Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன்; தமிழ் மக்களுடன் செந்தமிழன் சீமான் சந்திப்பு;அரங்கை நிறைத்த மக்கள்(படங்கள் இணைப்பு)

Featured Replies

 

v-seemangermaninewss%20%2818%29.jpgசெந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள்.

 

 

 

செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள்.

 

 

v-seemangermaninewss%20%285%29.jpg

 

 

தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
 

 

 

 

 

v-seemannngermanii%20%284%29.JPG

 

 

 

அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழீழத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிற்கு தமிழகம் உறுதுணையாக நிற்கும் என செந்தமிழன் சீமான தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைக்கான போரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் அதற்கு தமிழகம் என்றும் துணைநின்று போராடும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சீமான் நாம்தமிழர் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தார். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் புரட்சிபற்றியும் சீமான் விளக்கிக் கூறியிருந்தார்.

அருகாமையில் உள்ள பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல தமிழர்கள் வந்திருந்ததையும் தாம் வசிக்கும் நாடுகளிற்கும் வருமாறும் சீமானிடம் வேண்டுகோள் வைத்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

சிறப்புரையாற்றிய பின்னர் சீமானுடன் வந்திருந்த மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தார் சீமான்.

 

 

 

 

 

v-seemangermaninewss%20%281%29.jpgv-seemangermaninewss%20%2817%29.jpgv-seemangermaninewss%20%288%29.jpgv-seemangermaninewss%20%289%29.jpgv-seemangermaninewss%20%282%29.jpgv-seemangermaninewss%20%284%29.jpgv-seemangermaninewss%20%2811%29.jpgv-seemangermaninewss%20%2813%29.jpgv-seemangermaninewss%20%2814%29.jpgv-seemangermaninewss%20%2812%29.jpgv-seemangermaninewss%20%2815%29.jpgv-seemangermaninewss%20%2819%29.jpg

 

 

 

 

v-seemangermaninewss%20%2818%29.jpgv-seemangermaninewss%20%2822%29.jpg

www.irruppu.com

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

 

என்ன சபேசன் அண்ணா தமிழ் தமிழ் என்று மொழி வளர்ச்சிக்காக உயிரையே குடுக்கிற நீங்கள் இப்பிடி ஆங்கிலக் கலப்பிலை எழுதுறது கொஞ்சம் இடிக்குதே...

 

தொடக்கம் நல்லாயிருந்துது முடிப்புச் சரியல்லை என்று போட்டிருக்கலாமே?

உண்மையில் எல்லாம் மாறும்   என்கின்ற என் நம்பிக்கை உண்மை ..................................

சில வருடங்களுக்கு முன் கிற்றார் வாசிப்பதற்காக யேர்மன்  தமிழீழம் இசைக்குழுவினர் என்னை அடிக்கடி அழைப்பார்கள் .....................யேர்மனியில் பல மாவீரர் தின நிகழ்வுகளில் நான் அன்று   பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளதை பார்க்கும் பொது மனம் நிறைவடைகிறது ....அது மட்டுமல்லாமல் எதோ ஒரு செய்தியையும் சொல்கிறது .இணைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் .தோழா ..................

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

 

அதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன்

ஓப்பினிங் நல்லாத்தான் இருக்கு(இங்கு நீங்கள் ஆரம்பித்து வைக்கும் இந்த விவாதம்) :rolleyes:

 

ஆனால் பினிசிங் உங்களுக்கு ஏற்றது போல் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது. :(

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரியின் நடத்தை சரியில்லாவிட்டாலும் அந்தப் பூசாரி பூசை புரியும் கோவிலில் ஒரு திருவிழா என்றால் பக்தர்கள் கூட்டம் ஓகோ என்றிருக்கும். அப்படித்தான் ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்த, புலிகளின் முன்னைய ஜேர்மன் பொறுப்பாளர்களைப் போட்டுக்கொடுத்து இன்று ஜேர்மன் பொறுப்பாளராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட

'சிறீரவி' என்பவரால் (இறுதிப் படத்தில் இருப்பவர்) சீமான் வரவழைக்கப்பட்டதும் அன்று பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளது. இந்த மக்கள் கூட்டம் சீமானுக்காக கூடியதே தவிர முன்புபோல நடைபெறும் போராட்ட நிகழ்வுகளுக்கு கூடும் என்பதில் ஐயப்பாடுகள் உண்டு. ஜேர்மனியில் பழைய பொறுப்பாளர்களின் அழுத்தங்களற்ற புதிய பொறுப்பாளர்கள் தோற்றம் கொள்ளும்வரை மக்களின் நம்பிக்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் 23.03.2013 அன்று 17 மணிக்கு Möhringer Str.56, 70199 Stuttgart, Germany யில் இந்தச் சிறீரவி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 06 பொதுமக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பங்குப்பிரச்சினை ..இனம் அழிந்தாலும் விடமாட்டர்கள் போலதெரியுது   எந்த ஒரு உணர்வும்  கொழுந்துவிட ஆரம்பித்ததும்...கல்லுக் குத்த ஆரம்பித்துடுவங்கள்..



உண்மையில் எல்லாம் மாறும்   என்கின்ற என் நம்பிக்கை உண்மை ..................................

சில வருடங்களுக்கு முன் கிற்றார் வாசிப்பதற்காக யேர்மன்  தமிழீழம் இசைக்குழுவினர் என்னை அடிக்கடி அழைப்பார்கள் .....................யேர்மனியில் பல மாவீரர் தின நிகழ்வுகளில் நான் அன்று   பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளதை பார்க்கும் பொது மனம் நிறைவடைகிறது ....அது மட்டுமல்லாமல் எதோ ஒரு செய்தியையும் சொல்கிறது .இணைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் .தோழா ..................

எந்த ஒரு உணர்வும் பொங்கியெழ விடமாட்டார்களே...இன்னும்  _ _ _ _ பிரச்சினை முடியலைபோலை..

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.