Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரினச்சேர்க்கையாளர்களின் சட்டபூர்வ திருமணத்தை ஆதரிக்கும் மசோதா. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

Featured Replies

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. மசோதாவிற்கு ஆதரவாக 44 ஓட்டுகளும் எதிராக 33 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்த மசோதா தங்குதடையின்றி நிறைவேறியது.

இந்த மசோதா நிறைவேற பெரிதும் முயற்சியெடுத்த Labour MP Louisa Wall என்ற பெண்ணை நியூசிலாந்து எம்.பி.க்கள் பெரிதும் பாராட்டினர். இவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். ஆனாலும் இந்த மசோதா நிறைவேறியது நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தனர்.

இந்த மசோதா நிறைவேறியவுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்க்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களது சந்தோஷத்தை கைதட்டி வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

http://www.thedipaar.com/new/news/news.php?id=59963

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுடன் பெண் வாழவேண்டும் என்பது தான்... உலக நியதி.
ஆணும், ஆணும் சேர்ந்தோ... பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ... என்ன இன்பம் கிடைக்கப் போகுது என்று தெரியவில்லை.
எமது சங்க கால இலக்கியங்களில்.... ஒரினச் சேர்க்கையைப் பற்றி எழுதப் பட்டிருக்கவில்லை என நினைக்கின்றேன்.
கலி முத்திப் போச்சுது.

நம்ம கல்லூரிக் கழிவறைகளின் சுவர்களில், ஒரு நூலகமே இருக்கும்! :D

எனக்கும், இந்தத் தாற்பரியம் விளங்கக் கனகாலம் எடுத்தது! இப்படியான விசயங்களில், நான் எப்பவும் 'டியுப் லைட்' தான்! :o

ஆனால், சும்மா பொழுது போக்குக்காகச் சட்டங்கள் செய்யமாட்டார்கள்!  :D

ஏதும் விசயம் இருக்கும்! எமது அறிவுக்கு அப்பாற்பட்டது என்று விட்டு விடுவோம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரான்சிலும்  கன காலமாக பாராளுமன்றத்தில் அடிபடுகிறார்கள்

வெளியில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்

ஒன்றும் புரியல

ஆனால் இல்லை என்று சொல்லக்கூடாது சிறி

இப்ப மக்கள

இந்தந்த பாலாருடன் வெளியில் அனுப்புவதற்கும் யோசிக்கவேண்டிக்கிடக்கு.... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுடன் பெண் வாழவேண்டும் என்பது தான்... உலக நியதி.

ஆணும், ஆணும் சேர்ந்தோ... பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ... என்ன இன்பம் கிடைக்கப் போகுது என்று தெரியவில்லை.

எமது சங்க கால இலக்கியங்களில்.... ஒரினச் சேர்க்கையைப் பற்றி எழுதப் பட்டிருக்கவில்லை என நினைக்கின்றேன்.

கலி முத்திப் போச்சுது.

ஏன் எங்கட கடவுள்மார் சிவனுக்கும்,விஸ்னுக்கு பிறந்தவர் தானே ஜயப்பன் :D ...எதை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் தான் முன்னோடிகள் :lol: ஆனால் உலகத்தின் முன்னால் ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறது :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்!

 fance-flag.jpgபிரான்ஸ் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் ஓரின சேர்க்கையாளர் திருணத்துக்கு அங்கீகாரம் அளிப்பேன் என பிரான் கோயில் ஹோலண்டே உறுதி அளித்தார். 

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவி ஏற்றதும் அதை நடைமுறை படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் குடியரசு கட்சியினரும், சமூக சேவை ஆர்வலர்களும் கடும் எதிரிப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாத ஹோலண்டே ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இந்த மசோதா குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடந்தது. பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 249 ஓட்டுகள் பெற்று மசோதா நிறைவேறியது. இதன் மூலம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிராக 97 ஓட்டுகளே கிடைத்தன. சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து பிரான்ஸ் நகரங்களில் ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் கண்டன பேரணி நடத்தினார்கள். தற்போது நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பிரான்சில் அனைவருக்கும் சம உரிமை, சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=21853:2013-02-03-17-00-01&catid=55:2011-04-22-08-55-32&Itemid=81

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்கட கடவுள்மார் சிவனுக்கும்,விஸ்னுக்கு பிறந்தவர் தானே ஜயப்பன் :D ...எதை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் தான் முன்னோடிகள் :lol: ஆனால் உலகத்தின் முன்னால் ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறது :)

ஐயப்பன் எல்லாம் எங்கள் கடவுள் இல்லையே.. மாறாக ஐயனார் எங்கள் காவல் தெய்வம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்பன் எல்லாம் எங்கள் கடவுள் இல்லையே.. மாறாக ஐயனார் எங்கள் காவல் தெய்வம்..

ஜயப்பனை எங்கட ஆட்கள் எவ்வளவு பேர் கும்பிடினம் என இசைக்குத் தெரியாது போல :lol: ...ஜயப்பனின்ட அப்பா சிவன் :D  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜயப்பனை எங்கட ஆட்கள் எவ்வளவு பேர் கும்பிடினம் என இசைக்குத் தெரியாது போல :lol: ...ஜயப்பனின்ட அப்பா சிவன் :D:)

எங்கட ஆக்களுக்கு ஐயப்பன் யாரெண்டு தெரியாத காலத்திலேயே எனக்கு அவரைத் தெரியும்.. :lol:

இந்த ஐயப்பன் கதாபாத்திரத்தை சிவனின் கதைக்குள் இடைச்செருகலாகக் கொண்டுவந்தார்கள் என்றுதான் அறிந்திருக்கிறேன்..

தமிழ்நாட்டுக்குள்கூட ஐயப்பன் கோயில்கள் வந்தது அநேகமாக கடந்த முப்பது வருடங்களுக்குள்தான்..

உண்மைதான் இசை

அதனால்தான் எனக்கு ஐயப்பனைவிட  நம்பியாரைப்பிடிக்காது... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஜயப்பனை எங்கட ஆட்கள் எவ்வளவு பேர் கும்பிடினம் என இசைக்குத் தெரியாது போல :lol: ...ஜயப்பனின்ட அப்பா சிவன் :D  :)

இலங்கையில் எங்கே ஐயப்பன் கோயில் உண்டு?? எப்போ கட்டப்பட்டது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.