Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மாற வேண்டும்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் அணுகுமுறை மாற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லூன்ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பொறுப்பிலிருந்து விலக உள்ள ஜெப்ரி லூன்ஸ்டெட் கண்காணிப்புக் குழுவினரிடம் கூறியதாவது:

வன்முறைகளின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை நீங்கள் சந்திக்கும் போது அவர்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பேச்சுக்களுக்குத் திரும்புமாறு வலியுறுத்த வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்துவது போல் செப்ரெம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டால் கண்காணிப்புக் குழுவின் பணிகள் மிகவும் கடினமாகிவிடும். கண்காணிப்புக் குழுவினர் இல்லாத நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்.

கண்காணிப்புக் குழுவினர் தொடர்ந்து இயங்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நிலைப்பாட்டை பரிசீலனை செய்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலிலிருந்து அது நீக்கப்படும்.

இதர நாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது என்றார் அவர்.

puthinam.com

  • தொடங்கியவர்

அமைதி முயற்சிகளில் அரசாங்கத்தை ஆதரிக்க ஐ.தே.க. திடீர் முடிவு

இலங்கை இனப்பிரச்சனைக்கான அமைதி முயற்சிகளில் மகிந்த அரசாங்கத்தை ஆதரிக்க ஐக்கிய தேசியக் கட்சி திடீரென முடிவு செய்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சுசந்த புஞ்சிநிலமே சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலையில் அமைதி முயற்சிகளுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது. மேலும் இந்தியாவுக்கும் இது தொடர்பான முடிவை அக்கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொழும்பில் நேற்று கூடிய அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழுவானது அமைதி முயற்சிகள் தொடர்பிலான அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பது குறித்து விவாதித்தது.

அரசாங்கத்தின் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளிக்காத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியால்தான் அமைதி முயற்சிகள் சீர்குலைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விடும் என்ற அச்சம் ஏற்படுவதாக அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் அமைதி முயற்சிகளுக்கு அரசாங்கத்தை ஆதரிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இருப்பினும் இறுதித் தீர்வுக்கான மகிந்தவின் அனைத்து கட்சி ஆலோசனைக் குழுவில் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருக்கப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கம் தாவுவோரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் முடிவை மகிந்த ராஜபக்ச இடை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைதி முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து அவர் இத்தகைய முடிவை மேற்கொண்டிருப்பதாக மகிந்தவின் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

puthinam.com

நன்றி குருவி இணைப்பிற்கு. இப்போதுள்ள நிலைமைகளில் தேவையான நடவடிக்கை. நிலைமைகள் மாறும்போது நிச்சயம் சாதகமான சூழ்நிலைகள் தோன்றும்.

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரேவிதமான கருத்தோட்டத்தை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டுள்ளன. இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இனப்பிரச்சனைனயில் ஒருங்கிசைவான திட்டத்தைக் கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளையும் கொழும்பில் உள்ள அரசாங்கத்தையும் ஒரே மாதிரியாக அரவணைப்பதன் மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பு பற்றி மேற்குலகம், இந்தியாவின் அனுசரணையுடன் சிந்தித்திருக்கிறது. ஆனால் ஐரோப்பியத் தடை மூலம் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்துவிட்டது.

ஐரோப்பியத் தடையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் தமிழ் மக்களின் மீதும் ஒடுக்குமுறைகளை ஏவிவிடுவதற்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக மகிந்த ராஜபக்ச கருதுகிறார். இந்நிலைமையில் நிலைமைகளை அடக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவையும் அமெரிக்காவையும் சார்ந்துள்ளன.

அமெரிக்காவினால் கையாளப்பட்ட முறைக்கு பதிலாக இந்தியா மூலம் ராஜபக்ச அரசாங்கத்தை தணிக்க வேண்டிய சிந்தனையோட்டம்தான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ராஜபக்ச அரசாங்கமானது தீவிரமான இராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் போது அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் அமைதிகாத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான பிரதிபலிப்புகள் அரசியலில் வெளிப்பட யுத்தத்தின் விளிம்பு நிலைக்கு அது கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் ராஜபக்ச அரசாங்கத்தைத்தான் தணிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேற்குலகின் அழுத்தங்களுக்கு பணியாத ராஜபக்சவை அருகிலிருக்கும் இந்தியாவின் அழுத்தங்களுடாக பணிய வைக்கும் ஒரு இராஜதந்திர அணுகுமுறை கையாளப்படுகிறது.

இப்போது சிறிலங்கா அரசாங்கம் தீர்வுத் திட்டத்துக்கு தயாராக இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. இலங்கை விடயத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்கா அதற்கு அனுசரணையாக நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சாதாரண சமஸ்டி முறையை விடவும் அதாவது கொன்படரேசன் என்ற சொற்றொடரை முன்வைக்கின்றனர். கூட்டாட்சியின் உரிமைகள் தமிழ் மக்களுக்கு உண்டு என்கிற கருத்தை அமெரிக்கா இப்போது முன்வைக்கும் அளவுக்கு நிலைமையை தணிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியாவின் சமஸ்டியானது அரை சமஸ்டி முறை என்போம். இந்தியாவின் சமஸ்டியை விடவும் அமெரிக்காவின் சமஸ்டியானது கொன்பெடரேசனானது. இந்த வார்த்தையை அரசியல் ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்தை வெருட்ட மேற்குலகம் பயன்படுத்துகிறது. இந்த நிலையில் இந்தியாவின் வற்புறுத்தலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்காது. ஏனெனில் இந்தியாவை விட அமெரிக்காவின் வற்புறுத்தல் அதாவது அது முன்வைக்கும் தீர்வு பெரிதாக உள்ளது.

ஆகவே இந்தியாவை அனுசரித்துப் போகவே சிறிலங்கா அரசாங்கம் விரும்பும். இது யுத்தத்தைத் தணிக்கும் நிலைமையை உருவாக்கும். இந்திய- அமெரிக்க அரசாங்கங்களின் பிரதான நோக்கமும் அதுவே.

இப்போது ராஜபக்ச அரசாங்கமானது தீர்வு காண்பதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்திருப்பதாகவும் பல கட்சி அனுசரணைக் குழு ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் கூறுகிறது. இதில் ஒரு முக்கியமான நாடகம் ஒன்று நிகழ்கிறது. இப்போது இந்தப் பிரச்சனையை ஒரு நிபுணத்துவ பிரச்சனையாக்க பார்க்கிறார்கள். நிபுணர் குழு என்று சுத்த ஏமாற்று வேலை.

ராஜபக்ச அரசாங்கமானது ஒற்றையாட்சிக் கோட்பாட்டை முன்வைத்த பின்னர் இப்போது தீர்வைப் பற்றி கதைப்பது என்றால் அது கொள்கை மாற்றத்துக்குத்தான் போக வேண்டும். அவர் தனது கொள்கையை முன்வைக்க வேண்டும். அதாவது தான் ஒற்றையாட்சி அல்லாத ஒரு தீர்வுத் திட்டத்துக்கு வருகிறேன் என்று அதனை முதன்மைப்படுத்த வேண்டும். எனவே இது நிபுணத்துவப் பிரச்சனை அல்ல. கொள்கைப் பிரச்சனை

ஒற்றையாட்சியின் கீழான தீர்வும் இந்தியா அல்லது அமெரிக்கா முன்வைக்கின்ற தீர்வும் எந்த புள்ளியிலும் சந்திக்கவே முடியாது.

நிபுணர்களின் கைக்கு பிரச்சனையை மாற்றிவிட்டால் அவர்கள் நிபுணத்துவ பாணியில் ஆராய்வார்கள். தங்கள் மூளையை அதனுள் செலுத்திவிடுவர். இறுதியில் நிபுணத்துவ பயிற்சி பட்டறையாகவே அது இருக்குமே தவிர தீர்வு என்று ஏதும் வரப்போவதில்லை. நிபுணத்துவ மூளைப் பயிற்சி என்பது ஒருவருடத்துக்கு இழுத்துக் கொண்டுதான் போகும். நிபுணர்கள் களத்துக்கு வந்த உடன் தாங்கள் நிபுணர்கள் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வந்துவிடுகிறது. ஆகவே தங்களது நிபுணத்துவமான கருத்துகளை எல்லாம்- வார்த்தை ஜாலங்களை எல்லாவற்றையும் மாறி, மாறி பிரயோகிப்பார்கள். இது மூளைப் பயிற்சிக்கான பட்டறையே தவிர இந்தப் பட்டறையிலிருந்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்கான வேலையே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் என்பது அரசியலை கேலி செய்வதாகும். ஒற்றையாட்சியின் கீழ் நிர்வாகப் பரவலாக்கலைத்தான் செய்ய முடியுமே தவிர அரசியல் அதிகாரப் பரவலாக்கலை செய்ய முடியாது. ஒற்றையாட்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலும் நிர்வாக அளவிலான செயலே.

தமிழ் மக்களை விடவும் சிறிலங்கா அரசாங்கத்தை அனுசரித்துப் போவதன் மூலமே இலங்கைத் தீவின் நலன்களை அனுபவிக்க வாய்ப்பாக இருக்கும் என்று மேற்குலகம் கருதுகின்றது. அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் நீண்ட பாரம்பரியத்துடனும் நீண்ட கலாச்சார படுக்கையுடனும் ஒருபோதும் எதிரிகளிடம் சரணடையாத பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள். இதை பண்டாரநாயக்க ஒருமுறை கூறியுள்ளார். தமிழ் மக்களிடம் இருக்கின்ற கலாச்சார தளம் இருக்கிறதே அது பாரதூரமான வலுவைக் கொண்டது. மிகவும் வளர்ச்சியடைந்த மிகவும் உறுதியடைந்த தேசியத் தனித்துவத்திற்கான அடித்தளம் தமிழ் மக்களிடத்தில் இருக்கிறது. அதை ஒருபோதும் கரைக்க முடியாது. அது உணர்ச்சிவசமான தளம் அல்ல. உணர்வுப்பூர்வமான தளம். இதை சிங்கள மேற்கத்திய ஆய்வாளர்களும் ஏன் இந்திய அரசியல் நிபுணர்களும் புரிந்துகொள்ள தவறி விடுகின்றனர். இதனைப் புறக்கணித்துவிட்டு நடைபெறுகிற எந்த ஒரு அரசியல் தீர்மானங்களும் 100 வீதம் தோல்வியைத்தான் தழுவும்.

இந்திய சந்தைக்கான சீனாவின் இராணுவ முகாமாக இலங்கை

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவு என்பது புதிய விடயம் அல்ல. தற்போதைய சீனத் தலைவர் பதவிக்கு வந்தபோது, பூனை கறுப்போ வெள்ளையோ அது எலி பிடித்தால் போதும் என்றார். "சீனாவை உலகின் முதல் தர வல்லரசாக்க வேண்டுமெனில் சீனாவுக்கு இப்போது தேவை சமாதானம். சீனா ஏதாவது ஒன்றுடன் சண்டை பிடிக்குமேயானால் சமாதான திட்டங்கள் இல்லாமல் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விடும். எனவே சீனா வளர சமாதானம் அடிப்படையானது என்றும் கூறினார்.

அயல் நாடுகளுடன் நல்லுறவு, சமாதானக் கொடியின் கீழ் சீன அரசியல் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி- இராணுவத்தை தொழில்களை நவீனமயாக்குதல் என்று தனது ஆட்சியை அவர் தொடங்கினார். அவர் கூறியதன் அடிப்படையில்தான் இந்தியாவுடனான சமாதான நடவடிக்கைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

சீனாவுக்கு இந்தியாவுடன் உள்ள வர்த்தகம் பற்றி சில கருத்துகள் கூறப்படுகின்றன. ஆனால் அரசியல் இராணுவ ரீதியாக வினோதமான ஒரு இடத்தில் போய்முடியக் கூடும்.

எப்படி எனில் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இருதரப்பு வர்த்தகத்தில் இந்தியாவுக்குக் கிடைக்கும் வருமானம்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

சீனாவுக்கு இந்தியா விற்கின்ற பண்டங்கள் எல்லாம் உற்பத்திப் பண்டங்கள் அல்ல. மாறாக முற்றிலும் மூலப் பொருட்கள். இந்தியாவின் பிரதானமான வர்த்தக நடவடிக்கை என்பது முற்றிலும் மூலப் பொருட்களை மையமாகக் கொண்டவை.

சீனாவின் வர்த்தக நடவடிக்கை என்பது முற்றிலுமாக உற்பத்திப் பண்டங்களை மையமாகக் கொண்டவை. இருதரப்பு வர்த்தகத்தை காசால் பார்க்கும் போது பெரிதாகத் தோன்றும். ஆனால் பொருளாதார ரீதியாக சீனாவுக்கு மிகப் பெரிய இலாபம் உண்டு. இதன் மூலம் சீனாவின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க முடியும்.

முன்பு நாடுகளைக் கைப்பற்றி மூலவளங்களைப் பெற்றதைப் போல் அல்லாமல் இப்போது மூலவளங்களைப் பெறுகின்ற தந்திரோபாயத்தில் சீனா முன்னுக்கு நிற்கிறது. இந்திய அரசுக்கு இது விளங்காத விடயம் அல்ல. அரசாங்கத்துக்கு இருக்கின்ற நெருக்கடியில் திறைசேரியை நிரப்ப வேண்டும். மூலப் பொருளையாவது விற்றாவது திறைசேரியை நிரப்ப வேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு உள்ளது. தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் இந்திய விமானங்களை சீனாவில் பறக்க விடுவதன் மூலம் நற்செய்தி ஒன்று இருப்பதாக இந்திய மக்களுக்கு காட்டப்படுகிறது. சீனா விட்டுக்கொடுப்பதான தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

ஆனால் இது சீனாவின் சந்தையை இந்தியாவில் மிகவும் அகலமாக்கிவிடும். இந்த வகையில்தான் அண்மைய கணவாய் திறப்பும். இது மோசமான இராணுவ விளைவுகளை உருவாக்கி விடும் என்று இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு யுத்தம் நடக்குமாக இருந்தால் இந்தப் பாதைக்கூடாக விரைவாக தனது இராணுவத்தை சீனா நகர்த்திவிடும் என்றும் புற்றீசல்கள் போல் இந்தியாவுக்குள் பரவ முடியும் என்றும் கூறுகின்றனர்.

சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் மூல வளங்களோ சந்தையோ அவர்களுக்கு பிரதானம் அல்ல. மாறாக இலங்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையைக் கைப்பற்றுவதுதான் பிரதான நோக்கம். பிரம்மாண்டமான இந்தியாவுக்குள் உள்ள சந்தையைப் பிடிக்க இலங்கை ஒரு களமாக உள்ளது.

சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை ஒரு இராணுவ முகாம். அதற்கு அவர்கள் செலவிடத் தயாராக உள்ளனர். இலங்கையில் சீனா செலவிட்டுள்ள தொகையை விட இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதன் மூலம் பல மடங்கு வருமானத்தை இந்தியாவில் பெற முடியும். அப்படியெனில் இலங்கையில் அவர்கள் செய்யும் செலவானது இந்தியாவில் வருமானத்தைப் பெறுவதற்கான முதலீடுதான். எனவே வெறும் அர்த்தத்தில் பார்த்தால் செலவீட்டுத் தொகையாகவும் நட்டமாகவும்கூட தோன்றலாம். ஆனால் அது முதலீடுதான். இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனையை வாசிங்டன், புதுடில்லி, சென்னை, கொழும்பு என பார்த்து கிளிநொச்சி என விரிவடைந்துள்ளது. இவற்றுக்கு ஊடாக போடப்படுகிற ஒரு நேர்க்கோட்டின் கீழ் இலங்கையின் அரசியல் நிலைமைகளை நாம் பார்க்க வேண்டும். இதில் ஒரு புள்ளி சென்னையைப் பற்றியது.

சென்னைக்கு என்று தனிப்பட்ட நலன்களும் தேவைகளும் உண்டு. அதேபோல் புதுடில்லிக்கு என்று தனிப்பட்ட நலன்களும் தேவைகளும் உண்டு. இந்த இரண்டும் சிலவேளைகளில் சந்திக்கும். சந்திக்காமலும் விடும். ஆனால் பொதுவாக புதுடில்லி சென்னையுடன் அனுசரித்து ஒரு தீர்வை எடுப்பதையே விரும்புகிறது.

வாசிங்டன், புதுடில்லி, சென்னை மூன்றும் ஒரு பொதுவான முடிவுக்கு வந்துள்ளது. ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாது. சென்னையைச் சார்ந்திருக்கிற ஊடகவியலாளர்கள் தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தூண்டப்படும் போது எல்லைக்கு மீறிச் செயற்படுகின்றனர்.

புலிகளை அமர்த்தி ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்று புதுடில்லி நினைக்கிறது.

உதாரணத்துக்கு ஒரு சமஸ்டி ரீதியான தீர்வு ஏற்பட்டு புலிகளிடம் கைகளில் முழு அதிகாரங்கள் போய் அது புலிகளின் அரசாங்கமாக இருந்துவிட்டால் அது நாடைப் பிரிப்பதற்கான இன்னொரு கட்டத்துக்குப் போய்விட முடியும் என்று புதுடில்லி நினைக்கிறது.

அப்படி அல்லாத ஒரு சாம்பாரை உருவாக்குவதில் புதுடில்லிக்கு அக்கறை இருக்கிறது.

இங்கு ஒரு தேசிய சக்தி வந்துவிடக் கூடாது என்பதுதான் புதுடில்லியின் ஆழமான பிரச்சனை.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை இல்லையெனில் கொழும்பை புதுடில்லி கையாள முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனையானது புதுடில்லிக்கு ஒரு வரப்பிரசாதம். இதை வைத்துக் கொண்டு அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சனையானது ஒரு உறுதியடைந்த தேசியத் தன்மையை அடையக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.

இந்த இரண்டும் கெட்டான் நிலை புதுடில்லியிடம் இருக்கிறது. இந்த நிலையில்தான் எல்லாவற்றையும் துண்டு துண்டாக சாம்பாராகப் பார்க்கிறார்கள்.

ஆனால் இலங்கையின் வரலாறு- தமிழ் மக்களின் வரலாறு எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கிறது. அதற்கான பலமான பண்பாட்டு- கலாசாரத் தனித்துவ தளம் எம்மிடம் உண்டு. அதை ஒருவராலும் கரைத்துவிட முடியாது.

தமிழீழத் தமிழர்களின் சராசரி மனநிலையை உதாரணமாகச் சொல்லலாம். எவரேனும் புத்தி சொன்னால் செவிமடுப்பார்கள். ஆனால் தான் நினைத்ததையே ஒவ்வொரு ஈழத் தமிழரும் செய்வர். அது ஒரு வகையான தனித்துவமானது.

அப்படியே புத்தி கேட்டாலும் அது தனக்கு சாதகமோ பாதகமோ உணர்ந்து தனக்கு ஏற்பானவற்றை சிந்திக்கும் கலாசார வளர்ச்சி தமிழனிடத்தில் உண்டு. இலகுவில் தங்களைக் கூட்டமாகக் கரைத்துக் கொள்ளமாட்டார்கள் என்றார் மு. திருநாவுக்கரசு.

:lol::lol: :idea:

http://www.eelampage.com/?cn=27459

  • தொடங்கியவர்

வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவதை விட ஏன் எடுத்தார்கள் என்ற காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் தீர்வுக்கான ஒரே வழி என்றார் கமலாதாஸ்

இப்ப நடக்கிறது அமெரிக்கன் எம்பயர். அவை சொல்லுறபடிதான் கேட்கனும். இல்ல..பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் கீழ்...சிங்கள அரசுகளுக்கு தாராள உதவிகள் நேரடியாகவே வந்து சேரும். அப்ப...இந்த நியாயங்களைப் பரிசீலிக்கக் கூட கால அவகாசம் இருக்காது. அமெரிக்காவின் மென்ராலிற்றி தெரிஞ்சும்..இப்படிக் கேட்கிறது அப்பாவித்தனமா இருக்குது..!

எப்ப அமெரிக்காவின் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் அவர்களையே பாதிக்குதோ..அப்பதான் அமெரிக்கா சிந்திக்கும்.அது வெகு தொலைவில் இல்ல..! :wink: :idea:

ஆர் ஆருக்கு புத்தி சொல்லுறதுண்டு விவஸ்தையே இல்லாமல் போட்டுது.

அவன் செய்த வேலையாலைதான் ஒரு நிகழ்ச்சி கூட சந்தோசமாய் கொண்டாடேலாது. ஒரு ரெயின் பஸ்ஸில நிம்மதியாப் போகேலாது. பிறகு மற்றாக்களுக்கு புத்தி சொல்ல வெளிக்கிட்டீனம்.

  • தொடங்கியவர்

ஆர் ஆருக்கு புத்தி சொல்லுறதுண்டு விவஸ்தையே இல்லாமல் போட்டுது.

புத்தியத் தீட்டினா..கத்தி தீட்டத் தேவையில்ல..! :P :idea:

அவன் செய்த வேலையாலைதான் ஒரு நிகழ்ச்சி கூட சந்தோசமாய் கொண்டாடேலாது. ஒரு ரெயின் பஸ்ஸில நிம்மதியாப் போகேலாது. பிறகு மற்றாக்களுக்கு புத்தி சொல்ல வெளிக்கிட்டீனம்.

ஈராக்கில தினம் சனம் சாகுது முதல்ல அதை நிப்பாட்டிப்போட்டு எங்களுக்கு புத்தி சொல்ல வரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா ஏதோ இண்டைக்கு சொல்லுறமாதிரி குருவியளும் கொண்டுவந்து ஒட்டிப்போட்டு அதுக்கு வேற ஏதோ விளக்கம் குடுத்துக்கொண்டு நிக்கிறார். இதே அமெரிக்காவிற்குத்தான் ஒஸ்லோவில வைச்சு விளக்கம் குடுத்தாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

சீசீ!!

எல்லோருடைய காலையும் பணிந்து நக்கிக் கொண்டு திரிவது தான் இப்ப தமிழ்மக்களுக்கு தேவை! உம்மாண்டி என்று சவுண்டு கொடுத்தாலே அவையின் காலைப் பிடிச்சுக் கொண்டு நிற்கவேண்டும் பிறேம்!!

அது தான் கருத்தாடலின் முக்கிய நோக்கமே! இது கூடத் தெரியாமல்...... சா

  • தொடங்கியவர்

அமெரிக்கா ஏதோ இண்டைக்கு சொல்லுறமாதிரி குருவியளும் கொண்டுவந்து ஒட்டிப்போட்டு அதுக்கு வேற ஏதோ விளக்கம் குடுத்துக்கொண்டு நிக்கிறார். இதே அமெரிக்காவிற்குத்தான் ஒஸ்லோவில வைச்சு விளக்கம் குடுத்தாச்சு.

முன்னர் சொல்லுறதுகளுக்கும்... இப்ப சொல்லுறதுகளிக்கிடையிலும்...ச

மங்களா அமெரிக்கா போய் மன்றாடி ஒண்டும் கிடைக்காமல் திரும்வர உவர் முந்தியும் கொழும்பிலுள்ள வர்த்தகர்களோடான இராபோசன விருந்தில் புலிகள் போச்சுவார்த்தைக்கு போகது யுத்தத்தை விரும்பினால் ஒரு பலமான இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவர். அதாவது அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு உதவும் என்றவர். இதை இவர் ஏன் ஒரு பட்டும்படாமலும் வர்த்தகர்களுடனான இராபோசன விருந்தில் சொல்லவேணும்?

கண்காணிப்புக் குழு வேறு அனுசரணையாளர்கள் வேறு. கண்காணிப்புக் குழுவை நியமிப்பவர்கள் அனுசரணையாளர்கள். தற்பொழு அனுசரணையாளர்கள் முன்புபோல் அல்லாது ஈடுபாட்டுடன் இல்லை என்பது ஒருபுறம் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னத்தோடு ஒரு மென்தீவர யுத்தம் நடக்குமளவிற்கு அவர்கள் செயலிளந்து அர்த்தமற்றவர்களாகிவிட்டார்

செப்பரம்பர் வரையும் தான் உந்த நகர்வுகள் எல்லாம் அதுக்குப்பிறகு புயல் பூகம்பம் ஆகுமா இல்லை தென்றலா வீசுமா என்பதெல்லாம் ஒருதற்ற கையில தான் இருக்கு,இங்க அமெரிக்காவோ அன்றி இந்தியாவோ தாங்கள் நினக்கிற மாதிரி நடக்க இது இராக்கோ அல்ல ஆப்கானிஸ்தானோ அல்ல.

மேல திருனாவுக்கரசர் முடிச்சிருக்கிறதில இருந்து விளங்கினாச் சரி.

ம்.. இப்பிடி கன செப்ரெம்பரை பாத்திட்டன்.. அதுசரி ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது எண்டு ஒரு தலைப்புப்போட்டு நீங்கள்ளாரும் விளாசியிருந்ததை அவதானிச்சன்.. குறுக்காலைபோறவர் உதுகளை கவனிக்கேல்லையோ..? வர்த்தக இராப்போசன விருந்திக்குப்பிறகுதான்..இப்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவோ, அல்லது வேறெந்த நாடுகளோ தமிழீழத்தவர் மேல் பாசம் கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை. தங்கள் நலன் மீதுதான் அவர்களுக்கு அக்கறை. சிங்கள அரசுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கின்றது. அதுதான் அவர்கள் ஆகாயத் தாக்குதல்களையும், ஆழ ஊடுருவும் தாக்குதல்களையும் ஒத்தி வைத்துவிட்டு, நிபுணர் குழுவொன்றை அமைத்து அரசியல் தீர்வு கொடுக்கப் போகின்றோம் என்று காலத்தை இழுக்கப் போகின்றார்கள். சமாந்தரமாக சிங்களப் படையணிகளை வலுவாக்கி தமக்கு சாதகமான நேரத்தில் போரைத் தொடங்க முற்படுவார்கள். சாதாரண அறிவுள்ள நமக்கே இது விளங்குகின்றதென்றால், புலிகளின் அரசியல்/இராணுவ வல்லுனர்களுக்கு நிறைய விடயங்கள் விளங்கும், அவர்களும் அதற்கேற்ப தமது உத்திகளை மாற்றிக்கொள்வார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் வேலையைப் புலிகள் செய்யமாட்டார்கள். :idea:

வலதுகுறைஞ்ச (மதி)வதனன்,

அமெரிக்கா தன்னாட்சியை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது சாதாரண தமிழர்களை திருப்த்திப்படுத்த. அப்படியான அறிவிப்புகள் மூலம் அமெரிக்காவின் நகர்வுகள் பற்றிய எதிர்கருத்தலையை மட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அதன் மூலம் தமிழர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை பெற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசை அமெரிக்காவிற்கு. அந்த நம்பிக்கையை தளமாக வைத்து காலப்போக்கில் புலிகள் மீது அழுத்தங்களை கொண்டுவரலாம் என்ற பகல்கனவு. இதைத்தான் carrots & sticks என்பார்கள், அங்கீகாரம் தாறன் அடிபணி என்ற ஆக்கிரமிப்பு மேலாண்மை யுக்த்தி. தன்னாட்சியை ஏற்றுக் கொண்டதாக அறிவித்ததை தமிழர்கள் தமது மகிந்தாவின் ஒற்றையாட்ச்சிக்குள்ளான தீர்வு என்றதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பாவித்துக் கொள்கிறார்கள் அதற்காக அமெரிக்காவின் அந்த அறிவிப்பு செய்ததன் உள்நோக்கமும் தெரியவில்லை என்பதல்ல அர்த்தம்.அதாவது அவர்களுடைய கொள்கை அடிப்படையான அங்கீகாரம் என்பது எமக்கு சாதகமாக பாவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கா அவர்கள் (வேறு சந்தர்ப்பங்களில் சூட்சமாக சொல்லும்) நிபந்தனைகளிலும் கேக்கும் விலையிலும் எமக்கு உடன்பாடு இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

அன்னம் தேவையான பாலை பிரித்தெடுப்பது போல் அமெரிக்காவே இல்லை வேறுயாரோ செய்யும் ஒவ்வொரு நகர்வுகளையும் எமது தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக பயனுள்ள வகையில் ஏற்ற வடிவங்களில் உரிய நிலைகளில் பிரித்து வடிகட்டி பாவிக்க வேண்டும் தேவையற்றதை தூக்கி எறிய வேண்டும் அதைத்தான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்கள் செய்கிறார். இறுதி இலட்ச்சியத்தில் மாற்றம் இல்லை என்பதில எல்லாரும் தெளிவாத்தான் இருக்கினம் உம்மை மாதிரி 1...2 வலது குறைச்சதுகளை தவிர.

அட போங்கப்பா...! இந்தியா புலிகளுக்கு உதவி செய்யுது எண்டு இலங்கை புலநாய்வுத்துறை பினாத்துது....

இதுக்கை அமெரிக்கா திருந்தட்டாம் இல்லை.... திருந்த விடுங்கப்பா...!

உவர் குருவி ஒருக்கா பரப்பரப்பு ரிசியின் கட்டுறையை இணைத்தபோது அவர் ரிசி அமெரிக்காவின்ர உளவாளி(CIA) உவர் சொல்லுறதை கேக்கிறவை மட்யர் எண்டு அளந்தவர்.... இப்ப அமெரிக்கா காறன் சொல்லுரதை கேக்கட்டாம்....! :P :P :P

ம்.. இப்பிடி கன செப்ரெம்பரை பாத்திட்டன்.. அதுசரி ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது எண்டு ஒரு தலைப்புப்போட்டு நீங்கள்ளாரும் விளாசியிருந்ததை அவதானிச்சன்.. குறுக்காலைபோறவர் உதுகளை கவனிக்கேல்லையோ..? வர்த்தக இராப்போசன விருந்திக்குப்பிறகுதான்..இப்

அடே அம்பியவை சில நேரம் குருவியும் மதியும் புலிகள் தங்களிடம் இருக்கும் ஆயுதத்தை கொண்டு வந்து குருவியிண்ட கவட்டுக்குள்ளையும் மதிண்ட கவுட்டுகுள்ளையும் போட்டு

விட்டு அவையிண்ட கவவுட்டுகுள்ள இருக்கிரா இரண்டையும் பாவிக்க சொல்லினமோ தெரியா? :twisted:

அவைண்ட மண்டைக்க ஒண்டும் இல்லை மதிக்கு யாழ்களத்தில தமிழ்தேசியத்தையும் புலிகளை ஆதரிப்பவர்களையும் சீண்டி பார்பதில் ஒரு ஆசை குருவிக்கு என்ன ஆசை தனது கருத்தை எல்லாரும் ஏற்க்க வேண்டும் அவர் இந்த தலைப்பில் மட்டும் இல்லை எல்லா தலைபிலும் தனது தான் பெரிசு எண்டு நிப்பார் ஆனா என்னும் தனியாக மூத்திரம் கூட பெய்ய தெரியாது குருவிக்கு :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

அடியேனும் இந்த தலைப்பிற்கு ஒத்துப் போகிறேன்! நிச்சயமாக "விடுதலைப் புலிகள் அணுகுமுறையை மாற்றத்தான் வேண்டும்"!!! பேச்சுவார்த்தை, உலக அங்கீகாரம், யுத்தநிறுத்தம், .... எல்லாத்தையும் குப்பைக்குள் போட்டுட்டு நரம்படிதான் தீர்வு!! அடியை மாதிரி அண்ணன் தம்பி ....!!!

ரோகரா...

முந்தியெல்லாம் வருஷாவருஷம் முன்னேற்ற அறிக்கை விடுவாங்கள்.. இப்பல்லாம் இவங்கள் கிழமைக்கு கிழமையல்லோ முன்னேற்ற அறிக்கை விடுறாங்கள்.. தவிர..அவங்கள் கிட்டடியிலை கொண்டுபோய் காட்டின நியூசுகளும் அல்லைப்பிட்டி பிறீலான்ஸ் இன்ரவியூக்களும் பாத்தனான்.. நாங்கள் எவறெடி..நீங்கள் றெடியெண்டால்..எண்டுபோட்டு நிப்பாட்டிப்போட்டாங்கள்..

இடம்பெயருற சனம் இடம்பெயர்ந்துகொண்டுதானிருக

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியெல்லாம் வருஷாவருஷம் முன்னேற்ற அறிக்கை விடுவாங்கள்.. இப்பல்லாம் இவங்கள் கிழமைக்கு கிழமையல்லோ முன்னேற்ற அறிக்கை விடுறாங்கள்.. தவிர..அவங்கள் கிட்டடியிலை கொண்டுபோய் காட்டின நியூசுகளும் அல்லைப்பிட்டி பிறீலான்ஸ் இன்ரவியூக்களும் பாத்தனான்.. நாங்கள் எவறெடி..நீங்கள் றெடியெண்டால்..எண்டுபோட்டு நிப்பாட்டிப்போட்டாங்கள்..

இடம்பெயருற சனம் இடம்பெயர்ந்துகொண்டுதானிருக

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமெத்த உலகமே பேசுங்கோ..பேசித்தீருங்கோவெண்

இவற்றை வாலை தூக்கிப்பிடிச்சுக் கொண்டிருக்கிற கதையை பார்க்க விளங்குது உவர் தடை செய்யப்பட்ட பிறகு சுகுமார் என்று வந்தவர் பிறகு இன்னெண்டா வந்தவர் இப்ப கடசியா பழைய அறிமுகத்தோடை வந்திருக்கிறார். மொத்தத்திலை தடை செய்யப்பட்டதிலை இருந்து மாறி மாறி வேறு பெயர்களில் வந்து குளப்புவதில் தான் கண்ணா இருக்கிறார் விலகி இருந்திருக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.