Jump to content

முள்ளியவளையில் உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Recommended Posts

இங்கே நீங்கள் அடிக்கடி உதயனுக்கு எதிராக ஏன் துள்ளுவது என்றும் எனக்கு புரியவில்லை.....

 நாங்கள் துள்ளுவது மட்டும்தான் தெரிகிறது அவர்களுடைய தவறுகள் தங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

ஒரு சிலரைப் பாதுகாப்பதற்காக ஒரு பகுதி மக்களை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுவோர் என்று குற்றம்சாட்டி அவர்களை ஒதுக்கி நிரந்தரமாக  பிரித்துவிடாதீர்கள். தேசியத் தலைவரின் காலத்தில் இதெல்லாம் நடந்திருக்காது. அப்படி ஏதாவது நடந்திருந்தாலும் அடுத்தநாள் உதயன் முதல்பக்கத்தில் "தவறுக்காக வருந்துகிறோம்" என்ற செய்தி வந்திருக்கும். இதைத்தான் அங்குள்ள இளைஞர்களும் சொல்கிறார்கள்.  

தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வோர் அவர்களுடன் போய் கதைத்து உதயன்மூலம் வருத்தச் செய்தி வெளியிடவைத்திருக்கலாமே. ஆனால் அதற்குப் பதிலாக தங்கள் சக பாராளுமன்ற உறுப்பினரின் பத்திரிகைக்கு காவல்காரன் வேலையைத்தான் பார்க்கிறார்கள். வவுனியா நகரசபையில் அவர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

இந்த மக்கள் எல்லாம் யாரோட ஆக்கள் இவைக்கு பின்னாடி யாரு இருக்கினம் என்பதும் எமக்கு தெரியும் பாவம் மக்களை தங்கள் அரசியல் விபச்சாரத்திற்காக பயன் படுத்துகின்றார்கள்...that's all

நல்லவிடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள் வடக்கு கிழக்கு என்று ஏன் அடிக்கடி புடுங்கு படுகிறார்கள் என்று தெரியவில்லை..

மீதி  டிரைக்சன்ஸ் என்ன ஆச்சு ..?

eelam.gif

தென் கிழக்கு..?
வட கிழக்கு..?
வட மேற்கு..?

ஸ்ராட் மியுசிக்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயனை நியாயம் செய்ய விரும்பவில்லை. நிச்சயம் இந்தக் கவிதையை அந்த நோக்கத்தில் எழுதவில்லை எனச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.அதற்கான சந்தர்ப்பம் நிறையவே இருக்கின்றது. ஆனால் கேட்காமல் பிரச்சனைகளை வளர்ப்பது அதன் தவறு. மற்றும்படி வன்னி என்ன மாடு மேய்க்கவா இருக்கின்றது? யாழ்ப்பாணம் என்ன விபச்சாரத்துக்காக இருக்கின்றது என்று யாராவது கதைத்தால் நிச்சயம் அதை எம்மால் பொறுமையாக எப்படி ஏற்க முடியும்?

Link to comment
Share on other sites

உதயன் செய்தது தவறு. வன்னிப்பகுதி மாணவர்கள், மக்கள் பல வகைகளில்
புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அங்கு
கடமைக்குச் செல்லும் யாழ் மாவட்ட ஆசிரியர்களும் ஏனோ தானோ என சேவை
செய்கிறார்கள் என்பதும் உண்மை ஆனால் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முடித்து
வன்னிப்பகுதியில் ஆசிரியராக சேவை செய்யும் எனது நண்பன் ஒருவன் மிகவும்
அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறான். நான் 2010 ஊர் போனபோது அவனை சந்தித்து
பேசினேன். நல்ல கெட்டிக் காரப் பிள்ளைகள் ஆனால், பொருளாதாரத்திலே மிகவும்
பின்தங்கியிருப்பதால் ஒரு பேனை வாங்கவே கஷ்டப்படுவதாக சொன்னான். உடனே நான்
என்னிடமிருந்த ஒருதொகைப் பணத்தைக் குடுத்து யாராவது கஷ்டப்பட்ட
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வாங்கிக்குடு என்று கூறிவிட்டேன். உதயன்
போன்ற ஒரு பத்திரிக்கை வன்னி மாணவர்களை மாடுகளாக விளித்தது கடும்
கண்டனத்திற்கு உரியது. இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை.

கவிதையின் பொருளை திரிப்பதால் எந்த விதத்திலும் விதண்ட வாதிகள் பக்கமும் கவிதை திரும்பாது. "வன்னிக்கு போய் மாடு மேய்ப்பது" காலகாலமாக குடாநாட்டில் பாவிக்கப்படும் சொலவடையாக இருக்கும் போது  கவிதையில் வருபவர் ஆசிரியராக இருந்துவிட்டதால் மட்டும் "வன்னிக்கு போய் நான் எப்படி மாடு மேய்பேன்" என்பது மாணவர்களை குறிப்பிட்டதாகாது. 

இன்று வன்னியில் இருக்கும் நிலையை உதயன் எடுத்து விளக்கியிருக்கிறது. உதயன், தமிழ் மாகாணத்தில் தமிழ் விளங்காத ஆளுநரின் சர்வாதிகாரத்தை பற்றிய கவிதையை பிரசுரித்து தனது பங்கு ஆளுநர் எதிர்ப்பை செய்கிறது.

கண்ணை மூடிக்கொண்டு உதயன் மீது பாயும் தும்பளையான்  வன்னி நிலமையை தான் தான் புதிதாக விளக்குவது போல சேம் சைட் கோல் அடித்து தான் எதிர்க்க வந்த உதயனை காப்பாற்றுகிறார். வன்னியில் இருப்பவை அரச பள்ளிகள். அவற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஆளுநர் தனிப்பட பொறுப்பு. ஆளுநரை தாக்கி எழுதிய கவிதையில் தும்பளையாளன் குறை காணுவதும், தனிப்பட்ட ஆசிரியர்கள் தமது விருப்பத்திற்கு மாறாக வன்னியில் சேவையாற்ற வருகிரார்கள் இல்லை என்பதும் தான் உண்மையில் மேட்டுக்குடித்தனம். ஆசிரியர்கள் ஏனோதானோ என்று சேவை செய்கிறார்கள் என்பது தனிப்பட்ட ஒருவரின் அளவு. ஆனால் அது உண்மையாயின் அது ஆளுநரின் பொறுப்பு.

தமிழ் தெரியாத துவேசியான ஆளுநருக்கு ஆங்கிலத்தில் கடிதம் தேவைப்படும் போது  ஆங்கிலம் தெரிந்த ஓரிருவர் தொடந்து துரத்தப்படுவதாக கவிதையின் பின் புலம் அமைகிறது. இது யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஆளுநரின் ஆட்சிக்காலம் போன்ற தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வித்தகமையின் விழுக்காட்டை காட்டுகிறது. மேலும் ஆசிரியர் ஒருவர் ஆங்கில உதவிக்கு கோரிக்கையை விடும் போது அது இன்னமும் தர விழுக்காட்டை காட்டுகிறது. கவிதை யாழ்ப்பாண மக்களின் இன்றைய நிலை, தொடர்ந்து மறுக்கப்பட்ட நீதிகளுக்கு அப்பீல் எழுவதுதான் என்பது போலக் காட்ட முயல்கிறது. மேலும் பாடலில் காணப்படும் திரிக்கப்படும் வரிகள், பாடலில் வரும் கதாநாயகனுடையதாகவும் காட்டப்படவில்லை. இவற்றுக்குமேலால் கதாநாயகனின் மனமொடிந்த நிலையை காட்டும் பாடல் கதாநாயகன் புலம்புவதாக மட்டும் காட்டுகிறதேயல்லாமல், இயல்பான வழக்கை ஒன்றில் பேசும் தத்துவங்களாக  காட்டவில்லை.

தும்பளையானின் குழப்பம், கவிதையை கிரகிக்க விரும்பாமல் திரிக்கு திரி தனது வேறுபட்ட அபிப்பிராயங்களை போட்டு எழுதுகிறார். இந்த கவிதையின் பொருளை விவாரிக்காமல் யாழ்ப்பணத்தவர்தான் வன்னியின் கல்வித்தரத்தை தாழ்த்தி வைத்திருப்பத்தாக குறை சாட்டுகிறார். கண் மூடித்தனமாக பாடலில் மாணவர்களை மாடுகள் என்று அழைக்கப்பட்டிருப்பதாக வியாக்கியாணம் பண்ணுகிறார்.

பாடல் ஆசிரியர் சாடுவது ஆளுநரை. பாடசாலைகள் பாடசாலைகளாக இல்லாமல் மாடுகள் உறையும் இல்லங்களாக ஆளுநரால் வைக்கப்பட்டிருக்கும் போது,  ஒவ்வொரு வாத்தியாரும் தனது (கற்பனை) நண்பனை போல சமூகத் தொண்டனாக இல்லை என்கிறார் தும்பளையான். அதில் மேலும் காட்ட அவசரப்படுவது  தனது தானங்களை விளம்பரப் படுதுவதாகும். ஆனாலும் அந்த ஆசியர்கள் படும் அதே கஸ்டத்தை பட்டு தனது நண்பன் போல வன்னியில் தொழில் ஆற்றமல் ஏன் அவுஸ்திரேலியாவில் வந்து இருக்கிறார் என்றதற்கு விளக்கம் வைத்திருக்கிறார். ஆனல் வன்னி போகாத ஆசிரியர்களைத் தூற்றுகிறார். இதுதான் மேட்டுக்குடித்தனம்.

தும்பளையானிடம் பணம் வாங்கி பள்ளி மாணவர்களுக்கு பேனை வாங்கித்தான் நண்பர் பாடம் சொல்லிகொடுக்கும் அளவில் வன்னி பள்ளிகளை வடமாகாண ஆளுநர் மாடுத்தொழுவங்களுக்கு சமனாக வைத்திருப்பதாக எழுதும் தும்பளையான்,  அங்கு செல்லும் ஆசியர்கள் மாடுமட்டும்தான் மேய்க்க முடியும், அங்கு ஆசிரியத் தொழில் செய்ய முடியாது என்ற தனது கருதையே உதயன் எழுதிய தவறாக தான் வருணிக்கிறார்.

தும்பளையான் திரிக்கு திரி குழப்பக் கருத்துக்கள் எழுதுகிறார். இங்கே வன்னி மாணவர்களுக்கு பாவிக்க பேனை இல்லை என்று எழுதுகிறார். யாழ்ப்பாண ஆசியர்கள் தமது விரும்பிய இடத்தில் சேவை செய்ய கூடிய உரிமைகளை கைவிட்டு விட்டு தேவானந்தாவால் தண்டனை மாற்றம் கொடுக்கும் போது வன்னிக்கு போகாததால் அங்கே முறையாக படிப்பிக்க ஆசிரியர்கள் இல்லை என்று எழுத்துகிறார். இந்த நிலையில் இன்னொரு திரியில்  95% மானவர்கள் இலங்கையில் படித்தவர்கள் என்றும் 60% மானவர்கள்தான் தமிழர் வாழும் புலம் பெயர் நாடுகளில் படித்தவர்கள் என்று சாத்திரியார் எழுதிய கருத்தை ஆதரித்தார். (உண்மையான நிலை Literacy Level  தான் இலங்கையில் 93-94 வீதம் இது கையெழுத்துப்போட்டு, எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள் மட்டும்தான். தமிழர் வாழும் எல்லாப் புலம் பெயர் நாடுகளிலும் இது 100% க்குகிட்ட. மேலும் இலங்கை மாணவர்களில் 16 வீதம் மட்டும் தான் பட்டபடிப்புக்கு போக பல்கலைக் கழக்க அனுமதி கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவிலேயே பட்டம் பெற்றவர்களின் கணக்கு 60 வீதம். இது புலம் பெயர் தமிழர் வாழும் சில ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி,நோர்வே போன்றவற்றில்  இன்னமும் கூட.) எப்படித்தான் தும்பளையானுக்கு இரண்டையும் சமன்செய்ய முடிகிறதோ தெரியவில்லை.

இதே தும்பளையான் அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மருத்துவர்கள்  அவுஸ்த்திரேலியாவில்முன்னேற்றம் கணாத இடங்களில் சேவை செய்து முழு அனுமதி பெறுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அப்படியானால்  உதயனின் கவிதையில் குறை சாட்டப்படும் ஆளுநர் அப்படி ஆர்வம் கூட்டும் லாபங்களை வன்னியில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு அளித்து அந்த இடங்களுக்கு ஆசியர்களை தாமாக செல்லவைக்காமல் ஏன்  தேவாந்தா தண்டிக்கவிரும்பும் போது பேனை தன்னும் இல்லாதா வன்னிக்கு மாணவர்களுக்கு படிப்பிக்க அனுப்புகிறார் என்பதை கூறுவாரா?.

ஆங்கிலத்தில் தபால் எழுத தெரியாத ஆசிரியர்கள் கூட சேவையாற்ற மறுக்கும் நிலையில் ஆளுநர் வன்னி பள்ளிகளை வைத்திருக்கிறார் என்பதும், ரூசியாவில் சைபீரிக்கவுக்கு மாற்றித் தண்டிப்பது போலத்தான் வன்னிக்கு மாற்றி தண்டிக்கிறார்கள் என்பதும் தான் உண்மை. இதைத்தான் கவிதை சொல்ல வருகிறது. உதையன் மீது மான நட்ட வழக்குகளை போட்டுவிட்டு வருமனத்திற்கு பார்த்திருக்கும் ஆளுநரின் அடிவருடிகள் தாங்கள் எப்படி யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் தமிழ் எழுதி பிடித்தார்களோ அப்படியே தமது தரங்குறைந்த தமிழ் அறிவை வைத்து கவிதைக்கு பொருள் கூறுகிறார்கள். இதைத்தான் புலம் பெயர் வித்துவான் இங்கே இறக்குமதி செய்கிறார்கள்.

கருத்தை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கும் தும்பளையானுக்கு  கவிதையின் பொருள் விளங்காததில் ஒரு ஆச்சரியமும் இல்லை. 

1. வன்னிப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தவர்கள் வேண்டுமென்றே  புறக்கணிக்கிறார்கள் என்ற வாதாடத்தை இங்கே வைக்க முயல்வது அது யாழ்ப்பாணாக் குடாநாட்டினர் துவேசிகள்  என்ற கருத்தை திணிக்க முயல்வது போல படுகிறது. இதை, தும்பளையானின் கருத்தை ஆதரித்து எழுதிய சண்டமாருதன், உதயன் செய்தது தவறு என்பதை காட்ட குட்டாநாட்டவரை தாழ்தும் போது பிரயோகிக்கும் துவேச சொல்லான யாழ்ப்பாணிகள் என்ற சொல்லைப் பாவித்து காட்டிவைத்திருக்கிறார். இதில் தும்பளையான் "உதயன் செய்தது தவறு." என்று ஆரம்பித்து "இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை" என்று முடிப்பதால் என்ன சொல்ல வருகிறார்? தும்பளையான் சண்டமாருதனின் கருத்தை எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா?

2. நண்பன் "வன்னி மாணவர்கள் திறமைசாலிகள்" என்று கூறுகிறான் என்ற கூற்று திரிக்கப்ட்ட உதயனின் கவிதைக் கருத்தான வன்னி மாணவர்கள் மாடுகள் என்ற கருத்தை விட கேவலமான வகுப்புவாத  ஒன்று. அவர்களும் இவர்களும் ஒரே தாய் வயிற்றுத்தமிழர்கள் என்பதை தும்பளையானுக்கு நண்பன் தான்  படிக்கவேண்டியிருக்கிறது என்பது கேவலமானதொன்று. இதில் ஏன் இவர் இரண்டு கருத்து வைத்திருந்தார் என்பதற்கு அவர் தான் சுற்றி வளைத்து விளக்குவார், ஏன் எனில் உதயனின் கவிதையை தான் மட்டும் தான் சுற்றி வளைத்து விளக்கலாம் என்ற அவரின் நிலையிலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.

3.முதலில் கவிதைக்கு சரியான பொருளை அறிய முயன்றிருக்கலாம். ஆளுநர் ஏன் உதயனை வங்குரோத்தாக்கி மூட முயல்கிறார் என்றதை அறிய முயன்றிருக்கலாம்.  வன்னி பாடசாலைகளின் வசதிக்குறைவுக்கு, வன்னிக்கு வர மாட்டோமென்று அடம்பிடிக்கும் தனிப்பட்ட ஆசிரியகளை குறை கூறுவதாக நடித்து கொண்டு வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பிரதேச வாதங்களை துண்டி பாடசாலை மாணவர்களின் படிப்புகளை கெடுக்கும் ஆளுநரை ஆதரித்து உதயனை எதிர்க்க வேண்டுமா என்பதைப் பற்றி ஒருகணம், சிந்தித்திருந்திருக்கலாம்.

அரச அடியார்கள் விவரிப்பது போல வன்னியை யாழ்பாணிகள்தான் புறக்கணிக்கிறார்களா அல்லது அரசு தமிழரின் கல்வியை சிதைக்க அரச அடிவருடிகளை பாவிக்கிறதா என்பதை ஆட்சி கையில் இருந்த போது வன்னியில் நடந்தவை நிலைநாட்டிவிட்டுத்தான் போயிருக்கிறது. "வன்னி ரெக்" என்ற பெயர் தமிழ் வாசிகத்தெரிந்த தமிழன் ஒவ்வொருவன் மனத்தையும் விட்டு அகலாது.

அது மாணவர்களைத்தான் குறிப்பிடப்பட்டது என்பது வெளிப்படை உண்மை. அது தவறு என்று பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களே தொலைபேசியில் பேசியபோது தெரிவித்தார். ஏற்கனவே இக் கவிதைக்கு உதயனின் வன்னிப் பதிப்பில் மட்டும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

மாணவர்களின் கோபத்துக்கு கவிதை மட்டும் காரணமல்ல உதயனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அமைச்சர் ரிசாட்டின் ஆட்கள் என செய்தி வெளியிட்டதும் ஒரு காரணம் என்தைத் தெரிவித்தேன். அதற்கு அவர் விஜிதன் என்ற ஒரு அரச ஆதரவாளர் அதற்குள் தொடர்புபட்டிருந்ததால்தான்  அப்படிச் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். ஒருவருக்காக அனைவரையும் அரச ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டது தவறு என்பதை அவரிடம் தெரிவித்தேன்.

இந்தப் பிரச்சினையைக் காட்டி  ஈபிடிபி மற்றும் சிறீரெலோ 6 பேரை மட்டும் வைத்து வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக தெரிவித்தார். இப்பிரச்சினையை வளரவிடுவது தமிழ்ச் சமூகத்துக்கு நல்லதல்ல  எனவும் தான் ஒரு அறிக்கைவிடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் தெரிவித்தார். 

ஒரு வெளியீடு முதல் கருத்தை விட இன்னொரு கருத்தையும் காட்டுகிறதாயின் எந்த பத்திரிகையும் மன்னிப்பு கோரும். ஆனால் சரபணவன் ஆசிரியர் இல்லை என்பதால் தான்  மன்னிப்பு கேட்டது தவறு. மேலும் அந்த மன்னிப்பில் மாணவர்கள் மாடுகள் என அழைக்கபட்டிருப்பதால் மன்னிப்பு கேட்கப்படுவத்தாகவும் ஒத்துக்கொள்ளப்பட்டதா?

ஊர்பூராயத்தால், உதயன் வன்னி பதிவில் உதயன் மன்னிப்பு கேட்டபின் ஏன் அதை போகவிட முடியவில்லை என்பதை கூற முடியுமா?

"வன்னியில் மாடு மேய்ப்பது"  அழகான சொல் பிரயோகம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது மாணாக்கர்களை மாடுகள் என்றும், ஆசிரியர்களை மேய்பன் என்றும் பொருளில் வைத்து கூறப்படுவதல்ல. அது வன்னி அந்த காலம் தொடக்கம் பின் தங்கிய மாவட்டம் என்பதை நக்கலாக குறைத்து பேச வந்தது.

இதைபற்றி அரசபந்தம் இல்லாத ஆனால் தமிழர்கள் நம்பும் வலபுரி போன்ற பத்திரிகைகள் என்ன பிரசுரித்திருக்கிறார்கள்?

அது உதயன் நிர்வாகம்  எழுதிய ஆக்கம் இல்லை என்றும் அந்தக் கவிதைத் தொடருடன் பார்க்கும்போது அது மாணவர்களைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை சரவணபவன் மட்டுமல்ல சக பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அக்கவிதை வன்னி மாணவர்களையும் வற்றாப்பளை அம்மனையும் புண்படுத்தியதையும் தான் ஏற்றுக்கொள்வதாக சரவணபவன் தெரிவித்தார். எப்படி அறிக்கைவரும் என்று எனக்குத் தெரியாது அறிக்கைவரும்போதுதான் பார்க்கலாம்.

அனைத்துப் பதிப்புக்களிலும் கவிதையை வெளியிட்டுவிட்டு வன்னிப்பதிப்பில்மட்டும் மன்னிப்பைக் கோரியதை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அத்துடன் மன்னிப்பை உள்பக்கதில் தெரிவித்துவிட்டு பத்திரிகையின் முதல் பக்கத்தில் அமைச்சர் ரிசாட்டின் ஆட்கள்தான் உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று செய்தி பிரசுரித்தது அவர்ளைக் கோபப்படுத்தியுள்ளது. 

நான் இருதரப்புடன் கதைத்தவரையில் இருதரப்பிலும் நியாயங்களும் இருக்கின்றது தவறுகளும் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நான் முயற்சி செய்துகொண்டிருந்தேன். இன்று சரவணபவான் அறிக்கைவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கின்றேன்.

வலம்புரி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்காது என நினைக்கின்றேன். உதயன் அவர்களுடைய போட்டி ஊடகம்   என்ற நிலையில் அவர்கள் கருத்துத் தெரிவித்தால் வியாபாரப் போட்டியால்தான் இப்படிச் செய்கிறார்கள் என்ற பேச்சு எழலாம்.

Link to comment
Share on other sites

கவிதையின் பொருளை திரிப்பதால் எந்த விதத்திலும் விதண்ட வாதிகள் பக்கமும் கவிதை திரும்பாது. "வன்னிக்கு போய் மாடு மேய்ப்பது" காலகாலமாக குடாநாட்டில் பாவிக்கப்படும் சொலவடையாக இருக்கும் போது  கவிதையில் வருபவர் ஆசிரியராக இருந்துவிட்டதால் மட்டும் "வன்னிக்கு போய் நான் எப்படி மாடு மேய்பேன்" என்பது மாணவர்களை குறிப்பிட்டதாகாது. 

இன்று வன்னியில் இருக்கும் நிலையை உதயன் எடுத்து விளக்கியிருக்கிறது. உதயன், தமிழ் மாகாணத்தில் தமிழ் விளங்காத ஆளுநரின் சர்வாதிகாரத்தை பற்றிய கவிதையை பிரசுரித்து தனது பங்கு ஆளுநர் எதிர்ப்பை செய்கிறது.

கண்ணை மூடிக்கொண்டு உதயன் மீது பாயும் தும்பளையான்  வன்னி நிலமையை தான் தான் புதிதாக விளக்குவது போல சேம் சைட் கோல் அடித்து தான் எதிர்க்க வந்த உதயனை காப்பாற்றுகிறார். வன்னியில் இருப்பவை அரச பள்ளிகள். அவற்றின் ஒவ்வொரு நிலைக்கும் ஆளுநர் தனிப்பட பொறுப்பு. ஆளுநரை தாக்கி எழுதிய கவிதையில் தும்பளையாளன் குறை காணுவதும், தனிப்பட்ட ஆசிரியர்கள் தமது விருப்பத்திற்கு மாறாக வன்னியில் சேவையாற்ற வருகிரார்கள் இல்லை என்பதும் தான் உண்மையில் மேட்டுக்குடித்தனம். ஆசிரியர்கள் ஏனோதானோ என்று சேவை செய்கிறார்கள் என்பது தனிப்பட்ட ஒருவரின் அளவு. ஆனால் அது உண்மையாயின் அது ஆளுநரின் பொறுப்பு.

தமிழ் தெரியாத துவேசியான ஆளுநருக்கு ஆங்கிலத்தில் கடிதம் தேவைப்படும் போது  ஆங்கிலம் தெரிந்த ஓரிருவர் தொடந்து துரத்தப்படுவதாக கவிதையின் பின் புலம் அமைகிறது. இது யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஆளுநரின் ஆட்சிக்காலம் போன்ற தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வித்தகமையின் விழுக்காட்டை காட்டுகிறது. மேலும் ஆசிரியர் ஒருவர் ஆங்கில உதவிக்கு கோரிக்கையை விடும் போது அது இன்னமும் தர விழுக்காட்டை காட்டுகிறது. கவிதை யாழ்ப்பாண மக்களின் இன்றைய நிலை, தொடர்ந்து மறுக்கப்பட்ட நீதிகளுக்கு அப்பீல் எழுவதுதான் என்பது போலக் காட்ட முயல்கிறது. மேலும் பாடலில் காணப்படும் திரிக்கப்படும் வரிகள், பாடலில் வரும் கதாநாயகனுடையதாகவும் காட்டப்படவில்லை. இவற்றுக்குமேலால் கதாநாயகனின் மனமொடிந்த நிலையை காட்டும் பாடல் கதாநாயகன் புலம்புவதாக மட்டும் காட்டுகிறதேயல்லாமல், இயல்பான வழக்கை ஒன்றில் பேசும் தத்துவங்களாக  காட்டவில்லை.

தும்பளையானின் குழப்பம், கவிதையை கிரகிக்க விரும்பாமல் திரிக்கு திரி தனது வேறுபட்ட அபிப்பிராயங்களை போட்டு எழுதுகிறார். இந்த கவிதையின் பொருளை விவாரிக்காமல் யாழ்ப்பணத்தவர்தான் வன்னியின் கல்வித்தரத்தை தாழ்த்தி வைத்திருப்பத்தாக குறை சாட்டுகிறார். கண் மூடித்தனமாக பாடலில் மாணவர்களை மாடுகள் என்று அழைக்கப்பட்டிருப்பதாக வியாக்கியாணம் பண்ணுகிறார்.

பாடல் ஆசிரியர் சாடுவது ஆளுநரை. பாடசாலைகள் பாடசாலைகளாக இல்லாமல் மாடுகள் உறையும் இல்லங்களாக ஆளுநரால் வைக்கப்பட்டிருக்கும் போது,  ஒவ்வொரு வாத்தியாரும் தனது (கற்பனை) நண்பனை போல சமூகத் தொண்டனாக இல்லை என்கிறார் தும்பளையான். அதில் மேலும் காட்ட அவசரப்படுவது  தனது தானங்களை விளம்பரப் படுதுவதாகும். ஆனாலும் அந்த ஆசியர்கள் படும் அதே கஸ்டத்தை பட்டு தனது நண்பன் போல வன்னியில் தொழில் ஆற்றமல் ஏன் அவுஸ்திரேலியாவில் வந்து இருக்கிறார் என்றதற்கு விளக்கம் வைத்திருக்கிறார். ஆனல் வன்னி போகாத ஆசிரியர்களைத் தூற்றுகிறார். இதுதான் மேட்டுக்குடித்தனம்.

தும்பளையானிடம் பணம் வாங்கி பள்ளி மாணவர்களுக்கு பேனை வாங்கித்தான் நண்பர் பாடம் சொல்லிகொடுக்கும் அளவில் வன்னி பள்ளிகளை வடமாகாண ஆளுநர் மாடுத்தொழுவங்களுக்கு சமனாக வைத்திருப்பதாக எழுதும் தும்பளையான்,  அங்கு செல்லும் ஆசியர்கள் மாடுமட்டும்தான் மேய்க்க முடியும், அங்கு ஆசிரியத் தொழில் செய்ய முடியாது என்ற தனது கருதையே உதயன் எழுதிய தவறாக தான் வருணிக்கிறார்.

தும்பளையான் திரிக்கு திரி குழப்பக் கருத்துக்கள் எழுதுகிறார். இங்கே வன்னி மாணவர்களுக்கு பாவிக்க பேனை இல்லை என்று எழுதுகிறார். யாழ்ப்பாண ஆசியர்கள் தமது விரும்பிய இடத்தில் சேவை செய்ய கூடிய உரிமைகளை கைவிட்டு விட்டு தேவானந்தாவால் தண்டனை மாற்றம் கொடுக்கும் போது வன்னிக்கு போகாததால் அங்கே முறையாக படிப்பிக்க ஆசிரியர்கள் இல்லை என்று எழுத்துகிறார். இந்த நிலையில் இன்னொரு திரியில்  95% மானவர்கள் இலங்கையில் படித்தவர்கள் என்றும் 60% மானவர்கள்தான் தமிழர் வாழும் புலம் பெயர் நாடுகளில் படித்தவர்கள் என்று சாத்திரியார் எழுதிய கருத்தை ஆதரித்தார். (உண்மையான நிலை Literacy Level  தான் இலங்கையில் 93-94 வீதம் இது கையெழுத்துப்போட்டு, எழுத்துக் கூட்டி வாசிப்பவர்கள் மட்டும்தான். தமிழர் வாழும் எல்லாப் புலம் பெயர் நாடுகளிலும் இது 100% க்குகிட்ட. மேலும் இலங்கை மாணவர்களில் 16 வீதம் மட்டும் தான் பட்டபடிப்புக்கு போக பல்கலைக் கழக்க அனுமதி கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவிலேயே பட்டம் பெற்றவர்களின் கணக்கு 60 வீதம். இது புலம் பெயர் தமிழர் வாழும் சில ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி,நோர்வே போன்றவற்றில்  இன்னமும் கூட.) எப்படித்தான் தும்பளையானுக்கு இரண்டையும் சமன்செய்ய முடிகிறதோ தெரியவில்லை.

இதே தும்பளையான் அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மருத்துவர்கள்  அவுஸ்த்திரேலியாவில்முன்னேற்றம் கணாத இடங்களில் சேவை செய்து முழு அனுமதி பெறுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அப்படியானால்  உதயனின் கவிதையில் குறை சாட்டப்படும் ஆளுநர் அப்படி ஆர்வம் கூட்டும் லாபங்களை வன்னியில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு அளித்து அந்த இடங்களுக்கு ஆசியர்களை தாமாக செல்லவைக்காமல் ஏன்  தேவாந்தா தண்டிக்கவிரும்பும் போது பேனை தன்னும் இல்லாதா வன்னிக்கு மாணவர்களுக்கு படிப்பிக்க அனுப்புகிறார் என்பதை கூறுவாரா?.

ஆங்கிலத்தில் தபால் எழுத தெரியாத ஆசிரியர்கள் கூட சேவையாற்ற மறுக்கும் நிலையில் ஆளுநர் வன்னி பள்ளிகளை வைத்திருக்கிறார் என்பதும், ரூசியாவில் சைபீரிக்கவுக்கு மாற்றித் தண்டிப்பது போலத்தான் வன்னிக்கு மாற்றி தண்டிக்கிறார்கள் என்பதும் தான் உண்மை. இதைத்தான் கவிதை சொல்ல வருகிறது. உதையன் மீது மான நட்ட வழக்குகளை போட்டுவிட்டு வருமனத்திற்கு பார்த்திருக்கும் ஆளுநரின் அடிவருடிகள் தாங்கள் எப்படி யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்தில் தமிழ் எழுதி பிடித்தார்களோ அப்படியே தமது தரங்குறைந்த தமிழ் அறிவை வைத்து கவிதைக்கு பொருள் கூறுகிறார்கள். இதைத்தான் புலம் பெயர் வித்துவான் இங்கே இறக்குமதி செய்கிறார்கள்.

கருத்தை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கும் தும்பளையானுக்கு  கவிதையின் பொருள் விளங்காததில் ஒரு ஆச்சரியமும் இல்லை. 

1. வன்னிப்பகுதி மாணவர்களை யாழ்ப்பாணத்தவர்கள் வேண்டுமென்றே  புறக்கணிக்கிறார்கள் என்ற வாதாடத்தை இங்கே வைக்க முயல்வது அது யாழ்ப்பாணாக் குடாநாட்டினர் துவேசிகள்  என்ற கருத்தை திணிக்க முயல்வது போல படுகிறது. இதை, தும்பளையானின் கருத்தை ஆதரித்து எழுதிய சண்டமாருதன், உதயன் செய்தது தவறு என்பதை காட்ட குட்டாநாட்டவரை தாழ்தும் போது பிரயோகிக்கும் துவேச சொல்லான யாழ்ப்பாணிகள் என்ற சொல்லைப் பாவித்து காட்டிவைத்திருக்கிறார். இதில் தும்பளையான் "உதயன் செய்தது தவறு." என்று ஆரம்பித்து "இதில் பிரதேச வாதமோ யாழ்ப்பாணியமோ இல்லை" என்று முடிப்பதால் என்ன சொல்ல வருகிறார்? தும்பளையான் சண்டமாருதனின் கருத்தை எதிர்க்கிறாரா அல்லது ஆதரிக்கிறாரா?

2. நண்பன் "வன்னி மாணவர்கள் திறமைசாலிகள்" என்று கூறுகிறான் என்ற கூற்று திரிக்கப்ட்ட உதயனின் கவிதைக் கருத்தான வன்னி மாணவர்கள் மாடுகள் என்ற கருத்தை விட கேவலமான வகுப்புவாத  ஒன்று. அவர்களும் இவர்களும் ஒரே தாய் வயிற்றுத்தமிழர்கள் என்பதை தும்பளையானுக்கு நண்பன் தான்  படிக்கவேண்டியிருக்கிறது என்பது கேவலமானதொன்று. இதில் ஏன் இவர் இரண்டு கருத்து வைத்திருந்தார் என்பதற்கு அவர் தான் சுற்றி வளைத்து விளக்குவார், ஏன் எனில் உதயனின் கவிதையை தான் மட்டும் தான் சுற்றி வளைத்து விளக்கலாம் என்ற அவரின் நிலையிலிருந்து அதை புரிந்து கொள்ளலாம்.

3.முதலில் கவிதைக்கு சரியான பொருளை அறிய முயன்றிருக்கலாம். ஆளுநர் ஏன் உதயனை வங்குரோத்தாக்கி மூட முயல்கிறார் என்றதை அறிய முயன்றிருக்கலாம்.  வன்னி பாடசாலைகளின் வசதிக்குறைவுக்கு, வன்னிக்கு வர மாட்டோமென்று அடம்பிடிக்கும் தனிப்பட்ட ஆசிரியகளை குறை கூறுவதாக நடித்து கொண்டு வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பிரதேச வாதங்களை துண்டி பாடசாலை மாணவர்களின் படிப்புகளை கெடுக்கும் ஆளுநரை ஆதரித்து உதயனை எதிர்க்க வேண்டுமா என்பதைப் பற்றி ஒருகணம், சிந்தித்திருந்திருக்கலாம்.

அரச அடியார்கள் விவரிப்பது போல வன்னியை யாழ்பாணிகள்தான் புறக்கணிக்கிறார்களா அல்லது அரசு தமிழரின் கல்வியை சிதைக்க அரச அடிவருடிகளை பாவிக்கிறதா என்பதை ஆட்சி கையில் இருந்த போது வன்னியில் நடந்தவை நிலைநாட்டிவிட்டுத்தான் போயிருக்கிறது. "வன்னி ரெக்" என்ற பெயர் தமிழ் வாசிகத்தெரிந்த தமிழன் ஒவ்வொருவன் மனத்தையும் விட்டு அகலாது.

பேப்பர் காரனே தான் செஞ்சது பிழை எண்டு ஒத்துக்கொள்ளுறான் இஞ்சை ஒருத்தர்

அவங்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் :lol: . பந்தி பந்தியாக எழுதி இருக்கிறியள்

ஒரு இழவும் விளங்கயில்லை <_< . முதலாவது பந்தி மட்டும் தான் வாசிச்சனான்.

சுருக்கமா தெளிவா சொல்லுங்கோ :huh:

Link to comment
Share on other sites

உதயன் விநியோகப் பணியகம் மீதான தாக்குதல் – அனைத்துலக ஊடகங்களில் முக்கியத்துவம் [ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 14:53 GMT ] [ தா.அருணாசலம் ]

uthayan.jpg

உதயன் நாளிதழின் கிளிநொச்சி விநியோகப் பணியகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. 

கிளநொச்சியில் உள்ள உதயன் விநியோகப் பணியகம் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில். மூன்று பணியாளர்கள் காயமடைந்தனர். 

அத்துடன் விநியோக வாகனங்களும், விநியோக் பணியகமும் அடித்த நொருக்கப்பட்டன.

சிறிலங்கா அரசின் பின்புல ஆதரவுடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. 

இந்தத் தாக்குதலுக்கு எதிராக சிறிலங்காவிலும், தமிழ்நாட்டிலும் கடும் கண்டனம் எழுந்துள்ள அதேவேளை, வொசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களும், பெரும்பாலான இந்திய ஊடகங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. 

அதேவேளை, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் பர்தா பாஸ் என்ற ஹிந்தி நாளிதழின் ஆங்கில இணையப் பக்கத்தில், சிறிலங்காவில் இந்திய நாளிதழ் பணியகம் தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130403108045

உதயனை வன்னியால் ஓட்டிக்கலைக்க அப்பாவி மக்கள் கேடயமாக பாவிக்கப் படுகிறார்கள். 

வகுப்பில் பாடங்களை படிக்க சந்தர்ப்பம் கிடையாத இந்த அப்பாவிகள் கவிதையின் பொருளை பிழியாக விளங்கினாலும் பரவாயில்லை. ஆனால் உதயனால் தமது வியாபாரம் கெடுவோரை வைத்து அரசு இலகுவாக காரியம் சாதிக்கிறது. இதில் வெளிநாட்டு ஊடகங்கள் பாதிக்கப்படாமையால் வன்னியில் உதயன் இலக்கு வைக்கப்படுவதை பிரசுரிக்கின்றன.  

அவர்கள் கவிதை பொருளை பற்றி கதைக்க வில்லை.  தாக்குதலை பற்றிக்கதைக்கிறார்கள். நமது போட்டிகள் மறுவளமாக நடந்துகொள்கின்றன.

Link to comment
Share on other sites

அதே நேரம் தமிழ்லீடரால் திரிக்கப்பட்ட தலைப்பும் செய்தியும் கீழே

  உதயன் அலுவலகம் மீது தாக்குதல்; மக்களா? அரச தரப்பினரா? குழப்பத்தில் உதயன்!

— 

03/04/2013 at 8:36 am

 | no comments

photo-2-150x150.jpg

உதயன் நாளிதழின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாத குழு ஒன்று இன்று அதிகாலை 5 மணிக்குத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் , மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உதயன் தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :

வழமைபோன்று பத்திரிகைப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் – கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியி்ல் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆள்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அலுவலகம் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வன்னி மக்களை இழிவுபடுத்தும் வகையில் கவிதை வெளியிட்ட உதயன் பத்திரிகை, அது தொடர்பில் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பினை அரசின் நடவடிக்கையாக தோற்றங்காட்ட முற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தாக்குதல் மக்களைச் சாட்டி அரச சார்பினரால் மேற்கொள்ளப்பட்டதா? மக்கள் தான் மேற்கொண்டார்களா? என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் உதயன் நிர்வாக பீடம் குழப்பத்தில் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamilleader.com/?p=9422

Link to comment
Share on other sites

மல்லையூரான்

சரவணபவான் எங்களுடன் உரையாடிய உரையாடல் எம்மிடம் இருக்கிறது. கடந்த முறை தவறு பேசும்போது தமது பத்திரிகையில் வந்த கவிதை தவறு என்பதை ஒத்துக்கொண்டார் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தான் ஒரு அறிக்கைவிடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைப்பதாக உத்தரவாதம் அளித்தார். எந்தவித அறிக்கையும் வராததால் நேற்று இரவு 45 நிமிடங்கள் கதைத்தேன். கவிதை பிழைதான் என்று நேற்றுக் கதைக்கும்போதும் ஒத்துக்கொண்டார். இப்பிரச்சினை தானாக அடங்கிவிடும் அதனால் தான் அறிக்கை வெளியிடுவதைப்பற்றி யோசிக்கவில்லையெனக் குறிப்பிட்டார்.  வற்றாப்பளை அம்மன்கோயில் நிர்வாகிகளிடமும் வன்னியில் சில பாடசாலைகளுக்கும் நேரில் சென்று மாணவர்களிடமும் மன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிட்டார். அவரிடம் இது தொடர்பாக ஒரு பேட்டி  தரமுடியுமா என கேட்டபோது தான் எந்த ஊடகத்துக்கும் செவ்வி கொடுப்பதில்லை என தெரிவித்தார்.  அவர் அறிக்கைவிட வேண்டிய அவசியத்தைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது அவர் கண்டிப்பாக ஏதாவது செய்வதாகத் தெரிவித்தார். அவரின் நடவடிக்கைகாக இன்னும் சில நாட்கள் பார்க்கிறோம். தேவைப்பட்டால் அவர் பேசியது அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படும்.

தனது அரசியல் தேவைக்காக தமிழ்மக்களை பிரித்தாள நினைக்கும் ஒரு ஊடக வியாபாரிக்கெதிராக  மக்கள்போராட்டம் நடாத்தியபோது அதை மூடிமறைத்த ஊடகங்களுக்கு மத்தியில் நாம் அம்மக்களின் குரலாக ஒலித்தோம். மக்களை பிரித்தாண்டு அதில் ஆதாயம் தேட முற்படுவது உதயனா நாமா என்பதை காலம் முடிவுசெய்யட்டும். 

Link to comment
Share on other sites

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்..

Link to comment
Share on other sites

நீங்கள் சரவபவணைபற்றித்தான் கூட அக்கறை காட்டுக்கிறீர்கள். சரவணபவன் உங்களிடம் பேசும் போது கூடாவது எதையாவாது கூறியிருந்தால் உங்களிடம் இருக்கும் நிரூபங்களை வெளிவிடுவதுதான் ஊடக தர்மம். வெளிவிடுவேன் என மிரட்டுவது அல்ல. சரவணபவன் செய்யுளில் பிழை இருக்கு என்று உங்களிடம் கூறியிருந்தால் அதை பிரசுரிப்பது மிக மிக நல்லது. அதில் "கேள்வி: இந்த பாட்டில் எங்கே என்ன மாதிரி யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையில் இனத்துவேசம் கிளப்படுகிறது என்றும் அதை நீங்கள் உதயனில் பிரசுரிப்பதால் எப்படி அரசியல் லாபம் அடைகிறீர்கள்" என்றும் கெட்டு ஒரு பதில் பெற்றிருந்தால் அதை பிரசுரிப்பது கட்டாயம். இருந்தாலும் சரவணபவனின் சக பா,உ சிறிதரன் தான் பிரதானமாக வன்னியில் மக்களுடன் இருக்கும் அரசியல் வாதி.

எனது அக்கறை பிரதானமாக உதனைப் பற்றியதே. உணர்வுகளில் விழிப்பாக இருந்துவிடாத ஒரு பத்திரிகை ஆசிரியரை குற்றம் சாட்டி வன்னி மக்கள் மான நட்ட வழக்கு தொடந்து உதயனை மூடவைப்பதையே எதிர்க்கிறேன்.

கவிதையில் இருந்த சொலவடையை தனித்து சொற்களாக பொருள் பிரிப்பது பிழை. ஆனால் அதற்காக குடநாட்டில் பாவிக்கப்பட்டுவந்த " வன்னியில் போய் மாடா மேய்க்கப் போகிறாய்"  என்பது முன்னேற்றகரமானது என்பது எனது வாதம் அல்ல.

Link to comment
Share on other sites

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்..

கொலையை செய்தவர்களை விட உடந்தையாக இருந்தவர்களுக்கு உதைக்க வேண்டும்.உடந்தையாக இருந்து விட்டு  தப்பி  ஒடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? தப்பி ஓடியதும் காணாமல் இன்னொருவனை பார்த்து விரலை நீட்ட வெட்கம் என்ற ஒன்று இருக்க வேண்டும்.

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்.

இன்றும் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கும் சூடு சுறனை அற்ற தமிழன் இருக்கிறானே?

Link to comment
Share on other sites

தும்பளையான் இங்கு பலர் இன்னமும் "சிவாஜி செத்திட்டரா " என்ற நிலைதான்  .

உதயன் மன்னிப்பு கேட்டாலும் இல்லை நீங்கள் அந்த கருத்தில் எழுதவில்லை என்று தனக்கு தெரியும் என்பார்கள் .

போராட்ட காலத்தில் இனம் தெரியாத நபர்கள் செய்த கொலைகளுக்கு இப்படியான வியாக்கியானங்கள் எத்தனை பார்த்தம்..

திரியை சரியாக வாசிக்கவும். கவிதையை சரியாக வாசிக்கவும். உதயன் எதற்கு மன்னிப்பு கேட்டது என்பதையும் விளங்கப்படுத்தவும். துணிச்சல் இருந்தால் கவிதையை வரைக்கு வரி விபரித்து விளங்க வைக்கவும். அதன் பின்னர் யாருடையதாவது முந்தானைக்குள் ஒழித்திருந்து வீசும் அர்சுன்னின்  ஒரு வரி நக்கல் அம்புவிடும் பாண்டித்தியத்தை நாம் எதிர் கொள்ள முடியுமா இல்லையா என்று பார்க்கலாம்.

அது வரைக்கும் இல்லாத பிள்ளைக்கு தொட்டில் கட்டி தாலாட்டும் பொழுது போக்கு விடுதலை போராளிகளுக்கு  பதிலாக எழுத தக்கது ஒன்றும் இல்லை.

மல்லையூரான், சரியாய் சொன்னீங்க...

Link to comment
Share on other sites

கொலையை செய்தவர்களை விட உடந்தையாக இருந்தவர்களுக்கு உதைக்க வேண்டும்.உடந்தையாக இருந்து விட்டு  தப்பி  ஒடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? தப்பி ஓடியதும் காணாமல் இன்னொருவனை பார்த்து விரலை நீட்ட வெட்கம் என்ற ஒன்று இருக்க வேண்டும்.

Same side goal  அடித்துவிட்டீர்கள் நுணா .

Link to comment
Share on other sites

Same side goal  அடித்துவிட்டீர்கள் நுணா .

அது சரி நீங்களும் ஒரு பக்கத்துக்காக  கோல் அடிப்பது போல் பேசுகிறீர்களே. அது எந்தப்பக்கம்?

Link to comment
Share on other sites

Same side goal  அடித்துவிட்டீர்கள் நுணா .

அது உங்களின் பக்கம் தான். நடிக்கவும் தெரிகிறது என்பது புரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
    • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
    • உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
    • இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்; அருட்பணி அருட்செல்வன்! 17 JUN, 2024 | 02:25 PM ( எம்.நியூட்டன்) இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும், தமிழர்கள் போரில்  தேற்றுப்போன இனம் என்று  கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன இனம் இல்லை என அருட்பணி அருட்செல்வன் தெரிவித்தார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா வின் 17ஆவது சர்வதேச மாநாடு  அண்மையில்  யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது இந் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,   நான் தமிழன், எங்கள் மொழி தமிழ்மொழி, தமிழ் இனத்தவன் என்கின்ற மாபெரும் சமூகத்திலே நாங்கள் நீந்திக்கொண்டிருக்கின்றோம். தமிழ் என்று சொல்லும்போது மொழியின் தொன்மை, பண்பாட்டு சிறப்புகள் நாங்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் நாங்கள் தமிழனாக இந்த உலகிலே  பூமி பந்தில் பிறந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் . இங்கு பல மொழியியலாளர்கள், ஆராட்சியாளர்கள் கூட தமிழ் மொழியில் சிறப்பியல்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையிலே எம் இனம் தோற்றும் போன இனமாக பேரினிலே போராட்டத்திலே  அழிவுகளைச் சந்தித்து நாங்கள் ஒடுக்கப்பட்ட தோற்றுப்போன விழிம்பிலே இருக்கிற இனமாக பார்க்கப்பட்டாலும், கருதப்பட்டாலும் நாங்கள் பண்பாடு சார்ந்த வாழ்வியலில் தோற்றுப் போன மக்கள் இனம் இல்லை மொழியினுடைய விசாலமான செழுமை சார்ந்து தோற்றுப்போன இனம் இல்லை அதனால்  எங்களுக்கென்று கடமை பொறுப்பு இன்றும் அதிகமாகவே இருக்கின்றது.   எங்களுக்குள்  தமிழ் அறிஞர்கள் இருக்கின்றோம் , தமிழ் ஆராச்சியாளர்களாக இருக்கின்றோம் பெருமைக்குரிய விடையம் ஆனால் அதனையும் கடந்து எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் உணர்வு அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.  அதுதான் இன்றைய  காலத்தின் தேவையாகவும் காலத்தின் அவசர அழைப்பாகவும் இருக்கின்றது தமிழன் என்று பேசலாம் ஆனால் தமிழர் உணர்வு  என்கின்ற அந்த உள் உணர்வு தீயாகப் பற்றி எரியவேண்டும் தமிழன் என்று  நாங்கள் பெரியளவில் பேசி தம்பட்டம் அடிக்கக முடியாத நிலைக்கு எங்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டுள்ளன.  ஆனாலும் ஏங்களின் உணர்வுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது எங்களிடம் இருக்கின்ற அந்த தமிழ் எண்ணங்களை தமிழ் சார்ந்த விழுமியங்களை தமிழ் சார்ந்த பண்பாடுகளை நாகரீகங்களை யாராலும  அழித்து விடமுடியாது ஆகவே இந்த பண்பாடு சிந்திக்க தோன்றுகின்றது.   ஒரு கட்டத்திலே தமிழ் பண்பாடுகளை கட்டிக் காக்கின்ற பாதுகாவலர்களாக இருந்தாலும் எங்களுக்கு என்று  தமிழ் உணர்வாளர்கள்  இருக்கின்ற பண்பாடு இருக்கின்றது என்கின்ற எண்ணங்களில் இருந்து ஒரு போது விலக முடியாது .  எங்களின் பண்பாட்டை எண்ணெய்யும் தண்ணீராயும் கலக்கமுடியாதே அதே போன்று தாமரை இதழிலே விழுகின்ற தண்ணீர் துளி அதனனூடு சேர்ந்து கொள்ளாதோ ஓடும் புளியம் பழமும் போன்று இருப்பது போன்று நாங்கள் தனித்துவமான அதற்காககத்தான் நாங்கள் இந்தப் பண்பாட்டை எங்களின் தமிழ் மொழியின் சிறப்புக்களை நாங்கள் கண்டு பிடிக்க முனைவது போன்று இளைய தலைமுறையினரை    பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்  என்றார். https://www.virakesari.lk/article/186270
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.