Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் - சிங்கள இனவாதி அர்ஜுன ரணதுங்க கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், சிஹல உறுமயக் கட்சியின் ஆரம்பகால துணை ஸ்த்தாபகர்களில் ஒருவரும், இன்றைய சிங்களப் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபல சிங்கள   இனவாதி அர்ஜுன ரணதுங்க இந்தியா டுடேயிற்கு வழங்கிய செவ்வியில், முரளீதரனைச் சென்னைப் போட்டிகளில் விளையாட அனுமதிப்பதில்லை எனும் ஐ.பி.எல் நிர்வாகச் சபையின் முடிவிற்கெதிராக கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். 

 

ஒரு நாட்டின் தென்பகுதியில் விளையாட அனுமதிப்பதில்லை என்றால், அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நாம் விளையாடக் கூடாது என்று கூறியிருக்கிறார். அத்துடன், இலங்கையைச் சேர்ந்த 10 வீரரகளும், பணத்தினைப் பார்க்காது தாய்நாட்டின் கவுரவத்தை முன்னிறுத்தி இப்போடிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

அத்துடன் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து போட்டிகளையும் ஐ. பி. எல் நிர்வாகம் மாற்றி வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். போர்க்குற்றங்களைக் காட்டி தமிழக அரசு செய்துவரும் அழுத்தங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்கள் மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 

முரளீதரனின் கருத்து...

 

மேலும் சென்னைப் போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ள சிங்கள கிரிக்கெட் அணியின் வீரரான முராளீதரன் தனது தடை பற்றிக் கூறுகையில், "நான் ஒரு தமிழன், அதற்கும் மேலாக நான் ஒரு இலங்கையன். எனக்கு அதுவே முக்கியம். தமிழ் நாட்டு மக்களுக்கு எனது விளையாட்டைப் பார்க்க பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த 20 வருடங்களாக நான் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறேன். எனக்கு அங்கே எந்தப் பிரச்சினையுமில்லை. அணித்தலமையிலிருந்து ஜனாதிபதி வரை என்னை அன்புடந்தான் நடத்துகிறார்கள். இலங்கையில் தமிழருக்கு எந்தவிதமான பிரச்சினயுமில்லை. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை எமது அரசாங்கம் செய்துவருகிறது. இலங்கை எனது தாய்நாடு, தமிழகம் எனது இரண்டாவது தாய்நாடு, எனது மனைவி கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். அப்படியிருக்க என்னை அங்கே விளையாட வேண்டாம் என்பது அரசிய நோக்கத்தினாலானது" என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

 

இந்தியா டுடே மற்றும் கிரிக்கின்போ இணையத்தளங்களில் வந்த இவர்களின் செவ்விகளைப் பார்க்க...

 

http://indiatoday.intoday.in/story/cricket-ipl-chennai-arjuna-ranatunga-asks-sri-lankan-players-to-opt-out-india-today/1/259577.html

 

http://www.espncricinfo.com/indian-premier-league-2013/content/story/626941.html

 

 

Edited by ragunathan

 ஒரு நாட்டின் தென்பகுதியில் விளையாட அனுமதிப்பதில்லை என்றால், அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நாம் விளையாடக் கூடாது என்று கூறியிருக்கிறார். அத்துடன், இலங்கையைச் சேர்ந்த 10 வீரரகளும், பணத்தினைப் பார்க்காது தாய்நாட்டின் கவுரவத்தை முன்னிறுத்தி இப்போடிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

 

ஆமாம் சிங்கள வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்தூதி முரளிதரன் மகத்தா!

 

இலங்கையில் தமிழருக்கு எந்தவிதமான பிரச்சினயுமில்லை. முந்தித்தான் பயங்கரவாதிகள் பிரச்சினை குடுத்தாங்கள்.

 

 

தயவு செய்து புறக்கணிக்கவும்.. 

 

இப்போது இலங்கையில் இருக்கும் விலைவாசிக்கு அங்க இங்க பொய் விளையாடித்தான் விட்டில அடுப்பெரியும் என்ர நிலைமை விளையாட்டு வீரர்களுக்கு.

 

அருச்சுனாவுக்கு அரச சாப்பாடு அது எல்லா வீரர்களுக்கும் கிடைப்பதில்லையே?

 

 

 

நிலைமை கட்டு மீறி போய்க்கொண்டிருக்கு.. பேசாம அதுக்கு ஒரு மாற்று வழி பாப்பியலா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. பி.எல். போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை: ஐ.பி.எல். நிர்வாக குழு தீர்மானம் சென்னையில் இடம்பெறும் ஐ. பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

139095.jpg

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடினால் பிரச்சினை மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவானது.

எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக ஐ.பி.எல் தலைவரும் மத்திய இணை மந்திரியுமான சுக்லா கூறுகையில், “உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை புறக்கணிக்க முடியாது. ஆனால், திட்டமிட்டபடி சென்னை மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்கும். வேறு இடத்திற்கு மாற்ற முடியாது” என்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில், சென்னை மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறுகின்றன. ஐ.பி.எல். அணிகளில் 13 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அகில தனஞ்செயா, நுவான் குலசேகரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இவர்கள் இருவரின் பெயரையும் நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

http://www.virakesari.lk/

நல்லதொரு முடிவு, தமிழக மாணவர்களுக்கு கிடைத்த இன்னமொரு வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நன்றி. :)

தமிழக மற்றும் உலகத்தமிழர்கள் ஓரணியில் நின்றால் தமிழக முதல்வர் நிச்சயம் துணிந்து அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.

 

முதல்வருக்கு பின்னால் எட்டு கோடி மக்களும் நின்றால் யாரும் அவரை ஒன்றும் செய்ய முடியாது !

முரளிதரன் நீர் இலங்கை வீரர் எனவே நீர் போட்டிகளில் பங்குபற்ற முடியாது .மறு வார்த்தைபேசக்கூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.