Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவில் வாழும் முதல் காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள்.
வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது.
இங்கும் அந்த நிலை இப்போது தோன்றிக்கொண்டிருக்கிறது. ‘சும்மா நேரப்போக்குக்காக காதலித்தேன்’ என்று ஆண்களும், பெண்களும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதல் காதல் என்பது அவர்களுடைய ஆன்மாவில் வெகு ஆழமாக பதிவு செய்யப்பட்டுவிடுகிறது.
அதை அவர்களால் மறக்க முடியாது. முதல் காதல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக பெரும்பாலும் இருப்பதில்லை. இந்த சமூகம் காதலைக்கூட ஒரு வரை முறைக்குள்தான் வரவேற்கிறது என்பது, அந்த முதல் காதலர்களுக்கு தெரியாது. அதனால் இனம், மொழி, ஜாதி எல்லைகளைக்கடந்து, வயதையும், வாழ்க்கையையும் நினைத்துப்பார்க்காமல் முதல் காதலில் மூழ்கிவிடுகிறார்கள்.
அதனால் இந்த காதல் பெரும்பாலும் ஜெயிப்பதில்லை. ஜெயித்தாலும், தோற்றாலும் இந்த முதல் காதல் அழியாமல் நினைவிலே வீற்றிருக்கும். உலக சாதனையாளர்கள்கூட தங்களுடைய முதல் காதலை மறக்க முடியாமல் மனம் சோர்ந்திருக்கிறார்கள் என்பதை சரித்திரம் சொல்கிறது. இதயங்கள் இரண்டு இணைவது மட்டுமே காதல் என்றால் அது அநேகமாக முதல் காதலில் மட்டுமே நிகழும்.
அந்த காதலில் பிரிவு ஏற்படுவதை இதயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. முதல் காதல் நிறைவு பெறாத நிலையில் அதன் நினைவுகள் இறுதிவரை தொடரும். அதை யாராலும் அழிக்க முடியாது. காதல் என்பது இயற்கையின் பொக்கிஷம். மனிதர்களின் உள்ளங்களை மென்மையாக்கி பக்குவப்படுத்தும் சக்தி காதலுக்கு உண்டு.
ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவை இன்றும் காதலுக்கு எதிரிகள்தான். எந்தக் குறையையும் பெரிதுபடுத்திப் பார்க்கத் தெரியாத முதல் காதல் தெய்வீகமானது. முதல் காதல் வெற்றி என்பது வாழ்க்கை முழுவதற்குமாக கிடைத்த வெற்றி என்று கூற முடியாது.
ஏனென்றால் வாழ்க்கை வெகுநீளமானது. அதற்கு பின்னாலும் வாழ்க்கையில் வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அதுபோல் முதல் காதல் தோல்வி என்பதும், வாழ்க்கை தோல்வி அல்ல. நீளமான வாழ்க்கை காலத்தில் வேறுபல விஷயங்களில் வெல்ல முடியும். மனோதத்துவ நிபுணர்கள் இந்த முதல் காதல் விஷயத்தில் ஆச்சரியப்படவே செய்கிறார்கள்.
“வாழ்க்கையில் மனிதர்கள் எத்தனையோ திருப்பங்களையும், வெற்றி, தோல்விகளையும் சந்திக்கிறார்கள். அதில் பல அப்படியே அழிந்துபோய்விடுகின்றன. சிரமப்பட்டு முயற்சித்தால்கூட சில விஷயங்கள் நினைவில் வருவதே இல்லை. ஆனால் இந்த முதல் காதல் மட்டும் நினைவுகளாக அந்த மனிதன் மரணம் வரை அவனுடனே வாழ்கிறது” என்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.
மனிதர்களின் காதல் உணர்வு இன்ப பரவசமானது. அதனால் காதல் சினிமாக்களை பார்க்கவும், காதல் செய்திகளை படிக்கவும், அடுத்தவர்களின் காதலைப் பற்றிஅறியவும் ஆர்வப்படுகிறோம். அப்படி பரவலாக பல இடங்களில் இருந்து காதல் விஷயங்களை பார்க்கும் போதும், கேட்கும்போதும், படிக்கும்போதும் நமக்குள்ளே இருக்கும் காதல் உணர்வு நினைவுக்கு வந்துவிடும்.
இப்படி ஒவ்வொரு முறையும் நாம் அந்த பழைய உணர்வை புதுப்பித்துக்கொண்டே இருப்பதால் ஒரு போதும் அது பழையதாகிப் போகாமல் நினைவிலே இருந்துகொண்டிருக்கிறது. முதல் காதலை இதுவரை அனுபவம் செய்யாதவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழே தரப்படுகின்றன.
இரண்டு உள்ளங்கள் முதல் காதலில் இணைவது ஒரு இயற்கையான விஷயம். ஆனாலும் சூழ்நிலைகளும் ஒன்றுபட்டு போனால்தான் முதல் காதல் ரசிக்கும்படியாக இருக்கும். முக்கியமாக குடும்பச் சூழல், சமூக கட்டுப்பாடு, உறவினர்களின் மனநிலை இவையெல்லாம் ஒன்றுபட்டுவரும் சூழலில்தான் முதல் காதல் வெற்றியை நோக்கி நகரும்.
சமூக கட்டுப்பாட்டை உடைத்து, உறவுகளைப் பிரித்து முதல் காதலில் வெற்றி பெறும் காதலர்களின் காதல் வாழ்க்கை பெரும்பாலும் வெற்றியாக அமைவதில்லை. அதனால்தான் அறிவு பூர்வமாக சிந்திக்கும் சிலர் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் பவ்யமாக ஒதுங்கி, முதல் காதலை ‘நினைவுக்காதலாக’ மட்டும் ஆக்கிக்கொள்கிறார்கள்.
பக்குவப்படாத மனதில்தான் முதல் காதல் உதயமாகிறது. அதனால் அந்த காதலர்களின் வாழ்க்கை மீது அக்கறை கொண்ட அனைவருமே அவர்களுக்கு உண்மையை புரியவைக்க முயற்சிப்பார்கள். அப்போது அந்த காதலர்கள், அவர்களை காதலின் எதிரிகள் என்று நினைப்பார்கள்.
பால்ய விவாகத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அதுபோலத்தான் பக்குவப்படாத முதல் காதலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.
முதல் காதல் மறக்க முடியாதது என்பது உண்மைதான். ஆனால் முதல் காதல் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
நன்றி: தினசரி....

 

மூலம்: http://cinema.maalaimalar.com/2012/12/12152353/first-love-story.html

 

Edited by நியானி

அந்த காதலில் பிரிவு ஏற்படுவதை இதயம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. முதல் காதல் நிறைவு பெறாத நிலையில் அதன் நினைவுகள் இறுதிவரை தொடரும்

முற்றிலும் உண்மை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்...... நானும் சின்ன வயசுல சைட் அடிச்சா அந்த பொண்ணு எங்க இருப்பா என்று தேடி தேடி பாக்கிறன்....ஒருத்தருக்கும் தெரிதில்லை....

ஒருத்தன் கனடா என்றான்.... ஒருத்தன் London என்றான் இன்னொருத்தியோ ஊர்ல என்றா பட் தொடர்பு இன்று வரை கிடைக்க வில்லை....எனினும் இனிமையான தருணங்கள் அவை.....

Colombo இல் இருந்து முதல் முதலாக அப்பா bmx சைக்கிள் வாங்கி அனுப்பி இருந்தார்.... Bmx சைக்கிள் வந்த உடன எதோ BMW கார் வாங்கி ஓடுற பெருமை.....டியூஷன் இல் இருகின்றேன் சார் வர லேட் ஆகிடிச்சு.....அப்பிடியே மெதுவா வந்து என்ன கேட்டா....அந்த

Cycle ல ஒருக்கா ஓடிப்பாகட்டுமா என்று... ஆகா இப்பிடி ஒரு நேரத்துக்காக தானே நானே காத்திட்டு இருந்த மாதிரி ஒ அதுக்கென்ன என்று கூறவும் அந்த அழகு தேவதை எடுத்து ஓடிய அந்த சைக்கிள்ல அன்று முழுவதும் உருட்டிக்கொண்டு தான் திரிஞ்சனான்.........

அப்பிடியே இன்னொரு நாள் தாவடி சந்தி தாண்டி பாடசாலைக்கு போகும் போது...அவளுடைய வீட்டடியாள போவம்.... சில நேரம் அவளும் பாடசாலைக்கு வெளிக்கிட்டு இருப்பாள்...அப்பிடியே கலாச்சுக்கொண்டு போகலாம் எண்டு நினைச்சு சரியா அவள் வீட்டுக்கு முன்னால போய் நிண்டு பெல் அடிச்சன் அவள் வீட்டு நாய் என்ன திறத்த.... அப்பிடியே சைக்கிள் ஓடிப்போன நான் நேர வேலிக்குள்ள போய் கிடக்கிறன்..... அவரோட பொண்ண சைட் அடிக்க வந்து தான் எனக்கு இப்பிடி ஒரு அவலம் எண்டு தெரியாத அவங்க அப்பாவி அப்பா ஏன் தம்பி பாத்து சைக்கிள் ஒடக்கூடாதே என்று சொல்லி என்ன தூக்கி விட்டது தான் செம காமடி..... (ஆனால் எனக்கு இன்று வரைக்கும் ஒரு டவுட்டு இருக்கு அவங்க அப்பா தான் நாய அவிட்டு விட்டாரோ எண்டு) ...இப்பிடி நிறைய இருக்கு.....

:(:D :d

அது சரி இதெல்லாம் எத்தின வயசுல நடந்தது என்று யாரும் கேட்டிடாதிங்கப்பா....:D

Edited by SUNDHAL

 அப்ப சுண்டலிற்கு முதல் காதலும் சரிவரல்லையா?   :D

 

   

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி கேக்கப்படாது

முதல் வந்து practice பண்ணி அது failure ஆகி தான் ரெண்டாவது மூண்டாவது வொர்க் அவுட் ஆகும் அண்ணே....

:D

முதல் காதல் மட்டுமல்ல முழுக் காதல்களும் நினைவில் வாழும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ஒரு வரியில் சொன்னாலும் திருக்குறள் அண்ணே....

ஹ்ம்ம்...... நானும் சின்ன வயசுல சைட் அடிச்சா அந்த பொண்ணு எங்க இருப்பா என்று தேடி தேடி பாக்கிறன்....ஒருத்தருக்கும் தெரிதில்லை....

ஒருத்தன் கனடா என்றான்.... ஒருத்தன் London என்றான் இன்னொருத்தியோ ஊர்ல என்றா பட் தொடர்பு இன்று வரை கிடைக்க வில்லை....எனினும் இனிமையான தருணங்கள் அவை.....

Colombo இல் இருந்து முதல் முதலாக அப்பா bmx சைக்கிள் வாங்கி அனுப்பி இருந்தார்.... Bmx சைக்கிள் வந்த உடன எதோ BMW கார் வாங்கி ஓடுற பெருமை.....டியூஷன் இல் இருகின்றேன் சார் வர லேட் ஆகிடிச்சு.....அப்பிடியே மெதுவா வந்து என்ன கேட்டா....அந்த

Cycle ல ஒருக்கா ஓடிப்பாகட்டுமா என்று... ஆகா இப்பிடி ஒரு நேரத்துக்காக தானே நானே காத்திட்டு இருந்த மாதிரி ஒ அதுக்கென்ன என்று கூறவும் அந்த அழகு தேவதை எடுத்து ஓடிய அந்த சைக்கிள்ல அன்று முழுவதும் உருட்டிக்கொண்டு தான் திரிஞ்சனான்.........

அப்பிடியே இன்னொரு நாள் தாவடி சந்தி தாண்டி பாடசாலைக்கு போகும் போது...அவளுடைய வீட்டடியாள போவம்.... சில நேரம் அவளும் பாடசாலைக்கு வெளிக்கிட்டு இருப்பாள்...அப்பிடியே கலாச்சுக்கொண்டு போகலாம் எண்டு நினைச்சு சரியா அவள் வீட்டுக்கு முன்னால போய் நிண்டு பெல் அடிச்சன் அவள் வீட்டு நாய் என்ன திறத்த.... அப்பிடியே சைக்கிள் ஓடிப்போன நான் நேர வேலிக்குள்ள போய் கிடக்கிறன்..... அவரோட பொண்ண சைட் அடிக்க வந்து தான் எனக்கு இப்பிடி ஒரு அவலம் எண்டு தெரியாத அவங்க அப்பாவி அப்பா ஏன் தம்பி பாத்து சைக்கிள் ஒடக்கூடாதே என்று சொல்லி என்ன தூக்கி விட்டது தான் செம காமடி..... (ஆனால் எனக்கு இன்று வரைக்கும் ஒரு டவுட்டு இருக்கு அவங்க அப்பா தான் நாய அவிட்டு விட்டாரோ எண்டு) ...இப்பிடி நிறைய இருக்கு.....

:(:D :D

அது சரி இதெல்லாம் எத்தின வயசுல நடந்தது என்று யாரும் கேட்டிடாதிங்கப்பா.... :D

 

யாரப்பா அந்தப் பெண்ணு? அளவெட்டி எண்டா நான் விசாரிச்சுச் சொல்லுறன் ஆள் எங்கை எண்டு? :lol:  :lol:

 

 

 

 

 

 

வாவ் ஒரு வரியில் சொன்னாலும் திருக்குறள் அண்ணே....

 

 

தெருக்குறள்பா :lol:  :lol:

முதல் காதல் மட்டுமல்ல முழுக் காதல்களும் நினைவில் வாழும் .

 

 

எத்தனை காதல் வந்தது அர்ஜுன் அண்ணாக்கு? அதுகளையும் கதையாக்க வேண்டியது தானே  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த பொண்ணு இப்ப கல்யாணம் கட்டி குழந்தை குட்டிங்களோட சந்தோஷமா இருக்கும் நீங்க விசாரிக்கிறன் எண்டிட்டு அந்த பொண்ணோட புருஷன் கிட்டயே போய் விசாரிச்சா? கதை கந்தல் அக்கோய்....:D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் தன்ட முதல் காதலை மட்டுமல்ல எந்தக் காதலையும் தான் காதலிச்ச பொண்ணுக்கிட்ட சொல்லி இருக்க மாட்டார் :lol:

 

சுண்டல் தன்ட முதல் காதலை மட்டுமல்ல எந்தக் காதலையும் தான் காதலிச்ச பொண்ணுக்கிட்ட சொல்லி இருக்க மாட்டார்

ஒன்றா இரண்டா சொல்லுறதுக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில்... காதலுக்கு.. இத்தனை நிலை. (உண்மையில் இதை விட அதிகம். முக்கியமான நிலைகளே இவை). இதில.. எதை முதல் காதலுன்னு வரையறுக்கிறது..! :lol::D

 

relationship-statuses-facebook.jpg

 

Edited by nedukkalapoovan

அப்பிடி கேக்கப்படாது

முதல் வந்து practice பண்ணி அது failure ஆகி தான் ரெண்டாவது மூண்டாவது வொர்க் அவுட் ஆகும் அண்ணே....

:D

 

காதலுக்கே இத்தனை சோதனை எனில் அடுத்த கட்டம்] கா’’ த்துக்கு என்ன என்ன சோதனையோ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போல்லாம் காதல் ஆரம்பிக்க முதலே அதெல்லாம் முடிஞ்சிடுது அண்ணே.... அதில ஆண்கள் தங்களோட திறமைய காட்டினா தான் இப்போலாம் பெண்கள் காதலிக்க ஓகே சொல்லினம்..... மொத்ததிலா கா கா ....:(:D

சுண்டல் தன்ட முதல் காதலை மட்டுமல்ல எந்தக் காதலையும் தான் காதலிச்ச பொண்ணுக்கிட்ட சொல்லி இருக்க மாட்டார்

ஒன்றா இரண்டா சொல்லுறதுக்கு ....

என்ன பற்றி நல்லா புரிஞ்சிகிட்ட நீங்களே இப்பிடி அவதூறு பரப்பலாம? ரொம்ப பீலிங்க்ஸ் ஆ இருக்கு தெரியுமா....:(

எங்க பாலிசி ஒருத்தனுக்கு ஒருத்தி....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உங்க யாழ்ப்பாண பயனத்த ஒரு அனுபவ பகிர்வா தரலாமே? :D

என்ன பற்றி நல்லா புரிஞ்சிகிட்ட நீங்களே இப்பிடி அவதூறு பரப்பலாம? ரொம்ப பீலிங்க்ஸ் ஆ இருக்கு தெரியுமா....

எங்க பாலிசி ஒருத்தனுக்கு ஒருத்தி.... எனக்கு மட்டும் புரிஞ்சு பிரயோசனம் இல்லையே .ஊருக்கல்லவா புரியணும் ...உங்க பாலிசி பற்றி ஊருக்கென்ன இந்த உலகத்துக்கே தெரியுமே ..

அது சரி உங்க யாழ்ப்பாண பயனத்த ஒரு அனுபவ பகிர்வா தரலாமே?

நிச்சயமா தரலாம் சுண்டல் அண்ணா. அதில் எனக்கும் மகிழ்சி தான் . உண்மையில் வெளிநாட்டவர்கள் 7பெருடன் பயணித்த மகிழ்வான பல அனுபவம் நிறைந்த பயணம்அது. எதற்காக போனமோ அதில் கொஞ்சம் பிஸியா இருப்பதால் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா அந்த அனுபவ பகிர்வை தருவேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் பிறகென்ன வெளிநாட்டு காரரை எல்லாம் ஊருக்கு கூட்டிட்டு போய் வந்திருக்கீக....எதோ பெருசா project செயறிங்கள் போல இருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற... எல்லாவற்றியும் தொகுத்து எழுதுங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.