Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழருடன் பேச்சு நடத்தவே வெளிநாடு சென்றோம் - கலகொட அத்தேச ஞானசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kalakoda%20%20thero_CI.jpg

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே, தாம் உள்ளிட்ட பிக்குகள், வெளிநாடு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேச  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நோர்வே பிரஜை ஒருவரின்  அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமது அமைப்புக்கு பெரும் தேவை இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

 
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான அறிவுறுத்தல்களுடனேயே தமது அமைப்பின் பிக்குமார் அமெரிக்காவுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டுக்கு வெளியில் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் இருப்பதாகவும் துரதிஷ்டவசமாக அவர்கள் இலங்கை சமூகத்திற்குள் இல்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். போரில் வெற்றியோ தோல்வியோ இல்லை என்பதால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் முதல் நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும்  ஜெனிவாவுக்கு சென்றும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அது ஜனநாயக உரிமை எனவும் தேரர் கூறியுள்ளார்.
 
நாட்டிற்கு தலைமை ஏற்றுள்ள சிவில் அமைப்பு என்ற வகையில், தமக்கு புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் உரிமை இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,  தாம் நோர்வே அரசாங்கத்திடம் இருந்து பணத்தை பெற்றுள்ளதாக கூறுவது எந்த அடிப்படையிலானது என்பதை தான் அறியவில்லை எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91637/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு வரும் பொழுது சொல்லிப்போட்டு வாங்கோ...நான் சந்திகவாறன்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு வரும் பொழுது சொல்லிப்போட்டு வாங்கோ...நான் சந்திகவாறன்.... :D

 

அண்மையில் 

லா சப்பலில் இவர்கள் சிலபேரைக்கண்டேன்

 

நான் உணவருந்திய  உணவகத்துக்குள் இவர்கள் வந்தனர்.

இவர்களைக்கண்டதும்   எம்மவர் சிலர் வெளியில் போயினர்

எனக்கும் அங்கு இருக்கப்பிடிக்கவில்லை

சிறிது   நேரத்தில் வெளியேறிவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் 

லா சப்பலில் இவர்கள் சிலபேரைக்கண்டேன்

 

நான் உணவருந்திய  உணவகத்துக்குள் இவர்கள் வந்தனர்.

இவர்களைக்கண்டதும்   எம்மவர் சிலர் வெளியில் போயினர்

எனக்கும் அங்கு இருக்கப்பிடிக்கவில்லை

சிறிது   நேரத்தில் வெளியேறிவிட்டேன்

சிங்கள பெளத்த துறவிகளை வெறுக்கும் அளவிற்கு இடைவெளி வந்துவிட்டது ஆச்சரியமல்ல. ஏனெனில் பெளத்த சித்தாந்தத்தைப் பாதுகாக்கவே தமிழர்களை ஒடுக்கவேண்டிய தேவை சிங்களவர்களுக்கு உண்டு. ஆனாலும் ஒரு உரையாடலுக்கான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல், அவர்களைக் கேள்வி கேட்கும் வாய்ப்பையும் பயன்படுத்தாமல் விலகுவது நல்லதல்ல.

எங்கள் மனநிலையை சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் சுட்டிக்காட்டி அவர்களுக்கு புரியாதவற்றை புரிய வைக்கும் முயற்சியிலாவது சிறிது ஈடுபடவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு வரும் பொழுது சொல்லிப்போட்டு வாங்கோ...நான் சந்திகவாறன்.... :D

அவர்கள் உங்களையெல்லாம் சந்திக்கமாட்டார்கள் ஏற்க்கனவே கள்ளத்தொடர்பில் இருப்பவர்களைத்தான் சந்திப்பார்கள் ........  :D  :icon_idea:

அண்மையில் 

லா சப்பலில் இவர்கள் சிலபேரைக்கண்டேன்

 

நான் உணவருந்திய  உணவகத்துக்குள் இவர்கள் வந்தனர்.

இவர்களைக்கண்டதும்   எம்மவர் சிலர் வெளியில் போயினர்

எனக்கும் அங்கு இருக்கப்பிடிக்கவில்லை

சிறிது   நேரத்தில் வெளியேறிவிட்டேன்

வந்த விருந்தாளிகளை கவனிக்காது விட்டுவிட்டீங்களே ........... தமிழ்நாட்டில் மாணவர்கள் எப்படி கவனித்தார்கள் வீடியோ பார்க்கவில்லையா ?   :D

சிங்கள பெளத்த துறவிகளை வெறுக்கும் அளவிற்கு இடைவெளி வந்துவிட்டது ஆச்சரியமல்ல. ஏனெனில் பெளத்த சித்தாந்தத்தைப் பாதுகாக்கவே தமிழர்களை ஒடுக்கவேண்டிய தேவை சிங்களவர்களுக்கு உண்டு. ஆனாலும் ஒரு உரையாடலுக்கான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல், அவர்களைக் கேள்வி கேட்கும் வாய்ப்பையும் பயன்படுத்தாமல் விலகுவது நல்லதல்ல.

எங்கள் மனநிலையை சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் சுட்டிக்காட்டி அவர்களுக்கு புரியாதவற்றை புரிய வைக்கும் முயற்சியிலாவது சிறிது ஈடுபடவேண்டும்.

உண்மையில் புரியாதவர்களுக்கு புரியவைக்க முடியும் ஆனால் இவர்களுக்கு முடியவே முடியாது இவர்களுக்கு உபதேசம் செய்வது செவிடன் காதில் ஊதிய சங்குக்கு சமம். 

  • கருத்துக்கள உறவுகள்

பேசலாம் வாங்க.. தமிழீழத்தைப் பிடிச்சிருந்தா அப்புறம் என்ன கோத்தாவை விலகி இருந்து விடுப்புப் பார்க்கக் கேளுங்க. அது போதும். அப்புறம் சிறீலங்காவும் தமிழீழமும் இந்து சமுத்திர யூனியன் நாடுகள் என்ற கூட்டமைப்பில்.. அங்கம் வகித்தால் போச்சுது..! அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது..!

 

இவர்களைக் கண்டால் எழும்பி ஓடாதீர்கள். இந்த விடயம் குறித்துப் பேசுங்கள். அவர்களாகவே விலகிப் போய் விடுவார்கள்..! :):D:icon_idea:

 

எங்கள் யுனிலும் ஒரு சிங்களக் கூட்டம் அடிக்கடி புலிகளைப் பற்றி கதைப்பார்கள். நாங்கள் நண்பர்கள் சொன்னம் புலிகளைத் தானே பிடிக்கல்ல.. நாட்டைப் பிரிச்சு விட வேண்டியது தானே.. பிரச்சனை தீர்ந்திடும்.. என்று..! அதோடு புலிகளைப் பற்றிக் கதைப்பதை நிறுத்தி விட்டார்கள்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.