Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் ஈடுபட தடை!- டக்ளஸின் அதிரடி அரசியல்

Featured Replies

யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் ஈடுபட தடை!- டக்ளஸின் அதிரடி அரசியல்

              

                20130401-092925.jpg                

யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக, கடற்றொழிலாளர்களைப் பழி தீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

யாழ். குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அண்மையில் அமெரிக்க ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதன் போது கடற்றொழில் சமூகங்கள் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தமையே இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


குடாக்கடலில் சுமார் 850 ஆழ்கடல் மீன்பிடிப்படகுகள் மூலம் தொழில் செய்வோர் உள்ளனர். இவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


விரைவில் வடமாகாண சபை ஏற்படுத்துவதற்கான தேர்த்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தனது அரசியல் இராஜதந்திரத்தை அமைச்சர் டக்ளஸ் காட்டியுள்ளார்.

 

 எது எவ்வாறு இருந்தாலும் அரசியல் காய்நகர்த்தலுக்காக அலைகடலில் மோதும் மீனவ குடும்பங்களை பட்டினியில் போடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாகவே இதனை மீனவ சமூகம் பார்ப்பதாக கூறுகின்றனர்.

 

http://tamil24news.com/news/?p=55300

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழ்குடா கடல் என்று எதை குறிப்பிடுகிறார்கள் என தெரியவில்லை. இந்தியாவில் கரையோரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோலர் மீன்பிடிக்குத் தடையுள்ளது. கடல் ஏரிகளிலும் lagoons மிக இறுக்கமான கட்டுப்படுகள் உள்ளது. உலகம் முழுவதிலும் இத்தகைய நடைமுறைகள் உள்ளது. இந்த எல்லைகளுக்குள் பழைய தொழில் நுட்பங்கலைப் பயன்படுத்தி நாட்டுப்படகிலோ கட்டுமரங்களிலோ மீன்பிடிப்பது அனுமதிக்கப் படுகிறது. மூன்றாம் உலகம் முழுவதிலும் சிறு மீனவர்களும் ரோலர் மீனவர்களுக்குமிடையில் மோதல் முரண்பாடுகள் உள்ளன. சிறு மீனவர்களையும் கரையோரம் மற்றும் கடலேறி சுற்றுச்ச் சூழலும் பாதுகாக்கப் படவேண்டியது கடமை.

 

டகளஸ் அணியினர் சென்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகதினரதும் பெண்களதும் வாக்குகளை குறி வைத்தார்கள். இம்முறை டக்ளஸ் அணியினர் கூட்டணி புறக்கணிக்கும் ஒடுக்கப் பட்ட ஜாதிகள் மற்றும் சிறு மீனவர்களது வாக்கு வங்கியை குறிவைப்பதாக தெரிகிறது. இதற்க்குப் பரிகாரம் தமிழ் தேசிய அமைப்புகள் ஒடுக்கப் பட்ட ஜாதி மற்றும் சிறு மீனவர்களது நலன்களில் அக்கறை எடுத்து அவர்களது உரிமைகளையும் தேர்தல் பிரநிதிதுவத்தையும் உறுதிப்படுத்துவதாகும்.                                                          

 

இனியாவது தமிழ் தேசிய கூட்டமைப்பும் தழ்மி தேசிய மக்கள் முன்னணியும் சிறு மீனவர்களும் கடலோர சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப் படும் வகையில் சிறு மீனவர்களுக்கும் ரோலர் படகு மீனவர்களுக்குமான கடல் எல்லைகளை விஞான ரீதியாக வரையறுப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அவர்களது தேர்தல் பிரதி நிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 

 இனியாவது தமிழ் தேசிய கூட்டமைப்பும் தழ்மி தேசிய மக்கள் முன்னணியும் ஒருக்கப்பட்ட சமூகங்களின் பிரதி நிதித்துவத்தையும் பெண்களது பிரதிநிதிதுவத்தையும் அவர்கள் உறுதிப் படுத்த வேண்டும்.   

 

Edited by poet

  • தொடங்கியவர்

V.பொன்னம்பலம் தாழ்த்தபட்டசமூகங்களுக்கு பணம் இறைத்து அவர்களிடம் வாங்கு வாங்கி ஒரு தொகுதி வெல்ல முடியவில்லை; தமிழரசுக்கட்சியுடன்  எந்த கட்சியும், எந்த சமூகத்தினது வாக்குக்கும் போட்டி போட்டும் வென்றது கிடையாது.  இப்போ குத்தி தாழ்த்த பட்ட சமூகத்தனதும் தமிழ் பெண்களினதும் வாக்குகளை கவர்ந்து வைத்திருக்கிறது என்றும் அதை திருமப பெற வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் பொய்யட்.  இந்த பொய்யட் இது வரயில் கூட்டமைப்பை சிறிதரனின் கிளிநொச்சி காரியாலத்தில் பிசியாக வைத்திருப்பது இன்னும் ஒரு சொல்லு எழுதவில்லை.

 

குத்தியும் மகிந்தாவும் எப்படியாவது வடக்கை வெல்லத்தான் முயல்கிறார்கள். அப்படி வென்றுவிட்டால்  அதற்காக ஒரு விளக்கம் இப்பவே தேடி அலைகிறார்கள்.

 

கூட்டமைப்பு ஜெனிவா போய் பிரேரணையை கெடுக்க போவதாக யாழில் எழுதிய  பிழையான ஆலோசனைக்கு இது வரையில் யாழில் வருத்தம் தெரிவித்து ஒரு வரி எழுதவில்லை.

குடாக்கடலில் சுமார் 850 ஆழ்கடல் மீன்பிடிப்படகுகள் மூலம் தொழில் செய்வோர் உள்ளனர். இவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

விரைவில் வடமாகாண சபை ஏற்படுத்துவதற்கான தேர்த்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தனது அரசியல் இராஜதந்திரத்தை அமைச்சர் டக்ளஸ் காட்டியுள்ளார்.


 

 எது எவ்வாறு இருந்தாலும் அரசியல் காய்நகர்த்தலுக்காக அலைகடலில் மோதும் மீனவ குடும்பங்களை பட்டினியில் போடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாகவே இதனை மீனவ சமூகம் பார்ப்பதாக கூறுகின்றனர்.

 

முறையாக விவாதிக்க வேண்டுமாயின் இப்படி சொல்வத்தால் என்ன செய்தியை அந்த "tamil24news" சொல்ல வருகிறது என்றதை பொய்யட் கூறட்டடும். அதிலிருந்து தமிழ் பெண்களின் வாக்குகளை எப்படி குத்தியிடம் இருந்து பிரித்து எடுக்கலாம் என்றதை பற்றி விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பழகிப்போச்சு. இப்ப பொருட்படுத்துவதே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

35 வருட காலப் போராட்டம் தமிழ் மக்களை எந்த வித பாகுபாடும் இன்றி சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் போராட வைத்திருந்தது. இப்போது சிங்களப் பேரினாவாதம்.. தன் இஸ்டத்துக்கு தாண்டவம் ஆடுகிறது. அது தாண்டவம் ஆட அதற்கு உதவுவது தமிழ் கூலிகளின் வேலை. அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை கூலிகளுக்கும் குறைவில்லை.

 

சிலர் இதற்குள்.. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் என்ற விசத்தையும் கூடத்திணித்து விட முயல்கின்றனர். பொயட் போன்றவர்கள் இப்படியான கைங்கரியங்களில் சந்தர்ப்பம் பார்த்து ஈடுபடுவதில் கெட்டிக்காரர்கள். அதனால் தான் அவர்களால் விலாங்கு நிலை வாழ்வு வாழ முடிகிறது. தங்கள் சொந்தச் செல்வாக்கை உயர்த்த அவர்கள் எதுவும் செய்வார்கள்.

 

விடுதலைப்புலிகளின் காலத்தில் எந்த மக்களும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற தனிப்பிரிவின் கீழ் பார்க்கப்பட்டதில்லை. எல்லா மக்களும் ஒரே வகையில் தான் கணிக்கப்பட்டனர். தொழில் ரீதியா சிங்களக் கடற்படையால் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் கடல் வளத்தை நம்பி வாழ்ந்த மக்களே. இதில் இன்னொன்றையும் இங்குள்ள சிலர் புரிந்து கொள்ள வேண்டும்.. வாழ்வாதாரத்திற்காக.. பரம்பரை பரம்பரையாக கடற்தொழில் செய்யாத மக்கள் கூட கடலில் இறங்கி வாழ்வாதாரம் பெருக்கும் நிலை இருந்தது. இப்போதும் அந்த நிலை உள்ளது. அதற்குள் சிலர் தங்கள் சொந்த விசத்தையும் கலந்து விட முனைகின்றனர்.

 

அடிப்படையில் எமது மக்கள் ஒடுக்கப்படுவது சிங்களப் பேரினவாதிகளாலும் அதற்கு முண்டு கொடுக்கும் இஸ்லாமிய.. மற்றும் தமிழ் கூலிகளாலும் மட்டுமே..! அதன் வெளிப்பாடே இது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

பொயட் இங்கு பலருக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாது .கனவுலகில் கோமா உருவில் நடமாகின்றார்கள் .

டக்கிலஸ் எமது தெரிவல்ல ஆனால் எமது மீனவருக்கு என்ன நடக்கின்றது என்றே பலருக்கு தெரியாது .திமுகா  டி ஆர் பாலுவின் பெரும் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் வந்து மீனை அள்ளிகொண்டு போகின்றன .பாதிக்க படுவது எமது மீனவர் .

சிங்கள ஆமி சுட்டான் என்று பரப்புரை வேறு .எனது தம்பி இப்ப மன்னார்  போய் இந்திய மீனவர்களால் தாம் படும்பாடு பற்றி மன்னார் மீனவர்கள் சொன்னதை வந்து சொன்னான் .

எதுவித அரசியல் பார்வையும் இன்றி கர்சிக்க இணையங்களில் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கு மட்டும் குறைவில்லை .

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக, கடற்றொழிலாளர்களைப் பழி தீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

யாழ். குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

செய்தி நிறுவனம் இட்டுக்கட்டியதா அல்லது உண்மையில் கடற்தொழிலாளர் சொன்னதா என்பது தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் இங்கு பலருக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாது .கனவுலகில் கோமா உருவில் நடமாகின்றார்கள் .

டக்கிலஸ் எமது தெரிவல்ல ஆனால் எமது மீனவருக்கு என்ன நடக்கின்றது என்றே பலருக்கு தெரியாது .திமுகா  டி ஆர் பாலுவின் பெரும் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் வந்து மீனை அள்ளிகொண்டு போகின்றன .பாதிக்க படுவது எமது மீனவர் .

சிங்கள ஆமி சுட்டான் என்று பரப்புரை வேறு .எனது தம்பி இப்ப மன்னார்  போய் இந்திய மீனவர்களால் தாம் படும்பாடு பற்றி மன்னார் மீனவர்கள் சொன்னதை வந்து சொன்னான் .

எதுவித அரசியல் பார்வையும் இன்றி கர்சிக்க இணையங்களில் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கு மட்டும் குறைவில்லை .

நீங்கள் எழுதின விடயத்திற்கும் ....

பொயெட் அவர்கள் எழுதிய விடயத்திற்கும் ஏதும் சம்மந்தம் உண்டா?
 
மீனுக்குள்ளே விச  பாம்பை கொண்டுவந்து படமெடுக்க விட்டுவிட்டு நிற்கிறார் பொயெட் .
இப்ப நீங்கள் வந்து இந்திய மீனவர்களை கொண்டுவந்து விட்டு இருக்கிறீர்கள்.
 
இதற்கும் தலிப்புக்கும் என்ன சம்மந்தம்.
 
யாழ் மீனவர்கள் மீன்பிடிப்பதை நிறுத்தினால் இந்திய மீனவர்கள் பிடிப்பதையும் நிறுத்துவார்களா?
 
நிஜ உலகத்தில் நீந்துகிற நீங்கள் ஒருக்கா முக்கி எழுதினால் நாங்களும் உண்மையை தெரிந்துகொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.