Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் மக்களது வீடுகள் தீக்கிரை ; ரிசாட்டின் ஏற்பாடு எனவும் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c1262fa5f95c15b0c61b85aefa82b33c.jpg

முள்ளிவளையில் மக்களுடைய வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளையில் உள்ள மக்களுடைய வீடுகளை நேற்று இரவு ஒரு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. எனினும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆலயத்திற்குச்  சென்றிருந்தமையினால் அவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பிக் கொண்டனர். 

சம்பவத்தையடுத்து இன்று காலை அமைச்சர் றிசாட் பதியூதினிடம் நேரடியாக சென்று சம்பவம் குறித்து கூறிய போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ரிசாட்டின் ஏற்பாட்டில் முள்ளியவளை பகுதியில் உள்ள 540ஏக்கர் தேக்கம் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில வாரங்களாக பிரதேச மக்கள் அமைச்சர் றிசாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன் மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 இச்சம்பவங்களை அடுத்தே மக்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=680981989421122150

 

அமைச்சர் முகம்போட்ட இன்னொரு பயங்கரவாதி தமிழரகளை அழித்து தனது மக்களையும் அழிக்க உதவும் "அரசியல்வாதி" !

Edited by akootha

முள்ளியவளையில் வீடுகள் தீவைப்பு

 

130421113407_mullai_fire_house1_304x171_

 

130421113845_mullai_fire_house2_304x171_

 

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ்க்குடும்பங்களின் நான்கு குடிசைகள் சனிக்கிழமை நள்ளிரவு தீயிடப்பட்டிருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இரவு ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ எற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

முள்ளியவளை மத்தி என்ற கிராமப்பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்தில் முல்லைத்தீவுக்கான பிரதான வீதியோரத்தில், ராணுவத்தினர் தமக்கு முகாம் அமைப்பதற்காக காணி தேவையெனக் கூறி அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு கோரியிருந்ததாகவும், அதற்கு அந்த மக்கள் உடன்பட மறுத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்த இடத்தையும் இதனையொட்டி காடாக இருக்கின்ற காணிகளையும் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது, அதனையும் அந்த மக்கள் எதிர்த்து போராடியிருந்தனர்.

இதனையடுத்து, இந்த மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்ற எல்லைக்கு அருகில் உள்ள 4 குடிசைகளே சனியிரவு அடையாளம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்டிருக்கின்றன.

இரவு ஒரு மணிபோல நெருப்பு எரிந்த வெளிச்சத்தைக் கண்டு வெளியில் வந்து பார்த்தபோது, நான்கு குடிசைகள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாக நேரில் கண்ட அயல் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130421_mullaifirehouse.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரிசாத்து கெட்டவனிலும் ..கெட்டவன்....இவனுடைய நோக்கமே எம்மினத்தை கருவறுப்பது...அதாவது.தமிழின குடிபரம்பலை ..குறைத்து...தம்மினத்தை வளர்ப்பதே...இப்ப முதல் எதிரி இந்த சோனிகளே...இது தெரியாமல் யாழ் களத்தில் முஸ்லிம்களுக்கு வக்காலாத்து வாங்கும் சிலர் இருப்பது வருந்ததக்கது...

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான சம்பவங்களை உடனடியாக உதயன் பத்திரிகை எழுதுவதால் தான் தம் பத்திரிகை அரச படைகளாலும் ஈ.பி.டி.பி கும்பலாலும் கொழுத்தப்பட்டதாக சரவணபாவன் அவர்கள் வெளிச்சம் நிகழ்ச்சிக்கு செவ்வி வழங்கி இருந்தார்.
 
தமிழ் மக்களை பழிவாங்கும் அமைச்சர் ரிசாட் ஒரு இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ம் ம் ....... உதயன் பேப்பர் நல்லா தான் மினக்கெடுது ....  கிளிநொச்சி ..... யாழ்ப்பாணம் ..... முள்ளியவளை .....

அடுத்த கன்வசிங் எங்கயெண்டு.... அனேகமா மன்னாரா தான் இருக்குமெண்டு நினைக்கிறான்.... :)
 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி ரிசாட்டிட்கு வாக்களித்து அந்த நதேரியை அமைச்சராக்கியது யார் மக்கா 

பொல்ல நாமளே குடுத்துப்போட்டு இப்ப அடிக்கான் எண்டு கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை 

அது கொடுக்கும் முன்ன யோசிச்சியிருக்கணும் 

பொல்ல கொடுத்துப்போட்டிகள் இல்ல...!

இப்ப பின்னுக்கும் முன்னுக்கும் பொத்திட்டு அடிய வாங்குங்கோ :D  :lol:  :D  :lol:  

Edited by Atonk

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான சம்பவங்களை உடனடியாக உதயன் பத்திரிகை எழுதுவதால் தான் தம் பத்திரிகை அரச படைகளாலும் ஈ.பி.டி.பி கும்பலாலும் கொழுத்தப்பட்டதாக சரவணபாவன் அவர்கள் வெளிச்சம் நிகழ்ச்சிக்கு செவ்வி வழங்கி இருந்தார்.
 
தமிழ் மக்களை பழிவாங்கும் அமைச்சர் ரிசாட் ஒரு இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை.

 

 

இதே உதயன் தான் இந்த மக்களை கேவலமாக எழுதியது.

 

ஒட்டுக்குழு என்று வாய்கிழிய கத்துவது உதயனுக்கும் பொருந்தும். உதயனும் அரசுடன் கள்ளத்தொடர்புள்ள பத்திரிகை.

 

உதயன் நல்லவன் வேசம் போட்டு விற்பனையை பெருக்க என்ன வேண்டுமானாலும் செய்யும். அவங்கள் அடிக்கிற மாதிரி அடிப்பங்கள் இவங்கள் கத்துற மாதிரி கத்துவாங்கள். சரி எவவளவு காலம் தான் இந்த நாடகத்தை தொடர்வதாக உதயனுக்கு உத்தேசம்? மக்களுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் உதயன் அலுவலகத்தை தாக்குவார்கள்.

 

உதயனின் நம்பிக்கை கேள்விக்குறியானது. பேரினவாதத்தை அண்டிப்பிழைக்கத்தெரிந்த மையவாதப் பத்திரிகை.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டா,

கொமெடி பதிவு சூப்பர்.  நீங்கள் ரூம் போட்டு யோசிப்பவர் போல் தெரிகிறது.

புரளி கொமெடி தொடரட்டும்.  இரண்டாயிரம் ரூபா கூலிக்கு நல்லா குனிஞ்சு சேவகம் செய்கிறீர்கள்.

"உதயனுக்கும் அரசுக்கும் கள்ள தொடர்பு: சின்னவீடுகள் ஆதங்கம்"  

:D

 

என்று போரால் அவலப்பட்ட மக்களை மாடுகள் என்று ஏளனம் செய்ததோ அன்றிலிருந்து உதயனும் கோத்தாவும் ஒன்று என்று முடிவுக்கு வந்தாச்சு. என்னும் 3 வருசத்துக்கு இந்த முடிவை மாற்ற முடியாது.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதே உதயன் தான் இந்த மக்களை கேவலமாக எழுதியது.

 

ஒட்டுக்குழு என்று வாய்கிழிய கத்துவது உதயனுக்கும் பொருந்தும். உதயனும் அரசுடன் கள்ளத்தொடர்புள்ள பத்திரிகை.

 

உதயன் நல்லவன் வேசம் போட்டு விற்பனையை பெருக்க என்ன வேண்டுமானாலும் செய்யும். அவங்கள் அடிக்கிற மாதிரி அடிப்பங்கள் இவங்கள் கத்துற மாதிரி கத்துவாங்கள். சரி எவவளவு காலம் தான் இந்த நாடகத்தை தொடர்வதாக உதயனுக்கு உத்தேசம்? மக்களுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் உதயன் அலுவலகத்தை தாக்குவார்கள்.

 

உதயனின் நம்பிக்கை கேள்விக்குறியானது. பேரினவாதத்தை அண்டிப்பிழைக்கத்தெரிந்த மையவாதப் பத்திரிகை.

 

 

 

யாரோ எழுதிய கவிதையை உதயன் பிரசுரித்தது என நினைக்கிறேன்.மன்னிப்பும் கேட்டது.
 
ஆனால் வானத்தில் இருந்து  ஏலியன்ஸ் குதித்து உதயன் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கவில்லை.ஈ.பி.டி.பியின் கொலைகார கை அன்றைய சம்பவத்தில் பத்திரிக்கையை எரித்தது என்பது மட்டும் உண்மை.
 
மற்றும் படி உதயன் பத்திரிகை ஆசிரியரை பற்றி புலனாய்வு செய்ய  வீரகேசரி , தினக்குரல் போன்றவற்றை புலனாய்வு செய்தால் நன்றாக இருக்கும்.உங்களுக்கு சுணைத்தது :icon_mrgreen:  ஈ.பி.டி.பியை உதயன் இழுத்தது தான் என்பதையும் நன்கு அறிவோம்.
 
வன்னியில் சந்திரகுமார்/டக்ளசின் கும்மியடியை மக்கள் நன்கு அறிவர்.ரிசாத்துடனுடன்,மகிந்தவுடனும் ஈ.பி.டி.யின் கூடிக்குலாவுதல் பற்றியும் வன்னி மக்கள் நன்கு அறிவர்.சிறிதரனின் அலுவலகத்தில் என்ன வைத்தவர்கள் என்பதையும் ஒட்டுக்குழு டக்ளசுக்கு நன்றாக தெரியும்.எப்படி செய்தும் மக்களின் மனதை வெல்ல முடியாமல் ஏன் இருக்கிறது என அறை எடுத்து யோசிக்கவும்.இங்கு வந்து பினோக்கியோ கதைகளை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த முஸ்லீம் அமைச்சர் கனக்க தென்னிந்திய தமிழ் சினிமா பார்ப்பார் போல இருக்குது..! குடிசை மக்களை காலி செய்ய குடிசைகளை எரிக்கும் வில்லன்கள் போல.. இவர் முஸ்லீம் மதப்பயங்கரவாதத்தை நிலைநிறுத்த.. தமிழ் மக்களின் வாழ்விடங்களை எரிக்கிறார்.

 

ஒருவேளை 1990 இல் வெளியேற்றாமல் விட்டிருந்தால் இவரே 1991 இல் முழு வடமாகாணத்தையும் முள்ளிவாய்க்கால் ஆக்கி இருந்தாலும் இருப்பார் போல இருக்குது.

 

தமிழர்கள் கையில் குச்சி இருந்தால் தான் மதிப்புப் போல..! தமிழர்கள் கையில் குச்சியை திணிப்பது ஒட்டுக்குழுக்களும்.. சிங்கள மற்றும் முஸ்லீம் கடும்போக்காளர்களும் அன்றி வேறு எவரும் அல்ல. :(:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.