Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதிகளில் விபச்சாரம் நடைபெறுவதாக முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை ; யாழ்.பொலிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிவ்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதன்போது விடுதிகளில் நடைபெறும் கலாச்சார சீரழிவு தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விடுதிகள் முற்றுகையிடப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

யாழில் உள்ள தனியார் விடுதிகளில் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றது. ஆனாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் எமக்கு முறைப்பாடுகளை தரவேண்டும். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மூலம் விபச்சாரம் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டால் நீதிமன்ற கட்டளையின் படி விடுதி முற்றுகையிடப்பட்டு கைதுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதேவேளை, கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்று அண்மையில் யாழ்.மாநகர சபையினர் மற்றும் பிரதேச சபையினரால் முற்றுகையிடப்பட்டது. ஆனாலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

http://onlineuthayan.com/News_More.php?id=681231949005540892

  • கருத்துக்கள உறவுகள்

முறைப்பாடு செய்வதற்கு வருபவர்கள்! 'என் கதை முடியும் நேரமிது' எனப் பாடிவரவேண்டும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிவ்ரி அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் ஒரு செய்தி!!

 

யாழ்ப்பாணத்தில்  விபச்சாரத்தை செய்ய் தூண்டுவதும் தமிழர் தான் செய்வதும் தமிழச்சிதான் விபச்சாரியிடம் போய் படுப்பதும் தமிழந்தான் ஆனால் நடவடிக்கையை மட்டும் சிங்களவன் நேரத்துக்கு எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்  விபச்சாரத்தை செய்ய் தூண்டுவதும் தமிழர் தான் செய்வதும் தமிழச்சிதான் விபச்சாரியிடம் போய் படுப்பதும் தமிழந்தான் ஆனால் நடவடிக்கையை மட்டும் சிங்களவன் நேரத்துக்கு எடுக்க வேண்டும்.

 

 

 

ஊக்கப்படுத்துவது சிங்கள அரசும் அதன் அடியாட்களும்  தான். கண்டும் காணாமல் இருப்பதும் ஊக்கப்படுத்துவதின் ஒரு பகுதி தான்.

ஊக்கப்படுத்துவது சிங்கள அரசும் அதன் அடியாட்களும்  தான். கண்டும் காணாமல் இருப்பதும் ஊக்கப்படுத்துவதின் ஒரு பகுதி தான்.

 

  உங்கட கருத்தின் படி ஏதோ சிங்களவர்கள் விபச்சாரம் செய்யாதமாதிரியும் தமிழர்கள் மட்டும் தான்  சிங்களவர்களின் ஊக்கப்படுத்த்வதால் விபச்சாரம் செய்கிறார்கள் ப்பொல்?....

  • கருத்துக்கள உறவுகள்

  உங்கட கருத்தின் படி ஏதோ சிங்களவர்கள் விபச்சாரம் செய்யாதமாதிரியும் தமிழர்கள் மட்டும் தான்  சிங்களவர்களின் ஊக்கப்படுத்த்வதால் விபச்சாரம் செய்கிறார்கள் ப்பொல்?....

 

 

 

வாசித்து விளங்கவும். தமிழர்கள் விபச்சாரம் செய்யும் போது அதைம் கட்டுப்படுத்துவது இலங்கை அரசின் காவல் படை தானே. அவர்கள் தமிழர்கள் தானே. நடப்பது நடக்கட்டும் என்று இருப்ப்தும் ஒரு வகையில் ஊக்கம் கொடுப்பது தானே.
 
சிங்கள விபச்சாரிகளும்  ஆங்காங்கே அலைவதாக கேள்விப்பட்டுள்ளேன். என்னிடம் ஆதாரங்கள் இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

திரு. ஐ.சி. சசி அவர்களே, உங்கள் கூற்றுத் தவறானது. விபச்சாரம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது என்றும் உள்ளதுதான். யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் தலைதூக்காமல் ஊர்ப் பெரியவர்களான தமிழர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இன்று சிங்களவனை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையுள்ளதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட குற்றவாளிகளை பகிரங்கமாக விடுவித்து திமிர்காட்டும் சிங்களக் காவல்படையின் பிடியில் சிக்குண்டுள்ளோம்.

வாசித்து விளங்கவும். தமிழர்கள் விபச்சாரம் செய்யும் போது அதைம் கட்டுப்படுத்துவது இலங்கை அரசின் காவல் படை தானே. அவர்கள் தமிழர்கள் தானே. நடப்பது நடக்கட்டும் என்று இருப்ப்தும் ஒரு வகையில் ஊக்கம் கொடுப்பது தானே.
 
சிங்கள விபச்சாரிகளும்  ஆங்காங்கே அலைவதாக கேள்விப்பட்டுள்ளேன். என்னிடம் ஆதாரங்கள் இல்லை.

 

நான் நினைத்தேன் யாழ்ப்பானத்தமிழர்கள்  கலாச்சார கவலர்கள் அவர்களை   கோடிக் கனக்கான சிங்களவன்  நின்றாலும்  சீரளிக்க முடியாது என  அது தான் அப்படி எழுதினேன்.......  7 கோடி தமிழர்கள் இருக்கும் நாட்டில்    யார்  விபச்சாரத்தை  ஊக்கப்படுத்துகிறார்கள்?

 

இது ஒரு சமுக பிரச்சனை அதை சிங்களவனில் தலையில் போட்டு விட்டு  தப்ப நினைக்க கூடாது.

 

சரி அமெரிக்கா   தமிழர்களுக்காக  வடக்கு கிழக்கில் நிலை கொண்டு இப்படியான கலாச்சார  சீரழிவுகள் நடைபெற்றால்  பாதுகாக்க அமெரிக்க வேனுமா இல்லை கலாச்சாரம் வேனுமா?  சமுக பிரச்சனையை சமுக பிரச்சனையாக பார்க்கவும்.

நான் நினைத்தேன் யாழ்ப்பானத்தமிழர்கள்  கலாச்சார கவலர்கள் அவர்களை   கோடிக் கனக்கான சிங்களவன்  நின்றாலும்  சீரளிக்க முடியாது என  அது தான் அப்படி எழுதினேன்.......  7 கோடி தமிழர்கள் இருக்கும் நாட்டில்    யார்  விபச்சாரத்தை  ஊக்கப்படுத்துகிறார்கள்?

 

இது ஒரு சமுக பிரச்சனை அதை சிங்களவனில் தலையில் போட்டு விட்டு  தப்ப நினைக்க கூடாது.

 

சரி அமெரிக்கா   தமிழர்களுக்காக  வடக்கு கிழக்கில் நிலை கொண்டு இப்படியான கலாச்சார  சீரழிவுகள் நடைபெற்றால்  பாதுகாக்க அமெரிக்க வேனுமா இல்லை கலாச்சாரம் வேனுமா?  சமுக பிரச்சனையை சமுக பிரச்சனையாக பார்க்கவும்.

 

இராணுவத்தை வெளியேற சொல்லி, வடக்கு கிழக்கை இணைத்து தேர்தலை வைத்துவிட்டு அமெரிக்காவின் கற்பனை கதைகளை பேசலாமே.அப்போது ஏதாவது நடந்தால் அது மக்களின் விருப்பு. ஜனநாயகம். அதன் பின்னர் சிங்களவன் தன் தலையில் தமிழர் போட்டு விடும் சமூகப்பிரச்சனையை  இறக்கிவைத்து ஆறுதல் அடையலாம். அடிமை நிலையை சமூகம் என்று விவரிக்கும் கட்டுரை ஒன்றை காட்ட முடியுமா. சமுதாயம் சுயாதீனமாக இயங்க வேண்டும்.

 

நீங்கள் புலத்தில் என்ன என்ன செய்ய முடியுமே அதை தாயகத்தில் அவர்களும் அங்கு செய்யலாம். இதற்கேன் அமெரிக்காவை இழுப்பான். உங்கள் நாட்டில் இருப்பவற்றை வைத்து நீங்கள் முடிவு செய்ய லாமே. (அண்மையில், எலியட் ஸ்பிற்சர்,  நியூயோர்க்கின் ஒரு பிரபல மாநில கவுனர், அதிபராக போகிறார் என்று எதிர்வு கூறப்பட்ட திறமைசாலி- ஒரு விபச்சாரிக்கு 5000 டொலர் பணம் கொடுத்ததால் பதவி இழந்தார்- அதுவா சிங்கள மந்திரிகளின் நிலை- சிங்கள மந்திரிகள் மாதிரியா சம்பந்தர், சிறித்ரன் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள்? )

 

இன்று இருப்பது இராணுவ திணிப்பு. பசித்தாலும் இராணுவம் எங்களுக்கு நாங்கள் கேட்க்காமல்  சாப்பாடு தீத்த முயலக்கூடாது. அவர்கள் செய்ய வேண்டியது உடனே வெளியேற வெண்டியது. 

 

சிறிதரனின் ஆபிசில் நீலப்படங்கள் எடுத்துக் காட்டியது மக்கள் முறைப்பாடு கொடுத்தா? என்ன கதை அளக்கிறார் இந்த அதிகாரி. முறைப்பாடு கொடுப்பவரை ஒட்டுக்குழுக்களுக்கு காட்டி கொடுப்பத்தற்காகத்தான் இவர் "வந்து முறைபாடு கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொல்லும் கூற்று சொல்வது. வடக்கில் மட்டும் அல்ல தெற்கில் கூட சாட்சி பாதுகாப்பு முறை இல்லையென்றுதானே மேற்கு நாடுகள் கூறியிருக்கின்றன. பிரான்சிஸ் கரிசன் கொழும்புவில் நடந்த கலை விழாவுக்கு பிருத்தானிய அரசின் காசிலிருந்து பணம் போனது தவறு என்று எழுதியிருக்கும் கட்டுரையையும் படித்து பார்க்கவும். அப்போது எப்படி கலாச்சார சீரளிவை அரசு மக்களுக்குள் புகுத்துகிறது என்பதை வெளியார்கள் மட்டுக்கட்டுகிறார்கள் என்பது புரியும்.

 

ஒட்டுக்குழுக்கள்தான் இப்படி விடுதிகள் நடத்துவதாக கேள்வி. இராணுவமும், பொலிசும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் அப்படி ஒன்று செய்ய அவர்களுக்குத்தான் துணிச்சல் வரமுடியும்.

நீங்கள் பந்தி பந்தி எழுதினாலும்   இது சமுக பிரச்சனை அதை  அடுத்தவன் தலையில் போட்டுவிட்டு அரசியல் செய்யக் கூடாது,.

நீங்கள் பந்தி பந்தி எழுதினாலும்   இது சமுக பிரச்சனை அதை  அடுத்தவன் தலையில் போட்டுவிட்டு அரசியல் செய்யக் கூடாது,.

 

----- பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றாவது நின்று வலோற்காரமாக அபலைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி தங்களுக்கு  வரும் பங்கு பணங்களை காப்பாற்றிகொள்ள அந்த பழியை பாதிக்கபட்ட அபலைகள் தலையில் கட்டி விட்டு மேட்டுக்குடி விஞ்ஞானம் பேசுகிறார்கள்.

 

புள்ளிவிபரம்: இலங்கையில் வேகமாக வளரும் தொழில் பாலியல்.

பௌத்த பொது பல சேனா: "இலங்கை இன்னொரு தாய்லாந்தாக மாற அனுமதிக்க முடியாது"

 

இதற்கும் யாழ்ப்பாண கலாச்சாரத்திற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்பு ஏற்படுத்துவது மொட்டந்தலைக்கும்..........

 

இவர்கள் இங்கே எழுதவருவது இலங்கை ஆமி யாழ்ப்பாணத்தில் செய்யும் தொழிலை நியாப்படுத்தி, அதை விளம்பரம் செய்து இதனால் தங்களின் பங்கையும் காப்பாற்றிக்கொள்ளவே.

 

யாழ்ப்பாணத்தில் விபச்சாரம் மிகப்பெரிய எடுப்பில் நடப்பதாக காட்டிக்கொள்ள வேண்டியது இவர்களின் பொறுப்பு. பின்னர் அதை நியாப்படுத்திவிடவேண்டும். யாழில் பலர் "புறக்கணி இலங்கை"க்காக தொடந்து பிரச்சாரம் செய்கிறார்கள். இது இலங்கை விற்கும் விமான திக்கெட் வரைக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. ஆனால் புலத்தில் சில சாத்துவாய் ஊத்திகள் மலிவான இடம் தேடி அலைவது உணடு. அவர்களுக்கு ஒரு எயார் லங்கா திக்கெட் விற்று யாழ்ப்பாணம் கூட்டிகொண்டு போவதுதான் இவர்கள் யாழ்ப்பாணத்தில் "கலாசார சீரழிவு" என்று செய்யும் பிரச்சாரத்தின் நோக்கம்.

 

அதன் பின்னர் பேசுவது தங்களுக்கு விளங்காத, விதண்டவாத, மேட்டுக்குடி, சமுதாய பிரச்சனை. எத்தனை அடுக்கு PhD கள் இவர்களிடம் சமுதாய சிந்தையில் இருக்கிறது? எந்தனை சமூதாயத்தை இவர்கள் ஆராந்துவிட்டார்கள்.  நாம் அப்பாவி ஆமியின் தலையில் எதையோ கட்டிவிட்டு அரசியல் செய்வதாக நாக்குத்தேறிக்க எழுதுகிறார்கள்.

 

இந்த --- மனங்களில் அந்த அபலைகளுக்கு இந்தியா கட்டிக்கொடுக்க வந்த  வீடுகளை கூட ஆமி பறித்தெடுத்து வைதிருக்கிறது என்ற கவலை வருகிறதில்லை. ஆமியின் தலை மீது நாம் பழி போட்டு அரசியல் செய்கிறோம் என்ற கோமாளிக்கதையை விட நடக்கும் உண்மையை எழுத முடியவில்லை. அசோக் காந்தாவே" இந்தியாவும் ஒரு வறுமையான நாடு தான். நாம் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் வீடு கட்டிக்கொடுக்க வந்தோம்" என்று பேசினார். யாழில் இருந்து புலம் பெயர் மக்களுக்கு எங்கே விபச்சார விடுதிகள் இருக்கு என்று விளம்பரம் செய்யாமல் அங்கே போய் ஆமி பறித்தெடுக்கும் வீடுகளை அந்த அபலைகளுக்கு பெற்றுக்கொடுக்கும் அரசியலை நியாயமான மனிதர்கள் உங்களாள் செய்ய முடியுமா?

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பிலும் சிலர் தங்கள் வங்குரோத்து பிரதேசவாதத்தைக் கலக்கின்றனர். விபச்சாரம் ஏதோ யாழ்ப்பாணத்திற்கான பிரச்சனை என்பது போல காட்ட விளைவதோடு.. யாழ்ப்பாண மக்கள் மட்டும் தான்.. கலாசாரக் காவலர்கள் என்ற தொனியில் அப்பட்டமாக பிரதேசவாதம் பேசுகின்றனர். இதனை எல்லாம் யாழ் அனுமதிக்கின்ற நிலை.. இங்கு..!

 

ஆனால் விபச்சாரம்.. கலாசார சீரழிவுகள் எம்மினத்தின் மீதும் தேசத்தின் மீதும் திணிக்கப்படும் ஒரு ஒடுக்குமுறைக்கான வடிவமாகவே காணப்பட வேண்டியுள்ளது.

 

கட்டுக்கோப்பான சமூக வழக்கத்தைக் கொண்டிருந்த.. வட தமிழீழம்.. தென் தமிழீழம் இன்று சிறீலங்கா போல் விபச்சாரத்தால் சீரழிக்கச் செய்யப்படுகின்றது. இதன் பின்னால் திட்டமிட்ட சமூக சீரழிவுகளும் அரசியல் ஆதாயங்களும்.. வியாபாரங்களும் நடக்கின்றன.

 

இவற்றின் பின்னால் சிறீலங்கா இராணுவம்.. தமிழ்.. முஸ்லீம் ஒட்டுக்குழுக்கள்.. சிறீலங்கா அரச அதிகாரிகள் என்று பலதரப்பட்டோர் இருப்பதோடு.. சரணடைந்த போராளிகளுக்கு மறுவாழ்வளிக்கிறோம் என்ற போர்வையில் பிரிட்டன் போன்ற நாடுகள் சொல்லும் மில்லியன் கணக்கான பவுன்கள் எங்கே போகின்றன என்ற கேள்வியும் எழுகிறது. இதன் பின்னால் சர்வதேச சக்திகளும்.. களவெடுக்கிறார்களோ என்ற சந்தேகம் நிலவுகின்றது.

 

சிலர் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனைகளாட்டம் இந்த உலகில் உலா வருகின்றனர்... என்பதற்கு யாழிலும் ஆக்கள் இருக்கினம்..!

 

உதாரணம்:

 

வீரம் நிறைந்த மண்ணில் விபச்சாரம் வறுமையா? படையினரின் ஊக்குவிப்பா?


                        

28.3_sex_a-300x187.jpg

 

 

மட்டக்களப்பில் பொலிஸார் ஹொட்டல் ஒன்று முற்றுகையிடப்பட்ட போது விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது.


மட்டக்களப்பில் உள்ள ஹொட்டல் ஒன்றை பொலிஸார் இன்று மாலை முற்றுகையிட்ட
போது விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களும் மூன்ற ஆண்களும் கைது
செய்யப்பட்டு மட்டக்களப்புப் பொலிஸில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பில் உள்ள ஹொட்டல்களில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று
வருவதாக பேசப்பட்டு வருகின்ற நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபர் வி.இந்திரன் அவர்களின் உத்தரவிற்கமைய இன்று நீதிமன்ற
அனுமதியுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஞ்சிலி
குணசேகர தலைமையிலான குழுவினர்  முற்றுகையிட்ட போதே விபச்சாரத்தில் ஈடுபட்டு
வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்
ஒருவரும் கந்தளாயைச் சேர்ந்த சிங்களப் பெண் ஒருவரும் பருத்திச்சேவையைச்
சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவரும் இராணுவ கப்டன் ஒருவரும் லெப்டினன் ஒருவரும்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அடங்குகின்றனர்.


செய்தி மூலம் தமிழ்மிரர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/62972-2013-04-05-14-28-44.html

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகப் பகுதிகளில் போட்டி போட்டுக் கொண்டு விபச்சாரம் நடக்கின்றது போலுள்ளது. சமூகத்தின் சிதைவைத்தான் விபச்சாரத்தின் பெருக்கம் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகப் பகுதிகளில் போட்டி போட்டுக் கொண்டு விபச்சாரம் நடக்கின்றது போலுள்ளது. சமூகத்தின் சிதைவைத்தான் விபச்சாரத்தின் பெருக்கம் காட்டுகின்றது.

 

இது வெறுமனவே சமூகச் சிதைவால் வரும் பிரச்சனையல்ல. இதன் பின்னால் பேரினவாதிகளும் சதிகளும் உள்ளன.

 

சிறீலங்கா இராணுவ வெறியர்களுக்கு விபச்சார மையங்களை வைத்துக் கொடுத்த பெருமை சரத் பொன்சேகா.. கோத்தபாய போன்றவர்களுக்கும் அனுரத்த ரத்வத்த போன்றவர்களுக்கும் உரித்ததாகும்.

 

அனுராதபுரம் இதற்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டு போர் காலத்தில் அங்கு தான் இந்த இராணுவ வெறியர்கள் விபச்சாரிகளிடம் போய் வந்தனர்.

 

அதனை இப்போ.. எம் நிலத்தில் நிற்கும் அபலைப் பெண்களை நோக்கி திருப்பி விட்டுள்ளனர். இது ஒரு வகையில் இன அழிப்பின் அம்சமே ஆகும்..!

 

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை.. தாயகத்தில் இருக்கும் கல்விமான்களையும்.. சமூக ஆர்வலர்களையும்.. மதத் தலைவர்களையும்.. மக்கள் நலன் பேணும் அமைப்புகளையும்.. அரசியல் தலைமைகளையும் சாரும். அவர்கள் இது விடயத்தில் கண்மூடி இருப்பது சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது..!

 

சிங்கள தேசம் விபச்சாரத்தால் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில்.. அங்கு விபச்சாரம் பெருகக் காரணமாக உள்ள ஊதிப்பெருத்துள்ள சிங்களப் படைகளை இப்போ தமிழர் தாயகம் நோக்கி திருப்பிவிட்டுள்ளது சிங்களம். இதன் பின்னால் பேரினவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் கூடி இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் சிறீலங்கா காவல்துறை இதனை நிச்சயம் கட்டுப்படுத்த முன்வராது. மாறாக எமது அரசியல்தலைமைகள் மற்றும் சமூக அமைப்புக்கள்.. கல்வி அமைப்புக்கள் சார்ந்த ஒரு விழிப்புக்குழுவை அமைத்து இந்தப் பிரச்சனையில் சமூகம் தனி அக்கறை எடுத்துச் செயற்பட்டால் அன்றி.. எமது தேசம்.. விபச்சாரம் மற்றும் அவை சார்ந்த பால்வினை நோய்களாலும்.. சமூகச் சீரழிவாலும் பிரித்தானிய.. காலனித்துவத்தினரால் சமூகச் சீரழிவுக்கு உட்படுத்தப்பட்ட சியராலியோன் போன்ற.. ஆபிரிக்க தேச நிலைக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

 

இதன் பின்னால் வறுமை.. போர் பாதிப்பு.. உயிரிழப்புக்கள்.. கணவனை இழந்துள்ள குடும்பங்கள்.. காரணமாகக் காண்பிக்கப்பட்டாலும்.. அவற்றிற்கு பரிகாரம் விபச்சாரம் அல்ல. சர்வதேச.. உள்ளூர் அரச உதவித் திட்டங்கள் மூலம் அவர்களுக்கு சரியான மறுவாழ்வளிப்பதே ஆகும். அவர்கள் தான் போரையும் கொண்டு நடாத்தினார்கள். போர் முடிந்தால் மக்களுக்கு விடிவு என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போ எங்கே அந்த பிளேர்க்குகளும்.. சேனன்களும்..???!

 

எனவே இவை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள். சமூக ஆர்வலர்கள் இதில் அக்கறை எடுத்துச் செயற்பட வேண்டும். தன்னார்வ இளைஞர்கள்.. விழிப்புக்குழுக்களை அமைத்து.. விபச்சாரத்தில் ஈடுபட அல்லது அதற்கு தூண்டுபவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும். இதன் மூலமே இவற்றின் பரம்பலை தடுக்க முடியும். மேலும்.. பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் உள்ள பெண்களுக்கு தகுந்த உதவிகள் சென்றடைய கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் விசேட மையங்கள் அமைக்கப்பட்டு அவை தன்னார்வ அமைப்புக்களின் பொது கண்காணிப்பின் கீழ் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

 

இந்தியப்படைகள் காலத்தில் இயங்கிய விழிப்புக்குழுப் பொறிமுறை மீண்டும் வந்தால் அன்றி.. இவற்றிற்கு.. தீர்வு அவ்வளவு சுலபமல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

வீரம் நிறைந்த மண்ணில் விபச்சாரம் வறுமையா? படையினரின் ஊக்குவிப்பா?

 

 

நான் விரும்புவது யாழ்கள உறவுகள் இந்த தலைப்பில் யாழில் ஒரு பட்டு மன்றவிவாதம் போடுவது. 

சசி முன்னிறு தொடக்கிவைப்பாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.