டால்
மட்டும், அதை நினைத்து மனதை தளரவிட்டு, வாழ்க்கையை வீணாக்குவது. ஆகவே
அவ்வாறு இல்லாமல், மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைப்பதோடு, அடைய வேண்டிய
இலக்கை மனத்தில் கொண்டு சுறுசுறுப்பாக செயல் பட வேண்டும்.

மேற்கூறியவாறெல்லாம் நடந்து வந்தால், வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கும் வரலாம்.


சாளரம், புதுவலசை ...

* எம் அப்துல் காதர்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையே வலிமை.. நன்றி அபராஜிதன்..!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

via fb 

நம்பிக்கையே வலிமை.. நன்றி அபராஜிதன்..!

 

நன்றி தல :D

மிகவும் பேர்பெற்ற ஒரு மதத் தலைவர் மன நல மருத்துவ மனை ஒன்றினைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர்.

மதத் தலைவர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர்.அவரும் பேச ஆரம்பித்தார்.மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய இமைகள் கூட அசையவில்லை.மதத் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.மன நல மருத்துவ மனை என்பதால் மதத் தலைவர் எதையும் எதிர் பார்க்கவில்லை.ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.மதத் தலைவரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். பின்னர் வார்டனிடம் அந்த ஆள் என்ன சொன்னார் என்று வினவ வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,'''என்ன கொடுமையடா சாமி,இவனெல்லாம் வெளியே இருக்கிறான்,நான் உள்ளே இருக்கிறேன்.'என்கிறான் அய்யா,'  :D

 

via fb 

  • தொடங்கியவர்

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம்
தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’
என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு
மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது.
மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி,

‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?
உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’
என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை
துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.........!!!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்.

VIA FB 

  • தொடங்கியவர்

அழகு.

ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுள்கிட்ட வேண்டிகிச்சு.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.

அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள் என்று கேட்டது குதிரை.நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும்.

அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும் என்றார்.

”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில்”

via fb 

உதவி சக்கரம்”

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.

அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.

என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .

அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.

நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.

உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.

அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.

குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.

டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.

கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.

”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினைக் கதைகள்.. இணைப்புகளுக்கு நன்றி அபராஜிதன்..!

  • தொடங்கியவர்

நேற்று கடை வீதிக்கு சென்றிருந்தேன் அப்பொழுது நான் பார்த்த காட்சி.

எப்பொழுதும் மதுரை சித்திரை திருவிழா போல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த தெருவில் ஒருவர் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. பணம் வேண்டி அவர் தன்னையே துன்புருத்திக்கொண்டிருந்தார். அவர் அருகில் அவரின் குழந்தை பசியில் அழுதுகொண்டிருந்தது. அந்த குழந்தையின் அழுகை சத்தம் என் காதுகளை கிழித்தது. அப்படி ஒரு அழுகை. இது எதையுமே கண்டுகொள்ளாமல் மக்கள் கூட்டம் அங்கும் எங்கும் சென்றுகொண்டிருந்தது. அவருக்கு உதவ எண்ணினேன். அவரிடம் பத்து ரூபாய் கொடுத்தேன். சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டு திரும்பவும் தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். நான் நிற்கும் இடத்திற்கு அருகில் ஒரு கண் தெரியாத முதியவர் போமைகள் விற்றுக்கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து இருபது ரூபாய் கொடுத்து சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னார். எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம்.

அய்யா ! நீங்களே கடினப்பட்டு உழைக்கிறீங்க உங்களையே யாரும் கண்டுகொள்ள அப்படி இருந்தும் அவருக்கு உதவுறீங்கலே என்று கேட்டேன். நான் உதவு கூடாதுன்னு சொல்லுறீங்களா ? என்று கேட்டார். இல்லை அய்யா, உதவலாம் தவறில்லை ஆனால் உங்கள் சக்திக்கு இருபது ரூபாய் கொஞ்சம் அதிகம் என்றேன்.

அதற்க்கு அந்த முதியவர் சொன்னார் அந்த குழந்தை பசியால் அழுகிறது அந்த அழுகையை கேட்கையில் மனசு வலிக்கிறது. இந்த கடை வீதியில் "பத்து ரூபாய்க்கு" எந்த உணவும் கிடையாது குறைந்த பட்சம் "இருபது ரூபாய்." இருபது ரூபாய் கிடைப்பதற்காக அந்த தந்தை சாட்டைகளால் அடித்துக் கொண்டிருக்கிறார் “உண்மையில் அந்த அடி அந்த பிஞ்சுக் குழந்தையின் வயிற்றில் தான் விழுகிறது”. பணம் சம்பாரிப்பது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும் அதனால் தான் அதிகமாக உதவினேன். நான் கொடுத்த காசு அந்த குழந்தைக்கு ஒரு வேலை உணவை தரும் என்று திருப்பதி நான் எவ்வளவு சம்பாரித்தாலும் எனக்கு கிடைக்காது என்றார். "மெய் சிலிர்த்துப் போனேன்" பரம்பரை பணக்காரன் கூட காசை சேகரிப்பதில் தான் குறியாக இருக்கிறானே ஒழிய இல்லாதவர்களுக்கு உதவ யோசிக்கிறான், தங்கள் சேகரிக்கும் பணத்தை கோவில் உண்டியளிலும், சாமியார்களின் காலடியிலும் தான் போடுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் தான் மற்றவரின் தேவை அறிந்து உதவுகிறார்கள் ஏன் என்றால் அவர்களும் இந்த பசி போராட்டத்தை தாண்டித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதால்.

"உதவி செய்த முதியவருக்கு முகத்தில் கண் இல்லை ஆனால் மற்றவர்களின் மனதை அறியும் கண் மனதில் உள்ளது."

 

via fb 

நல்ல படிப்பினைக் கதைகள்.. இணைப்புகளுக்கு நன்றி அபராஜிதன்..!

நன்றி  anaan :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

படிக்கவேண்டிய பாடங்கள் ஒவ்வொன்றும்

  • தொடங்கியவர்

வேக்கம் க்ளீனர் விற்கும் சேல்ஸ்மேன் ஒரு வீட்டின் கதவை தட்டினான்.

ஒரு பெண்மணி வந்து கதவை திறந்ததும், உங்கள் கையில் உள்ள சாணம் முழுவதையும் தரையில் கொட்டிவிடுங்கள், என்று அந்த பெண்மணியிடம் சொன்னான் சேல்ஸ்மேன்.

சேலஸ்மேன்: 'மேடம்! இன்னும் 3 நிமிஷத்தில நான் எங்களது புதிய தயாரிப்பான சக்திமிக்க வேக்கம் க்ளீரைக் கொண்டு, இந்த சாணம் முழுவதையும் சுத்தப்படுத்திர்ரேன். அப்படி முடியலனா, இந்த சாணம் முழுவதையும் நானே தின்று முடிக்கிறேன்' என்றான்.

பெண்மணி: 'அப்படியா! தொட்டுக்க ஊறுகாய் தரவா?

சேல்ஸ்மேன்: ஏன்?

பெண்மணி: வீட்ல கரெண்ட் இல்லப்பா,. :lol: 

நீதி: தமிழ்நாட்ல யாரும் தம் அதி புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்கு முன்னால மின்சாரம் இருக்குதான்னு உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.

 

via fb 

தொடருங்கள்

படிக்கவேண்டிய பாடங்கள் ஒவ்வொன்றும்

நன்றி அண்ணா

  • தொடங்கியவர்

ஒரு செல்வந்தர் இருந்தார்.ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான். செல்வந்தனுக்குப் புரிந்தது .அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று

VIA FB 

  • தொடங்கியவர்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.:D.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகள் தொடருங்கள்

 

  • தொடங்கியவர்

"நீதிக்கதை"

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.

தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.

நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

via fb 

நல்ல கதைகள் தொடருங்கள்

நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும் 

  • தொடங்கியவர்

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விடமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

நீதி: உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளாதீர்கள்!

 

via fb 

  • தொடங்கியவர்

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை. அத்துடன் கோபம் வேறு பொங் கியது…

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.

அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

via fb 

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்னக் கதைகள் தான்!

 

ஆனால், அவற்றினுள் மறைந்திருக்கும் தத்துவங்கள், சின்னவை அல்ல!

 

தொடருங்கள், அபராஜிதன்!

  • தொடங்கியவர்

காட்டில் ஒரு சிங்கம்,

ஒரு ஆட்டை அழைத்தது.

''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.

ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து

.அதனுடைய கருத்தைக் கேட்டது.

ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,

''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.

சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது

.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது,

''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

via fb 

சின்னச் சின்னக் கதைகள் தான்!

 

ஆனால், அவற்றினுள் மறைந்திருக்கும் தத்துவங்கள், சின்னவை அல்ல!

 

தொடருங்கள், அபராஜிதன்!

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.