Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் !!!!!!!

Featured Replies

கறுப்பு எலி பாம்பு

  • Replies 271
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இராஜநாகம் - king Cobra :D

  • தொடங்கியவர்

கருநாகம் !

 

படம் ஒன்பதிற்கான சரியான பெயர் கருநாகம் அல்லது இராஜநாகம் ஆகும் எனவே சுவியரே சிறப்புப்பரிசைப் பெறுகின்றார் :) :) .

 

  • தொடங்கியவர்

10 கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii)

 

1npk.jpg

 

 

கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்.

 

உடல் தோற்றம் :

தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.
தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

நிறம் மற்றும் குறிகள்:

பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.
உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன. உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.
உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

 

நச்சு:

விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.

 

தமிழில் :

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

 

ஆங்கிலத்தில்:

 

http://simple.wikipedia.org/wiki/Daboia

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பெயர் கிலுகிலுப்பை விரியன் (rattle snake) :D

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பி விரியன் 

நுணாவிலான்,  கோப்பி விரியன் என்று தேடும் போது வரும் பாம்புகளின் படத்தை வைத்து அவை அந்த பாம்புகள்தான் என்று சொல்ல முடியவில்லை.  அதன் உயிரியல் பெயர், ஆங்கில பெயர் ஏதாவது இருக்கா?

 

இதுதான் கண்ணடி விரியனின் படம்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D


  • உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.
  • கருத்துக்கள உறவுகள்

muththirai pudaiyan.sorry tamil font velai seyyavillai

  • தொடங்கியவர்

கோப்பி விரியன் 

 

அப்பிடி ஒண்டு இருக்கோ :o :o :lol: ??

 

  • கருத்துக்கள உறவுகள்

வெண்கினாந்தி !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புடையன்,நாகம் cross

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி ஒண்டு இருக்கோ :o :o :lol: ??

 

 

 
217c.jpgகோப்பி விரியன் பாம்பு கடிகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால்மேல் மாகாண மக்கள்
இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசிய மென வலியுறுத்த பட்டுள்ளது.
 
கிராம புறங்களையே பெரும்பாலும் தமது வசிப்பிடமாகக் கொண்டுள்ள விரியன் பாம்புகள் அநேகமாக கோப்பித் தோட்டங்களில் கோப்பி இலைகளின் மேல் சுருண்டு காணப்படும்.
 
தூர இடங்களிலிருந்து வரக்கூடிய காய்கறிகள், பழங்கள், விறகு, பூச்சாடிகள், வாழை இலைகள், வாழைக் குலைகள், மரக் கட்டைகள் ஆகியவற்றுடன் இவை வருவதால் மேல் மாகாணத்தில் இப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை நேரடியாக குட்டிகளை ஈனு பவை. சாதாரணமாக ஒரு கோப்பி விரியன் ஆகக்கூடியது 10 விரியன் குட்டிகளை ஈனும். இருப்பினும் அண்மையில் ஒரு விரியன் 30 குட்டிகளை ஈன்று சாதனை நிலைநாட்டியுள்ளது. குட்டிகள் சுமார் ஒரு வார காலத்தில் சுயாதீனமாக இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் ஆண் கோப்பி விரியன்களைப் பார்க்கிலும் பெண் கோப்பி விரியன்களே அதிகமாக காணப்படுவதால் இனப்பெருக்கத் தன்மை அதிகமாகும்.
 
கோப்பி விரியன்கள் சுமார் 30 தொடக் கம் 60 சென்ரி மீற்றர் வரையான நீளம் கொண்டவை. இவை விழுந்த இலைகள், குப்பைக்கூளங்களுடன் சுருண்டு காணப்படுவதனால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வது கடினமாகும்.
 
அதிக நச்சுத்தன்மை கொண்ட கோப்பி விரியன்கள் மனிதர்களை மட்டுமன்றி தவளை, எலி, பறவைகள், நாய், பூனை, கோழி போன்ற பிராணிகளையும் தீண்டக்கூடியவை.
 
கண்ணாடி விரியன்களுடன் ஒப்பிடுகையில் கோப்பி விரியன் தீண்டுவதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவான போதும் இதனால் உடம்பிற்குள் செல்லும் விஷயம் நேரடியாக சிறுநீரகங்களை தாக்கிவிடும். எனவே பாம்பு தீண்டியதாக அறியப்பெற்ற அடுத்த கணமே வைத்தியரை நாடி முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் வலி மற்றும் தீண்டப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கம் குறைவதற்கு சில நாட்கள் எடுக்க கூடும்.
 
கண்ணாடி விரியன்கள் தீண்டுவதனால் 40 சதவீதமானவர்கள் உயிரிழக்க கூடிய சந்தர்ப்பத்தில் கோப்பி விரியன்களால் 02 சதவீதமானவர்கள் மாத்திரமே உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
 
கோப்பி விரியன்கள் உணர் திறன் மிக்கவை ஆகையினால் இரத்தம் சுவைப்பதற்காக பிராணிகள் இருக்கும் இடங்களை தேடி வரக்கூடியவை.இவ்வாறு இலங்கையின் முன்னணி விலங்கியல் நிபுணர் என்ஸ்லம் டி சில்வாவால் வலியுறுத்த பட்டுள்ளது.
 
217cc.JPG
 

நுணா: அந்த செய்தி கண்ணாடி விரியனையும், கோப்பி விரியனையும் பற்றி சொல்கிறது. அதனால் இரண்டு படங்களையும் போட்டிருக்கு. அதில் எந்த படம் எந்த பாம்பை குறிக்கிறது என்று போட்டில்லை.  இதில் நீங்கள் எப்படி முதலாவது படம் கோப்பி விரியன் என்று கொள்கிறீர்கள்.  இதில் கண்ணடி விரியன் வெளியே தரவுகள் எடுக்கத்தக்க பாம்பாக இருக்கிறது. அதனால் அது முதலாவது ப்டத்திலிருக்கும் பாம்பு என்று துணிச்சலாக சொல்ல முடியும். கோப்பி விரியன் பற்றி வெளியே தரவுகள் கம்மி. கிழே உள்ளதுதான் கோப்பி விரியன் என்று சந்தேகப் பட கூடியதாக இருக்கிறது. அது சருகிற்குள் ஒழித்திருக்கும் சிறிய பாம்பாக இருக்கிறது. ஆனால் அதன் உயிரியல் பெயர் தெரியாவிட்டால் திடவட்டமாக எதையும் கூற முடியாது.

 

தேடி பார்க்க வேறு பெயர் வேண்டும்.


நீங்கள் இந்த செய்தியை மட்டும் வைத்தா அது கோப்பி விரியன் என்று முடிவு கட்டினீர்கள்?

  • தொடங்கியவர்

Russell's viper= tic polonga or  daboia = கண்ணாடி விரியன் 

 

படம் பத்திற்கான சரியான விடை கண்ணாடிவீரியன் பாம்பு ஆகும் . போட்டிவிதிப்படி மல்லைக்கே சிறப்புபரிசு செல்கின்றது . எனக்கென்னமோ நுணாவை மல்லை வெருட்டினமாதிரி கிடக்கு :lol:  :lol:  :D  .

 

  • தொடங்கியவர்

11 சங்கிலிப் பாம்பு ( Rattlesnake or Crotalus Linnaeus,)

 

qq44.jpg

 

 

படம் பதினொன்றுக்கான பதில் சங்கிலிப் பாம்பாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Rattlesnake

Edited by கோமகன்

rattle snake, சங்கிலி பாம்பு, கிலுகிலுப்பை விரியன், சங்கிலி கறுப்பன்.

படம் பத்திற்கான சரியான விடை கண்ணாடிவீரியன் பாம்பு ஆகும் . போட்டிவிதிப்படி மல்லைக்கே சிறப்புபரிசு செல்கின்றது . எனக்கென்னமோ நுணாவை மல்லை வெருட்டினமாதிரி கிடக்கு :lol:  :lol:  :D  

பாம்பு திரியில் வந்து விளையாட பாம்பை அறிந்திருக்க வேண்டும். 

 

பாம்பின் காலை அறிந்ததொன்று பாம்பாகத்தான் இருக்கும். பாம்பு சீறி வெருட்டும். பாம்பில் நல்ல நாகமும் இருக்கு நச்சு நாகமும் இருக்கு.

 

அதனால் தெருவில் போகும்பொது சீறின பாம்மெல்லாவற்றையும் அடிக்க தடி தேடவேண்டியதில்லை. பேசாம் பாதையில் தொடந்தும் போகலாம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிலுகிலுப்பை விரியனை முதலில் சொன்னது நான்தான். ::icon_idea: இந்தமுறை பரிசு எனக்கே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மூ. புடையன் !

  • கருத்துக்கள உறவுகள்

மூ. புடையன் !

அதென்ன இனிசியலோட பாம்பு  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.