Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவாலிப்படுகொலையின் நினைவுநாள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9.7.2006

சிங்களத்து சமாதானப் புறா வேடமிட்டு வந்த சந்திரிக்க அரசால், 141 அப்பாவித் தமிழ்மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நாள் ஆகி இன்றோடு 11 வருடங்கள் கழிந்து விட்டன!

தேவாலயமாக இருந்தபோதும், அங்கே பாதுகாப்பிற்கு மக்கள் தங்குவார்கள் என்று தெரிந்தபோதும், குண்டு வீசி அவ்வுறவுகளைச் சின்னபின்னமாக்கிய நாளை எப்படி மறக்க இயலும்!!

தமிழன் என்பதற்காக கொல்லப்பட்ட, அந்த உறவுகளுக்காக கண்ணீர் அஞ்சலிகள்!!

§¸¡¨Æò¾ÉÁ¡É «ÃºÀ¨¼¸Ç¢ý ¾¡ì̾ÖìÌ ¾Á¢Æ÷ ŢΨÄ측¸ Áñ§½¡Î ºí¸ÁÁ¡É ±ÁÐ ¯È׸ÙìÌ ¿¢¨ÉÅïºÄ¢¸û...±ý¦ÈýÚõ ¾Á¢Æ÷ Áɾ¢ø ¿£Ã¢ÕôÀ£÷..

.....................................Žì¸õ.................................

..

கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக எமது கண்ணீர் அஞ்சலிகள்!! :lol: :lol: :lol:

கண்ணீர் அஞ்சலிகள்....

இதுக்கு மேல் எதுவும் எழுத முடியவில்லை.....

நவாலியில் சிறிலங்காவின் கோழைத்தனத்துக்கு இரையான உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry: :cry:

கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...! :lol::lol:

"நவாலி நரபலி 1995"

அதிகாலை விழிதிறந்த போது

எமன் ஊருக்குள் புகுந்தான்.

அசுரப்பறைவைகள்

இரை தேடி வானத்தில் அலைந்தன.

பீரங்கி பூட்டிய இயந்திர யானைகள்

குருதி வடியும் பற்களுடன் நிலமுழுது வந்தன.

கையில் எடுத்தவை மட்டுமே எடுத்தவையாக

ஊர்துறந்து ஓடியது ஒரு கூட்டம்.

பின்னாற் துரத்தி வந்தன எறிகணைகள்.

வாயுலர்ந்து போனது

நீருக்குத் தவித்தன நாக்குகள்.

ஆயினும் வேகத்தைக் குறைக்கவில்லை கால்கள்.

கூடுகலைந்த குருவிகள் " நவாலி" வந்தடைந்தன.

வரவேற்றது "சென் பீற்றர்ஸ் தேவாலயம்".

இனிக் கொஞ்சம் ஆறலாமென

சுவாசம் சீரானது.

"வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே

என்னிடம் வாருங்கள்

நானுங்களுக்கு ஆறுதல் தருவேன்" என்றது அசரீரி.

வாருங்கள் என்று அகலத் திறந்து கிடந்தன

தெய்வத் திருச்சபையின் கதவுகள்.

அச்சமில்லை அமருங்களென்று

கட்டளையிட்டது கூரைச்சிலுவை.

"பேதுருவானவரே!

நாம் செய்த தவறென்ன?

ஏனெங்கள் கூடு கலைந்து போனது? என்றபடி

எல்லோரும் ஆறியிருந்த போதுதான்

அது நடந்தது.

இரைச்சலிட்டபடி வந்த கொலைப்பறவை

ஆறுகுண்டுகளைப் பீச்சிவிட்டுப் போக

"ஐயோ!" புழுதி மேகத்துள்ளே

உலகத்தை உலுக்கியது கதறல்

உணர்வு திரும்பிய போது

உலகமே இருண்டு கிடந்தது.

குப்பென்றடித்தது பிணவாடை.

நொடிக்குள் நூறு உடல்கள் குதறப்பட்டு

சிதறிக்கிடந்தன அவயவங்கள்.

அந்தச் சதைக் குவியலுக்குள்ளேதான்

ஒரு தாமரைப் பூவும் கிடந்தது.

புழுதி பூசப்பட்டு குருதி வழிந்தபடி

அழகிய கவிதையொன்று கிடந்தது.

பஞ்சுப் பொதி போன்ற பிஞ்சொன்று

பிளந்து கிடந்தது.

கருப்பை வாசல் கடந்து வந்து

ஆறுமாதங்கள் கூட ஆகாத "கற்பகப்பூ"

கருகிக் கிடந்தது.

உலகமெங்கும் அரசோச்சும்

மனித உரிமைகளின் மனச் சாட்சிகளே!

என்ன செய்யும் உத்தேசம்?

ஏவிவிட்ட பாவி இன்னும் இருக்கின்றாள்.

"ரீவி" யில் முகம் காட்டுகின்றாள்.

குளிர்ந்த நிலவின் பெயர் அவளுக்கு

அவளும் கருப்பை சுமந்தவள்.

அடையாளம் தெரிகிறதா?

அவளுக்கு என்ன தீர்ப்பு எழுதுவீர்?

புதுவை இரத்தினதுரை

ஆடி-ஆவணி, 1995

இந்த கோரக்காட்ச்சியை பார்க்கவேண்டிய தருணம் எனக்கு ஏற்பட்டது...! மிகவும் சோகமான சூழல் பதட்டமான நிலையில் அலைந்து மீட்பணியில் இருந்தவர்கள் எண்டு ஒரு கலப்பான மனநிலையை தந்த அந்த கனத்த மனநிலையயும் மறக்கமுடியாது...!

இறந்தவர்களுக்காகவும், இளந்தவர்களுக்காகவும் பிரார்த்தனைகள்...! :lol:

இந்த கோரக்காட்ச்சியை பார்க்கவேண்டிய தருணம் எனக்கு ஏற்பட்டது...! மிகவும் சோகமான சூழல் பதட்டமான நிலையில் அலைந்து மீட்பணியில் இருந்தவர்கள் எண்டு ஒரு கலப்பான மனநிலையை தந்த அந்த கனத்த மனநிலையயும் மறக்கமுடியாது...!

இறந்தவர்களுக்காகவும், இளந்தவர்களுக்காகவும் பிரார்த்தனைகள்...! :lol:

þó¾ì¦¸¡ÞÃò¨¾ô À¡÷ò¾£÷¸Ç¡ ¾Ä..???

¦¸¡Î¨Á¢Öõ ¦¸¡Î¨Á...

அடைக்கலம் தேடி வந்த இடத்திலே அவலச் சாவை எதிர்பார்த்து வந்திருப்பார்களா?

இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

þó¾ì¦¸¡ÞÃò¨¾ô À¡÷ò¾£÷¸Ç¡ ¾Ä..???

¦¸¡Î¨Á¢Öõ ¦¸¡Î¨Á...

operation lip forward (முன்னேறிப்பாய்தல்) நடவடிக்கையின் போது இராணுவத்தினர் மாதகல்(பண்டத்தரிப்பு) அராலி பொன்னாலை பகுதிகளால் முன்னேறி வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய் வரை(யாழ்ப்பாணத்து ஒரே ஆறு ஆன வளுக்கியாற்று கரை வரைக்கும்) முன்னேறி வந்த இராணுவத்துக்கு அஞ்சி நவாலி தேவாலயத்தில் தஞ்சம் அடைந்த சனத்துக்கு மேலதான் அந்த குண்டுகளை புக்காரா விமானம் போட்டது....!

அந்த கோரமான நிகழ்வுதான் புலிப்பாய்ச்சல் மூலம் இராணுவத்துக்கு அடுத்தநாளே மரண அடியை குடுக்க காரணம் ஆக்கியது.... இந்த சண்டையின் போது தலைவரை சண்டைக்களத்தின் முன்னணியில் வந்து நிண்டதை பார்த்த போராளிகள் வெலவெலத்து போன சம்பவமும் நடந்ததது...!

நவாலி தேவாலயத்தில கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நரபலி நாயகி" சந்திரிக்காவின் ஆட்சியில் நடாத்தப்பட்ட மிகப்பெரும் தமிழின அழிப்பு எனலாம். அன்றை காலப்பகுதியில் மக்களை கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் போன்றவற்றி தஞ்சமடைய சொல்லி விட்டு அதன் மேல் குண்டு களைப்பொழிந்தது சிறிலங்காவின் புக்காரா விமானங்கள்.

காலம் சொன்ன பதிலால் 1995ம் ஆண்டுக்கு பிற்பாடு புக்காரா விமானத்தின் பறப்பு தடைப்பட்டது. எழுந்து வானில் வட்டமிட்டவை, வளைந்து நெலிந்து வீழ்ந்து நொருங்கின.

நவாலி தேவாலயத்தில் பலியாகிய எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும், என் கண்ணீர் கலந்த வணக்கங்கள்

இதில கதிர்காமர் ஒரு அறிக்கைவிட்டவர். புலிகள் ஆலயத்துக்குள் இருந்து தாக்குதல் நடத்தினவை அதுதான் தாங்கள் திருப்பித் தாக்கினது என்று. அதையும் சேர்க்க வேணும் இதில..புக்காரா போல...அவரும் போயிட்டார் செயற்படாமல்..! :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.